அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
முள்ளிவாய்க்காலும் நினைவுச்சின்னமும் கபில் ஜனநாயக வெளியை எதிர்கொள்வதில் தமிழர் தரப்பு எந்தளவுக்குப் பலவீனமான நிலையில் உள்ளது என்பதை, மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திச் சென்றிருக்கிறது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு. ஜனநாயக சூழலில் அரசியல் செய்வதில் தமிழர் தரப்பில் நிறையவே போதாமைகள் இருப்பதைப் போலவே, ஜனநாயக சூழலில் நினைவேந்தல்களை நடத்துவதிலும் கூட, தமிழர் தரப்பிடம் போதாமைகள் இருக்கின்றன. மஹிந்த ராஜபக் ஷவின் இறுக்கமான ஆட்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பற்றி கரிசனைப்படாமல் இருந்தவர்கள் கூட, ஜனநாயக சூழலில், அதற்காக மோதத் தொடங்கியுள்ளார்கள். இ…
-
- 0 replies
- 530 views
-
-
உள்ளூராட்சித் தேர்தல்; யாருக்கு வாக்களிப்பது? என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan இம்மாதம் நடக்கவிருந்த உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட பின்னர், தற்போது 2023 ஏப்ரல் 25 ஆம் திகதியன்று உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்ளூராட்சித் தேர்தல், 2023 மார்ச் 9 அன்று நடைபெறவிருந்தன. ஆனால், இலங்கை தொடர்ந்து பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதால் ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறையால் குறித்த தினத்தில் தேர்தல் நடத்தப்பட முடியாது தாமதமானது. உயர்நீதிமன்றின் இடைக்கால உத்தரவைத் தொடர்ந்து, பாதீட்டில் தேர்தலுக்கென ஒதுக்கப்பட்ட நிதியை வழங்குவதைத் தடுக்க, இடைக்கால தடைவிதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல்கள் நடப்பதற்கான ச…
-
- 0 replies
- 769 views
-
-
அரோகராப் போராட்டம்? - நிலாந்தன் ஒரு நீதிபதிக்கு நீதி கேட்டுத் தமிழ் மக்கள் ஒன்று திரளும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த வாரத்திலிருந்து தமிழ்ப் பகுதிகளெங்கும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட மனிதச் சங்கிலிப் போராட்டத்தைக் குறிப்பிட வேண்டும். இது குத்துவிளக்குக் கூட்டணியால் ஒழுங்கு செய்யப்பட்டது. எனினும் ஏனைய கட்சிகளும் அதற்கு ஆதரவைக் காட்டின. அந்தப் போராட்டம் சரியான நேரத்தில் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அது சொந்த மக்களின் கவனத்தையும், உலக சமூகத்தின் கவனத்தையும் ஈர்க்கத்தக்க விதத்தில் பிரம்மாண்டமானதாக முன்னெடுக்கப்பட்டதா? மருதனார் மடத்திலிருந்து தொடங்கி யாழ்ப்பாணம் வரையிலு…
-
- 0 replies
- 301 views
-
-
18 DEC, 2023 | 05:32 PM (நேர்கண்டவர் : ரொபட் அன்டனி) இலங்கையில் அரசியல் தீர்வு எதுவாக இருந்தாலும், அது உண்மையில் எல்லாத் தரப்பினரதும் நல்லிணக்க முயற்சியாக அமைய வேண்டும். இது சாத்தியமானது என்றே நான் நினைக்கின்றேன். ஆனால், இதில் கடின உழைப்பு அவசியமாகிறது என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். 'வீரகேசரி' வார வெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடிய அமெரிக்கத் தூதுவர், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பாதிக்கப்பட்ட மக்களை மையமாகக்கொண்டதாக அமைய வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும் புலம்பெயர் மக்கள் …
-
- 0 replies
- 557 views
- 1 follower
-
-
வடிவேலின் புதிய அரசியல் யாப்பு ? யதீந்திரா கடந்த வருடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடக்கிய தூதுக் குழுவொன்று சீனாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தது. இதன்போது கூட்டமைப்பின் தலைவராக அறியப்படும் இரா.சம்பந்தனும் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தார். அதே போன்று கூட்டமைப்பிற்கு எதிர்நிலைப்பாடுள்ள பிறிதொரு தமிழ் கட்சியின் தலைவரும் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தார். இவர்கள் அங்கு தங்கியிருந்த வேளையில் ஆசுவாசமாக மாலை நேரங்களில் பேசிக் கொள்வதுண்டாம். பொதுவாக மக்களுக்கு முன்னால் முரண்பாடுள்ளவர்களாக காண்பித்துக் கொள்ளும் அரசியல்வாதிகள், தனியறையில் மதுக் கோப்பைகளுடன் இருப்பது அரசியலை பொறுத்தவரையில் சர்வசாதாரணமான ஒன்று. சம்பந்தனும் அப்படியான மதுக் கோப்பைகள் உரசிக் கொள்ளும் இரவுகளை விரும…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ்த்தேசியம் பலமாக உள்ளதா? பலவீனப்பட்டுள்ளதா? June 12, 2024 — கருணாகரன் — தமிழ்த்தேசியம் பலமாக உள்ளதா? பலவீனப்பட்டுள்ளதா? பலவீனப்படுத்தப்படுகிறதா? போன்ற கேள்விகள் இன்றைய ஈழத்தமிழரின் அரசியலில் முக்கியமானவையாக உள்ளன. ஏனென்றால், தமிழ்த்தேசியம் பலவீனப்பட்டுக் கொண்டுபோகிறது. அதை எப்படியாவது பலப்படுத்த வேண்டும். காப்பாற்ற வேண்டும் என்ற பதற்றத்தோடு பலரும் உள்ளனர். இதில் ஒரு தொகுதியினர், “தமிழ்த்தேசியத்தைப் பலப்படுத்த வேண்டுமானால், அதற்கு ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தப்படும்போது சிதறிக் கிடக்கும் தமிழ்த்தேசியக் கட்சிகளும் தமிழ்த்தேசிய உணர்வும் திரட்சியடைந்து ஒன்றிணையும். அது தமிழ் மக்களின் கூட்டுணர்வையு…
-
- 0 replies
- 637 views
-
-
தடம் மாறியதா தமிழ்த் தேசியம்? Editorial / 2019 ஜூன் 04 செவ்வாய்க்கிழமை, மு.ப. 09:48 Comments - 0 -க. அகரன் அபிவிருத்தி அடைந்து வரும் நாடொன்றின் ஸ்திரத்தன்மை என்பது, அதன் இறையாண்மை, பொருளாதாரப் பெருக்கம், பாதுகாப்பு என்பவற்றின் மூலோபாயங்களிலேயே தங்கியுள்ளது. அந்த வகையில், வளர்முக நாடுகளைப் பொறுத்த வரையில், அவை தமது இறைமையில் தளர்வின்றிச் செயற்பட்ட போதிலும், பாதுகாப்பு உட்படப் பொருளாதார மேம்பாட்டில், பிறநாடுகளின் கடைக்கண் பார்வையின் அவசியத்தை எதிர்பார்த்தேயுள்ளன என்பதே யதார்த்தம். பொருளாதார பலம்வாய்ந்த நாடுகளைத் தவிர, ஏனைய நாடுகள் வௌிநாட்டு முதலீட்டாளர்களின் வருகை, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகையையே பெரிதும் நம்பியுள்ள நிலையில், இவ்…
-
- 0 replies
- 546 views
-
-
உண்ணாவிரதம் இருந்தால் மாத்திரமே அறியப்படும் இலங்கை தமிழ் அரசியல் கைதிகள் இலங்கையில் அரசியல் கைதிகள் என எவரும் கிடையாது என முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச நான்கு வருடங்களுக்கு முன்னர் கூறியிருந்தமை அனைவருக்கும் ஞாபகமிருக்கலாம். மேலும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கைதிகள் ஈடுபட்டால் அது குறித்து அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதி அமைச்சுக்கு இதில் நடவடிக்கை எடுப்பதற்கு ஒன்றுமேயில்லை என்றும் அவர் அச்சந்தர்ப்பத்தில் கூறியிருந்தமை முக்கிய விடயம். இந்நிலையில் பல தடவைகள் உணவு தவிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த தமிழ்க் கைதிகளுக்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும் தமிழ் பிரதிநிதிகளால் வழங்கப்பட்டு வருவது என்னவோ ஆறுதல் வார்த்தைகளும் நம்பிக்கைகளும் மட்டும…
-
- 0 replies
- 416 views
-
-
அரசியல் கைதிகளுக்கு என்று ஓர் அமைப்பு எதுவும் கிடையாது. கைதிகள் தாமாகப் போராடத் தொடங்கும் போது அதை அரசியல்வாதிகள் தத்தெடுப்பதே வழமை. இம்முறை வடமாகாண முதலமைச்சர் இது விடயத்தில் கூடுதலான அக்கறையைக் காட்டுவதாகத் தெரிகிறது. கைதிகளும் அவரை ஒப்பீட்டளவில் அதிகளவில் நம்புவது போலத் தெரிகிறது. கைதிகளுக்கென்று ஓர் அமைப்பு எதுவும் கிடையாது என்று அவரும் கூறியிருக்கிறார். அரசியல்கைதிகளுக்கென்று ஏன் ஓர் அமைப்பு உருவாக்கப்படவில்லை? முன்பு அரசியல் கைதியாக இருந்து விடுவிக்கப்பட்ட ஓர் அரசியல் செயற்பாட்டாளர் சொன்னார் “இப்போதுள்ள அரசியல் கைதிகளில் அநேகமானவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழு; கைது செய்யப்ட்டவர்களே. தேசத்துரோகம், அல்லது தேசிய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைக…
-
- 0 replies
- 440 views
-
-
நீராவியடியில் குருகந்த புற்றுநோயால் இறந்துவிட்ட குருகந்த விகாரையின் விகாராதிபதி மேதாலங்காரகித்தி தேரரின் உடல் நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் கடந்த 23 அன்று அடாவடித்தனமாகவும், அராஜகத்தனமாகவும் தகனம் செய்ததை அனைவரும் கவனித்தோம். ஏற்கெனவே அந்த பிரதேசத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட விகாரை குறித்த சர்ச்சை இன்னமும் தீராத நிலையில் இந்த அக்கிரமம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரை நீராவியடி சர்ச்சையோடு பிக்குகளின் சண்டித்தன வரலாற்று நீட்சியையும் சுருக்கமாக பதிவு செய்கிறது. ஞானசார தேரர் நீராவியடியில் என்ன நடந்தது என்பது பற்றிய ஒரு மணித்தியாலத்துக்கும் அதிகமான நேரத்தைக் கொண்ட வீடியோ காட்சியொன்றைக் காணக் கிட…
-
- 0 replies
- 1.2k views
-
-
- கார்வண்ணன் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் வீசா உதவி அதிகாரியாகப் பணியாற்றும் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ் என்ற பெண், கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை, இலங்கை அரசாங்கம் கையாளுகின்ற விதம் கடுமையான சர்ச்சைகளை தோற்றுவித்திருக்கிறது. ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக் ஷ பதவியேற்று ஒரு வாரத்தில் அந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. அதுகுறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்துக்கு சுவிஸ் தூதுவர், கொண்டு சென்றிருந்தார். நியூயோர்க் ரைம்ஸ் மூலம், ஊடகங்களிலும் அந்தச் செய்தி பரவத் தொடங்கியது. இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக குற்ற விசாரணைத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அரச…
-
- 0 replies
- 628 views
-
-
– நவீனன் (சிறிலங்காவில் இனப் பிரச்சினைக்கு அடிப்படை காரணம் மொழி வெறி என்பது தான் அடிப்படைக் காரணம் என்றாலும், தற்போது ஆளும் அனுர அரசும் சிங்கள மொழிக்கே தொடர்ந்தும் முன்னுரிமை கொடுத்து வருகிறது) தமிழர் தாயகத்தில் உள்ள நிர்வாக கட்டமைப்புகளை மிக மிக தீவிரமாக தற்போதய அனுர அரசும் திட்டமிட்டு சிங்கள மயப்படுத்தி வருகின்றது. அதன் ஒரு வெளிப்பாடாகவே இந்தியப் பிரதமர் மோடியின் வருகையின் போது தமிழ் மொழி முழுமையாக புறக்கணிக்கப்பட்டது.1956 ம் ஆண்டில் எஸ்.டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவின் தனிச்சிங்கள சட்டமே ஈழத்தில் நீண்ட காலமாக நடக்கும் இனப் போராட்டத்தின் மூல காரணி என்பதை இந்த அரசும் மறந்து போய்விட்டது போல தோன்றுகிறது. மோடிக்கு தமிழில் வரவேற்பு இல்லை: இந்தியப் பிரதமர் இலங்கைக்கு ஏப்ரல்…
-
- 0 replies
- 258 views
- 1 follower
-
-
காலனித்துவத்திலிருந்து நவகாலனித்துவத்துக்கு கைமாற்றும் சதியே நமது சுதந்திர நாள். ஆட்சியையும், அதிகாரங்களையும். பொறுப்புகளையும் தமிழர்களிடமிருந்து பறித்து சிங்களவர்களிடம் ஒப்படைத்த நாள் இது. தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை நசுக்குவதற்கான அரச இயந்திரத்தை சிங்களவர்களிடம் கொடுத்த நாள் இது. இலங்கையின் சனத்தொகையில் 11 வீத இந்திய வம்சாவழித் தமிழர்களை நாடற்றவர்களாக ஆக்குவதற்காக வழங்கப்பட்ட லைசன்ஸ் இந்த சுதந்திரம். டொனமூர் யாப்பு தொடக்கம் இறுதி யாப்பு வரை தமிழர்கள் எதிர்த்தே வந்துள்ளனர். சோல்பரி யாப்பு மாத்திரம் விதிவிலக்கு. சுதந்திரத்துக்கு வித்திட்ட அந்த யாப்பு தமிழர்களை நசுக்க மட்டுமே பயன்பட்டது. “சுதந்திரம்” என்பதை விட தமிழர்களுக்கு அது ஆங்கிலேயர்களும், சி…
-
- 0 replies
- 443 views
-
-
-இலட்சுமணன் உள்நாட்டு அரசியல் செயற்பாடுகளும் சர்வதேச அணுகுமுறைகளும், இலங்கை அரசியலுக்குத் தேவையான, தேர்தல் வியூகங்களை அமைத்துக் கொடுத்துள்ளன. என்றுமில்லாத அளவுக்குத் தமிழ் தரப்பினரின் பிரிவினைப் போக்கும் சிங்கள தேசியவாத கட்சிகளின் ஒன்றிணைதலும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிதைவும் முஸ்லிம் கட்சிகளின் அரசியல் கையறு நிலையும், இலங்கை அரசியலில் மீள முடியாத, தேசியவாத சிந்தனைகளின் வௌிப்பாடுகளாகவே கருதவேண்டியுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் வியூகத்தில், சிங்களத் தேசியவாத அரசை நிலைநிறுத்த, பொதுஜன பெரமுனவும் சுதந்திரக் கட்சியும் முறையாகத் திட்டம் வகுத்துச் செயற்பட ஆரம்பித்துள்ளன. அதன் விளைவாக, வடக்கு, கிழக்கு தவிர்ந்த பிரதேசங்களில், பொதுஜன பெரமுன, சுதந்திரக் கட்சி…
-
- 0 replies
- 950 views
-
-
புதிய அரசியலமைப்பும் அரசியல் தீர்வும் புதிய அரசியலமைப்பின் பூர்வாங்க வரைவு (Draft Constitution) எதிர்வரும் நவம்பர் மாதம் வரவு–செலவுத்திட்டம் மீதான விவாதம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அரசாங்கத்தலைவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அடுத்த வருடத்துக்கான அரசாங்கத்தின் வரவு–செலவுத் திட்டம் நவம்பர் 10 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என்றும் தொடர்ந்து ஒருமாத காலத்துக்கு அதன் மீதான விவாதம் நடைபெறும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறானால், அரசியலமைப்பு வரைவு இன்னமும் 6 வார காலத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டாக வேண்டும். இவ்வருட ஆரம்…
-
- 0 replies
- 528 views
-
-
இலங்கையில் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த அமெரிக்காவினால் முடியுமா? -தேவநேசன் நேசையா Bharati November 8, 2020 இலங்கையில் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த அமெரிக்காவினால் முடியுமா? -தேவநேசன் நேசையா2020-11-08T22:42:04+05:30Breaking news, அரசியல் களம் FacebookTwitterMore தேவநேசன் நேசையா தெற்காசிய மற்றும் தென்கிழக்காசியாவிற்கான (இலங்கை, இந்தியா, மாலைதீவு, இந்தோனேசியா, வியட்நாம்) அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோவின் விஜயத்தின் பிரதான குறிக்கோள் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சிக்கான ஆதரவை அதிகரிப்பதற்காகவேயாகும். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் அவரது…
-
- 0 replies
- 680 views
-
-
இந்தோ- பசுபிக் பாதுகாப்பு மாநாட்டில் இலங்கை பங்குபற்றியது ஏன்? — ஜோ பைடன் நிர்வாகத்தின் அணுகுமுறை கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏற்புடையதாக இருக்குமென்ற நோக்கில், அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத் தாபனத்தின் 480 மில்லியன் டொலர்கள் கடனுதவிக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான எதிர்ப்பை பௌத்த குருமார் கைவிடக்கூடும். —- அ .நிக்ஸன்- இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிப்பது குறித்த ஏற்பாடுகளிலேயே அமெரிக்க ஜனாதிபதியாகப் புதிதாகப் பதவியேற்கவுள்ள ஜோ பைடன் கவனம் செலுத்துவாரென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவுடன் அளவுக்கதிகமான குழப்பங்களையும் முரண்பாடுகளையும் உருவாக்கிவிட்டாரென்ற உணர்வு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு …
-
- 0 replies
- 426 views
-
-
‘பொத்துவில் முதல் பொலிகண்டி’ போராட்டம்: வயிற்றெரிச்சல் கோஷ்டிகள் -புருஜோத்தமன் தங்கமயில் ஜனநாயகப் போராட்டங்களை நோக்கி, மக்கள் திரள்வதை அடக்குமுறையாளர்களும் அவர்களின் இணக்க சக்திகளும் என்றைக்குமே விரும்புவதில்லை. இங்கு ‘அடக்குமுறையாளர்’கள் அடையாளத்துக்குக்குள், அரசுகள், அரசாங்கங்கள், பெரும்பான்மைவாதம், இனவாதம், மதவாதம் உள்ளிட்ட கூறுகள் அடங்குகின்றன. ‘இணக்க சக்திகள்’ என்ற அடையாளத்துக்குள், அடக்குமுறையாளர்களிடம் சலுகை பெறும் தரப்புகளும், குறுகிய அரசியல் மூலம் ஆதாயம் தேடும் தரப்புகளும் உள்ளடங்குகின்றன. இவ்வாறான தரப்புகள்தான், போராட்டங்களை ஊடறுக்கின்றன; காட்டிக் கொடுக்கின்றன. பௌத்த சிங்களப் பேரினவாத அடங்குமுறைகளுக்கு எதிராக, தமிழ் மக்கள் அரசியல் உரி…
-
- 0 replies
- 448 views
-
-
ஐரோப்பிய ஆதிக்கக் கப்பல் ஆட்டம் காண்கிறதா-பா.உதயன் சீனாவின் பெரும் அலையோடு மோதி மூழ்கிக்கொண்டிருகிறதா இருநூறு வருட கால ஐரோப்பிய அதிகார ஏகாதிபத்தியம். முழித்து விட்டது ஆசியாவில் படுத்திருந்த சிங்கம் ஒன்று. இப்போ வேட்டை ஆட ஆரம்பித்து விட்டது . கொஞ்சம் ஆடித்தான் போய் இருக்கிறார்கள் ஐரோப்பியரும் அமெரிக்கரும். ஆசியாவில் இருந்து புறப்பட்ட றகன் ஒன்று அனைத்து உலக வேலிகளையும் அறுத்துக் கொட்டி கொழுத்து பெருத்து இருக்கிறது பொருளாதார பெருச்சாளி ஒன்று. நெப்போலியன் சீனாவை பார்த்து சொன்னது போலவே ஆசியாவில் சிங்கம் ஒன்று உறங்கிக்கொண்டிருக்கிறது. அது முழிக்கும் போது உலகம் தாங்காது “என்றான் Let China Sleep, for when she wakes, she will shake the world,” அதே போல் கொழுத்த பணக்கா ர…
-
- 0 replies
- 425 views
-
-
மக்களின் சந்தேகம் களையப்பட வேண்டும் http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-06-10#page-2
-
- 0 replies
- 250 views
-
-
குண்டுச் சட்டிக்குள் ஓடும் தமிழ் அரசியல் குதிரைகள் நீங்கள் ‘விஐபி’யாக வேண்டுமா? யோசிக்காமல் அரசியலில் ஈடுபடுங்கள். அதிலும் போராட்டம், புரட்சி, காந்தி, காந்தியம், சேகுவேரா, பிடல், பிரபாகரன், புலிகள், தமிழ்த்தேசியம், சுயாட்சி, தனிநாடு, தமிழீழம், மாவீரர்கள், எரித்திரியா, தீபெத், கொசோவா என்று சில பெயர்ச் சொற்களைச் சொல்லத் தெரிந்து விட்டால்போதும்; உங்களுடைய காட்டில் மழைதான்....” என்று சொல்லிச் சிரிக்கிறார் நண்பர் ஒருவர். இந்த நண்பர், 28 ஆண்டுகள் போராளியாக இருந்தவர். அதிலும் விடுதலைப்புலிகள் அமைப்பில் 1980 களின் நடுப்பகுதியில் இணைந்து, 28 ஆண்டுகள் தொடர்ச்சியாகச் செயற்பட்டவர். போராட்டத்தின்போது, ஒரு காலை இழந்திருப்பவர். போரின் …
-
- 0 replies
- 442 views
-
-
அரசியல் கைதிகளை மறந்து மோதிக்கொள்ளும் அரசியல்வாதிகள் அநுராதபுர சிறைச்சாலையில், மூன்று அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம், மூன்றாவது வாரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், அதை வைத்து அரசியல் நலன் தேடுவதற்காக இன்னொரு போராட்டமும், தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் நடந்து கொண்டிருக்கிறது. வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வந்த தமது விசாரணைகள், திடீரென அநுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதைக் கண்டித்தும், மீண்டும் தமது வழக்குகள் வவுனியாவிலேயே விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கோரியே, மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக கடந்த 13ஆம் திகதி, வடக்கில் முழு …
-
- 0 replies
- 413 views
-
-
பிராந்தியத்துக்கு ஒரு மத முன்னுரிமை சிந்தனை ஆபத்தானது யுத்தம் முடிந்து மீள்குடியேற்றத்துக்காக 2010 ஜனவரியில் ஊருக்கு (கிளிநொச்சிக்கு) வந்தபோது, எங்களுடைய தெருவில் இரண்டு சிறிய கோவில்களும் இரண்டு சிறிய மாதா சொரூபங்களுமே இருந்தன. ஊரைச் சுற்றிப் பார்த்தாலும் அதிகமாக ஒன்றுமில்லை. மீனாட்சி அம்மன் கோவிலொன்று, முத்துமாரி அம்மன் கோவிலொன்று, பிள்ளையார் கோவிலொன்று என மூன்று கோவில்களே இருந்தன. நடுவில் ஓர் அந்தோனியார் தேவாலயம். நகரத்தில் முருகன் கோவில் ஒன்று, ‘சிற்றி’ப் பிள்ளையார் அல்லது சித்திவிநாயகர் என்று சொல்லப்படுகிற பிள்ளையார் கோவிலொன்று, புனித திரேசம்மாள் தேவாலயம், கருணா இல்லத்தில் இருந்த சிறிய தேவாலாயம், இவற்றோடு படையினரால் …
-
- 0 replies
- 364 views
-
-
உள்ளூராட்சி தேர்தலும் பிரியப் போகும் கூட்டுக் கட்சிகளும் தமிழ் தேசிய இனத்தின் ஆயுத ரீதியான உரிமைப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்ட பின்னரும் கடந்த மஹிந்த அரசாங்கம் வெற்றிவாதத்தில் திளைத்திருந்ததுடன், தமிழ் தேசிய இனத்தை தொடர்ந்தும் அடக்கி ஆள்வதில் கவனம் செலுத்தியிருந்தது. இதன் விளைவாக தமிழ் தேசிய இனத்தின் பெருவாரியான ஆதரவுடன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்றாண்டுகள் நெருங்கும் நிலையில் நல்லாட்சி எனக் கூறப்படும் மைத்திரி, - ரணில், அரசாங்கம் கடும் நெருக்கடிகளை உள் நாட்டில் எதிர்நோக்கி வருகின்றது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிராக இருந்த அழுத்தங்களை தமிழ் தேசிய இனத்தின் தலைமைகளின் உதவியு…
-
- 0 replies
- 405 views
-
-
"சமஸ்டி என்ற பெயரில்லாமல் அதன் உள்ளடக்கத்துடன் கூடிய தீர்வுதான் சிறந்த வழி" ஃபேரியல் அஸ்ரப் மெல்பனில் வழங்கிய சிறப்புச் செவ்வி தெய்வீகன் இலங்கை அரசியலில் தனித்துவம் மிக்க பெயர். இரண்டாவது சிறுபான்மையினமான முஸ்லிம் மக்களின் மிகப்பெரிய கட்சியான முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களின் துணைவி. அஸ்ரப் அவர்களின் அகால மரணத்தை தொடர்ந்து அந்தக் கட்சியை வழிநடத்துவதற்கு முயன்றபோது அந்த கட்சியினால் வெளியேற்றப்பட்டார். ஆனால், தனது அரசியல் ஓர்மத்தை “தேசிய ஒருமைப்பாட்டு முன்னணி” – “நுவா” – என்ற கட்சியின் ஊடாக வெளிப்படுத்தியவர். 2000 ஆம் ஆண்டு இடம்பெற்ற அஸ்ரப் மரணத்தின் பின்னர் ஃபேரியலை …
-
- 0 replies
- 515 views
-