Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சந்திமால், இசாந்துக்கு தடை, லகிரு, தம்மிக்கவுக்கு அபராதம் September 1, 2015 09:03 pm தினேஷ் சந்திமால் மற்றும் இசாந்த் சர்மா ஆகியோருக்கு தலா ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா 117 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இன்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியுள்ளது. கடந்த 28ம் திகதி ஆரம்பமான, இந்த போட்டியின் 4-வது நாள் ஆட்டமான நேற்று 2-வது இன்னிங்சில் இந்தியா துடுப்பெடுத்தாடிய போது, 10-வது விக்கெட்டாக இசாந்த் சர்மா களம் இறங்கினார். இதன்போது இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக பிரசாத் இசாந்த் சர்மாவிற்கு தொடர்ந்து பவுன்சராக வீசினார். இதனால் கோபம் அடைந்த இசாந்த் சர்மா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.…

  2. பாக். கிரிக்கெட் வாரியத்தின் மீது சாடிய யூனிஸ் கான் மீது நடவடிக்கை பாய்கிறது யூனிஸ் கான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் துக்கு எதிராக கருத்து தெரிவித்த மூத்த பேட்ஸ்மேனான யூனிஸ் கான் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சஹாரியார் கான் தெரிவித் துள்ளார். இதன்மூலம் அவர் மீது நடவடிக்கை பாய்வது உறுதியாகி யுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு தன்னை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைக்கவில்லை எனக் கூறிய யூனிஸ் கான், வாரியத்தின் மீது கடுமையாக சாடினார். இந்த நிலையில் அது தொடர்பாக சஹாரி யார் கான் கூறியதாவது: யூனிஸ் கான் மீது நான் மிகுந்த மரியாதை வை…

  3. சர்வதேச கிரிக்கெட்டில் இந்தாண்டு அதிக ஓட்டங்கள் அடித்தவர் பட்டியலில் இலங்கை வீரர் பதும் நிசங்க முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. முதல் இரு போட்டிகளிலும் இலங்கை தோல்வியடைந்து தொடரை இழந்த நிலையில், லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 325 ஓட்டங்களும் இலங்கை 263 ஓட்டங்களும் எடுத்தன. 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து 156 ஓட்டங்களுக்குள் சுருண்ட நிலையில், 2 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை விரட்டி இலங்கை வெற்றி பெற்றது. இலங்கையின் தொடக்க வீரர் பதும் நிசங்க ஆட்டமிழக்காமல் 127 ஓட்டங்கள் சேர்த்தார். இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணி 8…

  4. 19 DEC, 2024 | 07:22 AM (நெவில் அன்தனி) கத்தார் தேசத்தின் தலைநகர் தோஹாவில் நேற்று இரவு நடைபெற்ற சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளன (FIFA) விருது விழாவில் அதி உயரிய விருதுகைளை வினிசியஸ் Jr, ஆய்ட்டான பொன்மாட்டி வென்றெடுத்தனர். பிரேஸில் முன்கள வீரர் வினிசியஸ் Jr. வருடத்தின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரராகவும் ஸ்பெய்ன் மத்திய கள வீராங்கனை ஆய்ட்டானா பொன்மாட்டி, வருடத்தின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீராங்கனையாகவும் தெரிவாகினர். அற்புதமான கால்பந்தாட்ட ஆற்றலைக் கொண்டுள்ள பிரேஸில் தேசிய அணி வீரரும், ரியல் மெட்றிட் கழக விரருமான வினிசியஸ் ஜூனியர் (Jr.) முதல் தடவையாக வருடத்தின் அதிசிறந்த வீரருக்கான பீபா விருதை வென்றெ…

  5. மூத்த வீரர்களை தோனி சீண்டுகிறார் முன்னாள் கப்டன்கள் ஆவேசம் இந்திய அணியில் மூத்தவர்கள், இளையவர்கள் பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்புத் தொடரில் மூத்த வீரர்கள் நீக்கப்பட்டதை கப்டன் தோனி நியாயப்படுத்தியுள்ளார். இதற்கு அஜித் வடேகர், பிஷன் சிங் பேடி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தென் ஆபிரிக்க டெஸ்ட் தொடர் தொடங்க உள்ள நிலையில் மூத்த வீரர்களை தேவையில்லாமல் சீண்டுவதாக காட்டமாகக் கூறியுள்ளனர். சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் நடந்த தொடரில் இந்திய அணி அசத்தலாக ஆடியது. பெர்த் டெஸ்ட் போட்டியில் வென்று வரலாறு படைத்தது. அடுத்து நடந்த `ருவென்டி - 20', முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கு மூத்த வீரர்களான சௌரவ் கங்குலி,…

    • 0 replies
    • 1k views
  6. தோனி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக பகீர் குற்றச்சாட்டு ! இந்திய அணியின் கேப்டன் தோனி, இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டி யில் இந்திய அணியின் கேப்டன் தோனி, மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக முன்னாள் இந்திய அணியின் மேலாளரும் தற்போது டெல்லி கிரிக்கெட் சங்க செயலாளருமான சுனில் தேவ் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து சன்ஸ்டார் பத்திரிகைக்கு அளித்துள்ள வீடியோ பேட்டியில் இந்த அதிர்ச்சித் தகவலை அவர் வெளியிட்டுள்ளார். அந்த பேட்டியில், இது 100 சதவீதம் உண்மை என்றும் அவர் குறிப்…

  7. டிக்கெட் விற்பனையில் முறைகேடு: பிஃபா முன்னாள் பொதுச்செயலாளருக்கு 12 ஆண்டுகள் தடை! உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான டிக்கெட் விற்பனையில், முறைகேட்டில் ஈடுபட்டதாக பிஃபா முன்னாள் பொதுச்செயலாளர் ஜெரோம் வால்கிக்கு 12 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலக கால்பந்து சம்மேளனமான பிஃபாவில் பெரும் ஊழல் நடந்திருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த அமைப்பின் தலைவராக இருந்த ஜோசப் பிளேட்டர் பதவி விலக நேரிட்டது. அத்துடன் பொதுச் செயலளாளராக இருந்த ஜெரோம் வால்கி மீதும் ஊழல் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஒளிபரப்புவது குறித்த மீடியா உரிமையை வழங்குவதிலும் மற்றும் டிக்கெட் விற்பனையிலும் ஜெரோம் வால்கி, …

  8.  பதவி விலகினார் வக்கார் யுனிஸ் பாகிஸ்தான் அணியின் பயிற்றுநரான வக்கார் யுனிஸ், தனது பதவியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்துள்ளார். அவரது பதவிக்காலம் நிறைவுபெறுவற்கு 3 மாதங்கள் முன்னதாகவே, அவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இந்தியாவில் இடம்பெற்ற உலக இருபதுக்கு-20 தொடர், பங்களாதேஷில் இடம்பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டிகள் உட்பட, அண்மைக்காலமாக பாகிஸ்தான் அணி, சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருக்காத நிலையிலேயே, தனது பதவியிலிருந்து அவர் விலகியுள்ளார். உலக இருபதுக்கு-20 தொடர் நிறைவடைந்த பின்னர், பாகிஸ்தான் அணியின் தோல்விகள் தொடர்பாக, அணித்தலைவர் ஷகிட் அப்ரிடி உட்பட கிரிக்கெட் சபை, கிரிக்கெ…

  9. ஐ.சி.சி டெஸ்ட் தரப்படுத்தல்: முதலிடத்தில் அவுஸ்திரேலியா; 7ஆம் இடத்தில் இலங்கை சர்வதேச கிரிக்கெட் சபையினால் (ஐ.சி.சி) டெஸ்ட் தரப்படுத்தலில், ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் இற்றைப்படுத்தலைத் தொடர்ந்து, புதிய தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தில் மேற்கொள்ளப்படும் இற்றைப்படுத்தலைத் தொடர்ந்தே, இந்தத் தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தனது முதலிடத்தில் தொடர்ந்தும் காணப்படும் அவுஸ்திரேலிய அணி, இரண்டாமிடத்திலுள்ள அணியுடனான தனது இடைவெளியை, ஆறாக அதிகரித்துக் கொண்டது. இரண்டாவது இடத்தில் இந்திய அணி தொடர்ந்தும் காணப்படும் நிலையில், மூன்றாமிடத்தில் காணப்பட்ட தென்னாபிரிக்க அணி, 3 இடங்கள் பின்தங்கி, ஆறாவது இடத்துக்குப்…

  10. 2021 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு : 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது. 16 அணிகள் பங்கேற்கும் 7 ஆவது இருபதுக்கு : 20  உலக கிண்ண கிரிக்கெட் தொடர் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகவுள்ளது. அதைத் தொடர்ந்து 8 ஆவது இருபதுக்கு : 20 உலகக் கிண்ணத் தொடரானது அடுத்த ஆண்டு இந்தியாவில் இடம்பெறவுள்ளது. இந்த போட்டியிலும் 16 அணிகள் களம் இறங்குகின்றன. இவற்றில் 4 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும். இந்த தகுதி சுற்றின் ஒரு பகுதி போட்டிகள் அடுத்த மாதம் முதல் ஜூன் வரை நடக்க இருந்தது. எனினும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து உயர்வடைந்து செல்கின்றமையினால் தகுதி சுற்ற…

    • 0 replies
    • 619 views
  11. ரி20 கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மாவின் சாதனையை முறியடித்தார் பாபர் அசாம்; தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான் Published By: Vishnu 03 Nov, 2025 | 12:30 AM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவுக்கு எதிராக லாகூர் கடாபி விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் பாபர் அஸாம் துடுப்பாட்ட சாதனை ஒன்றை நிலைநாட்டியதுடன் பாகிஸ்தான் 4 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் கைப்பற்றியது. அப் போட்டியில் 68 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தானின் முன்னாள் அணித் தலைவர் பாபர் அஸாம், சர்வதேச ரி20 போட்டிகளில் அதிக மொத்த ஓட்ட…

  12. லார்ட்ஸ்...இங்கிலாந்து...6 ஆண்டுக்கு பிறகு மீண்டும் முகமது ஆமிர்! #ThrowbackThursday ஆகஸ்ட் 2010, சல்மான் பட் தலைமையிலான பாகிஸ்தான் அணி இங்கிலாந்து மண்ணில் படுதோல்வி அடைந்து திரும்பியது. தொடர் நாயகன் முகமது ஆமிர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வேன்டுமென்றே நோபால் வீசியது தெரிய வந்து 5 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் திரும்ப களம்கண்ட ஆமீர் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சு கில்லியாகியுள்ளார். அணிக்கு திரும்பியதை நன்றாக பயன்படுத்தி கொண்டார். உலகின் அதி பயங்கர வீரர்களான கோலி, டிவில்லியர்ஸையே டி20 போட்டிகளில் நிலை குலைய வைத்தார். ஆசியக் கோப்பையில் இந்தியாவை அலறவிட்ட ஆமீருக்கு ஒரு பேட்டை பரிசளிப்பதாக கோலி கூறி உலகக் கோப்பையில் அதன…

  13. அயல்நாட்டில் இரட்டைச் சதம் அடித்த முதல் இந்திய கேப்டன்: விராட் கோலி சாதனை ஜேசன் ஹோல்டரை புல் ஷாட்டில் பவுண்டரி அடிக்கும் கோலி. | படம்: ஏ.பி. மே.இ.தீவுகளுக்கு எதிராக நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இரட்டைச் சதம் அடித்துச் சாதனை புரிந்தார். உணவு இடைவேளையின் போது இந்தியா முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை இழந்து 404 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 200 நாட் அவுட், அஸ்வின் 64 நாட் அவுட். இதன் மூலம் அயல்நாட்டில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் ஆனார் விராட் கோலி. நேற்று 143 நாட் அவுட் என்று இன்று தொடங்கிய விராட் கோலி கண்கொள்ளாக் காட்சி கவர்டிரைவ்களை தொடர்ந்தார். நேற்று 1…

  14. ரங்கன ஹேரத்தின் புதிய பாதை இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் சமுக வலைத்தளமான உத்யோகப்பூர்வ டிவிட்டர் தளத்தில் நேற்று (02) இணைந்தக்கொண்டுள்ளார். இவரின் முதலாவது டுவிட்டாக மெத்தியுஸ், சந்திமல் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவுசெய்து பகிர்ந்துள்ளார். http://www.virakesari.lk/article/9729

  15. நல்ல வேளை ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றீர்கள்; நான் கொஞ்சம் ரன் அடிக்கலாம்: ஹெராத்திடம் கூறிய ஸ்டீவ் ஸ்மித் இலங்கைக்கு எதிராக 0-3 என்று ஒயிட்வாஷ் ஆன ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் தான் அவுட் ஆன ஷாட், ஹெராத்தின் அபாரப் பந்து வீச்சு குறித்து விரிவாகப் பேசினார். அப்போது ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து நீங்கள் ஓய்வு பெற்றது நல்லதே, நான் கொஞ்சம் ரன்கள் அடித்துக் கொள்கிறேன் என்று ரங்கனா ஹெராத்திடம் நட்பு முறையில் நகைச்சுவையாகக் கூறியதாக ஆஸி. கேப்டன் ஸ்மித் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் வெளியிடப்பட்ட செய்தியில் ஸ்மித் கூறியிருப்பதாவது: குறைந்தது ஒருநாள் போட்டிகளில் ரங்கனா ஹெராத் இல்லை என்பதை அறிகிறேன். அவர் ஒருநாள் கிரிக்கெட்டில…

  16. ஓய்வின்போது மனம் திறந்த டில்ஷான் (வீடியோ இணைப்பு) இலங்கை அணிக்கு தலைவராக செயற்பட்ட காலத்தில் அணியின் சில வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களின் ஆதரவு தனக்கு கிடைக்கவில்லை என ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற இலங்கை அணியின் சகலதுறை வீரர் திலகரட்ண டில்ஷான் கூறியுள்ளார். நேற்று (28) ஆஸி அணிக்கெதிராக தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டி நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இதனை தெரிவித்தார். இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கை அணியின் தலைமை பொறுப்பை ஏற்கும் எண்ணம் என்னிடம் இருக்கவில்லை. எனினும் அணியின் தலைவராக ஆறு மாதத்திற்கு மாத்திரம் …

  17. அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் செரீனா அதிர்ச்சி தோல்வி: தரவரிசையில் முதலிடத்தை இழக்கிறார் அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இதன் மூலம் அவர் முதலிடத்தை இழக்கும் நிலை உருவாகி உள்ளது. நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் முதல் நிலை வீராங்கனையான செரீனா, அரை இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை எதிர்த்து விளை யாடினார். செரீனா தோல்வி முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் போட்டியின் அரை இறுதியில் விளையாடிய பிளிஸ்கோவா எந்தவித பதற்றமும் இல்லாமல் விளையாடி முதல் …

  18. ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் முதல் நாளிலேயே 9 விக்கெட்டுகளை பறிகொடுத்த ஆஸ்திரேலியா 237 ரன்கள் எடுத்த நிலையில் திடீரென டிக்ளேர் செய்தது. இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்திருக்கிறதுஇந்தியா வருகை தந்துள்ள கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சென்னையில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இந்திய அணி அபாரமாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.இதைத் தொடர்ந்து இன்று ஹைதராபாத்தில் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.இன்று காலை போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாட…

  19. கனடா வீரர் நடுவரின் கண்ணில் தாக்கியதால், பிரிட்டன் டென்னிஸ் அணி காலிறுதிக்கு தகுதி பிரிட்டன் மற்றும் கனடா டென்னிஸ் அணிகள் இடையில் நடைபெற்ற டேவிஸ் கோப்பைக்கான ஆட்டத்தில், கனடா விளையாட்டு வீரர் ஒருவர், நடுவரின் கண்ணில் டென்னிஸ் பந்தை அடித்து காயமுற செய்த அசாதரணமான சூழ்நிலையால் பிரிட்டன் அணி காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகனடாவுக்காக முதல்முறைாக டேவிஸ் கோப்பையில் டெனிஸ் ஷாபோவாலோவ் விளையாடியுள்ளார் ஒட்டவாவில் பிப்ரவரி 5 ஆம் தேதி இரவு நடைபெற்ற டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஆட்டத்தின்போது, பிரிட்டனின் கைல் எட்மண்ட்ஸின் பந்தை 17 வயதான கனடா வீரர் டெனிஸ் ஷாபோவாலோவ் சந்தித்தபோது, அது கோட்டுக்கு வெளியே விழுந்த கோபத்தில…

  20. திருமண பந்தத்தில் இணைந்தார் இந்திய வீரர் பும்ரா இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இன்று திங்கட்கிழமை திருமண பந்தத்தில் இணைந்தார். பும்ரா - மொடல் அழகியும் தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான சஞ்சனா கணேசன் என்பவரை திருமணம் செய்துள்ளார். இருவரதும் திருமண நிகழ்வு இன்றையதினம் கோவாவில் இடம்பெற்றது. மட்டுப்படுத்தப்பட்ட விருந்தினர்களுடன் குறித்த திருமணம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருவருக்குமிடையில் திருமணம் இடம்பெற்றதையடுத்து முதலாவது படத்தை பும்ரா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/102169

    • 4 replies
    • 1k views
  21. ஸ்விஸ் மலையேற்ற வீரர் யூலி ஸ்டெக் விபத்தில் மரணம் சுவிஸ் நாட்டை சேர்ந்த யுலி ஸ்டெக் எவரெஸ்ட் சிகரத்தில் உயிரிழந்த்தாக நேபாள சுற்றுலா அலுவலகம் அறிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைSCHWEIZER FERNSEHEN Image captionயூலி ஸ்டெக் விபத்தில் மரணம் "ஸ்விஸ் மெஷின்" என்று அழைக்கப்படும் ஸ்டெக், எவரெஸ்ட் சிகரத்தை புதிய வழியில், ஆக்ஸிஜன் இல்லாமல் அடைய பயணம் மேற்கொண்ட முயற்சியில் உயிரிழந்தார். நாற்பது வயதான ஸ்டெக், துரிதமாக மலையேறும் திறமைக்காக பல்வேறு விருதுகளை பெற்றவர். இமயமலையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட அவரது சடலம் காட்மண்டுவுக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டது. "கீழ் முகாமில் இருந…

  22. 21 ஆண்டுகளுக்குப் பிறகு... ஃபிஃபா தர வரிசையில் டாப் 100ல் என்ட்ரி கொடுத்த இந்தியா! ஐபிஎல் போட்டிகளில் நாம் பிஸியாக இருக்கிறோம். ஆனால், இந்த நேரத்தில் நம் கால்பந்து அணி சைலன்டாக ஒரு சாதனையைச் செய்துள்ளது. ஃபிஃபா (FIFA) வெளியிட்டுள்ள சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 100-வது இடத்தைப் பிடித்துள்ளது. 1996-ம் ஆண்டு 94-வது இடத்தை இந்திய அணி பிடித்திருந்தது. தற்போது வரை ஃபிஃபா தர வரிசையில், இந்தியாவின் சிறந்த நிலை அதுதான். கடந்த மாதம் வெளியிடப்பட்டிருந்த பட்டியலில், இந்திய அணி 101-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்திருந்தது. 64 ஆண்டுகளுக்குப் பிறகு மியான்மர் மண்ணிலேயே, அந்த அணியை வீழ்த்தியது, கம்போடியா அணியைச் சாய்த்தது ஆக…

  23. கிறிஸ்டியானோ ரொனால்டோவின் புதிய சாதனை சர்வதேச போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரராக தற்சமயம் கிறிஸ்டியானோ ரொனால்டோ மாறியுள்ளார். 2021 செப்டம்பர் முதலாம் திகதி போர்ச்சுகல், அல்கர்கேவ் மைதானத்தில் நடந்த போர்ச்சுகல் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆண்களுக்கான சர்வதேச கால்பந்து போட்டியின்போது அதிக கோல்கள் அடித்த சாதனையை அவர் முறியடித்துள்ளார். இந்த ஆட்டத்தில் அயர்லாந்துக்கு எதிராக போர்ச்சுகல் அணித் தலைவர் ரொனால்டோ தனது 110 ஆவது மற்றும் 111 ஆவது கோல்களை அடித்தார். இதன் மூலம் ஆண்கள் சர்வதேச கால்பந்தில் அதிக கோல்கள் அடித்த வீரராக காணப்பட்ட ஈரானிய அலி டாய்யின் (109 கோல்) முறியடிக்கப்பட்டது. அவருக்கு அடுத்தபடியாக சர்வதேச போட…

  24. தான் இன்னும் ஓய்வு பெறவில்லை - கிறிஸ் கெய்ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்த பேச்சுக்களை மறுத்துள்ள கிறிஸ் கெய்ல், மீண்டும் டி-20 உலகக் கிண்ணத்தில் விளையாடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் 42 வயதான கிறிஸ் கெய்ல் இந்த டி-20 உலக கிண்ண கிரிக்கெட்டில் பிரகாசிக்கவில்லை. நேற்றைய அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2 சிக்ஸருடன் 15 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். நடப்பு உலக கிண்ணதொடரில் அதிக வயது (42) வீரரான கிறிஸ் கெய்ல் 5 ஆட்டங்களில் விளையாடி வெறும் 45 ஓட்டங்களை மட்டுமே எடுத்துள்ளார். கெய்லின் ஆட்டத்திறன் பாதிப்பும் மேற்கிந்தியத்தீவுகள் அணி அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெள…

  25. பிரபல குத்துச் சண்டை வீரர் கிளிட்ஸ்கோ ஓய்வு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரபல குத்துச் சண்டை வீரர் விளாடிமிர் கிளிட்ஸ்கோ(wladimir-klitschko), போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டுள்ளார். உக்ரேய்ன் நாட்டைச் சேர்ந்த 41 வயதான கிளிட்ஸ்கோ அதிபார உலக சம்பியன் குத்துச் சண்டை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் பிரித்தானிய வீரர் அன்ரனி ஜொஸ்வா ( Anthony Joshua )உடன் நடைபெற்ற போட்டியில் 11ம் சுற்றில் கிளிட்ஸ்கோ தோல்வியைத் தழுவினார். எதிர்வரும் நவம்பர் மாதம் 11ம் திகதி மீளவும் கிளிட்ஸ்கோவுடன் போட்டியிட முடியும் எனவும் லோஸ் ஏஞ்சல்ஸில் இந்தப் போட்டியை நடத்த முடியும் எனவும் ஜொஸ்வா நம்பிக்கை வெளியிட்டிருந்தார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.