விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7879 topics in this forum
-
றக்பி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா றக்பி உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணியிடம் இங்கிலாந்து அணி படுதோல்வியடைந்துள்ளது. இந்நிலையில் 2019 ஆண்டுக்கான றக்பி உலகக் கிண்ணத்தை தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றியுள்ளது. ஜப்பானில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான றக்பி உலகக் கிண்ணத் தொடர் இறுதிப் போட்டி இன்றைய தினம் நடைபெற்றது. அதன்படி இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு யோக்கஹாமாவில் தென்னாபிரிக்க மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே போட்டி ஆரம்பமானது. இப் போட்டியில் தென்னாபிரிக்க அணி 32:12 என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்து றக்பி உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது. https://www.virakesari.lk/article/68057
-
- 5 replies
- 869 views
- 1 follower
-
-
அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனரில் ரவிந்து, ஷெலிண்டா சிறந்த வீரர்களாக முடிசூடல் By Mohammed Rishad - எதிர்கால நட்சத்திர வீரர்களை உருவாக்கும் நோக்கில் கல்வி அமைச்சின் பூரண மேற்பார்வையின் கீழ் இவ்வருடமும் நடைபெற்ற 35 ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வான தேசிய ரீதியிலான மெய்வல்லுனர் போட்டிகளில் வருடத்தின் அதி சிறந்த மெய்வல்லுனர் வீரராக சிலாபம், லுனுவிலை வேகட மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ரவிந்து டில்ஷான் பண்டார தெரிவானார். இம்முறை பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டிகளில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 47.53 செக்கன்க…
-
- 0 replies
- 491 views
-
-
டி-20 உலகக் கிண்ண ஆரம்ப கட்டம் இலங்கைக்கு எவ்வாறு இருக்கும்? By Mohamed Shibly - ஐக்கிய அரபு இராச்சியத்தில் 16 நாட்கள், 51 போட்டிகளுக்கு பின் 2020 ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ண போட்டிகளுக்கான உலகத் தகுதிகாண் போட்டிகள் கடந்த சனிக்கிழமை (02) நிறைவடைந்தது. இந்த தொடரில் மூன்றாவது முறையாகவும் நெதர்லாந்து அணி சம்பியன் பட்டத்தை வென்றது. இந்தத் தொடர் என்ன? அவுஸ்திரேலியாவில் 2020 நவம்பர் 15 ஆம் திகதி ஆரம்பமாகவ…
-
- 0 replies
- 397 views
-
-
நடந்து முடிந்த 1000 ஐ.சி.சி. 20:20 போட்டிகளில் மறக்க முடியாத 20 முக்கிய பதிவுகள் Published by J Anojan on 2019-11-04 16:10:55 ( ஜெ.அனோஜன் ) சர்வதேச ஆண்களுக்கான இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியானது கடந்த 2005 ஆம் ஆண்டு அறிமுகமாகி ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் இடம்பெற்று வருகின்றது. நேற்றைய தினம் இடம்பெற்ற ஐ.சி.சி.யின் 1000 ஆவது ஆண்களுக்கான இருபதுக்கு - 20 போட்டியில் இந்திய அணியும் பங்களாதேஷ் அணியும் மோதின. இப் போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களினால் வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது. இந் நிலையில் இதுவரை காலமும் இடம்பெற்ற 1000 ஐ.சி.சி. ஆண்களுக்கான இருபதுக்கு : 20 போட்டிகளில் மறக்க முட…
-
- 0 replies
- 476 views
-
-
இந்திய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் முஷ்பிகுர் ரஹிமின் அசத்தலான ஆட்டத்தினால் 7 விக்கெட்டுகளால் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றுள்ளது. டெல்லியில் இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்றது. 149 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஷ் அணி 19.3 ஓவரில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. லிட்டன் தாஸ் 7 ஓட்டத்துடனும், மொஹமட் நைம் 26 ஓட்டத்துடனும், சவுமி சர்கார் 39 ஓட்டத்துடனும் ஆட்டம…
-
- 1 reply
- 555 views
- 1 follower
-
-
யாழ்.வீராங்கனை தெற்காசிய விளையாட்டுப் போட்டிக்கு தெரிவு தெற்காசிய விளையாட்டுப் போட்டிக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீராங்கனை ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கையின் பளுதூக்கும் அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதிலேயே யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆஷிகாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாமரி வர்ணகுலசூரிய தலைமையிலான இலங்கை பெண்கள் பளுதூக்குதல் அணியிலேயே யாழ்ப்பாணத்தை சேர்ந்த வீராங்கனை ஆஷிகா இடம்பிடித்துள்ளார். 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் டிசம்பர் 1ஆம் திகதி நேபாளத்தின் காட்மண்டுவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/யாழ்-வீராங்கணை-தெற்காசிய/
-
- 1 reply
- 343 views
-
-
கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவி சாதனை (நெவில் அன்தனி) அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளில் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்காக கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் சி. தீப்பிகா 3.25 மீற்றர் உயரம் தாவி புதிய போட்டி சாதனை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இதே நிகழ்ச்சியில் பங்குபற்றிய அளவெட்டி, அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த பி. தனுசங்கவி (2.80 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார். கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் 35ஆவது அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளின் நான்காம் நாளான இன்றைய தினம் காலையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தீப்பிகா நிலைநாட்டிய புதிய சாதனையுடன் மேலும் 4 சாத…
-
- 0 replies
- 517 views
-
-
அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளில் இன்று 9 புதிய போட்டி சாதனைகள் ( நெவில் அன்தனி) அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளின் இரண்டாம் நாளான இன்றைய தினம் சாவகச்சேரி இந்து கல்லூரியைச் சேர்ந்த மேலும் ஒருவரான என். டக்சிதாக பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தில் புதிய சாதனை படைத்தார். அத்துடன் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியைச் சேர்ந்த எஸ். மிதுன்ராஜ் ஆண்களுக்கான குண்டேறிதல் போட்டியில் புதிய சாதனையை நிலைநாட்டினார். 35ஆவது அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்றன. போட்டியின் முதலாம் நாளான நேற்றைய தினம் ஏ. புவிதரன் புதிய சாதனை நிலைநாட்டிய நிலையில் அவரது கல்லூரியைச் சேர்ந்த டக்ச…
-
- 0 replies
- 309 views
-
-
அணிகள் : ஹூஸ்ட்டன் ஆஸ்ரோஸ் மற்றும் வாசிங்கிடன் நஷனல்ஸ் முதல் நான்கு வெற்றிகளை பெரும் அணி சாம்பியனாகும் முதலாவது போட்டி , அரங்கு ஹூஸ்ட்டன்
-
- 8 replies
- 990 views
-
-
ரியல் மெட்ரிட்டுக்கு இலகு வெற்றி: ஜுவன்டஸை மீட்டார் ரொனால்டோ By Mohamed Shibly - ஸ்பெயின் லா லிகா மற்றும் இத்தாலி சிரீ A தொடர்களில் முக்கிய போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (31) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு ரியல் மெட்ரிட் எதிர் லெகெனஸ் லெகெனசுக்கு எதிரான போட்டியில் 5-0 என இலகு வெற்றியீட்டிய ரியல் மெட்ரிட் அணி லா லிகாவில் முதலிடத்தில் இருக்கும் பார்சிலோனாவை விடவும் ஒரு புள்ளி இடைவெளியில் இரண்டாவது இடத்திற்கு முன்னெற்றம் கண்டது. பிரேசில் பதின்ம வயது வீரர் ரொட்ரிகோ பெற்ற கோல் மூலம் 7ஆவது நிமிடத்தில் …
-
- 0 replies
- 541 views
-
-
அவுஸ்திரேலிய அணியில் இருந்து விலகும் கிளென் மெக்ஸ்வெல் By Mohamed Azarudeen - 31/10/2019 Share on Facebook Tweet on Twitter அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை நட்சத்திரமான கிளென் மெக்ஸ்வெல் தனது உள ஆரோக்கியம் சரியாக இல்லாத காரணத்தினால் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து காலவரையறை இன்றிய ஓய்வு ஒன்றினை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். கிளென் மெக்ஸ்வெல் ஓய்வு எடுக்கவுள்ள செய்தியினை அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உளநல நிபுணரான Dr. மைக்கல் லோய்ட் உறுதி செய்திருக்கின்றார். கிளென் மெக்ஸ்வெல் ஓய்வு பெற்றுள்ளதால் அவர் இலங்கை அணிக்கு எத…
-
- 0 replies
- 453 views
-
-
ஓய்வின் பின்னரும் ஜிம்பாப்வே கிரிக்கெட்டுக்காக மசகட்சா By Mohamed Azarudeen - 31/10/2019 Share on Facebook Tweet on Twitter சர்வதேச கிரிக்கெட்டிற்கு அண்மையில் பிரியாவிடை கொடுத்திருந்த ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஹமில்டன் மசகட்சாவிற்கு புதிய பதவி ஒன்று கிடைத்திருக்கின்றது. அந்தவகையில், ஹமில்டன் மசகட்சா ஜிம்பாப்வே கிரிக்கெட் சபையின் புதிய கிரிக்கெட் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். தற்போது 36 வயதாகும் ஹமில்டன் மசகட்சா, தனக்கு கிடைத்திருக்கும் புதிய பதவியினை நவம்பர் மாதம் 01ஆம் திகதியிலிருந்து பொறுப்பேற்கவுள்ளார். …
-
- 0 replies
- 441 views
-
-
அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா : யாழ். மாணவன் புதிய சாதனை (நெவில் அன்தனி) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமான 35ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் மெய்வல்லுநர் போட்டியில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாவக்கச்சேரி இந்து கல்லூரி வீரர் ஏ. புவிதரன் புதிய போட்டி சாதனை நிலைநாட்டி வட மாகாணத்துக்கு முதலாவது தங்கப் பதக்கத்தை ஈட்டிக்கொடுத்தார். போட்டியின் முதலாவது நாளான நேற்றைய தினம் புவிதரனின் சாதனையுடன் மேலும் 3 சாதனைகள் புதுப்பிக்கப்பட்டன. நேற்று காலை நடைபெற்ற கோலாகல ஆரம்ப விழா வைபவத்தின்போது கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம், அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்…
-
- 0 replies
- 349 views
-
-
மூன்று மாற்றங்களுடன் இரண்டாவது T20 போட்டியில் இலங்கை By Mohamed Azarudeen - சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான T20 தொடரின் இரண்டாவது போட்டி சற்று முன்னர் கேப்பா நகரில் ஆரம்பமாகியிருக்கின்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்றிருக்கும் இலங்கை அணியின் தலைவர் லசித் மாலிங்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமது தரப்பிற்காக தெரிவு செய்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) அடிலைட் நகரில் இடம்பெற்று முடிந்த T20 தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்று மூன்று போட்ட…
-
- 1 reply
- 407 views
-
-
ஜப்பானில் நடைபெற்ற ஸோஸோ கோல்ப் தொடரில் அமெரிக்க வீரர் டைகர் வுட்ஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை காரணமாக ஓய்வெடுத்து வந்த 43 வயதான டைகர் வுட்ஸ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு களமிறங்கிய ஸோஸோ பி.ஜி.ஏ. தொடரில் முதலிடம் பிடித்தார். இது அவர் வென்ற 82 ஆவது பி.ஜி.ஏ. சாம்பியன் பட்டமாகும். இதன் மூலமாக 1965 இல் அமெரிக்காவின் சாம் ஸ்னீட் படைத்த சாதனையை (82 பட்டங்கள்) வுட்ஸ் சமன் செய்துள்ளார். https://www.virakesari.lk/article/67770
-
- 0 replies
- 414 views
-
-
தேசிய விளையாட்டு விழா முப்பாய்ச்சலில் மீண்டும் தங்கம் வென்றார் சப்ரின் By Mohammed Rishad - 45 ஆவது தேசிய விளையாட்டு விழா பதுளையில் நேற்று (27) நிறைவுக்கு வந்தது. போட்டிகளின் இறுதி நாளான நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் தென் மாகாணத்தைச் சேர்ந்த சப்ரின் அஹமட் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக சப்ரின் அஹமட் தங்கப் பதக்கத்தினை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். பல முன்னணி வீரர்கள் பங்குபற்றியிருந்த இப்போட்டிக்கு சீரற்ற காலநிலையால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. எனினும், விறுவிறுப்…
-
- 2 replies
- 432 views
- 1 follower
-
-
Share0 அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் 17 வயது பெண்கள் பிரிவில் பாசையூர் புனித அந்தோனியார் றோமன் கத்தோலிக்க மகளிர் வித்தியாலயம் ஒரு தங்கப் பதக்கம், இரு வெள்ளிப் பதக்கங்கள், ஒரு வெண்கலப் பதக்கங்கள் உட்பட 4 பதக்கங்களை கைப்பற்றி இரண்டாம் இடத்தை பெற்றனர். அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டிகள் அண்மையில் பொலநறுவை றோயல் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. பெண்களிற்கான பளுதூக்கல் போட்டியில் பாசையூர்…
-
- 0 replies
- 431 views
-
-
தேசிய விளையாட்டு விழா மெய்வல்லுனரில் உஷான், லக்ஷிகா சிறந்த வீரர்களாக தெரிவு By Mohammed Rishad - 28/10/2019 Share on Facebook Tweet on Twitter விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த 2019 ஆம் ஆண்டுக்கான 45 ஆவது தேசிய விளையாட்டு விழா விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் தலைமையில் இன்று (27) கோலாகலமாக நிறைவுக்கு வந்தது. தொடர்ந்து நான்கு நாட்களாக பதுளை வின்சன்ட் டயஸ் ம…
-
- 0 replies
- 502 views
-
-
இந்திய தொடரிலிருந்து விலகும் தமிம் இக்பால் : முஷ்பிகுர் ரஹீமின் அதிரடி அறிவிப்பு By Mohamed Azarudeen - 28/10/2019 பங்களாதேஷ் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதோடு, இந்திய கிரிக்கெட் அணியுடன் 3 போட்டிகள் T20 தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பவற்றில் ஆடவிருக்கின்றது. இந்த சுற்றுப்பயணத்தில் இருந்து பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான தமிம் இக்பால், தனது சொந்தக் காரணங்களை அடிப்படையாக கொண்டு விலகுவதாக குறிப்பிட்டிருக்கின்றார். தமிம் இக்பால் இன்னும்…
-
- 0 replies
- 385 views
-
-
இலங்கைக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 134 ஓட்டங்களினால் அபார வெற்றிபெற்றுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்றைய தினம் அடிலெய்டில் ஆரம்பாது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி பந்து வீசத் தீர்மானித்து. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி டேவிட் வோர்னர் மற்றும் ஆரோன் பிஞ்சின் அதிரடியான ஆட்டத்தினால் ஓட்டங்களை 233 ஓட்டங்களை குவித்தது. இதன் பின்னர் 234 என்ற மிகப்பெரிய வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணித் துடுப்பாட்ட வீரர்கள் சொப்ப ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்தனர். இறுதியாக இலங்கை அணி நிர்ணயிக்கப…
-
- 0 replies
- 486 views
-
-
(நெவில் அன்தனி) பதுளை வின்சன்ட் டயஸ் விளையாட்டரங்கில் இன்று இரவு மின்னொளியில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா ஆண்களுக்கான கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் தென் மாகாணத்தை 4 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிகொண்ட வட மாகாணம் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது. இந்த வெற்றியில் முன்னாள் தேசிய வீரரும் மீண்டும் தேசிய அணியில் இடம்பிடிப்பதற்கு கடும் பிரயத்தனம் எடுத்துவருபவருமான அணித் தலைவர் ஜெபமாலைநாயகம் ஞானரூபன் போட்ட ஹெட்-ட்ரிக் கோல்கள் பெரும் பங்காற்றின. வட மாகாண அணி போட்டியின் ஆரம்பத்தில் சற்று தடுமாற்றத்துடன் காணப்பட்டது. ஆனால் 25 நிமிடங்களின் பின்னர் சிறந்த வியூகங்களை அமைத்து விளையாடிய வடக்கு மாகாண அணி சார்பாக போட்டியின் 34 ஆவது நிமிடத்தில் ஞானர…
-
- 0 replies
- 329 views
-
-
இலங்கை அரங்குகளுக்கு ஐந்து கிரிக்கெட் ஜாம்பவான்களின் பெயர்கள் By Mohamed Shibly - இலங்கையின் ஓய்வு பெற்ற ஐந்து கிரிக்கெட் ஜாம்பவான்களின் பெயர்களை இரண்டு முன்னணி கிரிக்கெட் மைதானங்களின் அரங்குகளுக்கு சூட்டி அவர்களை கௌரவிப்பதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. முன்னாள் டெஸ்ட் அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க, அரவிந்த டி சில்வா மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரின் பெயர்கள் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் 3 அரங்குகளுக்கு சூட்டி கௌரவிக்கப்படவுள்ளது. இதேநேரம், பல்லேகல சர்வதேச மைதானத்தின் அரங்குகளுக்கு சொந்த ஊர் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட…
-
- 0 replies
- 432 views
-
-
மீண்டு வந்த அனிதா தங்கம் வென்றார் Published by J Anojan on 2019-10-25 13:32:47 (பதுளையிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்) 45 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் வட மாகாணத்திற்கான வீராங்கைன அனிதா ஜெகதீஸ்வரன் காயத்திலிருந்து மீண்டு வந்து தங்கப் பதக்கம் வெவன்று சாதைனப் படைத்துளளார். பதுளையில் நடைப்பெற்றுவரும் 45 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் முதல் நாளான இன்று காலை நடைப்பெற்ற மகளிருக்கான கோளூன்றி பாய்தலிலேயே அனிதா இந்தத் தங்கப்பதக்கத்தை வென்றெடுத்தார், இவர் 3,30 உயரம் தாண்டியே தங்கத்தை தனதாக்கிக் கொண்டார், இதில் வெள்ளிப் பதக்கத்தை மேல் மாகாண வீராங்கைன உதேனி வென்றார், இவர் 3,10 மீற்றர் உயரம் தாண்டினார், வெண்கலப் பதக்கத்தை 3,00 மீற்றர் உயர் …
-
- 0 replies
- 554 views
-
-
மெஸ்ஸியின் சாதனை கோலுடன் பார்சிலோனா வெற்றி By Mohamed Shibly - ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் முக்கிய சில போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (24) அதிகாலை நடைபெற்றன. குறித்த போட்டிகளின் விபரம் வருமாறு, பார்சிலோனா எதிர் ஸ்லாவியா ப்ரகுவே லியோனல் மெஸ்ஸியின் சாதனை கோல் மூலம் செக் குடியரசின் ஸ்லாவியா ப்ரகுவே அணிக்கு எதிரான போட்டியில் பார்சிலோன அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் கோல் பெற்றதன் மூலம் 15 சம்பியன்ஸ் லீக்கில் பருவங்களில் தொடர்ச்சியாக கோல் பெற்ற வீரராக மெஸ்ஸி சாதனை படைத்தார். இதன்போது மன்செஸ்டர் யுனைடட் முன்னாள் வீரர் …
-
- 0 replies
- 467 views
-
-
SAG தொடருக்கான இலங்கையின் கிரிக்கெட் அணிகள் அறிவிப்பு By Mohamed Azarudeen - தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (SAG) இந்த ஆண்டு (2019) 13ஆவது தடவையாக எதிர்வரும் டிசம்பர் மாதம் 01ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரையில் நேபாளத்தின் தலைநகரான கத்மண்டுவில் நடைபெறவிருக்கின்றது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில், பங்கெடுக்கும் நாடுகள் (இளையோர் கிரிக்கெட் அணிகள்) இடையே T20 கிரிக்கெட் தொடரும் இடம்பெறவிருக்கின்றது. எட்டு நாடுகள் பங்குபெறும் இந்த T20 கிரிக்கெட் தொடர் ஆடவர், மகளிர் என இரு பாலாருக்கும் நடைபெறவுள்ள நிலையில் தொடரில் பங்கெடுக்…
-
- 0 replies
- 493 views
-