Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இலங்கைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு ஐந்து பேர் இலங்கை கிரிக்கெட் அணியின் நிரந்தர தலைமைப் பயிற்றுவிப்பாளர் பொறுப்புக்கு ஐந்து பேர் விண்ணப்பித்துள்ளதாக இடைக்கால இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி அஷ்லி டீ சில்வா தெரிவித்துள்ளார். ஒக்டோபர் ஆறாம் திகதிக்கு முதல் விண்ணப்பங்களை அனுப்பிய ஐந்து பேரும் வெளிநாட்டினரே என்று தெரிவித்துள்ள அவர், எனினும் தங்களது பெயர்கள் வெளியிடப்பட்டாது என்ற நம்பிக்கையின் பெயரிலேயே அவர்கள் விண்ணப்பித்திருப்பதால் அவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டிருக்கவில்லை. நாளை மறுதினம் இடம்பெறவுள்ள இடைக்கால நிர்வாக சபைக் கூட்டத்தின்போது, விண்ணபித்தவர்களின் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக நடவடிக்கை என ஆராயப்படும் …

  2. கடந்த இரு மாத காலமாக நியுசிலாந்தில் விளையாடி வரும் இலங்கையணி , அந்த நாட்டிற்கெதிராக விளையாடிய இரு டெஸ்ட் போட்டிகளிலும் படுதோல்வி அடைந்ததோடு, அதன் பின்னர் நடந்த ஒரு நாள் விளையாட்டுத் தொடரிலும் 4-2 என்கிற வித்தியாசத்தில் தோற்றிருந்ததும் நினவிலிருக்கும். இலங்கையணியின் மிகமோசமான துடுப்பாட்டமும், பந்துவீச்சாளர்களின் இயலாமையுமே இந்தத் தோல்விகளுக்கான காரணமாக முன்வைக்கப்பட்டாலும் கூட, இலங்கையணி ஆடிய விதமும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக டெஸ்ட் தொடரில் நியுசிலாந்து அணி ஓவர் ஒன்றிற்கு 4 அல்லது 5ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தபோதும் கூட, இலங்கையணியின் குறிப்பிட்ட சில முன்னணி துடுப்பாட்டக் காரர்கள் வேண்டுமென்றே ஓவர் ஒன்றிற்கு 1 அல்லது 2 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டதும் கு…

    • 12 replies
    • 1.1k views
  3. இலங்கையணி கடந்த சில நாட்களாக நியுசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவருவது அறிந்ததே. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கள் ஆகியவற்றில் விளையாடும் இலங்கையணி எதிர்பார்க்கப்பட்டதுபோலவே டெஸ்ட் போட்டிகளில் அவமானகரமான தோல்விகளைச் சந்தித்து இருந்தது குறிப்பிடத் தக்கது. அணியின் தலைவர் ஆஞ்சலோ மத்தியூஸ், சண்டிமால், ஆரம்பத் துடுப்பாட்டக் காரர் கருணாரட்ண ஆகியோரைத் தவிர சிறிது கூட அனுபவம் இல்லாத துடுப்பட்டக்ல் காரர்களையும், வழமைபோல சொதப்பும் பந்துவீச்சாளர்களையும் அள்ளிக் கட்டிக் கொண்டு இலங்கையணி நியுசிலாந்துக்குப் புறப்படும்போதே சர்வதேச கிரிக்கெட் வர்ணணையாளர்கள், இவர்களுக்கு ஏன் இந்த வேலை, பேசாமல் வீட்டில் இருக்கலமே என்று கேட்காத குறையாக விமர்சித்திருந்…

    • 5 replies
    • 797 views
  4. இலங்கையர்கள் மூலம் வளர்ந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணி By Mohamed Azarudeen - கடந்த வாரம் தென்னாபிரிக்காவில் நடைபெற்று முடிந்த ஐ.சி.சி. இன் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை தமது அணி வென்றதன் மூலம் இறுதியாக கிரிக்கெட் உலகக் கிண்ணம் வெல்லும் முயற்சி ஒன்றில் வெற்றி பெற்றிருக்கின்றது பங்களாதேஷ் கிரிக்கெட். பங்களாதேஷின் இளம் அணியே உலகக் கிண்ணத்தை வென்ற நிலையில், ஐ.சி.சி. இன் தொடர்களில் அதன் சிரேஷ்ட கிரிக்கெட் அணியின் அண்மைக்கால பதிவுகளும் சிறப்பாகவே அமைந்திருந்தன. இது இப்படியிருக்க, பங்களாதேஷ் நடைமுறை கிரிக்கெட் உலகில்…

    • 0 replies
    • 1.1k views
  5. இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வசிம் அக்ரம் பயிற்சி 2016-12-02 10:11:49 கிரிக்கெட் உலகின் 'சுல்தான் ஒப் சுவிங்' என்­ற­ழைக்­கப்­படும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்த­லை­வ­ரான வசிம் அக்ரம் இலங்கை கிரிக்­கெட்­டுக்கு பந்­து­வீச்சு பயிற்சி மற்றும் ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக இலங்‍கை கிரிக்கெட் சபை­யுடன் இணைந்­துள்ளார். உள்ளூர் பயிற்றுநர்கள் சிலருடன் வசீம் அக்ரம் (படப்பிடிப்பு: எஸ். எம். சுரேந்திரன்) வசிம் அக்ரம் இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்­துடன் இணைந்­து­ கொண்­ட­மையை அறி­விக்கும் உத்­தி­யோ­க­பூர்வ நிகழ்வு கொழும்­பி­லுள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலை­மை­ய­கத்தில் ஸ்ரீலங்கா …

  6. இலங்கையின் உலகக் கிண்ண வாய்ப்பை உறுதி செய்த இங்கிலாந்து 2019ம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது. ஒருநாள் போட்டி தரவரிசையில் முதல் எட்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளே உலகக் கிண்ணத்தில் விளையாட தகுதி பெறும். இந்த நிலையில், இந்தியாவுடன் இடம்பெற்ற ஒருநாள் போட்டித் தொடரில் தோல்வியைத் தழுவிய இலங்கை அணி, உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடுவது உறுதியற்றதாக இருந்தது. எனினும், நேற்று இங்கிலாந்துடன் இடம்பெற்ற ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியடைந்து தரவரிசையில் பின்தள்ளப்பட்டதால், இலங்கை அணி உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ…

  7. இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் அனைத்தும் இரத்து By Mohamed Azarudeen - கொரோனா வைரஸ் பீதியானது உலகினை அச்சுறுத்தி வரும் நிலையில், அது கிரிக்கெட் விளையாட்டினையும் தொடர்ந்து பாதித்து வருகின்றது. அந்தவகையில், கொரோனா வைரஸ் பீதி காரணமாக உலகில் பல சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் சபையும் (SLC) இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் அனைத்தினையும் மறு அறிவித்தல் ஒன்று வரும் வரையில் இடை நிறுத்தியிருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றது. …

    • 0 replies
    • 595 views
  8. இலங்கையின் ஒருநாள் அணிக்கு திரும்பியிருக்கும் திசர பெரேரா By Mohamed Azarudeen மேற்கிந்திய தீவுகள் – இலங்கை அணிகள் இடையில் எதிர்வரும் சனிக்கிழமை (22) ஆரம்பமாகவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் அடங்கிய இலங்கை குழாம் இன்று (19) இலங்கை கிரிக்கெட் சபை (SLC) மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியினர் விளையாடிய கடைசி ஒருநாள் தொடராக, இலங்கை அணி கடந்த ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் விளையாடிய மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அமைந்தது. குறித்த சுற்றுப்பயணத்தின் போது …

  9. இலங்கை, பங்களாதேஷ் நாடுகளின் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையில் இம்மாதம் நடைபெறவுள்ள இரண்டு நாள் கிரிக்கெட் தொடர்கள் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களை முன்னிட்டு 31 வீரர்கள் கொண்ட இலங்கையின் முன்னோடி கிரிக்கெட் குழாம் பெயரிடப்பட்டுள்ளது. கனிஷ்ட தேசிய தெரிவாளர்களினால் பெயரிடப்பட்டுள்ள இக் குழாமில் வட பகுதியைச் சேர்ந்த இரண்டு கிரிக்கெட் வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். யாழ். செய்ன்ற் ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பரமானந்தம் துவாரகசீலன், செபமாலைப்பிள்ளை ப்ளெமின் ஆகிய இருவருரே வட பகுதியிலிருந்து 19 வயதுக்குட்பட்ட இலங்கை குழாமில் இடம்பிடித்துள்ளவர்களாவர். வட பகுதியிலிருந்து கிரிக்கெட் வீரர்களை தேசிய அணியில் விளையாட வைப்பதற்கான முயற்சிகளை இலங்கை கிரிக்கெட் நிறு…

  10. இலங்கையின் சிறந்த விளையாட்டு நட்சத்திரமாக யாழ் பல்கலைக்கழக மாணவன் February 12, 2016 இலங்கையின் சிறந்த விளையாட்டு நட்டசத்திரமாக யாழ் பல்கலைக்கழக கால்ப்பந்தாட்ட வீரனும் தேசிய கால்ப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்துள்ளவருமான செபமாலைநாயகம் ஞானரூபன் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இலங்கை பல்கலைக்கழங்களிலுள்ள சிறந்த விளையாட்டு வீரரை தெரிவு செய்யும் வகையில் இடம்பெற்ற இணைய வாக்கெடுப்பிலேயே சிறந்த வீரராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மொத்தம் 16 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களில் சிறந்த விளையாட்டு வீரனைத் தெரிவு செய்வதற்காக http://sports.moraspirit.com என்னும் இணையத்தளத்தில் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பு ஆரம்பமான நாளிலிருந்து முதலிடம்…

  11. இலங்கை டெஸ்ட் அணியின் புதிய தலைவராக திலின கண்டம்பி நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தோடு சிரேஷ்ட வீரர் மஹேல ஜெயவர்தன, இலங்கை டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை அணியின் டெஸ்ட் அணித்தலைவராக அவுஸ்ரேலியத் தொடர் வரை பதவி வகித்த மஹேல ஜெயவர்தன, தனது இறுதி சர்வதேசத் தொடராக அவுஸ்ரேலிய ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் தலைவராகப் பதவி வகித்து வருகிறார். இத்தொடரின் பின்னர் சாதாரண வீரராகப் போட்டிகளில் பங்குபற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மஹேல ஜெயவர்தன பதவி விலகிய பின்னர் இலங்கை டெஸ்ட், ஒருநாள் அணிகளின் தலைவராக அன்ஜலோ மத்தியூஸ் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. எனினும் தற்பொது வெளியா…

    • 2 replies
    • 406 views
  12. இலங்கையின் தோல்வி: சங்கா, மஹேல ரசிகர்களிடம் ஒரு வேண்டுகோள் இலங்கைக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணியினர் சிறப்பாக விளையாடியிருந்தனர். பங்களாதேஷ் அணியின் ஆட்டத்தை பார்க்கும் போது அபாயகரமான அணியாக காணப்படுகின்றது என இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். மேலும் தோல்வியை தழுவியுள்ள இலங்கை அணிக்கு நாம் எப்போதும் ஆதரவாக இருப்போம். இதுபோன்று இலங்கை ரசிகர்கள் தமது ஆதரவினை இந்நேரத்தில் இலங்கை அணிக்கு தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆசிய கிண்ணத் தொடரில் நேற்று இடம்பெற்ற 5ஆவது லீக் போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியிடம் 23 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்து. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கு…

  13. இலங்கையின் பாணியிலான கிரிக்கெட் மிக விரைவில் – ஹதுருசிங்க இலங்கையின் பாணியிலான கிரிக்கெட் மிக விரைவில் – ஹதுருசிங்க மேற்கிந்திய தீவுகள் அணி அவர்களது பாணியிலான கிரிக்கெட்டை 1980ஆம் ஆண்டுகளில் அப்போதைய அணித்தலைவர் கிளைவ் லொய்டின் வழிகாட்டலில் விளையாடியிருந்தது. இது நடந்து ஒரு தசாப்த காலத்தின் பின்னர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி அனைவரையும் கவரும் வகையில் தமது பாணியிலான கிரிக்கெட்டை உலகிற்கு காட்டியிருந்தது. எதிர்பார்ப்புகளைத் தாண்டி அப்போது பல சாதனைகளைப் புரிந்த இலங்கை அணி இன்று மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றது. இந்த ஆண்டில் மூன்று தடவைகள் 5-0 என ஒரு நாள் தொடர்களில் வைட் வொஷ் …

  14. இலங்கையின் புதிய அதிரடி வீரர் சீகுகே பிரசன்னாவின் சாதனைத் துளிகள் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சிக்ஸ் அடிக்கும் சீகுகே பிரசன்னா. | படம்: ஏ.எஃப்.பி, இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி பிளங்கெட்டின் கடைசி பந்து சிக்ஸருடன் ‘டை’ ஆக, இலங்கை வீரர் சீகுகே பிரசன்னாவின் அதிரடி அரைசதம் சில சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. அன்று அயர்லாந்துக்கு எதிராக ஜெயசூரியாவின் 48 பந்து சத சாதனையை நூலிழையில் நழுவ விட்டு 46 பந்துகளில் 95 விளாசிய இந்த புதிய அதிரடி வீரரான சீகுகே பிரசன்னா, நேற்று இங்கிலாந்துக்கு எதிராக 24 பந்துகளில் அரைசதம் கண்டார், அயர்லாந்துக்கு எதிராக 23 பந்துகளில் அரை சதம் கண்டவர் அடுத்த போட்டியிலேயே 24 பந்துகளில் அரைசதம் …

  15. இலங்கையின் முன்னாள் 19 வயதுக்குட்பட்ட வீரர் அக்ஷு பெர்னாண்டோ காலமானார் Published By: Digital Desk 3 30 Dec, 2025 | 01:16 PM (என்.வீ.ஏ.) South Asians & Diaspora இலங்கையின் முன்னாள் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர் அக்ஷு பெர்னாண்டோ இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) காலமானார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையும் உயிரும் துரதிர்ஷ்டவசமாக அகால முடிவுக்கு வந்ததை அடுத்து கிரிக்கெட் சமூகத்தினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நியூஸிலாந்தில் 2010இல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண் கிரிக்கெட் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அக்ஷு பெர்னாண்டோ, 2018 டிசம்பர் 28ஆம் திகதியன்று கல்கிஸ்ஸை கடற்கரைக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில…

  16. இலங்கையின் வெற்றிகரமான உலகக்கிண்ணம் - 1996 வில்ஸ் உலகக்கிண்ணம் என்றழைக்கப்பட்ட 1996ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக்கிண்ணத் தொடரானது 6ஆவது உலகக்கிண்ணமாக அமைந்தது. இந்திய, இலங்கை, பாகிஸ்தான் நாடுகள் இணைந்து கூட்டாக நடாத்திய இந்த உலகக்கிண்ணம், இலங்கை அணியால் வெற்றிகொள்ளப்பட்டது. இலங்கை அணி இந்த உலகக்கிண்ணத்தை வெற்றிகொண்டது என்பதற்கப்பால், இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றை மாற்றும் தொடராக இது அமையும். இலங்கை அணி உலகக்கிண்ணத்தை இதுவரை வென்றுள்ள ஒரே சந்தர்ப்பமாகவும் இது காணப்படுவதால் (டுவென்டி டுவென்டி போட்டிகளின் உலகத் தொடர் உலகக்கிண்ணம் என்றழைக்கப்படுவதில்லை. அவை 'உலக டுவென்டி டுவென்டி' என்றே அழைக்கப்படுகின்றன.) அந்தத் தொடரை மீட்டுப் பார்க்கலாம். ஆயிரத்துத் தொள்ளாயிரத்த…

  17. இலங்கையின் வெளியேற்றத்திற்கு சனத்தும் கிரிக்கெட் சபையும் காரணமா? தலைப்பிற்கான குறுகிய விடை: ஆம். அவர்களின் பங்கு மிக முக்கியமானது. விரிவான விடைக்குத் தொடர்ந்து வாசிக்குக. கிரிக்கெட் உலகக்கிண்ணப் போட்டிகளில் 1996ஆம் ஆண்டு இலங்கை சம்பியன்களாக மாறியதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாகச் சிறப்பான பெறுபேறுகளையே இலங்கை வெளிப்படுத்தி வந்திருக்கிறது. அடுத்த உலகக்கிண்ணத்தில் (1999) ஆரம்பத்திலேயே வெளியேறியிருந்தாலும், 2003ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தில் அரையிறுதி வரையும், 2007ஆம் ஆண்டும் 2011ஆம் ஆண்டு உலகக்கிண்ணங்களில் இறுதிப் போட்டி வரையும் இலங்கை முன்னேறியிருந்தது. அதன்படி, இவ்வாண்டு இடம்பெறும் உலகக்கிண்ணத் தொடரிலும் இலங்கை அணி மீது எதிர்பார்ப்புக்கள் காணப்பட்டன. நியூசிலாந்து அண…

  18. இலங்கையின்... 19 வயதுக்குட்பட்ட, கிரிக்கெட் அணிக்குள் நுழையும்... மற்றொரு தமிழ் வீரர்! தோமியன் 1ஆவது XI துடுப்பாட்ட அணியின் துணைத் தலைவர் கனிஸ்டன் குணரத்னம், இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட அணியில் விளையாடத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் மாகாண போட்டியில் சிறப்பாக செயற்பட்டதன் பின்னணியில் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர், இந்த வார இறுதியில் 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியுடன் இங்கிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். தோமியன் துணைக் தலைவரும், தொடக்க வேகப்பந்து வீச்சாளருமான கனிஸ்டன் குணரத்னம், சமீபத்தில் முடிவடைந்த இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட…

  19. இலங்கையிலிருந்து புறப்படவுள்ள பிபா கிண்ணம் பிபா உலகக் கிண்ணத் தொடரின் வெற்றிக் கிண்­ணத்தை உலகம் பூரா­கவும் கொண்டு செல்லும் பய­ணத் திட்டத்தின் முத­லா­வது நாடாக இலங்கை திகழ்­கின்­றது. அந்தவகையில், பிபா உலகக் கிண்ணத் தொடரின் வெற்றிக் கிண்ணம் நாளை இலங்­கைக்கு எடுத்துவரப்படவுள்ளது. 21ஆவது பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடர் இந்த வருடம் ஜூன் 14ஆம் திகதி முதல் ஜூலை 15ஆம் திகதி வரை ரஷ்யாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வெற்றிக் கிண்ணத்தை உலகம் பூராகவும் கொண்டு செல்லும் பயணத்தின் நான்காவது முறையாக இடம்பெறும் இந்த வருட பயணம் இலங்கையில் இருந்து ஆரம்பிக்கின்றது. மொத்தம் 54 நாடு­க­…

  20. இலங்கையில் அடுத்த ஆண்டு முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா, வங்காள தேசம் பங்கேற்பு இலங்கையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 8-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதில் இந்தியா, வங்காள தேசம் பங்கேற்கிறது. இலங்கை சுதந்திரம் அடைந்து 70-வது ஆண்டு ஆவதை கொண்டாடும் வகையில் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடத்த அந்நாட்டுக்கு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. அந்த தொடருக்கு ‘நிதாஹாஸ் டிராபி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இலங்கையுடன் இந்தியா, வங்காள தேசம் அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடர் 2018 மார்ச் மாதம் 8-ந்தேதி …

  21. இலங்கையில் உருவாகும் ஒரு தமிழ் கிரிக்கெட் வீரன். சாதிக்கத்துடிக்கும் தமிழ் இளைஞனின் வாக்குமூலம். "இலங்கை அணிக்குள் சகல துறை வீரனாக களம் புகுவேன்" இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளன் அருண் பிரகாஷுடனான நேர் காணல்.

  22. இலங்கையில் ஐ.சி.சி சம்பியன் கிண்ணம் : ரசிகர்களுக்கு புகைப்படம் எடுக்க சந்தர்ப்பம் இவ்வாண்டு இடம்பெறவுள்ள ஐ.சி.சி . சம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் உத்தியோகபூர்வ கிண்ணம் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது. ஐ.சி.சி. சம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இங்கிலாந்தில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் குறித்த கிரிக்கெட் தொடரில் பங்குபற்றும் 8 நாடுகளுக்கும் உத்தியோகபூர்வ கிண்ணம் எடுத்துச்செல்லப்படுகின்றது. அந்தவகையில் நேற்று உத்தியோகபூர்வ கிண்ணம் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டது. இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சம்பியன் கிண்ணத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் …

  23. 27 MAY, 2024 | 03:59 PM லைக்கா ஞானம் அறக்கட்டளை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து (FFSL) நாட்டின் காற்பந்துதுறையில் ஒரு புதிய மைல்கல்லை அடையும் முயற்சியாக 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான காற்பந்தாட்டப் போட்டித் தொடர் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் போட்டிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பு, தாஜ் சமுத்ரா ஹோட்டலில் திங்கட்கிழமை (27 ) இடம்பெற்றது. நிகழ்வில் லைக்கா குழுமத்தின் ஸ்தாபகத் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் இணை நிறுவுனருமான அல்லிராஜா சுபாஸ்கரன், லைக்கா ஹெல்த்தின் தலைவரும் லைக்கா ஞானம் அறக்கட்டளையின் இணை நிறுவுனருமான பிரேமா சுபாஸ்கரன், லைக்கா குழுமத்தின் பிரதித் தலைவர் பிரேம் சிவ…

  24. இலங்கையில் கிரிக்கெட் சுற்றுப் போட்டி ; இந்திய கிரிக்கெட் வீரர் அகால மரணம் இலங்கை வந்துள்ள இந்திய கிரிக்கெட் வீரரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையில் இடம்பெறும் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த 12 வயதான வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பமுனுகம ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் நீச்சலில் ஈடுபட்ட வீரர் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் இன்றைய தினம் பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது. இலங்கையில் கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்காக 19 இந்திய இளம் வீரர்கள் இங்கு வந்துள்ளமை குறிப…

  25. இலங்கையில் கிரிக்கெட் மிகவும் அவமானத்திற்கு உள்ளாகி உள்ளது இலங்கையில் தற்போது கிரிக்கெட் விளையாட்டு மிகவும் அவமானத்திற்கு உள்ளாகி உள்ளதாக முன்னாள் இலங்கை அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். போட்டிகளில் தோற்பது குறித்தும், வீரர்களின் ஒழுக்கம் குறித்தும் தற்போது பேசப்பட்டு வருவதாகவும் தான் அணித் தலைவராக இருந்தபோது நாட்டிற்காக விளையாடிய வீரர்கள் மட்டுமே அணியில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறான ஒரு அணி இருந்ததால் தங்களுக்கு உலக கிண்ணத்தை வெல்ல முடியுமானதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய வீரர்களின் ஒழுக்கம் சீர்குலைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=146588

    • 0 replies
    • 818 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.