அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
எதிர்பார்த்தது போலவே நடந்தது; அடுத்த வேலையைப் பார்க்கலாம் எதிர்பார்த்ததே நடந்துள்ளது; எதிர்பாராதது நடந்ததுபோல, காட்டப்படும் பாவனை, கோமாளிக்கூத்தன்றி வேறல்ல. தமிழரசுக் கட்சி, தேர்தலைப் புறக்கணித்திருந்தாலோ, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தாலோ, எதிர்பாராதது நடந்தது என்று சொல்லலாம். ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ளவர்களை விட, அதிக விசுவாசமானவர்களைக் கொண்டதொரு கட்சி, வேறொரு தெரிவை எடுக்க நியாயமில்லை. அப்பாவிகளுக்கும் அதிலும் குறிப்பாக, அப்பாவி போல் காட்டிக் கொள்ளும் அயோக்கியர்களுக்கும் இம்முடிவு, எதிர்பாராத முடிவாக இருக்கலாம். தமிழ்த் தேசிய அரசியலின் வங்குரோத்தைக் குறிப்பாகப் போர் முடிந்த கடந்த பத்தாண்டுகளில், அதன் இயலாமையை அறிந்தவர்…
-
- 0 replies
- 719 views
-
-
‘மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா’ -இலட்சுமணன் ஸ்ரீ லங்காவின் எட்டாவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலில், தத்தமது தரப்புகளின் தேர்தல் வெற்றியை ஈட்டிக் கொள்வதற்கான கொள்கைப் பிரகடனங்களைத் தேர்தல் விஞ்ஞாபனங்களாக, ஏட்டிக்குப் போட்டியாக வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஸ்ரீ இத்தகைய சூழலில், தமிழ்த் தேசிய அரசியலில் 13 அம்சக் கோரிக்கைகள் தொடர்பான மாற்றுத் தீர்வு முன்மொழிவொன்றை, புதிய ஜனநாயக முன்னணி, கடந்த வார இறுதியில் வெளியிட்டிருந்தது. இதில், ‘பிளவுபடாத ஒன்றுபட்ட நாட்டுக்குள், ஒற்றையாட்சி முறையில் மாகாணங்களுக்கான உச்ச வரம்பிலான அதிகாரப்பகிர்வு, காணி, அபிவிருத்தி, நிதி, தொழில்வாய்ப்பு’ போன்ற பல்வேறு அம்சங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இத்த…
-
- 0 replies
- 2.1k views
-
-
சஜித்துக்கான ஆதரவும் கூட்டமைப்பின் திட்டமும் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 நவம்பர் 06 , மு.ப. 03:57 எதிர்பார்க்கப்பட்டது போலவே, சஜித் பிரேமதாஸவுக்கான ஆதரவை, கடந்த ஞாயிறுக்கிழமை (03) தமிழரசுக் கட்சி வெளியிட்டிருக்கிறது. புலிகளின் காலத்துக்குப் பின்னரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளை, பெரும்பாலும் தமிழரசுக் கட்சியே எடுத்து வந்திருக்கின்றது. அப்படியான நிலையில், கூட்டமைப்பின் ஏனைய இரு பங்காளிக் கட்சிகளான டெலோவும் புளொட்டும் தமிழரசுக் கட்சியின் முடிவுக்கு எதிராகவோ, இரா. சம்பந்தனின் முடிவைத் தாண்டியோ சிந்திக்கப்போவதில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்குள், ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சினை உச்சம்பெற்றிருந்த நிலையில், மன்னாரில் நடைபெற்ற அரச நிகழ்வொன்றில், …
-
- 0 replies
- 973 views
-
-
ஜனாதிபதி தேர்தல்களின் பிரதிபலிப்புகள் - விக்டர் ஐவன் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வந்ததன் பின்னர் அந்த யுத்தத்தினை முன்னின்று நடாத்திய வீரர்கள் இருவருக்கிடையிலான பாரிய போட்டியொன்றாக 2010 ஆம் ஜனாதிபதி தேர்தலை குறிப்பிடலாம். குறித்த தேர்தலின் ஊடாக யுத்தகளத்தில் நின்று தலைமைத்துவம் வழங்கிய சரத் பொன்சேகா தோற்கடிப்பட்டு யுத்தத்திற்காக அரசியல் தலைமை வழங்கிய மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவானார். எனினும் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தனக்கு எந்த விதத்திலும் நிகராக கருத முடியாத பொலன்னறுவப் பிரதேசத்தவர் ஒருவரிடம் தோற்றுப் போனார். பல காலம் இருந்து வந்த உள்நாட்டு யுத்தத்தின் முடிவு, போர் வீரர்கள் மூவரை உருவாக்கியிருந்தது. ம…
-
- 0 replies
- 552 views
-
-
இலங்கை ஜனாதிபதி தேர்தல் | தர்மசங்கடத்தில் தமிழர்கள் சிவதாசன் இன்று நண்பர் ராஜவுடன் பேசிக்கொண்டிருந்த போது ஒரு புதிய விடயமொன்றைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அது ஒரு அப்பட்டமான விடயம் ஆனால் அவர் தந்தது ஒரு புதிய பார்வை, புதிய சிந்தனை. கோதபாய ராஜபக்ச ராஜபக்ச சகோதரர்கள் கோதபாய ராஜபக்ச அவரது சகோதரர்களைப் போல் ஒரு போதும் கரு ஊதா நிறச் சால்வை அணிவதில்லை, பார்த்திருக்கிறீர்களா? என்றார். தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர்தான் அவர் தேசிய வெள்ளைச் சட்டை அணிந்ததைப் பார்த்திருக்கிறோம். அது வரை அவர் அணிந்து நாம் பார்த்திருப்பது கோட், ரை, சூட், அரைக் கை சேட் போன்றவைதான். அவர் ஒரு அதி தீவிர சிங்களத் தேசீயவாதியானாலும் அவர் தன் ‘சிங்களத்தை’…
-
- 0 replies
- 551 views
-
-
கல்முனை தமிழ்ப் பிரிவு: துருப்புச் சீட்டா? -ரி. ஜெயந்தன் வடக்குக் கிழக்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும், ஒற்றுமையாக ஓரணியில் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்வது என்று, இலங்கைத் தமிழரசுக் கட்சி சஜித்தை ஏகமானதாக ஆதரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியதை அடுத்து, தமிழர்களின் வாக்கு யாருக்கு என்ற கருத்துகள், வௌிவரத் தொடங்கியிருக்கின்றன. அப்படியானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது ஆதரவை விரைவில் அறிவிக்கும் என்று நம்புவோம். 13 அம்சக் கோரிக்கையை நிறைவேற்றுவது பற்றிய எதிர்பார்ப்புடன், ஜனாதிபதித் தேர்தல் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்த, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு, கோரிக்கைகள் நிறைவேறவில்லை. அதனால், விஞ்ஞாபனங்களில் உள்ளவற்…
-
- 0 replies
- 549 views
-
-
நம்பிக்கை பிறந்தால் வழி பிறக்கும் காரை துர்க்கா / 2019 நவம்பர் 05 , மு.ப. 02:37 கடந்த வாரம், யாழ். நகரில் உள்ள தனியார் கல்வி நிலையத்துக்கு முன்பாக, நடுத்தர வயதுடைய ஒருவருடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தக் கல்வி நிலையத்துக்கு மகளைக் சைக்கிளில் கூட்டி வந்து, வகுப்பு முடியும் வரை கா(த்து)வல் இருந்து, மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் குறிப்பிட்டார். மகளின் கல்வி முக்கியம்; ஆனாலும், தனது நேரம் காத்திருத்தலில் வீணடிக்கப்படுவதாகச் சற்று நொந்து கொண்டார். “எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், யாருக்கு வாக்கு அளிப்பதாக உத்தேசம்” எனக் கேட்டேன். “நான் அதைப் பற்றி யோசிக்கவே இல்லை; வேலைக்குப் போறதோட ஐந்து நாள்களும் போய் விடுகின்றன. சனி, ஞாயிற்று…
-
- 0 replies
- 605 views
-
-
ஜனாதிபதித் தேர்தல்: தமிழர் தலைமைகளின் நிலைப்பாடுகள் என்.கே. அஷோக்பரன் / 2019 நவம்பர் 04 , மு.ப. 02:32 எதிர்பார்த்தது போலவே, யாழ்ப்பாணம், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் உந்துதலின் பெயரில், ஐந்து தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து சமர்ப்பித்த 13 அம்சக் கோரிக்கைகளை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தப் பிரதான வேட்பாளரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஜே.வி.பி சிலவற்றை ஏற்றுக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டிருக்கிறது; ஆனால், வடக்கு, கிழக்கு இணைப்பை முற்றாக நிராகரித்து இருக்கிறது. கோட்டா, மேலோட்டமாகக் குறித்த கோரிக்கைகளை நிராகரித்திருக்கிறார் என்று செய்திக்குறிப்புகள் மூலம் தெரிகிறது. சஜித், இதுபற்றி வாய்திறக்கவே இல்லை. இந்தச் சூழலில், குறித்த 13 அம்சக் கோரிக்…
-
- 0 replies
- 531 views
-
-
மேய்ப்பர் இல்லாத ஆடுகளா தமிழ் மக்கள் ? நிலாந்தன்… November 2, 2019 இலங்கை தீவின் மூத்த தமிழ் ஊடகவியலாளர்களில் ஒருவர் தனபாலசிங்கம். அவர் சில நாட்களுக்கு முன் தனது முகநூல் பக்கத்தில் பின்வருமாறு எழுதியுள்ளார்…. ‘வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் ஜனாதிபதி தேர்தலில் வழமையாக தமக்கு விருப்பமான ஒரு வேட்பாளரை தெரிவு செய்வது என்பதை விடவும் நமக்கு விருப்பம் இல்லாத ஒரு வேட்பாளரின் தோல்வியை உறுதி செய்வதற்காகவே தமது வாக்குரிமையை பயன்படுத்துகிறார்கள். அவர்களை அவர்களுடைய விருப்பப்படி வாக்களிக்க விடுவதே தமிழ் கட்சிகளைப் பொறுத்தவரை உணர் திறன் மிக்கதாக இருக்கும். தமிழ் மக்கள் விவேகமாக முடிவெடுப்பார்கள்’. தனபாலசிங்கம் மட்டுமல்ல பெரும்பாலான கூட்டமைப்பு ஆதரவாளர…
-
- 0 replies
- 561 views
-
-
அம்மாக்களுக்கு அப்பாக்களுக்கு பயமில்லையா? அண்மைய நாட்களாக நீங்களும் பார்த்திருப்பீர்கள், கேட்டிருப்பீர்கள்… இளைஞர்கள் 11 பேர் கடத்திச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்டமையுடன் தொடர்புடைய விசாரணை, வழக்கு, அந்த இளைஞர்களுடைய அம்மாக்களின் வேதனை மற்றும் அதனோடு தொடர்புடைய செய்திகளை. நானும் ஒரு தாய் என்பதால், இந்தச் சம்பவம் தொடர்பாகவும், இளைஞர்களை தேடியலையும் தாய்மார்கள் படும் வேதனை தொடர்பாகவும் ஊடகங்களில் ஏதாவது செய்தி வந்தால் வாசிப்பேன். எமது நாடு, எமது சமூகம், பாதுகாப்புப் படைப் பிரிவில் ஒரு சில அதிகாரிகள், நாட்டின் தலைவர்கள் பற்றி உடம்பை நடுங்கவைக்கும் தகவல்கள் அந்தச் செய்திகளில் அடங்கியிருக்கும். கப்பம் பெறும் நோக்கில் 2008 கடத்திச்செல்லப்பட்ட 11 இளைஞர்களுள் …
-
- 0 replies
- 702 views
-
-
தமிழ்க்கட்சிகளின் அடுத்தகட்ட நகர்வு? ஐந்து தமிழ்க்கட்சிகள் கூடிக்கூடிப் பேசி ஒருவாறாக ஒரு தீர்மானத்தை எட்டிவிட்டன. வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்முயற்சியில் ஒன்று கூடிய ஆறு கட்சிகளில் ஒரு கட்சி ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற முடிவைத் தனித்து எடுத்து ஏற்கனவே அறிவித்துவிட்டது. ஆறு கட்சிகளும் கூடி நிலைமைகளை ஆராய்ந்து என்ன செய்வது என்ற தீர்மானத்தை எட்டுவதற்கு முன்பே பொன்னம்பலம் கஜேந் திரகுமார் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற தன்னிச்சையான முடிவை மேற்கொண்டு அதனை அறிவித்திருந்தது. அந்த அறிவித்தலை ஊடகங்கள் வாயிலாக வெள…
-
- 0 replies
- 847 views
-
-
பகடைக்காய் ஆக்கப்படும் அரசியல் கைதிகள் கே. சஞ்சயன் / 2019 நவம்பர் 01 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால், பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரச படையினர் விடுதலை செய்யப்படுவார்கள் என்றொரு வாக்குறுதியைத் தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்திருக்கிறார் கோட்டாபய ராஜபக்ஷ. அதுபோலவே, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 274 விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு, விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அவர் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். மற்றொரு பக்கத்தில், கடந்தவாரம் மட்டக்களப்புச் சிறைச்சாலைக்குச் சென்று, நான்கு ஆண்டுகளுக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள, பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனைச் சந்தித்…
-
- 0 replies
- 553 views
-
-
தேர்தல் பகிஷ்கரிப்பு; அரசியலும் அடிப்படைகளும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்களின் தெரிவுகளில் பகிஷ்கரிப்பும் ஒன்று. இது தமிழ் மக்களுக்குப் புதிதல்ல. ஆனால், தேர்தல் பகிஷ்கரிப்பு வெறுமனே ஒரு தப்பித்தலோ, அல்லது இயலாமையின் விளைவாகவோ இருக்க முடியாது. தேர்தல்களில் பங்குபற்றாமையும் யாருக்கும் வாக்களிக்க மறுப்பதும் மிகவும் ஜனநாயகமான அரசியல் நடவடிக்கைகள். ஆனால், அவற்றை எவ்வாறு முன்னெடுப்பது என்பதே, அவற்றின் ஜனநாயகத் தன்மையைத் தீர்மானிக்கின்றது. மிரட்டல் மூலமும் குழப்ப நிலைகளைத் தோற்றுவிப்பதன் மூலமும் வாக்களிக்கும் வாய்ப்பை மக்களுக்கு மறுத்து மேற்கொள்ளப்படுகிற எந்தப் பகிஷ்கரிப்பும் தனது ஜனநாயக இலக்கை இழந்துவிடுவதோடு, தனது நோக்கத்தில் கூட,…
-
- 0 replies
- 540 views
-
-
ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவரின் மரணம்: பெயர்கள் வேறு கதை ஒன்று தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஒக்டோபர் 31 , சில மரணங்கள் கொண்டாடப்படும்; சில மரணங்கள் உலகையே உலுக்கும்; இன்னும் சில அதிர்ச்சிக்குள்ளாக்கும்; சில நிம்மதியைத் தரும்; சில கேள்விகளால் தொக்கி நிற்கும். எது, எப்படி இருப்பினும், மரணங்கள் கொண்டாட்டத்துக்கு உரியனவல்ல. வாழ்க்கையைக் கொண்டாட முடியாதவர்களே மரணங்களைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், மரணத்துக்கு அரசியல் பெறுமதி உண்டு. அது கொலையாயினும், இயற்கை மரணமாயினும், அகால மரணமாயினும் அரசியலாக்கம் பெற்றுவிடும். ஞாயிற்றுக்கிழமை (27) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கச் சிறப்புப் படைகளின் தாக்குதலில், ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி கொல்லப…
-
- 0 replies
- 770 views
-
-
ஜனாதிபதித் தேர்தல்; முதற் கோணல் -இலட்சுமணன் நம்மவர்களின் புதிய புதிய நம்பிக்கைகள்தான், வரலாற்று முரண்நகைகளை உருவாக்கிவிடுகின்றன என்பது, காலங்காலமாக நிரூபிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கின்றது. சிறுவன் சுர்ஜித், நம்போன்ற பெற்றோர்களின் கவனக்குறைவால் பலியாகி விட்டான். கவனக்குறைவுக்குப் பின்னரான செயற்பாடுகளில் காணப்பட்ட குறைபாடுகளால், அவன் பலியானதாகப் பலர் குறைப்படுகிறார்கள். அதுவும் தவறுதான். இவ்வாறுதான், நம்மிடமே முதற் பிழையை, பிழைகளை வைத்துக் கொண்டு, அதை ஏற்றுக் கொள்ளாமலேயே நாம் எவ்வளவு தூரம்தான் பயணித்துவிட முடியும்; எதைத்தான் சாதித்துவிடமுடியும்; எதிர்த்தரப்பிடமிருந்து எவற்றை எதிர்பார்க்க முடியும்? இந்த வகையில், பெறுமதியான மிகப்பெரிய பிரச்…
-
- 0 replies
- 582 views
-
-
இனங்களிடையே நல்லிணக்கத்தை கொண்டு வருவேன் என்று உறுதி கூற வேட்பளார் எவருமில்லை. இதுவரை அளிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரசார உறுதி மொழிகளை கணக்கிட்டுப் பார்த்தால் இத்தேர்தலுக்காக வழங்கப்பட்டுள்ள உறுதி மொழிகளே பெருமளவினதாக உள்ளன. ஒவ்வொரு ஜனாதிபதி வேட்பாளர்களுமே ஏனைய வேட்பாளர்களை விட அதிகமான உறுதி மொழிகளை வாக்காளர்களிடம் வழங்க உறுதி கொண்டுள்ளமையினை அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பார்க்கும் போது தெரிய வருகிறது. ஒரு வேட்பாளர் நெல் உற்பத்திக்கு தேவையான பசளைகளை இலவசமாக தருவேன் என்றால் இன்னொருவரோ அனைத்து விவசாய நடவடிக்கைகளுக்குமே இலவசமான பசளையை நான் பதவிக்கு வந்தால் தருவேன் என்கிறார். தொழிலாளர் வகுப்பினரது வேதனங்களை நான் அதிகரிப்பேன் என்று ஒருவர் கூறினால் இன்னொருவரும் இன்னும் அதிக…
-
- 0 replies
- 476 views
-
-
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் தேவை எட்டாவது ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பிரசாரப்பணிகள் தீவிரமடைந்து செல்கின்றன. பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தமது கொள்கை பிரகடனங்களை வெளியிட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் பயணித்துக்கொண்டிருக்கும் இரண்டு பிரதான வேட்பாளர்களும் தமது கொள்கைகளையும் அபிவிருத்தி திட்ட யோசனைகளையும் வெளியிட்டு வருகின்றனர். இன்னும் 13 நாட்களே ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்கு எஞ்சியுள்ள நிலையில் மிகவும் அதிகளவான பிரசார கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இரண்டு பிரதான வேட்பாளர்களும் தாம் ஆட்சிக்கு வரும் பட்சத…
-
- 0 replies
- 323 views
-
-
ஜனாதிபதி தேர்தல். 2 - வடக்கிலும் கொழும்பிலும் வாழும் தமிழ் தலைமைகளுக்கு வேண்டுகோள்.- வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன் . . சோமாலியாவாக சிதைகிறது கிழக்கு. இதுவரை கிழக்குக்குச் செய்த துரோகம் போதும். இனியாவது கிழக்கு தமிழர் தலைவர்களை உங்கள் விருந்துகளில் கருவேப்பிலையல்ல பயன்படுத்துவதை நிறுத்துங்கள். கிழக்கு தலைவர்களை வடமாகாண தலைவர்கள்இனியும் மட்டுமல்ல கொழும்பு தமிழ் தலைவர்களும் கிள்ளுகீரையாக பயன்படுத்துவதை வரலாறு அனுமதிக்காது. வடக்கு கிழக்குத் தமிழர்களின் சரிநிகர் சமத்துவத்தை அங்கீகரியுங்கள். இணைந்த வடகிழக்கு தமிழர்களின் அதிகாரம்தான் ஈழத் தமிழர் தலைமை. அப்படித்தான் 50பதுகளில் தந்தை செல்வநாயகம் ஈழத் தமிழர் தலைமையைக் கட்டமைத்தார்..தமிழர் தலைமையால் கைவிடப்பட்டு சோமாலியா…
-
- 6 replies
- 907 views
-
-
சஜித் வெற்றிக் கோட்டைத் தொடுவாரா? புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஒக்டோபர் 31 , பி.ப. 12:24 சஜித் பிரேமதாஸவின் வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கிறது; தமிழ் மக்கள், இந்த ஜனாதிபதித் தேர்தலை நம்பிக்கையோடு எதிர்கொள்கிறார்களா?” என்ற கேள்வியை, மேற்கு நாடொன்றின் தூதுவராலய அரசியல் பிரிவு அதிகாரியொருவர், சில வாரங்களுக்கு முன்னர், இந்தப் பத்தியாளரிடம் கேட்டார். அரசியல் உரையாடல்களில், அதுவும் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், இந்தக் கேள்வி இயல்பானது. ஆனால், கேள்விக்கான பதிலை, ஓரளவுக்கு ஆழமாக நோக்கினால், இம்முறை வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கப்போகும் தரப்புகளையும் காரணிகளையும் இனங்காண முடியும். இலங்கை ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில், ஒருபோதும் இல்லாத வகையில், தொடர்ச்…
-
- 0 replies
- 606 views
-
-
மக்களை முட்டாள்களாகக் கருதும் வாக்குறுதி மூட்டைகள் எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஒக்டோபர் 31 , பி.ப. 12:10 “நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கையின்படி, அவர்களது நாளாந்தச் சம்பளத்தை 1,000 ரூபாயாக உயர்த்துவேன்” என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அண்மையில், தமது தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றும் போது கூறினார். இரண்டொரு நாள்களுக்குப் பின்னர், தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய புதிய ஜனநாயக முன்னணியின் ‘அன்னம்’ சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, “நான் ஜனாதிபதியானால், தோட்டத் தொழிலாளர்களின்…
-
- 0 replies
- 492 views
-
-
ஜனாதிபதி தேர்தல்-சம்பந்தன் ஐயாவுக்கு பணிவான வேண்டுகோள். - வ.ஐ.ச.ஜெயபாலன் . ஐயா, இன்றைய இந்துசமுத்திர சர்வதேச சூழலில் ஈழத் தமிழரோ மலையக தமிழரோ அஞ்சும் சூழல் இல்லை. அதனால் 13 அம்ச அரசியல் கோரிக்கைகளின் அடிப்படையில் வாக்களிப்பதை உறுதிப்படுத்துங்கள். தமிழ் பேசும் முஸ்லிம்களைபொறுத்து தலைவர்கள் பொறுபோடு தங்கள் முடிவுகளை எடுக்கவேண்டும், . இது சிங்கள மக்கள் மத்தியில் உள்ள பிரிவுகளுக்கிடையிலான மோதல். உங்கள் 13 அம்ச கோரிக்கை எதனையும் ஆதரிக்க மாட்டோம் எங்களுக்கு வாக்களி என எந்த கொம்பனும் எங்களுக்கு சொல்ல முடியாது. செல்வநாயகம் காலத்தில் இருந்தே 1953 கர்த்தால் உட்பட சிங்க்ளவருக்கிடையிலான மோதலில் நாம் எப்பவும் சிங்கள ஜனநாயக சக்திகளோடு நின்றிருக்கிறோம். ஆனால் அவர்கள் எங்கள…
-
- 0 replies
- 602 views
-
-
இடைவெளி – பி.மாணிக்கவாசகம்.. October 30, 2019 தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வாக்குகளே முக்கியமானவை. அந்த வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே தேர்தல் கால வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா இல்லையா என்பது ஒரு புறமிருக்க, நாட்டு மக்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதில் வேட்பாளர்கள் தீவிரமாக இருப்பார்கள். அந்த வகையிலேயே இந்த ஜனாதிபதி தேர்தலிலும் வேட்பாளர்கள் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றார்கள். ஆனால் அந்த வாக்குறுதிகளுக்கும் மக்கள் எதிர்பார்க்கின்ற விடயங்களுக்கும் இடையில் ஒற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை. இந்த விடயத்தில், குறிப்பாக சிறுபான்மை இன மக்களைப் பொறுத்தமட்டில் அவர்களின் எ…
-
- 0 replies
- 439 views
-
-
யாரிந்த சுரேன் ராகவன்? – கனடா மூர்த்தி என் வெளிநாட்டு நண்பர்களுக்கு கனடியத் தமிழர் பேரவையின் தமிழர் தெருவிழா குறித்து பெருமையுடன் தெரியப்படுத்வதுண்டு. அமெரிக்கா, சிங்கப்பூர் நண்பர்கள் பலர் அதனாலேயே ஓகஸ்ட் மாதத்தில் கனடா வந்திருக்கிறார்கள். இந்த ஆண்டு முற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவனை சந்தித்தபோதும் எங்கட தெருவிழா, அதன் பிரம்மாண்டம் என்பன பற்றியும் கதை போயிற்று.“‘கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் ஆகஸ்டில் வர முடியுமா தெரியாது. இப்போதுகூட ஜெனீவாவிற்கு போகுமாறு என்னையும் கேட்டிருக்கிறார்கள். முடிவாகவில்லை” . அதன் பின் ஜெனிவா சென்றார் என்பது நாம் அறிந்ததே. இங்கு, தமிழர் பேரவையின் முக்கிய புள்ளி ஒருவருடன் பேசிக் கொண்ட…
-
- 2 replies
- 1.3k views
-
-
அண்மையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் ஐந்து பிரதான தமிழ்த் தேசிய கட்சிகளும் ஒரு உடன்பாட்டிற்கு வந்திருந்தன. மக்கள் மத்தியிலும் இது ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தது. இதனடிப்படையில் ஐந்து பிரதான கட்சிகளும் 13 அம்சக் கோரிக்கையில் உடன்பட்டிருந்தன. பிரதான சிங்கள வேட்பாளர்களை சந்தித்த பின்னர் இறுதி முடிவெடுப்பதாகவும் உடன்பாடு காணப்பட்டிருந்தது. ஆனால் பிரதான சிங்கள வேட்பாளர்கள் அனைவருமே மேற்படி ஐந்து கட்சிகளின் ஒருமித்த கோரிக்கைகளை நிராகரித்துவிட்டனர். அதற்கும் மேலாக ஆகக் குறைந்தது தமிழ் கட்சிகளை சந்திப்பதற்கான நேரத்தைக் கூட அவர்கள் வழங்கவில்லை. சிங்கள வேட்பாளர்கள் இதனை நிராகரிப்பார்கள் என்பது ஏற்கனவே தெரிந்த ஒரு விடயம்தான். ஆனால் இவ்வாறானதொரு உடன்பாட்டிற்கு இணக்கம்தெரி…
-
- 0 replies
- 477 views
-
-
ஜனாதிபதியானால் சிறையிலுள்ள கைதிகளை விடுதலை செய்வேன் - கோத்தா உறுதியளித்தாக நல்லை ஆதினம் தெரிவிப்பு Published by T. Saranya on 2019-10-28 15:40:24 முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்தால் சிறையில் உள்ள அனைத்து கைதிகளையும் புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்வேன் என தம்மிடம் உறுதியளித்ததாக நல்லை ஆதின குரு முதல்வர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு இன்று தேர்தல் பிரசாரத்துக்காக வருகை தனத்திருந்த பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச முதலாவதாக நல்லூர் ஆலயத்திற்கு பின்பாக உள்ள நல்லை ஆதின குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றதுடன் அவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்த கலந்துரையாடலின் பின்னர் குரு முதல்வர் ஊடகங்க…
-
- 1 reply
- 586 views
-