Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இளம் ஆய்வாளர் ஐ.வி.மகாசேனன்.

  2. திலீபனின் தியாகத்தைப் பின்பற்றுகிறோமா.? அண்மையில் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண, தியாக தீபம் திலீபன் அவர்கள், உண்ணா நோன்பிருந்து உயிரிழக்கவில்லை என்றும் நோயினாலேயே உண்ணா விரதத்திற்கு அனுப்பப்பட்டார் என்றும் வரலாற்றுப் பொய் ஒன்றைக் கூறி தமிழ் மக்களின் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளார். உண்மையில் 2009இற்குப் பின்னரான சூழலில் விடுதலைப் புலிகளை முறியடித்துவிட்டோம் என இலங்கை அரசு சொல்லி வரும் நிலையில், திலீபன் போன்ற உன்னதப் போராளிகளின் பெயர்களை கண்டும் அச்சப்படும் நிலையின் வெளிப்பாடாகவே இத்தகைய பேச்சுக்கள் வெளிவருகின்றன. எமது நிலத்தின் பெறுமதியை அதன் அடையாளத்தை அதன் உன்னதத்தை நாம் உணர்ந்துதான் வாழ்கிறோமா என்பதை குறித்து ஒரு சுய விசாரணை செய்யவேண்டிய …

  3. ஜனநாயகமும் கொரொனாவும் வி. சிவலிங்கம் நாம் இன்று வரலாற்றின் திருப்பு முனையில் நிற்கின்றோம். எமது மக்கள் உலகத்தினை உலுக்கிய முதலாம், இரண்டாம் உலகப் போர் அனுபவங்களைத் தற்போது நூல் வழியாகவே அறிய முடிகிறது. இருப்பினும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் துன்பங்களைச் சுமந்தவர்கள் இன்னமும் வாழ்கிறார்கள். அவர்கள் ஆண்டுகள் பல கடந்த போதிலும் அந்த அனுபவங்களைப் பகிரும்போது கண்ணீரைக் காண முடிகிறது. அவ்வளவு ஆழமான துன்பங்களை அவர்கள் அனுபவித்தார்கள். இவை ஒரு வகையில் போர் அனுபவங்கள் என்ற போதிலும் இப் போர் உலக அளவில் ஏற்படுத்திய தாக்கங்கள் பாரிய மாற்றங்…

  4. தமிழ்த் தேசிய தளத்தை பாதுகாப்பதற்கான உபாயம் என்ன? - யதீந்திரா அரசாங்கம் அதன் சிங்கள அடிப்படைவாத வேலைத்திட்டங்களை மிகவும் வேகமாக முன்னெடுத்துவருகின்றது. ஒரு புறம் ராஐபக்சக்கள் தொடர்ச்சியாக அதிகாரத்திலிருக்கக் கூடிய வகையிலான ஏற்பாடுகளை செய்வது, மறுபுறமாக வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசிய அரசியல் தளத்தை பலவீனப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது. மேற்படி இரண்டு வேலைத்திட்டங்களிலும், எந்தவொரு சமரசமுமின்றி அரசாங்கம் துரிதமாக நகர்ந்துகொண்டிருக்கின்றது. சிங்கள அடிப்படைவாதத்தின் குறீடாக எழுச்சியுற்றிருக்கும் ஒரு அரசாங்கத்திடமிருந்து இதற்கு மேல் வேறு எதனையும் எதிர்பார்க்கவும் முடியாது. எனவே இப்போது தமிழ்த் தேசியத் தரப்புக்கள் அதாவது தங்களது கட்சிகளின் பெயர்களில் தேசியத்…

  5. ராஜபக்சக்களின் மீள் எழுச்சியும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் தடுமாற்றமும் ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வுகள் 14ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில். தமிழ்க் கட்சிகள் எந்தவொரு கருத்து வெளிப்பாடுகளுமின்றி அமைதியாக இருக்கின்றன. கோட்டாபய ராஜபக்ச. மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கம் ஜெனீவாவின் இலங்கை தொடர்பான தீர்மானத்தில் இருந்து வெளியேறிய நிலையில், செப்பெரம்பர் மாத அமர்வு திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ள அமர்வில் இலங்கைத் தீர்மானம் பற்றி மீளாய்வு செய்யப்படுமா இல்லையா என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. மியன்மார், யேர்மன், கம்போடி…

  6. இந்தியா பதின்மூன்றாவது திருத்தத்தைப் பாதுகாக்குமா? - நிலாந்தன் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அடுத்த நாள் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்திருக்கும் கப்பிட்டல் டிவியில் நானும் யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி கணேசலிங்கமும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அதன்போது பதின்மூன்றாவது திருத்தத்தை அரசாங்கம் நீக்கினால் அதை இந்தியா தடுக்குமா என்று உரையாடப்பட்டது. அதற்கு கணேசலிங்கம் ஏற்கனவே இந்தியா வடக்கு கிழக்கு இணைப்பு பிரிக்கப்பட்ட பொழுது அதை எதிர்க்கவில்லை எனவே இனிமேலும் 13ஆவது திருத்தத்தில் கைவைத்தால் இந்தியா எதிர்க்கும் என்று எப்படி எடுத்துக் கொள்வது ?என்று கேட்டார். அரசாங்கம் 13 ஆவது திருத்தத்தை அகற்றக் கூடும் என்ற பேச்சு பலமாக அடிபடுகிறது. ராஜபக்சக்கள் இந்…

  7. உலகத்தமிழர் பேரியக்கம் உருவாக்கப்பட வேண்டும் - நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர்

  8. நிலந்த ஜெயவர்தனவின் தொலைபேசியை ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க உத்தரவு by : Jeyachandran Vithushan http://athavannews.com/wp-content/uploads/2020/07/bomb-attack.jpg 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுவெடிப்பை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு, தேசிய புலனாய்வுத் துறையின் தலைவர், சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜெயவர்தனவின் ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவுக்கு ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. நிலந்த ஜெயவர்தனவுக்கும், தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் இயக்குநர் சிசிரா மெண்டிஸுக்கும் இடையிலான கலந்துரையாடலின் பதிவு குறித்த தகவல்களை அடிப்படையாக கொண்டே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 …

  9. அரசமைப்பு அரசியலும் தமிழ்த் தேசமும் -என்.கே.அஷோக்பரன் “சிறந்ததை எதிர்பாருங்கள், பாரதுரமானதை எதிர்கொள்ளத் திட்டமிடுங்கள், வியப்படையத் தயாராக இருங்கள்” என்றார் பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் டெனிஸ் வெயிட்லி. இன்றைய சூழலில் சிறந்ததை எதிர்பார்க்க முடியாவிட்டாலும், பாரதுரமானதை எதிர்கொள்ளத் திட்டமிடவும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தாங்கிக்கொள்ளத் தயாராகவும் இருக்க வேண்டி, சூழல் ஏற்பட்டுள்ளது என்பதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன. சுதந்திர இலங்கையின் எந்தவோர் அரசியலமைப்பின் உருவாக்கத்திலும் தமிழ்த் தேசத்தின் பங்கு உள்வாங்க ப்படவில்லை என்பதுதான், பட்டாவர்த்தனமான உண்மை. சோல்பரி அரசியலமைப்பு என்பது பிரித்தானியர்கள் நீங்கள் சிறுபான்மையினர், உங்களுக்கு பிரிவு 29(2) த…

  10. தனிநாடு கோருகிறாரா விக்கினேஸ்வரன் - கவிஞர் தீபச்செல்வன். இலங்கையின் புதிய பாராளுமன்றத்தில் வடக்கின் முன்னாள் முதல்வரும் நீதியரசருமான விக்கினேஸ்வரனுக்கு எதிராக கடும் அலை வீசுகின்றது. ஆனால் இந்த எதிர்ப்பு என்பது விக்கினேஸ்வரனுக்கு எதிரான எதிர்ப்பல்ல. ஈழத் தமிழ் மக்களுக்கும் அவர்களின் கோரிக்கைகளுக்கும் அபிலாசைகளுக்கும் எதிரான எதிர்ப்பு. காலம் காலமாக இலங்கை பாராளுமன்றத்திலும் சிங்களப் பேரினவாதிகளின் மனங்களிலும் மண்டிய இனவாத்தின் எதிர்ப்பே. இலங்கைப் பாராளுமன்றம் என்பது தமிழர்களுக்குமான இடமாக இருந்தால் இந்த எதிர்ப்பலை எழுந்திருக்காது. அது சிங்களப் பாராளுமன்றமாக இருப்பதனால்தான் இத்தனை எதிர்ப்பும் வன்மமும். அப்படி என்ன தான் பேசிவிட்டார் விக்கினேஸ்வரன்? அல்லது அப்ப…

  11. விசுவலிங்கம் மணிவண்ணன் அவர்களின் செவ்வி

  12. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்காலம்

  13. http://www.kaakam.com/?p=1814 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்பாக உலகந்தழுவி தமிழர்களின் அரசியல் பரப்பில் கூடுதலாக ஒலிக்கப்படுவதும், அதிலும் கூடுதலாக அதன் உட்கிடைசார்ந்து மலினப்படுத்தப்படுவதுமான சொல் யாதெனில் “தமிழ்த்தேசியம்” எனலாம். தமிழீழ விடுதலைப் போராட்டம் களத்தினில் உயிர்ப்புடன் இருந்த காலத்தில் தமிழர்தேசம், தமிழர் தாயகம், தன்னாட்சியுரிமை, தமிழீழ விடுதலை, தமிழின விடுதலை, தமிழினவெழுச்சி போன்ற சொற்களே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அடையாளப்படுத்துவனவாக அரசியல் அரங்கில் இடைவிடாது ஒலிக்கப்பட்டு வந்தன. தமிழிய சிந்தனைத்தளத்தில் செயலாற்றும் முனைப்புக்கொண்ட புரட்சிகரமானோர்களிடத்தில் தமிழ்நாடு விடுதலை, தமிழ்த்தேசிய மீட்சி போன்ற சொல்லாடல்கள் வெகுமக்களிடத்தில் ப…

  14. வரலாற்று அனுபவங்களும் பாடம் கற்றுக்கொள்ளலும் ரொபட் அன்டனி புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது பாராளுமன்றத்தின் சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்: அமைச்சரவை பேச்சாளர் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற சகல கட்சிகளும் தமது யோசனைகளை சமர்ப்பிக்க முடியும்: வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகலஉறுப்பினர்களும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்: பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்று ஆட்சிக்கு வந்திருக்கின்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் விரைவில் புதிய அரசியலமைப்பை கொண்டுவரவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவி…

  15. பாராளுமன்ற உறுப்பினராகியுள்ள பிள்ளையான் பிணையில் வெளிவருவது சாத்தியமா? BharatiSeptember 12, 2020 இரா.துரைரத்தினம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் பிள்ளையான் என அழைக்கப்படும் ரி.எம்.வி.பி கட்சி தலைவர் எஸ். சந்திரகாந்தன் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதும் அவர் பிணையில் விடுதலை செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அவரின் கட்சி சார்ந்தவர்களிடம் காணப்பட்டது. ஆனால் பயங்கரவாத தடைச்சட்டம் பற்றி அறிந்தவர்கள் அந்த நம்பிக்கையை கொண்டிருக்க மாட்டார்கள். ஏனெனில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு…

  16. "20வது திருத்த சட்டமும் இலங்கையின் எதிர்காலமும்." ஆய்வாளர் கலாநிதி திரு.கீத பொன்கலன்

  17. 9/11: 19 ஆண்டுகளின் பின்னர் இலங்கை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 செப்டெம்பர் 11 , மு.ப. 09:12 - 0 - 38 AddThis Sharing Buttons இன்றைக்கு 19 ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், உலகையே புரட்டிப் போட்டது. அதன் பின்னரான உலக ஒழுங்கில், உருவான சொல்லாடல்கள் இன்னும் வலிமையானதாக இருக்கின்றன. அத்தாக்குதலின் பின்னர், அமெரிக்கா உருக்கொடுத்த ‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்’ என்ற எண்ணக்கரு, உலகெங்கும் எதிரொலித்தது; விடுதலைப் போராட்ட இயக்கங்களைத் தின்…

  18. குருபார்வை; 13 வது திருத்தச் சட்ட நீக்கம் சாத்தியப்படுமா? படும்… ஆனால் படாது….! BharatiSeptember 10, 2020 புதிய அரசுப் பொறுப்புக்களை ஏற்று இரண்டு வாரங்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில் அரசுக்கு அழுத்தங்களை வழங்குவோர் ஒருபுறம், விமர்சிப்போர் இன்னொருபுறம், அரசுக்குள் நிலவும், அதிருப்தியாளர்களின் உளவியல் நிலையை பயன்படுத்தி அரசின் பெரும்பான்மைக்கு பங்கம் ஏற்படுத்தி அரசியல் அநுகூலங்களைப் பெற்றுக் கொள்ள திரைமறைவு நடவடிக்கைகளை மேற்கொள்ள தீவிரம் காட்டுவோர் மற்றொரு புறமுமாக நின்றுகொண்டு பிரச்சினைகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளமையானது நாட்டின் எதிர்காலத்திற்கு அவ்வளவு நல்ல சகுனமாக இல்லை. தேசிய ரீதியில் ஏராளம் பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றாக…

  19. மீதமிருக்கின்ற ஜனநாயகம் இலங்கையின் அரசமைப்பின் சில விடயங்களில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான உத்தேச 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில், ஆட்சியாளர்களின் அதிகார வேட்கை மற்றும் ஜனநாயகத்தின் ஆட்சி பற்றிய கேள்விகளும் சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்காலம் தொடர்பிலான ஐயப்பாடுகளும் மேலெழுந்துள்ளன. புதிய திருத்தச் சட்டமூலமானது, ‘ஜனநாயகத்தை இல்லாதொழிக்கும் செயற்பாடு’ என்று, பிரதான எதிர்க்கட்சிகளும் சில சிறுபான்மைக் கட்சிகளும் கூறிவருகின்றன. ஆனபோதிலும், ஆளும் பொதுஜன பெரமுன, மேற்குறிப்பிட்ட விமர்சனங்களை எல்லாம் கணக்கிலெடுக்காமல், நாட்டின் ஸ்திரத்தன்மையை இது உறுதிப்படுத்துவதற்கான திருத்தமே என்றும் இச்சட்டமூலத்தை நிறைவேற்ற…

  20. 20ஆவது திருத்தமும் கொள்கையற்ற அரசியலும் எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 செப்டெம்பர் 10 , மு.ப. 11:51 நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்ய வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற, எந்தவோர் அரசாங்கமும் முன்வராத நிலையில், ஜனாதிபதியின் அதிகாரங்களை ஓரளவு கட்டுப்படுத்தும் வகையில், மக்கள் விடுதலை முன்னணியின் நெருக்குவாரத்தின் பேரில், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, 2001ஆம் ஆண்டில் 17ஆவது அரசமைப்புத் திருத்தத்தை முன்வைத்தார். ஜனாதிபதி தமது நிறைவேற்று அதிகாரங்களை எதேச்சாதிகார முறையில் பாவிக்காது தடுப்பதற்காக, அரசமைப்புச்…

  21. ராஜபக்‌ஷக்களின் 20ஆவது திருத்தத்தினூடான செய்தி புருஜோத்தமன் தங்கமயில் / 2020 செப்டெம்பர் 10 , பி.ப. 12:24 இலங்கை அரசமைப்பில் 18ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு இன்றோடு சரியாக 10 ஆண்டுகளும் இரண்டு நாள்களும் ஆகின்றன. 2005 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த ராஜபக்‌ஷக்கள் தங்களது அதிகார எல்லையை விஸ்தரிக்க ஆரம்பித்து அதன் அதியுச்ச எல்லையை செப்டெம்பர் 08, 2010இல் 18ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் காலாகாலத்துக்குமாக இறுதி செய்ய நினைத்தார்கள். நாடாளுமன்றம் என்ற ஒன்றோ அதற்குள் எதி…

  22. “பொனப்பாட்டிச அரசமைப்பை நோக்கி நகரும் இலங்கை அரசியல்” -கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் இலங்கை அரசியலில் இருபதாவது திருத்த சட்டமூலத்தின் வர்த்தகமானி அறிவிப்பின் பிரகாரம் அதிகாரத்திற்கான போட்டியும் கட்சி அரசியலின் ஆதிக்கமும் தொடர் விடயமாக நிகழ்ந்து வருவதனை பதிவு செய்துள்ளது. சுதந்திரத்திற்கு பின்பு அத்தகைய அரசியல் செல்நெறி வடக்கு கிழக்கினை மட்டுமல்ல இலங்கைத் தீவு முழுவதையும் ஒர் ஆரோக்கியமான அரசியல் சமூகமாக அடையாளப்படுத்துவதில் தவறுவதற்கு மூலாதாரமாக அமைந்துள்ளது. கட்சிகளும் ஆட்சியாளரும் காலத்திற்கு காலம் அரசியலமைப்பினை திருத்துவதும் மாற்றுவதும் மரபாகக் கொண்டுள்ள போக்கினை அவதானிக்கின்ற போது அத்தகைய முடிபுக்கே வரவேண்டிய நிலை தவிர்க்க முடியாததாகும்.. இது ஒரு அரதிகாரப் போட்ட…

  23. ராஜீவ் 87இல் சிங்களவரால் கொல்லப்பட்டிருந்தால்... - என்.சரவணன் (இந்தியாவுக்கு இன்றும் சவாலிடும் ராஜீவைத் தாக்கிய விஜேமுனி) “ராஜீவ் காந்தியை அன்றே கொலை செய்யும் இலக்கில் தான் தாக்கினேன். தப்பிவிட்டார்” இப்படி சமீபத்தில் நேர்காணல் கொடுத்திருப்பவர் ரோஹன விஜித முனி. யார் இந்த விஜிதமுனி. 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்துகொள்வதற்காக ராஜீவ் காந்தி இலங்கை வந்திருந்த போது இராணுவ அணிவகுப்பில் வைத்து தாக்கிய கடற்படையினன் தான் இந்த விஜிதமுனி. இன்று வரை இலங்கையில் பெரிய ஹீரோவாக சிங்கள மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தப்படும் பிரமுகர். அதுமட்டுமன்றி இன்றுவரை ராஜீவ் காந்தியைத் தாக்கியதை பெருமையாக ஊடகங்களிடமும், கூட்டங்களிலும் பகிரங்கமாக பேச…

  24. இனவாதமின்றி இனி அணுவும் அசையாது September 6, 2020 தாயகன் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் உயர் நீதிமன்ற நீதியரசருமான சி.வி.விக்கினேஸ்வரன் கடந்த பாராளுமன்ற அமர்வில் தன் இனத்தின், மொழியின் தொன்மை தொடர்பில் நிகழ்த்திய உரைகள் தென்னிலங்கையில் ”ஒரு தமிழன் இலங்கைக்கு உரிமை கோரி விட்டான்” என்ற இனவாதத் தொனியில் ஆளும், எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களினால் உருமாற்றப்பட்டு சிங்களமக்கள் உருவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதன் வெளிப்பாடாக விக்னேஸ்வரனை பாராளுமன்றத்திலிருந்து தூக்கி வெளியே வீசுமாறும் கைது செய்து சிறையில் அடைக்குமாறும் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் இனவாதக்கோஷங்கள் வெளிக்கிளம்பி உள்ளன. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.