விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
வட மத்திய மாகாண அணிக்கு நெருக்கடி கொடுத்த ஜதுசன் மற்றும் கபில்ராஜ் இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் 23 வயதுக்கு உட்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் போட்டித் தொடரில் மேல் மாகாண வடக்கு அணியிடம், கிழக்கு மாகாணம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இரண்டு நாட்கள் கொண்ட இந்த போட்டிகளில் மேலும் மூன்று ஆட்டங்கள் இன்று வியாழக்கிழமை (27) ஆரம்பமாயி ன. இதில் வட மத்திய மாகாணத்தை எதிர்கொண்ட வட மாகாண அணி முதல் இன்னிங்ஸில் வலுவான நிலையில் உள்ளது. வட மேல் மாகாணத்திற்கு எதிரான போட்டியில் மேல் மாகாண மத்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தென் மாகாணத்துடனான போட்டியில் ஊவா மாகாணம் நிதானமாக ஆடி தனது மு…
-
- 2 replies
- 1.4k views
-
-
வட மாகாண துடுப்பாட்ட வெற்றக்கிண்ணத்தை சுபீகரித்தது யாழ் மாவட்ட அணி இலங்கை துடுப்பாட்ட சங்கத்தால் வடமாகாண மாவட்டங்களுகிடையே நடத்தப்பட்ட 50 பந்து பரிமாற்றங்களை கொண்ட 23 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான கடினபந்து சுற்றுபோட்டியின் இறுதி போட்டி இன்று (13) காலை 10 மணியளவில் வவுனியா நகரசபை மைதானத்தில் வவுனியா மாவட்ட கடின பந்து துடுப்பாட்ட சங்கத்தின் தலைவர் யோ.ரதீபன் தலமையில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் மாவட்ட அணி களத்தடுப்பை தெரிவு செய்து வவுனியா மாவட்ட அணியினை துடுப்பெடுத்தாட பணித்தது. அதன்படி களமிறங்கிய வவுனியா மாவட்ட அணி 27.5 பந்துபரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 94ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அதிகபட்சமாக சயரூபன் 29 ஓட்டங்களை பெற…
-
- 0 replies
- 858 views
-
-
22 AUG, 2024 | 12:29 PM (என்.வீ.ஏ.) வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகள் பெற்ற மொத்த பதக்கங்கள் அடிப்படையில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் முல்லைத்தீவு மாவட்டம் முதலாம் இடத்தைப் பெற்றது. பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட குத்துச்சண்டை போட்டி முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இதில் முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகள் சார்பாக பங்குபற்றிய வீர, வீராங்கனைகள் 12 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் உட்பட மொத்தமாக 27 பதக்கங்களை வென்று வடமாகாணத்தில் முதலாம் இடத்தைப் பெற்று வரலாறு படைத்தனர். பதக்கங்கள் விபரம் …
-
-
- 2 replies
- 313 views
- 1 follower
-
-
வட மாகாண மெய்வல்லுநர் போட்டியில் வவுனியா மாணவி சாதனை Published By: VISHNU 06 SEP, 2024 | 06:27 PM வட மாகாண மெய்வல்லுநர் 2024 போட்டிகளில் வவுனியா வடக்கு வலயத்தில் உள்ள பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றான கிடாச்சூரி கருவேப்பங்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவி சாதனை படைத்துள்ளார். வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுநர் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது. 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான குண்டு எறிதல் போட்டியில் பங்குபற்றிய வவுனியா கிடாச்சூரி கருவேப்பங்குளம் அ.த.க பாடசாலையைச் சேர்ந்த சரனியா சந்திரகாசன் 9.41மீற்றர் தூரத்திற்கு குண்டை எறிந்து புதிய போட்டி சாதனையுடன் வர்ணச்சான்றிதழைப் பெற்றார்.…
-
- 0 replies
- 468 views
- 1 follower
-
-
வட மாகாண வரலாற்றில் முதன் முறையாக மன்னார் மளுவராயர் கட்டை அடம்பன் பாடசாலை தேசிய ரீதியில் தங்கம் வென்று சாதனை. வட மாகாண வரலாற்றில் முதன் முறையாக மன்னார் மளுவராயர் கட்டை அடம்பன் பாடசாலை தேசிய ரீதியில் தங்கம் வென்று சாதனை. மன்னார் மாவட்டத்தின் மடு வலயத்தை சேர்ந்த மளுவராயர் கட்டை அடம்பன் பாடசாலை 15 வயது கபடி அணி தேசிய ரீதியில் முதல் இடம் பெற்று தங்கம் வென்றுள்ளது. மாத்தறை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஒரு மாகாணத்தில் இருந்து மூன்று அணிகள் வீதம் ஒன்பது மாகாணத்தில் இருந்தும் 27 அணிகள் கலந்து கொண்டன. கடந்த வருடம் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று தேசிய ரீதியில் தோல்வியை சந்தித்த போதிலும் இம்முறை கடின உழைப்பின் மூலம் தங்கம் வென்றுள்ளது மளுவ…
-
- 1 reply
- 356 views
-
-
வட மாகாண வல்லவன் தொடர்: சுப்பர் 8இல் நாவாந்துறை சென். மேரிஸ் பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வல்நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம், தனது மைதானத்தில் நடாத்தி வரும் இவ்வருடத்துக்கான வட மாகாண வல்லவன் தொடரின் சுப்பர் 8 சுற்றுக்கு முதலாவது அணியாக நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம் தகுதி பெற்றுள்ளது. நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் வதிரி மனோகரா விளையாட்டுக் கழகத்துக்குமிடையே ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற நான்காவது சுற்றுப் போட்டியொன்றில் 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற சென். மேரிஸ், முதலாவது அணியாக சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. அவ்வணி சார்பாக, மதிவதனன், அமிட்டன…
-
- 0 replies
- 476 views
-
-
2015 அரச அதிபர் வெற்றிக்கிண்ணம்: யாழ். மாவட்ட செயலக அணியினர் வசம் யாழ். மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்வருடத்திற்கான அரச அதிபர் வெற்றிக்கிண்ணத்தினை யாழ். மாவட்ட செயலக அணியினர் தனதாக்கிக் கொண்டனர். நேற்று முன்தினம் வேலணை மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இறுதி நிகழ்வுகளும், வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றதுடன் புலமைப்பரிசிலில் சிறப்பு சித்தியை பெற்ற தீவக மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் உரையாற்றுகையில், பதினைந்து பிரதேச செயலக மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களிடையே நடாத்தப்படும் இவ்வெற்றிக் கிண்ண நிகழ்வு ஆறாவது வருட…
-
- 40 replies
- 5.3k views
-
-
வட மாகாண விளையாட்டு விழா : வவுனியா மாணவனுக்கு தங்கம், வெள்ளி By DIGITAL DESK 2 20 DEC, 2022 | 05:16 PM வட மாகாண விளையாட்டு விழாவில் வவுனியா மாவட்டத்தைச் செர்ந்த சசிகுமார் டனுசன் ஒரு தங்கம் உட்பட 2 பதக்கங்களை வென்று பலத்த பாராட்டைப் பெற்றார். யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்ற இவ் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன் சசிகுமார் டனுசன் வென்றெடுத்தார். 1,500மீற்றர் ஓட்டப் போட்டியை 4 நிமிடங்கள், 37.00 செக்கன்களில் ஓடி முடித்து சசிக…
-
- 0 replies
- 234 views
- 1 follower
-
-
வட மாகாண விளையாட்டு விழாவில் சம்பியனாகிய யாழ் மாவட்டம் வட மாகாண சபையும், வட மாகாண விளையாட்டுத் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 12 ஆவது வட மாகாண விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகள் கடந்த கடந்த 27 ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் யாழ். துரையப்பா மைதானத்தில் நடைபெற்றது. இம்முறைப் போட்டித் தொடரில் தேசிய மட்ட கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் அண்மைக்காலமாக திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற பல வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததுடன், 7 புதிய போட்டி சாதனைகளும் இங்கு நிகழ்த்தப்பட்டன. இதில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்களான எம். பிரேம்தாஸ் (100 மீற்றர்), ஏ. அபிஷான் (400 மீற்றர் சட்டவேலி ஓட்டம்), பி. ந…
-
- 0 replies
- 457 views
-
-
வட மாகாண வீரர் வியாஸ்காந்த் இலங்கை இளையோர் அணியில் இந்திய இளையோர் அணிக்கெதிராக எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகப்பற்றற்ற டெஸ்ட் போட்டித் தொடருக்கான இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியில் யாழ் மத்திய கல்லூரி அணியின் சகலதுறை வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் முதற்தடவையாக உள்வாங்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கடந்த மாதம் நடைபெற்ற மாகாண அணிகளுக்கிடையிலான 19 வயதுக்கு உட்பட்ட ஒரு நாள் தொடரில் வட மாகாண அணிக்காக விளையாடி திறமைகளை வெளிப்படுத்தியதன் பிரதிபலனாகவே வியாஸ்காந்துக்கு இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கெதிரான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது. …
-
- 0 replies
- 640 views
-
-
வட மாகாணத்தில் புதிய சாதனையை நிலை நாட்டிய வவுனியா நேர்மதி வவுனியா பூவரசங்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் செல்வி நேர்மதி கிட்ணசாமி 2015 ம் ஆண்டு வடமாகாண மட்ட பாடசாலைக்கிடையிலான விளையாட்டு போட்டியில் புதிய சாதனைகளை பதிவு செய்துள்ளார். 19வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டம், 1500 மீற்றர் ஓட்டம், 5000 மீற்றர் ஓட்டம் ஆகிய நிகழ்வுகளில் முதலாம் இடங்களை பெற்றுத் தேசியமட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். 800 மீற்றர் தூரத்தினை 2.36.3 நேரத்திலும் 1500மீற்றர் ஓட்டத்தினை 5.25.0 என்ற நேரத்திலும் ஓடிமுடித்து வடமாகாணத்தில் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். http://www.newjaffna.com/moreartical.php?newsid=39609&cat=sports&sel=current&subcat=…
-
- 8 replies
- 450 views
-
-
14 JAN, 2025 | 02:11 PM (நெவில் அன்தனி) வடக்கு மாகாணத்தில் மேசைப்பந்தாட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு விசேட பயிற்சித் திட்டத்தை இலங்கை மேசைப்பந்தாட்ட சங்கம் அண்மையில் நடத்தியது. சர்வதேச மேசைப்பந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து இலங்கை மேசைப்பந்தாட்ட சங்கம் நடத்திய இந்தத் திட்டத்தில் பயிற்சியாளர்களுக்கு விசேட நுட்பவியல் பயிற்சி அளிக்கப்பட்டது. பிராந்தியத்தில் உள்ளூர் பயிற்றுநர்களின் ஆற்றல்களையும் தரத்தையும் உயர்த்தும் வகையில் இந்த பயிற்சித் திட்டம் சர்வதேச மேசைப்பந்தாட்ட சம்மேளனத்தின் நிபுணத்துவம் பெற்ற பயிற்றுநர் மொஹம்மத் அத்தூம் தலைமையில் வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் 30 மணித்தியாலங்களுக்கு நடத்தப்பட்டது. …
-
- 0 replies
- 473 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 07 APR, 2025 | 01:01 PM வட கொரியாவில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக பியோங்யாங் சர்வதேச மரத்தன் ஓட்டப் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த மரத்தன் ஓட்டப்போட்டியில் சுமார் 200 வெளிநாட்டு வீரர்களை வட கொரியாவின் தலைநகர் வரவேற்றுள்ளது. 1981 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த மரத்தன் ஓட்டப் போட்டி வட கொரியாவின் முதல் ஜனாதிபதி கிம் இல் சுங்கின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி நடத்தப்படுகிறது. இறுதியாக 2019 ஆம் ஆண்டு மரத்தன் ஓட்டப் போட்டி நடைபெற்றது. அதில் 950 வெளிநாட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். கொவிட்-19 தொற்று பரவியமையை அடுத்து வட கொரியா மரத்தன் ஓட்டப் போட்டியை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில், வடகொர…
-
- 0 replies
- 324 views
- 1 follower
-
-
வடகொரியாவில் உலகக் கோப்பை கால்பந்து நடத்த லஞ்சம் கொடுத்த காமெடி நடிகர்! சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவில் ஊழலில் ஈடுபட்டதாக 7 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் அமெரிக்க அரசிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டார். ஊழலைத் சர்ச்சை வெடித்த நிலையில் நடந்த தலைவருக்கான தேர்தலிலும் ஜோசப் பிளேட்டர் போட்டியிட்டு 5வது முறையாக வெற்றி பெற்றார். எனினும் ஜோசப் பிளேட்டர் தொடர்ந்து பதவி வகிக்க விரும்பாமல் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை விதிமுறைகள் படி, ஜோசப் பிளேட்டர் ஃபிஃபா தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித…
-
- 1 reply
- 1k views
-
-
வடக்கின் கால்பந்தில் வரலாறு படைத்தது வலைப்பாடு ஜெகா மீட்பர் சுமார் 200 கழக அணிகள் பங்கெடுத்த யாழ், கிளிநொச்சி கழக அணிகளுக்கு இடையிலான மைலோ கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், பிற்பாதியில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய வலைப்பாடு ஜெகா மீட்பர் அணி ஆனைக்கோட்டை யூனியன் அணியை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கியுள்ளது. இறுதியாக இடம்பெற்ற மைலோ கிண்ண தொடர்கள் நான்கில் மூன்றுதொடர்களை நாவாந்துறை சென். மேரிஸ் அணியும், கடந்த வருடம் குருநகர்பாடும்மீன் அணியும் சம்பியன் கிண்ணத்தை தம்வசப்படுத்தியிருந்த நிலையில், இம்முறை ஐந்தாவது முறையாக இத்தொடர் இடம்பெற்றது. இறுதிப் போட்டி …
-
- 0 replies
- 466 views
-
-
வடக்கின் தாரகை வீராங்கனை ஆஷிகா விஜயபாஸ்க்கர்
-
- 0 replies
- 564 views
-
-
-
வடக்கின் நட்சத்திரமான அனிதா ஜெகதீஸ்வரன்!!
-
- 0 replies
- 698 views
-
-
வடக்கின் நட்சத்திரம் அனித்தா ஜெகதீஸ்வரன் இலங்கை சாதனை இலங்கையின் தேசிய மட்டத்தில் நடந்த கோல் ஊன்றி பாய்தல் நிகழ்ச்சியில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த அனித்தா எனும் வீராங்கனை மீண்டும் தனது புதிய சாதனையினைப் படைத்துள்ளார். ஏற்கனவே தன்னால் படைக்கப்பட்ட இந்தச் சாதனையை அவர் இன்று மீண்டும் புதுப்பித்துள்ளார். தியகமவில் உள்ள மஹிந்த ராஜபக்ச மைதானத்தில் இடம்பெற்ற 95வது தேசிய தடகள போட்டியிலேயே அவர் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார். அதன்படி இன்று இடம்பெற்ற இந்த பெண்களுக்கான கோல் ஊன்றி பாய்தல் போட்டியில் முதல் மூன்று இடங்களையும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வீராங்கனைகளே பெற்றுள்ளனர். இதற்கமைய, ஜே.அனித்தா 3.47 m உயரம்வர…
-
- 3 replies
- 1.5k views
-
-
வடக்கின் நீலங்களின் சமர் வெற்றிக்கிண்ணம் கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் கையில் கிளிநொச்சியின் துடுப்பாட்டத்தில் இரண்டு கல்லூரிகளுக்கு இடையே வருடந்தோறும் நடைபெறுகின்ற வடக்கின் நீலங்களின் சமர் கடினப்பந்து துடுப்பாட்ட போட்டியானது நேற்று முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி சமரின் வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது நேற்று முன்தினம் நாணய சுழற்சியில் வெற்றி ஈட்டிய கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி களத்தடுப்பை தீர்மானித்து களமிறங்கியது இரண்டு நாட்களைக் கொண்டு நடத்தப்பட்ட டெஸ்ட் கடினப்பந்து போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மத்திய கல்லூரி 35.வது பந்து பரிமாற்றத்தின் நான்காவது பந்து …
-
- 0 replies
- 270 views
-
-
வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் துடுப்பாட்டப் போட்டி யாழில் ஆரம்பம் வடக்கின் பெரும் போர் என வாண்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையேயான துடுப்பாட்டப் போட்டி நேற்று காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆரம்பமாகியுள்ளது. போட்டியில் பூவா தலையா போட்டதில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வெற்றி பெற்று துடுப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. 102 வது தடவையான போட்டி முதல் மூன்று நாட்களுக்கு இடம் பெறவுள்ளது. pathivu.com
-
- 38 replies
- 7.4k views
-
-
யாழ் மத்திய கல்லூரி மற்றும் யாழ் பரியோவான் கல்லூரி பங்கெடுக்கும் 107 வது வடக்கின் பெரும் போர் Big Match நாளை மார்ச் 14 இல் ஆரம்பித்து 15 மற்றும் 16ம் திகதி வரை நடைபெற உள்ளது. இது தொடர்பாக யாழ் மத்திய கல்லூரி மாணவர்கள் வெளியிட்டுள்ள நினைவுப்பாடல். மிகவும் நட்போடும்.. பொறுமையோடும்.. உச்ச ஒழுக்கத்தோடும்.. மாணவர்களின் திறன் வளர்க்கும் வகையிலும் போட்டியை இரு பாடசாலை மாணவர்களும்.. நடத்தி முடிக்க வாழ்த்துக்கள். http://youtu.be/05aJkde47mA படங்கள் யாழ் மத்திய கல்லுரி முகநூல். https://www.facebook.com/pages/Jaffna-Central-College/183860113822
-
- 27 replies
- 2k views
-
-
வடக்கின் பெரும்போர் என வர்ணிக்கப்படுகின்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென்ஜோன்ஸ் கல்லூரிகளுக்கிடையிலான 3 நாள் கொண்ட கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது. புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்தும் கூட பழைய மாணவர்கள் படையெடுத்து வந்த நிகழ்வாக இது அமைந்திருந்தது. இது 105 வது வடக்கின் பெரும் போராகும். நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் மத்திய கல்லூரி சென்ஜோன்ஸ் கல்லூரியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது. முதலில் 118 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் சென்ஜோன்ஸ் கல்லூரி இழந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ் மத்திய கல்லூரி 131 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. 2வது இனிங்சில் மீண்டும் சென்ஜோன்ஸ் கல்லூரி 13 ஓட்டங்களுடன் ஒரு விக்கெட்டை இழ…
-
- 5 replies
- 2.9k views
-
-
வடக்கின் போர் சென்ட்ரல் vs சென் ஜோன்ஸ் பிக் மேட்ச் எதிர்வரும் 10 11 12ம் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு இவ்வருடம் 200வது வருடங்களை நிறைவு கண்டு இருப்பதால் இப்போட்டியும் மிகமுக்கித்துவம் வாய்ந்த ஒன்றாக கருத்தப்படுகிறது. st. Johns படத்தையும் 2 போட்டு இருக்கு. இல்லை என்றால் நிழலியும் பகலவனும் கோவித்து கொள்வார்கள்.. இந்த போட்டி தொடர்பான செய்திகள் தொடரும்
-
- 153 replies
- 8.6k views
- 1 follower
-
-
வடக்கின் போர் இன்று ஆரம்பம் ! சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ். மத்திய கல்லூரிக்கும் இடையிலான 114ஆவது வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் மாபெரும் 3 நாள் கிரிக்கெட் போட்டி யாழ். மத்திய கல்:லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் 3ஆவது பழைமை வாய்ந்த போட்டியாக வடக்கின் போர் அமைகின்றது. அத்துடன் 3 நாட்கள் விளையாடப்படும் மூன்றாவது மாபெரும் கிரிக்கெட் போட்டியாகவும் இது அமைகின்றது. இவ்வாண்டு பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டிகளில்சென் ஜோன்ஸ் அணி பல சவால்களை சந்தித்துள்ளதுடன் யாழ். மத்திய கல்லூரி அணி ஒரு போட்டியிலும் தோல்வி அடையாத அண…
-
- 5 replies
- 943 views
-