விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7841 topics in this forum
-
11 சொதப்பல் வீரர்கள்... பட்டியலில் யார் யார்? #INDvsNZ இந்தியா - நியூசிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர் யார் என கேட்டால், சட்டென விராட் கோலி, ரவிச்சந்திர அஷ்வின் என பொட்டில் அடித்தார் போல பதில் வரும். ஆனால் சொதப்பல் மன்னர்கள் யார் எனக்கேட்டால் கொஞ்சம் ரசிகர்கள் தடுமாறுவார்கள். இந்திய அணியிலும் சரி, நியூசிலாந்து அணியிலும் சரி இந்தத் தொடரில் எக்கச்சக்க சொதப்பல் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களில் இருந்து சொதப்பல் வீரர்கள் பதினோரு பேரைத் தேர்வு செய்திருக்கிறோம். இரண்டு தொடக்க வீரர்கள், இரண்டு நடு வரிசை பேட்ஸ்மேன்கள், இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள், ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர், இரண்டு பவுலிங் ஆல்ரவுண்டர், இரண்டு பவுலர்கள் என பக்கா பேக்கேஜாக அணி…
-
- 0 replies
- 452 views
-
-
-
ஜயசூரிய - தரங்கவின் சாதனையை முறியடித்த இந்திய மகளிர் அணி! அயர்லாந்து மகளிர் அணிக்கெதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி புதிய சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளது. இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி ஆரம்ப விக்கட்டுக்காக 320 ஓட்டங்களை பகிர்ந்து சாதனை படைத்துள்ளது. இந்திய மகளிர் அணியின் டீப்டி சர்மா 188 ஓட்டங்களையும், பூனம் ரவுட் 109 ஓட்டங்களையும் குவித்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இதற்கு முன்னர் கடந்த 2008 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கெதிரான போட்டியில் இங்கிலாந்து அணியின் சாரா டெய்லர் மற்றும் கரோலின் அட்கின்ஸ் பெற்ற 268 ஓட்டங்களே அதிகூடிய இணைப்பாட்டமாக இருந்தது. இதேவேளை ஆண்களுக்கான ஒருநாள் போட்டியொன்றில் உபு…
-
- 0 replies
- 360 views
-
-
தோனி செய்ய முடிந்ததை மற்ற பேட்ஸ்மென்கள் செய்ய முடியவில்லை: கவாஸ்கர் ஓவல் டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்டிங் வரிசை மீண்டும் இங்கிலாந்து பந்து வீச்சிடம் சரணடைந்தது பற்றி கவாஸ்கர் தனது விமர்சனங்களைத் தெரிவித்துள்ளார். நேற்று மீண்டும் கேப்டன் எம்.எஸ்.தோனி, தனது குறைவுபட்ட உத்தியிலும் கூட அடிப்படையான பேட்டிங் பொறுமையையும், புத்தி கூர்மையையும் காண்பித்து 82 ரன்களை எடுத்து கடைசியாக ஆட்டமிழந்தார். மற்ற பேட்ஸ்மென்களோ செய்த தவறையே திரும்பவும் செய்ததாக சுனில் கவாஸ்கர் மற்றும் விவிஎஸ்.லஷ்மண் ஆகியோர் கருதுகின்றனர். சுனில் கவாஸ்கர் இது பற்றி தனியார் சானலில் கூறும்போது: "முக்கிய விக்கெட்டுகள் விழுந்த விதத்தைப் பாருங்கள், அவையெல்லாம் அபாரமான பந்துகளில் விழுந்த விக்…
-
- 0 replies
- 402 views
-
-
ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்களின் ‘மெனு கார்டு’ இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் முத்தரப்பு தொடரில் விளையாடுகிறது. முத்தரப்புத் தொடரில் 3-வது அணியாக இங்கிலாந்து பங்கேற் கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது இந்திய வீரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உணவுகள் குறித்த பட்டியலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் அளித் துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். அதில் கிரில்டு (பொறித்த) சிக்கன், பட்டர் சிக்கன் போன்ற காரம் அதிகமில்லாத உணவுகளுக்கே இந்திய வீரர்கள் அதிக முன்னுரிமை அளித்திருக்கிறார்கள். போட்டிகளில் இல்லாதபோது ஓட்டல்களில் தங்கியிருக்கும் நேரத்தில் இந்திய வீரர்களின் விருப்ப உணவை தயா…
-
- 0 replies
- 708 views
-
-
2018 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை தட்டிச்சென்றார் லூகா மோட்ரிச் பிபாவின் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச்செல்ல ரொனால்டோ, முகமது சலா, லூகா மோட்ரிச் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் 2018 ஆம் ஆண்டின் சிறந்த வீரராக லூகா மோட்ரிச் தேர்வு செய்யப்பட்டுள்ளார். #FIFA #LukaModric லண்டன் : 2018 ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான பிபா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பிபா சிறந்த வீரர் விருதுக்கு, குரோசியா அணியின் கேப்டன் லூகா மோட்ரிச் தேர்வ…
-
- 1 reply
- 622 views
-
-
சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அவுஸ்திரேலியாவின் அடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் கில்கிறிஸ்ட். தொடக்க வீரரான இவர் பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். சமீபத்தில் நடந்த உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் இவர் அனல் பறக்கும் வகையில் விளையாடினார். இந்த நிலையில் ஒருநாள் போட்டியிலிருந்து கில்கிறிஸ்ட் ஓய்வுபெற முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது; தனிப்பட்ட முறையில் ஒரு நாள் போட்டியிலிருந்து ஓய்வுபெறுவது தொடர்பாக ஆலோசித்து வருகிறேன். டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாட கவனம் செலுத்துவேன் என்றார். 36 வயதான கில்கிறிஸ்ட் 268 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9038 ஓட்டங்கள் எடுத்துள்ள…
-
- 0 replies
- 716 views
-
-
64 பந்துகளில் 158 ரன்கள் குவித்து சொந்த சாதனையை சமன் செய்த மெக்கல்லம்! நாட்வெஸ்ட் தொடரில் நியூசிலாந்தின் பிரன்டென் மெக்கல்லம் 11 சிக்சர்கள் 11 பவுண்டரிகளுடன் 158 ரன்கள் விளாசி தனது சொந்த சாதனையை சமன் செய்துள்ளார். நாட்வெஸ்ட் டி20 போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் டெர்பிஷயர் ஃபால்கன்ஸ் அணி பிர்மிங்ஹாம் பியர்ஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் பிர்மிங்ஹாம் அணி வீரர் பிரன்டென் மெக்கல்லம் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். 64 பந்துகளை மட்டுமே சந்தித்த மெக்கல்லம் 158 ரன்களை அடித்தார். இதில் 42 பந்துகளில் மெக்கல்லம் சதத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது. இதில் 11 சிக்சர்களும் 13 பவுண்டரிகளும் அடங்கும். மெக்கல்லமின் அதிரடியால் பிர்மிங்ஹாம் அணி 20 ஓவர்களில் 242 ரன்களை குவ…
-
- 1 reply
- 340 views
-
-
சுனில் கவாஸ்கர் சுனில் கவாஸ்கர் ‘லிட்டில் மாஸ்டர்’ என்று அழைக்கப்படுபவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சுனில் மனோகர் கவாஸ்கர் (Sunil Manohar Gavaskar) பிறந்தநாள் இன்று (ஜூலை10). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: l மும்பையில் நடுத்தரக் குடும்பத்தில் (1949) பிறந்தவர். சிறு வயதிலேயே கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். இவரது மாமா இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்தவர். அவர்தான் இவரது முதல் பயிற்சியாளரும்கூட. l மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் பயின்றார். பள்ளி நாட்களில் பல கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்டு ‘இந்தியாவின் பெஸ்ட் ஸ்கூல்பாய் கிரிக்கெட்டர்’ என்று பெயர் எடுத்தவர். l முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் 1966-67ல் விளையாடத் தொடங்க…
-
- 0 replies
- 237 views
-
-
உலகக் கிண்ண போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டித் தொடருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகள் வரும் மே மாதம் 30ஆம் திகதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான கிரிக்கெட் அணிகளை உலக நாடுகள் அறிவித்து வருகின்றன. அந்தவகையில் உலகக் கிண்ணத்துக்கான தென்னாபிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணி விவரம் : பாஃப் டூ பிளசிஸ் (அணித்தலைவர்) ஹாசிம் அம்லா குயின்றன் டி ஹொக் (விக்கெட் காப்பாளர்) ஜெ.பி. டுமினி ஐடென் மார்க்ராம் டேவிட் மில்லர் லுங்கி நிகிடி அன்ரிச் நோர்ட்ச் அன்டைல் பெஹ்லுக்வாயோ டிவைன் பிரிடோரியஸ் …
-
- 0 replies
- 688 views
-
-
மழையால் கைவிடப்பட்ட மூன்றாவது ஆட்டம்! இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 16 ஆவது போட்டி திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை மற்றும் மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகவிருந்தது. இந் நிலையில் அங்கு தொடர்ந்தும் மழை பெய்தமையினால் போட்டி நாணய சுழற்சிக்கூட மேற்கொள்ளாது கைவிடப்பட்டுள்ளது. இதனால் இவ்விரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டது. நடைபெற்று வரும் உலகக் கிண்ணத் தொடரில் மழை காரணமாக கைவிடப்பட்ட மூன்றாவது போட்டி இது என்பதும் குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/58031
-
- 2 replies
- 910 views
-
-
அடுத்த உலகக் கோப்பையில் நீங்கள் பார்க்கும் பாகிஸ்தான் அணி வேறு மாதரியாக இருக்கும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்தியா அணிக்கு எதிரான மிகப் பெரிய தோல்விக்கு பின் பாகிஸ்தான் அணி பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 தொடர்களை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் அணியில் அதிரடியான மாற்றங்களை ஏற்படுத்த முடிவெடுத்துள்ளனர். ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு தனித்தனி கேப்டனை நியமிக்க முடிவு எடுத்துள்ளனர். மேலும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயராக அந்த அணி மற்ற தொடர்களில் பங்கேற்பதை குறைத்து கொண்…
-
- 0 replies
- 304 views
-
-
கோபா அமெரிக்கா எனும் கால்பந்து போட்டித்தொடர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸிக்கு சர்வதேச கால்பந்து தொடர்களில் பங்கேற்பதற்கு மூன்று மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்த தொடரின் மூன்றாவது இடத்தை பெறும் அணிக்கான போட்டியில் சிலியை வென்ற பிறகு பேட்டியளித்த 32 வயதாகும் மெஸ்ஸி, "இந்த கோப்பை பிரேசிலுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டது" என்று குற்றஞ்சாட்டியிருந்தார். இதையடுத்து, மெஸ்ஸிக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு மூன்று மாதங்கள் தடையும், $50,000 அபராதத்தையும் தென் அமெரிக்கா கால்பந்து கழகம் விதித்துள்ளது. ஆனால், இந்த முடிவை எதிர்த்து மெஸ்ஸி முறையீடு செய்வதற்கு ஒருவார காலம் அவ…
-
- 0 replies
- 561 views
-
-
கிறிஸ் கெய்லை மீண்டும் அணியில் இணைத்துக்கொள்வதில் சிக்கல் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் கிறிஸ் கெய்லை மீண்டும் அணியில் இணைத்துக்கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவுகளும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ் கெய்ல் இந்தியன் பிறிமியர் லீக் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் திறமையை வெளிப்படுத்திவருகின்றபோதிலும், தேசிய அணியில் அவர் இணைத்துக்கொள்ளப்படவில்லை. கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையுடன் ஏற்பட்ட முரன்பாடுகளை அடுத்து கிறிஸ் கெய்ல் மேற்கிந்திய தீவுகள் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்த…
-
- 1 reply
- 630 views
-
-
ரங்கண ஹேரத், ஜனித் பெரேராவிடம் சூதாட்ட தரகர்கள் அணுகியமை உறுதி..! காலியில் கடந்த ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது, இலங்கை அணியின் வீரர்களான ரங்கண ஹேரத் மற்றும் குசேல் ஜனித் பெரேரா ஆகியோரை சூதாட்ட தரகர்கள் அணுகியுள்ளனர். போட்டியின் முடிவை மாற்றியமைப்பதற்காகவே குறித்த சூதாட்ட தரகர்கள் மேற்படி வீரர்களை அணுகியுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சூதாட்ட தரகர்களின் வாய்ப்பை மறுத்த இரு வீரர்களும் உடனடியாக இலங்கை கிரிக்கெட் சபையின் ஊழல் எதிர்ப்பு பிரிவுக்கு தெரியப்படுத்தியு…
-
- 1 reply
- 490 views
-
-
நியூசிலாந்து ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் மார்டின் குரோவ் மரணம் நியூசிலாந்து: நியூசிலாந்து அணியின் முன்னார் கிரிக்கெட் வீரர் மார்டின் குரோவ் புற்றுநோய் பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 53. 1980 முதல் 1996 வரை நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்தார் மார்ட்டின் குரோவ். ஆஸ்திரேலியாவுக்கு ஒரு பிராட்மேன் என்றால், நியூசிலாந்து அணியின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் மார்டின் குரோவ்தான். 77 டெஸ்ட், 143 ஒருநாள் போட்டிகளில் குரோவ் ஆடியுள்ளார். அவருக்கு மனைவியும், 2 வளர்ப்பு பிள்ளைகளும் உள்ளனர். Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/former-new-zealand-captain-martin-crowe-dies-aged-53-248151.html
-
- 6 replies
- 1.1k views
-
-
அஸ்ஹர் அணிக்கு எதிராக யாழ் மத்தி இன்னிங்ஸ் வெற்றி By Mohamed Azarudeen - சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 19 வயதுக்குட்பட்ட டிவிஷன் – III பாடசாலைகள் இடையில் இடம்பெறும் இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் போட்டியொன்றில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி அக்குரணை அஸ்ஹர் கல்லூரிக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 308 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்துள்ளது நேற்று (13) அக்குரணை அஸ்ஹர் கல்லூரி அணியின் சொந்த மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அஸ்ஹர் கல்லூரி அணி விருந்தினர்களாக வந்த யாழ். மத்திய கல்லூரியை முதலில் துடுப்பாடப் பணித்தது. …
-
- 0 replies
- 509 views
-
-
முரளியின் தமிழர் என்ற அடையாளத்தை பகடையாக வைத்து தமிழர்களுக்கு எதிராக முரளியை பாவித்து வரும் சிறீலங்கா கிரிக்கெட் அணியின் முன்னால் அணித் தலைவர் அர்யுனா ரணதுங்கா ஒரு பௌத்த பேரினவாதியாவர். இது சிறீலங்கா கிரிக்கெட் அணியின் அரசியல் முகத்தை வெளிகாட்டியது. தற்போது, அதே கிரிக்கெட் அணி மேலும் அரசியல் மயமாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாகஇ தற்போது, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் திறன்குறைவான மகன் அணிக்குள் நுழைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தெரியவருவதாவது, ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமின் ரம்புக்வெல்ல இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணியுடன் கண்டியில் நடைபெறவுள்ள 20-20 போட்டியில் பங்குபற்ற தெரிவு செய்யப்பட்டுள்ள 16 பேர் கொண்ட அ…
-
- 0 replies
- 509 views
-
-
இந்திய அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே ராஜினாமா! இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளராக கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டார். இதையடுத்து இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்றது. ஆனால் சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் விராத் கோலிக்கும் கும்ப்ளேவுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்ததாக கூறப்பட்டது. மேலும் சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியிலும் இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததால், கும்ப்ளேவின் பயிற்சி மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகு…
-
- 3 replies
- 665 views
-
-
இங்கிலாந்துக்கு வெஸ்ட் இண்டீஸ் கடும் சவாலாக விளங்கும்: அம்புரோஸ் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்டில் ஒன்றையாவது வெஸ்ட் இண்டீஸ் வெல்லும் என அம்புரோஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் பகல்-இரவு டெஸ்ட் ஆக நடக்கிறது. இங்கிலாந்தில் நடைபெறும் முதல் பகல்- இரவு டெஸ்ட் இதுவாகும். இங்கிலாந்து அணி சமீபத்தில்தான் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என…
-
- 21 replies
- 1.8k views
-
-
ஷேன் வார்ன், அனில் கும்ப்ளே, தனஞ்செயா... கிரிக்கெட்டின் ரிஸ்ட் ஸ்பின் கலைஞர்கள்! இந்திய அணியின் இலக்கு 231. ஓபனிங் ஜோடி குவித்தது 109 ரன்கள். விக்கெட் இல்லை. இந்தியா எளிதில் வெற்றிபெறும் என்பது ரசிகர்கள் கணிப்பு. காரணம், இலங்கையிடம் அனுபவம் வாய்ந்த மலிங்கா தவிர சிறப்பான பந்து வீச்சாளர்கள் இல்லை. ரோஹித்தின் அரை சதத்துக்குப் பிறகு நம்பிக்கை இழந்த இலங்கை ரசிகர்கள், மைதானத்தை விட்டு வெளியேறத் தொடங்கினர். அந்த நேரத்தில் நிகழ்ந்தது ஒரு மாயாஜாலம். ஆஃப் பிரேக் பௌலர் அகில தனஞ்செயா, ரிஸ்ட் ஸ்பின்னராக அவதாரம் எடுத்து திறமையான பேட்ஸ்மேன்கள்கொண்ட இந்திய பேட்டிங் வரிசையைத் திணறடித்தார். கோலி, ராகுல், கேதார் விக்கெட்டுகள் சடசடவென சரிந்தன. அனைத்தும் தனஞ்செயாவி…
-
- 0 replies
- 306 views
-
-
முதல் 46 பந்துகளுக்கு ரன் கொடுக்காத சுரங்கா லக்மல்: சாதனை விவரங்கள்! இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 74 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் இலங்கை பந்துவீச்சாளர் லக்மல் ஒரு சாதனை புரிந்துள்ளார். * நேற்று ஒரு ரன்னும் கொடுக்காமல் பந்துவீசிய 30 வயது சுரங்கா லக்மல், 46 பந்துகளுக்குப் பிறகு ரன் கொடுத்தார். அவருடைய பந்தில் ரஹானே ஒரு பவுண்டரி அடித்து கணக்கை ஆரம்பித்தார். 2001க்குப் பிறகு தொடர்ந்து 7 ஓவர்கள் மெயிடனாக வீசி, 46 பந்துகளுக்குப் பிறகு ரன் கொடுத்த ஒரே வீரர் - லக்மல் என்கிற பெரு…
-
- 0 replies
- 296 views
-
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சயீத் அஜ்மல் ஓய்வுபெற்றார் சயீத் அஜ்மல் - AFP சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் அறிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் சயீத் அஜ்மல் (வயது 40). 35 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அவர், 178 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். மேலும் 113 ஒருநாள் போட்டிகளில் 184 விக்கெட்களையும், 64 டி20 போட்டிகளில் 85 விக்கெட்களையும் அவர் வீழ்த்தியுள்ளார். 2014-ம் ஆண்டு இலங்கையில் நடந்த கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு இவரது பந்துவீச்சு முறையில் சந்தேகம் இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் …
-
- 0 replies
- 182 views
-
-
கிரிக்கெட்: இங்கிலாந்தின் இந்திய பயணம் தகவல் அட்டவணை.
-
- 0 replies
- 1.3k views
-
-
பிரேசில் அணியின் முன்னணி வீரரான நெய்மர் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டதற்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்ள கேரளா செல்லவிருக்கிறார். கொலம்பியா அணிக்கு எதிராக கால் இறுதி ஆட்டத்தில் பந்தை எடுக்க முயன்ற போது நெய்மரை அந்த அணி வீரர் ஜூவான் ஜூனிகா முழங்கால் மூலம் முதுகில் தாக்கியுள்ளார். இதனால் அவருக்கு முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டதால் உலக போட்டியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், இந்த முதுகெலும்பு முறிவை சரிசெய்வதற்காக நெய்மர் கேரளா செல்லவிருக்கிறார். இது தொடர்பாக பிரேசில் கால்பந்து கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டியுடன் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=82017321070…
-
- 3 replies
- 884 views
-