Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. நாடு திரும்பிய அர்ஜென்டினா அணிக்கு அதிபர் தலைமையில் உற்சாக வரவேற்பு பிரேசில் உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வி கண்டு சாம்பியன் பட்டத்தை இழந்தது. ஆனாலும், இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி போராடிய விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. போட்டியில் இரண் டாம் இடம் பிடித்த அர்ஜென்டினா அணி நேற்று நாடு திரும்பியது. தலைநகர் பியூனஸ் அயர்சுக்கு விமா னம் மூலம் வந்திறங்கிய அர்ஜென்டினா வீரர்களுக்கு, அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வீரர்கள் வந்த விமானத்தின் பக்க வாட்டில் வீரர்களின் படம் வரையப்பட்டிருந்ததோடு, அர்ஜென்டினாவுக்கு நன்றி’ என்ற வாசகமும் எழுதப்பட்டிருந்தது. விமான நிலையத்தில் இருந்து சிறப்பு பேரு…

  2. தேசிய மட்டத்தில் சம்பியனாகிய யாழ் சென் ஜோன்ஸ் இளம் அணி Your browser does not support iframes. அணித் தலைவர் ஏ. அபிஷேக்கின் சகலதுறை ஆட்டத்தின் உதவியோடு 13 வயதுக்கு உட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான பிரிவு இரண்டுக்கான தேசிய மட்ட கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் முதல் இன்னிங்ஸை வென்ற யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி தொடரின் சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெறும் பாடசாலைகளுக்கு இடையிலான இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் யாழ் தரப்பினர், கலஹிட்டியாவ மத்திய கல்லூரியை எதிர்கொண்டது. கோட்டை, ஆனந்த ஷாஸ்த்ராலயா மைதானத்தில் இன்று (26) நடைபெற்ற நான்கு இன்னிங்ஸ்கள் கொண்ட இந்தப் போட்டியிலும் சென் ஜோன…

  3. `மைதானத்துக்கு வெளியிலும் டிகாக்கிடம் வம்பிழுக்கும் வார்னர்!’ - வைரல் வீடியோ தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டெஸ்டின் 4-ம் நாளில் டேவிட் வார்னர் மற்றும் குயிண்டன் டிகாக் இடையிலான வார்த்தைப் போர் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. Photo Credit: AP டர்பன் கிங்ஸ்மெட் மைதானத்தில் நடந்துவரும் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 351 ரன்களும், தென்னாப்பிரிக்கா அணி 162 ரன்களும் எடுத்தன. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 227 ரன்களில் ஆட்டமிழந்தது. 417 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்புக…

  4. வாசிம் அக்ரம், ஷேன் வார்னேவை வியக்க வைத்த பாகிஸ்தானின் 2 சிறுவர்கள் ஹசனுக்கு பந்துவீச்சு பயிற்சி அளித்த வாசிம் அக்ரம் - படம் உதவி: ட்விட்டர் பாகிஸ்தானில் உள்ள இரு 6 வயது சிறுவர்கள் தங்களின் பந்துவீச்சால் வாசிம் பாகிஸ்தானில் உள்ள 6 வயது சிறுவர்கள் இருவர் தங்களின் பந்துவீச்சால் வாசிம் அக்ரத்தையும், ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னேவையும் கவர்ந்துள்ளனர். இருவரின் பந்துவீச்சைப் பார்த்து வியந்து பாராட்டியுள்ளனர். இந்த இரு சிறுவர்களின் பந்துவீச்சு குறித்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. பாகிஸ்தானின் குவெட்டா நகரைச் சேர்ந்த சிறுவன் அலி மிகால் கான். இவருக்கு மற்றொ…

  5. ஐபிஎல் போட்டிக்கு அழைத்தால் கூட நான் விளையாட வரமாட்டேன்: அப்ரிடி ‘அந்தர் பல்டி’ பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி - படம் உதவி: ட்விட்டர் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் விளையாட என்னை அழைத்தால் கூட நான் விளையாமாட்டேன் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி மீண்டும் வம்பிழுக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் முதன்முதலில் தொடங்கும் போது டெக்கான் சார்ஜர்க்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த அப்ரிடி அப்போது ஐபிஎல் போட்டியை புகழ்ந்து தள்ளினார். அப்போது அவர் கூறுகையில், ‘ஐபிஎல் தொடரில் நான் விளையாடிய அனுபவத்தை என்னால் மறக்க முடியாது. மிகச்சிறந்த அனுபவம். மிகச்சிற…

  6. தோனி, ரெய்னாவிடம் விசாரணை * விரைவில் சூதாட்ட அறிக்கை தாக்கல் அக்டோபர் 28, 2014. புதுடில்லி: ஐ.பி.எல்., சூதாட்டம் குறித்து முத்கல் தலைமையிலான குழு, கேப்டன் தோனி, இவரது நண்பர் அருண் பாண்டே மற்றும் ரெய்னாவிடம் விசாரணை நடத்தியது. இந்த வாரத்துக்குள் சுப்ரீம் கோர்ட்டில் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஆறாவது ஐ.பி.எல்., சூதாட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பரிந்துரையின் பேரில், ஓய்வு பெற்ற நீதிபதி முத்கல் குழு தலைமையிலான குழு நேரடியாக விசாரிக்கிறது. இதன் முதற்கட்ட அறிக்கையில் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் மற்றும் இந்திய அணி கேப்டன் தோனி, ரெய்னா உட்பட 13 பேர் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இந்த வார கடைசிக்குள் (நவ., 2) முத்கல் குழு இறுதி அறிக்கை சமர்பிக்க வேண்…

  7. வட மாகாண வீரர்களின் சாதனையே தேசிய அணிக்கான தெரிவு வட மாகாணத்தில் இரு கிரிக்கெட் வீரர்கள் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட தேசிய அணியில் இணைந்திருப்பது மிகப்பெரிய சாதனை என்று இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியின் முகாமையாளர் ஹேமந்த தேவப்பிரிய குறிப்பிட்டார். ”யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் டெஸ்ட் குழாமில் 16 ஆவது வீரராக இருக்கும் வலதுகை சுழல் பந்துவீச்சாளர் (விஜயகாந்த்) வியாஸ்காந்த். அந்த பகுதியில் இருந்து கிரிக்கெட் வீரர் ஒருவர் வருவது மிகப்பெரிய சாதனையாகும்” என்று அவர் தெரிவித்தார். இலங்கை மற்றும் இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட உத்திய…

  8. டெஸ்ட் தொடரில் சாதித்த இலங்கை ஒரு நாள் தொடரிலும் சாதிக்குமா? விருந்தினர்களாக இலங்கைக்கு வந்த தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் தொடரில் வைட்வொஷினை பரிசளித்த இலங்கை அணி, “யாரையும் எளியோர் என்று எண்ணிவிடாதே” என்ற முதுமொழியை உண்மைப்படுத்தியிருக்கின்றது. கிரிக்கெட்டின் நீண்ட ஓவர்கள் கொண்ட வகைப் போட்டிகளில் இப்படியாக மிகவும் திறமையாக இருக்கும் கிரிக்கெட் அணியொன்றை தோற்கடித்த இலங்கை அணிக்கு, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளிலும் தமது திறமையை நிரூபிக்க தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் தொடர் மூலம் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. அந்தவகையில், இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐ…

  9. வவுனியா - பொகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த சரித்த நிர்மல புத்திக்க இந்திரபால ஆசியா 2018 பரா விளையாட்டில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார். இன்று காலை வடமாகாணசபை உறுப்பினர் தர்மபாலா செனவிரத்தினாவின் மூன்றுமுறிப்பு அலுவலகத்திலிருந்து அவரது பொகஸ்வெவ பகுதிக்கு வாகனப்பேரணியாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆசியா 2018 பரா விளையாட்டில் ஆசியாவில் நீளம் பாய்தலில் தங்கப்பதக்கம் 200மீற்றர் ஓட்டத்தில் பிறன்ஸ் பதக்கத்தையும் உயரம் பாய்தலில் 5ஆவது இடத்தினையும் இந்தோனோஷியா, ஜகார்த்தாவில் இடம்பெற்ற போட்டியில் கலந்துகொண்டு இங்கைக்குப் பெருமை சேர்த்துள்ளார். இவரை கௌரவிக்கும் நிகழ்வில் கிராம மக்கள் கலந்துகொண்டு வாகனப்பேரணியாக பொகஸ…

  10. பாகிஸ்தான் சீனியர் வீரர்கள் கெட்ட வார்த்தையிலேயே என்னை திட்டுராங்க... ஃபீல்டிங் கோச் பரபரப்பு புகார் கராச்சி: கெட்ட வார்த்தைகளால் சீனியர் வீரர்களை தன்னை திட்டுவதால், ராஜினாமா செய்யப்போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் கிரான்ட் லுடென் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. 2007 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் தோற்ற நிலையில்தான், அந்த அணியின் பயிற்சியாளர் பாப் உல்மர் மர்மமாக உயிரிழந்தார். நடப்பு உலக கோப்பை தொடரில் ஆடுவதற்கு, ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ள பாகிஸ்தான் வீரர்களும் சரியான நேரத்திற்கு ஹோட்டலுக்கு திரும்பவில்லை என்பதற்காக அபராதத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் புதிய ச…

  11. 153 ஓட்டங்களுக்குள் சுருண்டது மே.இ.தீவுகள் ; 224 ஓட்டத்தினால் இந்தியா அபார வெற்றி இந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அடுத்தடுத்த ஆட்டமிழப்பினால் 153 ஓட்டங்களுக்குள் சுருண்டு, 224 ஓட்டங்களினால் தோல்வியை தழுவிக் கொண்டது. இந்திய மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையேயான ஐந்து போட்கடிகள் கொண்ட ஒருநாள் தொடரின் நான்காவது போட்டி மும்பையில் இன்று பிற்பகல் 1:30 க்கு ஆரம்பமாகியது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். அதற்கமைவாக முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணியிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் அபாரமாக துடுப்பெடுத்தாடி 5 விக்கெட்டுக்களை இழந்த…

  12. கடிக்க பல் இருக்கும் போது இடிக்கலாமா தோனி?- ட்விட் கலக்கல் வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தாஃபீகுர் ரக்மானை இந்திய கேப்டன் தோனி இடித்து தள்ளி ய விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், தோனியின் இந்த செய்கை குறித்து ட்விட்டரில் பலவிதமான காமெடி கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஷ்முல் ஹசன் கூறுகையில், தோனி செய்ததை நாங்கள் விரும்பவில்லை. இதே போன்ற செய்கையை நாங்கள் அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். தோனியின் இடித்து தள்ளிய விவகாரத்தை ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில் பலரும் காமெடியாக சித்தரித்து கருத்துகளை வெளியிட்டுள்ளனர். மிஸ்டர் தோனி... கடித்து வைக்க பல் இருக்க இடிக்கலாமா?-லூயீஸ் சவுரஸ்…

  13. பார்சிலோனா, ஆர்சனலுக்கு விருது ஐரோப்பிய கழகச் சங்கத்தினால் வழங்கப்படும் வருடாந்த விருதுகளில், பார்சிலோனா, ஆர்சனல் ஆகிய கழகங்கள் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. இவை தவிர, உக்ரேனியக் கழகமான நிப்ரோ நிப்ரோபெட்ரோவ்ஸ்க், எஸ்தோனியக் கழகமான லெவாடியா தல்லின் கால்பந்தாட்டக் கழகம் ஆகியனவும் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. ஐரோப்பாவின் சிறந்த கழகத்துக்கான விருதுதை, பார்சிலோனா கழகம் வென்றது. 2014-15 பருவகாலத்தில், மிகச்சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியமைக்காகவே இந்த விருது வழங்கப்பட்டது. சிறந்த சமுதாய, சமூகப் பொறுப்புக்கான நிகழ்ச்சித் திட்டத்துக்கான விருதை, ஆர்சனல் வெற்றிகொண்டது. இளைஞர்களின் வேலையற்ற பிரச்சினையை எதிர்கொள்வதற்காக, அக்கழகம் மேற்கொள்ளும் ஆர்சனல் வேலைத்திறன் நி…

  14. தொடரும் தவறான முடிவுகள் – சிக்கலில் இந்திய நடுவர்! இந்தூரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. தென்னாப்பரிக்க அணியின் தோல்விக்கு, நேற்றைய போட்டியின் நடுவர்களில் ஒருவரான வினீத் குல்கர்னியின் தவறான முடிவுகளும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. ஒரு புறம் விக்கெட் வீழ்ந்தாலும், அந்த அணியின் பெஹர்டியன் நிலைத்து நின்று அணியை வெற்றியை நோக்கி நகர்த்தி சென்று கொண்டிருந்தார். 40 - வது ஓவரில் ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சில் அவர் அவுட் ஆனார். பந்து மட்டையில் உரசியாதாக நினைத்து நடுவர் குல்கர்னி அவுட் கொடுத்தார். ஆனால் டி.வி. ரீப்ளேவில் பந்து மட்டையில் படாமல் சென்றது உறுதி செய்யப்பட்டது. நடுவரின் இந்த தவறான முடிவு ஆட்டத்தின் போக்கை மாற்றியது. ஏ…

  15. கில்கிறிஸ்ட்டை வளைக்க கடும் போட்டி Tuesday, 19 February, 2008 12:12 PM . மெல்பர்ன், பிப்.19: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் ஆஸ்திரேலிய விக்கெட்கீப்பர் கில்கிறிஸ்ட்டை அதிக விலை கொடுத்து தங்கள் அணிக்கு கொண்டு வர இந்திய பிரிமியர் லீக்கின் கொல்கத்தா மற்றும் மொகாலி அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. . இதனால் கில்கிறிஸ்ட்டுக்கு எதிர்பார்த்ததை விட கூடுதல் தொகை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்திய பிரிமியர் லீக்கின் 8 அணிகளுக்கு வீரர்களை சேர்ப்பதற்கான போட்டி நாளை மும்பையில் நடைபெறுகிறது. ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்கு கில்கிறிஸ்ட்டுக்கு 10 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தா அணிக்கு தலை…

  16. தொடர் டெஸ்ட் போட்டிகள்: டிவில்லியர்ஸை கடந்த மெக்கல்லம் பிரெண்டன் மெக்கல்லம். | படம்: ஏ.எஃப்.பி. தொடர்ச்சியாக 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய தென் ஆப்பிரிக்க நவீன அதிரடி பேட்ஸ்மெனான டிவில்லியர்சைக் கடந்தார் நியூஸிலாந்தின் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம். இவர் தற்போது தொடர்ச்சியாக தனது 99-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார். ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் தொடர்ச்சியாக 96 டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணியின் முன்னாள் ‘சுவர்’ ராகுல் திராவிட் தொடர்ச்சியாக 93 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளனர். டிவில்லியர்ஸ் போலவே மெக்கல்லமும் அனாயாச மட்டைச் சுழற்றல் அதிரடியில் ஈடுபடுபவர் என்றாலும், டிவில்லியர்ஸ் போலவே இவர…

  17. பொக்சிங் டே டெஸ்ட்டில் அண்டசன் பங்கேற்பது சந்தேகம் December 23, 2015 தென் ஆபிரிக்க அணியுடனான பொக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டசன் பங்கேற்பது சந்தேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கட் அணியின் முன்னணி வீரரான அண்டசன் வலது கையில் தசை இறுக்கம் காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஸ்கான் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பித்து 30 ஆம் திகதி வரை டர்பனில் நடைபெறவுள்ள பொக்சிங் டே டெஸ்ட் போட்டியில் ஆன்டர்ஸன் பங்கேற்பது சாத்தியம் இல்லை என தெரியவருகின்றது. தென் ஆபிரிக்க டெஸ்ட் தொடரில் ஆன்டர்ஸன் பங்கேற்கவில்லை எனில் கிறிஸ் வோக்ஸ், ஸ்டீபன் பின…

  18. இந்திய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் முஷ்பிகுர் ரஹிமின் அசத்தலான ஆட்டத்தினால் 7 விக்கெட்டுகளால் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றுள்ளது. டெல்லியில் இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்றது. 149 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஷ் அணி 19.3 ஓவரில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. லிட்டன் தாஸ் 7 ஓட்டத்துடனும், மொஹமட் நைம் 26 ஓட்டத்துடனும், சவுமி சர்கார் 39 ஓட்டத்துடனும் ஆட்டம…

  19. ஐரோப்பிய உதைபந்தாட்டம் 2012 ஐரோப்பிய உதைபந்தாட்ட ரசிகர்களினால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 2012 க்கான விளையாட்டுக்கள் இன்று ஆரம்பமாக உள்ளன. ஐரோப்பியநேரம்மாலை 5 மணிக்கு மிகவும் கோலாகலமாக ஆராம்பிக்க இருக்கும் நிகழ்வுகளுடன் முதலாவதாக போலந்து நாடும் கிரேக்கமும் எதிர் எதிராக விளையாடுகின்றன. கிரேக்கம் ஏற்கனவே ஐரோப்பியக் கிண்ணத்தைக் கைப்பற்றிய நாடாக இருந்தாலும் போலந்து தனது சொந்த நாட்டில் விளையாடும் தைரியத்துடனும் இறுதியாக 5 விளையாட்டுக்களில் தோல்வியுறாத நிலையிலும் இந்த ஆரம்ப விளையாட்டு போலந்திற்கு ஒரு ஏணிப்படியாக இருக்கும் என வல்லுனர்கள் எதிர்பார்க்கின்றனர். அதேபோல இரண்டாவதாக நடைபெற இருக்கும் ரஷ்யா செக் குடியரசுக்கும் இடையிலான விளையாட்டு ஒல்லாந்…

  20. உதை பந்து எண்டால் என்ன? ஆக்களுக்கு உதைஞ்சு விளையாடுறதோ இல்லாடிக்கு பந்துக்கு உதைஞ்சு விளையாடுறதோ? இல்லாட்டிக்கு பந்துக்கு உதையுறமாதிரி பாசாங்கு செய்துகொண்டு ஆக்களுக்கு உதைஞ்சு விளையாடுறதோ? நான் பார்த்த அளவில கால்தடம் போடுறதுக்கு.. ஆக்களிண்ட கையக், கால பிடிச்சு இழுத்து விழுத்துறதுக்கு.. foul விளையாட்டுக்கு போர்த்துக்கல் அணியிட்ட எல்லாரும் பாடம் படிக்கவேணும். அவனுகள் முறைகேடா விளையாடிபோட்டு - மற்றவன இழுத்து விழுத்திப்போட்டு - எதுவும் தெரியாத அப்பாவி பாப்பா மாதிரி நடிக்கிற அழகோ அழகு.. இப்பிடி விளையாடுறது எல்லாராலையும் ஏலாது.. கீழ இருக்கிற விளையாட்டுக்கு பெயர்தான் உதை பந்தோ எண்டு ஒருக்கால் பார்த்து சொல்லுங்கோ..

  21. ஊக்கமருந்து சோதனைகளை தவறவிட்ட ஆன்ட்ரே ரஸல்ஸ் March 03, 2016 மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை ஆட்ட வீரர் ஆன்ட்ரே ரஸல்ஸ் பன்னிரண்டு மாத காலப் பகுதியினுள் மூன்று ஊக்கமருந்து சோதனைகளை தவறவிட்டதாக ஜமைக்கா ஊக்கமருந்து எதிர்ப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. ஊக்கமருந்து சட்ட விதிமுறைகளின் பிரகாரம் மூன்று ஊக்கமருந்து சோதனைளை தவறவிடுவது குறித்த வீரர் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதிப்படுத்தப்பட்டமைக்கு நிகரானது என்பதால் ரஸல்ஸ் தடைகளை எதிர்கொள்ள வேண்டும் என தெரியவருகின்றது. கடந்த மாதம் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இஸ்லாமபாத் அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றிய ரஸல்ஸ் தொடரின் ஆட்டநாயகனாகவும் தெரிவானார். இந்த நிலையில் எதிர்வரும்…

  22. அதிக விக்கெட்டுக்களை பெற்று அப்ரிடி சாதனை! கடந்த போட்டியில் பாகிஸ்தான் தலைவனும், சுழற்பந்து வீச்சாளருமான அப்ரிடி 4 ஓவர்கள் பந்து வீசி 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் 20 ஓவர் உலக கிண்ணத்தில் அவரது விக்கெட் எண்ணிக்கை 39-ஆக (33 போட்டி) உயர்ந்தது. இதையடுத்து 20 ஓவர் உலக கிணண கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை இலங்கையின் மலிங்கவிடம் இருந்து (38 விக்கெட், 31 போட்டி) தட்டிப்பறித்தார். 36 வயதான அப்ரிடி ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டிலும் 97 விக்கெட்டுகளுடன் (97 போட்டி) முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=78297

  23. முதலாவது 20 க்கு 20 கிரிக்கட் போட்டி இன்று.. இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது 20 க்கு 20 கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இங்கிலாந்து அணி தென்னாபிரிக்காவுக்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், தென்னாபிரிக்காவின் கிழக்கு லண்டன் நகரில் இன்றிரவு இடம்பெறவுள்ள முதலாவது 20 க்கு 20 போட்டி இலங்கை நேரப்படி இரவு 9.30 க்கு ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் மூன்று 20 க்கு 20 போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://…

  24. செல்சியை வீழ்த்தி நம்பிக்கையை தக்கவைத்துக்கொண்ட மன்செஸ்டர் யுனைடட் By Mohamed Shibly - செல்சி அணிக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய மன்செஸ்டர் யுனைடட் ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் காணும் வாய்ப்பை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டது. செல்சியின் சொந்த மைதானமான ஸ்டாம்போர்ட் பிரிட்ஜில் இலங்கை நேரப்படி இன்று (18) அதிகாலை நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் மன்செஸ்டர் யுனைடட் 38 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திற்கு முன்னேறியது. எனினும் நான்காவது இடத்தில் இருக்கும் செல்சியை விடவும் அந்த அணி 3 புள்ளிகளாலேயே பின்தங…

  25. மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு ஐ.சீ.சீ எச்சரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கட் பேரவை எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியின் பின்னர், வீரர்கள் நடந்து கொண்ட விதம் அதிருப்தி அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கிண்ண இறுதிப் போட்டியொன்றின் பின்னர் அணியின் முக்கிய வீரர்கள் வெளியிட்ட கருத்துக்கள் , நடந்து கொண்ட விதம் ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை டுபாயில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கட் பேரவையின் கூட்டத்தில் இந்த விடயங்கள் பற்றி பேசப்பட்டுள்ளத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.