Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இந்தியாவுக்கெதிரான 4-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றியீட்டியுள்ளது January 31, 2019 இந்தியாவுக்கெதிரான 4-வது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கின்றது. இதில் இதுவரை நடந்துள்ள 3 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றிய நிலையில், 4-வது ஒரு நாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. நூணயச்சுழறிசியில் வென்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பினை தெரிவு செய்த லையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 30.5 ஓவர்களில் 92 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்…

  2. தென்னாபிரிக்காவுக்கெதிரான 4வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி January 28, 2019 தென்னாபிரிக்காவுக்கெதிரான 4வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றியீட்டியுள்ளது. ஜோகனஸ்பர்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 41 ஓவரில் 164 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது இதனையடுத்து, 165 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 31.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடர் 2 – 2 என சமனிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது …

  3. அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – நடாலை வென்று ஜோகோவிச் சம்பியனானார். January 27, 2019 மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ரபேல் நடாலை வென்று ஜோகோவிச் சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார். செர்பியாவின் முதல்தர வீரரான நோவக் ஜோகோவிச்சும், ஸ்பெயின் வீரரான 2ம் நிலை வீரருமான ரபேல் நடாலும் இறுதிப் போட்டியில் போட்டியிட்ட நிலையில் ஜோகோவிச் 6-3, 6-2, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார். அஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் ஏழாவது முறையாக கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கத…

  4. இங்கிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 381 ஓட்ட வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி : January 27, 2019 பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற இங்கிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 381 ஓட்ட வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றியீட்டியுள்ளது. நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதல் துடுப்பாட்டத்தினை மேற்கொண்ட மேற்கிந்திய தீவுகளுகள் அணி முதல் இன்னிங்சில் 289 ஓட்டங்களை எடுத்த அதே வேளை இங்கிலாந்து 77 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது. இதனையடுத்து 212 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் 6 விக்கெட் இழப்பிற்கு 415 ஓட்டங்கை பெற்ற நிலையில் விளையாட்டினை நி…

  5. அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – நவோமி ஒசாகா சம்பியனானார் January 26, 2019 மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் செக் குடியரசின் பெட்ரா கிவிடோவாவை வீழ்த்தி ஜப்பானின் நவோமி ஒசாகாவை சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார். நவோமி 7-6 (2) , 5-7 , 6-4 என்ற செட் கணக்கில் பெற்று அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டம் வென்ற முதல் ஜப்பானிய வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/2019/111310/

  6. அவுஸ்திரேலியாவுதிரான முதலாவது டெஸ்ட் போட்டி – இலங்கை இன்னிங்ஸ் தோல்வி : January 26, 2019 அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வியடைந்துள்ளது. கடந்த 24ம் திகதி இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டி பகலிரவு போட்டியாக பிரிஸ்பேன் மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 144 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிஸ்சில் 323 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்ததிருந்த நிலையில் அவுஸ்திரேலிய அணி 179 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ள நிலையில் இரண்டாவது இ…

  7. 3வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை வென்ற தென்னாபிரிக்கா தொடரில் 2-1 என முன்னிலை January 26, 2019 பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 13 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்த இந்நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்றையதினம் செஞ்சூரியனில் நடைபெற்றது. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த நிலையில் நிர்ணயிக்…

  8. அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்! ஆண்டின் முதலாவது கிரண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 107 ஆண்டுகள் பழமையான கிரண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட இத்தொடரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு, இரட்டையர் பிரிவு, பெண்கள் ஒற்றையர் பிரிவு, இரட்டையர் பிரிவு என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. சரி தற்போது இத்தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு, அரையிறுதிப் போட்டியின் முடிவினை பார்க்கலாம்… ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு, அரையிறுதிப் போட்டியில். செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச், பிரான்ஸின் லூகாஸ் பியூலியை எதிர்கொண்டார். இரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்புக்க…

  9. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி: வலுவான நிலையில் அவுஸ்ரேலியா இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்சில் அவுஸ்ரேலிய அணி 179 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுள்ளது. இலங்கை – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமல் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். அதன்படி நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ஓட்டங்களுக்குள் சுருண்டது. தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி, முதல் நாள் ஆட்ட நிறைவில் 2 விக்கெட…

  10. ஹர்திக் பாண்டியா – கேஎல் ராகுல் மீதான தடை நீக்கம்: January 25, 2019 இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது. குறித்த இருவரும் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது பெண்களுக்கு எதிரான கருத்துக்களை கூறியதாக தெரிவிக்கப்பட்டிருந்ததனையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அவர்கள் மீது தடை விதித்திருந்தது. இதனையடுத்து அவர்கள் அவுஸ்திரேலியாவில் இருந்து உடனடியாக இந்தியா திரும்பியிருந்ததுடன் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இருவர் மீதான விசாரணை நிலுவையில் உள்ளதா…

  11. பிளிஸ்கோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நவோமி அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று(வியாழக்கிழமை) பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் பெட்ரா கிவிட்டோவா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 2-வது அரையிறுதி ஆட்டத்தில் 4-ம் நிலை வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்)- 7-ம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) மோதினர். முதல் செட்டை ஒசாகா 6-2 என எளிதில் கைப்பற்றினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2-வது செட்டை பிளிஸ்கோவா 6-4 என அதிரடியாக கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் ஒசாகா கை ஓங்கியது. அவர் 3-வது செட்டை 6-4 எனக்…

  12. அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ்: நடால் இறுதிப் போட்டிக்கு தகுதி! அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான முதல் அரையிறுதி போட்டி இன்று(வியாழக்கிழமை) நடைபெற்றது. இதில் 2-ம் நிலை வீரரான ரபேல் நடால், பெடரரை தோற்கடித்த இளம் வீரரான கிரீஸின் சிட்ஸிபஸ்-ஐ எதிர்கொண்டார். நடாலின் அதிரடிக்கு சிட்ஸிபஸ்ஸால் ஈடுகொடுக்க முடியவில்லை. முதல் செட்டை 6-2 எனவும், 2-வது செட்டை 6-4 எனவும், 3-வது செட்டை 6-0 எனவும் கைப்பற்றி 3-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் பேட்டிக்கு முன்னேறினார் நடால். நடால் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் அல்லது பவுலி ஆகியோரில் ஒருவரை எதிர்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavann…

  13. இலங்கை – அவுஸ்ரேலிய டெஸ்ட்: முதல் நாள் ஆட்டம் நிறைவு சுற்றுலா இலங்கை – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் பிரிஸ்பேன் – கெப்பா மைதானத்தில் ஆரம்பமாகியுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. இலங்கை – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர் பிரிஸ்பேனில் இன்று ஆரம்பமாகியது. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமல் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமன்னே 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அணித்தலைவர் சந்திமல் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததுடன், திமுத் கருணரத்ன 24 ஓட்டங்களிலும், குசல் …

  14. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: விண்டீஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 264 ஓட்டங்கள் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவில் விண்டீஸ் அணி, எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ஓட்டங்களை பெற்றுள்ளது. விண்டீஸ் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, பிரிட்ஜ்டவுனில் நேற்று ஆரம்பமாகியது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று விண்டீஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. போட்டியின் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய பிராத்வைட் மற்றும் அறிமுக வீரர் கேம்ப்பெல் ஆகியோர் முறையே 40, 44 என்ற ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ஷாய் ஹோப் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அதேபோல் ரோஸ்டன் சேஸ் 54 ஓட்டங்களையும், ஹ…

  15. இறுதிப் போட்டியில் கால்பதித்தார் கிவிட்டோவா 2019 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில், பெட்ரோ கிவிட்டோவா டேனிலி ரோஷ் கோலின்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார். இன்று காலை நடந்த பெண்ளுக்கான அரையிறுதி ஆட்டமான இப் போட்டியில் செக்குடியரசுவை சேர்ந்த 8 ஆம் நிலை வீராங்கனை பெட்ரா கிவிட்டோவா அமெரிக்க வீராங்கனையான டேனிலி ரோஸ் கோலின்ஸ் எதிர்த்தாடினார். இதில் கிவிட்டோவா 7-6 (7-2), 6-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். 2 முறை விம்பிள்டன் பட்டத்தை வென்ற அவர் முதல் முறையாக அவுஸ்திரேலிய பகிரங்கத் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். அவர் இறுதிப் போட்டியில் பிளி…

  16. நியுசிலாந்தை வீழ்த்தி இலகுவாக வெற்றியினை சுவைத்தது இந்தியா! நியுசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணி 8 விக்கட்டுக்களினால் அபார வெற்றி ஒன்றினை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியுசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய நியுசிலாந்து அணி இந்திய அணியின் அபார பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 157 ஓட்டங்களுக்குள் சுருண்டது. பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் முகமது ஷமி 3 விக்கட்டுக்களையும், குல்தீப் யாதவ் 4 விக்கட்டுக்களையும், சஹால் 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர். துடுப்பாட்டத்தில் நியுசிலாந்து அணி சார்பில் அணி…

  17. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி: தொடரை சமப்படுத்தியது தென்னாபிரிக்கா தென்னாபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்க அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் எஞ்சியிருக்கும் நிலையில் தொடரை 1-1 என சமப்படுத்தியுள்ளது. முதலாவது போட்டியில் தோல்வியடைந்த தென்னாபிரிக்க அணி நேற்றைய (செவ்வாய்க்கிழமை) போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை பாகிஸ்தான் அணிக்கு வழங்கியிருந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, தென்னாபிரிக்க பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முட…

  18. பிளிஸ்கோவாவிடம் தோற்று வெளியேறினார் செரீனா Editorial / 2019 ஜனவரி 23 புதன்கிழமை, பி.ப. 11:24 Comments - 0 அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் 10ஆவது நாளான இன்று, 23 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டம் வென்ற செரீனா வில்லியம்ஸ் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார். உலகின் எட்டாம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவை எதிர்கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், முதலாவது செட்டை 4-6 என இழந்திருந்தார். எனினும், சுதாகரித்துக் கொண்ட 37 வயதான செரீனா வில்லியம்ஸ் இரண்டாவது செட்டை 6-4 எனக் கைப்பற்றியதுடன், தீர்மானமிக்க மூன்றாவது செட்டில் 5-1 என முன்னிலையிலிருந்து அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எவ்வாறாயினும், அபாரமான மீ…

  19. இலங்கை கிரிக்கெட் மோசடி குறித்து புதிய தகவல்கள் January 23, 2019 இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி குறித்து புதிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான பிரிவின் பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷல் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பாக முறையிடுவதற்கு இம்மாதம் 16ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை மன்னிப்புக் காலத்தை சர்வதேச கிரிக்கெட் சபை வழங்கியிருந்த நிலையிலேயே இவ்வாறு தகவல் வெளியாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். குறித்த 15 நாள் மன்னிப்புக் காலத்தின் முதல் வாரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையானோர் தகவல்வழங்க முன்வந்துள்ளமை தொடர்பில் தான் ஊக்கமடை…

  20. அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் – அரையிறுதிக்குள் நுழைந்தனர் நடால், சிட்சிபாஸ் ஆண்டின் முதலாவது கிராட்ஸ்லாம் தொடரான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப்போட்டிகளினுள் கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் மற்றும் ஸ்பெயினின் ரபேல் நடால் ஆகியோர் நுழைந்துள்ளனர். இதேவேளை, மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் டானியல் கொலின்ஸ் மற்றும் சென் குடியரசின் கிவிட்டோவா ஆகியோர் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளனர். அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் கடந்த 7 ஆம் திகதி முதல் அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் இன்று இடம்பெற்ற காலிறுதிப்போட்டியொன்றில், ரபேல் நடால் அமெரிக்க இளம் வீரர் பிரான்செஸ் ரைபோவை எதிர்கொண்டார். மிகவும…

  21. தென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 204 ஓட்டங்கள்! தென்னாபிரிக்க – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்க அணிக்கு 204 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 45.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில் ஹஷன் அலி 59 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார். இன்னும் சற்றுநேரத்தில் தென்னாபிரிக்க அணி 204 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடவுள்ளது.…

  22. ஐ.சி.சி.யின் முக்கிய விருதுகள் மூன்றை கைப்பற்றினார் விராட் கடந்த 2018 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் மிக முக்கிய மூன்று விருதுகளை பெற்று இந்திய அணியின் தலைவர் விராட் கோலி வரலாற்று சாதனை படைத்துள்ளார். அதன்படி கடந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக தெரிவு செய்யப்பட்டு, சேபர்ஸ் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளதுடன், சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் தலைவராக செயற்பட்டு ஒரேயாண்டில் மூன்று விருதுகளை கைப்பற்றிய முதல் வீரர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 30 வயதாகும் விராட் கோலி கடந்த 2018 ஆம் ஆண்டு 14 சர்வதேச ஒருநாள் இன்னிங்ஸுக்களில் களமிறங்கி 1202 ஓட்டங்களை …

  23. நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய செரீனா 2019 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் சிமோன ஹாலெப்பை வீழ்த்திய செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்று வரும் இப் போட்டியில், பெண்களுக்கான காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் 16 ஆம் நிலை வீராங்கனையான செரீனா உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலெப்பை எதிர்கொண்டார். இப்போட்டியில் செரீனா முதல் செட்டை 1-6 என்ற இழந்தாலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டை 6-4 என கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார். http://www.virakesari.lk/article/48454

  24. அவுஸ்ரேலிய ஓபன் – ஒசாகா, சுவிட்டோலினா காலிறுதிக்கு தகுதி பெற்றனர்! கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன்படி, இன்று காலை இடம்பெற்ற 4 வது சுற்று டென்னிஸ் போட்டியொன்றில் நான்காம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நயோமி ஒசாகா, லாட்வியா வீராங்கனை சுலெஸ்டானா ஆகியோர் விளையாடினர். இதில் ஒசாகா 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் 13-வது இடத்தில் இருக்கும் சுவஸ்டோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கிரான்ஸ்லாம் பட்டத்தை வென்ற அவர் முதல் முறையாக அவுஸ்ரேலிய ஓபனில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். கடந்த முறை 4-வது சுற்று வரை முன்னேறியமையே அவரது சிறந்த …

  25. அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச் – சிமோனா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம் January 20, 2019 அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச், ருமேனியாவின் சிமோனா ஹாலப் ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இந்த ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகின்ற நிலையில் 6-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் கனடாவின் டெனிஸ் ஷபலோவை எதிர்த்து விளையாடிய முதல் நிலை வீரரான ஜோகோவிச் 6-3, 6-4, 4-6, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றில் நுழைந்துள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப், அமெரிக்காவின் வீனஸ்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.