விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
ஸ்பானிய கால்பந்து லீகில் 300 கோல்கள்: மெஸ்ஸி சாதனை லயோனல் மெஸ்ஸி. | படம்: கெட்டி இமேஜஸ். ஸ்பானிய கால்பந்து லீகில் முதன் முதலாக 300 கோல்கள் அடித்த சாதனையை அர்ஜெண்டீன நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி நிகழ்த்தியுள்ளார். இதனை தனது 334-வது லா லீகா போட்டியில் நிகழ்த்தினார் மெஸ்ஸி. ஸ்போர்ட்டிங் கிஜோன் அணிக்கு எதிராக பார்சிலோனா அணி பெற்ற 3-1 என்ற கோல் கணக்கிலான வெற்றியில் லயோனல் மெஸ்ஸி இரண்டு கோல்களை திணித்தார். இந்த வெற்றி மூலம் பார்சிலோனா அணி தற்போது 24 போட்டிகளில் 60 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது. 2-வது இடத்தில் அத்லெடிகோ மேட்ரிட் அணியும் 3-வது இடத்தில் ரியால் மேட்ரிட் அணியும் உள்ளன. மெஸ்ஸியின் 300-வது கோல்: ஆட்டத்தின் …
-
- 0 replies
- 358 views
-
-
வித்தியாசமான அணுகுமுறை: தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்: தோனி யின் ஹெலிகாப்டர் ஷாட் மிகவும் பிரபலமானது. புல் லென்த் பந்தை, அதிக வலுவுடன் அவர் தனது மணிக்கட்டு உதவியால் சிக்ஸருக்கு விரட்டுவது ரசிகர்களை அதிகம் கவர்ந்ததாகும். http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%…
-
- 0 replies
- 547 views
-
-
ட்ரிபிள் ஹிட் சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்..! டி20 உலகக்கோப்பையின் இறுதியாட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் அணி எது என்பதை நிர்ணயிக்கும் இப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 156 என்ற இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியனாக மகுடம் சூடியது.முன்னதாக நடந்த மகளிர் டி20 உலகக்கோப்பை பைனலில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணி சாம்பியன் பட்டம் வென்றது டி 20: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி கொண்டாட்டம்: புகைப்படத் தொகுப்பு.. க்ளிக் செய்க... கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்ட…
-
- 0 replies
- 461 views
-
-
Angelo Davis Mathewsஇவர் தமிழரா? இப்ப அவுஸ்ரேலியா தொலைக்காட்சி சேவையில் இவர் தமிழர் என்று கூறினார்கள் ...இது உண்மையா? கள உறவுகளே உங்களுக்கு இது பற்றி எதாவது தெரியுமா?
-
- 4 replies
- 880 views
-
-
என்னுடன் படிக்கும் ஒரு இத்தாலி நபர் மூலமாக எனக்கு இத்தகவல் கிடைத்தது. இத்தாலியில் US Palermo U-20 என்ற அணியில் விளையாடி தற்பொழுது US Vibonese (www.usvibonese.com) என்ற அணிக்கு விளையாடி வருகிறார். இவரின் வயது 18! நிச்சயமாக இது போன்ற வீரர்கள் எதிர்காலத்திலும் வரவேண்டும் என்று வாழ்த்துத்துவோம். Panushant Kulenthiran
-
- 7 replies
- 3.4k views
-
-
பாய்ந்து சென்று தங்கம் வென்ற மில்லர் மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் இலக்கை பாய்ந்தபடி கடக்கும் பஹாமஸ் வீராங்கனை ஷானே மில்லர். படம்: ஏஎப்பி ரியோ ஒலிம்பிக் போட்டியின் மகளிர் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பஹாமாஸைச் சேர்ந்த மில்லர் தங்கப் பதக்கம் வென்றார். அவர் போட்டியில் ஜெயித்த விதம் சிலிர்ப்பூட்டும் வகையில் அமைந்தது. பந்தயம் முடிகிற நேரத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த அலிசன் பெலிக்ஸ் வெற்றி பெறுகிற நிலையில் இருந்தார். அவருக்கும் பஹாமாஸைச் சேர்ந்த ஷானே மில்லருக்கும் கடும்போட்டி அமைந்தது. அப்போது மில்லர் திடீரென எல்லைக்கோட்டைத் தொடுகிற சமயத்தில் தடாலடியாக கீழே விழுந்த நிலையில் பாய்ந்து முன்னே சென்றார். இந்தச் செயலால் அவர் முதலிடத்தைப் பிடிக்கமுட…
-
- 0 replies
- 334 views
-
-
இலங்கை அணியின் இளம் இடதுகைத் துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமன்ன இலங்கையின் எதிர்காலத்திற்குரிய வீரர் என இலங்கை அணியின் தலைவரும் அடுத்த தொடரிலிருந்து இலங்கையின் தலைவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுபவருமான அன்ஜலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார். இலங்கையின் குமார் சங்கக்கார காயமடைந்ததை அடுத்து இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு அழைக்கப்பட்டு, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நேரடியாகச் சேர்க்கப்பட்ட லஹிரு திரிமன்ன, அப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதன்போது அவர் 91 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பந்தொன்றையும் சந்திக்காது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்த லஹிரு திரிமன்ன, இரண்டாவது போட்டியில் மிகச…
-
- 6 replies
- 763 views
-
-
ரோகித் சர்மா, மாரியப்பன் உள்பட 5 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு மத்திய அரசு சார்பில், ஆண்டுதோறும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’, ‘அர்ஜூனா’, ஆகிய விருதுகளும், சிறந்த வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு ‘துரோணாச்சார்யா’ விருதும், விளையாட்டு வளர்ச்சிக்கு பங்களிக்கும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு ‘தயான் சந்த்’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது தமிழக வீரர் மாரியப்பனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் மாரியப்பன் தங்கம் வென்றார். அதேபோல், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, டேபிள் டென்னிஸ் வீராங்க…
-
- 0 replies
- 538 views
-
-
டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் அரங்குகளில் அதீத ஆற்றல்களை வெளிப்படுத்திய அதி சிறந்த கிரிக்கட் வீரர்களுக்கு மகுடம் சூட்டும் விழாவான டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா பத்தரமுல்லை வோட்டர்ஸ் எஜ் அரங்கில் இன்று இரவு நடைபெறவுள்ளது. இந்த மாபெரும் விருது விழாவின்போது சர்வதேச மற்றும் உள்ளூர் அரங்குகளில் திறமையை வெளிப்படுத்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும் விருதுகள் காத்திருக்கின்றன. இந்த விருதுவிழாவின்போது வருடத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீரருக்கான பிரதான விருது வழங்கப்படும். நடந்து முடிந்த …
-
- 5 replies
- 547 views
-
-
இலங்கை, தென்னாபிரிக்க பயிற்சி போட்டி சமனிலையில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க பதினொருவர் அணிகள் மோதிய 3 நாள் பயிற்சி போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 373 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் கௌசல் சில்வா 80 ஓட்டங்களையும், கருணாரத்ன 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் தென்னாபிரிக்க பதினொருவர் அணி சார்பாக ஒலீவியர் 4 விக்கட்டுகளை கைப்பற்றினார். இந்நிலையில் தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க பதினொருவர் அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 289 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. தென்னாபிரிக்க பதினொருவர் அணி சார்பில் புளூய் …
-
- 38 replies
- 3.1k views
-
-
கிரிக்கெட் போட்டியில் அடித்துக்கொண்ட வீரர்கள்; அவுஸ்திரேலியாவில் சம்பவம்! (காணொளி இணைப்பு) அவுஸ்திரேலியாவில், உள்ளூர் கிரிக்கெட் போட்டியொன்றின்போது, தன்னை ஆட்டமிழக்கச் செய்த பந்துவீச்சாளரின் செய்கையால் கோபமடைந்த துடுப்பாட்ட வீரர் அவரை மோதித் தள்ளிய சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ‘யக்கன்டன்டா’ மற்றும் ‘எஸ்க்டேல்’ ஆகிய இரண்டு விளையாட்டுக் கழகங்களுக்கிடையே சில தினங்களுக்கு முன் கிரிக்கெட் போட்டியொன்று நடைபெற்றது. இதன்போது, யக்கன்டன்டா கழகப் பந்துவீச்சாளரின் பந்துவீச்சில் எதிரணி துடுப்பாட்ட வீரர் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து பந்துவீச்சாளர் தனது வெற்றியைக் கொண்ட…
-
- 0 replies
- 275 views
-
-
ஐபிஎல் போட்டியில் பங்கேற்பது கடினம்... சர்வதேச ஆட்டங்கள் காரணமாக மீதமுள்ள ஐபிஎல் ஆட்டங்களில் இங்கிலாந்து வீரர்களால் விளையாட முடியாமல் போகலாம் என ராஜஸ்தான் ராயல்ஸ் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். கொரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்பட்டது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை, மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற்றன. அடுத்ததாக ஆமதாபாத், தில்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐப…
-
- 0 replies
- 604 views
-
-
சாம்பியன்ஸ் லீக்: 100 கோல்களைப் போட்டு கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை ரியல் மெட்ரிட் அணியின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில் 100 கோல்களைப் போட்டு சாதனை படைத்துள்ளார். சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டித் தொடரின் பேயார்ன் மியுனிக் அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியிலேயே அவர் இந்த சாதனையை எட்டினார். சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளின் முதலாவது காலிறுதிப் போட்டி ரியல் மெட்ரிட் மற்றும் பேயார்ன் மியுனிக் அணிகளுக்கு இடையில் நேற்று (12) நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ரியல் மெட்ரிட் அணி வெற்றி பெற்றது…
-
- 0 replies
- 471 views
-
-
ஒலிம்பிக்கில் தடம் பதிக்கும் ஏதிலிகள் : ‘ஏதிலிகள் ஒலிம்பிக் அணி‘யும் அதன் வரலாறும் ஜப்பானில் தொடங்கியிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஏதிலிகள் அணி சார்பாக 29 தடகள் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் உலகமெங்கும் இடம்பெயர்ந்துள்ள 82 மில்லியன் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலந்து கொண்டுள்ளனர். போர், பயங்கரவாதம், வறுமை, வன்முறை என பல காரணங்களுக்காக தங்கள் தாய்நாட்டை பிரிந்து வேறு ஒரு நாட்டுக்கு அடைக்கலம் நாடி செல்பவர்களே ஏதிலிகள். எந்தவித சிக்கலும் இல்லாமல் வாழ்க்கையை சுமூகமாக கடத்தி செல்லும் நோக்கத்திற்காகவே ஏதிலிகள் புகலிடம் தேடி செல்வது உண்டு. இந்த நிலையில் ஏதிலிகளும் ஒலிம்பிக்கில் பங்கேற்று விளையாட செய்யும் நோக்கில் உருவாக்கப…
-
- 0 replies
- 452 views
-
-
தென்னாப்பிரிக்காவுடன் முதல் ஒருநாள் போட்டி: மார்கன் சதத்தால் இங்கிலாந்து வெற்றி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இயன் மார்கன் சதத்தால் இங்கிலாந்து 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லீட்ஸ்: தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி நேற்று லீட்ஸ் நகரில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன் குவித்தது. கேப்டன் இயன்மோர்கன் 93 பந்தில் 107 ரன் எடுத்தார். ஹால்ஸ் 61 ரன்னும்,…
-
- 0 replies
- 333 views
-
-
கிறிஸ் கெய்ல் தனது ஆணுறுப்பை காண்பித்ததால் குழந்தை போன்று கதறி அழுதேன் – மேற்கிந்திய அணியின் முன்னாள் மசாஜ் ஊழியர் நீதிமன்றில் சாட்சியம் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் தனது ஆணுறுப்பை தன்னிடம் காண்பித்தபோது தான் குழந்தை போன்று கதறி அழுததாக அவ்வணியின் பெண் மசாஜ் ஊழியராக பணியாற்றிய யுவதி ஒருவர் நேற்று முன்தினம் தெரிவித்தார். லியனே ரஸல் எனும் இந்த யுவதி, அவுஸ்திரேலிய நீதிமன்றமொன்றில் நடைபெறும் வழக்கு விசாரணையில் சாட்சிமளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் ஒருநாள் சர்வதேச உலக கிண்ணப் போட்டிகள் நடை பெற்றபோது மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியினருக்கான மசாஜ் ஊழியராக பணி யாற்றியவர் லியன…
-
- 4 replies
- 560 views
-
-
இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறாதது ஆச்சரியமளிக்கவில்லை: ஜார்ஜ் பெய்லி முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டியை கூட வெல்ல முடியாமல் இந்திய அணி வெளியேறியது. இது தனக்கு ஆச்சரியமளிக்கவில்லை என்று ஆஸி. ஒருநாள் அணி கேப்டன் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார். ஆனாலும், உலகக்கோப்பையில் இந்திய வாய்ப்புகள் இதனால் கெட்டுப்போய் விடவில்லை என்று கூறிய பெய்லி, “ஆம். இந்திய வாய்ப்புகள் மங்கி விடவில்லை. இந்திய அணி டெஸ்ட் தொடர் மீது நீண்ட நாட்கள் கவனம் செலுத்தியிருக்கலாம், தயாரிப்புகள் அடிப்படையில் டெஸ்ட் தொடருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம், ஆனால் இங்கிலாந்து அணி இந்த முத்தரப்பு ஒருநாள் தொடருக்காக மட்டுமே தன்னைத் தயார் படுத்திக்கொண்டது. உலகக்கோப்பைக்…
-
- 2 replies
- 525 views
-
-
அடுத்த உலகக் கிண்ணப் போட்டியையும் குறைந்த நாட்களில் நடத்தும் வாய்ப்பில்லை * ஐ.சி.சி. கூறுகிறது அடுத்த உலகக் கிண்ணப் போட்டியையும் குறைந்த நாட்களில் நடத்த வாய்ப்பில்லை என்பதை ஐ.சி.சி. தலைமை நிர்வாகி விளக்கியுள்ளார். மேற்கிந்தியாவில் தற்போது நடந்து வரும் உலகக் கிண்ணப் போட்டி நீண்ட நாட்களாக இழுபட்டுக் கொண்டு போவதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இதில் அவுஸ்திரேலிய தொடக்க வீரர் ஹைடனும் உண்டு. அடுத்த உலகக் கிண்ணப் போட்டியையாவது குறைந்த காலத்தில் நடத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) தலைமை நிர்வாகி மால்கம் ஸ்பீட் கூறியதாவது; அடுத்த உலகக் கிண்ணப் போட்டியை (2011 ஆம் ஆண்…
-
- 0 replies
- 840 views
-
-
பங்களாதேஷ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: சிம்பாப்வே அணி வெற்றி சிம்பாப்வே கிரிக்கெட் அணி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு சென்றுள்ள சிம்பாப்வே அணி, பங்களாதேஷ் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது. இந்நிலையில் முதலாவதாக இரு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடர் நடைபெற்றது. இதில் மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று பங்களாதேஷ் அணி, தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகின்றது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி, கடந்த் 3ஆம் திகதி சில்…
-
- 0 replies
- 470 views
-
-
கனடா- ரொறொன்ரோவில் இடம்பெற இருக்கும் Pan Am மற்றும் Parapan American விளையாட்டுகளிற்கான பதக்கங்கள் இன்று வெளிப்படுத்தப்பட்டன. எதிர்வரும் கோடைகாலத்தில் நடக்கும் இந்த விளையாட்டுகளில் 4,000ற்கும் மேற்பட்ட பதக்கங்கள் கையளிக்கப்படும். விளையாட்டு வீரர்கள் தாங்கள் என்னத்திற்காக போட்டியிடுகின்றார்கள் என்ற சிறந்த சிந்தனையை பெறக்கூடியதாக இருக்கும். அதிகார பூர்வமான மெட்டல் விநியோகஸ்தர்கள் பறிக் கோல்ட் நிறுவனத்தினர் ஆவர். கனடிய அரச கூட்டுத்தாபனமான றோயல் கனடியன் மின்ட் பதக்கங்களை வடிமைக்கும். Pan Am விளையாட்டுக்கள் எதிர்வரும் யூலை மாதம் 10-26 வரை நடைபெறும். Parapan American ஆகஸ்ட் மாதம் 7-14 வரை இடம்பெற உள்ளது. 41-நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 6,600 விளையாட்டு வீரர்கள் போட்டிகளி…
-
- 0 replies
- 411 views
-
-
முரளியின் பந்துவீச்சை மீண்டும் குறை கூறுகிறார் பிஷன்சிங்பேடி [09 - ஆஉகுச்ட் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் பந்தை எறிவதாக, பிஷன்சிங் பேடி கடுமையாக தாக்கியிருக்கிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 1100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியிருப்பவர் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். அவ்வப்போது அவரது பந்து வீச்சு, சர்ச்சையிலும் சிக்குவதுண்டு. இந்த நிலையில், அவரது பந்து வீச்சை இந்திய அணியின் முன்னாள் கப்டன் பிஷன்சிங் பேடி மீண்டும் வெளிப்படையாக விமர்சித்திருக்கிறார். பேடி அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது; "முரளிதரன் பந்து வீசுவது, குண்டு எறிவது போலவும், ஈட்டி எறிவது…
-
- 9 replies
- 2.1k views
-
-
சர்வதேச கால்பந்து விளையாட்டை நிர்வகிக்கும் நிறுவனமான ஃபிஃபா அமைப்பின் 6 மூத்த அதிகாரிகள், பல மில்லியன் கணக்கான டாலர்களை லஞ்சமாக கொடுத்ததாகவும் வாங்கியதாகவும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த அமைப்பின் வருடாந்த கூட்டத்துக்காக ஒரு ஆடம்பர விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது அதிகாலை வேளையில் சுவிட்ஸர்லாந்து போலிஸாரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் வடக்கு மற்றும் மத்திய அமெரிக்காவுக்கு பொறுப்பான துணைத் தலைவர் ஜெஃப்ரி வெப்பும் அடங்குகிறார். ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணை செய்வதற்காக அவர்களை அமெரிக்காவுக்கு நாடுகடத்துமாறு அமெரிக்கா கேட்டிருக்கிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/Ar…
-
- 9 replies
- 641 views
-
-
வான்கடே மைதானத்துக்குள் நுழைய ஷாருக்கானுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு தடை நீக்கம் மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வான்கடே மைதானத்திற்குள் நுழைய விதிக்கப் பட்டிருந்த 5 ஆண்டு தடையை மும்பை கிரிக்கெட் சங்கம் இன்று விலக்கியுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிய ஐபிஎல் லீக் போட்டி நடைபெற்றது. போட்டியின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான ஷாருக்கான் மைதானத்திற்குள் நுழைய முயன்றார். அப்போது அவரை அங்கிருந்த காவலாளிகள் தடுத்தனர். இதனால், மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மற்றும் பாதுகாவலர்களைக் கடுமையான வார்த்தைகளால் திட்டினார் ஷாருக்கான். இதுகுறித்து ஷாருக்கான் மீது வழக்குப்பதிவு…
-
- 1 reply
- 324 views
-
-
சங்காவை முந்தினார் மெத்தியூஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இதன்படி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ஜோ ரூட் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் 860 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தை பெற்றுள்ளார். அதே சமயம் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும் அணியின் முன்னாள் தலைவருமான குமார் சங்கக்கார 851 புள்ளிகள் பெற்று 6ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இலங்கை விக்கெட் காப்பாளர் சந்திமால் (646 புள்ளிகள்) 23ஆவது இடத்திலும், திரிமான்ன 4 இடங்கள் முன்னேறி 78ஆவது இடத்தையும் பிடித்த…
-
- 0 replies
- 234 views
-
-
மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராக சவுரவ் கங்குலி நியமனம்! கொல்கத்தா: மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராக சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா கடந்த 20ஆம் தேதி உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்தார். இவர் மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராகவும் பதவி வகித்து வந்தார். அவரது மறைவை தொடர்ந்து அந்த பதவியும் காலியாக இருந்தது. இந்நிலையில், மேற்கு வங்க கிரிக்கெட் சங்க இணைச்செயலாளராக பதவி வகித்து வந்த சவுரவ் கங்குலி, மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராக நியமிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். http://www.vikatan.com/news/article.php?aid=52843
-
- 0 replies
- 316 views
-