அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
3 மணி நேரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் தையிட்டி பகுதியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை விரிவாக்கப் பணிகள் தமிழ் மக்களின் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளது என்று தற்போது வெளியாகி வரும் தகவல்கள் இலங்கையில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலத்தில் இங்கிருந்து சென்ற தமிழ் மக்கள் பலரும் அக்காலத்தில் அங்கே ஒரு விகாரை இருந்ததாக தெரிவிக்கின்றனர். உண்மையில் அப்படி ஒரு விகாரை இருந்ததா? அங்குள்ள பிக்குவும், ராணுவமும், நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரரும் இந்த விவகாரம் குறித்து கூறுவது என்ன? இந்த விகாரை சர்ச்சையாவது ஏன்? "தற்போதுள்ள விகாரையை தமிழ் மக்களின் காணிகளிலேயே நிர்மாணித்துள்ளனர். இது தவறான விடயம் என நாங்கள் ஆரம்பத்திலிருந்தே கூறி வ…
-
- 2 replies
- 588 views
- 1 follower
-
-
இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினை - அரசுகள் தலையிடாக் கொள்கை லக்ஸ்மன் இழுவைப் படகுகள் மூலம் இழுத்தெடுக்கப்படுவது மீன்கள் மாத்திரமல்ல, எதிர்கால தலைமுறையையும், எதிர்கால வாழ்க்கையையுமாகும். இவ்வாறு அழிக்கப்படுமானால், இன்னும் 15, 20 வருடங்களுக்குப் பிறகு எங்களது கடலில் எதுவுமே இல்லாது போவதுடன், கடல் பாலைவனமாக மாறுகின்ற நிலை ஏற்படும். இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் இந்நாட்டில் உள்ள ஐம்பதாயிரம் மீனவ குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சம் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வட மாகாண கடற்றொழிலாளர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். இழுவைப் படகுகள் என்பது இந்தியாவிலும் தடை செய்யப்பட்டிருக்கின்ற காரணத்தினால், இந்தியாவில் இருக்கின்ற மீனவர்கள் கூட இதற்கு வன்மையா…
-
- 0 replies
- 208 views
-
-
மாவட்ட, பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் என்ன நடக்கிறது? நிலாந்தன். மாவட்ட, பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்கக்கூடியவை என்பதே ஒரு மாயை. அந்த மாயைக்குத் தூலமான ஓர் உதாரணம் தையிட்டி விகாரை. உலகம் முழுவதையும் பெருந் தொற்று நோய் கவ்விப் பிடித்த ஒரு காலகட்டத்தில் தையிட்டி விகாரைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதாவது கொரோனா வைரஸ் மனிதர்களைத் தாக்கிய அந்தக் காலத்திலும் இலங்கைத் தீவின் இனவாத வைரஸ் உயிர்ப்புடன் பரவியது என்று பொருள். அப்பொழுது நடந்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அப்பொழுது இருந்த பிரதேச சபையின் நிர்வாகம் - அதாவது கூட்டமைப்பின் அதிகாரத்துக்குள் இருந்த பிரதேச சபை நிர்வாகம்-சிங்கள பௌத்த மயமாக்கலுக்குத் துணை போனது. விளைவாக இ…
-
- 0 replies
- 233 views
-
-
சரியான நேரத்தில் சரியான கூட்டு ? - நிலாந்தன் “அனுரவின் அரசாங்கத்தை வலுவான முறையில் எதிர்கொள்வதற்கும், தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்துவதற்கும் நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபடுவதைத் தவிர வேறு வழி இல்லை” என்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரக்குமார் இந்திய ஊடகவியலாளரான மீரா சிறீனிவாசனுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார். புதிய யாப்பு ஒன்று உருவாக்கப்படுமிடத்து அந்த யாப்பை நோக்கி கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. தமிழர்கள் ஒரு தரப்பாகத் திரண்டு நின்றால்தான் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதனை பலமாக வெளிப்படுத்தலாம். மிகக் குறிப்பாக சுமந்திரனும் அவருடைய கூட்டாளிகளும் இணைந்து முன்பு தா…
-
- 0 replies
- 273 views
-
-
‘பட்டலந்த அறிக்கை’ என்னும் ‘பூமராங்’ முருகானந்தம் தவம் ஜே .வி.பியினரின் (மக்கள் விடுதலை முன்னணி) ஆயுதக் கிளர்ச்சியை அடக்கி ஒடுக்கவென 1988, 1989களில் நடத்தி செல்லப்பட்டதாகக் கூறப்படும் ‘பட்டலந்த வதை முகாம்’ தொடர்பான ‘பட்டலந்த அறிக்கை’ 25 வருடங்களின் பின்னர், தூசி தட்டப்பட்டு வெளியே எடுக்கப்பட்டு தற்போதைய ஜே.வி.பி., என்.பி.பி. அரசினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் நாள் விவாதம் நடத்தப்படவுள்ள நிலையில், அந்த அறிக்கை தொடர்பில் இலங்கையில் மீண்டும் ஒரு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியாக ரணசிங்க பிரேமதாச ஆட்சி புரிந்த காலத்தில், இளைஞர் விவகார, தொழில் வாய்ப்புக்கள் அமைச்சராகவும், பின்னர் கைத்தொழில் அமைச்சராகவும் இருந்த ரணில் வ…
-
- 0 replies
- 244 views
-
-
படக்குறிப்பு, கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையின் முக்கிய நபர்கள் மீது பிரிட்டன் விதித்துள்ள தடையைத் தொடர்ந்து, உள்நாட்டு அரசியல் களத்தில் கடும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் இலங்கை அரச பாதுகாப்பு பிரதானிகள் மூவருக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது. பாதுகாப்புப் படைகளின் முன்னாள் பிரதானி ஷவேந்திர சில்வா, இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஒஃப் த பீல்ட் வசந்த கரணாகொட, இலங்கை ராணுவ முன்னாள் தளபதி ஜெனரல் ஜகத் ஜய…
-
- 0 replies
- 434 views
- 1 follower
-
-
அனுர போட்ட முடிச்சு லக்ஸ்மன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கும், நாட்டின் பொருளாதார ஸ்திரத் தன்மைக்கும் ஒரு முடிச்சைப் போட்டு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இவ்வாருடத்துக்கான வரவு-செலவுத் திட்ட விவாதத்தை முடித்து வைத்தார். மிகவும் லாவகமான பேச்சுக்கள் மூலம் மக்களை தம்வசம் இழுத்து வைத்துக் கொள்வதில் அனுரவுக்கு நல்ல இயலுமை இருக்கிறது. அவருடைய ஒவ்வொரு பேச்சும் இலங்கை மக்களின் உள்ளிருக்கும் பல விடயங்களை வெளியே எடுத்து விடுவதைச் செய்து விடுகின்றன. பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு-செலவுத் திட்டத்தின் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கான ஒதுக்கீடு மீதான இரண்டாம் நாள் குழுநிலை விவாதத்தின் இறுதியில் பதிலளித்து உரையாற்றிய ஜனாதிபதி, எதிர்…
-
- 0 replies
- 402 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரணில் விக்ரமசிங்க கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை 6 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 1980ஆம் ஆண்டு காலப்பகுதியின் இறுதி ஓரிரு வருடங்களில், அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சித்திரவதை முகாம் தொடர்பில் தற்போது பாரிய சர்ச்சை தோன்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் இலங்கை ஜனாதிபதியும், 6 தடவை பிரதமராகவும் பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, அல் ஜசீரா தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் படலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதை அடுத்தே, படலந்த சித்திரவதை முகாம் பேசுபொர…
-
- 0 replies
- 271 views
- 1 follower
-
-
கதாநாயகர்கள், கதாநாயகிகள் இல்லாத தமிழ்த்தேசிய அரசியல்? கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்திய மக்கள் அமைப்புக்கு புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் ஒரு பல்கலைக்கழக மாணவரை அறிமுகப்படுத்தினார். அவர் பொது வேட்பாளருக்கான அணியுடன் இணைந்து இயங்குவார் என்றும் சொன்னார். அந்த மாணவர் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்குத் துடிப்பாகச் செயல்படவில்லை என்று சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கிறார்கள். எனினும் அவர் பொது வேட்பாளருக்கு ஆதரவான நிலைப்பாட்டோடு காணப்பட்டார். இது பழைய கதை. அண்மையில் ஒரு வாட்ஸ் அப் குழுவில் மேற்படி மாணவர் ஒரு காணொளியைப் பகிர்ந்திருந்தார். அனுரவை ஒரு கதாநாயகராகக் கட்டமைக்கும் விதத்தில் கவர்ச்சியாகத் தயாரிக்கப்பட்ட ஒரு காணொளி அது. அவர் ஏன் அதைப் பகிர்ந்திருக்கிறார் என்ப…
-
-
- 3 replies
- 588 views
-
-
“நாடு அனுரவோடு ஊர் எங்களோடு” கட்சி யாரோடு? நிலாந்தன். சில கிழமைகளுக்கு முன்பு தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவிகே சிவஞானம் நடத்திய ஒரு ஊடகச் சந்திப்பில்,ஒரு வசனத்தைச் சொன்னார்.”நாங்கள் மட்டும் தோற்கவில்லை”. இதை அவர் எத்தகைய அர்த்தத்தில் சொன்னார் ? இது எல்லாருக்குமான தோல்வி என்ற அர்த்தத்தில் சொன்னாரா? அல்லது எல்லாருமே தோற்றிருக்கிறார்கள். எனவே இதில் எங்களை மட்டும் ஏன் கேட்கிறீர்கள்? என்ற அர்த்தத்தில் சொன்னாரா ? எல்லாருக்குமே தோல்வி ஏற்பட்டிருக்கிறது என்பதை அதன் சரியான வார்த்தைகளில் சொன்னால்,தமிழ்த் தேசியத் தரப்பைச் சேர்ந்த கட்சிகள் எல்லாவற்றுக்குமே பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்று பொருள்.அந்த பின்னடைவுக்கு யார் பொறுப்பு? ஒரு மூத்த கட்சியாக, உள்ளதில் பெரிய கட்சியாக தமி…
-
- 3 replies
- 423 views
-
-
நடராஜா ஜனகன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகப்போகிறது. முன்னைய ஆட்சியாளர்கள் செய்த ஊழல் மோசடிகள், வீண் விரயம் போன்றவற்றை வெளிக்கொணர்வதில் புதிய அரசாங்கம் காட்டி வரும் வேகமான செயற்பாடுகள் நிச்சயம் பாராட்டப்படக்கூடிய நிலையிலேயே காணப்படுகின்றன . இந்நிலையில், தற்போது பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட இருக்கிறது. இதேபோன்று தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அவர்களின் அரசியல் உரிமை சார்ந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் திருப்தி தரும் நிலையில் காணப்படவில்லை. தமிழ் பகுதிகளில் பொருளாதார நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பில் புதிய ஆட்சியாளர் காட்டி வரும் அக்கறை குறிப்பாக பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனத்தை மீள ஆரம்பிக்கும் முயற…
-
-
- 2 replies
- 326 views
- 1 follower
-
-
அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம்? — வீரகத்தி தனபாலசிங்கம் — March 17, 2025 புலம்பெயர் இலங்கை தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் வாழும் மூத்த பத்திரிகையாளரும் சிறந்த அரசியல் ஆய்வாளர்களில் ஒருவருமான டி.பி.எஸ். ஜெயராஜ் அண்மைக் காலத்தில் எழுதிய கட்டுரைகள் சிலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு ஒரு நூலாக வெளிவந்திருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க கடந்த வருடம் செப்டெம்பரில் இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவரது ஆரம்பகால வாழ்க்கை மற்றும் அரசியல் எழுச்சி குறித்து ஆறு கட்டுரைகளையும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி குறித்து மூன்று கட்டுரைகளையும் ஜெயராஜ் எழுதியிருந்தார். அவற…
-
- 1 reply
- 317 views
-
-
தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டில் CTC-யும், முன்னாள் தலைவரும் ஒரே கோட்டிலா? கனடியத் தமிழரின் குரல் எனத் தம்மை நியாயப்படுத்துவதில், கனடியத் தமிழர் பேரவை (பேரவை / CTC) தனது இருப்பின் பெரும்பகுதியைச் செலவழித்து வருகிறது. ஆனால் அதன் நடவடிக்கைகள் அதற்கு முரணாக அமைந்துள்ளன என்ற குற்றச்சாட்டு மீண்டும் மீண்டும் எழுகிறது. பின்வரும் விடயங்களில் CTC குறித்த கேள்விகள் உள்ளன: 1) தமிழர் உரிமைகளுக்காகப் போராடுவதாகப் பொது வெளியில் கூறிக் கொண்டாலும், முக்கிய விடயங்களில் மௌனம் காக்கும் தனது நிலைப்பாட்டை CTC மாற்றவில்லை, 2) தமிழர்களின் துயரங்களுக்குக் காரணமான இலங்கை அரசாங்கத்துடன் பேரவை தொடர்ந்து நெருக்கமான தொடர்பைப் பேணி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது, 3) தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்ப…
-
-
- 6 replies
- 592 views
- 1 follower
-
-
15 வருடங்களின் பின்னர் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு எதிரான புதிய உத்தி பட்டலந்த முகாம் அறிக்கையை, ஜேவிபி கேட்கத் தவறிய சந்தர்ப்பங்களும் இனஅழிப்பு விசாரணை மூடி மறைப்புகளும்கொலைகளுக்கான நீதி் விசாரணையைவிடவும் புலிகளுக்கு எதிரான போருக்கு முக்கியத்துவம் வழங்கிய அநுர பதிப்பு: 2025 மார்ச் 17 18:29 புலம்: வவுனியா, ஈழம் புதுப்பிப்பு: மார்ச் 17 22:53 போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை என்றும், இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை அவசியம் எனவும் ஈழத்தமிழ் அமைப்புகள் பேசி வரும் நிலையில், 'பட்டலந்த' வதை முகாம் தொடர்பாக இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் பல காரண - காரியங்கள் உண்டு. இதனை மூன்று வகையாக நோக்கலாம். ஒன்று முன்னாள…
-
-
- 6 replies
- 471 views
-
-
யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா அண்மையில் மலையகத் தமிழர்களை “கப்பலில் வந்தவர்கள்” எனவும், வடக்கு முஸ்லிம்களை “இவங்கள விரட்டினது தவறு; இவங்கள இங்கே வைச்சு சீமெந்து பூசி இருக்க வேணும்” எனவும் கூறியுள்ளார்...(இதைவிட நிறைய இனவாதத்தை அவர் வீடியோக்களில் கக்கி உள்ளார்.. அவர் முகநூலில் இன்றும் உள்ளன..) இவ்வாறான கருத்துக்கள் சமூகத்தில் இனவாதத்தை ஊக்குவிக்கும் அபாயம் உள்ளது... மலையக தமிழர்கள் மற்றும் வடக்கு முஸ்லிம்கள் பற்றிய மேற்சொன்ன கருத்துக்கள் கடைந்தெடுக்கப்பட்ட இனவாதம்... அருவருப்பான வார்த்தைகள்... தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் விரோதத்தை உண்டாக்கும் காரியம்... மலையகத்தமிழர்களை வடகிழக்கு தமிழர்களிடம் இருந்து அந்நியப்படுத்தும் அயோக்கிய…
-
-
- 39 replies
- 2.7k views
-
-
16 MAR, 2025 | 03:31 PM டி.பி.எஸ். ஜெயராஜ் "தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் வெற்றி பெற்று நிருவாகங்களை அமைக்கும்." கடந்த வியாழக்கிழமை (மார்ச் 13) யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் கிளப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோது கடற்தொழில், நீர்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மிகுந்த நம்பிக்கையுடன் கூறினார். எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடவிருக்கும் தேசிய மககள் சக்தி வேட்பாளர்களின் கட்டுப்பணத்தை செலுத்துவதற்காக அவர் யாழ்ப்பாணம் தேர்தல் செயலகத்துக்கு சென்றிருந்தார். அவருடன் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் பிரதேச அமைப்பாளர்களுடன் கூட இருந்தனர். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் முக…
-
- 0 replies
- 378 views
- 1 follower
-
-
ஊருக்கும் வெட்கமில்லை! உலகுக்கும் வெட்கமில்லை! ரணிலுக்கும் வெட்கமில்லை!- நிலாந்தன் adminMarch 16, 2025 சிங்களபௌத்த அரசுத் தலைவர்கள்,அவர்கள் யுத்த வெற்றிவாதிகளாக இருந்தாலும் சரி, அல்லது லிபரல் முகமூடி அணிந்தவர்களாக இருந்தாலும் சரி, அல்லது சமூக நீதி முகமூடி அல்லது மாற்றத்தின் முகமூடி அணிந்தவர்களாக இருந்தாலும் சரி, யாருமே தமிழ் மக்களுக்கோ அல்லது இறந்த காலத்துக்கோ பொறுப்புக்கூற மாட்டார்கள் என்பதைத்தான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் ஐநாவின் 58ஆவது கூட்டத் தொடர் உணர்த்துகின்றது. ஐநா கூட்டத்தொடரில்,கடந்த மாதம் 25ஆம் திகதி,தேசிய மக்கள் சக்தியின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆற்றிய உரையில் ஐநாவின் பொறுப்புக் கூறலுக்கான பன்னாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை நிராகரித்திருந்தார். ”சி…
-
- 1 reply
- 406 views
-
-
பூகோள அரசியல் நகர்வில்“நேற்றோ” விஸ்திரிப்பு வாதத்தை ரசிய எல்லைவரை வழிநடத்தி உக்ரைனை இந்த நிலைக்குக் கொண்டுவந்த அமெரிக்கா இன்று உக்ரைனை கைவிட்டிருக்கிறது. அதற்கான காரணங்கள் ஒரு வல்லரசின் நலனிலிருந்து எழுபவை. அதை “அமெரிக்கா துரோகம் இழைத்துவிட்டது, யூ ரேர்ண் அடித்துவிட்டது” என்பதெல்லாம் அரசியல் விளக்கமல்ல. உக்ரைன் அதற்கு பலியாகிப் போனதுதான் பெருந் துயரம். இன்று பொருளாதார மற்றும் தொழில்நுட்பப் போட்டியில் வல்லரசுகள் களமிறங்கியிருக்கின்றன. அதன் வெளிப்பாடுகள் பொருளாதாரப் போரை முதன்மை நிலைக்கு கொணர்ந்து விட்டிருக்கிறது. இது இறுதியில் (சீனாவுடனான) இராணுவநிலைப் போராக மாற்றமடைவதற்கான சாத்தியம் இருக்கிறபோதும், தற்போதைய நிலை பொருளாதாரப் போர்தான். அதனடிப்படையிலும், இறுதியில் சீனாவுடனான…
-
- 2 replies
- 371 views
-
-
Courtesy: I.V. Mahasenan கடந்தவாரம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிஏறத்தாழ ஐந்து தசாப்த அரசியல் வரலாற்றை பகிரும் ரணில் விக்ரமசிங்க, சர்வதேச ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலே, இலங்கை அரசியலில் கொதிநிலை விவாதத்தை உருவாக்கி உள்ளது. குறிப்பாக ரணிலின் சலனம், இலங்கையின் வன்முறை அரசியல் கலாசாரத்தை பொது வெளியில் தோலுரிப்பதாக அமைந்திருந்தது. மறுதலையாக ரணில் தனது இராஜதந்திர உரையாடலால் இலங்கையை சர்வதேச அரங்கில் பாதுகாத்துள்ளார் என்ற வாதங்களும் ஒரு சிலரால் முன்வைக்கப்படுகின்றது. எனினும் நேர்காணல் வெளியானதைத் தொடர்ந்து, ரணிலின் அவசரமான ஊடக சந்திப்பில் புலி, பூச்சாண்டி மற்றும் பௌத்த சங்கங்களிடம் சரணாகதி உரையாடல்கள், தனது சலனத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவே அமைந்திருந்தது. இந்நிலையில் நேர…
-
- 0 replies
- 266 views
-
-
பாராளுமன்றில் கடற்றொழில் தொடர்பான விவாதங்கள் சூடாக நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு – கிழக்கு மீனவர்கள், குறிப்பாக வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கி வருகின்ற நெருக்கடிகள் தொடர்பான விடயங்களை தரவுகள், தகவல்களை ஆதாரமாகக் கொண்டு அரசினை மிக கடுமையாக சாடி திணறடித்துள்ளார். முக்கியமாக இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு மற்றும் கொக்கிளாய், நாயாற்றில் தென்பகுதி மீனவர்களின் ஆக்கிரமிப்பு தொடர்பாக கடுமையான சீற்றத்தை வெளிப்படுத்தியிருப்பதுடன், படை அதிகாரிகளின் துணையுடன் தமிழரின் பாரம்பரிய பகுதிகளான கொக்கிளாய், நாயாற்றுப்பகுதி முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு நிரந்தர சிங்கள மீன்பிடிக் குடியிருப்புகளாக ஆக்கப்படுவதை எதிர்த்தும் குரல் எழுப்பியிருக்கி…
-
- 0 replies
- 433 views
- 1 follower
-
-
பெரியாரின் எழுத்துகளும் காப்புரிமையும் - அருண்மொழிவர்மன் “பெரியாரின் எழுத்துக்களை ஏன் நாட்டுடைமை ஆக்கிவில்லை? அவற்றை ஏன் பதுக்கி வேண்டும்? உண்மைகள் வெளிவந்து விடும் என்பதாலா? “ என்ற கேள்வியை நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டிருந்தார். சீமானின் திட்டமிட்ட அவதூறுகளில் ஒன்றினை அப்படியே நம்பிக் கொண்டே நண்பர் என்னிடம் கேள்வி கேட்கின்றார்; அவருக்கான தனிப்பதிலாக இல்லாமல் இந்தக் கேள்வி இருக்கக் கூடிய பலருக்குமான விளக்கமாக இதுபற்றிச் சற்றே பகிர்கின்றேன். ஒன்றைச் சொன்னால் அதை அப்படியே ஒப்பிக்காமல் சிறிதளவேனும் ஆராய்ந்து முடிவெடுத்தலே பகுத்தறிவு; அதன்படி சீமான் சொல்வதை அப்படியே நம்பாமல் தர்க்கபூர்வமாக யோசித்தால், அது உண்மை தானா என்று தேடினாலே, பகுத்து ஆராய்ந்தாலே, இப்படிச் சீமான் சொல்வ…
-
- 2 replies
- 302 views
-
-
‘நாடு அநுராவோடு, ஊர் எங்களோடு’- சுமந்திரனின் சுலோகம் உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்களிடம் எடுபடுமா ? March 9, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — நீண்டகாலமாக தாமதிக்கப்பட்ட உள்ளூராட்சி தேர்தல்களுக்கான வேட்பாளர் நியமனப் பத்திரங்களை தேர்தல்கள் ஆணைக்குழு கோரியிருக்கிறது. அரசியல் கட்சிகளும் குழுக்களும் மார்ச் 17 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை நியமனப் பத்திரங்களை கையளிக்கலாம். அனேகமாக மே மாத முற்பகுதியில் உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் தோல்வி கண்ட அரசியல் கட்சிகள் மீண்டும் ஒரு தேர்தலுக்கு முகங்கொடுக்கக்கூடிய அளவுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ளக் கூடிய வலுவுடன் இல்லை என்ற போதிலும்,…
-
- 1 reply
- 351 views
-
-
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் வடக்கு மாகாணத்தில், குறிப்பாக யாழ். மாவட்டத்தில் சிங்களத் தேசியக் கட்சி ஒன்று ஒரு ஆசனத்தை பெற்றுக்கொள்வதே குதிரைக்கொம்பாக இருந்து வந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி என்று தம்மை உருமாற்றிக் கொண்டுள்ள ஜே.வி.பி சுளையாக ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டமை ஒரு புறநடை என்று கூடச் சொல்லலாம். யாரும் எதிர்பார்க்காத வகையில் – எதிர்வு கூறல்களுக்கு அப்பாற்பட்டு இந்த முடிவு அமைந்திருந்தது. போர் தின்ற மண்ணில், தமிழ்த் தேசியத்தின் தடத்தில் வீறுகொண்டெழுந்த தேசத்தில் திருப்புமுனையாக நடந்தேறிய இந்த வரலாற்று வெற்றியை தேசிய மக்கள் சக்தி தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளுமா என்ற சந்தேகம் இப்போது எழுந்திருக்கிறது. தமிழ்த் தேசியம் பேசியபடி காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த…
-
- 0 replies
- 397 views
- 1 follower
-
-
அல்ஜசீராவில் ரணில்! ஐநாவின் 58ஆவது கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில்,ரணில் விக்ரமசிங்கவை அல்ஜசீரா அம்பலப்படுத்தியிருக்கிறது. 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐநாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானமானது பொறுப்புக் கூறலுக்கானது. அதாவது நிலைமாறு கால நீதிக்கானது. இந்தத் தீர்மானத்தில் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணையாளராக செயல்பட்டது. அதாவது அரசாங்கமும் சேர்ந்து அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியது. அதற்கு முன் நிறைவேற்றப்பட்ட எல்லாத் தீர்மானங்களும் அரசாங்கத்துக்கு எதிரானவை. இலங்கை அரசாங்கங்களால் ஏற்றுக் கொள்ளப்படாதவை.அதற்கு பின்வந்த தீர்மானங்களும் அத்தகையவைதான். 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நிலைமாறு கால நீதிக்கான அந்தத் தீர்மானத்துக்கு இலங்கை இணை அனுசரணை வழங்க…
-
- 1 reply
- 537 views
-
-
வரலாற்றில் கற்றுக்கொள்ள மறுத்த பாடம் March 8, 2025 — கருணாகரன் — இலங்கை அரசியலில் பேரலையாக எழுச்சியடைந்திருக்கும் தேசியமக்கள் சக்தி (NPP) யை எதிர்கொள்வதில் எதிர்க்கட்சிகளுக்கு(எதிரணிகளுக்கு) சவாலே மிஞ்சுகிறது. இதனால் தனிப்பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைத்திருக்கும் NPP அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கு பலமான தரப்புகள் எதுவுமே தற்போதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. NPPயை விமர்சிப்பதற்குக் கூட பலமான காரணங்களை எதிரணிகள் கண்டுபிடிக்கவில்லை. பாராளுமன்றத்திலும் வெளியிலும் சில காரணங்களை அவை சொன்னாலும் அவை ஒன்றும் சனங்களிடம் எடுபடக் கூடிய அளவுக்கில்லை. இதனால் எந்த ஊடகங்களிலும் அவற்றுக்கு முன்னிலை இல்லை. மலையில் எறும்பு ஊர்வதைப்போலவே முன்வைக்கப்படும் விமர்சனங்கள் உள்ளன. இது அரசியல் அரங…
-
- 0 replies
- 341 views
-