விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
1000 ஆவது டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளும் இங்கிலாந்து இங்கிலாந்து அணி 1000ஆவது டெஸ்டில் களமிறங்கக் காத்திருக்கின்றது. இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இச் சாதனையை எட்டவுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு 1877ஆம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்தது. அதே ஆண்டில் முதல் டெஸ்டில் களமிறங்கியது இங்கிலாந்து. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இப்போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இதுவரை 999 டெஸ்ட் போட் டிகளில் இங்கிலாந்து பங்கேற்றுள்ளது. இதில் 357 போட்டிகளில் வெற் றியும் (35.73 சதவீதம்) 297 போட்டிகளில் தோல்வியும் கண்ட இங்கிலாந்து 345 போட்டிகளை சமநிலையில் முடித்துள்ளது. …
-
- 0 replies
- 796 views
-
-
விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன்- மனம் திறந்தார் பிரேசில் நட்சத்திரம் நெய்மர் ரஷ்யாவில் சமீபத்தில் முடிவடைந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதியில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. முன்னதாக நாக் அவுட் சுற்றில் மெக்சிகோ அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மர், எதிரணி வீரர் காலை தட்டிவிட்டதாகக்கூறி சில அடி தூரத்துக்கு டைவ் செய்தபடி உருண்டு சென்று விழுந்தார். இதுதொடர்பாக ஆட்டம் முடிவடைந்ததும் மெக்சிகோ அணியின் பயிற்சியாளர் கடும் விமர்சனம் செய்தார். நெய்மர் வேண்டுமென்றே நடித்து நேரத்தை கடத்தியதால் தங்கள் அணியின் ஆட்டத்திறன்…
-
- 1 reply
- 492 views
-
-
டோனியின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி! ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்களில் டோனியின் சாதனையை விராட் கோலி இன்று (சனிக்கிழமை) முறியடித்தார். அந்த வகையில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்களின் வரிசையில் 4 ஆவது இடத்தில் இருந்த டோனியை பின்தள்ளி கோஹ்லி நான்காவது இடத்துக்கு முன்னேறினார். டோனி 273 இன்னிங்ஸில் விளையாடி 10,143 ஓட்டங்கள் எடுத்துள்ளார். கோஹ்லி 205 இன்னிங்ஸில் விளையாடி 10,076 ஓட்டங்களை எடுத்திருந்தார். டோனியை முந்துவதற்கு அவருக்கு 66 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3 ஆவது போட்டி இன்று நடைபெற்றது. அதில் துடுப்பெடுத்தாடிய விராட் கோஹ்லி 66 …
-
- 0 replies
- 380 views
-
-
நடுவரைத் திட்டிய ஷேன்வோர்னுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன். இவர் தற்போது கவுன்டி போட்டிகளில் ஹாம்ப்ஷையருக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் கென்டர்பரியில், கென்ற் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் இவருக்கு நடுவர் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட் கொடுத்தார். இந்தத் தீர்ப்பை ஏற்க மறுத்த வோர்ன் களத்திலேயே சிறிது நேரம் இருந்தார். பின்னர் `பெவிலியன்' திரும்பும்போது தகாத வார்த்தைகளால் நடுவரை வசை பாடினார். இச்சம்பவம் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் சபையிடம் நடுவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, இவருக்கு 6 அபராத புள்ளிகளை கிரிக்கெட் சபை விதித்தது. இப்புள்ளிகள் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இவரது கணக்கிலிருக்க…
-
- 0 replies
- 976 views
-
-
24 NOV, 2023 | 05:48 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) பம்பலப்பிட்டி இந்து கல்லூரி மாணவனான செல்வசேகரன் ரிஷியுதன் 9.4 ஓவர்கள் பந்து வீசி ஓட்டம் எதனையும் விட்டுக்கொடுக்காமல் 8 விக்கெட்டுக்களை சாய்த்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துக்கொடுத்துள்ளார். 13 வயதுக்குட்பட்ட (ஏ) டிவிஷன் -2 கிரிக்கெட் தொடர் - 2023இன் கொழும்பு - 04 பம்பலப்பிட்டி இந்து கல்லூரி அணிக்கும், பத்தரமுல்லை ஜயவர்தன மகா வித்தியாலய அணிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி முல்லேரியா எதிரிவீர சரத்சந்திரா விளையாட்டு மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை (23) நடைபெற்றது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பம்பலப்பிட்டி அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களை ப…
-
- 4 replies
- 569 views
- 1 follower
-
-
நாடுகளுடன் கிரிக்கெட் உறவை துண்டிப்பது எங்கள் வரம்பில் இல்லை: பிசிசிஐ கோரிக்கையை ஏற்க ஐசிசி மறுப்பு Published : 03 Mar 2019 14:43 IST Updated : 03 Mar 2019 14:48 IST துபை பிரதிநிதித்துவப் படம் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் அல்லது ஆதரவளிக்கும் நாடுகளுடன் கிரிக்கெட் உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) கோரிக்கையை ஏற்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மறுத்துவிட்டது. கிரிக்கெட் விளையாடும் நாடுகளுடன் நட்பு வைப்பதும், உறவைப் பேணுவதும், துண்டிப்பதும் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. இதுபோன்ற விஷயத்தில் தலையிட முடியாது என்று ஐசிசி திட்டவட்டமாக மறுத்துவிட்டது. …
-
- 0 replies
- 389 views
- 1 follower
-
-
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் ஆஷஸ் தொடர்: முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி இங்கிலாந்து, அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் டோன்டனில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதலாவது ஆஷஸ் மற்றும் சர்வதேச ஒருநாள் சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்களால் இங்கிலாந்து வெற்றிபெற்றது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றது. இதில் எலிஸ் பெரி 78 ஓட்டங்களையும் அலெக்ஸாண்ட்ரா பிளக்வெல் 58 ஓட்டங்களையும் பெற்றதுடன் நான்காவது விக்கெட்டில் 121 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இங்கிலாந்து மகளிர் பந்துவீச்சில் கத்தரின் ப்ரன்ட் 48 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலு…
-
- 0 replies
- 296 views
-
-
சம்பியன்ஸ் லீக் காலிறுதி இரண்டாவது லெக் போட்டிகளின் முடிவுகள்! ஐரோப்பிய உயர்தர கால்பந்து கழகங்களுக்கிடையில், நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதி இரண்டாவது லெக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நேற்று ஆரம்பமான காலிறுதி இரண்டாவது லெக்கில், இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளின் முழுமையான முடிவுகளை தற்போது பார்க்கலாம், ஸ்பெயினில் உள்ள கேம்ப் நவ் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில், மென்செஸ்டர் யுனைடெட் அணியும், பார்சிலோனா அணியும் பலப்பரீட்சை நடத்தின. ஏற்கனவே இரு அணிகளும் மோதிய முதலாவது லெக் போட்டியில், பார்சிலோனா அணி 1-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது. ஆகையால் இப்போட்டியில், இரு அணிகளுமே மிகப்பெரிய வெற்றியினை நோ…
-
- 0 replies
- 528 views
-
-
இந்தியாவிடம் வீழ்ந்தது ஆஸி. அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 36 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 14 ஆவது போட்டி விராட் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மற்றும் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமானது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 352 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்கு 353 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 316 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 36 ஓட்டத்தனால் தோல்வி…
-
- 0 replies
- 466 views
-
-
சிற்றி, ஆர்சனல், லிவர்பூல் வெற்றி இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறிமியர் லீக் தொடரில் மன்செஸ்டர் சிற்றி, ஆர்சனல், லிவர்பூல் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன. இதில் மன்செஸ்டர் சிற்றி அணி 2-1 என்ற கோல் கணக்கில் நோர்விச் சிற்றி அணியைத் தோற்கடித்து முதலிடத்தில் நீடிக்கின்றது. இப்போட்டியில் நிக்கொலஸ் ஓட்டமென்டி 67 ஆவது நிமிடத்தில் ஒரு கோலினைப் பெற்று சிற்றி அணிக்கு முன்னிலை பெற்றுக்கொடுத்தார். தொடர்ந்து 83வது நிமிடத்தில் நோர்விச் சிற்றி அணியின் கமரூன் ஜெரோம் ஒரு கோலினைப் பெற்று கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார். எனினும் 89ஆவது நிமிடத்தில் யாயா தோரே, கிடைத்த பெனால்டியை கோலாக்க சிற்றி வெற்றி பெற்றது. அடுத்து ஆர்சனல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் சுவான்சீ அணியை …
-
- 0 replies
- 292 views
-
-
ஓய்விலிருந்து மீண்டு தென் ஆப்பிரிக்காவுக்காக மீண்டும் ஆட கிரேம் ஸ்மித் விருப்பம் முன்னாள் தென் ஆப்பிரிக்க கேப்டன் கிரேம் ஸ்மித். | படம்: ராய்ட்டர்ஸ். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா சரணடைந்ததையடுத்து முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார். 33 வயதிலேயே கிரேம் ஸ்மித் ஓய்வு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் (எம்.சி.எல்) கிரிக்கெட்டுக்காக அவர் தன்னை தயார்படுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் கூறியிருப்பதாவது: "சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்ப எம்.சி.எல். ஒரு சிறந்த வழியாக அமையலாம். நான் மீண்டும் தென் ஆப்பிரிக்காவுக்காக ஆட வேண…
-
- 0 replies
- 506 views
-
-
முழு மாரத்தான் (Full Marathon) எனப்படும் 42 கிலோ மீட்டர் தொலைவை 2 மணி நேரத்திற்குள் முடித்து கென்ய வீரர் எலியூத் கிப்சோக் (Eliud Kipchoge) சாதனை படைத்துள்ளார். மாரத்தான் வரலாற்றில் இது யாரும் செய்யாத சாதனையாக உள்ளது. இதனை எலியூத்தின் மனைவி, 3 குழந்தைகள் நேரில் பார்த்து அவரை உற்சாகமூட்டினர் 42 கிலோ மீட்டர் தூர முழு மாரத்தானை கென்யாவை சேர்ந்த பிரபல மாரத்தான் வீரர் எலியூத் கிப்சோக் 2 மணி நேரத்திற்குள்ளாக ஓடி முடித்து வரலாற்று சாதனையை படைத்துள்ளார். மொத்தம் 1 மணி 59 நிமிடம் 40.2 வினாடிகளில் அவர் 42 கிலோ மீட்டரை ஓடி முடித்தார். இது இதுவரையில் யாரும் செய்யாத சாதனையாக உள்ளது. 34 வயதாகும் அவர் இதே முழு மாரத்தானை 2018 - ல் ஜெர்மனியின் பெர்லினில் 2 மணி நேரம் …
-
- 4 replies
- 748 views
-
-
மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் December 22, 2015 முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி இந்தப் போட்டிகள் ஜனவரி 28ம் திகதி முதல் பெப்ரவரி 13ம் திகதி நடக்கிறது. இந்த தொடரில் லிப்ரா லெஜண்ட்ஸ், ஜெமினி அரேபியன்ஸ், காப்ரிகார்ன் கமெண்டர்ஸ், லியோ லயன்ஸ், விர்கோ சூப்பர் கிங்ஸ் மற்றும் சகிட்டரியஸ் ஸ்ட்ரைக்கர்ஸ் என மொத்தம் 6 அணிகள் பங்கேற்கிறது. இதில் கங்குலி, ஷேவாக், காலிஸ், ஜெயவர்த்தனே, சங்கக்காரா, முரளிதரன், கில்கிறிஸ்ட், வெட்டோரி, பிரட் லீ, பிரையன் லாரா என பல முன்னாள் வீரர்கள் பங்கேற்கின்றனர். எமிர…
-
- 14 replies
- 1k views
-
-
அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளில் இன்று 9 புதிய போட்டி சாதனைகள் ( நெவில் அன்தனி) அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளின் இரண்டாம் நாளான இன்றைய தினம் சாவகச்சேரி இந்து கல்லூரியைச் சேர்ந்த மேலும் ஒருவரான என். டக்சிதாக பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தில் புதிய சாதனை படைத்தார். அத்துடன் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியைச் சேர்ந்த எஸ். மிதுன்ராஜ் ஆண்களுக்கான குண்டேறிதல் போட்டியில் புதிய சாதனையை நிலைநாட்டினார். 35ஆவது அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்றன. போட்டியின் முதலாம் நாளான நேற்றைய தினம் ஏ. புவிதரன் புதிய சாதனை நிலைநாட்டிய நிலையில் அவரது கல்லூரியைச் சேர்ந்த டக்ச…
-
- 0 replies
- 302 views
-
-
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தார் ஜானிக் சினெர் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ஜானிக் சினெர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியைச் சேர்ந்த ஜானிக் சினெர் மற்றும் ஜேர்மனியைச் சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தியிருந்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய ஜானிக் சினெர் 6-3, 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரெவை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த…
-
- 1 reply
- 253 views
- 1 follower
-
-
பிளட்டர், பிளட்டினியின் குற்றம் உறுதியானது சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் வெளிச்செல்லும் தலைவர் செப் பிளட்டர், அதன் உப தலைவரும் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சம்மேளனங்களின் சங்கத்தின் தலைவருமான மைக்கல் பிளட்டினி ஆகியோர், தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தடைக்கெதிராக மேற்கொண்டிருந்த மேன்முறையீட்டில், அவர்களது குற்றம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த தண்டனை, குறைக்கப்பட்டுள்ளது. மைக்கல் பிளட்டினிக்கு செப் பிளட்டர் வழங்கிய 1.3 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ் கொடுப்பனவில், அவர்களிருவருமே குற்றம் இழைத்தார்கள் என, சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் மேன்முறையீட்டுக் குழு அறிவித்தது. எனினும், அவர்களு…
-
- 0 replies
- 452 views
-
-
இனிய வணக்கங்கள், 2008 ஒலிம்பிக் இன்னும் சில கிழமைகளில சீனாவில ஆரம்பமாக இருக்கிது. இந்த ஒலிம்பிக் பற்றிய கலந்துரையாடல், வர்ணனைகளிற்காக இந்த தலைப்பை ஆரம்பிக்கின்றேன். இதில நீங்கள் வாழுற நாடுகளில ஒலிம்பிக் சம்மந்தமான செய்திகளையும் கொஞ்சம் சொல்லுங்கோ. நம்மோட கனடா நாடு கடந்த 2004 ஒலிம்பிக்கில் 12 பதக்கங்கள் பெற்று 21ம் இடத்தில வந்திச்சிது. இந்தமுறையும் அவ்வாறே 20 சொச்சத்தில வரக்கூடும். இந்தமுறை சீனா பதக்க பட்டியலில முதலாம் இடம் பெறும் எண்டு கூறப்படுகிது. ஒரு பதக்கம் குறைவாக எடுத்து அமெரிக்கா இரண்டாம் இடத்தில வரும் எண்டு சொல்லப்படுகிது. முக்கியமாக இந்த ஒலிம்பிக் போட்டியின் கதாநாயகனாக அமெரிக்காவின் நீச்சல் வீரர் Michael Phelps விளங்குவார் என எதிர்வு கூறப்பட்டுள்ள…
-
- 81 replies
- 12.6k views
-
-
சச்சினின் அதிவேக ஒருநாள் அரைச்சத சாதனையை முந்திய நேபாள வீரர் By Mohammed Rishad நேபாளம் கிரிக்கெட் அணியின் 15 வயதான கௌஷால் மல்லா ஒருநாள் கிரிக்கெட்டில் இளம் வயதில் அரைச்சதம் அடித்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். நேபாளத்தில் முதன்முறையாக நேபாளம், ஓமான், அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐ.சி.சியின் உலகக் கிண்ண லீக் தொடரின் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கிர்திபூரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற 27ஆவது லீக் ஆட்டத்தில் நேபாளம் – அமெரிக்கா அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 190 ஓட்டங்களை எடுத்தது…
-
- 0 replies
- 364 views
-
-
நியூசிலாந்து - பாகிஸ்தான் முதல் டெஸ்ட் நாளை நியூசிலாந்து அணிக்கும் பாகிஸ்தான் அணிக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி, நாளை ஆரம்பிக்கவுள்ளது. இப்போட்டி, இலங்கை நேரப்படி அதிகாலை 3 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது. பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட கிறைஸ்ட்சேர்ச்சில் இடம்பெறவுள்ள இப்போட்டி, இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக அமையவுள்ளது. பலமான அணியாகக் கருதப்பட்ட நியூசிலாந்து அணி, இந்தியாவில் வைத்து 3 போட்டிகள் கொண்ட தொடரை, 0-3 என்ற கணக்கில் இழந்திருந்தது. மறுபக்கமாக பாகிஸ்தான் அணி, 2014ஆம் ஆண்டு ஓகஸ்டுக்குப் பின்பு, டெஸ்ட் தொடரொன்றில் தோல்வியடையாத தன்னம்பிக்கையுடன் காணப்படுகிறது. வேகப்பந்து வீச்…
-
- 11 replies
- 699 views
-
-
செல்லாத நோட்டு பிரச்னைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களும் தப்பவில்லை! இந்த மாதம் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், பழைய 500 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறினார். இதையடுத்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் புதிய ரூபாய் நோட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன. எனினும் தினசரி செலவுகளுக்கு பழைய நோட்டுகளை பயன்படுத்தி வந்த மக்களுக்கு இது பெரிய சிரமத்தை உருவாக்கியது. சாதாரண மக்களுக்கு தான் இந்த கதி என்று பார்த்தால், இந்தியாவில் சுற்றுப் பயணம் கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களுக்கும் இதே கதி தான். இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்து 19 நாட்கள் ஆகின்றன. எனினும், அவர்களுக்கு தர வேண்டிய தினசரி செலவு தொகையான ஐம்பது பவு…
-
- 0 replies
- 361 views
-
-
இந்திய மகளிர் அணி இப்போ ஆசிய சாம்பியன்! மகளிர் ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மிதாலி ராஜ் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 104 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் ஏக்டா பிஷ்ட் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன்மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி, ஆசிய சாம்பியனானது. …
-
- 0 replies
- 337 views
-
-
புரூம் சதம் ; நியுஸிலாந்து அணி 67 ஓட்டங்களால் வெற்றி பங்களாதேஷ் மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியுஸிலாந்து அணி 67 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியுஸிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 251 ஓட்டங்களை பெற்றது. நியுஸிலாந்து அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய புரூம் 109 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் மஷ்ரபீ மூர்தஷா 3 விக்கட்டுகளை கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ…
-
- 0 replies
- 374 views
-
-
பிக் பாஷ் டி20 லீக்: இரண்டாக உடைந்த மெக்கல்லத்தின் பேட் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் விளையாடிக் கொண்டிருந்து நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மெக்கல்லத்தின் பேட் இரண்டாக உடைந்தது. ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் பெர்த் ஸ்கார்ச்செர்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின. முதலில் விளையாடிய பெர்த் ஸ்கார்ச்செர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் குவித்தது. அடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பிரிஸ்பேன் ஹீட் அணியின் பியர்சன், பிர…
-
- 0 replies
- 484 views
-
-
ஐ.பி.எல். கிரிக்கெட்: இஷாந்த் ஷர்மா உள்பட 7 வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா உள்பட 7 வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா உள்பட 7 வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் ஏப்ரல் 6-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்க…
-
- 1 reply
- 486 views
-
-
டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வா?- டி வில்லியர்ஸ் விளக்கம் டி வில்லியர்ஸ். | படம்: ராய்ட்டர்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து தான் இன்னும் ஓய்வு பெறவில்லை என தென் ஆப்ரிக்க அணியின் அதிரடி வீரரரான டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து டி வில்லியர்ஸ் விலகினார். காயத்தில் இருந்து குணமடைந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ஒருநாள் போட்டி தொடரில் விளையாடினார். ஆனால் அதேவேளையில் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை டி வில்லியர்ஸ் புறக்கணித்தார். வரும் ஜூலை மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக ந…
-
- 0 replies
- 340 views
-