விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
லண்டன் ஒலிம்பிக் போட்டியிலிருந்து பாட்மின்டன் வீராங்கனைகள் 8 பேர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனா, தென் கொரியா மற்றும் இந்தோனேஷியாவைச் சேர்ந்த அந்த 8 வீராங்கனைகளும், வலுவான அணிகளை தவிர்ப்பதற்காக வேண்டுமென்றே தகுதிச்சுற்றுப் போட்டியில் தோல்வியடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த புகாரை விசாரித்த பாட்மின்டன் சங்கம், அந்த 8 வீராங்கனைகளையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. http://tamil.yahoo.com/ஒல-ம்ப-க்-ப-ட்ட-120800209.html
-
- 7 replies
- 813 views
-
-
உலக கால்பந்து தரவரிசை: அர்ஜென்டினா முதலிடம்! உலக கால்பந்து தரவரிசையில் அர்ஜென்டினா அணி தொடர்ந்து முதலிடம் இருந்து வருகிறது. உலக அணிகளின் கால்பந்து தர வரிசைப் பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி அர்ஜென்டினா அணி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. 2வது இடத்தில் பிரேசிலும், இத்தாலி அணி 3-வது இடத்திலும், ஸ்பெயின் அணி 4-வது இடமும், ஜெர்மனி அணிக்கு 5வது இடமும், செக் குடியரசு அணி 6-வது இடத்திலும், பிரான்ஸ் அணி 7-வது இடமும், போர்ச்சுக்கல் அணி 8-வது இடமும், ஆலந்து அணி 9-வது இடமும், குரோஷியா அணி 10-வது இடத்திலும் உள்ளன. கிரீஸ், இங்கிலாந்து, ருமேனியா, ஸ்காட்லாந்து, மெக்சொகோ, துருக்கி, கொலம்பியா, பல்கேரியா ஆகிய அணிக…
-
- 0 replies
- 813 views
-
-
நீயா நானா விருது நிகழ்ச்சியில் தமிழகவீரர் பந்துவீச்சாளர் நடராஜனுக்கு பரிசு வழங்கி கெளரவபடுத்தியுள்ளனர். இது வெறும் பந்துவீச்சாளர் என்பதற்காக கொடுக்கப்பட்டதல்ல. கிரிக்கட்டில் தனக்கு கிடைத்த வருமானத்தை தனது ஊர் கிராமத்து இளைஞர்களும் விளையாடி பெயர் பெற வேண்டுமென்று தனது ஊரிலேயே பொது மைதானம் அமைத்து இலவசமாக பயிற்சிகள் வழங்கிவருகிறார். இவ்வளவு நாளாக செய்த முயற்சியின் பலனாக ஏறத்தாள 20 பேர்வரை தெரிவு செய்யப்பட்டு பல்வேறு இடங்களிலும் விளையாடுகிறார்கள்.
-
- 1 reply
- 812 views
- 1 follower
-
-
இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின் குடும்பத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா..! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவரான அஸ்வின் ஐ.பி.எல். போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகாக விளையாடி வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அஸ்வின் ஐ.பி.எல். போட்டியிலிருந்து இடைநடுவில் விலகியிருந்தார். கொரோனாவிற்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் அவர்களுக்காக உடன் இருப்பது அவசியம் என்பதால், ஐ.பி.எல்.லில் இருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்திருந்தார். மேலும், அஸ்வின் குடும்பத்தில், குழந்தைகள் உட்பட 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அஸ்வினின் மனைவி பிரீத்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் …
-
- 0 replies
- 812 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர் கயான் சேனாநாயக்கவை திருமண விருந்துபசாரத்திற்கு அழைத்த கோலி இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர் கயான் சேனாநாயக்கவை திருமண விருந்துபசாரத்திற்கு விராட் கோலி அழைத்துள்ளர். மும்பையில் நேற்று நடைபெற்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்று வாழ்த்தினர். கடந்த 21ம் திகதி புதுமண தம்பதியினர் இந்தியா திரும்பினர். அவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதைத்தொடர்ந்து, டெல்லி தாஜ் ஹோட்டலில் விராட் கோலி – அனுஷ்கா ஜோடியின் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இருவீட்டாரின் உறவினர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச…
-
- 5 replies
- 812 views
-
-
இந்தியத் தொடர்: நரேன் இல்லை சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடி வந்த சுநீல் நரேனின் பந்துவீச்சு குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து அவரை திரும்பப் பெற்றது மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம். மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், ஒரு டி20 போட்டி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் விளையாடவுள்ளது. வரும் 8-ம் தேதி தொடங்கவுள்ள ஒருநாள் தொடரில் சுநீல் நரேனும் இடம்பெற்றிருந்தார். இந்த நிலையில் சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடி வந்த நரேனின் பந்துவீச்சு குறித்து தொடர்ந்து 2-வது முறையாக சந்தேகம் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து அவர் சாம்பியன்ஸ் லீக்கில் விளையாட தடை…
-
- 17 replies
- 812 views
-
-
இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பயன் மியூகின் (FC Bayern München ) அணி! ஜேர்மன் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டிக்கு பயன் மியூகின் அணி முன்னேறியுள்ளது. ஜேர்மன் கிண்ண கால்பந்தாட்ட தொடர் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இப் போட்டியில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், லெவகுசன் கழகத்தை 6 க்கு 2 என்ற கோல் கணக்கில் பயன் மியூனிக் கழகம் வெற்றிகொண்டது. இந்தப் போட்டியின் முதல் பாதியில் 3 மற்றும் 9 ஆவது நிமிடங்களில், ரெபேர்ட் லவண்டொஸ்கி இரண்டு கோல்களைப் போட்ட நிலையில், பயன்மியூனிக் கழகம் முன்னிலை பெற்றது. 16 ஆவது நிமிடத்தில் வெலகுசன் கழகம் சார்பில் கோல் ஒன்று போடப்பட்ட போதிலும், முதல் பாதியில் 2 க்கு 1 என்ற கோல் கணக்கி…
-
- 1 reply
- 811 views
-
-
சர்வதேச ஹொக்கிப் போட்டியில் ஆர்ஜென்ரீனாவுக்கு தங்கம் இந்தியாவுக்கு வெள்ளி [25 - May - 2008] மலேசியாவில் 8 நாடுகள் பங்குபற்றிய சர்வதேச ஹொக்கிப் போட்டியில் ஆர்ஜென்ரீனாவுக்கு தங்கப் பதக்கமும் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கமும் கிடைத்துள்ளது. முன்னாள் இந்திய ஹொக்கி நிர்வாகத்தில் திகழ்ந்த நிர்வாக சீர்கேடு காரணமாக அந்த நிர்வாகம் திடீரெனக் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டது. இப்புதிய நிர்வாகம் ஸ்தாபிக்கப்பட்டு முதன்முதலில் நடைபெற்ற சர்வதேச ஹொக்கிப் போட்டியில் இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. இப்போட்டி பற்றி புதிய இந்திய ஹொக்கி நிர்வாக உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்; "சிறந்த இளம் ஹொக்கி வீரர்கள் இருந்தும் முன்னைய நி…
-
- 0 replies
- 811 views
-
-
பங்களாதேஷின் ஒரு நாள் கிரிக்கெட் அணிக் கப்டன் பதவியிலிருந்து ஹபிபுல் பஷார் ராஜிநாமா செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்து ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இரு போட்டித் தொடரிலும் இந்திய அணி பங்களாதேஷை தோற்கடித்து தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் பங்களாதேஷ் ஒரு நாள் போட்டி அணியின் கப்டன் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வதாக ஹபிபுல் பஷார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஹபிபுல் பஷார் கூறியதாவது: ஒரு நாள் போட்டிக்கான அணியின் கப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன். அதே நேரத்தில் அணியின் வீரராக தொடர்ந்து விளையாட விரும்புகிறேன். பங்களாதேஷ் அணியின் கப்டனாக இருந்தது எனக்கு நல்ல அனுபவத்தை கொடுத்திருக்கிறது. …
-
- 0 replies
- 810 views
-
-
டக்வொர்த் லூயிஸ் முறையை புரிந்து கொள்வது எப்படி? 9 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இணையத்தில் எப்போதும் கேலிக் கிண்டலுக்கு உள்ளாகக்கூடிய ஒரு விஷயம் டக்வொர்த் லூயிஸ் முறை. மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டால், சில கணக்கீடு முறையால், விநோதமான இலக்கு வைக்கப்படுகிறது என்ற ஒரு விமர்சனம் உள்ளது. டக்வொர்…
-
- 0 replies
- 810 views
- 1 follower
-
-
51 பந்துகளில் 126 ரன்கள், 14 சிக்ஸ், 6 பவுண்டரி: கிறிஸ் கெய்ல் மேஜிக் கிறிஸ் கெய்ல். - படம். | கெட்டி இமேஜஸ். வங்கதேச பிரீமியர் லீக், டாக்காவில் நடைபெற்ற டி20 போட்டியில் ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக ஆடிவரும் கிறிஸ் கெய்ல், குல்னா டைட்டன்ஸ் பந்து வீச்சை புரட்டி எடுத்து அதிரடி சதம் கண்டார். இதனால் ரங்பூர் ரைடர்ஸ் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து 15.2 ஓவர்களில் இலக்கை ஊதித்தள்ளியது. முதலில் பேட் செய்த குல்னா 6 விக், இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. ரங்பூர் அணியில் மலிங்கா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மஷ்ரபே மோர்டசா 4 ஓவர்களில் 23 ரன்களையே விட்டுக் கொடுத்து சிக்கனம் காட்டினார். இந்தச் சதம் பங்களாதேஷ் பிரீமியர் லீ…
-
- 2 replies
- 810 views
-
-
ஐ.சி.சி.யை கேள்வி கேட்ட இலங்கை பெண் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி.-யிடம் டுவிட்டரில் இலங்கைப் பெண் எழுப்பிய கேள்வி அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லியும் பொலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி.-யும் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தது. இதனை கவனித்த இலங்கை பெண் ஒருவர் ஐ.சி.சி.யிடம் -நியாயமான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில், கோஹ்லி–-அனுஷ்கா திரும…
-
- 0 replies
- 809 views
-
-
12 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த திமுத்! பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சை துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்றுமுன்னர் வரை விக்கெட் இழப்பின்றி 188 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது. இதன்போது, இலங்கை அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வரும் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தனது 12 ஆவது டெஸ்ட் சதத்தினை பதிவு செய்தார். அதன்படி, திமுத் கருணாரத்ன 106 ஓட்டங்களுடன் லஹிரு திரிமான்ன 80 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடி வருகின்றனர். 12 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த திமுத்! (adaderana.lk)
-
- 0 replies
- 808 views
-
-
62 மில்லியன் அமெரிக்க டாலர் அளவில் வரி ஏய்ப்பு: நெய்மருக்கு 1.19 மில்லியன் அபராதம் உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான நெய்மர் வரி ஏய்ப்பு செய்ததாக பிரேசில் கோர்ட்டு 1.19 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதமாக விதித்துள்ளது. பிரேசில் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரர் நெய்மர். இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களான மெஸ்சி, ரொனால்டோவுடன் இணைந்து கருதப்படும் நெய்மர் சம்பளம் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார். மேலும், விளம்பரங்கள், தனது படங்களை பயன்படுத்துதலுக்கான உரிமை போன்றவற்றின் மூலமாகவும் சம்பாதிக்கிறார். இப்படி சம்பாதித்ததில் 62 மில்லியன் அமெரிக்க டாலர் …
-
- 0 replies
- 808 views
-
-
http://www.adaderana.lk/tamil/news.php?nid=29913 T-20 அணித் தலைவர் பதவியில் இருந்து மஹேல விலகல்! சர்வதேச இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி அணித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக இலங்கை அணித் தலைவர் மஹேல ஜயவர்த்தன அறிவித்துள்ளது. இது குறித்து இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவுக்கு தான் ஏற்கனவே அறிவித்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார். எனினும் தான் முன்னர் குறிப்பிட்டது போன்று சர்வதேச ஒருநாள் மற்றும் ரெஸ்ட் போட்டிகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம்வரை தலைமை தாங்கவுள்ளதாக மஹேல கூறியுள்ளார். இளம் வீரர்களுக்கு தலைமைத்துவம் அளிக்கும் நோக்கில் தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார். இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தை மேற்கிந்திய தீவுகள் அணியிடம்…
-
- 5 replies
- 808 views
-
-
பட மூலாதாரம்,FIDE 21 ஆகஸ்ட் 2023 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிடே உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறி தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா அசத்தியுள்ளார். அரையிறுதியில் அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் மூன்றாம் நிலை வீரரான பேபியானோ கருவானாவை டைபிரேக்கர் ஆட்டத்தில் அவர் வீழ்த்தினார். பட்டத்திற்கான இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனுடன் அவர் மோதுகிறார். அரையிறுதியில் பிரக்ஞானந்தா அசத்தல் பிடே உலகக்கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 30ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 2…
-
- 9 replies
- 808 views
- 1 follower
-
-
மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர்... சாம்பியன்ஸ் லீக் கோப்பை யாருக்கு?! #UCL 2017 ல் ரியல் மாட்ரிட்டிடம் நூலிழையில் சாம்பியன் பட்டத்தைத் தவறவிட்ட யுவென்டஸ் இந்த முறை ரொனால்டோவையே தனது பிரத்யேக ஆயுதமாக மாற்றி கோப்பைக்குக் குறிவைத்திருக்கிறது. இந்தியாவில் இனி நள்ளிரவு, அதிகாலை நேரங்களிலும் கூட தொலைக்காட்சிகள் அலறப் போகின்றன; இந்திய இளசுகள் எல்லாம், `ஃபுட்பால் ஹேங் ஓவரில்’ இரவு முழுவதும் விழித்துக்கிடக்கப் போகின்றனர். 2018-19 சீஸனுக்கான `சாம்பியன்ஸ்லீக் ஃபுட்பால் இஸ் பேக்’. ஆம், ஐரோப்பாவின் டாப் கிளப்கள் கலந்துகொள்ளும் மாபெரும் கால்பந்துத் திருவிழாவான, சாம்பியன்ஸ்லீக் கால்பந்து தொடர் நாளை தொடங்கவுள்ளது. இந்தமுறை கோப்பையைக் கைப்…
-
- 2 replies
- 806 views
-
-
மைக் ஹஸ்ஸியை பயிற்சியாளராக்க தோனி பரிந்துரை? இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்ஸியை பரிசீலிக்கலாம் என்று ஓய்வு பெற்ற டெஸ்ட் கேப்டன் தோனி பிசிசிஐ-க்கு பரிந்துரை செய்ததாக தெரிகிறது. இது குறித்து இந்திய ஊடகம் ஒன்றில் எழுதப்பட்ட பத்தி ஒன்றை மேற்கோள் காட்டி ஆஸ்திரேலிய ஊடகம் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு: டன்கன் பிளெட்சருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரரும் ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடியவருமான மைக் ஹஸ்ஸி பெயரை தோனி பரிந்துரை செய்துள்ளதாக அந்தப் பத்தியில் கூறப்பட்டுள்ளது. பிசிசிஐ-யின் முதன்மை அதிகாரிகளுக்கு மைக் ஹஸ்ஸியை பயிற்சியாளர் பொறுப்பிற்கு தோனி பரிந்துரை செய்துள…
-
- 1 reply
- 806 views
-
-
ஜிம்பாப்வே அசத்தல் வெற்றி: ஐபிஎல்-இல் கலக்கிவிட்டு சர்வதேச ஆட்டத்தில் சொதப்பிய இந்திய பேட்டர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு சந்தித்த முதல் போட்டி இவ்வளவு மோசமான முடிவாக இருக்கும் என இளம் இந்திய அணி எதிர்பார்த்திருக்காது. அடுத்த தலைமுறைக்கான இந்திய அணி என்று மார்தட்டி சுப்மன் கில் தலைமையில் ஜிம்பாப்வே சென்ற அணி, 116 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் சுருண்டு மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. ஹராரே மைதானத்தில் நேற்று நடந்த முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணியை 13 ரன்கள் வித…
-
-
- 7 replies
- 805 views
- 1 follower
-
-
ரெனிஸ் விளையாட்டின் மூத்த அரங்கம் இங்கிலாந்தின் விம்பில்டன் போட்டிகள். 1877இல் முதல் களம் கண்ட போட்டி அரங்கம், இவ்வருடம் 133ஆவது போட்டிகளின் முடிவை எட்டியிருக்கிறது. இம்முறை இறுதிப் போட்டிகள் மேலும் புதிய சாதனைகளுக்கு வழிவகுக்குமா? என்பதிற்கான பதிலை சனி, ஞாயிறு பெண்கள் மற்றும் ஆண்கள் இறுதிப் போட்டிகள் வழங்கும். சனி காலை நடைபெறும் பெண்கள் இறுதிப் போட்டியில், 10ஆவது தரவரிசையில் உள்ள அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், 7ஆவது தரவரிசையில் உள்ள ரூமேனியாவின் சிமோனா கெலப்புடன் மோதுகிறார். அவுஸ்திரேலியன் ஓப்பின், பிரென்ஜ் ஓப்பன், விம்புல்டன், அமெரிக்கன் ஓப்பின் எனப்படும் ரெனிசின் முதல தரப் போட்டிகளான கிராண்ட சிலாம்களில், இது செரீனாவின் 32ஆவது தடவையாக போட்டியிடும் இறுதிப்போட்டி.…
-
- 2 replies
- 805 views
-
-
ஆச்சரியமேற்படுத்திய சங்காவின் நியமனம் அறிவிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவில், இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார சேர்க்கப்பட்டமை, ஆச்சரியத்தை ஏற்படுத்தவும் தவறவில்லை. இலங்கை அணி சார்பாக அண்மையில் வரை விளையாடிய குமார் சங்கக்கார, 7 மாதங்களுக்கு முன்னரே சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றிருந்தார். அத்தோடு, உள்ளூர்ப் போட்டிகளில் இன்னமும் தொடர்ந்து விளையாடி வருகிறார்.இந்நிலையில், இலங்கை அணியின் தேர்வாளராக அவர் நியமிக்கப்பட்டமை, புருவங்களை உயர்த்தியிருந்தது. தனது பதவி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த குமார் சங்கக்கார, குறுகியகாலத்துக்கான பதவி மாத்திரமே என்பதாலேயே, இப்பொறுப்பை ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்தார். …
-
- 1 reply
- 804 views
-
-
விஜய் சங்கர்: "இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வானது எனது கனவின் முதல்படி" சிவக்குமார் உலகநாதன்பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைFACEBOOK தமிழக ரஞ்சி கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான 26 வயதாகும் விஜய் சங்கர், திருநெல்வேலியில் பிறந்தவர். சிறுவயது முதல் அவர் சென்னையில் குடும்பத்துடன் வசி…
-
- 0 replies
- 803 views
- 1 follower
-
-
வெஸ்ட் ஹாமை வென்று கிண்ணத்தை நெருங்கும் லிவர்பூல் By Mohamed Shibly நீண்ட காலத்திற்குப் பின் ப்ரீமியர் லீக் பட்டத்தை வெல்ல காத்திருக்கும் லிவர்பூல் அணி வெஸ்ட் ஹாம் யுனைடட் அணிக்கு எதிரான போட்டியை 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் வென்று அந்த இலக்கை மேலும் நெருங்கியுள்ளது. தனது சொந்த மைதானமான அன்பீல்டில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் முதலிடத்தில் இருக்கும் லவர்பூல் இரண்டாவது இடத்தில் உள்ள நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டியை விடவும் 22 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது. ல…
-
- 0 replies
- 803 views
-
-
இலங்கை கபடி அணியில் சினோதரன், டிலக்ஷனா, ப்ரியவர்ணா By Mohammed Rishad - நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெறவுள்ள 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை ஆண்கள் கபடி அணியில் மட்டக்களப்பைச் சேர்ந்த கணேசராஜா சினோதரன் மற்றும் பெண்கள் கபடி அணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வி. டிலக்ஷனா மற்றும் ஆர்.ப்ரியவர்ணா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இலங்கை தேசிய கபடி அணியில் விளையாடி வருகின்ற சினோதரன், 2016 தெற்காசிய விளையாட்டு விழா மற்றும் 2018 ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார். …
-
- 0 replies
- 803 views
-
-
அதே இரத்தம் அப்படித்தான் இருக்கும் November 27, 2015 மும்பையில் நடைபெற்ற 16வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் டில் சச்சினின் மகன் அர்யுன் சதம் விளாசியுள்ளார். கவாஸ்கர் லெவனுக்கு எதிராக விளையாடிய அவர், ரோகித் சர்மா லெவனுக்கு எதிராக 106 ஓட்டங்களை எடுத்தார். அர்யுன் இடது கைப் பழக்கமுடைய துடுப்பாட்ட வீரரும் வேகப்பந்து வீச்சாளருமாவார். அர்யுன் இந்திய அணியில் விரைவில் இடம்பிடிப்பார் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளரான பொண்டிங், டொனி, ரோகித் சர்மா, குக் போன்ற கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/sports/?p=4053&cat=2
-
- 0 replies
- 803 views
-