Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தமிழ் மக்கள் ‍பேரவையும் தமிழ் தலைமையும் 2015 ஆம் ஆண்டு சர்­வ­தேச சமூ­கத்தின் ஆத­ர­வுடன் இந்த நாட்டில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டி­ருந்­தது. கடந்த மஹிந்த அர­சாங்கம் தமிழ் தேசிய இனத்தின் உரி­மைக்­காக போரா­டிய விடு­தலைப் புலி­களை அழிப்­ப­தற்கு சர்­வ­தே­சத்தின் உத­வியை நாடி­யி­ருந்­தது. அந்த நாடு­களின் துணை­யுடன் இந்த நாட்டில் இடம்­பெற்று வந்த யுத்­தத்தை முடி­வுக்கும் கொண்டு வந்­தி­ருந்­தது. ஆனால் யுத்தம் முடிந்த பின்னர் மஹிந்த அர­சாங்கம் சர்­வ­தேச சமூ­கத்­திற்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வில்லை. மாறாக சீனா­வு­ட­னான தனது தொடர்­பு­களை வலுப்­ப­டுத்­தி­யது. பிராந்­திய நலனை மையப்­ப­டுத்தி தமது நகர்­வு­களை மேற்­கொண்ட இந்­தி­யா­வுக்கும், சர்­வ­தேச சம…

  2. இனத்துவக் கண்ணாடி மொஹமட் பாதுஷா / 2018 ஜூன் 15 வெள்ளிக்கிழமை, மு.ப. 06:50 Comments - 0 “நாங்கள் ஒருகாலத்தில் அப்படி இருந்தோம்; தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றாய் உடுத்துப் படுத்துறங்கி, ஒருதாய்ப் பிள்ளைகளாக இருந்தோம். ஆனால் இன்று எல்லாம் மாறிவிட்டன” என்று..... நமது பெற்றோரும் பாட்டிமாரும் ஒரு பெருமூச்சுடன் கதைசொல்லக் கேட்டிருக்கின்றோம். ஆனால், இப்போதெல்லாம் இனத்துவ உறவைப் புதுப்பித்தல் பற்றித் திரும்பத்திரும்பப் பேசுகின்ற தமிழ்-முஸ்லிம் சமூகங்கள், அரசியலால் தூண்டப்பட்ட இன, மத காரணங்களுக்காக, நல்லிணக்கம் பேசிப் பேசிப்பேசியே பகைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதே கசப்பாயினும் உண்மையும் நிகழ்கால அனுபவமுமாக இருக்கின்றது. இப்போது, நாடாளுமன்ற…

  3. ஆபிரிக்காவின் இரு மரணங்கள்: வரலாறு எவ்வாறு நினைவுகூரும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / வரலாறு எல்லோரையும் நினைவில் வைத்திருப்பதில்லை. அவ்வாறு நினைவில் இருப்பவர்களும் எதற்காக நினைவிலுள்ளார்கள் என்பதிலேயே, அவர்களின் சமூகப் பெறுமானம் உள்ளது. வரலாற்றில் இடம்பெற்றோர் எல்லோரும் நினைக்கப்படுவதுமில்லை. வரலாறு ஒருவரை எதற்காக, எவ்வாறு நினைவில் வைக்கிறது என்பதே, இருப்பின் வெற்றியைத் தீர்மானிக்கிறது. நினைப்பதும் மறப்பதும் காலத்தின் வழுவல. நினையாமல் இருப்பதும், மறவாமல் நினைப்பதும், அவரவர் வாழ்ந்த காலத்தைக் கூறும் உரைகற்கள். இம்மாதம் ஆபிரிக்காவின் ஆளுமைகள் இருவர் மரணித்துள்ளார்கள். ஒருவரை அறியும் அளவுக்கு,…

  4. சமஷ்டி என்றால் என்ன என்று விலாவாரியாக அறிய இந்தத் தேடல் எனக்கு உதவியது. விரும்பியவர்கள் நேரம் எடுத்து வாசித்துத் தெளிவடையலாம் ஐந்து விரல்களாய்ப் பிரிந்து நில் அவசியமானால் இணைந்து கொள்! – சாமானிய நோக்கில் சமஷ்டி – - - சமகால சர்வதேச அரசியற் போக்கு இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலம் முதலாக, அனைத்துலக அரசியலில் இருவேறுபட்ட போக்குகள் இடம்பெறலாயின. நடைமுறையில் இருந்துவரும் அரசியற் கட்டமைப்புக்கள் குலைந்து, அதன் விளைவாகப் புதிய தேசிய அடையாளங்கள் முனைப்புப் பெற்று வருதல், ஒன்று. சோவியத் ஒன்றியத்தின் உடைவும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற செக்கோஸ்லவாக்கியா, யூகோஸ்லாவியா போன்ற நாடுகளின் சிதைவும் இதற்கு நல்ல உதாரணங்களாகும். இதேவேளை சுதந்திர நாடுகள் பல…

  5. சென்னை நடராசன், தாளமுத்து, கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம் பாக்கம் சிவலிங்கம், விருகம் பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, சிவகங்கை ராசேந்திரன், சத்தியமங்கலம் முத்து, அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், விராலிமலை சண்முகம், பீளமேடு தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி... இவர்களெல்லாம் இந்தித் திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியைக் காக்கவும் உயிர் நீத்த தியாகிகள். இந்தித் திணிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் 1965-ம் ஆண்டு தமிழகமே பற்றி எரிந்தது எனலாம். மாணவர்கள் முன்னின்று நடத்திய அந்தப் போராட்டத்தில் பல நூறு பேர் உயிர் நீத்தனர். போராட்டத்தை அடக்க ராணுவம் வந்தது. மொழியைப் பாதுகாக்க நடைபெற்ற ஒரு போராட்டத்தை ஒடுக்க ராணுவம் களத்தில் இறங்கியதும், அந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோரின…

  6. இலங்கையின் இறைமை அதிகாரம் பிரிக்கப்படாமல், அதனை சர்வதேச ஆதரவுடன் பாதுகாப்பதே சிங்களக் கட்சிகளின் நோக்கம் ஈழத் தமிழர்களுக்கு ஜெனீவா எதனையும் கொடுக்காது- போர்க்குற்ற விசாரணை புலிகளை நோக்கியே ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை இராணுவ அதிகாரிகள், சிப்பாய்களை இலங்கையிலேயே கைது செய்வதற்கான ஏற்பாடுகள் உள்ளதாக பூகோள இலங்கையர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஒன்றியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், சியாமேந்திரா விக்கிரமாராட்சி, இலங்கைக்கு ஆபத்து வரக்கூடிய அந்தப் பிரேரணையை…

    • 0 replies
    • 664 views
  7. தமிழ் ஜனாதிபதி வேட்பாளர்: ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதை April 12, 2024 — கருணாகரன் — 2024 இல் ஜனாதிபதித் தேர்தல் நடக்குமா? பாராளுமன்றத் தேர்தல் நடக்குமா? என்று இன்னும் உறுதியாகச் சொல்ல முடியாத நிலையே உள்ளது. ஜனாதிபதித் தேர்தல்தான் முதலில் நடக்கும் என சில இடங்களில் சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பு பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது நல்லது என்று பொதுஜன பெரமுன உள்ளிட்ட சில தரப்புகள் வலியுறுத்துகின்றன. எதையும் தீர்மானிக்கின்ற ஒரே மனிதராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார். இலங்கை அரசியல் யாப்பின்படி ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தை உச்சமாகப் பயன்படுத்தியவர் ஜே.ஆர். ஜெயவர்த்தன. அவரே ஜனாதிபதிக்கான அதிகாரங்களை உருவாக்கியவர். அவருக்கு அடுத்த…

  8. மாகாணசபைத் தேர்தல் தனிநபர் பிரேரணையும் தனிநபர்களின் நிகழ்ச்சித் திட்டங்களும் Digital News Team 2017 ஆம் ஆண்டில் மாகாணசபைத் தேர்தல்களை ஒத்திவைக்கும் நோக்கில் ரணில் – சுமந்திரன் கூட்டு முயற்சியில் கொண்டுவரப்பட்ட ‘ மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டம்’ ஆகும். இதை இருவரின் கூட்டுமுயற்சி எனக் கூறுவதன் காரணம், இருவருக்கும் அத்தேர்தலை ஒத்திவைக்கவேண்டிய தேவை இருந்ததுடன், நல்லாட்சிக் காலத்தில் சம்பந்தன் தலைமையிலான எதிர்க்கட்சியும் ஆளுங்கட்சியின் ஒரு அங்கமாகச் செயற்பட்டமையுமாகும். தென்னிலங்கையில் நல்லாட்சியாளர்கள் மீது அதிகரித்து வந்த அதிருப்தியினால் மாகாணசபைத் தேர்தல்கள் தனக்குப் பாதகமாக அமைந்துவிடலாம் என ரணில் தரப்புக்கு ஏற்பட்ட பயம் ஒருபுறமும், மறுபுறத்தி…

    • 0 replies
    • 217 views
  9. உண்மையை அச்சமின்றிச் சொல்லும் ஒரு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படுமா? நிலாந்தன்- 27 செப்டம்பர் 2015 போர்க் குற்ற விசாரணைகள் என்று வந்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தங்களுக்குத் தீங்கிழைத்தவர்களைப் பெயர் சொல்லிச் சுட்டிக்காட்டக்கூடிய நிலைமைகளே அதிகம் உண்டு. ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் முன் தோன்றிய பல சாட்சிகளும் அவ்வாறு ஏற்கனவே பெயர்களைக் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இந்நிலையில் வெளிப்பார்வையாளர்கள் அதாவது வெளிநாட்டவர்கள் பங்குபற்றும் விசாரணைகளின்போது தமிழ் மக்கள் இப்போது இருப்பதை விடவும் துணிச்சலாக சாட்சியமளிப்பார்கள். சுமார் மூன்று தசப்தங்களுக்கு மேலான ஆயுத மோதல்களின்போது அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனித நேய அமைப்புக்கள் போன்றவற்றின் பிர…

  10. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும் இந்திய, அமெரிக்க ஆர்வங்களும் - யதீந்திரா தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் ஒவ்வொரு தரப்பினரும் தங்களின் விரும்பங்களுக்கேற்ப கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு தரப்பினர் இவ்வாறு கூறுகின்றனர் – தமிழ் மக்களுக்கான எந்தவொரு அரசியல் தீர்வும் 'திம்பு' கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். திம்பு கோட்பாடுகள் என்றால் என்ன? ஒரு சில அரசியல் விமர்சகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இதனை உச்சரித்துக் கொண்டாலும் கூட, இது தொடர்பில் ஏதேனும் புரிதல் தமிழ் சமூகத்தில் இருப்பதாக தெரியவில்லை. குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் இது தொடர்பில் ஏதும் தேடல்கள் இருப்பதாகவும் இப்பத்தி கற்பனை செய்…

  11. [size=5]ஜூலை எப்போதும் கறுப்புத்தான்[/size] [size=4]இலங்கையைப் பொறுத்தவரை, ஜூலை மாதம், தற்போதும் கறுப்பு நிறம் கொண்டதே. ஜூலை மாதத்தில் ஒட்டிக் கொண்டுள்ள அந்தக் கறுப்புக் கறையைப் போக்க முயல்வது நம் எல்லோரதும் பொறுப்பும் கடமையுமாகும். இது குறித்துச் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது கிடைத்த செய்தியொன்று என்னை ஒரு கணம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.[/size] [size=4]வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவமொன்றையடுத்து மஹர சிறைச்சாலைக்கு இடமாற்றப்பட்ட கைதிகளில் ஒருவர் ராகம வைத்தியசாலையில் உயிரிழந்தார் என்பதே அச்செய்தி. இச் செய்தியால் என் கண்முன்னால் கறுப்பு ஜூலை நினைவுகள் மேலும் இருளடைந்தன. அறிமுகமான மனிதர்கள் மத்தியில் முன்பின் அறிமுகம…

    • 0 replies
    • 662 views
  12. தமிழர் விடுதலைக்கான துரோகக் கோட்பாட்டின் முடிவு லக்ஸ்மன் இலங்கை ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலையான பின்னர் முகிழ்த்த தமிழ்த் தேசிய விடுதலைக்கான சிந்தனாவாதக் கோட்பாடுகளுக்கு இதுவரையில் சரியான வடிவம் கொடுக்கப்படாத நிலை உள்ளதா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. ஏனெனில், அதன் நோக்கத்தை அடைவதில் உள்ள இதுவரையான இழுபாடுகளே அதற்குக் காரணமாகும். அந்த வகையில் தான் சுதந்திர இலங்கையில் தமிழர்களின் அபிலாஷையைத் தமிழ்த் தேசியம் எய்தவில்லை என்ற முடிவு கிடைக்கும். தமிழர்கள் எதிர்பார்க்கின்ற விடுதலையை, உரிமையை வென்றெடுப்பதற்காக அகிம்சைப் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கம் பெற்ற ஜனநாயக அரசியல் கட்சிகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தன. அதன் தோல்வி காரணமாகத்தான் ஆயுதப் போராட்…

  13. கொரோனாக் கவரேஜ் – நிலாந்தன்… April 25, 2020 இந்தியாவில் வசிக்கும் ஈழத்தமிழரும் ஆவணப்பட இயக்குனருமாகிய சோமிதரன் சில கிழமைகளுக்கு முன் தனது முகநூலில் ஒரு குறிப்பை போட்டிருந்தார்.யுத்த காலங்களில் ஊடகங்களில் வரும் நியூஸ் அப்டேட் போலவே கொரோனா அப்டேட்டும் இருக்கிறது என்ற பொருள்பட அவருடைய பதிவு அமைந்திருந்தது. யுத்த காலங்களில் வரும் செய்திகளில் கொல்லப்பட்ட படைவீரர்கள் எத்தனை பேர் விடுதலைப்புலிகள் எத்தனை பேர் காயப்பட்டவர்கள் எத்தனை பேர் கைப்பற்றிய ஆயுதங்களின் எண்ணிக்கை எத்தனை போன்ற விவரங்கள் ஒவ்வொரு நாளும் பத்திரிக்கைகளில் வரும். அப்படித்தான் இப்போதும் கொரோனா அப்டேட் எனப்படுவது எத்தனை பேர் சாவு எத்தனை பேருக்கு நோய்த் தொற்று எத்தனை பேர் தனிமைப்படுத்தப்பட்டு இர…

  14.  பிரெக்ஸிட் வாக்கெடுப்பு: பிரித்தானியா வெளியேறுமா? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ தீர்மானிக்கும் சக்தியாக, மக்கள் எப்போதும் இருப்பதில்லை. ஆனால், அவர்கள் தீர்மானமான சக்தியாகும்போது, பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் மாயத்தை நிகழ்த்துவார்கள். ஐனநாயகம் என்ற அழகிய முகமூடி, தேர்தல் என்ற கவசத்தினூடு முழுமையாக மறைத்திருக்கின்றபோதும், அக்கவசத்தையை ஆயுதமாக்கி மக்கள் நிகழ்த்தும் மாயம், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை அல்ல, மக்கள் மீதான நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாயுள்ளது. நடக்கும் என்பார் நடக்காது, நடக்காது என்பார் நடந்துவிடும் என்ற பாடல் வரிகள், அண்மைய பிரித்தானிய நிலைவரங்களை விளக்கப் பொருத்தமானவை. பிர…

  15. சம்பந்தனின் விருப்பில் ஹக்கீம் பாடிய தாலாட்டு! தமிழ் மக்களை 'கட்டாய சுய உறக்கத்துக்குள்' வைத்துக் கொள்ளும் முனைப்பில் பல தரப்புக்களும் விட்டுக் கொடுப்பின்றி ஈடுபட்டு வருகின்றன. அரசியல் உரிமைப் போராட்டங்களில் மூர்க்கமாக ஈடுபட்ட தரப்பான தமிழ் மக்களை உறக்க நிலையில் வைத்திருப்பதன் மூலம், போராட்ட குணத்தையும் அதற்கான அர்ப்பணிப்பையும் நீர்த்துப் போகச் செய்யலாம் என்பது சம்பந்தப்பட்ட தரப்புக்களின் எதிர்பார்ப்பு. அதற்காகவே, தமிழ் மக்களை நோக்கி அபசுரங்களுடனான தாலாட்டுக்கள் தொடர்ச்சியாகப் பாடப்படுகின்றன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர் மறைந்த முருகேசு சிவசிதம்பரத்தின் 93 ஆவது பிறந்த தின நிகழ்வு கரவெட்டியில் கடந்த 19ஆம் திகதி நடைபெற்றது. அங்கு நி…

  16. சிறிலங்காவின் அரசியல் வரலாற்றின் பிரகாரம், சீனா மற்றும் சிறிலங்காவின் உறவு மிகவும் நெருக்கமானதாகக் காணப்படுகிறது. எனினும், 1952-2014 வரையான ஆறு பத்தாண்டு கால சீன-சிறிலங்கா உறவு நிலையானது மேலும் நெருக்கமானதாகக் காணப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக, இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அண்மையில் சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் மற்றும் சிறிலங்காவின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு இடையிலான சூடான வார்த்தைப் பிரயோகங்கள் இந்த உறவில் மேலும் சீர்குலைவை ஏற்படுத்தியுள்ளது. சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் ராஜபக்சவின் இரண்டாம் ஆட்சிக்காலத்தில் சிறிலங்கா மீது சீனா அதீத செல்வாக்கைச் செலுத்தியிருந்தது. இதன் காரணமாக தற்போதைய அரசாங்கமா…

  17. காலத் தாழ்ச்சி தான் என்றாலும் நிகழ்ந்து கொண்டிருப்பனவற்றைக் கவனிக்காமல் யாரும் தப்பி விட முடியாது என்ற வகையில் தமிழக மாணவர்களின் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஊடகப் பெருக்கத்த்தின் பங்கும் குறிப்பிடத் தக்கனவாக இருக்கின்றன. உண்மையான அக்கறை என்பதையும் தாண்டி தங்களை நிலை நிறுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு ஊடக நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படும் விவாதக் களங்களும், நேரலைச் செய்தித் தொகுப்புகளும் மேலும் மேலும் வலுவூட்டிக் கொண்டிருக்கின்றன. வெகுமக்கள் உளவியலைக் கட்டமைப்பதில் ஊடகங்களின் பங்கு பற்றிப் பேசினாலும் எல்லாவற்றையும் தாண்டி முக்கியமான திசை திருப்பலாக அமைந்தவை அந்தப் புகைப்படங்களின் வரிசைகள் மட்டுமே என நினைக்கிறேன். திருப்பங்கள் ஏற்படுத்திய நிழற்படங்கள். …

  18. கொரோனா அரசியலும் மனிதமும்-பா.உதயன் இந்த உலகின் எல்லா தேவைகளையும் அரசியலும், பணமும் ,சுய நலன்களுமே தீர்மானிக்கின்றன.மனித உரிமைகளும் மனிதாபிமானமும் இதற்கு இப்போ பெறுமதி இல்லை. இன்று உலகை பொருள்முதவாதமும்(materialism)தனிநலனுமே உலகை ஆள்கிறது.தனிநபர்களுக்கிடையில் அன்போ கருணையே அமைதியான வாழ்வோ இருக்காது. சரி, தவறு, நீதி, அநீதி போன்ற கருத்துக்களுக்கு இடமில்லை என்கிறார் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆங்கிலேய தத்துவஞானி தாமஸ் ஹோப்ஸ் Thomas Hobbes “இயற்கையின் நிலை ”the state of nature ‘ இதுவே என்று அழைப்பதை இந்த உலகத்தின் விதியோடு ஒப்பிட்டு சமூக ஒப்பந்த கோட்பாட்டோடு தனது புத்தகமான லெவியத்தனில் (leviathan ) விளக்குகிறார் இயற்கையின் நிலையை ஒரு சட்டம் அல்லது தார்மீக நெறிமுறை…

    • 0 replies
    • 409 views
  19. சம்பந்தனின் பொறுமைக்கு வந்திருக்கும் சோதனை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த புதன்­கி­ழமை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ரணை ஒன்றைக் கொண்டு வந்து உரை­யாற்­றிய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன், அர­சாங்கம் மீதான அதி­ருப்­தி­களைக் கொட்டித் தீர்த்­தி­ருந்தார். முன்­னைய அர­சாங்­கங்­களைப் போலவே தற்­போ­தைய அர­சாங்­கமும், தம்மை நடத்­து­வ­தாக, தமிழ் மக்கள் உணர்­கி­றார்கள் என்றும், எமது மக்கள் இந்த அர­சாங்­கத்­தினால் நடத்­தப்­ப­டு­கின்ற முறை­யா­னது கடு­மை­யான அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்றும் சம்­பந்தன் தனது உரையில் குறிப்­பிட்­டி­ருந்தார். அர­சி­ய­ல­மைப்பு மாற்றம், அர­சியல் கைதிகள் விடு­தலை, காணா­மற்­போனோர் பிரச்­சினை, கா…

  20. இலங்கையில் 2009இல் தமிழீழ விடுதலைப்புலிகளின் படைக்கலன்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் ராஜபக்சேக்களின் அரசியல் செல்வாக்கு அசைக்க முடியாதவாறு உறுதியாக்கப்பட்டுவிட்டது. அது மட்டுமல்ல இலங்கையில் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பன்னாட்டு மட்டத்தில் ராஜபக்சேக்களுக்குக் கொடுக்கப்படும் அழுத்தமும் அதை அவர்கள் உறுதியுடன் எதிர்த்து நிற்பதும் சிங்களவர்கள் மத்தியில் அவர்களின் செல்வாக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இலங்கையின் விலைவாசி அதிகரிப்பு, வேலையில்லாப் பிரச்சனை போன்றவற்றை வைத்து அரசுக்கு எதிரான ஒரு பெரும் கிளர்ச்சிக்கு யாரும் தூபமிட முடியாத நிலை இலங்கையில் இருக்கிறது. ஆனால் Standard & Poor எனப்படும் நாடுகளின் கடன்படுதிறனை ஆய்வு செய்து நிரைப்படுத்தும் நிறுவனம்…

    • 0 replies
    • 519 views
  21. அபத்தமான அரசியல் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-07-09#page-6

  22. வடக்கு கிழக்கில் சிங்களவர்கள் சிறுபான்மையாக இருப்பது அச்சம் தருமெனில் இலங்கைக்குள் தமிழர்கள் சிறுபான்மையாக எப்படி இருப்பது? இலங்கைத் தீவில் நடைபெற்ற இன ஒடுக்குமுறைச் செயல்கள் மற்றும் இன அழிப்புக்கு அடிப்படையான பிரச்சினைகளை தீர்ப்பதில் இலங்கையின் தற்போதைய அரசாங்கமும் மெய்யான அக்கறையைக் காட்டவில்லை என்பதை புதிய அரசியலமைப்பு தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் உணர்த்துகின்றன. இலங்கையில் நடந்த நிகழ்வுகளுக்கு தீர்வொன்றை முன் வைக்கும் முகமாக புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக இலங்கை அரசாங்கம் சர்வதேச மட்டத்திலும் தமிழ் தலைமைகள் மட்டத்திலும் வாக்குறுதி அளித்து வந்தது. காலம் காலமாக இலங்கையின் சிங்கள அரசுகள் தமிழ் மக்களை ஏமாற்றி வந்துள்ள நிலைய…

  23. ஆடிகள் (34) கடந்தும் ஆட்டம் ஆடும் இனப்பிணக்கும் சந்தேக சகதிக்குள் சிக்குண்ட கூட்டமைப்பும் இலங்கையில் தமிழர் வரலாற்றில் ஜூலை, என்றுமே ஒரு கறை படிந்த மாதம் எனலாம். 34 (1983) வருடங்களுக்கு முன்பாக, இதே ஜூலை மாதத்தில் தெற்கு மற்றும் மலையகம் எங்கும் இனவாதத் தீ, பெருமெடுப்பில், ஆட்சியாளர்களால், நன்கு திட்டமிட்டு மூட்டப்பட்டது. அந்தத்தீ எங்கும் கொழுந்து விட்டு எரிந்தது. அப்பாவித் தமிழ் மக்கள், ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்; அடித்து விரட்டப்பட்டனர்; உயிருடன் நெருப்பில் போடப்பட்டனர்; பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துகள் சூறையாடப்பட்டன. அவற்றைத் தொடர்ந்து நடைபெற்ற ஆயுதப் போராட்டமும் அதன் பின்னர், மே 2009 வரை இடம்பெற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.