அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
வைரஸா? தேர்தலா? ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டதும் சமூக வலைத்தளங்களிலும் கைபேசிச் செயலிகளிலும் ஒரு செய்தி பரவலாக பகிரப்பட்டது. அதில் யாழ் மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் காரணமாக பட்டினி கிடக்கும் எவரும் குறிப்பிட்ட ஒரு தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது. அதன்மூலம் யாழ் மாவட்ட செயலகத்தில் இருந்து குறிப்பிட்ட நபருக்கு உதவிகள் கிடைக்கும் என்றுமிருந்தது. இச்செய்தியின் உண்மைத் தன்மையை ஊடகவியலாளர்களிடம் விசாரித்தேன். யாழ் மாவட்ட செயலர் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் அப்படி ஒரு இலக்கத்தை கொடுத்ததாகச் சொன்னார்கள். இப்போது உள்ள நிலைமைகளை பொறுத்தவரை அது ஒரு நல்ல செயல். உதவி தேவைப்படுவோர் நேரடியாக மாவட்ட செயலககத்தோடு தொடர்பு கொள்ளலாம். ஆன…
-
- 1 reply
- 667 views
-
-
’அவசரப்பட்டு தேர்தலை நடத்தி சிக்கலில் மாட்ட தேவையில்லை’ ஏ.சி.எம் பௌசுல் அலிம் ஒத்தி வைக்கப் பட்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் ஆராயும் பொருட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் இன்றைய தினம் முக்கிய மாநாட்டை கூட்டி இருக்கிறார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த கூட்டத்துக்கு காவல்துறை உயரதிகாரிகளும் தேர்தல்கள் செயலகம் அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுடன் தற்போதைய நெருக்கடி நிலையை கவனத்தில் கொண்டு தேர்தலை நடத்த முடியாத நிலை …
-
- 0 replies
- 535 views
-
-
சிறப்புக் கட்டுரை: கொரோனா காலம் - ஏற்றத்தாழ்வும் ஏழ்மையும்! மின்னம்பலம் ராஜன் குறை பொருளாதார ஏற்றத்தாழ்வு சிறிதும் அற்ற நிலை என்பது சமூகத்தில் சாத்தியமா என்பது ஐயம்தான். பொதுவுடமை சமூகமாக இருந்தாலும்கூட, அவரவர்கள் பணிகள், பொறுப்புகள் சார்ந்து சில கூடுதல் வசதிகள், சலுகைகள் தவிர்க்கவியலாதவை. ஓரளவாவது ஊக்கப்படுத்த தனிச் சொத்துரிமையை அனுமதிப்பதும், அதன் மூலம் ஏற்றத்தாழ்வு உருவாவதும் இன்றியமையாதது. சமூகம் முழுமையும் ஒருபடித்தான நிலையில் வாழ்வது என்பது ஆதிவாசி வேட்டைச் சமூகங்களில்கூட சாத்தியமாக இருந்ததா என்பது கேள்விக்குறிதான். அங்கேயும் சில அதிகார சமமின்மைகள், ஏதோவொரு வகையிலான ஏற்றத்தாழ்வு தோன்றியதை மானுடவியல் பிரதிகள் விவாதித்துள்ளன. ஏற்றத்தாழ்வுக…
-
- 0 replies
- 512 views
-
-
சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியத்தினரின் இணைய வழியிலான இரண்டு சந்திப்புக்களிலே பகிரப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் அந்த ஒன்றியத்தின் சில உறுப்பினர்களால் இந்தப் பதிவு எழுதப்பட்டது. இந்தப் பத்தி ஒன்றியத்தின் எல்லா உறுப்பினர்களின் கருத்துக்களையும் பிரதிபலிப்பதாக அமையாது. இலங்கையில் கொரொணா நிலைமையினைச் சமாளிப்பதற்காக அரசும், அரசினுடைய வெவ்வேறு கட்டமைப்புக்களும் பல்வேறு நடவடிக்கைகளினை மேற்கொண்டு வருகின்றன. மருத்துவத் துறையினைச் சேர்ந்தவர்கள் முன்னணியில் இருந்து இந்நோய்த் தொற்றினைக் கண்டறியும் பணியில் இருந்து, நோயுற்றோரினைக் குணப்படுத்தும் பணி வரை தமது கடமைகளை மிகவும் இடரான சூழலிலே முன்னெடுக்கிறார்கள். ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நிலையிலே பொலிஸார் சட்டம்…
-
- 1 reply
- 491 views
-
-
இலங்கை ஒற்றையாட்சியின் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது குறித்து இலங்கை சுயாதீன ஆணைக்குழுவுக்கு அரசாங்கம் கடும் அழுத்தம்- பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் படை அதிகாரிகள் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு இலங்கைச் சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இலங்கை ஒற்றையாட்சி அரசு கடும் அழுத்தங்களைக் கொடுத்து நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு முற்படுவதாக சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் குற்றம் சுமத்தியுள்ளார். தேர்தலை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பான கலலந்துரையாடல்களுக்கு உரிய முறையில் அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் ஆணைக்குழுவின் தலைவ…
-
- 0 replies
- 384 views
-
-
பொலிவியா: புதிய நிறப்புரட்சிகளுக்கான களம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 நவம்பர் 28 , மு.ப. 04:45 ஆட்சிக் கவிழ்ப்புகள் புதிதல்ல; இன்று ஜனநாயகத்தின் பெயரால் அவை அரங்கேறுகின்றன. இதுதான் புதிது! இராணுவத்தின் உதவியுடன் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்புகள் முடிந்து, இப்போது ஜனநாயகத்தை மய்யப்படுத்தி, ஆட்சிக் கவிழ்ப்புகள் அரங்கேறுகின்றன. இற்றைக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர், ஆட்சிக் கவிழ்ப்புகள், முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் நடைபெற்ற போது, அதற்கு நிறப்புரட்சிகள் எனப் பெயரிடப்பட்டன. அந்த வரைபடம், இப்போது இலத்தீன் அமெரிக்காவில் அரங்கேறுகிறது. அமெரிக்க ஏகபோகத்துக்கும் நவதாராளவாதத்துக்கும் எதிரான, மிகப்பெரிய போராட்டக் களமாக, இலத்தீன் அமெரிக்கா …
-
- 5 replies
- 935 views
-
-
வாக்குகளைப் பெற்றுத்தரக்கூடிய முஸ்லிம்களை தகனம் செய்யும் விவகாரம் – கலாநிதி அமீர் அலி Maatram Translation on April 18, 2020 பட மூலம், TRT WORLD “உலகம் மோசமான நபர்களின் வன்முறையால் துயரத்தை அனுபவிக்கவில்லை. மாறாக நல்ல மனிதர்களின் மௌனத்தினாலேயே துயரத்தை அனுபவிக்கின்றது” – நெப்போலியன் கொவிட்-19 காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களை தகனம் செய்யும் விவகாரம் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் மோசமான கலக்கத்தையும் கசப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இது புரிந்துகொள்ளக்கூடியது, ஏனென்றால், இஸ்லாம் உடல்களை எரிப்பதைத் தடைசெய்துள்ளது. உடல்களைப் புதைப்பதால் அந்த உடல்களின் மூலம் ஆபத்தான…
-
- 5 replies
- 727 views
-
-
இஸ்லாமியர்களை குறிவைக்கும் கொரோனோ பரவல் சதிக்கோட்பாடுகள் April 16, 2020 - admin · அரசியல் செய்திகள் கொரோனோ கொரோனா வைரஸ் பரவலுக்கு முஸ்லிம்களே காரணம் என்ற பொய்யான பிரச்சாரத்தின் மூலம் ஒரூ சமூகமே தாக்குதலுக்கும் புறக்கணிப்பிற்கும் ஆளாகிறது. தில்லியிலிருந்து ஹன்னா எல்லிஸ்-பீட்டர்ஸென், கொல்கத்தாவிலிருந்து ஷேக் அஸிஸுர் ரஹ்மான் மெஹ்பூப் அலியைத் தாக்கியவர்கள் சற்றும் இரக்கம் காட்டவில்லை. வட மேற்கு தில்லியின் ஹரேவலி கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவத்தை அந்த நபரை வயல் வெளிக்குத் தரதரவென இழுத்துச் சென்று தாக்கினார்கள். குச்சி, செருப்பு என கையில் கிடைத்ததை வைத்தெல்லாம் அடித்ததில் மெஹ்பூப் அலிக்கு மூக்கு வாயெல்லாம் ரத்தம். ஒரு மதக் கூட்டத்திலிருந்து அல…
-
- 1 reply
- 507 views
-
-
கனடாவில் சுயதனிமைப்படுதல் நடைமுறையில் இருக்கிறதா? Bharati April 16, 2020 கனடாவில் சுயதனிமைப்படுதல் நடைமுறையில் இருக்கிறதா?2020-04-16T08:46:45+00:00Breaking news, அரசியல் களம் ரொரன்ரேவிலிருந்து குரு அரவிந்தன் உலகத்திலே அதிக நிலப்பரப்பைக் கொண்ட நாடுகளில் கனடா இரண்டாவது இடத்தை வகிக்கின்றது. முதலாவது இடத்தை ரஷ்யா எடுத்துக் கொண்டது. தமிழர்கள் அதிகமாக வாழும் மூன்றாவது முக்கிய நாடாக இன்று கனடா இருக்கின்றது. 1983 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இனக்கலவரத்தைத் தொடர்ந்து பெருமளவிலான தமிழ் மக்கள் உயிருக்கு அஞ்சிப் பல நாடுகளுக்கும் புலம் பெயர்ந்தார்கள். இதில் பொருளாதார மேம்பாட்டிற்காக இந்தக் கலவரத்தைக் காரணமாகக் காட்டிப் புலம்பெயர்ந்தவர்களும் உண்டு. அதிகளவில…
-
- 1 reply
- 775 views
-
-
இன்று பூமிப்பந்து ஒரு நோய்த்தொற்றினைச் சுமந்தவாறு உருண்டு கொண்டிருக்கிறது. சரியான மருத்துவக் கவனிப்புக் கிடைக்காத நிலையில் உலகின் பல பாகங்களிலும் இளையவர்களும், முதியவர்களும் இறந்து கொண்டிருக்கிறார்கள். உலகெங்கும் பல்லாயிரக்கணக்கானவர்கள் தமது தொழில்களையும், வாழ்வாதாரங்களினையும் இழந்துகொண்டிருக்கிறார்கள். பல நாடுகளிலே ஓர் உணவு நெருக்கடி ஏற்கனவே தோன்றிவிட்டது. இப்போது நாங்கள் கண்ணுற்றுக் கொண்டிருப்பது எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு மருத்துவ ரீதியிலான நெருக்கடியோ அதே அளவுக்கு அது ஒரு சமூகப் பொருளாதார ரீதியிலான நெருக்கடியாகவும் அமைகிறது. எம்மை வேறுபடுத்திப் பார்க்காது, கண்ணை மூடியபடி, பொத்தாம் பொதுவாகத் தனது பீடிப்பினை எம் எல்லோர் மீதும் மேற்கொள்ளுவதற்கு வைரஸினால் முடியாது. ஏனென…
-
- 0 replies
- 541 views
-
-
கெல்ப்பிங் அம்பாந்தோட்டை நிதியமும் கோவிட்-19 நிதியமும் -அ.நிக்ஸன்- நிறைவேற்று அதிகாரமும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையும் தற்போது ராஜபக்சக்களின் கைகளில் இருக்கும் சூழலில், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்காக கோவிட்- 19 நிதியத்துக்குரிய நிதி பயன்படுத்தப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று எழும் கேள்விகளில் நியாயம் இருக்கலாம். இலங்கையில் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி சுனாமிப் பேரலை ஏற்பட்டபோது பல்வேறு நாடுகள் நிதியுதவி வழங்கியிருந்தன. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பல சர்வதேசப் பொது நிறுவனங்களும் உதவியளித்திருந்தன. அதனையும் தாண்டி அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச சுனாமியால் பாதிக்கப்பட்டிரு…
-
- 3 replies
- 789 views
-
-
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று பரவ காரணமாயிருந்த சுவிஸ் போதகர், நலமடைந்திருப்பதாகவம் கர்த்தரின் கிருபையினால்தான் தான் நலம் பெற்றிருப்பதாகவும் அண்மையில் அவர் பேசிய காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகுந்த பேசுபொருளாகியுள்ளன. இதில் இரண்டு நியாயங்களை பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒன்று தனக்கு மருத்துவம் செய்த வைத்தியர்களுக்குகூட நன்றி சொல்ல மறுக்கின்ற கண்மூடித்தனமான மதவாதப்போக்கு. இரண்டாவது யாழ்ப்பாணத்தில் கொரோனாவை பரப்பி முடக்கியமை பற்றிய குற்றவுணர்வின்மை. கொரோனா வைரஸ் தொற்று அபாயம் மிகுந்த மாவட்டங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் கருதப்பட்டது. இந்த நிலமையில் உள்ள இலங்கையின் ஐந்து மாவட்டங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா, புத்தளம் போன்ற மாவட்டங்களுடன் யாழ்ப்பாணம…
-
- 1 reply
- 726 views
-
-
சமூகத்தில் இடைவெளிகளும் வேண்டும்! இதைத்தான் கொரோனா சொல்கிறதோ? கணபதி சர்வானந்த “எனக்கு நோய் தொற்றின் அறிகுறி தென்படுகிறது. எனவே வைத்தியசாலைக்கு வரவேண்டும்” என்று கேட்கும் ஒரு பிரஜையை “இங்கு வராதே. உனக்கு நிவாரமளிக்கும் நிலையில் நாம் இல்லை” என்று சொல்லும் ஒரு அமெரிக்கச் சுகாதாரக் கட்டமைப்பா?, அல்லது “எனக்கு தொண்டை அரிக்கிறது. காய்ச்சல் விடவில்லை” என்று சொல்லும் ஒரு பிரஜையை “ சில நிமிடங்கள் பொறுத்திருங்கள். உடனே அம்புலன்ஸ் கொண்டு வந்துவிடுகிறோம்” என்று சொல்லப்படும் இலங்கை அரசின் சுகதாராக் கட்டமைப்பா? இந்த இரண்டிலும் எது சிறந்தது? எது வலுமிக்கது? இது போன்ற பல விடயங்களைத் தீர்மானித்துக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பத்தைத் தந்திருக்கிறது கொரோனா. அனைத்துலக நா…
-
- 0 replies
- 425 views
-
-
கொரோனாவின் எதிரொலியாக மாற்றமடையப் போகும் உலகப் பாரம்பரியங்கள் சு. ஜீவசுதன் இனிவரும் காலங்களில் தேவாலயங்களிலும் கிறிஸ்தவ சபைகளின் ஆராதனைகள் மற்றும் எழுப்புதல் கூட்டங்களிலும் தேவசெய்திகளைக் கேட்க மற்றும் பிரார்த்தனைகளில் பங்குபற்றவும் வருபவர்கள் ஆசீர்வதிக்கப்பட்ட ரொட்டித்துண்டுகளை ஒற்றையாகப் பகிரப்படுகின்ற வைன் கிண்ணங்களில் அமிழ்த்தியுண்ண விரும்பப்போவதில்லை. சில கத்தோலிக்க திருச்சபைகள் ஆராதனைகளின்போது அவ்வாறான கிண்ணங்களைப் பயன்படுத்துவதை இலகுவாகக் கைவிடவும் கூடும். அத்துடன் இவ்விரு பிரிவினரும் பிரார்த்தனையின் முடிவில் அமைதிக்கான சமிக்ஞைகளை அருகருகே இருப்பவர்களுக்கு வெளிக்காட்டும்போது பாரம்பரியமாகக் கைலாகு கொடுத்தோ அல்லது கட்டித்தழுவுவதன் மூலமோ தெரியப்படுத்தாது தமது…
-
- 0 replies
- 547 views
-
-
கொரோனாவும் தமிழர்களும் - யதீந்திரா உலக வரலாற்றில் நெருக்கடிகள் புதிதல்ல. யுத்தங்களாலும் நோய்களாலும் காலத்திற்கு காலம் மனித குலம் அழிவுகளை சந்தித்திருக்கின்றது. ஒவ்வொரு அழிவுகளும் மனித குலத்திற்கு ஒவ்வொரு படிப்பினைகளை கொடுத்திருக்கின்றது. ஆனால் அந்த படிப்பினைகளிலிருந்து மனிதர்கள் எதைக் கற்றுக் கொண்டனர்? – என்பதுதான் கேள்வி. இந்த இடத்தில் ஜேர்மனிய சிந்தனையாளர் ஹெகலின் ஒரு கூற்றுத்தான் நினைவுக்கு வருகின்றது – வரலாற்றிலிருந்து நாம் எதைக் கற்றுக் கொள்கின்றோம் என்றால் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை என்பதுதான். கடந்த ஒரு நூற்றாண்டில் இரண்டு உலக மகா யுத்தங்களை மனித குலம் சந்தித்திருக்கின்றது. முதலாம் உலகமகா யுத்தம் போர்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கான போர் என்று அழைக்கப்பட்ட…
-
- 0 replies
- 566 views
-
-
நஜீப் பின் கபூர் முழு உலகமுமே கொரோனாவைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கின்றது. அந்தத் தலைப்பைத் தவிர்த்து எந்த வொரு ஊடகங்களும் இன்று செய்திகளை மக்களுக்கு சொல்ல முடியாது. ஊடகங்கள் பேசினாலும் பேசா விட்டாலும் ஒவ்வொரு வீடும் தனி மனிதனும் கொரோனா பற்றிய சிந்தனையிலிலேயே இருக்கின்றான். என்னதான் இருந்தாலும் இன்று மனிதனால் அந்தத் தலைப்பிலிருந்து வெளியே வர முடியாது இருக்கின்றது. இந்தக் கொரோனா ஏற்பட்டிருக்காவிட்டால் நமது நாட்டில் இந்த நேரம் தேர்தல் ஜூரம் உச்சிக்கு ஏறி நிற்கும். நாமும் என்னதான் மக்களுக்கு அரசியல் செய்திகளைச் சொன்னாலும் கொரோனாவை பேசாமல் நாமும் செய்திகளை மக்களுக்குச் சொல்ல முடியாதுள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கின்றது மக்கள் நலன்கள் பற்றி பேசுவதற்கு நாடாளுமன…
-
- 0 replies
- 503 views
-
-
சமூகத் தூரமாதலும் சமூகப்பொறுப்பும் தனிமைப்படுதலும் தனிநபர்களும் மல்லியப்புசந்தி திலகர் இந்த சமூகத் தூரமாதல் (Social distancing) என்ற சொல்லாடலும் செயலும் நமது சமூகத்திற்கு புதியது. இதற்கு “சமூக இடைவெளி” எனும் சொல்லாடலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த இக்கட்டான காலகட்டத்தில் சமூக இடைவெளி (Social Gaps) என்பதை வேறு விதமாக புரிந்து கொள்ளலாம். ஒரு வகையில் இந்த புதிய சூழலில் தூரத்தில் இருந்து ஒருவொருவருக்கு ஒருவர் உதவிகளைச் செய்து கொள்வதன் ஊடாக சமூக இடைவெளியைக் குறைக்க முடியும். ஆனால் அதனை சமூகப் பொறுப்புடன் செயற்படுத்த வேண்டும் (Social Responsibility). இந்த சமூகப் பொறுப்பு என்பது என்பது நமக்கு புதியதல்ல. ஒவ்வொரு தனிநபர்களும், தனிநபர்கள் பலர் சேர்ந்த அமைப்புகளும் சமூகத்துக…
-
- 0 replies
- 491 views
-
-
கொரோனா அச்சுறுத்தலிலும் ஆதாயம் தேடும் ராஜபக்ஷக்கள் புருஜோத்தமன் தங்கமயில் உயிரிழப்பு ஏதுமின்றி கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை இலங்கை கடந்துவிடும் என்ற நம்பிக்கை, நாட்டு மக்களிடம் பரவலாகக் காணப்பட்டது. ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்திருக்கின்றது. இதுவரை இரண்டு பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு மரணித்திருக்கிறார்கள். அந்த இருவரின் உடல்நிலையில் ஏற்கெனவே காணப்பட்ட சிக்கல்கள் குறித்து வைத்தியத்துறையினர் விளக்கமளித்து, கொரோனா மரணங்கள் தொடர்பிலான மக்களின் பயத்தைக் குறைப்பதில் கவனம் செலுத்தி இருக…
-
- 1 reply
- 585 views
-
-
கோவிட் – 19 செயற்குழுவும் மக்கள் சேவையின் அரசியல் தலையீடும் – நிலவன்.. April 12, 2020 கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் இதுவரை 1,02,606 பேர் பலியாகி உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன. இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,91,719 ஆக உயர்ந்திருக்கிறது. அதிகபட்சமாக இத்தாலியில் 18,849 பேர் இறந்துள்ளனர். அமெரிக்காவில் 18,637 பேர் இறந்துள்ளனர். உலகநாடுகள் அவசரப்பட்டு ஊரடங்கை தளர்த்த வேண்டாம். கோரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதற்கு முன்பே ஊரடங்கை தளர்த்தினால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் எச்சரித்துள்ளார். இலங்கையில் கோரோனா வைரஸ் கோவிட் -19 நோய் பரவுவதைத் தடுப்பதற்கென நாட்ட…
-
- 0 replies
- 275 views
-
-
நஜீப் பின் கபூர் பரினாம வளர்ச்சிப்படிகளின் ஒர் கட்டம் மனிதன். இப்படிக் கடவுள் கொள்கைக்கு சவால்விட்டு ஒரு போட்டை போட்டார்கள் உயிரியல் விஞ்ஞானிகள். ஆனால் உலகிலுள்ள அனைத்து மதங்களும்-மனிதர்களும் பொதுவாக இந்தப் பரினாம கொள்கைகளுடன் ஒத்துப்போகவில்லை. அவற்றை ஏற்றுக் கொள்ளவுமில்லை. எனவே தான் உலகில் எல்லா நாடுகளிலும் தேவாலயங்கள் மசூதிகள் கோயில்கள் விகாரைகள் இன்னும் வலுவாக இருந்து வருகின்றன. உயிரியல் வாதிகளின் இந்த சேட்டைகளை சீண்டல்களைக் கண்ட இறைவன் எப்போதுமே அதற்காக கோபப்படவில்லை. என்னதான் விஞ்ஞானத்தின் உச்சப்படிகளில் நாங்கள்தான் நின்று கொண்டிருக்கின்றோம் என்று கடவுளை மறந்து சொல்லிக் கொண்டாலும் வல்லரசுகள் தங்களை விட்டால் ஆள்கிடையாது தங்களால் எதை வேண்டுமானாலும் சாதித்துக் காட்ட…
-
- 0 replies
- 470 views
-
-
ஏழை நாடுகளை அழித்து வரும் கொரோனா வைரஸ்-பா.உதயன் அண்மையில் உலகை ஆட்டிப் படைக்கும் கொரோன என்ற தோற்று நோய் பரவலால் மிகவும் வறிய நாடுகளுக்கு பாரிய பொருளாதார பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே எந்த திடமான கட்டமைப்பும் இல்லாத இந்த நாடுகள் இலஞ்சம்,அரசியல் ஸ்திரத்தன்மை இன்மை,உள்நாட்டு மோதல், நீதி நிர்வாக தலையீடுகள்,மனித உரிமை மீறல் ,இப்படி பல பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடுகின்றன. ஆசியா ஆப்ரிக்க லத்தீன் அமெரிக்க வறிய நாடுகள் இந்த துன்பத்தில் இருந்து மீள முடியாமல் திண்டாடிவரும் வேளையிலே பசி பட்டினியால் பல மக்கள் மடிவது மட்டும் இன்றி இதை எதிர்த்து போராடும் சக்தியை இழந்து வருகின்றனர். பணக்கார நாடுகள் இந்த ஏழை நாடுகளுக்க…
-
- 0 replies
- 567 views
-
-
கொரோனா வைரஸ் மனிதர்களின் ஆழ்மனதில் உண்டாக்கியுள்ள மாற்றம் என்ன? Getty Images தொற்றும் தன்மையுடைய இந்த நோயின் அச்சம் சாதாரண உரையாடல்களில் நமது உளவியல் ரீதியிலான செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி, எதிர்பாராத வழிகளில் செயல்பட வைக்கும் என்று அறிவியல் எழுத்தாளர் டேவிட் ராப்சன் கூறியுள்ளார். இவர் மனித மூளை, உடல் மற்றும் நடத்தை போக்கு பற்றி தீவிரமாக கவனித்து வருபவர். ஒரு நோயைப் பற்றிய அச்சம் நமது சிந்தனையை அபூர்வமாகத்தான் இந்த அளவுக்குப் பாதிக்கும். கடந்த சில வாரங்களாக, ஒவ்வொரு செய்தித்தாள்களிலும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து முன்பக்கத்தில் செய்திகள் வருகின்றன; வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடுத்தடுத்து, சமீபத்திய மரண எண்ணிக்கை குறித்து செய்திகள் சொ…
-
- 0 replies
- 679 views
-
-
கொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய் April 6, 2020 “வைரலாகிவிட்டது” என்ற வார்த்தையை சிறிதேனும் அச்சமின்றி நாம் யாரேனும் இனி பயன்படுத்த இயலுமா? நம்முடைய நுரையீரல்களைக் கவ்விக் கொள்ளக் காத்திருக்கின்ற, கண்ணுக்குப் புலப்படாத, செத்துப் போகாத ஆனால் உயிரும் இல்லாத சின்னஞ்சிறிய உறிஞ்சு குமிழ்கள், படைபடையாக அப்பிக் கொண்டிருக்குமோ என்றெண்ணி பீதியடையாமல், ஒரு கதவின் கைப்பிடியையோ, ஒரு அட்டைப்பெட்டியையோ, ஒரு காய்கறிப் பையையோ இனிமேலும் நம்மால் தொட முடியுமா? அறிமுகமில்லாத ஒருவரை முத்தமிடலாம் என்றோ, பேருந்தில் தாவி ஏறலாமென்றோ, குழந்தையை பள்ளிக்கு அனுப்பலாமென்றோ, அச்சம் சிறிதுமின்றி நம்மால் இனி யோசிக்க முடியுமா? சின்னச் சின்ன சந்தோசங்களாகக் கூட இருக்கட்டும்…
-
- 0 replies
- 555 views
-
-
கொரோனாக் காலத்திலும் திருந்தாத மனிதர்கள்? – நிலாந்தன்… April 4, 2020 கொரோனாவைரஸ் ஓர் உலகப் பொதுஆபத்தாக மாறிய போது நாடுகள் தமது தேசிய எல்லைகளை மூடத் தொடங்கிக் கொண்டிருந்த ஒரு பின்னணியில் ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகம் ஓர் அறிவிப்பைவெளியிட்டார. உலகம் முழுவதிலும் போரில் ஈடுபடும் தரப்புகள் தங்களுக்கிடையே யுத்த நிறுத்தத்துக்குப் போக வேண்டும் என்று அந்த அறிவிப்பு கேட்டிருந்தது. ஆனால் உலகப் பேரரசான ஐக்கிய அமெரிக்கா ஏற்கெனவே ஈரானின் ஆதரவைப் பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினரின் தளங்களின் மீது தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்த ஒரு பின்னணியில் ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் அறிவிப்பை போரில் ஈடுபடும் தரப்புக்கள் பெருமளவுக்கு பொருட்பட…
-
- 1 reply
- 1.1k views
-
-
உலகளாவிய தொற்று தருணத்தில் வழங்கப்பட்டுள்ள நீதி? பட மூலம், Groundviews 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி, யாழ்ப்பாணத்தில் மிருசுவில் கிராமத்தில் ஐந்து வயது, பதின் மூன்று வயது மற்றும் பதினைந்து வயது சிறார்கள் உள்ளிட்ட உள்நாட்டில் இடம்பெயர்ந்த எட்டுத் தமிழ்க்குடிமக்களைப் படுகொலை செய்த இராணுவக் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சார்ஜன்ட் சுனில் ரத்னாயக்க, 2015ஆம் ஆண்டு நீதிமன்றத்தினால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டார். 2019 ஏப்ரல் மாதம் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழாமினால் தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட இக்கொலையாளிக்கு, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ 2020 மார்ச் 26ஆம் திகதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார் என்ற செய்தி வெளியிடப்பட்டது. பொதுமன்னிப்பு தொடர்பாகப் பல மாதங்…
-
- 0 replies
- 499 views
-