Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை இலங்கை இளையோர் மற்றும் இங்கிலாந்து இளையோர் அணிக்களுக்கிடையில் இங்கிலாந்தின் வோர்ம்ஸ்லேயில் இடம்பெற்ற ஒருநாள் போட்டியில் இலங்கை இளையோர் அணி 149 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 257 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் அசலங்க 8 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 70 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் இலங்கை அணி சார்பில், அஷான் ஆட்டமிழக்காமல் 60 ஒட்டங்களை பெற்றுக்கொண்டதோடு, சில்வா 37 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி சார்பில் பெர்னர்ட் 43 ஓட்டங்களுக்கு 2 விக்…

  2. போல்வால்ட்டில் பிரேசில் வீரர் சாதனை போல்வால்ட் பந்தயத்தில் சாதனை படைத்த பிரேசில் வீரர் தியோகோ டி சில்வா. படம்: ராய்ட்டர்ஸ். ஆடவருக்கான போல்வால்ட் பந்தயத்தில் பிரேசில் வீரர் தியோகோ டி சில்வா புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார். அவர் 6.03 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். இதற்கு முன்னர் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் பிரான்ஸ் வீரர் ரெனாட் லிவில்லின் 5.97 மீட்டர் உயரம் தாண்டியதே ஒலிம்பிக் சாதனையாக இருந்தது. அவர் 2014-ம் ஆண்டு 6.16 மீட்டர் உயரம் தாண்டியதே உலக சாதனையாகவும் இருந்து வந்தது. உலக சாதனையாளரும், ஒலிம்பிக் சாம்பியனுமான ரெனாட் லிவில்லின் 5.98 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும், அமெரிக்க வீரர் சாம் கென்டிரிக்ஸ் 5.85 மீட்டர் …

  3. யார் மச்சி கெத்து? #TNPL செமிஃபைனல் அலசல் ‘நம்ம ஊரு நம்ம கெத்து’ #NammaOoruNammaGethu என்ற ஆர்ப்பாட்டத்துடன் தொடங்கிய, தமிழ்நாடு பிரிமியர் லீக் #TNPL தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எட்டு அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிவில், சேப்பாக், திண்டுக்கல் அணி தலா 5 வெற்றி, 2 தோல்வியுடன் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. தூத்துக்குடி, கோவை அணிகள் தலா 4 வெற்றி, 3 தோல்விகளுடன் முறையே மூன்றாவது, நான்காவது இடத்தைப் பிடித்தன. முதல் நான்கு இடங்களைப் பிடித்த சேப்பாக்கம், திண்டுக்கல், தூத்துக்குடி, கோவை அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. திருநெல்வேலியில் நாளை நடக்கவுள்ள முதல் அரையிறுதியில் திண்டுக்கல் & தூத்துக்குடி அணிகள் மோத உள்ளன. சனி…

  4. பாகிஸ்தானுக்கு ஐசிசி டெஸ்ட் சாம்பியனுக்கான தண்டாயுதம்: ஐசிசி வழங்கியது ஐசிசி தண்டாயுதத்துடன் மிஸ்பா. | படம்: ஏ.பி. முதன் முதலாக ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த பாகிஸ்தான் அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான தண்டாயுதத்தை ஐசிசி வழங்கியது. 7 ஆண்டுகளுக்கு முன்பாக டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் விளையாடிய மைதானமான லாகூரில் இது வழங்கப்பட்டது பெருமை அளிக்கிறது என்கிறார் கேப்டன் மிஸ்பா உல் ஹக். லாகூர் கடாஃபி ஸ்டேடியத்தில் ஐசிசி தலைமை அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் தண்டாயுதத்தை மிஸ்பாவிடம் வழங்கினார். உள்ளூர் ரசிகர்கள் ஆதரவில்லாமல் முழுக்கவும் பாகிஸ்தானுக்கு வெளியே விளையாடி முதலிடம் பிடிப்படு சாதாரண விஷயமல்ல. ஸ்டீவ் வா…

  5.  உலக சாதனை படைத்தார் பென்தெக்கி சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியொன்று ஆரம்பிக்கப்பட்டு, மிக விரைவாக அடிக்கப்பட்ட கோல் என்ற சாதனையை, பெல்ஜியம் அணியின் கிறிஸ்டியான் பென்தெக்கி படைத்துள்ளார். ஜிப்ரால்டர் அணிக்கெதிராக, நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற போட்டியிலேயே, இச்சாதனையை அவர் படைத்தார். உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டியாக அமைந்த இப்போட்டியில், போட்டி ஆரம்பித்து 8.1 செக்கன்களில், தனது கோலை, பென்தெக்கி பெற்றுக் கொண்டார். இது, இதற்கு முன்னர் காணப்பட்ட சாதனையான 8.3 செக்கன்களை முறிடித்தது. அந்தச் சாதனையை, 1993ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ணத் தகுதிகாண் பொட்டியில், இங்கிலாந்து அணிக்கெதிராக சான் மரினோவின் டேவி…

  6. சச்சின், ஜெயசூர்யா, பாண்டிங்கைவிட கோஹ்லி பெஸ்ட். இதோ ஆதாரம்..! #WhyKohliIsBest? #HBDKohli கோஹ்லி இதுவரை 168 இன்னிங்ஸ்கள் விளையாடி இருக்கிறார். அவரோடு ஒப்பிடும் போது சச்சின், ஜெயசூர்யா, பாண்டிங் ஆகியோர் முதல் 168 இன்னிங்ஸ் வரை எந்தளவுக்கு சாதனைகள் படைத்திருக்கிறார்கள் என்பதை அலசும் கட்டுரை இது. தலைமுறைகள் கடந்த ஒரு வீரரை, இன்னொரு வீரரின் ஆட்டத்தோடு ஒப்பிடுவது சரியில்ல. பிட்ச், வீரர்கள், காலநிலை, எதிரணியின் நிலை, தான் சார்ந்தஅணியின் சூழ்நிலை, பயம், பதற்றம், மேட்சின் நிலை, விக்கெட் வீழ்ச்சி, எதிரே நிற்கும் வீரர், ஆகியவற்றை பொருத்து ஒரு வீரரின் ஆட்டமுறை வேறுபடும்.தவிர, கிரிக்கெட்டில் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஆட்டபாணியில் பெரியளவிலான மாற்றங்கள் நடந்து வரு…

  7. மெத்தியுஸ் மற்றும் சந்திமல் தென்னாபிரிக்க தொடருக்கு தயார் இலங்கை அணியின் தலைவர் எஞ்சலோ மெத்தியுஸ் மற்றும் உபத் தலைவர் சந்திமல் ஆகியோர் உபாதையிலிருந்து நீங்கியுள்ளதுடன், தென்னாபிரிக்க தொடருக்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மெத்தியுஸ் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சந்திமல் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் துஸ்மந்த சமீர ஆகியோர் உபாதைகளிலிருந்து குணமாகியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை தானும் தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றேன். இதேவேளை தம்மிக்க பிரசாத் உபாதைகளில் இருந்து நீங்குவதற்கு சற்று காலம் எடுக்கும் என வைத்திய…

  8. கொவிட் தொற்றால் இந்திய நட்சத்திர மெய்வல்லுநர் மில்கா சிங் மரணம் இந்தியாவின் முன்னாள் நட்சத்திர மெய்வல்லுநர் மில்கா சிங் 91ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளாலேயே அவர் உயிரிழந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘பறக்கும் சிக்’ என புகழ்பெற்ற மில்கா சிங், ஆசிய விளையாட்டு விழாவில் 4 தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார். டோக்கியோ 1958 ஆசிய விளையாட்டு விழாவில் 200 மீற்றர் மற்றும் 400 மீற்றர் ஓட்டப் போட்டிகளிலும் ஜகார்த்தா 1962 ஆசிய விளையாட்டு விழாவில் 400 மீற்றர் மற்றும் 4×400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியிலும் மில்கா சிங் தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார். ரோம் 1960 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் 400 மீற்றர் இறுதிப் போட்டி…

  9. என் துணிகளை விற்று தோனியை வாங்குவேன், ஷாருக் கான் ஆவல் ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக தோனியை வாங்க என் உடைகளைகூட விற்கத் தயார் என கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாருக் கான் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரை பொறுத்தவரை, போட்டிகள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். பொழுதுபோக்கே முதல் குறிக்கோள். இப்பொழுதுபோக்கில் தோனியை ரசிக்காதவர்கள் மிகக் குறைவே! இதில் ஷாருக் கானும் விதிவிலக்கல்ல. காரணம் தனது சமீபத்திய பேட்டியில் தோனியை தனது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட வேண்டி அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஷாருக் கான் கூறுகையில்,'தோனி போன்ற ஒரு சிறந்த வீரரை எங்கள் அணிக்காக வாங்குவதற்கு, எனது பைஜாமா உடைகளைக்கூட நான் விற்க தயார். ஆனால் அவர்…

  10. இந்தியா Vs பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை: 'இது சாதாரண ஆட்டமல்ல' - இரு நாடுகளிலும் உணர்ச்சிப் பெருக்கு 20 அக்டோபர் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES அக்டோபர் 24 ஞாயிற்றுக்கிழமை துபாயில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "எங்களுக்கு இது மற்ற போட்டிகளைப் போன்றதே.", என்று விராட் கோலி பதிலளித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து கேப்டன் விராட் கோலி கூறிய இந்த கருத்தை 'விதிவிலக்காக' எடுத்துக் கொள்ளலாம். சுமார் 28 மாதங்களுக்குப் பிறகு, இரு நாடுகளின் அணிகளும் நேருக்கு நேர் சந்திக்கும்…

  11. இலங்கையை சிம்பாப்வே வீழ்த்தியதற்கான காரணத்தை கூறுகிறார் அஷ்வின் சிம்­பாப்வே அணி இலங்­கையை ஒருநாள் தொடரில் வீழ்த்­தி­யது கிரிக்­கெட்டின் ஆரோக்­கி­யத்­திற்கு நல்­லது என்று இந்­திய சுழற்­பந்­து­வீச்சாளர் ரவிச்­சந்­திரன் அஷ்வின் தெரி­வித்­துள்ளார். மும்­பையில் விளம்­பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அஷ்வின் கூறி­ய­தா­வது: சிம்­பாப்வே அணி இலங்­கையை வீழ்த்­தி­யதைப் பற்றிக் கூற வேண்­டு­மெனில், யார் வேண்­டு­மா­னாலும் வெல்­லலாம், யார் வேண்­டு­மா­னாலும் தோற்­கலாம் இப்­ப­டித்தான் கிரிக்கெட் ஆட்டம் போகும் என்றே கூறத் தோன்­று­கி­றது. நாளை ஆப்­கா­னிஸ்தான் வெற்றி பெறலாம். அப்­ப­டித்தான் ஒரு விளை­யாட்டு செல்ல வேண்டும். இது விளை­யாட்­டுக்கு ஆரோக்­கி­…

  12. விளையாட்டு கண்ணோட்டம் இலங்கை கிரிக்கெட் அணியின் மோசமான வரலாற்றுத் தோல்வி, கால்பந்து நடுவர்களின் பணிப்பகிஷ்கரிப்பு மற்றும் சர்வதேச அளவில் இடம்பெற்ற மிகப் பெரிய விருது வழங்கும் விழாக்கள் என்பன தொடர்பிலான தகவல்களுடன் வரும் இவ்வார விளையாட்டு கண்ணோட்டம் நிகழ்ச்சி.

  13. 20 இருபது இந்திய தொடரிலும் நட்சத்திர பந்துவீச்சாளர் மலிங்க இல்லை இந்தியாவுக்கு எதிரான சர்வதேச இருபது 20 போட்டித் தொடரிலும் நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மலிங்க நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 20ஆம் திகதி இந்திய இலங்கை அணிகள் மோதும் மூன்று போட்டிகள் அடங்கிய தொடர் இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இப்போட்டியில்,நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மலிங்க நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிகெட் வாரியம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில்,லசித் மலிங்கவுக்குப் பதிலாக சகலதுறை ஆட்டக்காரர் ஜீவன் மெண்டிஸ் இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பதாக இலங்கை கிரிகெட் வாரியம் கூறியுள்ளது.இதுவரை 68 போட்டிகளி…

  14. டெஸ்டில் அதிக ரன்கள்: ஜெயவர்தனே, சந்தர்பால், லாராவை முந்தினார் அலஸ்டைர் குக் மெல்போர்ன் டெஸ்டில் 244 ரன்கள் குவித்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ஜெயவர்தனே, சந்தர்பால், லாராவை பின்னுக்குத் தள்ளியுள்ளார் குக். ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பாக்சிங் டே மெல்போர்ன் டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 327 ரன்களில் ஆல்அவுட் ஆனது. பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் இன்றைய 3-வதுநாள் ஆட்ட முடிவில…

  15. யுவராஜ் சிங் அணியுடனடான கிரிக்கெட் போட்டியில்5 சிக்ஸர்கள் அடித்து வென்ற யூஸைன் போல்ட்: 100 மீற்றர் ஓட்டத்தில் போல்ட்டை முந்தினார் யுவராஜ் 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டத்தில் உலக சம்பியனும் ஒலிம்பிக் சம்பியனுமான ஜமைக்கா வீரர் யூஸைன் போல்ட், இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தலைமையிலான அணியுடனான கண்காட்சி கிரிக்கெட் போட்டியில் 5 சிக்ஸர்களை அடித்து தனது அணியை வெற்றிபெறச் செய்துள்ளார். இந்தியாவின் பெங்களூர் நகரிலுள்ள சின்னஸ்வாமி அரங்கில் நேற்றுமுன்தினம் இக்கண்காட்சி போட்டி நடைபெற்றது. பியூமா நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான அணியும் உசைன் போல்ட் தலைமையிலான அணியும் மோதின. தலா 4 ஓவர்கள் கொண்ட இப்போட்டியில் முதலில் துடுப்பெ…

  16. டயலொக் கிரிக்கெட் விருது ஒக்டோபர் 19: உங்களின் விருப்பமான வீரர் யார்? உடனே வாக்களியுங்கள் இலங்கை வீரர்களுக்கான வருடாந்த விருதுகள் இம்முறை ‘டயலொக் இலங்கை கிரிக்கெட் விருதுகள் 2015’ என அழைக்கப்படவுள்ளதோடு, இம்முறை பிராமாண்டமான முறையில் நடாத்தப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த மாபெரும் விருது விழா எதிர்வரும் ஒக்டோபர் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ளதோடு இதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளன. இந்நிலையில் இதற்கான ஊடகச் சந்திப்பு கொழும்பில் நேற்று இடம்பெற்றிருந்தது. இதில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் சிதத் வெத்தமுனி, செயலாளர் பிரகாஷ் ஷாப்டர், பிரதம செயற்பாட்டு அதிகாரி ஆஷ்லி டீ சில்வா, இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ், டயலொக் நிறுவனத்…

  17. லையன் ஆட்டமிழப்புச் சர்ச்சை ஐ.சி.சியிடம் நியூசி விளக்கம் December 02, 2015 கிரிக்கெட் வரலாற்றின் முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டம் அடிலெய்டில் நடைபெற்றது. இந்த முதல் ஆட்டத்திலேயே லையன் ஆட்டமிழப்புச் சர்ச்சை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக ஆகியிருக்கிறது என்றால் மிகையாகாது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 202 ஓட்டங்களில் சுருண்டது. தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 110 ஓட்டங்களைக் கடப்பதற்குள் 8 இலக்குகளை இழந்து தத்தளித்தது. 9ஆவது இலக்குக்கு நாதன் லையன் களம் இறங்கினார். இவர் ஓட்டங்கள் ஏதும் எடுக்காத நிலையில், கிரைக்கின் பந்தில் வில்லியம்சனிடம் பிடி கொடுத்தார். ஆனால், இந்தியாவைச் சேர்ந்த மைதான நடுவர் ரவி ஆட்டமிழப்பை கொடுக்க மறுத்த…

  18. ’’ அனைவருக்கும் நன்றி ’’ கெய்ல் January 21, 2016 மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல், தன்னை விமர்சனம் செய்த அனைவருக்கும் பதிலடி கொடுத்துள்ளார். பிக்பாஷ் தொடரில் கலந்து கொள்வதற்காக அவுஸ்திரேலியாவில் முகாமிட்டிருந்த கிறிஸ் கெய்ல் அங்கு தனது ஆட்டங்கள் முடிந்ததைத் தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகளுக்குப் புறப்பட்டுச் சென்றார். சமீபத்தில் அவர் பெண் செய்தியாளரிடம் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசினார். இதனால் அவருக்கு 10,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், முன்னாள் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் இயான் சேப்பல், கெய்லை யாரும் விளையாட அனுமதிக்கக் கூடாது. அவருக்கு சர்வதேச அளவில் தடை விதிக்க வேண்டும் என்று அதிகமாகவே கொந்தளித்தார்.…

  19. கிடைக்காததின் மீது காதல் கொள்கிறாரா zidane??! இந்தவாரம் சம்பியன்ஸ் கிண்ண கால்பந்து தொடரில் இடம்பெற்ற விறுவிறுப்பான சில போட்டிகள் குறித்து அவதானிப்போம்

  20. பந்தை மைதானத்துக்கு வெளியே அடிக்க 2 மில்லியன் டாலர்கள் என்றால்... : ஸ்டெய்ன் கவலை டேல் ஸ்டெய்ன். | படம்: ஏ.பி. கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சு அழியும் போக்கில் சென்று கொண்டிருக்கிறது என்று கவலை தெரிவித்துள்ள டேல் ஸ்டெய்ன் ஐபிஎல் ரக கிரிக்கெட்டில் பேட்டிங் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வளர்க்கப்படுவது பற்றி அச்சம் வெளியிட்டுள்ளார். கிரிக்கெட் மன்த்லி பத்திரிகைக்கு அவர் அளித்து நாளை முழுதாக வெளியாகும் பேட்டியில் அவர் இது பற்றி கூறியதாவது: “160கிமீ வேகத்தில் வீசக்கூடிய பவுலர்கள் தேவை. 5 விக்கெட்டுகளை வீழ்த்தும் வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை. டெஸ்ட் போட்டியின் 5-ம் நாள் பிட்சில் 150கிமீ வேகம் வீசி விக்கெட்டுகளைக் கைப்பற…

  21. 2020 ஐ.பி.எல் தொடருக்கான முழு போட்டி அட்டவணை வெளியீடு எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள 13ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கான முழு போட்டி அட்டவணை இன்று (15) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் வெளியிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் உலகில் நடைபெறும் லீக் தொடர்களில் அதிகமான ரசிகர்கள் கூட்டத்தை கொண்ட தொடராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் கடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து வருடா வருடம் நடத்தப்பட்டுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் அமைந்துள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் வெற்றிகரமாக நடைபெற்றுவருகின்ற இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின…

  22. ஆங்கிலேய எவ். ஏ. கிண்ணத்தை 12ஆவது தடவையாக மென்செஸ்டட் யுனைட்டட் கழகம் சுவீகரித்தது வெம்ப்ளி விளை­யாட்­ட­ரங்கில் க்றிஸ்டல் பெலஸ் அணிக்கு எதி­ராக நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற இறுதி ஆட்­டத்தின் மேல­திக நேரத்தில் 10 வீரர்­க­ளாக மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட மென்­செஸ்டட் யுனைட்டட் கழகம் 2 – 1 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் வெற்றி­பெற்று ஆங்­கி­லேய எவ். ஏ. கிண்­ணத்தை சுவீ­க­ரித்­தது. அரங்கம் முழு­வதும் ர­சி­கர்கள் நிறைந்­து­வ­ழிய இறுதிப் போட்­டியின் மேல­திக நேரத்தில் லிங்கார்ட் போட்ட கோலின் உத­வி­யுடன் வெற்­றி­ பெற்ற மென்­செஸ்டர் யுனைட்டட் 12ஆவது தட­வை­யாக எவ். ஏ. கிண்­ணத்தை வென்­றெ­டுத்­தது. ஆரம்பம் முதல் இறு­தி­வரை…

  23. சர்ச்சையான ஜொய்ஸின் ஆட்டமிழப்பு அயர்லாந்தின் பெல்பாஸ்ட்டில் இடம்பெற்ற அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், அயர்லாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் எட் ஜொய்ஸுக்கு வழங்கபட்ட ஆட்டமிழப்பு சர்ச்சையாகியுள்ளது. இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், ஒரு கட்டத்தில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 109 ஓட்டங்களுடன் காணப்பட்ட நிலையில், ரஷீட் கானின் ஆட்டமிழக்காத 60, மொஹம்மட் நபியின் 50 ஓட்டங்கள் கைகொடுக்க 50 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 229 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முன்னதாக, ரஹ்மட் ஷா 48 ஓட்டங்களைப் பெற்றிருந்ததோடு, பந்துவீச்சில் அன்டி மக்ப…

  24. ஜோகோவிச்சை வீழ்த்தி சம்பியனானார் நடால் பிரான்ஸ் ஓபன் (பகிரங்க) டென்னிஸ் தொடரின் ஆடவர்க்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் ஜோகோவிச்சை தோற்கடித்து நடால் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் முதல் இரு இடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், ஸ்பெயினின் நடால் மோதினர். இந்த ஆட்டத்தின் முடிவில் நடால் 6-0, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் ஜோகோவிசை வீழத்தி கிரண்ட்ஸலாம் பட்டம் வென்றார். இது நடால் வெற்றி கொள்ளும் 20 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பதுடன் 13 ஆவது பிரான்ஸ் ஒபன் பட்டமும் ஆகும். https://www.virakesari.lk/article/91869

  25. தரப்படுத்தலில் மீண்டும் முன்னேறிய ஹேரத் இலங்கை அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் டெஸ்ட் பந்துவீச்சாளர் தரப்படுத்தலில் 4 ஆம் இடத்தை பிடித்துள்ளார். ஐ.சி.சி. நேற்று வெளியிட்ட டெஸ்ட் தரப்படுத்தலில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரப்படுத்தலில் முதலாம் இடத்தை இந்திய அணியின் அஸ்வின் பிடித்துள்ள நிலையில், இரண்டாம் இடத்தை தென்னாபிரிக்காவின் டேல் ஸ்டெயினும், மூன்றாம் இடத்தை இங்கிலாந்தின் ஜேம்.என்டர்ஸனும் பிடித்துள்ளனர். http://www.virakesari.lk/article/13183

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.