Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஐ.சி. சியின் இரண்டு பிரதான கிரிக்கெட் விருதுகளுக்கு குமார் சங்கக்கார, ஏஞ்சலோ மெத்யூஸ், ஜோன்சன் 2014-11-07 சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் (ஐ.சி.சி.) வரு­டத்தின் அதி சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் அதி­சி­றந்த டெஸ்ட் வீரர் ஆகிய விரு­து­க­ளுக்கு பரிந்­து­ரைக்­கப்­பட்ட வீரர்­களின் குறும்­பட்­டி­யல்­களில் இலங்கை அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ், முன்னாள் அணித் தலைவர் குமார் சங்­கக்­கார, அவுஸ்­தி­ரே­லி­யாவின் மிச்செல் ஜோன்சன் ஆகியோர் இடம்­பெ­று­கின்­றனர். இவர்­க­ளுடன் தென் ஆபி­ரிக்­காவின் ஏ. பி. டி வில்­லியர்ஸ் (அதி சிறந்த கிரிக்கெட் வீரர்), அவுஸ்­தி­ரே­லி­யாவின் டேவிட் வோர்னர் (அதி சிறந்த டெஸ்ட் வீரர்) ஆகி­யோரும் குறும்­பட்­டி­யல்­களில் அடங்­கு­கின்­றனர். சர்­வ­தேச…

  2. சச்சினை சந்திக்க நிருபராக நடித்து வீட்டுக்கு சென்றேன்... அஞ்சலியின் காதல் பிளாஷ் பேக்! மும்பை: சச்சினை விரட்டி விரட்டி காதலித்து திருமணம் செய்து கொண்டது எப்படி என்பது குறித்து புத்தக வெளியீட்டு விழாவில் அவரது மனைவி அஞ்சலி மனம் திறந்து பேட்டியளித்தார். மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் எழுதிய சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா நேற்றிரவு மும்பையில் நடைபெற்றது. இதில் கிரிக்கெட் பிரபலங்கள் தவிர சச்சின் மனைவி அஞ்சலியும் கலந்து கொண்டார். சச்சினுடனான தனது காதல் அனுபவத்தை அஞ்சலி கூறியது இப்படி: கண்டதும் காதல் 1/11 கண்டதும் காதல் நான் சச்சினை முதல் முறையாக மும்பை ஏர்போர்ட்டில்தான் பார்த்தேன். அப்போது அவருக்கு வயது 17. பார்த்த உடனே காதல் என்பார்களே அதுபோல காதல் கொண்டேன். பால் வடியும…

  3. உலகக் கோப்பைக்கு முன் ஆஸ்திரேலிய தொடர் நல்ல முன்தயாரிப்பாக அமையும்: தோனி உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் சிறந்த முன் தயாரிப்பாக அமையும் என்று இந்திய கேப்டன் தோனி கூறியுள்ளார். பிப்.14, 2015- அடிலெய்ட் மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தானை தன் முதல் போட்டியில் எதிர்கொள்கிறது. இந்த நிலையில் உலகக்கோப்பை போட்டிகளுக்கு இன்னும் 100 நாட்கள் கொண்டாட்டத்தில் பல அணி கேப்டன்களும் பங்கேற்று தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். தோனி கூறும்போது, “2011 உலகக்கோப்பை வெற்றியைத் தொடர்ந்து இங்கிலாந்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றோம். இது, அணியின் திறமையை அறிவுறுத்துகிறது. எந்த ஒரு சூழ்நிலைக்கும் தக்கவாறு தகவமைத்துக் கொள்ளும் தன்மை வீரர்களிடத்தில் இருப்ப…

  4. மெஸ்சி சாதனை: பார்சிலோனா வெற்றி நவம்பர் 06, 2014. பாரிஸ்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் அசத்திய பார்சிலோனா அணியின் மெஸ்சி அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை சமன் செய்தார். ஐரோப்பாவில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. பாரிசில் நடந்த லீக் போட்டியில் பார்சிலோனா, அஜக்ஸ் அணிகள் மோதின. இதன் முதல் பாதியில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சி 36வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இரண்டாவது பாதியிலும் அசத்திய மெஸ்சி (76வது நிமிடம்) மீண்டும் ஒரு கோல் அடித்து அணியை வலுப்படுத்தினார். எதிரணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. முடிவில், பார்சிலோனா அணி 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ‘ரவுண்ட்–16’ சுற்றுக்கு முன்னேறியது. இதன் மூலம், சாம்பியன்ஸ் லீ…

  5. ஆஸி.யை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது தென் ஆப்பிரிக்கா. அடிலெய்டில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன் பிஞ்ச் 14, கேமரூன் ஒயிட் 24, பென் டங்க் 2, ரியார்டன் 4 ரன்களுக்கு ஆட்ட மிழந்தனர். இதையடுத்து வாட்சனுடன் இணைந்தார் ஃபாக்னர். இந்த ஜோடி அதிரடியாக ஆட ஆஸ்தி ரேலியாவின் ஸ்கோர் உயர்ந்தது. வாட்சன் 47 ரன்களில் (36 பந்துகள்) ஆட்டமிழந்தார். ஃபாக்னர் ஆட்டமிழக்காமல் 33 பந்துகளில் 41 ரன்கள் சேர்க்க, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா. பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் ஹென்ரிக்ஸ் டக் அவுட்டாக,…

  6. இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் 7 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இத் தொடர் நவம்பர் மாதம் 26ஆம் திகதி தொடக்கி டிசம்பர் மாதம்16 ஆம் திகதி வரை நடைபெறும். 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 4 போட்­டிகள் கொழும்­பிலும் 2 போட்­டிகள் பள்­ளே­க­லை­யிலும் ஒரு போட்டி அம்­பாந்­தோட்­டை­யிலும் நடை­பெ­ற­வுள்­ளன. அந்­த­வ­கையில் நவம்பர் 26 மற்றும் 29ஆம் திக­தி­களில் முதல் இரண்டு போட்­டி­களும் இடம்­பெற 3,4,5,6,7 ஆவது ஒருநாள் போட்­டிகள் முறையே டிசம்பர் 3,7,10,13,16ஆம் திக­தி­களில் நடை­பெ­ற­வுள்­ளமை குறிப்பிடத்தக்கது.

  7. பழைய பெருச்சாளியை இப்போது ஏன் "பிட்ச்"சுக்கு நடுவே ஓட விடுகிறார் சச்சின்? மும்பை: மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். இந்த முறை எந்த சாதனைக்காகவும் அவர் பரபரப்பைக் கிளப்பவில்லை. மாறாக பெரும் சர்ச்சை மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார். குறிப்பாக கிரேக் சேப்பல் மீது இவர் கூறியுள்ள சரமாரியான புகார்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதெல்லாம் பொய் என்று சேப்பல் கூறியுள்ளார். ஆனால் முன்னாள் வீரர்கள் பலரும் சச்சின் சொன்னது உண்மை. அவர் சொல்வதெல்லாம் உண்மை என்று அடித்துக் கூறி வருகின்றனர். ஆனால் இதையெல்லாம் ஏன் இப்பப் போய் சொல்கிறார் சச்சின் என்பதுதான் புரியவில்லை. சேப்பல் கதை முடிந்து அதற்குப் பிறகு எத்தனையோ சம்பவங்கள் நடந்து விட்ட நிலையில் இப்போது பழைய…

  8. ஒழுங்காகவே விளையாடாத விராத் கோஹ்லிக்கு ஐசிசி விருது கிடைக்குமா.....? துபாய்: சமீப காலமாக பெரிய அளவில் பிரகாசிக்காமல் உள்ள விராத் கோஹ்லி, ஐசிசியின் இந்த ஆண்டின் சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்த பிரிவில் கோஹ்லி தவிர மேலும் மூன்று வீரர்களின் பெயர்களும் உள்ளன. அவர்கள், தென் ஆப்பிரிக்காவின் க்வின்டன் டி காக், அப் டிவில்லியர்ஸ் மற்றும் டேல் ஸ்டெயின் ஆவர். இதற்கான பரிந்துரையை ஐசிசி இன்று அறிவித்தது. ஒரே இந்திய வீரர் ஆடவர் பிரிவில் ஐசிசி அறிவித்துள்ள விருதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய வீரர் விராத் கோஹ்லி மட்டுமே மகளிர் பிரிவில் மித்தாலி ராஜ் மகளிர் பிரிவில், சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைக்கான பட்டியலி…

  9. ஐ.சி.சி. யின் டெஸ்ட் அணித் தலைவராக மெத்தியூஸ் நடப்பாண்டுக்கான ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளை ஐ.சி.சி. இன்று அறிவித்துள்ளது. டுபாயில் அமைந்துள்ள ஐ.சி.சி.யின் தலைமையகத்தில் வைத்து ஐ.சி.சி.யின் தலைவரும் இந்திய அணியின் முன்னாள் தலைவருமான அனில் கும்ளே இதனை தெரிவித்தார். அந்தவகையில் டெஸ்ட் அணித் தலைவராக இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ{ம் ஒருநாள் அணித் தலைவராக இந்திய அணித் தலைவர் மகேந்திர சிங் டோனியும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அணித் தலைவர் உட்பட குமார் சங்கக்கார, ரங்கன ஹேரத் ஆகிய மூவர் இலங்கை அணி சார்பாக டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளதுடன் ஒருநாள் அணியில் அஜந்த மெண்டிஸ் மாத்திரம் இடம்பெற்றுள்ளார். இதேவேளை, கடந்த 2006 ஆம்ஆண்டு முதல் 7 முறை ஐ.சி.சி.யின் டெஸ்ட் அணியில…

  10. ஒரு நாள் போட்டிகளுக்கு 'பெஸ்ட்' கேப்டன் டோணிதான்.... ஐசிசி துபாய்: இந்த ஆண்டுக்கான, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான சிறந்த கேப்டனாக டோணியை தேர்வு செய்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். ஐசிசியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழு ஆண்டுதோறும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த வீரர்களை தேர்வு செய்து அறிவிப்பது வழக்கம். ஆண்டு முடிவடைய உள்ள நிலையில் 2014ம் ஆண்டுக்கான சிறந்த வீரர்கள் பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் ஒருநாள் போட்டிகளுக்கான அணி கேப்டனாக டோணியை தேர்வு செய்துள்ளது ஐசிசி. ஒரு நாள் போட்டிகளுக்கு 'பெஸ்ட்' கேப்டன் டோணிதான்.... ஐசிசி ஒருநாள் அணியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முமகது ஷமி, விராட் கோஹ்லி மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோருக்கும் இடம் கி…

  11. மத்திய அரசின் சாட்டையடி; மாற்றத்துக்கான அறிகுறி! எப்போது அழைத்தாலும் நாட்டுக்காக விளையாடத் தயாராக இருக்கும் வீரர்களுக்கு மட்டுமே இனி அரசின் நிதி உதவி வழங்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது மத்திய விளையாட்டு அமைச்சகம். இந்திய டென்னிஸ் வீரர்கள் பயஸ், போபண்ணா, சோம்தேவ் ஆகியோர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாட மறுத்ததன் எதிரொலியாக வெளியிடப் பட்டுள்ள இந்த அறிவிப்பு, விளையாட்டு வீரர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அமைச்சகத்தின் முடிவு மிகச் சரியானது என்பதுதான் நிதர்சனம். இந்தியாவில் உள்ள பெரும்பாலான விளையாட்டு வீரர்களுக்கு ஆரம்ப காலத்தில் அரசின் நிதியுதவி தேவைப்படுகிறது. அந்த நிதியுதவியோடுதான் அடுத்த கட்டத்துக்கே முன்னேறுகிறார்கள். ஆனால் முன்னணி …

  12. அஷ்வின் தொடர்ந்து ‘நம்பர்–1’ நவம்பர் 04, 2014. துபாய்:ஐ.சி.சி., டெஸ்ட் போட்டிக்கான ‘ஆல்–ரவுண்டர்’ தரவரிசையில் இந்தியாவின் அஷ்வின் ‘நம்பர்–1’ இடத்தில் நீடிக்கிறார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை (ரேங்க்) பட்டியலை ஐ.சி.சி., வெளியிட்டது. இதில் ‘ஆல்–ரவுண்டர்களுக்கான’ பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் (357 புள்ளி) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இரண்டாவது, மூன்றாவது இடங்கள் முறையே தென் ஆப்ரிக்காவின் பிலாண்டர்(348), வங்கதேசத்தின் சாகிப் (346) உள்ளனர். யூனிஸ் முன்னேற்றம்: ‘பேட்ஸ்மேன்களுக்கான’ தரவரிசையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரட்டை சதம் அடித்து, தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்த பாகிஸ்தானின் யூனிஸ் கான…

  13. அடுத்த ஐ.பி.எல்., எப்போது நவம்பர் 04, 2014. புதுடில்லி: எட்டாவது ஐ.பி.எல்., தொடர் வரும் 2015, ஏப். 8ம் தேதி துவங்குகிறது. கடந்த 2008 முதல் இந்திய கிரிக்கெட் (பி.சி.சி.ஐ.,) போர்டால், இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) ‘டுவென்டி–20’ தொடர் நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள எட்டாவது தொடருக்கான தேதியை ஐ.பி.எல்., ஆட்சிமன்றக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, ஏப்.8 முதல் மே 24 வரை தொடர் நடக்கவுள்ளது. தவிர, வீரர்களை மாற்றிக் கொள்வதற்கான கெடு வரும் டிச. 12ல் முடிகிறது. இதன்படி, மும்பை வீரர்களான மைக்கேல் ஹசி, பிரவீண் குமாரை அணி நிர்வாகம் விடுவித்தது. இவர்கள் எட்டாவது ஐ.பி.எல்., தொடருக்கான ஏலத்தில் இடம் பெறுவர். உன்முக்த் சந்த் (ராஜஸ்தான்), வினய் குமார் (கோல்கட்டா) மும…

  14. டெஸ்ட் தரவரிசையில் பாகிஸ்தான் 3-வது இடம் சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் 6-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் நேற்று 3-வது இடத்துக்கு அதிரடியாக முன்னேறியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் பாகிஸ்தான் 3-வது இடத்தை பிடித்துள்ளது. பாகிஸ்தான் 3-வது இடத்தைப் பிடித்ததால் இங்கி லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய அணிகள் ஓரிடம் பின்தங்கிவிட்டன. இங்கிலாந்து 3-வது இடத்தில் இருந்து 4-வது இடத்துக்கும், இலங்கை 4-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கும், இந்தியா 5-வது இடத்தில் இருந்து 6-வது இடத்துக்கும் சென்றுவிட்டது. தென்னாப்பிரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தொடரை இழந்தபோதிலும் ஆஸ்திரேலியா 2-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. எனினும் டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன…

  15. இலங்கைப் பாடசாலைகள் துப்பாக்கி சுடும் விளையாட்டுச் சங்கத்தினால் நடாவிய ரீதியில் நடத்தப்பட்ட போட்டித் தொடரில் அகில இலங்கை ரீதியில் 2 ஆம் இடத்தைப்பெற்றுக் கொண்ட யா/ நெல்லியடி மத்திய கல்லூரி மாணவி செல்வி தாயனி ஸ்ரீசிதம்பரலிங்கம் துப்பாக்கி சுடும் பயிற்சியாளர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு மேலதிக பயிற்சிகளைப் பெறுவதற்காக ஜக்கிய அமெரிக்கா செல்வதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தேசியரீதியில் தெரிவு செய்யப்பட்ட 6 பேர் கொண்ட பயிற்றுவிப்பாளர்கள் அணியில் இடம்பெறும் ஒரே ஒரு தமிழ் மாணவ வீராக்கனை இவராவார். எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் பங்குபெறவுள்ள தேசிய அணி வீரர்களுக்கான பயிற்றுவிப்பாளராக பணியாற்றுவதற்காக இவருக்கான பயிற்சி…

    • 0 replies
    • 928 views
  16. எம்­பி­லிப்­பிட்டி மகா­வலி விளை­யாட்டு மைதா­னத்தில் நடை­பெற்­று­வரும் றிட்ஸ்­பறி சேர் ஜோன் டார்பர்ட் கனிஷ்ட மெய்­வல்­லுநர் போட்­டி­களில் பருத்­தித்­துறை ஹார்ட்லி கல்­லூ­ரியைச் சேர்ந்த பாலச்­சந்­திரன் ஆனந்த் 14 வய­துக்­குட்­பட்ட ஆண்­க­ளுக்­கான பரிதி வட்டம் எறி­தலில் புதிய சாதனை நிலை­நாட்­டி­யுள்ளார். இவர் பரி­தியை 37.33 மீற்றர் தூரம் எறிந்து புதிய சாத­னையை நிலை­நாட்டி தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்தார். கொட்­டாஞ்­சேனை புனித ஆசீர்­வா­தப்பர் கல்­லூ­ரியைச் சேர்ந்த எம். எச். எஸ். டி திசோரா 2008இல் நிலை­நாட்­டிய 29.17 மீற்றர் என்ற சாத­னை­யையே ஆனந்த் முறி­ய­டித்­துள்ளார். இதே­வேளை இப் பாட­சா­லையைச் சேர்ந்த முரளி அபிராம் 15 வய­துக்­குட்­பட்ட ஆண்­க­ளுக்­கான பரிதி வட்டம் எறிதல்…

  17. ஆஸி.தொடருக்கு ஜடேஜாவுக்கு பதில் கரன் சர்மா, லோகேஷ் ராகுலுக்கும் ஆதரவு: திராவிட் ஆலோசனை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் லோகேஷ் ராகுலையும் கரன் சர்மாவையும் சேர்க்க வேண்டும் என்று ராகுல் திராவிட் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: கரன் சர்மா ஒரு ரிஸ்ட் ஸ்பின்னர், ஆஸ்திரேலியாவில் இத்தகைய ஸ்பின்னர்களுக்கு விக்கெட் விழ அதிக வாய்ப்புகள் உள்ளன. கொஞ்சம் வேகமாகவும், கூக்ளி வீசவும் முடிந்தால் ஆஸ்திரேலியாவில் சாதிக்கலாம். ஜடேஜா அவரால் முடிந்ததைச் செய்வதில் நன்றாகவே திகழ்ந்தார். விக்கெட் டு விக்கெட் வீசுவார். பின்னால் இறங்கி பயனுள்ள ரன்களை எடுப்பார். ஆனால் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற வேண்டுமெனில் தரமான ரிஸ்ட் ஸ்பின்னர் தேவை. க…

  18. ஆம்புரோஸ் பவுன்சரை ஆன்டிகுவாவுக்கு அனுப்புவேன்: சச்சின் சுயசரிதையில் சுவாரசிய குறிப்புகள் . சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதை நூலான ‘பிளேயிங் இட் மை வே’ நவம்பர் 6-ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் அந்த நூலில் சச்சின் எழுதியுள்ள சில விவரங்கள் வெளியாகியுள்ளன. தனது கேப்டன்சி காலத்தில் அடைந்த தோல்விகளினால் கிரிக்கெட் ஆட்டத்தை விட்டே போய் விடலாம் என்று நினைத்ததாக சச்சின் தன் சுயசரிதையில் கூறியுள்ளார். "தோல்விகளை கடுமையாக வெறுப்பவன் நான், தொடர்ந்து மோசமாக அணியினர் விளையாடும்போது எனக்கு அதிக பொறுப்பிருப்பதாக உணர்ந்தேன். கவலைக்குரிய விஷயம் என்னவெனில், அணியை வெற்றிப்பாதைக்கு எப்படி அழைத்துச் செல்வது என்பது எனக்குப் புரியவில்லை. என்னால் முடிந்ததை நான் ஏற்கெனவே செய்திருந்தேன்…

  19. ஒரே போட்டியில் 5 ‘சேம் சைடு’ கோல் நவம்பர் 03, 2014. உள்ளூர் கால்பந்து போட்டியில் ஐந்து ‘சேம் சைடு’ கோல்கள் அடித்தது வியப்பாக உள்ளது. பொதுவாக கால்பந்து போட்டிகளில் ‘சேம் சைடு’ கோல் அடிப்பவர்களை, சொந்த ரசிகர்கள் கொடூரமான எதிரியாக பார்ப்பர். 1994 உலக கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்காவுக்கு எதிராக இப்படிச் செய்த, கொலம்பிய வீரர் எஸ்கோபர், ரசிகர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சூழலில் இந்தோனேசியாவில் நடந்த பிரிமியர் டிவிசன் கால்பந்து லீக் போட்டியில் அதிகமாக ‘சேம் சைடு’ கோல்கள் அடிக்கப்பட்டன. செமராங், சிலிமேன் அணிகள் மோதிய இப்போட்டியில் வெற்றி பெறும் அணி, அரையிறுதியில் போர்னியோ அணியை சந்திக்க வேண்டும். இந்த அணிக்கு ‘தாதாக்கள்’ ஆதரவு இருப்பத…

  20. கைவிட்டது மே.இந்தியத்தீவுகள்; கைகொடுத்தது இலங்கை வெள்ளிக்கிழமை, 31 ஒக்டோபர் 2014 மேற்கு இந்தியத்தீவுகள் கிரிக்கெட் சபைக்கும் வீரர்களுக்குமிடையேயான சம்பளப் பிரச்சினை காரணமாக இந்திய கிரிக்கெட் தொடரை கைவிட்டுவிட்டு மேற்கு இந்திய வீரர்கள் நாடு திரும்பிவிட்டனர். இதன் காரணமாக, மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட்டுக்கும் இந்திய‌ கிரிக்கெட்டுக்கும் இடையே பாரிய விரிசல் விழுந்துள்ளது. மேற்கு இந்திய வீரர்கள், இந்தியாவுக்குச் செல்லும் முன்பே சம்பளப் பிரச்சினை உண்டாகியது. தமது எதிர்ப்பைக் காட்டுவதற்காக முதல் நாள் போட்டியில் கறுப்பு பட்டி அணிந்து விளையாடினார்கள். தொடர் முடியும் வரை எதுவிதமான பிரச்சினையும் ஏற்படாது என இந்தியா எதிர்பார்த்தது. நான்காவது ஒருநாள் போட்டி முடிந்ததும், தொடரை…

  21. இருபது வருடங்களின் பின் சாதிக்குமா பாகிஸ்தான் அணி? வியாழக்கிழமை, 30 ஒக்டோபர் 2014 1994இல் பாகிஸ்தானில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சலிம் மலிக் தலைமையிலான பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றிருந்தது. அதன் பின்னர், டெஸ்ட் தொடர் ஒன்றில் அவுஸ்திரேலிய அணியை வெல்வது என்பது, பாகிஸ்தான் அணிக்கு வெறும் கனவாகவே இருந்துவந்தது. 1999இல் ஆரம்பித்து 2010 வரையில், அவுஸ்திரேலியாவுடன் விளையாடிய 13 டெஸ்ட் போட்டிகளிலும் தொடர் தோல்வியைச் சந்தித்த பாகிஸ்தான் அணி, 2010 இல் லீட்ஸ் இல் இடம்பெற்ற போட்டியில் 3 விக்கெட்களால் வெற்றிபெற்று தொடர்ச்சியான தோல்விக்கு இடைவெளி விட்டது. அதனை அடுத்து நான்கு வருடங்கள் கழித்து, கடந்த 22ஆம…

  22. இலங்கை கிரிக்கெட் அணிக்கு உளவியல் ஆலோசகர் 2014-10-31 12:18:20 இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின்போது இலங்கை கிரிக்கெட் அணிக்கு விளையாட்டுத்துறை உளவியல் ஆலோசகர் ஒருவரை நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. விளையாட்டுத்துறை உளவியல் ஆலோசகரும் இங்கிலாந்தின் முன்னாள் சுழல்பந்துவீச்சாளருமான ஜெரெமி ஸ்னேப் என்பவரை நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. 2015 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்பதாக இலங்கை வீரர்களினது ஆற்றல்களை அதிகரிக்கும் நோக்கில் ஜெரெமி ஸ்னேப்பை உளவியல் ஆலோசகராக நியமிப்பதற்கு தீர்மானித்ததாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அஷ்லி டி சில்வா உறுதிபடத் தெரிவித்தார். இதேவேளை, இந்தியா…

  23. முரளி நல்லிணக்க கிண்ண கிரிக்கெட் ஆரம்ப விழாவில் 2014-10-31 12:26:55 முரளி நல்லிணக்க கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் மூன்றாவது அத்தியாயத்தை இரக்கத்திற்கான சிந்தனை மன்றத்தின் ஸ்தாபகரும் உலக பந்து வீச்சு சாதனையாளருமான முத்தையா முரளிதரன் நேற்றுமுன்தினம் வைபவரீதியாக ஆரம்பித்துவைத்தார். யாழ். மத்திய கல்லூரியில் நடைபெற்ற றிச்மண்ட் கல்லூரி அணிக்கும் திருகோணமலை - மட்டக்களப்பு பாடசாலைகள் கூட்டு அணிக்கும் இடையிலான போட்டிக்கான நாணயத்தை சுழற்சியை முத்தையா முரளிதரன் நடத்தி ஆரம்பித்துவைத்தார். முரளி நல்லிணக்க கிண்ண கிரிக்கெட் போட்டிகள் யாழ்ப்பாணம் (2 மைதானங்கள்), கிளிநொச்சி, ஒட்டுசுட்டான் ஆகிய மைதானங்களில் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெறுவதுடன் மா…

  24. தோனி ஒரு பிரமாதமான கேப்டன்; வலுவான தலைவர்: கில்கிறிஸ்ட் புகழாரம் டெஸ்ட் போட்டிக்கான தலைமை பொறுப்பை தோனியிடமிருந்து விராட் கோலிக்கு மாற்ற வேண்டும் என்ற ஆஸி.முன்னாள் கேப்டன் இயன் சாப்பலின் கருத்தை ஆடம் கில்கிறிஸ்ட் மறுதலித்தார். வுலாங்காங் என்ற ஆஸ்திரேலிய பல்கலைக் கழகம் பெங்களூரில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினராகக் கலந்து கொண்ட ஆடம் கில்கிறிஸ்ட் செய்தியாளர்களிடம் கூறும்போது: "நான் நிறைய முறைக் கூறிவிட்டேன். அவர் எப்போது இந்திய கேப்டன் பொறுப்பிற்கு வந்தாரோ அப்போது முதல் நான் இதைத்தான் கூறி வருகிறேன். அவர் ஒரு பிரமாதமான கேப்டன் டி20 உலகக் கோப்பை, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது என்று தோனியின் தலைமையில் …

  25. 1970-களை ஞாபகப்படுத்தியிருக்கும் ஐஎஸ்எல்! ஒன்றல்ல, இரண்டல்ல…35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் மூலம் சென்னையில் மட்டுமல்ல, தமிழகத்திலும் மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கிறது கால்பந்து போட்டி. கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற சென்னையின் எப்.சி.-மும்பை சிட்டி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தைப் பார்க்க ஏறக்குறைய 20 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்துக்கு படையெடுத்தனர். போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவும், போட்டி முடிந்த பிறகும் மைதானத்தின் அருகில் உள்ள சாலைகள் முழுவதுமாக ஸ்தம்பித்தன. போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த போராடியது காவல்துறை. கிரிக்கெட் தவிர வேறு எந்த விளையாட்டுக்கும் இப்படியொரு பெரும் கூட்டம் கூடு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.