விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7857 topics in this forum
-
4-ஆம் நிலையில் விராட் கோலி ஆதிக்கம் செலுத்த முடியும்: விவ் ரிச்சர்ட்ஸ் ஊக்கம் விராட் கோலியை 3ஆம் நிலையை விடுத்து, 4ஆம் நிலையில் களமிறக்குவது பற்றிய விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், விவ் ரிச்சர்ட்ஸ் அந்த உத்தியை ஆதரித்துள்ளார். இது பற்றி அதிரடி வீரர் விவ் ரிச்சர்ட்ஸ் கூறியதாவது: "எந்த ஒரு சிறந்த பேட்ஸ்மெனுக்கும் 4-ஆம் நிலை ஒரு சிறந்த பேட்டிங் நிலையே. பவுன்ஸ் சற்று கூடுதலாக இருக்கும் ஆஸ்திரேலிய பிட்ச்களில் சில பேட்ஸ்மென்கள், குறிப்பாக முதல் 3 நிலையில் களமிறங்குபவர்கள் சோபிக்க முடியாமல் போக வாய்ப்புள்ளது. அதனால் விராட் கோலியை 4-ஆம் நிலையில் இறக்குவதில் அர்த்தமிருப்பதாகவே கருதுகிறேன். அந்த நிலையில் அவர் எதிரணியினர் பந்துவீச்சு, களவீயூகத்தினை ஆதிக்கம் செலுத்த முட…
-
- 0 replies
- 249 views
-
-
2025 ஆசியக் கிண்ணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு! அடுத்த ஆண்டு ஐ.சி.சி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தை இந்தியாவுடன் இணைந்து நடத்தத் தயாராகி வரும் இலங்கை, 2025 ஆசியக் கிண்ணத்துக்கான தனது அணியை அறிவித்துள்ளது. 16 பேர் கொண்ட இந்த அணியினை சரித் அசலங்க வழிநடத்துகிறார். இதில் நட்சத்திர சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவும் இடம்பெற்றுள்ளார். பங்களாதேஷுக்கு எதிரான உள்நாட்டு தொடரின் போது சுழற்பந்து வீச்சாளரும், துடுப்பாட்ட வீரருமான ஹசரங்க காயமடைந்தார். இதனால், இன்று (29) ஆரம்பமாகும் சிம்பாப்வே சுற்றுப்பயணத்திலும் அவர் இடம்பெறவில்லை. ஆனால், அடுத்த மாதம் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் ஆரம்பகவுள்ள ஆசியக் கிண்ணத்துக்கு அவர் தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் இலங்கை அணி…
-
- 1 reply
- 249 views
-
-
எட்டு வருடங்களுக்கு பிறகு டி.ஆர்.எஸ். முறைமைக்கு இந்தியா பச்சைக்கொடி இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி விளையாடவுள்ள தொடரில் டி.ஆர்.எஸ். முறையை ஒத்திகை அடிப்படையில் மேற்கொள்வதற்கு இந்திய கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. டி.ஆர்.எஸ். எனப்படும் நடுவரின் தீர்ப்பை மேன்முறையீடு செய்யும் இந்த முறைமைக்கு இந்திய அணி எதிர்ப்பு தெரிவித்திருந்தது. எனினும் குறித்த டி.ஆர்.எஸ். முறைமையை எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணி ஒத்திகை அடிப்படையில் நடைமுறைப்படுத்தவுள்ளது. இந்திய அணி கடந்த 2008 ஆம் ஆண்டு இலங்கையுடனான போட்டியில் டி.ஆர்.எஸ். முறைமையை பயன்படுத்தியதனை தொடர்ந்து, எதிர்வரும் இங்கிலாந்து தொடரில்…
-
- 0 replies
- 249 views
-
-
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் புதிய சாதனை சர்வதேச போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரராக தற்சமயம் கிறிஸ்டியானோ ரொனால்டோ மாறியுள்ளார். 2021 செப்டம்பர் முதலாம் திகதி போர்ச்சுகல், அல்கர்கேவ் மைதானத்தில் நடந்த போர்ச்சுகல் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆண்களுக்கான சர்வதேச கால்பந்து போட்டியின்போது அதிக கோல்கள் அடித்த சாதனையை அவர் முறியடித்துள்ளார். இந்த ஆட்டத்தில் அயர்லாந்துக்கு எதிராக போர்ச்சுகல் அணித் தலைவர் ரொனால்டோ தனது 110 ஆவது மற்றும் 111 ஆவது கோல்களை அடித்தார். இதன் மூலம் ஆண்கள் சர்வதேச கால்பந்தில் அதிக கோல்கள் அடித்த வீரராக காணப்பட்ட ஈரானிய அலி டாய்யின் (109 கோல்) முறியடிக்கப்பட்டது. அவருக்கு அடுத்தபடியாக சர்வதேச போட…
-
- 0 replies
- 249 views
-
-
கிரிக்கெட் வீரர் மயங்கி விழுந்து பலி நமீபியா கிரிக்கெட் வீரர் ரெய்மண்ட் வேன் ஸ்கூர் மைதானத்தில் மயங்கி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான ரெய்மண்ட் வேன் ஸ்கூர் (வயது 25) பக்கவாதத்தால் மைதானத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதன் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இவர் 8000 ஓட்டங்களுக்கு மேல் குவித்துத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/11/21/%E0%AE%95%E0…
-
- 0 replies
- 248 views
-
-
இலங்கை அணிக்கு தொடரும் ஏமாற்றம் : இருபதுக்கு-20 தொடரில் முக்கிய இரு வீரர்கள் இல்லை! இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல பங்களாதேஷ் அணிக்கெதிரான இருபதுக்கு-20 தொடரிலும் விளையாடமாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபையின் தகவல்கள் தெரிவித்துள்ளன. நிரோஷன் டிக்வெல்ல கையில், பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தின் காரணமாக இவர் பங்களாதேஷ் தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். இதேவேளை இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் முதலாவது இருபதுக்கு-20 போட்டியில் விளையாடமாட்டார் எனவும், இரண்டாவது போட்டியில் விளையாட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/18543
-
- 0 replies
- 248 views
-
-
ஐரோப்பிய உதைபந்தாட்டக் கழகம் ஐரோப்பாவில் உள்ள 55 நாடுகளையும் வரிசைப்படுத்தி நான்கு லீக் குகளை உருவாக்கி ஒவ்வொரு லீக்கிலும் 4குழுக்களை உருவாக்கினர்லீக் Dயில் மட்டும் இரு குழுக்கள். லீக் ABCD என்பன அவை A யில் திறமை வாய்ந்த அணிகள் B அதற்கு அடுத்த திறமை வாய்ந்த அணிகள் பின்னர் C என Dயில் மிகவும் பலம் குறைந்த நாடுகளின் அணிகள் உள்வாங்கப்பட்டன இதை UEFA Nations League என அழைக்கின்றார்கள் இந்த லீக் விளையாட்டுக்களில் பலமாக விளையாடும் அணிகள் ஒரு லீக் ( B;C;D ) மேலேயும் பலம் குறைந்த அணிகள் ஒரு லீக்( ABC)கீழேயும் இறக்கி ஏற்றப்படுவார்கள். பின்னர் ஐரோப்பிய அணிகள் இந்த விளையாட்டுக்களின் அடிப்படையில் 1இலிருந்து…
-
- 0 replies
- 248 views
-
-
இலங்கை சுழல்பந்து வீச்சாளர்கள் திறமையை வெளிப்படுத்தவில்லை என்கிறார் மெத்யூஸ் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான காலி ஆடுகளத் தில் பாகிஸ்தான் சுழல்பந்து வீச்சாளர்களான யசிர் ஷாவும் ஸுல்ஃபிகார் பாபாரும் தனது சுழல்பந்துவீச்சாளர்களை விஞ்சிவிட்டதை இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் ஒப்புக்கொண்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட்களால் தோல்வியடைந்த பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் மெத்யூஸ் கருத்து வெளியிட்டார். யசிரும் பாபாரும் தங்களிடையே 13 விக்கெட்களைப் பகிர்ந்துகொண்டதுடன் மொஹமத் ஹஃபீஸ் இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆனால் இலங்கையின் முன்னணி சுழல்பந்துவீச்ச…
-
- 0 replies
- 248 views
-
-
லிவர்பூல் பயிற்றுநர் நீக்கம் லிவர்பூல் அணியின் முகாமையாளர் பிரென்டன் றொட்ஜர்ஸ், அவரது பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தொடர்ச்சியாக, அண்மைக்காலமாக வெற்றிகளைப் பெறாத நிலையிலேயே அவர் பதவி விலக்கப்பட்டுள்ளார். எவேர்ட்டன் அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில் 1-1 என்ற சமநிலையான முடிவையே பெற்று, சில மணி நேரங்களல் அவரது பதவி நீக்கம் குறித்த அறிவிப்பு வெளியானது. றொட்ஜர்ஸின் ஒப்பந்தம் முறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உடனடியாக விலக்கப்படுவதாகவும் லிவர்பூலின் உத்தியோகபூர்வ அறிக்கை தெரிவித்தது. அத்தோடு, றொட்ஜர்ஸூக்குப் பதிலாக இன்னொருவரைத் தெரிவுசெய்யும் பணி ஏற்கெனவே தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதேவேளை, செல்சி அணியின் மோசமான பெறுபேறுகள் காரணமாக அழுத்தத்துக்குள்ளாகியுள்ள …
-
- 0 replies
- 248 views
-
-
ஐசிசி பவுலிங் தரவரிசையில் முதலிடம்: கபில் தேவால் முடியாததை சாதித்துக் காட்டிய பும்ரா பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா மியாபுரம் பதவி, பிபிசி செய்தியாளர் 37 நிமிடங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தைப் பிடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இவர். இந்தத் தரவரிசையின் மூலம், பும்ரா உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்பதை நிரூபித்தார். ஏறக்குறைய 44 ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய வீரர் கபில்தேவ் கிட்டத்தட்ட முதலிடத்தை …
-
- 0 replies
- 248 views
- 1 follower
-
-
தகுதி இழப்புப் புள்ளிகள்: தடையை எதிர்நோக்கும் ஜடேஜா, வ.தேச வீரர் சபீர் ரஹ்மான் நடுவர் புரூஸ் ஆக்சன்போர்ட். | படம்: ஏ.பி. எதிரணியினரிடம் வாக்குவாதம், நடுவர்களிடம் வாய்ப்பேச்சு, பிட்சை சேதம் செய்யும் விதமாக செயல்படுவது போன்ற நடத்தைகளுக்காக ரவீந்திர ஜடேஜா மற்றும் வங்கதேச வீரர் சபீர் ரஹ்மான் ஆகியோர் தடையை எதிர்நோக்கியுள்ளனர். நியூஸிலாந்துக்கு எதிரான இந்தூர் டெஸ்ட் போட்டியில் 27 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த ரவீந்திர ஜடேஜா வேண்டுமென்றே பிட்சை சேதம் செய்யும் நோக்கத்துடன் ‘அபாய பகுதி’ என்று அழைக்கப்படும் பகுதிக்குள் ஓடி வந்தார், இதனால் நடுவர் புரூஸ் ஆக்சன்ஃபோர்ட் எச்சரித்ததோடு, நியூஸிலாந்துக்கு 5 அபராத ரன்களை வழங்கினார். கொல்கத்தா டெஸ்…
-
- 0 replies
- 248 views
-
-
டென்னிஸ் ஆடையிலிருந்து சொக்லேற் ஆடைக்கு..... பிரான்ஸை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான டாட்யானா கொலோவின், சொக்லேற்றுகள் கலந்து தயாரிக்கப்பட்ட ஆடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் அண்மையில் நடைபெற்ற “சொக்லேற் ஆடை” கண்காட்சியில் டாட்யானாவும் கலந்து கொண்டார். 27 வயதான டாட்யானா, 1988 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் மொஸ்கோ நகரில் பிறந்தவர். ஆனால், 8 மாத குழந்தையாக டாட்யான இருந்தபோது அவரின் பெற்றோர் பிரான்ஸுக்கு இடம்பெயர்ந்தனர். பின்னர் பிரான் ஸின் சார்பில் அவர் போட்டி களில் பங்குபற்ற ஆரம்பி த்தார். 2014 பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் கலப்பு இரட்டையர் போட்டிகளில் பிரெஞ்சு வீரர் ரிச்சர்ட் கஸ்கட்டுடன் இணைந்து டாட்யானா சம்பியன…
-
- 1 reply
- 247 views
-
-
மேட்ச் பிக்சிங் விவகாரம்: முகம்மது இர்பான் கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகம்மது இர்பான் கிரிக்கெட் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடை விதித்துள்ளது. இஸ்லாமாபாத்: ஐபிஎல் பாணியில் பாகிஸ்தான் சூப்பர் லீக் என்னும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தால் துபாயில் கடந்த மாதம் நடத்தப்பட்டன. இந்த தொடரில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக விளையாடிய முகம்மது இர்பானை சூதாட்ட தரகர்கள் அணுகியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கிரிக்கெட் வாரியத்தில் ஊழல் தடுப்பு நடத்தை வ…
-
- 0 replies
- 247 views
-
-
ஸ்ரான்லியிடம் வீழ்ந்தது மகாஜன September 26, 2015 யாழ். மாவட்டப் பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கம் நடத்திவரும் 19வயதுக்கு உட்பட்ட அணியின ருக்கான ரி -20 தொடரின் ஆட்டங்களில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற ஆட்டத்தில் ஸ்ரான்லிக் கல்லூரி அணி 6 இலக்குகளால் மகாஜனாவை வென்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய மகாஜனக் கல்லூரி அணி 16 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 114 ஒட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக பிரணவன் 19 ஓட்டங்களையும், தயூஸ்ரன் 17 ஓட்டங்களையும், ஜசிந்தன் 16 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஸ்ரான்லிக் கல்லூரி அணியின் சார்பில் விதுசன், சுஜிகரன் தலா 3 இலக்குகளையும் விஸ்ணுவானன், பிரசாந் இருவரும் தலா 2 இலக்குகளையும் வீழ்த…
-
- 0 replies
- 247 views
-
-
இலங்கை வீராங்கனை அமெரிக்காவில் சாதனை ! மரதன் போட்டிகளில் புதிய தேசிய சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார் இலங்கையின் மரதன் வீராங்கனையான ஹிருணி விஜேரத்ன. டெக்ஸாஸின் ஹொட்சனில் நடைபெற்ற சர்வதேச மரதன் போட்டியின் போதே ஹிருணி இந்த புதிய சாதனையை படைத்தார். இதற்கு முன் இலங்கை வீராங்கனை நிலூகா ராஜசேகரவினால் நிலைநாட்டப்பட்டிருந்த இரண்டு மணித்தியாலயம் 40 நிமிடம் 7 வினாடிகளில் அடைந்த பந்தயத் தூரத்தை, தற்போது ஹிருணி விஜேரத்ன இரண்டு மணித்தியாலயம் 36 நிமிடங்கள் 35 வினாடிகளில் கடந்து இலங்கையின் தேசிய சாதனையை புதுப்பித்துள்ளார். இந்த தேசிய சாதனையுடன் எதிர்வரும் ஏப்ரல் மா…
-
- 0 replies
- 247 views
-
-
பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற சீன வீராங்கனைகள் மூவர் உட்பட 15 பேர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி 2008 ஆம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் பளுதூக்குதல் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற சீன வீராங்கனைகள் உட்பட 15 பேர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியுற்றுள்ளனர் என சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் நேற்று தெரிவித்துள்ளது. பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று 8 வருடங்களான நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென் ஸியேஸியா மகளிர் 48 கிலோகிராம் எடைக்குட்பட்டோருக்கான பிரிவில…
-
- 0 replies
- 247 views
-
-
ராஜினாமா முடிவை வாபஸ் பெறும் முடிவில் ஜோசப் பிளேட்டர்? -சுவிஸ் பத்திரிகை தகவல் ஃபிஃபாவில் ஏற்பட்ட ஊழல் புகார் காரணமாக 5வது முறையாக தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த ஜோசப் பிளேட்டர் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். அடுத்த தலைவர் பதவியில் அமரும் வரை அவர் தற்போது பதவியில் தொடருகிறார். வருகிற ஜுலை 20ஆம் தேதி தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தும் தேதி குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது. எப்படியும் வரும் டிசம்பர் 16ஆம் தேதிக்குள் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் இருந்து வெளி வரும் 'சுவிஸ் ஐயம் சான்டாக்' என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், '' ஜோசப் பிளேட்டருக்கு ஆசிய மற்றும் ஆ…
-
- 0 replies
- 247 views
-
-
முதல் 3 பந்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்திய இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஜோ லண்டன்: கிரிக்கெட் உலகில் மிகவும் அரிய நிகழ்வான, பந்து வீச்சை ஆரம்பித்ததும் முதல் 3 பந்துகளில் 3 விக்கெட் வீழ்த்திய சம்பவம் மீண்டும் ஒருமுறை நடந்துள்ளது.இங்கிலாந்து கவுன்டி அணியான ஒர்செஸ்டெர்ஷயர் பந்து வீச்சாளர் ஜோ லீச், நார்த்தாம்ப்டன்ஷயர் அணிக்கு எதிரான போட்டியின்போது பந்து வீச்சைத் தொடங்கியதுமே 3 விக்கெட்களை அடுத்தடுத்த பந்துகளில் வீசி அசத்தினார். இவரது பந்து வீச்சில், ரிச்சர்ட் லெவி, ராக் கியோ, பென் டக்கெட் ஆகியோர் ஆட்டமிழந்தனர். முதல் இருவரையும் விக்கெட் கீப்பர் பென் காக்ஸ் கேட்ச் செய்தார். கடைசி நபரை ஜேக் ஷான்ட்ரி கேட்ச் செய்தார்.கிரிக்கெட் உலகில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறுவது மிக …
-
- 0 replies
- 247 views
-
-
இலங்கை அணித் தலைவர்களாக சந்திமல், தரங்க இலங்கை கிரிக்டெ் அணியின் டெ்ஸ்ட் தலைவராக டினேஸ் சந்திமல் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 போட்டிகளின் அணித் தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மையில் சிம்பாப்வே அணிக்கொதிரான ஒருநாள் தோடரில் 3-2 என்ற கணக்கில் இலங்கை அணி தோல்வியடைந்திருந்த நிலையில் அணித்தலைவர் பதிவியில் இருந்து ராஜிநாமா செய்வதாக அஞ்சலோ மெத்தியூஸ் அறிவித்திருந்்த நிலையில் இலங்கை அணியின் தலைமைப் பதவியில் இவ்வாறான மாற்றம் ஏற்றபட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/21788
-
- 0 replies
- 247 views
-
-
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் 20 அணிகள் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் 20 அணிகளை தெரிவு செய்ய ஐ,சி,சி, தீர்மானித்துள்ளது. அதன்படி, 12 அணிகள் நேரடியாகத் தகுதிபெறும், மேலும் 8 அணிகள் தகுதிச் சுற்றுப்போட்டியின் பின்னர் தேர்ந்தெடுக்கப்படும். இந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் முதல் எட்டு அணிகளில் போட்டியை நடத்தும் நாடுகளான மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும். மேலும், மீதமுள்ள இரு அணிகளும் இந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறும் ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் விளையாடும். உலகக் கிண்ண இருபதுக்கு 2…
-
- 1 reply
- 247 views
-
-
போல் நிலை: மைக்கேல் ஷூமாக்கரின் சாதனையை சமன் செய்தார் ஹாமில்டன் பெல்ஜியம் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்திற்கான தகுதிச் சுற்று முடிவில் லெவிஸ் ஹாமில்டன் போல் நிலையை அடைந்து ஷூமாக்கரின் சாதனையை சமன் செய்துள்ளார். ஜெர்மனியின் நாட்டைச் சேர்ந்த மைக்கேல் ஷூமாக்கர் பார்முலா 1 கார்பந்தயத்தில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தார். பனிச் சறுக்கின்போது காயம் ஏற்பட்டதால் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உண்மையான உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை. இவர் பந்தயத்தில் கலந்து கொண்ட காலத்தில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இதில் ஒன்று போல் நிலையை அடைதல். ஷூமாக்கர…
-
- 0 replies
- 247 views
-
-
தோனி பங்களிப்பு செய்யாமல் இருந்தால்தான் மாற்று வீரர்களை பரிசீலிக்க முடியும்: எம்.எஸ்.கே.பிரசாத் கருத்து தோனி. - படம். | ஏ.எப்.பி. இலங்கை அணிக்கு எதிராக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ‘தோனி, ஆட்டோமேட்டிக் தேர்வா’ என்று கேள்வி எழுப்பப்பட அணித்தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் ‘அப்படியல்ல’ என்று பதிலளித்தார். அதாவது அணித்தேர்வு செய்யும் போது கோலி, தோனி... சரி.. அடுத்தது என்ற ரீதியில் தேர்வு நடைமுறை செல்கிறதா என்று செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு பிரசாத் பதில் அளிக்கும் போது, “நான் இப்போதுதான் ஆந்த்ரே அகாஸியின் புத்தகத்தைப் படித்துக் கொண்டிர…
-
- 0 replies
- 247 views
-
-
தேசிய கால்பந்து அணிக்கான தேர்வு வடக்கு, கிழக்கு வீரர்களுக்கு வெவ்வேறாக இடம்பெறவுள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது. இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு வீரர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்வுகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்ற நிலையில், இம்முறை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வீரர்களுக்கான தேர்வுகள் வெவ்வேறாக இடம்பெறவுள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது. இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், சர்வதேச அனுபவம் கொண்ட பயிற்றுவிப்பாளருமான பக்கீர் அலி கடந்த பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி இலங்கை தேசிய கால்பந்து அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், பக்கீர் அல…
-
- 1 reply
- 247 views
-
-
பகலிரவு போட்டிகளுக்கு தயாராகும் தம்புள்ள மைதானம். பகலிரவு போட்டிகளுக்கு தயாராகும் தம்புள்ள மைதானம். தம்புள்ள கிரிக்கட் மைதானம் பகலிரவு போட்டிகளை நடாத்தும் மைதானமாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் அடிப்படையில் , அவுஸ்திரேலிய அணியோடு அடுத்த மாதம் நடைபெறும் ஒருநாள் போட்டிகளை மையமாகக் கொண்டு தம்புள்ள கிரிக்கட் மைதானத்தில் உள்ள மின் விளக்குகளை மேம்படுத்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது. தம்புள்ள கிரிக்கட் மைதானத்தில் இறுதியாக 2010ஆம் ஆண்டு பகலிரவு ஒருநாள் போட்டி இடம்பெற்றிருந்தது.அதன் பின் மின் விளக்குகளில் பற்றாக் குறை காரணமாக அந்த மைதானத்தில் போட்டிகள் நடைபெறவில்லை. இதைவிடவும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிகளின் படி பகல…
-
- 0 replies
- 247 views
-
-
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள்: இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கருத்து உலகக் கோப்பை தொடரில் ரிஸ்ட்ஸ் ஸ்பின்னர்கள் பெரிய காரணிகளாக இருப்பார்கள் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நேற்று முன்தினம் கேப்டவுன் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 303 ரன்கள் குவித்தது. தனது 34-வது சதத்தை அடித்த கேப்டன் விராட் கோலி 160 ரன்கள் விளாசினார். கடினமான இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி …
-
- 0 replies
- 247 views
-