விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
திருமண பந்தத்தில் இணைந்தார் திரிமன்னே இலங்கை கிரிக்கெட் அணியின் உப தலைவரும் துடுப்பாட்ட வீரருமான லகிரு திரிமன்னே திருமண பந்தத்தில் நேற்றைய தினம் இணைந்து கொண்டார். http://www.virakesari.lk/articles/2014/12/18/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87
-
- 0 replies
- 712 views
-
-
பொதுமக்கள் பார்வைக்காக சென்னையில் 'உலகக் கோப்பை' ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் வரும் 14-ம் தேதி தொடங்கவுள்ள உலகக்கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதியாக, சென்னையில் உலகக்கோப்பை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. எம்.ஆர்.எஃப். நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. நேற்று மெரினா பீச், பெசன்ட் நகர் பீச், ஃபோரம் மால், எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் ஆகிய இடங்களில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதில், ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை எழுதும் வகையில் ஒரு பேனரும் வைக்கப்பட்டிருந்தது. இந்த உலகக் கோப்பையை, நடிகர்கள் ஸ்ரீகாந்த், நிதின் சத்யா, வைபவ், அசோக் பவர்ஸ்டார் ஸ்ரீநிவாசன், ராகுல் நம்பியார், ஆதி, விஜய் வசந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பார்வையிட்டு, தங்க…
-
- 0 replies
- 339 views
-
-
கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டப் போட்டி மதுபானம் அருந்திய நிலையில் வருபவர்கள் மைதானத்துள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் பொலிஸாரின் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் கடும் கட்டுப்பாடுகளுடன் வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டப் போட்டி நடைபெறவுள்ளதாக சென்.ஜோன்ஸ் கல்லூரியின் பிரதி அதிபர் வி.எஸ்.டி.துஸிதரன் தெரிவித்தார். வடக்கின் மாபெரும் போரின் ஏற்பாடுகள் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு வெள்ளிக்கிழமை (27) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற வேளையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், வடக்கின் மாபெரும் போர் எதிர்வரும் மார்ச் மாதம் 5, 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெறு…
-
- 33 replies
- 3.3k views
-
-
தொடர்ந்து ஏமாற்றம்: வருத்தத்துடன் ஓய்வு பெற்றார் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜொனாதன் டிராட் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜொனாதன் டிராட் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 பூஜ்ஜியங்களுடன் 72 ரன்களை மட்டுமே டிராட் எடுத்தார். இதனால் அவர் கடும் ஏமாற்றமடைந்தார். பொதுவாக 3-ம் நிலையில் களமிறங்கி இங்கிலாந்துக்கு மிகப்பெரிய டெஸ்ட் இன்னிங்ஸ்களை ஆடிக் கொடுத்த தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வீரரான ஜொனாதன் டிராட், ஆஷஸ் தொடரின் போது டேவிட் வார்னரின் முதிர்ச்சியற்ற மோசமான விமர்சனத்தினால் மனமுடைந்து பாதியிலேயே வெளியேறினார். அதன் பிறகு தற்போது மேற்கிந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில்தான் அவர…
-
- 1 reply
- 449 views
-
-
சம்பியன் லீக் தொடர்பில் விரைவில் பேச்சுவார்த்தை சம்பியன் லீக் 20-20 தொடர் நிறுத்தப்படும் வாய்ப்புகள் இருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையுடன் இணைந்து குறித்த தொடரை நடாத்திவரும் கிரிக்கெட் அவுஸ்திரேலியா மற்றும் கிரிக்கெட் தென் ஆபிரிக்கா ஆகிய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடாத்த இருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை செயலாளர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டிக்கு இரண்டு சபைகளினதும் தலைவர்களும், பிரதம நிறைவேற்று அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளனர். அந்த நேரத்தில் குறித்த தொடர் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. போதியளவு பார்வையாளர்கள் இல்லை. தொலைக்காட்சி நிறுவனத்…
-
- 0 replies
- 317 views
-
-
இந்திய அணியை விட தென் ஆப்பிரிக்கா கடினமான அணி: மஷ்ரபே மொர்டசா இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டிக்கு முன்னதான பயிற்சியின் போது கைகொட்டிச் சிரிக்கும் மஷ்ரபே மொர்டசா. | படம்: ஏ.பி. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியதையடுத்து வங்கதேச அணியின் கேப்டன் மொர்டசா தன்னம்பிக்கையின் உச்சத்துக்குச் சென்றுள்ளார். பிடி நியூஸ்24.காம் தளத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இந்திய அணியை விட அடுத்ததாக தாங்கள் சந்திக்கும் தென் ஆப்பிரிக்கா நிச்சயமாக கடினமான அணியே என்று கூறியுள்ளார். இத்தனைக்கும், ஐசிசி ஒருநாள் போட்டி அணிகள் தரவரிசையில் இந்திய அணி 2-ம் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 4-ம் இடத்திலும் உள்ளது. மேலும் வங்கதேசத்தின் கடும் வெயிலில் தென் ஆப்பிரிக்கா தொ…
-
- 0 replies
- 307 views
-
-
மீண்டும் சர்வதேச அரங்கில், தமிழீழ கொடியுடன் தமிழர்களின் வீரத்தை.... உலகுக்கு உணர்த்திய தமிழன்.
-
- 5 replies
- 1.2k views
-
-
இலங்கை அணிக்கு பெருமை சேர்த்த யாழ். யுவதி! மாலைதீவு கூடைப்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட 'சுப்பர் கிண்ண' கூடைப்பந்து சுற்றுப்போட்டியில் இலங்கை விமானப்படை ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து அணிகள் பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகிய இரு சம்பியன்ஷிப்களையும் வென்றன. பெண்கள் அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் பெண் வீராங்கனையான பி.சிவானுஜாவும் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டிகளில் பங்குபற்றினார். இந்நிலையில் மாலைதீவினை எதிர்த்து போட்டியிட்ட இலங்கை அணி 74:72 என்ற எண்ணிக்கையில் மாலைதீவை வீழ்த்தி வெற்றி பெற்றது. மாலைதீவின் மாலே நகரில் செப்டம்பர் 26 முதல் 30 வரை இந்தப் போட்டிகள் நடைபெற்றன. அந்தவகையில் நான்கு நாடுகளின் அணிகள், குறிப்பாக உலகின் வலிமையான வெளிநா…
-
- 2 replies
- 686 views
-
-
இரத்ததானம்... இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் 38ஆவது பிறந்த தினம், நேற்று செவ்வாய்க்கிழமை (27) கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தெஹிவளைப் பகுதியில் இடம்பெற்ற இரத்ததான முகாமை படங்களில் காணலாம். - See more at: http://www.tamilmirror.lk/157676/இரத-தத-னம-#sthash.X2eb1v1O.dpuf
-
- 1 reply
- 282 views
-
-
நரைனின் பந்தில் மீண்டும் சந்தேகம் November 10, 2015 இலங்கைக்கு எதிரான இறுதி ஒரு நாள் ஆட்டத்தில் நரைனின் பந்து வீச்சில் தவறு இருப்பதாக மீண்டும் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 14 நாள்களுக்குள் அவர் தனது பந்து வீச்சில் பரிசீலிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வருட ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணிக்காக நரைன் கலந்துகொண்டார். அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, பந்து வீச தடை விதிக்கப்பட்டது. ஆனால், கொல்கத்தாவின் மிரட்டலால் அவர் பந்து வீச அனுமதிக்கப்பட்டார். ஆனால், நரைன் தனது கையை அனுமதிக்கப்பட்ட 15 டிகிரிக்கு மேல் வளைப்பதாக பரவலான கருத்துக்கள் வெளிவந்தன. இதனால் நடப்பு வருட உலகக்கிண்ணத் தொடரில் இருந்து அவர் விலகியிருந்தார்…
-
- 5 replies
- 476 views
-
-
“நாடு தான் முக்கியம் தோனி அல்ல!” - காம்பீர் அதிரடி முன்னாள் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பீர், கிரிக்கெட் உள்ளிட்ட எந்த விஷயங்களையும் பற்றிய கேள்விக்கும் ஒளிவுமறைவில்லாமல் திறந்த மனதுடன் நேரடியாக பேசக்கூடிய சுபாவம் உள்ளவர். காம்பீரின் சக வீரரும் முன்னாள் கேப்டனுமான தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் தற்போது விவாதப் பொருள் ஆகியுள்ள நிலையில் தோனியின் ஓய்வு பற்றி உங்கள் பார்வை என்ன? என்று கேட்கப்பட்டது. ஓய்வு முடிவு என்பது வீரரின் தனிப்பட்ட ஒன்று, அதுவரை அவர்கள் விளையாட எந்த தடையும் இல்லை, அதே நேரத்தில் எதிர்காலத்தையும் பார்க்க வேண்டும். இருப்பினும் 2020ல் நடைபெறவுள்ள 20 ஓவர் உலகக் கோ…
-
- 0 replies
- 655 views
-
-
மீண்டும் இணைந்த டோனி, பிளெமிங் புனேயின் பயிற்சியாளராகவும் நியமனம் January 13, 2016 இந்த வருடத்துக்கான ஐ.பி.எல். தொடரில் புதிதாக இணைக்கப்பட்ட புனே அணியின் பயிற்சியாளராக பிளெமிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் 2008ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடர் தொடங்கியது. அப்போது பிளெமிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். அதன்பின் தொடரில் இருந்து விலகி அந்த அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். டோனியுடன் இணைந்து அந்த அணியில் 8 வருடங்கள் செயலாற்றினார். ஆனால் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கூட்டணி உடையும் நிலை இருந்தது. ஆனால், புதிதாக உருவாக்கப்பட்ட…
-
- 0 replies
- 385 views
-
-
கிமிக்கோ ரஹீமுக்கு 4 ஆவது தங்கப்பதக்கம்: ஜீவனுக்கு 2 ஆவது தங்கம்; 800 மீற்றர் ஓட்டத்தில் நிமாலிக்கு தங்கம், கயன்திகாவுக்கு வெள்ளி (குவாஹாட்டியிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்) 12 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை நீச்சல் வீராங்கனை கிமிக்கோ ரஹீம் 4 ஆவது தங்கப் பதக்கத்தை வென்றார். மெய்வல்லுநர் போட்டிகளிலும் இலங்கை அணி தனது தங்கவேட்டையை ஆரம்பித்தது. மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கையின் நிமாலி தங்கப் பதக்கத்தையும் கயன்திகா வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர். இந்தியாவின் அசாம் மாநிலத்தின் குவாஹாட்டி மற்றும் மேகாலய…
-
- 0 replies
- 328 views
-
-
வெற்றிப் பயணத்தை தொடரும் லிவர்பூல் By Mohamed Shibly - வெஸ்ட் ஹாம் யுனைடட் அணிக்கு எதிரான போட்டியில் 2-0 என வெற்றியீட்டிய லிவர்பூல் 30 ஆண்டுகளில் தனது முதல் ப்ரீமியர் லீக் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை மேலும் அதிகரித்துக் கொண்டது. அந்த அணி ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டியை விடவும் 19 புள்ளிகள் இடைவெளியுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. லிவர்பூல் அணி கழக உலகக் கிண்ணத்தை வெல்லும் பரபரப்பில் இருந்ததன் காரணமாக கடந்த டிசம்பர் மாதத்தில் ஒத்திவைக்கப்பட்ட போட்டியாக இலங்கை நேரப்படி இன்று அ…
-
- 0 replies
- 554 views
-
-
10 முறைக்கு மேல் ஆட்டநாயகன் விருது பெற்ற ஒரே வீரர் அப்ரிடி வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கிண்ண டி20 லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்55 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக ஷாகித் அப்ரிடி தெரிவானார், சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அவர் ஆட்டநாயகன் விருது பெறுவது இது 11-வது நிகழ்வாகும். 10 முறைக்கு மேல் ஆட்டநாயகன் விருது பெற்ற ஒரே வீரர் இவர் தான். முகமது ஷாசத்(ஆப்கானிஸ்தான்), ஷேன் வாட்சன்(அவுஸ்திரேலியா) தலா 9 முறை ஆட்டநாயகன் விருது பெற்று 2-வது இடத்தில் உள்ளனர் http://www.onlineuthayan.com/sports/?p=10768&cat=2
-
- 0 replies
- 380 views
-
-
ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டேன் : டில்ஷான் இங்கிலாந்து அணிக்கெதிராக இடம்பெறவுள்ள ஒருநாள் தொடரில் விளையாடவில்லையென திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான டில்சான் காயம் காரணமாக விளையாடபோவதில்லை என தெரிவித்துள்ளார். அயர்லாந்து அணியுடனான ஒரு நாள் சர்வதேச போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன் இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின், முதலாவது போட்டி ஜூன் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/7007
-
- 0 replies
- 375 views
-
-
ஜெரோம் டெய்லர் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரோம் டெய்லர் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (11) அறிவித்துள்ளார். எனினும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளைாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டெய்லர் இதுவரையில் 130 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெய்லர் தனது 18 ஆவது வயதில் இலங்கை அணிக்கெதிராக தனது முதலாவது போட்டியில் 2003 ஆம் ஆண்டு அறிமுகமாகினார். இவருடைய டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றின் சிறப்பான பந்துவீச்சுப் பதிவு என்றால் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக 2015 ஆம் ஆண்டு 47 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டினை கைப்பற்றியமையை கூறமுட…
-
- 0 replies
- 259 views
-
-
ஆஸி அணியில் அதிரடி மாற்றம் இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்காக அவுஸ்திரேலியாவின் டிரேவிஸ் ஹெட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இவர் இன்று அணியுடன் இணைந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 22 வயதான டிரேவிஸ் ஹெட் வலது கை சுழல் பந்துவீச்சாளர் என்பதோடு, துடுப்பாட்ட வீரராகவும் தனது சகலதுறை திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய வீரராவார். இவர் 45 முதற்தர போட்டிகளில் விளையாடி 2663 ஒட்டங்களை பெற்றுள்ளதுடன், பந்துவீச்சில் 14 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் போட்டியை 2-0 என்ற நிலையில் இழந்துள்ள அவுஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றுவதற்காக அணியில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. இதேவேளை இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய…
-
- 0 replies
- 355 views
-
-
பாகிஸ்தான் vs இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி-டக்வோர்த் லூயிஸ் முறையில் இங்கிலாந்து அணி வெற்றி. பாகிஸ்தான் vs இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி-டக்வோர்த் லூயிஸ் முறையில் இங்கிலாந்து அணி வெற்றி. இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியில் 44 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி டக்வோர்த் லூயிஸ் முறையில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் அசார் அலி முதலில் துடுப்பாடும் விருப்பை வெளியிட்டார். அதன…
-
- 0 replies
- 305 views
-
-
அமெரிக்க ஓபன்: ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் வாவ்ரிங்கா நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச்சை வீழ்த்தி சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிச்சும், சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்காவும் மோதினர். இதில் 6-7 (1), 6-4, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் ஜோகேவிச்சை வென்றார் வாவ்ரிங்கா. முதல் செட்டை இழந்தாலும் தனது சாமர்த்தியமான ஆட்டத்தினால் அடுத்தடுத்து செட்களை கைப்பற்றினார் வாவ்ரிங்க. இது அவர் …
-
- 0 replies
- 479 views
-
-
இலங்கை - சிம்பாப்வே - மே.தீவுகள்: பொலார்ட், ராம்டின் நீக்கம் இலங்கை, சிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 3 அணிகள் பங்குகொள்ளவுள்ள முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொருக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாமிலிருந்து, சிரேஷ்ட வீரர்களான கெரான் பொலார்ட், டினேஷ் ராம்டின் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இது குறித்த அறிவிப்பை, மேற்கிந்தியத் தீவுகளின் தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்கும் கோர்ட்னி ப்ரௌண், மின்னஞ்சல் மூலமாக விடுத்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் குழாம், இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையிலேயே, மின்னஞ்சல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானுக்கெதிராக அண்மையில் இடம்பெற்ற மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில், இவர்களி…
-
- 0 replies
- 191 views
-
-
முதல் டி20 கிரிக்கெட்: வங்காள தேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து கேன் வில்லியம்சின் அபார ஆட்டத்தால் முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் வங்காள தேசத்தை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து. வங்காள தேசம் அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. ஏற்கனவே முடிவடைந்த இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை நியூசிலாந்து 3-0 எனக் கைப்பற்றியது. இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. நேப்பியரில் நடைபெற்ற முதல் போட்டியில் வங்காள தேசம் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர…
-
- 0 replies
- 233 views
-
-
தினேஸ் சந்திமலுக்கு சில நாட்கள் ஓய்வு தேவை ; தரங்க தினேஸ் சந்திமல் மீண்டும் தனது சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்துவதற்கு சில தினங்கள் அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது என இலங்கை அணியின் தற்போதைய தலைவர் உபுல் தரங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தினேஸ் சந்திமல் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் என்பது அனவரும் அறிந்த விடயம். அவருக்கு நேற்று இடம்பெற்ற நான்காவது போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டமையானது மிகவும் கடினமான தீர்மானமாகும். ஏனெனில் அணியில் இடம்பிடித்துள்ள அனுபவம் வாய்ந்த வீரர் அவர் மட்டும்தான். எனினும் அவரது துடுப்பாட்டம் கடந்த சில போட்டிகளில் சிறப்பானதாக அமையவில்லை. இதனால் அவருக்கு சில நாட்களுக்கு ஓய்வளிப்பது சிறந்த விடயம்.…
-
- 0 replies
- 320 views
-
-
1 பந்தில் 6 ஓட்டம் அடித்த பொல்லார்டு : அந்தரத்தில் பறந்து கேட்ச் பிடித்து அசத்திய சங்ககாரா! பிஎஸ்எல் பிரீமியர் லீக் போட்டியில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் கிரன் பொல்லார்டு சிக்ஸர் அடித்து கராச்சி கிங்ஸ் அணிக்கு திரில் வெற்றிக்கு வழிவகுத்தார். பிஎஸ்எல் பிரிமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 18 வது ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் அணியும், லாகூர் குவலாண்டர்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய லாகூர் குவலாண்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 வது ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் எடுத்து அசத்தியது. லாகூர் குவலாண்டர்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக பிராண்டன் மெக்குல்லம் 31 ஓட்டங்களும், மொகமத்ரிஷ்வான் 32 ஓட்டங்களும் எடுத்தனர். கராச்சி கிங்ஸ் அணி …
-
- 1 reply
- 512 views
-
-
12 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த திமுத்! பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சை துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்றுமுன்னர் வரை விக்கெட் இழப்பின்றி 188 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது. இதன்போது, இலங்கை அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வரும் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தனது 12 ஆவது டெஸ்ட் சதத்தினை பதிவு செய்தார். அதன்படி, திமுத் கருணாரத்ன 106 ஓட்டங்களுடன் லஹிரு திரிமான்ன 80 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடி வருகின்றனர். 12 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த திமுத்! (adaderana.lk)
-
- 0 replies
- 797 views
-