அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஒக்டோபர் 17 , பி.ப. 06:58 இவ்வருட உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, அதாவது கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி, முஸ்லிம்களின் பெயரில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, பௌத்த தீவிரவாதக் குழுக்கள், பயங்கரமான முஸ்லிம் விரோத பிரசாரமொன்றை ஆரம்பித்து, முன்னெடுத்துச் சென்றனர். சில பகுதிகளில் முஸ்லிம்களின் உடைமைகளின் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அக்குழுக்கள் பெரும்பாலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்களாக இருந்தமையால், அப்பிரசாரத்தில் ஓர் அரசியல் நோக்கமும் தென்பட்டது. எதிர்வரும் தேர்தல்களின் போது, முஸ்லிம்கள் தம்மை ஆதரிக்க மாட்டார்கள்…
-
- 0 replies
- 515 views
-
-
ஐந்து தமிழ் கட்சிகளின் தலைவர்களும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பொதுவான நிலைப்பாட்டை முன்வைத்து தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு ஐந்து தமிழ் தேசியக்கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன. இதற்கான ஆவணத்திலும் இந்த ஐந்து கட்சிகளினதும் தலைவர்கள் கைச்சாத்திட்டுள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அனைத்து கட்சிகளும் பொதுநிலைப்பாட்டுக்கு வரவேண்டியதன் அவசியம் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது. யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியத்தின் முயற்சியையடுத்…
-
- 0 replies
- 597 views
-
-
ஜனாதிபதித் தேர்தலும் தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவும் தமிழ்த்தரப்பு நோக்கு நிலையில் நவம்பர் மாத ஜனாதிபதி தேர்தல் மூன்று நிலைகளில் அரசியல் ரீதியான கொள்கை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. இந்த மூன்று நிலைகளும் தேர்தல் களத்தில் தீவிரமாக முட்டி மோதி முடிவுகளை வெளிப்படுத்தக் காத்திருக்கின்றன. அந்த முடிவுகளும் அதன் பின்னரான விளைவுகளும் இலங்கையின் அடுத்த கட்ட அரசியல் நிலைமைகளில் பெரும் தாக்கத்தைச் செலுத்தப் போகின்றன. அதற்கான அறிகுறிகளை தேர்தலுக்கு முன்னரான நிலைமைகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்தத் தாக்கங்கள் நாட்டின் எதிர்கால நிலைமைகளைப் பிரகாசமாக்கும் என்று கூற முடியாதுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாள…
-
- 0 replies
- 642 views
-
-
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நியமிக்கப்பட்ட குழுவினர் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான சில முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். இது ஒரு குறுகிய கால முயற்சி. உண்மையில் இந்த முயற்சியை ஆகக் குறைந்தது ஆறு மாதங்களிற்கு முன்னராவது மேற்கொண்டிருக்க வேண்டும். எனினும் பேரவை ஒரு சில முயற்சிகளை இறுதி நேரத்தில் மேற்கொண்டிருந்தது. ஆனால் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. பேரவையால் நியமிக்கப்பட்ட குழுவினர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயகத்தின் செயலாளர் சிறிகாந்தா, அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் கூட்டணிய…
-
- 5 replies
- 658 views
-
-
தமிழர்களின் மண்ணில் இடம்பெறும் தேசிய நிகழ்வுகள், தமிழர்களின் பண்பாடு ஆகிவிட்டன. மாவீரர் நாள் தொடங்கி, தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு நாள், அன்னை பூபதி அவர்களின் நினைவு நாள், கப்டன் மில்லரின் நினைவு நாள் என்று வருடம் முழுவதும் தேச விடுதலைக்கு தங்களை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்களை அனுஷ்டிப்பது தாயகத்தின் வழக்கமும் பண்பாடும் ஆகும். 2009இற்குப் பின்னர், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தையும் அதன் வரலாறுகளையும் மாத்திரமின்றி, மாவீரர்களின் நினைவு நாட்களையும் கட்சி அரசியலுக்கு பயன்படுத்தும் இழிவரசியல் நிலமை தற்போது ஏற்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், மாவீரர் நாட்கள் உள்ளிட்ட தேசிய நிகழ்வுகள் யாவுமே பொது இடங்களிலேயே நடாத்தப்பட்டுள்ளன. பொது மக்…
-
- 1 reply
- 1k views
-
-
ஜனாதிபதித் தேர்தலைத் தமிழ் மக்கள் பகிஷ்கரிக்கலாமா? Editorial / 2019 ஒக்டோபர் 10 வியாழக்கிழமை, பி.ப. 05:06 -இலட்சுமணன் பல்லின சமூகக் கட்டமைப்புக் கொண்ட ஒரு ஜனநாயக நாட்டின் பிரஜைகளின் வாக்குரிமையும் அதன் தேவைப்பாடும் பற்றிச் சிந்திக்க வேண்டிய ஒரு தருணத்தில் தமிழ்ச் சமூகம் தள்ளப்பட்டுள்ளது. அதேபோல், வழிகாட்டலும் அதற்கான வழிபடுதலும் சரியான முறையில் வரையறுத்துச் சொல்லப்பட வேண்டிய ஒரு காலச்சுழலினுள் இன்றைய தமிழ்ச் சமூகம் சிக்கியுள்ளது. கடந்த கால வரலாறுகளும் அவை கற்றுத்தந்த பாடங்களும் நல்லிணக்கமும் அதற்கான தேவைப்பாடுகளும், தற்காலத்தில் பேசுபொருளாக இருந்த போதும், அதனால் ஏற்பட்டிருந்த விளைவுகள், எமக்குப் பல்வேறு கருத்தியல்களை, பதிவுகளை பாடமாகத் தந்…
-
- 5 replies
- 1.1k views
-
-
ஜனாதிபதி தேர்தலை தமிழ் தேசிய கட்சிகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன? - யதீந்திரா ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு கையாளுவது? இதற்கான சில முயற்சிகள் கடந்த இரு வாரங்களாக இடம்பெற்றிருந்தன. அரசியல் ஆய்வாளர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களை சேர்ந்த பிரதிநிதிகள் என ஒரு தரப்பினர் இதற்காக இரவு பகலாக உழைத்திருந்தனர். இதற்கான ஏற்பாட்டை தமிழ் மக்கள் பேரவை மேற்கொண்டிருந்தது. தமிழ் மக்கள் சார்பில், ஒரு பொது வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்பதே அனைவரதும் ஒருமித்த நிலைப்பாடாக இருந்தது. இந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார…
-
- 0 replies
- 449 views
-
-
ஜனாதிபதி தேர்தல் : சுயாதீனக் குழுவும் பல்கலைக் கழக மாணவர்களும். கட்சிகளின் மீது சிவில் அமைப்புக்களின் தலையீடு ? நிலாந்தன் October 13, 2019 பேரவையால் தொடக்கி வைக்கப்பட்ட சுயாதீனக் குழு ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்த பொழுது அது தமிழ் அரசியற் சூழலையும் தென்னிலங்கையின் அரசியற் சூழலையும் சடுதியாகக் குழப்பியது. அப்படி ஒரு குழு உருவாக்கப்பட்டது பல தளங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஏன் அப்படி அதிர்வுகள் ஏற்பட்டன? ஏனெனில் அவ்வாறு சிவில் அமைப்புக்கள் கட்சிகளின் மீது தலையீடு செய்ய வேண்டிய ஒரு தேவை ஏற்பட்டிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் முன்னைய காலங்களைப் போல கண்ணை…
-
- 0 replies
- 427 views
-
-
காணாமல் போனோரின் உறவுகளுக்கு பதிலளிக்க வேட்பாளர்களின் திட்டம் என்ன? வடக்கு, கிழக்கில் தினந்தோறும் வேதனையுடனும் தவிப்புடனும் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை தெரியாமலும் போராட்டங்க ளுடனும் வாழ்ந்துகொண்டி ருக்கும் காணாமல் போனவர் களின் உறவுகளான பாதிக் கப்பட்ட மக்களுக்கு பிரதான வேட்பாளர்கள் எவ்வாறான தீர்வை வழங்கப்போகின் றார்கள் என்பது ஒரு கேள் வியாக எழுந்து நிற்கின்றது. அதாவது மிக முக்கியமாக மூன்று கட்சிகளிலிருந்தும் மூன்று பிரதான வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர். இவர்கள் மூவரும் இந்த காணாமல்போனோர் விவகாரத்தில் எவ்வாறான தீர்வுத்திட்டத்தை முன்வைக் கப்போகின்றனர் என்பதே இங்…
-
- 0 replies
- 509 views
-
-
பௌத்த மேலாண்மை பி.மாணிக்கவாசகம்… October 12, 2019 நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் பௌத்த பிக்கு ஒருவருடைய சடலம் எரிக்கப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த பொதுபலசேனா அமைப்பைச் சேர்ந்த ஞானசார தேரர் மற்றும் சம்பவத்தில் தொடர்புபட்ட பௌத்த பிக்குகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறப்பினருமாகிய இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றிய அவர் இந்த விடயத்தில் பொலிசாரும் நீதிமன்றத் தீர்ப்பை உதாசினம் செய்துள்ளார்கள் என சுட்டிக்காட்டி, சம்பந்தப்பட்ட பொலிசார் மீதும் சட்ட நடவடிக்கை எடு;க்கப்…
-
- 1 reply
- 941 views
-
-
தீர்மானிக்கும் சக்தியாக இம்முறையும் சிறுபான்மை லங்கையின் அரசியல் வரலாற்றில் அதிக ஜனாதிபதி வேட்பாளர்களைக் கொண்ட தேர்தலை நாடு எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கு 41பேர் கட்டுப்பணங்களைச் செலுத்தியிருந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை 35வேட்பாளர்கள் மாத்திரம் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். ஆறு பேர் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர். வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் பிரசாரங்கள் முழு மூச்சில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த கால ஜனாதிபதித் தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், அதிக எண்ணிக்கையான வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாக இத்தேர்தல் அமையவுள்ளது. அதிகமான வேட்பாளர்கள் க…
-
- 0 replies
- 465 views
-
-
ஜனாதிபதித் தேர்தல்: தமிழ்த் தலைமைகளின் தெரிவு என்ன? Editorial / 2019 ஒக்டோபர் 10 வியாழக்கிழமை, பி.ப. 05:22 இப்போது எல்லோர் மத்தியிலும் உள்ள கேள்வி யாதெனில், தமிழ்த் தலைமைகள் என்று தம்மைச் சொல்லிக் கொள்வோர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிக்கப் போகிறார்கள் என்பதேயாகும். சிலர் ஏற்கெனவே வாய்திறந்துள்ளனர்; சிலர் திறக்கவுள்ளனர்; சிலர் இப்போதே பகிஸ்கரிப்பு என்ற கோஷத்தைத் தொடங்கியுள்ளனர். வேடங்கள் மெதுமெதுவாக் தானே கலையும். எனவே, பொறுத்திருந்து பார்க்க வேண்டியதுதான். தமிழ் அரசியல் தலைமைகளின் வரலாற்றைப் பார்த்தால், அது என்றுமே தமிழ் மக்கள் நலன் சார்ந்ததாக இல்லை என்பது புலனாகும். தமிழ் மக்களின் ஒற்றுமையைப் பேசியே, புதிய கட்சிகள் உருவாக்கம…
-
- 0 replies
- 412 views
-
-
திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்.. October 10, 2019 பல்வேறு கடினமான நிலைமைகளைக் கடந்து நாட்டின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தத் தேரதல் பல்வேறு வழிகளிலும் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இந்தத் தேர்தல் முடிவுகள் நாட்டின் அடுத்த கட்ட நிலைமைளைத் தீர்மானிப்பவையாக அமையும் என்ற எதிர்பார்க்கப்படுகின்றது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறைமையில், ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ள போதிலும், அந்தப் பதவிக்காக 35 பேர் போட்டியிடுகின்ற ஒரு தேர்தல் அனுபவத்தை இந்தத் தேர்தலின் மூலம் நாடு சந்திக்கின்றது. இ;வ்வாறு பெரும் எண்ணிக்கையில் வேட்பாளர்கள் …
-
- 1 reply
- 958 views
-
-
2020 ஜனாதிபதித்தேர்தல் ஒரு பொறியாகத் தமிழ் மொழிச் சமூகங்களின் முன்னே நிறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் எவரும் தமிழ், முஸ்லிம், மலையக மக்களுடைய உரிமைகளுக்கான உத்தரவாதம், பிரச்சினைகளுக்கான தீர்வு, பாதுகாப்பு, சமூக முன்னேற்றம் போன்றவற்றில் துல்லியமான நிலைப்பாடுகள் எதனையும் இதுவரையில் வெளிப்படுத்தவில்லை. இது இதுவரையான வரலாற்றில் நிகழ்ந்திருக்காத ஒரு அபாயகரமான நிலையாகும். கடந்த காலத்தில் நிகழ்ந்த அத்தனை தேர்தல்களின்போதும் தமிழ் பேசும் தேசிய இனங்களின் பிரச்சினைகள் குறித்தும் அதற்கான தீர்வைப்பற்றியும் இந்தக் கட்சிகள் பேசி வந்திருக்கின்றன. அவை பேசியவாறும் உடன்பட்டவாறும் தீர்வுகளை முன்வைக்காது விட்டாலும் அவற்றைப் பற்றிப் பேசியே தீர வேண்டும…
-
- 0 replies
- 343 views
-
-
தி.ராமகிருஷ்ணன் கொழும்பில் அண்மையில் திறந்துவைக்கப்பட்ட பிரமாண்டமான தோற்றக்கவர்ச்சியுடைய தாமரைக்கோபுரம் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளின் புத்தம்புதிதான சின்னமாக கருதப்படுகிறது.பலநோக்கு செயற்பாடுகளுக்கான இந்த தொலைத்தொடர்புக் கோபுரத்தை நிர்மாணிப்பதற்கு உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையே 2012 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்டது. சீனாவுக்கு விரோதமான உணர்வு நிலவிய ஒரு நேரத்தில் பதவிக்கு வந்த ஒரு அரசாங்கத்தின் கீழ் இந்த கோபுரத்தின் பெருமளவு நிர்மாணப்பணிகள் இடம்பெற்றன என்பது விசித்திரமானதாக தோன்றக்கூடும். 2015 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரான நாட்களில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்த ரணில் விக்கிரமசிங்க சீனாவின் இன்னொரு பாரிய திட்டமான 140 கோடி அமெரிக்க டொலர்கள் …
-
- 0 replies
- 408 views
-
-
சிவாஜிலிங்கமும் பேரவையும் மாணவர் ஒன்றியமும் ஒரே தரப்பினரே புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஒக்டோபர் 09 புதன்கிழமை, பி.ப. 01:44 வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார். ஏற்கெனவே அவர், 2010 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு 9,662 வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் சார்பில், பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை கருத்திலெடுக்கப்படாத நிலையில், தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்ததாக சிவாஜிலிங்கம் கூறுகிறார். அவருக்கு ஆதரவாக, வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் செயற்படுகிறார். …
-
- 0 replies
- 591 views
-
-
‘கிங் மேக்கர்’ முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஒக்டோபர் 09 புதன்கிழமை, பி.ப. 01:26Comments - 0 ஏகப்பட்ட ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள், ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புகளோடு, ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆயத்தங்கள் ஆரம்பித்திருக்கின்றன. * பதவியில் இருக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியொருவர், அடுத்துப் போட்டியிடாத தேர்தலாக இது அமைந்துள்ளது. * அதிகமானோர் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலாகவும் இது உள்ளது. * அதிக சிறுபான்மையினத்தவர் போட்டியிடும் தேர்தல் இது. * இந்திய வம்சாவழித் தமிழர் ஒருவர் முதன்முதலாகப் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தல் எனும் அடையாளத்தையும் இந்தத் தேர்தல் பெற்றுள்ளது. * இந்த நாட்டின் பிரதான கட்சிக…
-
- 0 replies
- 576 views
-
-
கலைந்த வேசமும் களைத்த தேசமும் Editorial / 2019 ஒக்டோபர் 09 புதன்கிழமை, பி.ப. 01:20 Comments - 0 பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடனான சந்திப்பின்போது, “ஒளிவு மறைவு இல்லாது மக்களுக்கு அறிவியுங்கள்” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்து உள்ளார். ஐ.தே.க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக முன்வைக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில், வடக்கு - கிழக்குத் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு என்ன என்பதை, நாட்டு மக்கள் மத்தியில், ஐ.தே.க வௌிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பதே, சம்பந்தனின் மேற்குறிப்பிட்ட கோரிக்கையே யாகும்.இதையே, இன்று தமிழ் மக்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஆனால், யதார்த்த நிலையில்…
-
- 0 replies
- 665 views
-
-
தமிழ் மக்களை ஏமாற்ற முனைபவர்கள் இறுதியில் ஏமாற்றமடைவர் எமது நாட்டில் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெற உள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் களம் இப்போது சூடு பிடித்திருக்கின்றது. நாட்டின் அடுத்த ஜனாதிபதி தொடர்பில் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு மேலோங்கிக்காணப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்கள் நாட்டு மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளையும் வழங்கி வருகின்றனர். இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் கருத்துகள் இப்போது வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. தேர்தல் வாக்குறுதிகள் எந்தளவுக்கு சாதக விளை…
-
- 0 replies
- 466 views
-
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களும் வீ.தனபாலசிங்கம் இலங்கையின் 8 வது ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் இன்று இடம்பெறுகின்றது. 30 க்கும் அதிகமானவர்கள் கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தார்கள்.எத்தனை வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் நிற்கப்போகிறார்கள் என்பது நண்பகலுக்குப் பின்னர் தெரிந்துவிடும்.என்றாலும் ஜனாதிபதி தேர்தலில் இறுதியில் போட்டி இரு பிரதான வேட்பாளர்களுக்கிடையிலானதாக இருப்பதே வழமை. ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளரான வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோதாபய ராஜபக்சவுமே அந்த பிரதான போட்டியாளர்கள். 20 வருடங்களுக்கு பிறகு ஜனதா விமுக்தி பெர…
-
- 0 replies
- 396 views
-
-
எழுக தமிழ் என்.கே. அஷோக்பரன் / 2019 செப்டெம்பர் 17 செவ்வாய்க்கிழமை, பி.ப. 06:53 (பகுதி - 01) இன்றைய தினம், 2019 செப்டெம்பர் 16ஆம் திகதி, காலையில் யாழ். முற்றவௌியில், தமிழர் மரபுரிமைப் பேரவை, ‘எழுக தமிழ்’ நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வு தொடர்பில், குறித்த பேரவை வௌியிட்டுள்ள அறிக்கையில், சமகாலத்தில் இலங்கை வாழ் தமிழினம் எதிர்நோக்கும் பின்வரும் பிரச்சினைகளையும் சவால்களையும் அது கோடிட்டுக்காட்டி நிற்கிறது. ‘தமிழர் தம் மரபுசார் வாழ்நிலங்கள், விளைபுலங்கள், வன்கவர்வு செய்யப்பட்டு, தமிழர் மரபில் அந்நிலங்களுக்கு வழங்கப்பட்டு வந்த, காரண இடுகுறிப் பெயர்கள் மாற்றப்பட்டு, சிங்களப் புனை பெயர்கள் இடப்பட்டு, திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங…
-
- 2 replies
- 836 views
-
-
சாதாரண தமிழ் மக்களுடன் பேசுகின்ற போது அவர்களில் பலர் சஜித் பிரேமதாச பற்றி பேசுவதை காணக் கூடியதாக இருக்கின்றது. இப்படித்தான் முன்னர் மைத்திரிபால பற்றி பேசியிருந்தனர். இறுதியில் ஏமாந்து போயினர். ஆனால் இம்முறை பொதுவாகவே, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியி;ல் அக்கறையற்ற தன்மையே காணப்படுகின்றது. அதற்கு அனேக காரணமுண்டு. அதனை பின்னர் பார்ப்போம். ஆனால் கூட்டமைப்பை வழிநடத்தும் சம்பந்தன்- சுமந்திரன் தரப்போ, சஜித்தை சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனாலும் சஜித் கூட்டமைப்பிலிருந்து சற்று எட்ட நிற்பதாகவே தெரிகிறது. இதுவரை அவர் கூட்டமைப்புடன் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. அதே போன்று கூட்;டமைப்பும் அவருடன் எந்தவொரு உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தையிலும்…
-
- 1 reply
- 697 views
-
-
ஒரு தமிழ் பொது வேட்பாளர் ஏன் வேண்டும்? நிலாந்தன்… October 6, 2019 சில மாதங்களுக்கு முன்பு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள திண்ணை உல்லாச விடுதியில் தமிழ் கருத்துருவாக்கிகள் சிலரை சந்தித்தார். வெவ்வேறு அரசியல் நம்பிக்கைகளைக் கொண்ட மேற்படி கருத்துருவாக்கிகளுடனான இச்சந்திப்பில் தமிழ் மக்கள் மத்தியில் கோத்தபாயவுக்கு எவ்வாறான ஆதரவு தளம் உள்ளது என்பது குறித்து அறிவது அவருடைய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. அவரைச் சந்தித்துச் சில வாரங்களின் பின் மற்றொரு அமெரிக்கத் தூதரக அதிகாரியும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தைச் சேர்ந்த ஓர் உயர்நிலை அதிகாரியும் யாழ் நகரப்பகுதியில் அமைந்துள்ள ஜெற்விங் உல்லாச விடுதியில் தமிழ் கர…
-
- 6 replies
- 1.2k views
-
-
காஷ்மீர்: இறையாண்மையும், நிலப்பரப்பும் செப்டம்பர் 2019 - ராஜன் குறை · கட்டுரை As if the actual state were not the people. The state is an abstraction. The people alone is what is concrete. -Karl Marx இந்தியாவும், பாகிஸ்தானும் இரண்டு குடியரசுகளாக பிரிட்டிஷ் இந்திய ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பகுதியில் 1947ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டபோது, சில மன்னராட்சி பிரதேசங்கள் இரண்டில் எதனுடன் இணைவது என்ற கேள்வியை எதிர்கொண்டன. அதில் காஷ்மீரும் ஒன்று. சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அழுத்தத்தில் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. ஆனால் இது மன்னரின் இசைவாக இருந்ததே தவிர மக்களின் குரலாக இல்லை. சில தனித்த உரிமைகளை அந்த மாநிலத்திற்குக் கொடுப்பதன் மூலம் மக்களைத் திருப்திபடுத்தவே இந…
-
- 1 reply
- 1.2k views
-
-
வாழ்வுரிமையைக் காக்கும் வாக்குரிமை..! மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 8ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு இரு வாரம் கடந்துள்ள நிலையில், அரசியல் களத்தில் தேர்தலுக்கு எஞ்சியுள்ள நாட்களில் என்ன நடக்கும் என்ற கேள்விக் கணைகளோடு நாட்டு மக்களும், அரசியல் அவதானிகளும் ஒவ்வொரு விடியலையும் எதிர்பார்த்தே வாழ்நாளை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். ஊடகங்களின்பால் என்றுமில்லாத அக்கறை மக்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் இக்காலங்களில் ஏற்பட்டிருக்கிறது. தேர்தல் நாட்கள், மக்களின் மனச்சாட்சியை பரிசோதிக்கும் பரீட்சைத்தளங்களாக அமைகின்றன. ஒரு மனிதனின் மனச்சாட்சியே அவனுக்கு நீதிபதி. அத்தகைய மனச்சாட்ச…
-
- 0 replies
- 563 views
-