அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
இலங்கை தொடர்பான ஐநா மீளாய்வு அறிக்கையும், பொறுப்புக்கூறலுக்கான சாத்தியப்பாடுகளும்..!!!
-
- 0 replies
- 235 views
-
-
சுதந்திர தினத்தையொட்டி தமிழர்கள் நடாத்திய போராட்டங்கள் – நிலாந்தன். February 19, 2023 “சிவாஜிலிங்கம் தனது ஆதங்க ஆவேசத்தை வெளிப்படுத்துகிறார். இது அவரது உரிமை. அவரது ஆவேச கோரிக்கைகள் தமிழ் மக்களின் ஆவேச கோரிக்கைகள்தான். எனக்கு அதில் மாற்று கருத்து தெரியலை. ஆனால் இவர் இப்படி தன்னந்தனி மனிதராக இதை செய்யும்போது, அவர் முன்வைக்கும் கோஷங்களும் பலவீனமடைகின்றனவே? தவிர்க்க முடியாமல் ஒரு கோமாளி தோற்றப்பாடும் ஏற்படுகிறதே? இவற்றை இன்னமும் கட்சி, இயக்கரீதியாக பலமாக திட்டமிட்டு அமைப்புரீதியாக செய்ய முடியாதா?” இவ்வாறு கேட்டிருப்பவர் மனோகணேசன். சுதந்திர தினத்தையொட்டி யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வில் பங்குபற்றுவதற்காக வருகை தந்த ஜனாத…
-
- 0 replies
- 528 views
-
-
இலங்கையின் வடக்கில் இராணுவ மயமாக்கல் தொடர்பில் வடக்கு மாகாண சபை முதல் சர்வதேச நாடுகள் வரை குற்றம் சுமத்தி வருகின்றன. குறிப்பாக இராணுவத்தினரின் இந்த நடவடிக்கை மிகவும் சாதாரணமானதல்ல என்றும் பல்வேறு திட்டங்களை பின்புலமாக கொண்டது என்றும் பல்வேறுபட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வடக்கில் உள்ள குளோபல் செய்தியாளர் ஒருவர். குறிப்பிடுகிறார் வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைநகரம் என வருணிக்கப்பட்ட கிளிநொச்சியில் புதுவருட தினத்தை முன்னிட்டு இராணுவத்தினர் சில நிகழ்வுகளை நடத்தியுள்ளனர். வடக்கில் இராணுவத்திற்கும் மக்களுக்கும் நல்ல உறவு காணப்படுகிறது என்பதை காட்டுவதற்கே இந்த நிகழ்வு என்கிறார் வடக்கில் உள்ள அரசியல் அவதானி ஒருவர். இதை இராணுவத்தின் அரசியல் நிகழ்வு என்றும் அவர் அட…
-
- 0 replies
- 578 views
-
-
இனவாத நிகழ்ச்சி நிரலுக்குள் இனப்பிரச்சினை விவகாரம் by A.Nixon - on July 9, 2015 படம் | Buddhika Weerasinghe/ Getty Images, THE HUFFINGTON POST இலங்கையில் வாழும் மக்களின் பிரச்சினைகள் பொதுவானவை என்ற அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் செயற்படுகின்றன. இந்த இரண்டு பிரதான கட்சிகள்தான் இந்த நாட்டில் மாறி மாறி ஆட்சி புரிந்தும் வருகின்றன. மக்களின் பிரச்சினைகள் பொதுவானவை என்ற கருத்து இந்த இரு கட்சிகளிடமும் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, தமிழ் மக்களின் 60 ஆண்டுக்கும் மேற்பட்ட அரசியல் கோரிக்கைகளின் முக்கியத்துவத்தை குறைப்பது. இரண்டாவது, தமிழ் மக்கள் சார்ந்து சர்வதேச ரீதியாக வரக்கூடிய அழுத்தங்கள், யோசனைகளை தவிர்ப்பது. பிரதான நோக்கம்…
-
- 0 replies
- 237 views
-
-
பொது வேட்பாளர் வந்து விட்டார் - நிலாந்தன் தமிழ்ப்பொது வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு இப்பொழுது விடை கிடைத்து விட்டது. ஆனால் கடந்த சில வாரங்களாக அந்த கேள்வியை முன்வைத்து பல்வேறு விதமாக விமர்சிக்கப்பட்டது. தமிழ் மக்கள் பொதுச்சபையும் கட்சிகளும் சேர்ந்து உருவாக்கிய பொதுக் கட்டமைப்பினால் ஒரு பொது வேட்பாளரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது ஒரு மிகப்பெரிய பலவீனமாக உருப்பெருக்கிக் காட்டப்பட்டது. ஆனால் உண்மையில் நடந்தது என்ன ? தமிழ் மக்கள் பொதுச்சபை என்று அடக்கப்படும் அமைப்புக்கான முதலாவது கருநிலைச் சந்திப்பு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வவுனியாவில் இடம் பெற்றது. அதன் பின் தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் கட்சிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஜூன் மாதம் 2…
-
- 0 replies
- 302 views
-
-
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன். கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூடியது. வழமைபோல குழப்பம். தேர்தல் முடிவுகளில் இருந்து அந்த கட்சி கற்றுக்கொள்ளவில்லை என்பதனை அந்த செயற்குழு கூட்டம் நிரூபித்தது. இது ஒரு புறமிருக்க, அந்தக் கூட்டத்தின் முடிவில் கூட்டத்தில் நடந்தவைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுமந்திரன் கூறிய ஒரு விடயத்தை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். “கடந்த காலத்தில் அரசியலமைப்பு உருவாக்கம் சம்பந்தமான விடயங்களில் தமிழரசு கட்சி தீர்க்கமான நிலைப்பாடுகளை எடுத்திருக்கின்றது. சில வரைவுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. சில வரைவுகளோடு நாங்கள் இணங்கி இருக்கின்றோம். ஆகவே அது எங்களுடைய நிலைப்பாடு…. அதனைத் தொடர்ந்து கோத…
-
- 0 replies
- 267 views
-
-
அமைச்சு ஊடாக வெல்லப்பட உள்ள அகங்கள்? காரை துர்க்கா / 2019 டிசெம்பர் 24 தமிழர்களின் மனங்களை வெல்ல, விசேட அமைச்சு விரைவில் உருவாக்கப்படல் அவசியம் என, ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “இதற்காகத் தனியான அமைச்சொன்றை உருவாக்க வேண்டும்; தமிழ் பேசும் அரசியல்வாதிகளை அன்றி, மக்களை இணைத்துக் கொண்டு, இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்; அந்தப் பொறுப்பை என்னிடம் வழங்கினால், அதை நான் சிறப்பாக வழி நடத்தி, வடக்கையும் தெற்கையும் இணைப்பேன்” என்றும் அவர் தெரிவித்து உள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்ன, அவர்களின் உணர்வு என்ன, தமிழ் மக்களின் அபிமானத்தை எவ்வாறு பெற்றுக் கொள்வது? போன்ற விடயங்…
-
- 0 replies
- 817 views
-
-
[size=4]"இராணுவ வெற்றியைக் கொண்டாடுவதை இலங்கை அரசாங்கம் நிறுத்த வேண்டிய நேரம் இது. இனங்களுக்கு இடையில் உள்ள எல்லா வேறுபாடுகளையும், களையும் வகையிலான நல்லிணக்கச் செயற்பாடுகளை இப்போதே தொடங்கப்பட வேண்டும்." -இது அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட - 2011ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றவரான லைபீரிய மனிதஉரிமைச் செயற்பாட்டாளர் லேமா ரொபர்ட்டா குபோவீ வெளியிட்ட கருத்து. போருக்குப் பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையில், அரசாங்கம் அந்த இலக்கை அடைந்துள்ளதா என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது. [/size] [size=4]போர் முடிவுக்கு வந்த பின்னர், அந்த போரின் வெற்றியைக் கொண்டாடுவதில் ஒவ்வொரு ஆண்டும் கா…
-
- 0 replies
- 542 views
-
-
அரசியல் அறம் மறந்த மாவை புருஜோத்தமன் தங்கமயில் / 2020 மார்ச் 18 தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கவீந்திரன் கோடீஸ்வரன், அவர் சார்ந்திருந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தை (டெலோ) விட்டு, சொல்லாமல் கொள்ளாமல் தமிழரசுக் கட்சியில் இணைந்திருக்கிறார். அவர் இம்முறை தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அம்பாறை மாவட்ட வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் கூட்டத்தின் போதே, இந்த விடயம் டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கு, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவால் சொல்லப்பட்டிருக்கின்றது. ஒரு மாவட்டத்தின் தலைமை வேட்பாளர், அதுவும் கடந்த பொதுத் தேர்தலில் தன்னை முன்னிறுத்திய கட்சிக்கு இறுதிவரை அறிவிக்…
-
- 0 replies
- 881 views
-
-
முதலமைச்சர்களுக்கு நிர்வாக வல்லமை இல்லையா?
-
- 0 replies
- 411 views
-
-
அதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தின் குறியீடு தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஜூன் 11 அதிகாரம், என்றென்றைக்கும் ஆனதல்லளூ மாற்றங்கள் வந்தே தீரும். உலக வரலாற்றில், நிலைத்திருந்த சாம்ராஜ்யங்கள் என்று எதுவும் இல்லை. கிரேக்கர் தொடங்கி, அமெரிக்கர் வரை யாரும் விதிவிலக்கல்ல. மாற்றங்கள் வருவதற்குக் காலமெடுக்கும். ஆனால், அந்த மாற்றங்களை, ஒரு சிறுபொறி தொடக்கி வைக்கும்; அது, காட்டுத் தீயாகப் பரவும்; ஆதிகார அடுக்குகளை அசைக்கும்; மக்களைச் சிந்திக்க வைக்கும். நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் இடையிலான பிரிகோடு, மிகத் தெளிவாக இருக்கும். இது, மக்களின் தெரிவை மிக இலகுவாக்கும். அவ்வாறான ஒரு சிறுபொறியே, இப்போது பற்றியுள்ளது. ஆனால், இது காட்டுத் தீயாகுமா, காணாம…
-
- 0 replies
- 423 views
-
-
2009 மேயிற்கு பின்னர் தமிழ் மக்களுக்கு முன்னாலிருந்த ஒரேயொரு தெரிவு ஜனநாயக வழிமுறைகளை அதி உச்சமாக கையாளுவது ஒன்றுதான். அந்த வகையில் கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரதான அரசியல் தலைமையாக இயங்கிவருகிறது. ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் கொழும்பிற்கு நெருக்கடிகளை கொடுக்கக் கூடிய ஒரு வலுவான ஜனநாயக தலைமையாக மேலெழும்ப முடியவில்லை. இதற்கு கூட்டமைப்புக்குள் காணப்படும் ஒருகட்சி மேலாதிக்கமும், சில நபர்களின் ஆதிக்கமுமே பிரதான காரணமாகும். விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் தலைமையாக இருந்த வரைக்கும் தமிழர் அரசியல் அவர்களின் முழுமையான மேலாதிக்கத்தின் கீழேயே இருந்தது. இவ்வாறானதொரு சூழலிலேயே விடுதலைப் புலிகளின் ஆலோசனையின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டம…
-
- 0 replies
- 628 views
-
-
இந்திய - இலங்கை நலன்களுக்குள் ஈழ தமிழர்களின் அபிலாசைகள் சிதைந்து போகுமா.? புதிய அரசாங்கம் இந்தியா பற்றிய வெளியுறவை மிக நுணுக்கமாக கையாளும் வரைபை உருவாக்கிவருகிறது.அதில் தமிழ் மக்களது இனப்பிரச்சினை தொடர்பில் 13 சீர்திருத்தம்; அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. அது இலங்கை இந்திய உறவு தொடர்பானதும் இந்தியாவினது இலங்கை தொடர்பான கொள்கை சார்ந்ததாகவும் அமைந்திருந்தது. இது தற்போது காலவதியாகும் என்ற வாதம் இலங்கைப்பரப்பில் தற்போது அதிக பேசுபொருளாகியுள்ளது. இக்கட்டுரையும் இந்தியா - இலங்கை உறவில் ஏற்பட்டுவரும் மாற்றங்களையும் அதனை இலங்கை கையாள ஆரம்பித்துள்ள பாங்கையும் தமிழருக்குள்ள நெருக்கடியையும் தேடுவதாக அமைந்துள்ளது. முதலாவது கடந்த 21.08.2020 தமிழ் தேசியக் கூட்டமைப…
-
- 0 replies
- 462 views
-
-
சித்திரவதைகளை முற்றாக தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் இலங்கையில் இரகசிய முகாம்கள் இருந்தனவா என்றும் வெள்ளை வேன் கடத்தல் சம்பவங்கள் தொடர்கின்றனவா எனவும் சித்திரவதைக்கு எதிரான ஐக்கியநாடுகள் குழுவின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவின் 59 ஆவது அமர்வு நேற்று முன்தினம் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் ஆரம்பமானது. இந்த அமர்வில் இலங்கை விவகாரம் தொடர்பில் ஆராயப்பட்டபோதே இவ்வாறான கேள்விகளை அந்தக்குழுவின் உறுப்பினர்கள் எழுப்பியுள்ளனர். இலங்கையின் யுத்தகாலத்தில் இரகசிய முகாம்கள் பேணப்பட்டதா? பொறுப்புக்கூறல் பொறிமுறையின்…
-
- 0 replies
- 373 views
-
-
விபரீதங்களோடு விளையாடும் விந்தை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அறிவியலுக்கும் அபத்தத்துக்கும் இடையிலான பிரிகோடு, மிகவும் சிறியது. அறிவியலை விட, அபத்தத்துக்கு முக்கியத்துவம் அதிகமாகிப் போன உலகத்தில் நாம் வாழ்கிறோம். பயன் யாதெனில், கொரோனா வைரஸின் இரண்டாவது அலை, இப்போது ஆட்கொண்டுள்ளது. இது எதிர்பாராதது அல்ல; ஆனால், ‘முன்னே ஓடவிட்டுப் பின்னே துரத்தும்’ வித்தையை, இந்தப் பெருந்தொற்றை வைத்து, அரசியல்வாதிகள் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஆபத்தான விளையாட்டைப் பெரும்பாலான நாடுகள் விளையாடுகின்றன. அந்த நாடுகள், தமது சொந்த மக்களின் உயிரைப் பணயம் வைத்து, இந்த வித்தையை ஆடுகின்றன. இங்கே எழுகின்ற கேள்வி யாதெனில், இவ்வாறானதோர் ஆபத்துப் பற்றி, அறிவியலாளர்கள் தொடர்ச்சியாகச் சொல்லி…
-
- 0 replies
- 829 views
-
-
http://www.youtube.com/watch?v=loPDteNKMDY
-
- 0 replies
- 738 views
-
-
மகாவம்சம் பீடித்த மாந்தர் திசராணி குணசேகரா ஆங்கிலத்திலிருந்து தமிழில்: மணி வேலுப்பிள்ளை “ஒரு குழுமத்தின் மீதான காழ்ப்பு, இன்னொரு குழுமத்தின் மீதான காழ்ப்புக்கு வழிவகுக்கக்கூடும்.” அமார்த்தியா சென் (The Argumentative Indian) இலங்கையில் கட்டுக் கதைக்கும் வரலாற்றுக்கும் இடையே உள்ள எல்லைக்கோடு அருவமானது; ஆபத்தானது. இலங்கை அரசியலில் இந்த மர்மக்கதையுலகு தீர்க்கமான பங்குவகித்து வருகிறது. ஓர் இந்திய ஆரிய இளவரசி ஒரு சிங்கத்துடன் கூடிவாழ்கையில் உதித்த இனத்தைச் சேர்ந்தவர்களே சிங்களவர்கள் என்று சிங்கள மாணவர்களுக்கு புகட்டப்பட்டு வருகிறது. கதை படிக்கும் வேளையில் அல்ல, வரலாறு படிக்கும் வேளையிலேயே இந்தக் கதையை அவர்கள் படிக்கிறார்கள். இந்தச் சிங்கக் கதை ஒரு மகாவம்சக் கதை. பெரும்…
-
- 0 replies
- 834 views
-
-
ஒரு பலமான கூட்டணிக்கான காலம் - யதீந்திரா அண்மையில் பிரதான தமிழ் கட்சிகள் இணைந்து கலந்துரையாடியதாக செய்திகள் வெளியாயிருந்தன கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தவிர ஏனைய கட்சிகள் அணைத்தும் இதில் பங்குகொண்டிருக்கின்றன. மாகாண சபை தேர்தல் இடம்பெறும்பட்சத்தில் மாவை சேனாதிராசாவை வடக்கு மாகாண முதலமைச்சராக ஏற்றுக்கொள்வதில் கட்சிகளுக்கடையில் இணக்கம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. அதே வேளை ராஜதந்திர சமூகத்தை அணுகுவதற்கான குழுவொன்றையும் நிமியத்திருக்கின்றனர். ஆனால் இநதக் கலந்துரையாடல்களில் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், கூட்டமைப்பின் பேச்சாளராக தொடர்ந்தும் அறியப்படும் மதியாபரனம் ஆபிரகாம் சுமந்திரன் பங்…
-
- 0 replies
- 508 views
-
-
சீனாவை எதிர்க்க விரும்பாத தமிழ்த் தேசிய தலைமைகள் - யதீந்திரா இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் இறுதி வரைபு, மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அடுத்த வாரம் இது தொடர்பான இறுதி விவாதங்கள் இடம்பெறவுள்ளன. இந்த விவாதங்களின் போது, இலங்கையை பாதுகாக்கும் தலைமைப் பொறுப்பை சீனா எடுத்துக் கொள்ளும். ஏற்கனவே இது தொடர்பில் சீனா பகிரங்கமாக அறிவித்திருக்கின்றது. இலங்கையின் மீது புதியதொரு பிரேரணை என்னும் வாதம் மேலொழுந்த நாளிலிருந்து சீனா மிகவும் உறுதியான நிலையில் அதனை எதிர்த்து வந்திருக்கின்றது. இந்த விவகாரம் இலங்கையின் உள்விவகாரம். எனவே இதில் வெளியார் தலையீடு செய்ய வேண்டியதில்லை. இலங்கையை நாங்கள் நம்புகின்றோம். அதன் உள் விவகாரங்களை கையாளும் திறன் …
-
- 0 replies
- 554 views
-
-
தமிழ் மக்களுக்கெதிரான சர்வதேசக் குற்றங்களுக்கான பொறுப்புக் கூறலும் எதிர்கால வழிமுறைகளும் – கணநாதன் 135 Views இலங்கைத் தீவில் 2009ஆம் ஆண்டு இறுதிப் போரின் போது சர்வதேச மனிதவுரிமைச் சட்டங்கள், மனிதநேயச் சட்டங்கள் கடுமையாக மீறப்பட்டு, நடைபெற்ற போர்க் குற்றங்கள், மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இன அழிப்பு ஆகியவற்றுக்கான பொறுப்புக்கூறல், ஒரு தசாப்தம் தாண்டியும் எதுவித முன்னேற்றமுமின்றி தேக்க நிலையை அடைந்துள்ளது. இன்று சர்வதேச உறவுகளில் சர்வதேச சட்டங்களானது பெரும்பாலும் வலுமிக்க அரசுகளின் பூகோள நலன்களின் அடிப்படையில் தமக்குச் சாதகமாக தேர்ந்து பிரயோகிக்கும் முறைமையையே பின்பற்றி வருகின்றன. இவ்வரசுகளின் ஆதிக்கத்தின் …
-
- 0 replies
- 501 views
-
-
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்: மருதங்கேணி மக்களை நோக்கிய வசை மருதங்கேணியில் முன்னெடுக்கப்படவிருந்த கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம், ‘சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தி மீன்பிடித்தொழிலைப் பாதிக்கும் என்று விஞ்ஞான ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளதால்’ கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருதங்கேணி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று கடந்த 18ஆம் திகதி யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசம், வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி அமைப்பு மற்றும் வடமராட்சி கிழக்கு பட்டப்படிப்பு மாணவர் ஒன்றியம…
-
- 0 replies
- 428 views
-
-
நன்றி மறக்கும் அரசியலில் நின்று நிலைக்கும் குழிபறிப்பு Posted on July 18, 2021 by தென்னவள் 15 0 1971ல் ஜே.ஆரின் மகனை மனிதாபிமான விடுதலை செய்தார் சிறிமாவோ. 2015ல் தோற்றுப்போன மகிந்தவை பாதுகாப்பாக உலங்குவானூர்தியில் ஊருக்கு அனுப்பி வைத்தார் ரணில். அடுத்தடுத்து நாடாளுமன்ற ஆசனத்தை இழந்திருந்த சம்பந்தனுக்கு 2001ல் புதுவாழ்வு வழங்கினர் விடுதலைப் புலிகள். இவைகளுக்குக் கிடைத்த பிரதியுபகாரம்…… இலங்கைத் தீவின் அரசியல் பாதை சிங்களத் தேசியம், தமிழ்த் தேசியம் என இரண்டாகத் தனித்தனி வழியில் நீள்கிறது. சிங்களத் தேசியம் என்பது பௌத்தமும் இணைந்ததாக, கட்சிகளின் வேறுபாடுகளுக்குள்ளும் வளர்ச்சி பெற்றே செல்கிறது. ஆனால், தமிழ்த் தேசியம் 2009ம் ஆண்டு…
-
- 0 replies
- 288 views
-
-
-
- 0 replies
- 608 views
-
-
-
- 0 replies
- 845 views
-
-
வாரிசு அரசியலும் குடும்ப ஆட்சியும் ஜனநாயகமும் என்.கே.அஷோக்பரன் Twitter: @nkashokbharan வாரிசு அரசியல் என்பதை, ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் வாழையடி வாழையாக அரசியல் கட்சிகளின் தலைமை உட்பட்ட உயர்பதவிகளையும் அதன்வாயிலாக நாட்டின் ஆட்சியில் உயர்பதவிகளையும், தம்மகத்தே கொண்டுள்ளமை என்று வரையறுக்கலாம். சுருங்கக்கூறின், தகப்பன், தகப்பனுக்குப் பின்னர் மகன்; மகனுக்குப் பின்னர் பேரன் என, வாரிசுகள் அந்தப் பதவிகளைப் பெற்றுக்கொள்ளுதல் ஆகும். இதில் நேரடி வாரிசு அல்லாது, நெருங்கிய உறவுகள் அந்தப் பதவிகளை அடுத்ததாகப் பெற்றுக்கொள்வதையும் வாரிசு அரசியல் எனலாம். குடும்ப அரசியல் அல்லது குடும்ப ஆட்சி என்று தமிழில் நாம் சுட்டுவதை, ஆங்கிலத்தில் நெபொடிஸம் (Nepotism) என்பார…
-
- 0 replies
- 497 views
-