விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
இந்திய கிரிக்கெட் அணி எங்களுடன் விளையாடாவிட்டால் அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளை புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. எங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இந்திய கிரிக்கெட் அணி (டிசம்பர்–ஜனவரியில்) விளையாட மறுத்தால் உலகக் கிண்ணத்தை புறக்கணித்து விடுவோம் என்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் ஷகாரியார் கான் அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியை மீண்டும் தொடர்வதற்கான அனைத்துவித வாய்ப்புகளையும் இந்தியா தவிர்த்தால், அதன் பின்னர், பாகிஸ்தான் அரசின் அறிவுரையை கேட்டு அடுத்தகட்ட முடிவெடுப்போம். அப்படி…
-
- 0 replies
- 164 views
-
-
வெற்றியில் மிளிர்ந்த வில்லியம்ஸ் றக்பி உலகக் கிண்ணப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றதைப் போன்று, நியூசிலாந்து அணியின் சொனி பில் வில்லியம்ஸின் உயர்ந்த நடத்தையும், இறுதிப் போட்டியில் அதிகம் கவனிக்கப்படும், பாராட்டப்படும் ஒன்றாக மாறிப் போனது. நியூசிலாந்து அணி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, நியூசிலாந்து வீரர்கள், மைதானத்தைச் சுற்றிவர முயன்ற போது, 14 வயதான நியூசிலாந்து இரசிகனான சார்லி லைன்ஸ், தனது கதாநாயகனான பில் வில்லிம்ஸை நோக்கிச் செல்ல முயன்றான். எனினும், பாதுகாப்பு நடைமுறைகளை மீறியதன் காரணமாக அவனைப் பின்தொடர்ந்த பாதுகாப்பு அதிகாரி, அவனைத் தடக்கிக் கீழே வீழ்த்தினார். இதனைக் கண்ட பில் வில்லியம்ஸ், அந்தப் பாதுகாப்பு அதிகாரியிடமிருந்து லைன்ஸைப் பிரித்து, அவன் பார்வை…
-
- 1 reply
- 442 views
-
-
இந்தியா போராடித் தோல்வி ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 24, 2008 சிட்னி: சிட்னியில் இன்று நடந்த ஆஸ்திரேலியாவுடனான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், கடுமையாக போராடி இந்திய தோல்வியைத் தழுவியது. இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை முத்தரப்புத் தொடரில் இன்று சிட்னியில் முக்கிய ஆட்டம் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின. இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறி விட முடியும். ஆனால் தோற்றால் இலங்கைக்கு சாதகமாக வாய்ப்புகள் திரும்பி விடும் என்ற நிலை இருந்தது. இந்த சூழ்நிலையில் இன்று ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. எடுத்தது முதல் அதிரடியாக ஆடத் தொடங்கியது ஆஸ்திரேலியா. தொட…
-
- 0 replies
- 966 views
-
-
டெஸ்ட் போட்டிகளில் 100 சிக்சர்கள்: மெக்கல்லம் சாதனை பிரெண்டன் மெக்கல்லம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சிக்சர்கள். | கோப்புப் படம்: ஏ.எப்.பி. இலங்கைக்கு எதிராக டியுனெடின் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாள் ஆட்டத்தில் தனது 100-வது டெஸ்ட் சிக்சரை அடித்தார் நியூஸிலாந்து கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம். நியூஸிலாந்து முதல் இன்னிங்சில் 137 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ஸில் இன்று 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இலங்கைக்கு வெற்றி இலக்கு 405 ரன்கள்; ஆனால் இலங்கை 4-ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் எடுத்து போட்டியைக் காப்பாற்ற போராடி வருகிறது. …
-
- 0 replies
- 621 views
-
-
டோனியின் வாழ்க்கை செப்ரெம்பரில் ரிலீஸ் December 30, 2015 டோனியின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை தலைவரான டோனி, அணிக்கு 2 உலகக்கிண்ணங்களை வென்று கொடுத்தவர். கடந்த ஆண்டு அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டநிலையில், தற்போது ரி-20 மற்றும் ஒருநாள் ஆட்டங்களின் தலைவராக உள்ளார். அவரது வாழ்க்கை வரலாறு பற்றி ‘சொல்ல மறந்த கதை’ என்ற பெயரில் திரைப்படம் ஒன்று தயாராகிறது. நீரஜ் பாண்டே இயக்கத்தில் தயாராகியுள்ள இந்த படத்தில் சுவாந்த் சிங் ராஜ்புத் (டோனி), கயாரா அத்வானி (சாக்சி), அனுபம் கெர் (டோனியின் தந்தை) ஆகியோர் நடிக்கின்றனர். ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியு…
-
- 0 replies
- 478 views
-
-
இந்துக்களின் சமருக்கு 3ஆவது வருடமாக ஜனசக்தி நிறுவனம் பிரதான அனுசரணை 03 FEB, 2025 | 03:05 PM (நெவில் அன்தனி) யாழ். இந்து கல்லூரிக்கும் பம்பலப்பிட்டி (கொழும்பு) இந்து கல்லூரிக்கும் இடையிலான 14ஆவது வருடாந்த 'இந்துக்களின் சமர்' யாழ். இந்து கல்லூரி மைதானத்தில் இம் மாதம் 7ஆம், 8ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இளைஞரையும் விளையாட்டுத்துறையையும் ஊக்குவிக்கும் நன்னோக்குடன் இந்துக்களின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டிக்கு ஜனசக்தி குழுமம் (JXG) தொடர்ச்சியான மூன்றாவது வருடமாக பிரதான அனுசரணை வழங்குகிறது. இந்த வருட அத்தியாயம் கொழும்பில் நடைபெறுவதாக இருந்த போதிலும் பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் வேண்டுகோளுக்…
-
- 5 replies
- 588 views
- 1 follower
-
-
கேப்டனாக தோனியின் கடைசி இன்னிங்ஸா இது? - மூன்று அதிர்ச்சி காரணங்கள் ஏழ்மையானவர்கள் நிறைந்த ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்து, தடதடவென சாதனைகளை உடைத்து நொறுக்கி, இந்திய அணியை புரட்டிப்போட்டு , தனது அதிரடி அபார ஃபினிஷிங் மற்றும் அட்டகாசமான கேப்டன்ஷிப் துணை கொண்டு, இந்திய அணிக்கு குறுகிய காலத்தில் டி20, ஒருநாள் உலககோப்பைகள், சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றை வென்று, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை தரவரிசையில் முதல் இடத்துக்கு உயர்த்தி , உலகில் எந்தவொரு கிரிக்கெட் கேப்டனும் செய்யாத சாதனைகளை படைத்தவரும், உலகின் வெற்றிகரமான கேப்டன்களில் டாப் இடத்தில் இருப்பவருமான மகேந்திர சிங் தோனிக்கு இன்று கடைசி ஒரு தின போட்டியாக அமையக்கூடும் என தகவல்கள் கசிகின்றன. அதற…
-
- 0 replies
- 421 views
-
-
சென்னையில் களமிறங்கும் ஜூனியர் ஷூமேக்கர்! ஃபார்முலா ஒன் கார்பந்தயத்தில், ஏழு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜாம்பவான் மைக்கேல் ஷூமேக்கரின் மகன் மிக் ஷூமேக்கர். இவர், இந்தியாவில் நடக்கவிருக்கும் எம்.ஆர்.எஃப் சேலஞ்ச் கார் பந்தயப் போட்டியில் பங்கேற்கவுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் நடக்கும் இப்போட்டியில், பல முன்னாள் வீரர்களின் வாரிசுகளும் பங்கேற்கவுள்ளனர். ஃபார்முலா ஒன் வரலாற்றில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த ஷூமேக்கர், பனிச்சறுக்கின்போது தலையில் அடிபட்டு கோமா நிலைக்குச் சென்று மீண்டவர். அவரது மகனான 16 வயது மிக், இதுவரை 22 'ஃபார்முலா 4' பந்தயங்களில் பங்கேற்று, 1 பந்தயத்தில் வெற்றி பெற்றுள்ளார். ‘வேன் அமர்ஃபூட் ரேசிங்’ அணிக்காக பங்கேற…
-
- 0 replies
- 685 views
-
-
வீரர்களின் போர் கிரிக்கெட் போட்டி தெல்லிப்பழையில் இன்று ஆரம்பம் 2016-02-19 10:58:10 (ஹம்சப்பிரியா) “வீரர்களின் போர்” என வர்ணிக்கப்படும், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரிக்கும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்கும் இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அணியினர் கே.பிரசாந் தலைமையிலும் மகாஜனாக் கல்லூரி அணியினர் கே.பிரணவன் தலைமையிலும் களமிறங்குகின்றனர். 16 ஆவது தடவையாக இப்போட்டி நடைபெறவுள்ள…
-
- 1 reply
- 428 views
-
-
லிவர்பூலுக்கு மற்றொரு வெற்றி: மெஸ்ஸி கோலால் வென்றது பார்சிலோனா இங்கிலாந்து ப்ரீமியர் லீக் மற்றும் ஸ்பெயின் லா லிகா தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, லிவர்பூல் எதிர் மன்செஸ்டர் யுனைடட் அன்பீல்டில் நடைபெற்ற மன்செஸ்டர் யுனைடட் அணிக்கு எதிரான போட்டியில் கடுமையாக போராடி 2-0 என வெற்றியீட்டிய லிவர்பூல் அணி 30 ஆண்டுகளின் பின் ப்ரீமியர் லீக் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை மேலும் அதிகரித்துக் கொண்டுள்ளது. புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூல் அணி இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் 16 புள்ளிகள் இடைவெளியுடன் முன்னணியில் உள்ளது. தனது சொந்த மைதானத்தில்…
-
- 0 replies
- 389 views
-
-
கிரிக்கெட்: ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தை இழந்தது ஏன்? படத்தின் காப்புரிமை Kai Schwoerer / getty images ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை 2016 அக்டோபருக்கு பிறகு முதல்முறையாக இந்தியா இழந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை 116 புள்ளிகள் பெற்ற ஆஸ்திரேலியா பிடித்துள்ளது. அடுத்த நிலையில் நியூசிலாந்தும் (115 புள்ளிகள்), 114 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையே இந்தியா பிடித்துள்ளது. 2016-17 காலகட்டத்தில் முதலிடத்தை பிடித்த இந்தியா 12 டெஸ்ட்களில் வென்றது. ஒரு போட்டியில் மட்டுமே தோற்…
-
- 0 replies
- 481 views
-
-
இரண்டு வகையான விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு உலக சாதனைகளுடன் தங்கங்கள் 2016-09-16 12:25:47 ரியோ டி ஜெனெய்ரோவில் நடைபெற்றுவரும் பராலிம்பிக் விளையாட்டு விழாவில் பெரிய பிரித்தானியாவின் கதீனா கொக்ஸ் இரண்டு வகையான விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றதுடன், அந்த இரண்டு போட்டிகளிலும் உலக சாதனைகளை நிலைநாட்டி பெருமை தேடிக் கொண்டார். ரி 38 - 400மீற்றரில் மாற்றுத்திறன் கொண்ட வீராங்கனைகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே இரண்டு வகையான விளையாட்டுக்களில் உலக சாதனைகளுடன் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். 25 வயதுடைய கதீனா, ஒலிம்பிக் விளையாட்டரங்கில் புதனன்று நடைபெற்ற ரி 38 பிரிவு…
-
- 0 replies
- 418 views
-
-
ஐ.பி.எல். கிரிக்கெட்: இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மறுப்பு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ரன் குவிக்கும் எந்திரம் என்று அழைக்கப்படும் ஜோ ரூட் ஐ.பி.எல். போட்டியில் விளையாட மறுத்து விட்டார். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம். லண்டன் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ரன் குவிக்கும் எந்திரம் என்று அழைக்கப்படும் ஜோ ரூட் இதுவரை ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடியதில்லை. இந்த சீசனில் ஐ.பி.எல். போட்டியில் விளையாட வைக்க சில அணி நிர்வாகங்கள் அவரை அணுகின. ஆனால் அவர் மறுத்து விட்டார். இது குறித்து 26 வயதான ஜோ ரூட் கூறுகையில், ‘இந்த ஆண்டு…
-
- 0 replies
- 457 views
-
-
ஊக்க மருந்து பயன்படுத்திய சக வீரர் மீது கோபம் கிடையாது – போல்ட் ஊக்க மருந்து பயன்படுத்தியமை நிரூபணமான சக வீரர் மீது கோபம் கிடையாது என நட்சத்திர ஓட்ட வீரர் ஹூசெய்ன் போல்ட் தெரிவித்துள்ளார். சக வீரரின் ஊக்க மருந்து பயன்பாட்டு குற்றச்சாட்டு காரணமாக போல்ட் ஒர் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை இழக்க நேரி;ட்டுள்ளது. அஞ்சல்ப் போட்டியில் ஜமெய்க்காவின் சார்பில் பங்கேற்ற வீரர் ஒருவர் ஊக்க மருந்து பயன்படுத்தியமை அம்பலமாகியுள்ளதனால் இவ்வாறு பதக்கம் ஒன்றை இழக்க நேரிட்டமை வருத்தமளிக்கின்றது என்ற போதிலும் சக வீரர் மீது குரோத உணர்வு ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்பது தங்கப் பதக்கங்களை வென்றிருந்த ஹூசெய்ன் போல்ட்இதில் ஒரு பதக்கத்தை தற்…
-
- 0 replies
- 482 views
-
-
119 வருட ஆஸ்திரேலியாவின் சாதனையை முறியடித்தார் ரென்ஷா 20 வயதிற்குள் 500 ரன்கள் எடுத்து 119 வருட கால ஆஸ்திரேலியாவின் சாதனையை இன்றைய ராஞ்சி டெஸ்டில் முறியடித்துள்ளார் தொடக்க வீரர் ரென்ஷா. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் இளம் தொடக்க வீரரான ரென்ஷா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். புனே, பெங்களூரு டெஸ்டில் அரைசதம் அடித்தார். இன்று ராஞ்சியில் தொடங்கிய போட்டியில் 44 ரன்கள் எடுத்தார். இவர் 11வது இன்னிங்சில் இந்த ரன்னை எடுத்துள்ளார். 21 வயதை பூர்த்தி…
-
- 0 replies
- 431 views
-
-
இங்கிலாந்து கால்பந்து அணியில் ரூனிக்கு இடமில்லை உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் வெய்ன் ரூனிக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. லண்டன் : உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றில் இங்கிலாந்து அணி அடுத்த மாதம் ஸ்காட்லாந்துடன் மோத இருக்கிறது. மேலும் பிரான்சுடன் நட்புறவு ஆட்டம் ஒன்றிலும் விளையாட உள்ளது. இதற்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. நட்சத்திர வீரர் வெய்ன் ரூனிக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. முந்தைய ஆட்டத்தின் போது காலில் ஏற்பட்ட காயத்தால் சேர்க்கப்படவில்லை. ஆனால் …
-
- 0 replies
- 289 views
-
-
(நெவில் அன்தனி) அங்குரார்ப்பண லங்கா ப்றீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் சம்பியனான ஜவ்னா ஸ்டாலியன்ஸ் அணியின் உரிமையாளர்கள், அதன் உரிமைத்துவத்திலிருந்து கனத்த இதயத்துடன் விலகிக்கொண்டுள்ளனர். 'இது ஒரு கவலை தரும் செய்தியாகும். எமது பணியை மீண்டும் செயல் உருவாக்குவதற்கு நாங்கள் எங்களால் ஆன அதிகபட்ச முயற்சியில் ஈடுபட்டோம். ஆனால், அது சாத்தியப்படவில்லை. சுருங்கச் சொல்லின் இப்படி ஒரு முடிவுக்கு வருவோம் என நாங்கள் நிச்சயமாக எண்ணவில்லை' என ஜவ்னா ஸ்டாலியன்ஸ் ஸ்தாபனத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'யாழ்ப்பாணத்தை நேசிப்பதாலும் இலங்கையில் எமது பணி அர்த்தம் மிக்கதாக அமைய வேண்டும் என்பதாலும் எமது உரிமைத்…
-
- 1 reply
- 603 views
-
-
உதைபந்து,ஆபிரிக்க கோப்பையை செனகல் வென்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் செனகல் எகிப்துக்கு எதிராக விளையாடியது. இறுதிவரை யாரும் கோலை போடாததால் பனால்டி உதை மூலம் வெற்றி நிர்ணயிக்கப்பட்டது.
-
- 0 replies
- 641 views
-
-
கிரிக் இன்போ விருதுகள் அறிவிப்பு: சாஹல், குல்தீப் சாதனைகளுக்கு அங்கீகாரம் யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ். - THE HINDU 2017-ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகளுக்கான விருதை கிரிக் இன்போ இணையதளம் அறிவித்துள்ளது. இதில் இந்திய ரிஸ்ட் ஸ்பின்னர்களான யுவேந்திரா சாஹல், குல்தீவ் யாதவ் ஆகியோர் விருதை தட்டிச் சென்றுள்ளனர். மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் அரை இறுதியில் சிறப்பாக பேட் செய்த இந்திய வீராங்கனை ஹர்மான்பிரித்தும் விருதை கைப்பற்றி உள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஹர்மான்பிரித் க…
-
- 0 replies
- 357 views
-
-
50-0 மேவெதரின் சாதனையை முறியடிப்பாரா வான்ஹெங்..? தாய்லாந்தின் குத்துச்சண்டை சென்சேஷன் குத்துச்சண்டை வீரர் என்றவுடன் நம் நினைவுக்கு வரும் உருவம் எப்படி இருக்கும்? நல்ல உயரம், அச்சுறுத்தும் உடற்கட்டு; மிகுந்த ஆக்ரோஷத்துடன் தாக்கும் கைகள். எதிராளியைத் தாக்கி அழிக்கும் ஆகிருதி கொண்ட ஓர் ஆறு அடி உயர விளையாட்டு வீரர்தானே நம் நினைவுக்கு வருவார்? அது மட்டுமல்லாமல், குத்துச்சண்டை வீரரின் உயரமும் மிக முக்கியம். எதிராளியைத் தாக்கி அடிக்கும்போது, உங்களுடைய கைகள் எந்த அளவுக்கு நீண்டு தாக்க முடிகின்றதோ, அந்த அளவுக்குக் குத்துச்சண்டையில் நீங்கள் எளிதாக யுக்திகள் அமைத்து வெற்றி பெறவும் முடியும். ஆனால், பெரிதாக உயரமும் இல்லாமல், உடல் எடையும் இல்லாமல் ஒருவர் 49 ம…
-
- 0 replies
- 176 views
-
-
தோல்வியுறாத அணியாக லா லிகா பட்டத்தை வென்றது பார்சிலோனா லியோனல் மெஸ்ஸியின் ஹட்ரிக் கோல் மூலம் டிபோர்டிவோ லா கோருனா அணிக்கு எதிராக 4-2 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பார்சிலோனா அணி இன்னும் நான்கு போட்டிகள் எஞ்சியிருக்கும் நிலையிலேயே 25ஆவது முறையாக லா லிகா பட்டத்தை வென்றது. இதன்மூலம் எர்னஸ்டோ வெல்வெர்டேவின் முகாமையின் கீழ் இந்த பருவத்தில் ஆடும் பார்சிலோனா இம்முறை ஸ்பெயினின் லீக் மற்றும் கிண்ணம் இரு பட்டங்களையும் வென்றுள்ளது. கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த கோபா டெல் ரே இறுதிப் போட்டியில் பார்சிலோனா அணி செவில்லாவை 5-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கிண்ணத்தை வென்றது. பார்சிலோன அணி இந்த பருவத்தில் ஒரே…
-
- 0 replies
- 492 views
-
-
விராட் கோலி : சச்சினுக்கு பிறகு டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் முதலிடம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைPHILIP BROWN விராட் கோலி இன்று வெளியிடப்பட்ட ஐசிசி தரவரிசை பட்டியலில் டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடம் பிடித்த்துள்ளார். இந்திய அணி சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 194 ரன்களை துரத்…
-
- 0 replies
- 329 views
-
-
இந்தியாவுக்கு உதவிக் கரம் நீட்டும் பிரெட் லீ உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது இந்திய வேகப் பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசனை வழங்கி உதவ தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பது: இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பந்து வீச்சு நுட்பங்களை கற்றுக் கொடுக்க நான் தயாராகவே இருக்கிறேன். அதே நேரத்தில் இப்பணியை என்னால் முழு நேரமாக ஏற்க முடியாது. எனெனில் உலகம் முழுவதும் உள்ள வேகப்பந்து வீச்சாளருக்கு உதவ வேண்டும் என்பதே எனது நோக்கம் என்றார். http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF…
-
- 0 replies
- 364 views
-
-
மீண்டும் சிக்கலில் சுனில் நரைன்..பந்தை எறிவதாக பிசிசிஐ குற்றச்சாட்டு! மும்பை: கொல்கத்தா அணி வீரர் சுனில் நரைன் பந்து வீச்சு, எறிவதை போல உள்ளதாக பிசிசிஐ வார்னிங் செய்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்கூர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஏப்ரல் 22ம்தேதி, விசாகப்பட்டிணத்தில், ஹைதராபாத் அணிக்கு எதிரான பெப்சி ஐபிஎல் 2015 போட்டியின்போது, கொல்கத்தா வீரர் சுனில் நரைன் பந்து வீசிய விதம், விதிமுறைகளை மீறியிருந்ததாக சந்தேகிக்கிறோம். மீண்டும் சிக்கலில் சுனில் நரைன்..பந்தை எறிவதாக பிசிசிஐ குற்றச்சாட்டு! இருப்பினும் விதிமுறை அடிப்படையில், அடுத்தடுத்த போட்டிகளில் அவர் பந்து வீச தடையில்லை. அதேநேரம், சென்னையிலுள்ள ஐசிசி அங்கீகாரம் பெற்ற, ஸ்ரீ ராமச்சந்திரா மையத்தில், ப…
-
- 0 replies
- 310 views
-
-
ஆசியக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை மைதான ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட பணம் பகிர்ந்தளிப்பு ஆசியக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை மைதான ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட 50,000 அமெரிக்க டொலர்கள் (ரூ. 16 மில்லியன்) வெகுமதிகளை புதன்கிழமை (6) பகிர்ந்தளிக்கப்பட்டது. கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் கண்டி,பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகிய இரண்டு மைதானங்களினதும் மைதான பராமரிப்பு ஊழியர்களுக்கு தங்களுக்கான வெகுமதிகளை பெற்றனர். ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் சீரற்ற காலநிலையால் பெரிதும் பாதிக்கப்பட்மு போட்டி நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. எனினும…
-
- 0 replies
- 373 views
-