அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
பிரதமர் ரணில் தப்பிப் பிழைத்துவிடுவார்? நாட்டில் திடீர் திடீரென அரசியல் பூகம்பங்கள் ஏற்படுவதும் பின்னர் அவை புஸ்வானமாகப் போய்விடுவதும் நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த விடயமாகும். அந்தவகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று, நாளை என்று ஆரம்பித்து ஒருவாறு எதிர்வரும் 4ஆம் திகதி விவாதத்துக்கு எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகர் கருஜயசூரியவிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கையளித்துள்ளார். எனினும் குறித்த பிரேரணையில் மஹிந்த ராஜபக் ஷ கையொப்பம…
-
- 0 replies
- 339 views
-
-
தடம்மாறும் ஐ.அமெரிக்க - பாகிஸ்தான் உறவுகள் - ஜனகன் முத்துக்குமார் ஐக்கிய அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இவ்வாண்டின் உறவு, ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாகிஸ்தானுக்கு ஐ.அமெரிக்கா வழங்க இருந்த உதவித்தொகையை நிறுத்திவைத்தல், பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு உதவுகின்றது என்ற தொனிப்பொருளிலான ஒரு டுவிட்டர் செய்தியுடன் தொடங்கியிருந்தது. எது எவ்வாறிருந்த போதிலும், பாகிஸ்தான் - ஐ.அமெரிக்கா இடையிலான உறவானது, 30 ஆண்டுகளுக்கும் மேலானது என்பது ஒருபுறமிருக்க, எல்லாவற்றுக்கும் மேலாக, ஐ.அமெரிக்காவின் இராஜதந்திர நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்தல், பிராந்தியத்தில் செல்வாக்கைப் பேணுதல் என்பனவற்றுக்…
-
- 0 replies
- 408 views
-
-
இலங்கை இராணுவம் மற்றும் அரசியல்களுக்கிடையிலான தொடர்பு பற்றிய தலைப்பு ஊடகங்களின் கவனத்தை அவ்வப்போதுதான் பெற்றுவருகிறது. போர்காலம், போரின் பிற்காலங்களில் சிவில்-இராணுவத்துக்கிடையிலான தொடர்பு பற்றிய சமநிலையானதொரு சட்டகத்தை பேணிவருவது நாட்டின் சிவில் அரசியல் தலைவர்களது மிக முக்கிய தேவையாக இருந்தும் இது விடயமான தீவிரமான அறிவார்ந்த பணிகளை கண்டுகொள்வது மிகவும் சிரமமானதாகவே இருக்கிறது. இலங்கையின் சிவில்-இராணுவ தொடர்பில் அண்மைய கால நகர்வுகளில் தோன்றியிருக்கும் சில முக்கிய பண்புகளை கோடிட்டுக் காட்டுவதற்கு இக்கட்டுரை முயல்கிறது. இக்கட்டுரை இறுதியில் பிரேரிப்பது போன்று, சிவில்-இராணுவ தொடர்பு எமக்கு இன்னோர் பக்கத்தை காட்டித்தருகிறது. அதனூடாக இலங்கையின் தற்போதைய அரசியலை அவதானிக்கும்…
-
- 0 replies
- 802 views
-
-
இலங்கை முன்னென்றும் காணாத அரசியல் பரிசோதனையில் இறங்கும் ஜனாதிபதி ரணில் June 11, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கையில் இதுவரையில் நடைபெற்ற எட்டு ஜனாதிபதி தேர்தல்களில் எந்த ஒன்றின்போதும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தற்போது நிலவுகின்றதைப் போன்ற குழப்பகரமான அரசியல் சூழ்நிலையை நாம் கண்டதில்லை. நாட்டு மக்களின் மனநிலையை உண்மையில் அறிந்து கொண்டவர்களாகத்தான் அரசியல்வாதிகள் தேர்தல்களைப் பற்றி பேசுகிறார்களா என்று கேட்கவேண்டியிருக்கிறது. தேர்தல்களைப் பற்றி தினமொரு விசித்திரமான கருத்துக்களை அரசியல்வாதிகள் கூறுகிறார்கள். அந்த கருத்துக்களின் தகுதி எத்தகையதாக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்துக்கும்…
-
- 0 replies
- 349 views
-
-
தமிழர் அரசியலும், ‘பக்கச்சார்பற்ற’ ஊடகவியலும் படம் | TAMILNET இக்கட்டுரையானது அண்மையில் ‘டெய்லி மிரர்’ பத்திரிகையில்வெளியான “Tiger Diaspora Backs Gajendrakumar Ponnambalam” என்றகட்டுரைக்கு பதிலாக அமைந்த ஆங்கிலக் கட்டுரையின்[ii]மொழிபெயர்ப்பும் எதிர்வரும் தேர்தல் குறித்த சில அவதானிப்புகளும்ஆகும். இலங்கைத் தீவிலே தமிழரின் அரசியல் போராட்டங்களையும், தமிழர் அபிலாசைகளையும், தமிழினம் பல தசாப்த காலமாய் எதிர்நோக்கி வரும் அடக்குமுறைகளை வெளிச்சமிட்டு காட்டுதலையும் சட்டப்படி குற்றங்களாக்குவதன் மூலமாகவே (criminalize) தொன்று தொட்டு வந்த இலங்கை அரசுகளும் அரசின் விவரணையை ஆதரிக்கும் ஊடகங்களும் தமிழரின் நியாயமான கோரிக்கைகளை நசுக்கியுள்ளன. சுதந்திரத்திற்குப் பின்னான தசாப்தங்களில் இலங்…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஒருங்கிணைந்த மண்ணில் ஒன்றிணைந்த வாழ்வு காரை துர்க்கா / 2019 ஜூன் 04 செவ்வாய்க்கிழமை, மு.ப. 09:36 Comments - 0 அன்று தைப்பொங்கல் திருநாள். கவிதாவின் வீட்டுக்கு, அவளின் நண்பர்களான அன்வரும் மேரியும் தமது பெற்றோருடன் வந்திருந்தனர். தோழர்களைக் கண்ட கவிதா, வீட்டு வாசல் வரை ஓடி வந்து, அவர்களை அன்புடன் வரவேற்றாள். “வணக்கம்! வாருங்கள் வாருங்கள்” எனக் கவிதா நண்பர்களை வரவேற்றாள். மேரியும் அன்வரும் பொங்கல் வாழ்த்துகளைக் கூறி, அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். இது நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான, தமிழ்ப் பாட நூலில், ‘பண்டிகைகள்’ என்ற தலையங்கத்தின் கீழ், உரையாடல் வடிவில் அமைந்த பாடப்பரப்பு ஆகும். எம் உயிரிலும் மேலான தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட…
-
- 0 replies
- 605 views
-
-
ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கையின் கட்டமைப்பிற்குள் அதனுடன் இணைந்து செயற்படும் ஊழலில் ஈடுபட்ட திமிங்கிலங்களை பிடிக்கவேண்டும் என தெரிவித்துள்ள மாற்றுக்கொள்கை நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து இந்திய சீன உறவுகளில் சமநிலையை பேணுவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். அல்ஜசீராவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் ஊழலில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக உரிய ஆதாரங்கள் இல்லாதபோது அவர்களிற்கு எதிரான சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் அரசாங்கம் இறங்கும் ஆபத்து குறித்தும் எச்சரித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கேள்வி:- இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி நெருக்கடிகளிற்கு ஜனாதிபதி…
-
- 0 replies
- 223 views
- 1 follower
-
-
தமிழ்க்கட்சிகளின் அடுத்தகட்ட நகர்வு? ஐந்து தமிழ்க்கட்சிகள் கூடிக்கூடிப் பேசி ஒருவாறாக ஒரு தீர்மானத்தை எட்டிவிட்டன. வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்முயற்சியில் ஒன்று கூடிய ஆறு கட்சிகளில் ஒரு கட்சி ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற முடிவைத் தனித்து எடுத்து ஏற்கனவே அறிவித்துவிட்டது. ஆறு கட்சிகளும் கூடி நிலைமைகளை ஆராய்ந்து என்ன செய்வது என்ற தீர்மானத்தை எட்டுவதற்கு முன்பே பொன்னம்பலம் கஜேந் திரகுமார் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற தன்னிச்சையான முடிவை மேற்கொண்டு அதனை அறிவித்திருந்தது. அந்த அறிவித்தலை ஊடகங்கள் வாயிலாக வெள…
-
- 0 replies
- 847 views
-
-
ஒப்பீட்டுத் தீர்மானம் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என்ற முடிவை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் தனித்தனியாகக் கூடி முடிவெடுத்ததுடன். தமிழ்த்தேசிய கூட்டமைப்பாகவும் ஆதரவினை தெரிவித்துள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தரான சஜித் பிரேமதாசவை புதிய ஜனநாயக முன்னணி என்ற பல கட்சிகள் இணைந்த கூட்டு அணி, பொது வேட்பாளராக இந்த ஜனாதிபதி தேர்தலில் களத்தில் இறக்கி உள்ளது. இந்தப் பொது வேட்பாளரை ஆதரிப்பதில் பின் நிற்பது போன்ற ஒரு தோற்றத்தைக் காட்டி வந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அதன் முடிவை இப்போது வெளிப்படுத்திவிட்டது. தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை, அரசியல் தீர்வு ,பிளவுபடாத நாட்டுக்குள் அதிகா…
-
- 0 replies
- 387 views
-
-
கொசோவோவின் வரலாறு -லோமேந்திரன் டிம் ஜூடா என்ற எழுத்தாளர் “பரம்பரை பரம்பரையாக கொசோவொவின் பிரச்சினைகளுக்கு அந் நாட்டின் மலைப் பகுதிகளே காரணமாக இருந்து வந்துள்ளன” என்று குறிப்பிடுகிறார். பல பரம்பரைகளாக கொசோவோ என்ற ஐரோப்பிய நாடு சேர்பியர்களினதும் அல்பேனியர்களினதும் கருத்து வேறுபாடுகளின் சமர்க்களமாக இருந்து வந்துள்ளது. சேர்பிய அல்பேனிய வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் பல காலங்களாக கொசோவொவின் வரலாறு சம்பந்தமாக தத்தம் கடும் வாதங்களினை முன்வைத்து வருகிறார்கள். அல்பேனியர்கள் கூற்றுப்படி அவர்களே கொசோவோவின் உண்மையான குடிமக்கள். அவர்கள் இலைரியன்கள் எனப்படும் ஆதிவாசிகளின் வழிவந்தோர்களாவர். சேர்பியர்களோ, கி.பி.1500 களிலிருந்த அவர்களின் பல்வேறு இராச்சியங்களின் இ…
-
- 0 replies
- 1.3k views
-
-
[size=4]1990ஆம் ஆண்டிலிருந்து வன்னியை மையப்படுத்திய போர் அதிக தடவைகள் கனகராயன்குளத்தைக் காயப்படுத்தியது.[/size][size=2] [size=4] நமது கிராமங்கள் வேகமாக மூழ்கிக்கொண்டிருக்கின்றன. அதிகாரத்தின் அதி உச்ச பலத்திலிருந்து பிறந்திருக்கும் ஏதோ ஒன்று கிராமங்கள் பட்டப்பகலில் சூறையாடப்படுவதைக் கூட பார்த்துக் கொண்டிருக்கச் செய்திருக்கின்றது. [/size][/size] [size=2] [size=4]எம் பாட்டன், பாட்டி, தாய், தந்தை வாழ்ந்து பழகிய நிலம் நமது காலத்தைக் கடன் கொடுக்க வலிந்து தயாராகிக் கொண்டிருக்கின்றது. [/size][/size] [size=2] [size=5]பரவி வரும் ஆபத்து[/size][/size][size=2] [size=4]எமது தலைமுறைக்கும், எமது அடுத்த காலத்தவர்க்கும் அங்கு வாழ்வதற்கான ஆதாரங்கள் மறுக்கப்படும் சூழலுக்குள் அமிழ…
-
- 0 replies
- 1.2k views
-
-
மனித உரிமைகள் கூட்டத் தொடர் தொடங்கவிருக்கும் ஒரு பின்னணியில் யாழ்ப்பாணத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் சில கடந்த வாரம் வரை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. நல்லிணக்கம், நிலைமாறுகாலகட்ட நீதி போன்ற தலைப்புக்களின் கீழ் அவசர அவசரமாக கருத்தரங்குகளும் வகுப்புக்களும் நடாத்தப்பட்டன. இக்கருத்தரங்குகள் ஒழுங்கு செய்யப்பட்டு வந்த விதம் வேகம் அவற்றின் செறிவு என்பனவற்றைத் தொகுத்துப் பார்த்தால் ஏதோ ஒரு கால எல்லை குறிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட நிதியை எப்படி விரைவாகச் செலவழிக்கலாம். அதற்கு எப்படிக் கணக்குக் காட்டலாம் என்ற அவசரமே தெரிந்தது. அது தான் உண்மை என்று ஐ.என்.ஜி.ஓ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிலைமாறு கால கட்ட நீதி குறித்து சாதாரண சனங்களுக்கு விழிப்பூட்டுமாறு ஐ.நா. ஒரு தொ…
-
- 0 replies
- 488 views
-
-
அரசியல் மயப்படுத்தபட்ட சிந்தனை யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் வடபகுதியில் மட்டுமல்லாமல் நாடளாவிய ரீதியில் பெரும் பரபரப்பு சம்பவமாகப் பதிவாகியிருக்கின்றது. ஊடகங்களில் இது, தலைப்புச் செய்தியாக இடம்பெற்றிருந்தது. அரசியல் மட்டங்களிலும் புத்திஜீவிகள் மட்டத்திலும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவமானது இரண்டு இனங்களைச் சேர்ந்த இளைஞர்களிடையே ஏற்பட்டிருந்த ஒரு மோதலாக இருந்த போதிலும்,இன அடையாளத்தை முதன்மைப்படுத்திய அரசியல் நோக்கில் இதனை சீர்தூக்கிப் பார்த்ததன் விளைவாக அது ஊதிப் பெருத்து, பெரியதொரு விவகாரமாகியது. பல்கலைக்கழகம் ஒன்றில் …
-
- 0 replies
- 429 views
-
-
சீனாவுடனான போரை எதிர்கொள்ள இந்தியா தயாரா? வேல்ஸ் இல் இருந்து அருஸ் இந்தியா – சீனா எல்லைப் பகுதியான கல்வான் பகுதியில் கடந்த ஜுன் மாதம் இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து இந்தியா சீனாவுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதான தோற்றப்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன. அதனை உறுதிப்படுத்துவது போல இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான உறவுகளும் பலப்பட்டு வருவது போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா, அமெரிக்கா, யப்பான் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கூட்டான படை ஒத்திகை, அமெரிக்கா தனது பசுபிக் பிராந்திய கட்டளைப் பீடத்தை இந்து – பசுபிக் கட்டளை மையமாக மாற்றியது போன்றவற்றை இங்கு குறிப்பிடலாம். அது மட்டுமல்லாது, இந்தியாவுக்கான ஆயுதங்களை …
-
- 0 replies
- 504 views
-
-
சிவசேனா எதனைச் சாதிக்கப் போகிறது? அண்மையில் வவுனியாவில் சிவசேனா என்ற அமைப்பு தொடங்கப்பட்ட விவகாரம், தமிழ் அரசியல் அரங்கில் பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. எழுக தமிழுக்குப் பின்னர் தமிழர் அரசியல் அரங்கில் சிவசேனா தான் கூடுதல் பரபரப்பைத் தோற்றுவித்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. நீண்டகால தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களில் ஒருவரும், தமிழ்ப்பற்றாளரும், தமிழறிஞருமான மறவன்புலவு சச்சிதானந்தம் இதன் அமைப்பாளராக இருக்கிறார். அவரது ஏற்பாட்டில் வவுனியாவில் நடந்த சிவசேனா ஆரம்ப நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் பங்கேற்ற…
-
- 0 replies
- 481 views
-
-
கமலாவோ விமலாவோ கையாள, கட்டமைப்பு வேண்டுமே? நிலாந்தன்… November 15, 2020 கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின் ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் மத்தியில் உற்சாகம் மேலிட்டுள்ளது. அதிலும் சற்று கற்பனை கூடிய சிலர் கமலாவின் பூர்வீகத்தை இந்தியாவில் இருந்து பெயர்த்து எடுத்து மானிப்பாய் வரை கொண்டு வந்து சேர்த்து விட்டார்கள். வேறு சிலர் கமலா ஹாரிஸின் அலுவலகப் பிரதானியாக நியமிக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் வேரைக் கொண்ட பெண்ணாகிய ரோகிணி லக்ஷ்மி கொஸோக்லு குறித்தும் பெருமைப்படுவதாகத் தெரிகிறது. இவ்வாறு கமலாவுக்கும் ரோகிணிக்கும் சொந்தம் கொண்டாடி கமலாவின் வருகையால் தமது அரசியல் வாழ்வில் ஏதும் நல்ல திருப்பங்கள் நடக்கும் என்று எதிர்பார்ப்போ…
-
- 0 replies
- 504 views
-
-
வக்சினே சரணம் ? நிலாந்தன்! September 5, 2021 “அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மையே கொரோனா வைரஸ் நிலைமை மோசமடைவதற்கு காரணம்.கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்கு மருத்துவ நிபுணர்கள் தலைமை தாங்கவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான எரான் விக்கிரமரட்ண. எனது கடந்த வாரக்கட்டுரையில் நான் குவிமையப்படுத்திய விடயமும் இதுதான்.“இலங்கை ஒரு சிறியதீவு எங்களால் பாதிப்பை கட்டுப்படுத்தியிருக்க முடியும்.அரசாங்கம் உணர்வுபூர்வமாக இருக்காததால் மருத்துவநிபுணர்கள் தலைமை வகிக்க முடியாமல்போய்விட்டது” எனவும் எரான் தெரிவித்துள்ளார். ஆனால் அரசாங்கம் வைரசுக்கு எதிரான போராட்டமும் உட்பட நாட்டின் எல்லாத் துறைகளையும் ராணுவமய…
-
- 0 replies
- 417 views
-
-
ஈழத்தமிழர்களுக்காக சீமான் அவர்கள் வழங்கிய நேர்காணலை காண்பதற்கு http://www.2tamil.com/?pgid=srilankasn
-
- 0 replies
- 821 views
-
-
ஆட்டம்: அமெரிக்கா Vs சிறீலங்கா இடம்: ஐநா மனித உரிமைகள் பேரவை. கோப்பை: சிறீலங்காவில் மனித உரிமைகளை மேம்படுத்துவது.. இனங்களிடையே புரிந்துணர்வை கட்டி எழுப்பி.. பச்ச மண்ணையும் சுட்ட மண்ணையும்.. ஒன்றாக சிறீலங்கன் என்று ஒட்ட வைக்கும் வெற்றிக்கிண்ணம். (ஈழத்தமிழர்.. தமிழினம்.. இனப்படுகொலை.. தமிழின அழிப்பு.. போர்க்குற்றம்.. காணி சுவீகரிப்பை நிறுத்தல்.. சிறீலங்கா படைவிலக்கல்.. சுதந்திர வாக்கெடுப்பு.. வடக்குக் கிழக்கு தமிழர் தாயகம்.. வடக்குக் கிழக்கு இணைவு.. சுயநிர்ணய உரிமை.. 13+.. போராளிகள்.. அரசியல் கைதிகள் விடுவிப்பும்... புனர்வாழ்வும்.. தமிழீழம்.. இதை எல்லாம் தூக்கி நிரந்தரமாவே குப்பையில கடாசியாச்சு.) முடிவு: 23: 12 என்ற அடிப்படையில் அமெரிக்காவுக்கு வெற்றி. கொசுறு: …
-
- 0 replies
- 621 views
-
-
‘வடக்கு – கிழக்கில் கிளர்ச்சி வெடிக்கும்’: இது தேர்தலுக்கான கோசமா….? நரேன்- இலங்கைத் தீவு சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே மிதவாத தலைமைகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த தமிழ் தேசிய அரசியல் பல்வேறு முரண்பாடுகளையும், பிளவுகளையும் சந்தித்து இருந்தது. ஜனநாயக ரீதியாக மிதவாத தலைமைகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டங்களையும், உரிமைக்கான குரல்களையும் தென்னிலங்கையின் பௌத்த சிங்கள அடிப்படைவாதிகளும், மாறி மாறி ஆட்சிக்கு வந்த இரு பிராதான கட்சிகளும் புரிந்து கொள்ளாமையின் விளைவு இளைஞர்கள் ஆயுதமேந்த நிர்பந்திக்கப்பட்டனர். மிதவாத தமிழ் தலைமைகளும் அதற்கு துணை போயின. தனித் தமிழீழ கோரிக்கையை முன்னுறுத்தியும், உரிமையை வலியுறுத்தியும் பல ஆயுதப் போராட்ட அமைப்புக்கள்…
-
- 0 replies
- 528 views
-
-
முதலமைச்சர் யார் பக்கம்? வடக்கு, கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தல் பரபரப்பு அரசியல் கட்சிகளிடையே தொற்றிக் கொண்டிருக்கின்ற போதிலும், அவை எதற்குள்ளேயும் சிக்கிக் கொள்ளாமல் இருக்கிறார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர், அதிகம் மௌனமாகிப் போனவர் அவர் தான். 2015ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் போது, வீட்டை விட்டு வெளியே வந்து வாக்களியுங்கள் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் இரட்டை அர்த்தத்துடன் வெளியிட்ட அறிக்கையே, அவருக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் இன்று வரை தொடருகின்ற முரண்பாடுகளுக்குப் பிரதான காரணம். அதற்குப் ப…
-
- 0 replies
- 509 views
-
-
ராஜபக்ஷக்களின் வீழ்ச்சியின் பாடங்கள் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது வெளிநாட்டு தொலைக்காட்சி சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவரது குடும்ப உறுப்பினர்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,“ராஜபக்ஷக்களை மக்கள் தெரிவுசெய்கிறார்கள். அதற்கு நான் என்ன செய்யமுடியும்? மக்கள் விரும்பவில்லையானால் அவர்களை விரட்டுவார்கள்.சகல ராஜபக்ஷக்களும் கூண்டோடு விரட்டியடிக்கப்படுவார்கள்” என்று குறிப்பிட்டார். தற்போது நேர்காணலின் அந்த குறிப்பிட்ட பகுதியின் பதிவு சமூக ஊடகங்களில் பரவலாக உலாவருகிறது. கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து ராஜபக்ஷக்கள் அரசியலில் பங்கேற்று வந்தபோதிலும், ஒரு குடும்பமாக அவர்கள் அரசியலில…
-
- 0 replies
- 389 views
-
-
-
- 0 replies
- 555 views
-
-
சோவியத் யூனியனின் உடைவும் அதன் அதிர்வுகளும் உலகின் நவீன வரலாற்றில் இரண்டு வல்லரசுகள் ஆதிக்கம் செலுத் தியமையும், உலகநாடுகள் ஏதோ ஒருவல்லரசுக்கு ஆதரவாக, ஒருவல்லரசின் பக்கம் சார்ந்து செயற்பட்டமையும், இராணுவ கட்டமைப்புக்களில் இணைந்து செயலாற்றியமையும், முக்கியமான காலப் பகுதியாகவும் இந்த இரண்டு வல்லரசுகளும், ஒன்றுடன் ஒன்று நேரடியாக போர் புரியவில்லை. ஆனால் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போர்களில் தகராறுகளில் இரண்டு வல்லரசுகளுமே ஏதோ ஒரு தரப்புக்கு அரசியல், இராணுவ பொருளாதார உதவிகளை வழங்கி வந்தன. ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் யூனியனுமே மேற்குறிப்பிட்ட இரண்டு வல்லரசுகளாகும். இவ்வல்லரசுகள் ஏனைய நாடுகளுக்கு உதவிகளை வழங்கி, முரண்பாடுகளை உக்கிரமாக்கிய நில…
-
- 0 replies
- 8.6k views
-
-
தேசிய நிதி கட்டமைப்பின் 13 விடயங்களை இலக்கு வைக்கும் சர்வதேச நாணய நிதியம் By NANTHINI 12 NOV, 2022 | 12:25 PM (லியோ நிரோஷ தர்ஷன்) சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வரும் அரசாங்கம், மறுபுறம் கடன் மறுசீரமைப்பு குறித்து இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் கலந்துரையாடி வருகின்றது. அந்த வகையில் அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து கண்காணிக்கவும், தேவையான ஒத்துழைப்புகளை வழங்கவும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகள் கொழும்பில் அரச தரப்புடன் தொடர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதனடிப்படையில் இலங்கையின் நிதி கட்டம…
-
- 0 replies
- 229 views
- 1 follower
-