விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
நடத்தையில் உதாரணமாகத் திகழ்பவர் தோனி: ஆகாஷ் சோப்ரா புகழாரம் இன்றைய கிரிக்கெட் களத்தில் வீரர்களிடையே மோதல்கள் ஏற்பட்டு வரும் சூழலில் ஒழுக்கம் மற்றும் நடத்தையில் உதாரணமாகத் திகழ்பவர் தோனி என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா புகழாரம் சூட்டியுள்ளார். நியூஸ்24 கிரிக்கெட் சந்திப்பில் சோப்ரா இவ்வாறு கூறியுள்ளார். “களத்தில் தோனி அமைதியாக இருக்கிறார். ஆட்டம் மட்டுமே பேச வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். கிரிக்கெட் ஆடுகளத்தில் அவரது நடத்தை பெரிய பாராட்டுக்குரியது. இன்றைய கிரிக்கெட் ஆடுகளம் வீரர்களிடையே வாக்குவாதங்களும், சண்டை சச்சரவுகளும் நிரம்பியுள்ளது. இதில் ஒரு வார்த்தையைக் கூட பிரயோகிக்காது களத்தில் செயல்படுகிறார் தோனி. ஒழுக்கமான கிரிக்கெட் வீரர் எ…
-
- 0 replies
- 663 views
-
-
இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் உறவு இருக்காது – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் By RAJEEBAN 12 DEC, 2022 | 12:36 PM இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கிரிக்கெட் உறவு குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார். வரும் 2023ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. இதையடுத்து, இந்த ஆசிய கோப்பை தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அண்மையில் அறிவித்திருந்தார். மேலும் ஆசிய கோப்பை தொடர், நடுநிலையான ஒரு இடத்தில் நடைபெறும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி…
-
- 0 replies
- 663 views
- 1 follower
-
-
சிஎஸ்கே-வை எப்படி மறக்க முடியும்? - தோனி உணர்ச்சிகரம் ஆர்.பி. சஞ்சய் கோயெங்கா குழும தலைவர் சஞ்ஜீவ் கோயெங்கா, ரைசிங் புனே ஜெயண்ட் கேப்டன் தோனி. புதிய சீருடை அறிமுக விழாவில். | படம்: சந்தீப் சக்சேனா. எப்போதும் அமைதியாகவும், நிதானமாகவும் பேசும் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பற்றிய கேள்வி எழுப்பப்பட்டவுடன் சற்றே உணர்ச்சிவயப்பட்டார். புதுடெல்லியில் புதிதாக தலைமை தாங்கவுள்ள ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஐபிஎல் சீருடை அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற தோனி அங்கு சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றி கேட்டவுடன் சற்றே உணர்ச்சிவசப்பட்டார். “நான் (சென்னை சூப்பர் கிங்ஸிலிருந்து) நகர்ந்து சென்று விட்டேன் என்று நான் கூறினால் அது பொய்யாகவே இரு…
-
- 1 reply
- 663 views
-
-
மூன்று போட்டிகளையும் இழந்து 'வைட் வொஷ்' ஆனது இலங்கை இலங்கைக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 42 ஓட்டங்களினால் வெற்றி பெற்று இலங்கை அணியை 'வைட் வொஷ்' செய்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி இலங்கை அணியுடன் ஒருநாள், இருபதுக்கு 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்தது. இதில் மூன்று தொடர்களையும் ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 23 ஆம் திகதி கொழும்பு, எஸ்.எஸ்.சீ. மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதன்டி முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 7 விக்கெட்டுக்களை இழந்து முதல் இன்…
-
- 0 replies
- 663 views
-
-
பிசிசிஐ தடையையும் மீறி சிட்னியில் கோஹ்லியுடன் சுற்றும் நடிகை அனுஷ்கா சிட்னி: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தனது காதலியான பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுடன் சிட்னியில் உள்ள டார்லிங் ஹார்பருக்கு சென்று வந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஆஸ்திரேலியா சென்ற பிறகு தான் டோணி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கோஹ்லி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணிக்கு கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சில விதிமுறைகளை விதித்துள்ளது. காதலிகளுக்கு தடை கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் ஆஸ்திரேலியா செல்ல இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்…
-
- 1 reply
- 663 views
-
-
பிரேசில்– நெதர்லாந்து நாளை மோதல் 3–வது இடம் யாருக்கு? பிரேசிலியா, ஜூலை. 11– உலக கோப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. நாளை மறுநாள் (13–ந்தேதி) நடக்கும் இறுதிப்போட்டியில் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த ஜெர்மனியும் – தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அர்ஜென்டினாவும் மோதுகின்றன. முதல் அரை இறுதி போட்டியில் ஜெர்மனி அணி 7–1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை தோற்கடித்தது. 2–வது அரை இறுதியில் அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட்டில் 4–2 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அரை இறுதியில் தோற்ற பிரேசில், நெதர்லாந்து அணிகள் 3–வது இடத்துக்கான போட்டியில் நாளை மோதுகின்றன. இந்த ஆட்டம் நாளை நள்ளிரவு 1.30 மணிக்கு நடக்கிறது. போட்டியை நடத்…
-
- 7 replies
- 663 views
-
-
தென்னாபிரிக்க, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், பார்ளில் நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் ஹென்றிச் கிளாசெனின் சதத்தால் தென்னாபிரிக்கா வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா தென்னாபிரிக்கா: 291/7 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஆ.இ 123 (114), டேவிட் மில்லர் 64 (70), கைல் வெரைன் 48 (64) ஓட்டங்கள். பந்துவீச்சு: பற் கமின்ஸ் 3/45 [10], மிற்செல் ஸ்டார்க் 2/59 [10], ஜொஷ் ஹேசில்வூட் 1/63 [10]) அவுஸ்திரேலியா: 217/10 (45.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஸ்டீவ் ஸ்மித் 76 (94), மர்னுஸ் லபுஷைன் 41 (51) ஓட்டங்கள். பந்துவீச்சு: லுங்கி என்கிடி 3/30 [8], தப்ரையாஸ் ஷம்சி 2/45 [10], அன்றிச் நொர்ட்ஜே 2/39 [7.1],…
-
- 0 replies
- 663 views
-
-
2012ம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் வீரர்களே கிரிக்கெட் உலகில் சத்தம் போடாமல் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். ஒரு நாள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இலங்கையைச் சேர்ந்தவர்களே பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் முன்னணியில் இருந்தனர். அதேபோல டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சில் இலங்கை வீரரே முன்னணியில் இருந்தார். இந்திய வீரர்கள் எந்த ஒருகிரிக்கெட்டிலும் உலக அரங்கில் இந்த ஆண்டு பிரகாசிக்கவில்லை. முற்றிலும் இருண்டு போன ஆண்டாக இந்த ஆண்டு இந்தியாவுக்கு அமைந்து போனது. டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சு, பேட்டிங் என இரண்டிலுமே முதல் பத்து வீரர்களில் ஒருவர் கூட இந்தியர் இல்லை என்பது ரசிகர்களுக்குப் பெரும் சோகமான செய்தியாகும். ஒரு நாள் பந்து வீச்சில் மலிங்கா கலக்கல் 1/9 Light on ஒரு நாள் பந்து வீச்சில்…
-
- 0 replies
- 663 views
-
-
சர்வதேச ஊடகங்களின் விமர்சனத்தால் இதயத்தில் ரத்தம் கசிகிறது; அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் அழிவை ஏற்படுத்தியதால் இந்தியா கடும் நெருக்கடியில் உள்ளது. இதன் விளைவாக, நாடு சராசரியாக ஒரு நாளைக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா தொற்றுகளைப் பதிவு செய்து வருகிறது. அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து தினசரி சுமார் 4,000 எனும் அளவில் உள்ளது. இது தான் சமயம் எனக் காத்திருந்ததைப் போல், பல சர்வதேச ஊடகங்களும், இந்தியாவின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில், மிக மோசமாக செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது இந்தியா கடந்து வரும் சோதனை நேரங்களில் இவ்வாறு மோசமாக சித்தரிக்கும்…
-
- 0 replies
- 662 views
-
-
ஆயிரம் நாள்களுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் தோனி! - எப்படி இருந்தது அந்த அனுபவம்? #VikatanExclusive மே 10 2015 - சுண்டி விடப்பட்ட டாஸ் காயின் எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தின் வெடிப்புகள் விரிந்த பிட்ச்சில் சத்தமே இல்லாமல் விழுகிறது. வெற்றி தோனிக்கு! அதற்கே ஆர்ப்பரிக்கிறது, மஞ்சளை தங்கள் மதமாக ஏற்றுக்கொண்ட அந்த பெருங்கூட்டம்! பேட்டிங்கை தேர்ந்தெடுக்கிறார் தோனி. 'Live It Abhi' என்ற கவுன்ட் டவுனோடு தொடங்குகிறது அந்தப் போட்டி. 'இந்தப் பொழுதை கொண்டாடித் தீருங்கள்' என்ற அந்த வார்த்தைகளின் மதிப்பை அந்தப் பொழுதில் மஞ்சள் ஜெர்ஸியை நேசிக்கும் எந்த ரசிகனும் உணர்ந்திருக்கமாட்டான். ஏனெனில் அதுதான் கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னையில் ஆடிய மேட்ச். இர…
-
- 0 replies
- 662 views
-
-
உலகின் சிறந்த வீரர்களில் நானும் ஒருவர் 10-வது நிலையில் (பொசிஷன்) ஆடக்கூடிய உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் நானும் ஒருவர் என ஆர்செனல் கால்பந்து அணியின் ஸ்டிரைக்கர் மெசூத் ஒஸில் (Mesut Özil) தெரிவித்துள்ளார். ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்த மெசூத், கடந்த ஆண்டு ஆர்செனல் அணிக்கு தாவினார். ஆனால் கடந்த சீசனில் அவ்வப்போது மட்டுமே களமிறக்கப்பட்ட அவர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் அவர் விமர்சனத்துக்குள்ளானார். அதற்குப் பதிலளித்துள்ள மெசூத் மேலும் கூறியதாவது: வலது புறத்தில் விளையாடக்கூடிய என்னை இடதுபுறத்தில் விளையாட வைப்பதால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. நான் கோலடிப்பதோடு மட்டுமின்றி, கோல் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொட…
-
- 1 reply
- 662 views
-
-
உலக கிண்ண கால்பந்து தகுதிசுற்று 32 அணிகள் பங்கேற்கும் உலக கிண்ண கால்பந்து போட்டி 2018-ம் ஆண்டு ரஷ்யாவில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. ஐரோப்பிய கண்டத்தில் இருந்து 13 அணிகள் உலக கிண்ணத்துக்கு தகுதி பெறும். இதற்கான தகுதி சுற்றுகள் தொடங்கி விட்டன. ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்றில் 54 அணிகள் 9 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய சாம்பியனான போர்ச்சுகல் அணி நேற்று முன்தினம் தனது முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்துடன் பாசல் நகரில் மோதியது. விறுவிறுப்பான இந்த மோதலில் சுவிட்சர்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலுக்கு அதிர்ச…
-
- 2 replies
- 662 views
-
-
2-வது ஒருநாள்: மோர்டசா ஆல்ரவுண்ட் ஆட்டம்; வங்கதேசத்திடம் இங்கிலாந்தும் தோல்வி வெற்றிக்களிப்பில் வங்கதேசம். | படம்: ஏ.பி. மிர்பூரில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்று சமன் செய்தது வங்கதேசம். முதலில் பேட் செய்த வங்கதேசம் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 238 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 204 ரன்களுக்குச் சுருண்டு தோல்வி தழுவியது. ஜோஸ் பட்லர் 57 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து எல்.பி. ஆகிச் செல்லும் போது வங்கதேச வீரர் ஒருவர் ஸ்லெட்ஜ் செய்ய பதற்றம் அதிகரித்தது. இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணி முதல் 10 ஒவர்களுக்குள்ளேயே 26/4 என்…
-
- 2 replies
- 662 views
-
-
யாழில்.புறா பந்தயத்தில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசளிப்பு உலகின் மிகப் பழமையான விளையாட்டுக்களில் ஒன்றான புறாக்கள் இடையிலான பந்தயம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. பபுகயா (பந்தயப் புறாக்கள் கழகம் – யாழ்ப்பாணம் ரேஸிங் பீஜின்ஸ் கிளப் ஜெவ்னா) வின் ஏற்பாட்டில் குறித்த பந்தய போட்டி நடைபெற்றது. முதல் முறையாக 125 கிலோ மீற்றர் தூரத்துக்கான பந்தயம் மார்ச் முதல் வாரத்தில் இடம்பெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். நகரில் உள்ள விடுதியில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தின் பிரபல மருத்துவ நிபுணரும் நீண்ட காலமாகப் புறா ஆர்வலராக இருந…
-
- 0 replies
- 662 views
-
-
இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவது சந்தேகமே: விரக்தியில் யுவராஜ் சிங் இந்திய அணியில் இனி தான் தேர்வு செய்யப்படாமலே போகக்கூடிய வாய்ப்பிருப்பதாக விரக்தியடைந்துள்ள யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் 2013-ஆம் ஆண்டில் யுவராஜ் சிங் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடினார். இந்திய அணியில் தனது வாய்ப்புகள் பற்றி அவர் கூறும்போது, “இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவதே எனது இலக்கு. அணியில் தேர்வு செய்யப்படாத போது ஏமாற்றம் ஏற்படுவது இயற்கை. ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் எனது ஆட்டமும் சீராக இல்லை. ஏற்ற இறக்கங்களுடனேயே காணப்பட்டது. மாற்றங்கள் வரலாம். நான் மீண்டும் அணியில் இடம்பெறலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இல்லையெனில் வாழ்க்கை வெறுப்பின் உச்சத்திற்குச் செல்லும். என்னால் …
-
- 0 replies
- 662 views
-
-
நியூஸி. வெற்றி!ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியது! சனி, 23 பிப்ரவரி 2008( 14:44 IST ) கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற 5வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணியை நியூசீலாந்து அணி வெற்றி பெற்று ஒரு நாள் தொடரை 3- 1 என்று கைப்பற்றியது. பூவா தலையா வென்ற நியூஸிலாந்து முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. பந்துகள் மெதுவாக பேட்டிற்கு வரும் ஆட்டக் களத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் திணறினர். பின் கள வீரர்களான லூக் ரைட் மற்றும் மஸ்கேரந்காஸ் கடைசியில் அடித்து ஆடியதால் மரியாதைக்குறிய 242 ரன்கள் என்ற ரன் எண்ணிக்கையை இங்கிலாந்து எட்டியது. நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் மில்ஸ் அபாரமாக வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இங்கிலாந்…
-
- 0 replies
- 662 views
-
-
-
- 0 replies
- 661 views
-
-
ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்கு நியூஸிலாந்து வீரர்களுக்கு அனுமதி! by : Anojkiyan இந்தியாவில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடுவதற்கு வீரர்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க தயாராக உள்ளோம் என நியூசிலாந்து கிரிக்கெட் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. கிரிக்கெட் சபையின் செய்தி தொடர்பாளர் ரிச்சார்ட் ப்ரூக் இதுகுறித்து கூறுகையில் ”ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களுக்கு நாங்கள் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும். அவர்கள்தான் இதுகுறித்து முடிவு செய்ய வேண்டும். தடையில்லாத சான்றிதழ் ஒவ்வொரு நடைமுறையையும் கருத்தில் கொண்டுதன் வழங்க ஆலோசிக்கப்படும். ஆனால், வீரர்கள் மறுப்பது அபூர்வம். எனி…
-
- 0 replies
- 661 views
-
-
இங்கிலீஸ் பிரீமியர் லீக் : சிங்கங்களை சிதைக்கும் சிறுவண்டு! அடுத்த ஆண்டு நடக்கும் டி20 உலகக் கோப்பையை கென்யா வென்றாலோ இல்லை ரியோ ஒலிம்பிக்கில் அமெரிக்கா, சீனாவை விட இலங்கை அதிக தங்கப் பதக்கங்கள் வென்றாலோ நமக்கு எப்படி இருக்கும்? அப்படி ஒரு ஆச்சரியம், அதிர்ச்சி, வியப்பு அனைத்தும் கலந்த மனநிலையில்தான் இருக்கிறார்கள் பிரீமியர் லீக் கால்பந்து ரசிகர்கள். அப்பொடியொரு அதிசயத்தை நிகழ்த்தி காட்டியிருக்கிறது கத்துக்குட்டியான லெய்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி. 20 அணிகள் மோதும் பிரீமியர் லீக் தொடரில் கடைசி 3 இடங்கள் பிடிக்கும் அணிகள் வெளியேற்றப்பட்டு, சாம்பியன்ஷிப் தொடரில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ஒவ்வொரு சீசனிலும் பிரீமியர் லீக்கில் இடம் பி…
-
- 0 replies
- 661 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சந்திரசேகர் லூத்ரா பதவி, மூத்த விளையாட்டு பத்திரிகையாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் ரோகித் சர்மாவின் தலைமையில் ஆடிய இந்திய அணியின் ஒருநாள் உலகக் கோப்பை கனவு தகர்ந்தது. ஆஸ்திரேலியாவிடம் தோற்றபிறகு, இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை விசாகப்பட்டினத்தில் இன்று (வியாழக்கிழமை, நவம்பர் 23) நடைபெறும் போட்டியுடன் தொடங்குகிறது. உலகக் கோப்பையில் பங்கேற்ற அணியிலிருந்து சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், பிரசித் கிருஷ்ணா ஆகிய 3 வீரர்கள் மட்டுமே இந்தத் தொடரில் பங்கேற்கின்றனர். ஹர்திக் பாண்டியா இல்லாததால், அணியின் தலைமை பொறுப்பு சூர்ய குமா…
-
- 6 replies
- 661 views
- 1 follower
-
-
புதிய மைல் கல்லை எட்டினார் வில்லியர்ஸ்! இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள தென்னாபிரிக்க அணிக்கு இந்த போட்டி முக்கியமானதாக அமைந்துள்ளதுடன், தென்னாபிரிக்க அணித்தலைவர் வில்லியர்ஸுக்கும் இந்த போட்டி முக்கியமானதாக அமைந்துள்ளது. ஏனெனில் தென்னாபிரிக்க அணித்தலைவரான வில்லியர்ஸ் இன்றைய போட்டியுடன் 100வது ஒருநாள் போட்டிக்கு தலைமை தாங்குகின்றார். இதனால் ரசிகர்களின் முழு எதிர்பார்ப்பும் அவர் மீது உள்ளது. 100 ஒருநாள் போட்டிகளில் அணிக்கு தலைமை தாங்கியுள்ள வில்லியர்ஸ் 60 என்ற சராசரியில் 57 போட்டிகள…
-
- 1 reply
- 661 views
-
-
அகதி முகாம் முதல் உலகின் 'நம்பர் ஒன்' பௌலர் ஆனது வரை - ரஷீத் கான் போரால் சிதிலமடைந்த நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த ஒரு 19 வயது பௌலர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முன்னணி பேட்ஸ்மேன்களை கலக்கமடையச் செய்வார் என்று சில காலம் முன்பு வரை யாரும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள். படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஆனால், அவர்தான் டி20 போட்டிகளில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் தற்போது உலகிலேயே முதல் இடத்தில் உள்ளார். அவர்தான், சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி இந்திய ரசிகர்களின் அபிமானத்தையும் சம்பாதித்த ரஷீத் கான். வெறும் 44 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வ…
-
- 0 replies
- 661 views
-
-
டி20 போட்டியில் புதிய சாதனை: 4 ஓவர்கள் வீசி ஒரு ரன் மட்டுமே கொடுத்த பாக். வீரர் அபாரம் பிரிட்ஜ்டவுனில் நடந்த கரிபியன் ப்ரிமியர்லீக் போட்டியில் பர்படாஸ் அணிக்காக பந்துவீசிய முகமது இர்பான் - படம்: ஏஎப்பி டி20 போட்டிகளில் குறைந்த ரன்கள் விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர் எனும் பெருமையை பாகிஸ்தான் வீரர் முகமது இர்பான் பெற்றார். 4 ஓவர்கள் வீசிய முகமது இர்பான் (4-3-1-2) 23 டாட் பந்துகள், 3 மெய்டன் ஓவர், ஒரு ரன் மட்டும் விட்டுக்கொடுத்து, 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முகமது இர்பான். பாகிஸ்தானில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த பாகிஸ்தான் ப்ரிமீயர் …
-
- 0 replies
- 660 views
-
-
ஓய்வு அறிவிப்பை வெளியிடப் போகிறாரா தோனி?: நடுவரிடமிருந்து பந்தை வாங்கிச் சென்றதால் ரசிகர்களிடையே பரபரப்பு! இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. அந்த அணியின் ஜோ ரூட், கேப்டன் மோர்கன் ஆகியோர் அபாரமாக ஆடி ஆட்டமிழக்காமல் முறையே 100, 88 ரன்களை எடுத்தனர். முதலில் ஆடிய இந்திய அணி 8 விக்கெட்டை இழந்து 256 ரன்களை குவித்தது. கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 71 ரன்களை குவித்தார். இங்கிலாந்தின் டேவிட் வில்லி, அடில் ரஷீத் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்நிலையில் இங்கிலாந்து அணி வ…
-
- 3 replies
- 660 views
-
-
19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பம் 08 DEC, 2023 | 11:59 AM (எம்.எம்.சில்வெஸ்டர்) ஆசிய கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடத்தப்படுகின்ற 10ஆவது 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இன்று (08) வெள்ளிக்கிழமை இலங்கை நேரப்படி முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் சந்திப்பதுடன், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை நேபாள அணி எதிர்த்தாடவுள்ளது. 8 அணிகள் பங்கேற்கின்ற இப்போட்டித் தொடரின் குழு 'ஏ'யில் நடப்புச் சம்பியனான இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 4 …
-
- 7 replies
- 660 views
- 1 follower
-