விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
-
இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியில் பாலியல் இலஞ்சம் பெறப்பட்டமை தொடர்பிலான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விளையாட்டுதுறை அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் நிர்வாகிகளுக்கு எதிராக சுமத்தப்பட்ட பாலியல் இலஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டை விசாரணை செய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. இந்த குழு மேற்கொண்ட விசாரணைகளின் போது, இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியில் நிர்வாகிகள் சிலர் பாலியல் இலஞ்சம் பெற்றுக்கொள்ளப்பட்டமை தொடர்பான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பான ஆதாரங்கள் கிடைத்துள்ளதையடுத்து அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இந்த அமைச்சு கூறியுள்ளது. http://www.tamilmirror.lk/146567#sthash.k7WMmZeX.dpuf
-
- 24 replies
- 3.3k views
-
-
எட்டாவது உலகக் கிண்ண றக்பி போட்டிகள் இன்று ஆரம்பம் சர்வதேச றக்பி சபையினால் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் உலகக் கிண்ண றக்பி போட்டிகளின் எட்டாவது அத்தியாயம் இங்கிலாந்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. 20 நாடுகள் நான்கு குழுக்களில் மோதும் உலகக் கிண்ண றக்பி போட்டிகள் இங்கிலாந்துக்கும் ஃபிஜிக்கும் இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகின்றது. லண்டன், ட்விக்கென்ஹாம் விளையாட்டரங்கில் இங்கிலாந்து நேரப்படி இன்று இரவு 8.00 மணிக்கு இப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இறுதிப் போட்டி இதே அரங்கில் ஒக்டோபர் 31ஆம் திகதி நடைபெறவுள்ளது. உலகக் கிண்ண றக்பி போட்டிகள் முதன் முதலில் அவுஸ்திரேலியாவிலும் நியூஸிலாந்திலும் 1987இல் கூட்…
-
- 24 replies
- 2.1k views
-
-
இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்த்தான் அணிக்கும் இலங்கையணிக்குமிடையிலான உலகக் கிண்ணப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. தாவீதும் கோலியாத்தும் மோதும் போட்டி என்று பலரும் வர்ணித்திருந்தாலும்கூட, இப்போட்டியிலும் சில அதிசயங்கள் நிகழலாம் என்று ஆருடம் கூறியவர்களும் இருக்கிறார்கள். அப்படி கூறப்பட்ட ஆருடங்களுக்கு ஏற்ப, நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கையணி ஆப்கானிஸ்த்தான் அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது. கடந்த இரு மாதங்களுக்கு மேலாக நியுசிலாந்தில் படாத பாடு பட்டு விளையாடி வரும் இலங்கையணிக்கு ஆப்கானிஸ்த்தானுடனான இந்தப் போட்டி மிகவும் தேவைப்பட்ட ஒன்றாகவும், தொலைந்துபோன தமது விளையாட்டுத் திறனையெல்லாம் மீண்டும் கண்டுபிடிப்பதற்கான தேடல்க்களமாகவும் நிச்சயம் இருந்திருக்…
-
- 23 replies
- 1.6k views
-
-
யாழ். வீரன் அவுஸ்திரேலியாவில் சாதனை ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2012 22:02 1 COMMENTS (கு.சுரேன்) அவுஸ்திரேலியா, மெல்பேர்ன் நகர் அல்பேர்ட் பார்க்கில் நடைபெறும் விக்டோரியா விளையாட்டுப் போட்டியில் உயரம் பாய்தல் போட்டியில் பங்குபற்றிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வீரன் இரத்தினசிங்கம் செந்தூரன் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். இந்த போட்டி, அவுஸ்திரேலிய நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது. இப்போட்டியில் 1.95 மீற்றர் உயரம் பாய்ந்து, செந்தூரன் இரண்டாமிடத்தை பெற்றார். இவர் தேசிய கனிஸ்ட பிரிவு உயரம் பாய்தலில் 1.92 மீற்றர் உயரம் பாய்ந்து சாதனை நிகழ்த்தியிருந்தார். இதன் மூலம் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் விகேடாரியா மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் பங்…
-
- 23 replies
- 1.8k views
-
-
சங்கக்காரவின் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று ஆரம்பமாகிறது 2015-08-20 09:38:22 இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கொழும்பு பி.சரவணமுத்து அரங்கில் இன்று ஆரம்பமாகவுள்ளது. 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில், காலியில் நடைபெற்ற முதல் போட்டியில் 63 ஓட்டங்களால் வெற்றியீட்டியதால் தற்போது 1:0 விகிதத்தில் இலங்கை அணி முன்னிலையில் உள்ளது. அதேவேளை, இப்போட்டியானது இலங்கையின் தலைசிறந்த கிரிக்கெட் ஜாம்பவான்களின் ஒருவரான குமார் சங்கக்காரவின் இறுதி டெஸ்ட் போட்டியாகவும் இலங்கையின் சார்பில் அவர் விளையாடும் கடைசி சர்வதேச போட்டியாகவும் அமையவுள்ளது. 2000 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவுக்கு…
-
- 23 replies
- 1k views
-
-
இந்தியாவுக்கு பயிற்சியளிக்க தயார் இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சி அளிக்க அழைப்புவந்தால் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக அவுஸ்திரேலிய அணிக்கு இரு தடவைகள் உலக சாம்பியன் பட்டத்தை பெற்றுக்கொடுத்த பயிற்சியாளர் ஜோன் புச்சானன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் ஹெட்ரிக் சாதனையுடன் சாம்பியன் பட்டம் வென்று அசைக்கமுடியாத அணியாக உருவெடுத்துள்ளது. அவுஸ்திரேலிய அணி யின் இந்த வெற்றிக்கு தலைசிறந்த வீரர்கள் அந்த அணியில் இருப்பது ஒருகாரணம் என்றாலும் அணியை சிறு சறுக்கல்கூட இல்லாமல் வழிநடத்திச் செல்வதில் பயிற்சியாளர் புச்சானனுக் கும் முக்கிய பங்குண்டு. இந்நிலையில் உலகக் கிண்ண வெற்றிக்குப்பின் பார்படோஸில் பேட்டியளித்த புச்சானன் அது குறித்து கூறுகையி…
-
- 23 replies
- 4.1k views
-
-
டெஸ்டில் அவுஸ்திரேலியாவுக்கு 16 ஆவது தொடர் வெற்றி இந்தியாவுடன?985; இரண்டாவது டெஸ்ட் போட்டியை 122 ஓட்டங்களால் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா டெஸ்ட் அரங்கில் தொடர்ச்சியாக 16 போட்டிகளை வென்று தனது சொந்த உலக சாதனையை சமன்செய்தது. 1999 முதல் 2001 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஸ்டீவ் வோக் தலை?90;யிலான அவுஸ்திரேலிய அணி 16 டெஸ்ட் போட்டிகளில் தெடர்ச்சியாக வென்று படைத்திருந்த உலக சாதனையையே தற்போது பொன்டிங் தலைமையிலான ஆஸி.அணி சமன்செய்துள்ளது. சிட்னி மைதானத்தில் நேற்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 333 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி கடைசி நேரத்தில் 210 ஓட்டங்களுக்கே சுருண்டது.இதன்போது 7 ஆவது விக்கெட்டுக்காக இணைந்த அணித்தலை…
-
- 23 replies
- 3.7k views
-
-
நிதானம், அதிரடி என சுப்மான் கில் காட்டிய கிளாசிக் 'மாயாஜாலம்' பட மூலாதாரம்,BCCI 41 நிமிடங்களுக்கு முன்னர் தன் இருப்பை உறுதி செய்துகொள்ள இதைவிட வேறு எதையும் செய்துவிட முடியாது. முதலில் இவருக்கு ஒரு நாள் அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்றார்கள். ஏனென்றால் இவருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்டவர் திடீரென இரட்டைச் சதமடித்துவிட்டார். இப்போது தம்மை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அதே சாதனையைச் செய்திருக்கிறார், சுப்மான் கில்! இத்தனை வீரர்கள் நன்றாக ஆடினால், யாரைத்தான் தொடக்க நிலையில் களமிறக்குவது என்ற குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது, சுப்மன் கில்லின் அதிரடியான இரட்டைச் சதம். ஒரு காலத்தில் இரட்டைச் ச…
-
- 23 replies
- 1.1k views
- 1 follower
-
-
ரூட் குவித்த சதத்தின் உதவியுடன் முதலாவது ஆஷஸ் டெஸ்டில் பலமான நிலையில் இங்கிலாந்து 17 JUN, 2023 | 06:23 AM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பேர்மிங்ஹாம், எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (16) ஆரம்பமான 1ஆவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆரம்பத்தில் தடுமாறிய இங்கிலாந்து, ஜோ ரூட்டின் அபார சதத்தின் உதவியுடன் வலுவான நிலையை அடைந்தது. ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 3ஆவது அத்தியாயத்தின் அங்குரார்ப்பண போட்டியாகவும் அமைந்த இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து 8 விக்கெட்களை இழந்து 393 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது. நொட்டிங்ஹாமில்…
-
- 23 replies
- 1.2k views
- 1 follower
-
-
உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: 36 ஆண்டுகளுக்கு பின் கால்பந்து உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா கட்டுரை தகவல் எழுதியவர்,க. சுபகுணம் பதவி,பிபிசி தமிழ் 18 டிசம்பர் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முதல் கோல் அடித்தபின் கொண்டாடும் மெஸ்ஸி 36 ஆண்டுகளுக்கு பின் கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜென்டினா வென்றுள்ளது. இரண்டு அணிகளும் தலா மூன்று கோல் அடித்த நிலையில்; பெனால்டி ஷூட் அவுட்டில் பிரான்ஸை 4-2 என்ற கணக்கில் வென்றது அர்ஜென்டினா. எமிலியானோ மார்ட்டினெஸ், ஐந்து பெனால்டி ஷூட்களில் இரண்டை தடுத்து அணியைக் காப்…
-
- 23 replies
- 936 views
- 1 follower
-
-
வங்காள தேச அணியை குறைத்து மதிப்பிட மாட்டோம்: சஹா சொல்கிறார் வங்காள தேச அணியை குறைத்து மதிப்பிட மாட்டோம் என்று இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா குறிப்பிட்டுள்ளார். இந்தியா - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 9-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இந்தியா வங்காள தேசத்தை குறைத்து மதிப்பிடாது என்று சகா கூறியுள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பரான சகா, வங்காள தேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டி குறித்து கூறுகையில் ‘‘ஐ.சி.சி.யின் டெஸ்ட் அணிகள் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் நாங்கள் அவர்…
-
- 23 replies
- 1.8k views
-
-
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான 12பேர் கொண்ட இங்கிலாந்து அணி விபரம் அறிவிப்பு. பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான 12பேர் கொண்ட இங்கிலாந்து அணி விபரம் அறிவிப்பு. பாகிஸ்தானுக்கு எதிராக லோட்ஸில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டிக்கான 12பேர் கொண்ட இங்கிலாந்து அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கு ரோபி ரெனால்ட் ஜோன்ஸ் என்ற வீரர் முதல் முறையாக அழைக்கப்பட்டுள்ளார். இவ்வணியில் இவருக்கும் இலங்கைக்கு எதிராக அழைக்கப்பட்ட ஜக் போல்லுக்கும் இடையே யார் உபாதையடைந்துள்ள ஜேம்ஸ் அண்டர்சனுக்கு பதிலாக அறிமுகம் பெறுவது என்ற போட்டி உள்ளது. இதில் காயம் காரணமாக இங்கிலாந்தின் முன்னணி பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் இடம்பெறவி…
-
- 23 replies
- 2.4k views
-
-
தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து முதல் டெஸ்ட்:டர்பனில் இன்று தொடக்கம் கோப்பையுடன் இங்கிலாந்து கேப்டன் அலாஸ்டர் குக், தென் ஆப்பிரிக்க கேப்டன் ஹசிம் ஆம்லா. தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் சனிக்கிழமை தொடங்குகிறது. "பாக்ஸிங் டே'வில் தொடங்கும் இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடி வெற்றிப் பாதைக்கு திரும்புவதில் இரு அணிகளும் தீவிரமாக உள்ளன. தென் ஆப்பிரிக்க அணி கடைசியாக விளையாடிய இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட…
-
- 22 replies
- 1.6k views
-
-
நம்பவே முடியாமல் chelsea ஐரோப்பிய கிளப்புகளுக்கைடையிலான உதைபந்தாட்டத்தில் bayern munich ஐ பனால்ட்டியில் தோற்கடித்தது . முதல் 90 ஆவது நிமிடமாகும் நேரம் ஒரு கோல்,பின்னர் கடைசி பனால்டியும் அடித்த drogba வின் அதிரடி ஆட்டம் கலங்க வைத்தது .
-
- 22 replies
- 2.6k views
-
-
முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா போராடி வெற்றி- இலங்கை 411 ரன் குவித்தது ராஜ்கோட், டிச. 15- இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான 5 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. கை விரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ்சிங் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக விரட் கோலி இடம் பெற்றார். இலங்கை அணியில் காயம் காரணமாக முரளீதரனும், காய்ச்சல் காரணமாக மலிங்காவும் ஆடவில்லை. இலங்கை அணி கேப்டன் சங்ககரா `டாஸ்' வென்று இந்தியாவை முதலில் ஆட அழைத்தார். ஷேவாக்கும், தெண்டுல்கரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்திய அணியின் தொடக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது. ஷேவாக் வழக்கம்போல் அதிரடியாக விளையாடினா…
-
- 22 replies
- 2.7k views
-
-
நான் வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த ஒரு போட்டி இன்று நடைபெற்றது. இந்த எதிர்பார்ப்பிற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் குறிப்பிடத்தக்க காரணம் கடந்த இரு மாதங்களாக இலங்கையணியை துவம்சம் செய்து வரும் நியுசிலாந்தணியின் ஆரம்பத் துடுப்பாட்டக் காரரும், அணியின் தளபதியுமான பிரண்டன் மக்கலத்தின் ஆக்ரோஷமான துடுப்பாட்டத்தை யாராவது தடுத்து நிறுத்த மாட்டார்களா என்கிற அங்கலாய்ப்பே முதலாவது. இரண்டாவது காரணம், இந்த முறை உலகக் கிண்ணத்தை எப்படியாவது தூக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் மக்கலத்தின் அணிக்குச் சவாலாக யாராவது வரமாட்டார்களா என்கிற எதிர்பார்ப்பு. மூன்றாவது காரணம், எனது இரண்டாவது அபிமான அணியான அவுஸ்த்திரேலியா (எனது முதலாவது அணி எதுவென்பதை நான் விளையாட்டுத் திடலில் முன்…
-
- 22 replies
- 905 views
-
-
இந்தியா - இங்கிலாந்து 20 ஓவர் போட்டி கண்ணோட்டம் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 20 ஓவர் போட்டிகள் பற்றி சில கண்ணோட்டங்களை பார்ப்போம். இரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் முதல் முறையாக 2007-ல் மோதின. தென்ஆப்பிரிக்காவில் நடந்த உலககோப்பையில் இந்தியா 18 ரன்னில் வெற்றி பெற்றது. இரு அணிகளும் இதுவரை 8 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 3 ஆட்டத்திலும், இங்கிலாந்து 5 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய அணி 2007-ல் டர்பன் மைதானத்தில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன் குவித்ததே இங்கிலாந்துக்கு எதிரான அதிகபட்ச ஸ்கோராகும். அந்த அணி அதிகபட்சமாக 6 விக்கெட…
-
- 22 replies
- 1.3k views
-
-
கொமன்வெல்த் போட்டிகளில் அவுஸ்திரேலியாவில் பிறந்த செல்லத்துரை பிரசாந்த் கலந்து கொண்ட போட்டியில்(Gymnastics Artistic Men's Pommel horse), இவரது குழு 2 வது(SILVER) இடத்தினைத்தட்டிக்கொண்டது. இவரது பெற்றோர்கள் ஈழத்தில் பிறந்த தமிழர்கள். மேலதிக தகவல்களினை கீழ் உள்ள இணைப்பில் பார்க்கவும். http://www.melbourne2006.com.au/Participan...pants?ID=110224 http://www.melbourne2006.com.au/Schedule%2...uleItemID=29625 இவர் கலந்துகொண்ட(Pommel Horse) போட்டியில் இவர்தான் அதிக புள்ளிகளினைப்(15.350) பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
-
- 22 replies
- 5.2k views
-
-
முதல் பந்திலேயே ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட் - மேற்கிந்திய வேகப்பந்து வீச்சாளர் சமர் ஜோசப்பின் கனவுப்பயணம் ஆரம்பம் Published By: RAJEEBAN 18 JAN, 2024 | 02:32 PM சிலருக்கு முதல்போட்டி என்பது கனவு போல அமைவதுண்டு. மேற்கிந்திய அணியின் சகலதுறை வீரர் சம்மெர் ஜோசப்பின் முதல் போட்டியும் ஒரு கனவே! முதலில் அவரின் ஆரம்பம் - கயானாவின் 350 பேரை கொண்ட பராகரா என்ற ஊரிலிருந்து மேற்கிந்திய தீவுகள் அணிக்கு தெரிவு செய்யப்பட்ட முதல் வீரர் இவர். அதன் பின்னர் அவர் தனது முதல் டெஸ்டில் மேற்கிந்திய அணியின் அதிக ஓட்டங்களை பெற்ற 11 வீரர் என்ற சாதனையை முறியடித்தார், 36 ஓட்டங்களை அவர்பெற்றார் அதில் ஜோஸ் ஹசெல்வூட்டின் பந்தில் பெ…
-
-
- 22 replies
- 1.7k views
- 1 follower
-
-
இங்கிலாந்துக்கு வெஸ்ட் இண்டீஸ் கடும் சவாலாக விளங்கும்: அம்புரோஸ் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்டில் ஒன்றையாவது வெஸ்ட் இண்டீஸ் வெல்லும் என அம்புரோஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் பகல்-இரவு டெஸ்ட் ஆக நடக்கிறது. இங்கிலாந்தில் நடைபெறும் முதல் பகல்- இரவு டெஸ்ட் இதுவாகும். இங்கிலாந்து அணி சமீபத்தில்தான் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என…
-
- 21 replies
- 1.8k views
-
-
ஒருநாள் கிறிக்கெற் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் அதி கூடிய ஓட்டங்களைப் பெற்றவர் என்ற பெருமையை சசின் தெந்துல்கார் பெற்றுள்ளார். டெண்டுல்கர் 195 ஓட்டங்களுடன் ஆடிக் கொண்டிருக்கிறார். மேலதிக செய்திகள் தொடரும். டெண்டுல்கர் 195 ஓட்டங்களுடன் ஆடிக் கொண்டிருக்கிறார். Source : http://www.eelamweb.com/
-
- 21 replies
- 1.8k views
-
-
'பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார்கள்' - இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிராக வீராங்கனைகள் புகார் பட மூலாதாரம்,ANI 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சர்வாதிகாரத்தனமாக நடந்துகொள்வதாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர். டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள், கூட்டமைப்புக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளையும் முன் வைத்துள்ளனர். காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை வினீஷ் போகட், ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் இந்த தர்ணா போராட்டத்தில்…
-
-
- 21 replies
- 1.8k views
- 1 follower
-
-
முரளியின் செயற்பாடுகள் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கவலை அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகரான, இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் செயற்பாடுகள் குறித்து வருந்துவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. முரளிதரனுக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்கள் இதுவரை முன்வைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால குறிப்பிட்டுள்ளார். அணி முகாமையாளர் சரித் சேனாநாயகவை கடுமையாக சாடியமை, அனுமதியின்றி பல்லேகல சர்வதேச விளையாட்டு மைதானத்தில் அவுஸ்திரேலிய அணியினருக்கு பயிற்சியளித்தமை போன்றனவே அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களாகும். எதுஎவ்வாறு இருப்பினும், இது குறித்து அவுஸ்திரேலிய கிரிக்…
-
- 21 replies
- 1.9k views
-
-
இலங்கைக்கு எதிரான நியூசிலாந்து அணியின் பெயர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையுடன் நடைப்பெறயுவுள்ள டெஸ்ட் போட்டிக்காக நியூசிலாந்து அணியின் பெயர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியின் பிரண்டன் மெக்கல்லம் தலைமையிலான 12 பேர் கொண்ட அணி விபரம் வெளியிடப்பட்டுள்ளது அதனடிப்படையில் , கடந்த போட்டிகளில் திறமையை வெளிக்காட்டாத அனுபவம் வாய்ந்த வீரர்களான மார்டின் கப்டில் மற்றும் மார்க் க்ரேக் ஆகியோர் தொடர்ந்தும் அணியில் இடம் பிடித்துள்ளனர். இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 10 ம் திகதி டனேடீன்னில் ஆரம்பமாகவுள்ளது. http://www.hirunews.lk/tamil…
-
- 21 replies
- 1.5k views
-