Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. எழுக தமிழ் ஏன் ? நிலாந்தன்…. September 7, 2019 தமிழ் மக்கள் மற்றொரு எழுக தமிழுக்கு தயாராகி வருகிறார்கள். தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியிலும் எழுச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அறியமுடிகிறது. தாயகத்தில் நடக்கும் எழுக தமிழுக்கு பலம் சேர்க்கும் விதத்தில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் இதில் இணையவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு நல்ல விடயம.; தமிழ் மக்கள் எந்த அளவுக்குப் பெருந்திரள் ஆகிறார்களோ அந்தளவுக்கு அழுத்தத்தை கொடுக்கலாம். தமிழ் மக்கள் தமது எதிர்ப்பைக் கூர்மையாகவும் கூட்டாகத் திரண்டும் காட்ட வேண்டிய ஒரு கால சந்தியில் தமிழ் அரசியல் வந்து நிற்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக யுத்தம் வேறு வழிகளில் முன்னெ…

  2. இந்திய உளவுத்துறையும் ஈழவிடுதலையும்… இந்திய உளவுத்துறையும் ஈழவிடுதலையும் ◆ நேரு குணரட்ணம்◆ பாகம் 1: 1986இல் தமிழகத்தில் நடந்தவை என்ன? மேலும் சில தெளிவுபடுத்தல்கள் உடல்நலம் கருதியே இவ்வரலாற்றை எழுதும் முயற்சியை தள்ளிப்போட்டு வந்தேன். தற்போதும் அதில் பெரிதாக எவ்வித மாற்றமும் கிடையாது. ஒவ்வொருநாளும் 10 மணித்தியாலங்கள் எனக்கு இயத்திரத்துடன் இணைந்த வாழ்க்கை. மிகுதி நேரத்திலேயே இந்த முயற்சி. எந்த நேரமும் அழைப்பு வரலாம். 1 மணி நேர அவகாசத்தில் அந்த பாரிய சத்திரசிகிச்சைக்காக நான் வைத்தியசாலையில் இருந்தாக வேண்டும். ஏன் இதைப் பகிர்ந்து கொள்கிறேன் என்றால் இதை எழுதிக் கொண்டிருக்கும் ஒரு நாளில் திடீரென காணாமல் போய்விடுவேன்… நீண்ட ஒரு இடைவெளி ஏற்பட…

  3. தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் நிகழ்விற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. 2016 ஆம் ஆண்டு இது போன்றதொரு எழுக தமிழ் நிகழ்வை தமிழ் மக்கள் பேரவை வடக்கிலும் கிழக்கிலும் வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. 2016இல் இடம்பெற்ற எழுக தமிழ் நிகழ்வுகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்திருந்தது. அவ்வாறானதொரு சூழலிலும் கூட, எழுக தமிழ் நிகழ்வுகளை பேரவை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. ஆனால் இம்முறை எழுக தமிழ் நிகழ்வுகள் தொடர்பாக சில தரப்புக்கள் சந்தேகங்களையும் அவதூறுகளையும் பரப்பிவருகின்றது. முக்கியமாக தமிழ் மக்கள் பேரவையில் அங்கத்துவம் வகித்த அரசியல் கட்சிகளில் ஒன்றான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் எழுக தமிழ் தொடர்பில் முரண்பாடான கருத்துக்களை தெரிவித்துவருகின்றது. காங்கிரசின்…

    • 1 reply
    • 1.2k views
  4. எழுக தமிழ்; சீரழிந்த அரசியலின் கதை Editorial / 2019 செப்டெம்பர் 05 வியாழக்கிழமை, மு.ப. 09:09 Comments - 0 எதிர்வரும் 16ஆம் திகதி நடக்கவுள்ள ‘எழுக தமிழ்’ நிகழ்வு பற்றி, மக்கள் மத்தியில் இல்லாத எதிர்பார்ப்பைத் தமிழ் ஊடகங்களும் எல்லாமறிந்த அரசியல் ஞானிகளும் ஏற்படுத்தி வருகிறார்கள். ‘எழுக தமிழ்’ என்பது தொடக்கமல்ல; சீரழிந்த மக்களை ஏமாற்றும், அரசியல் தலைமைகளின் கூத்துகளின் தொடர்ச்சி ஆகும். ‘எழுக தமிழ்’ என்ன சாதித்தது என்ற வினாவுக்கு, நியாயமான பதிலை எந்தத் தமிழ்த் தேசியவாதியாலும் வழங்கவியலாது. வேலைத்திட்டங்கள் அற்ற மக்கள் தேவைகளை முன்னிலைப்படுத்தாத உணர்ச்சிகர கோச அரசியலின் தொடர்ச்சியே ‘எழுக தமிழ்’. இன்று பிரதேச சபைகளாலும், மாநகராட்சி…

  5. பிரெக்ஸிட்; மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 செப்டெம்பர் 05 வியாழக்கிழமை, மு.ப. 08:53Comments - 0 வரலாற்றில், தனி மனிதர்களின் பாத்திரம் முக்கியமானது. பல வரலாற்று நிகழ்வுகளைத் தனி மனிதர்களின் செயல்களே தீர்மானித்து இருக்கின்றன. இது, பண்டைய காலம் முதல் தற்காலம் வரை அனைத்துக்கும் பொதுவானது. வரலாறெங்கும் தனிமனிதர்கள், தேசங்களின் தலைவிதியைத் தீர்மானித்து இருக்கிறார்கள். அவ்வாறு, ஒரு தேசத்தின் தலைவிதியை, ஒருசிலர் தீர்மானிக்கின்ற நிகழ்வு, இப்போது நடந்தேறுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளிவருவதைக் குறிக்கும் ‘பிரெக்ஸிட்’, இப்போது பேசுபொருளாகி உள்ளது. இது, பிரித்தானிய நாடாளுமன்ற ஜனநாயகத்தையே ஆட…

  6. இலங்கையில் சில மாதங்களில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், நாட்டில் அது குறித்த கருத்துகள் தினமும் பேசப்படுகின்றன. 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவதற்கு தமிழ் பேசும் சமூகத்தின் வாக்குகள் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தன. இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் வாக்குகள் எந்த அளவில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவருக்கு பங்களிப்பு வழங்கும் என்பது தொடர்பிலும் அரசியல் கட்சிகள் தற்போது அதிக அளவில் கவனம் செலுத்தி வருகின்றன. எனினும், சிங்களத் தலைவர்கள், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வ…

    • 0 replies
    • 534 views
  7. பிரித்தானியாவும் பிரெக்சிட்டும் Britain and brexit பா.உதயன் பிரித்தானியாவில் இன்று அனைவராலும் பேசப்படும் ஒரு மிக முக்கியமான செய்தியாக இன்று பிரெக்ஸிட் (brexit) இருப்பதை காண முடிகின்றது .சுமார் மூன்று வருடத்திற்கு முன்பு பிரித்தானிய ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து தனித்து இருக்கவேண்டுமா அல்லது சேர்ந்து இருக்க வேண்டுமா என்ற பொது வாக்கு எடுப்பில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து இருக்க வேண்டும் என்று பெரும் பான்மை மக்களால் தீர்ப்பு வழங்கபட்டது . இதை தொடர்ந்து எந்த வித பொருளாதார ஒப்பந்தமும் செய்யப்படாமல் ஒரு இழுபறி நிலைமையே காணப்படுகின்றது .இந்த நிலையில் பிரித்தானிய பிரதமர் பழமைவாத தேசிய நரிகளோடு நாடகம் ஆடிக்கொண்டு இருக்கிறார் . இதை தொடர்ந்து எ…

  8. எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 செப்டெம்பர் 04 புதன்கிழமை, பி.ப. 08:16 கடந்த நான்காண்டு காலங்களில், இலங்கையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாததையிட்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறைகூறியிருக்கிறார். இனப் பிரச்சினைக்குத் தீர்வை வழங்கக்கூடிய வகையில் அரசமைப்பை மாற்றியமைக்காது, நான்காண்டுகளை வீணடித்தாகவும் அரசாங்கத்தை அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த வாரம், யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட விஜயத்தின் போதே, அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது, முற்றிலும் தவறான குற்றச்சாட்டல்ல; அதேவேளை, முற்றிலும் நியாயமான குற்றச்சாட்டுமல்ல. இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண…

    • 0 replies
    • 790 views
  9. பி.கே.பாலச்சந்திரன் சீனாவின் ஹொங்கொங் விசேட நிருவாகப் பிராந்தியத்தில் வன்முறை ஆர்ப்பாட்டங்களை மூளவைத்த சர்ச்சைக்குரிய நாடுகடத்தல் சட்டமூலம் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றது.ஆனால், மார்ச் மாதத்தில் தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள் இன்னமும் தொடர்கின்றன ;அவற்றின் தீவிரம் அதிகரித்து பரவலாக வன்முறைகளும் இடம்பெறகின்றன.அதனால் கிழக்காசியாவின் பொருளாதார இயக்கமையம் என்று வர்ணிக்கப்படும் அந்த பிராந்தியம் முடங்கிப்போய்க்கிடக்கிறது. சீனாவில் இருந்து தப்பியோடிவரும் குற்றவாளிகள் தலைமறைவாக இருப்பதற்கு வசதியான ஒரு ' புகலிடமாக ' ஹொங்கொங் மாறுவதற்கு காரணமாக இருக்கும் சட்ட ஓட்டைகளை மூடுவதை நோக்கமாகக் கொண்டதே சீன நாடுகடத்தல் சட்டமூலம்.ஆனால், அதேவேளை சீனாவின் கொள்கைகளை எதிர்க்கும் ஹொங…

    • 2 replies
    • 836 views
  10. இலங்கைக்கு வெளியில் பொறிமுறை அவசியம் ! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான இலங்கையின் பிரச்சினைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாகவே தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைக் கண்டறிந்து அதற்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்கான தொடர் போராட்டம் உள்நாட்டில் ஆயிரமாவது தினத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்ற நிலையிலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நெருக்குதல்கள், அச்சுறுத்தல்கள், வாழ்க்கை நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த வீதியோரப் போராட்டத்தை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய குடும்ப உறவினர்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். தன்னெழுச்சியாக ஆரம்பமாகி தீவிரமடைந்…

  11. இலங்கையில் தமிழர்களின் மீதான இன ஒடுக்குதலுக்கு; சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்கள் பற்றிய பல பிழையான பலமான ஐதீகங்களும், புனைவுகளும் செல்வாக்கு செலுத்தி வருவதை நாம் அறிவோம். அப்பேர்பட்ட புனைவுகள் தான் தமிழர்கள் அந்நியர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் என்பது போன்ற பீதிகள். “தமிழர்களுக்கு தமிழ்நாடு இருக்கிறது எங்களுக்கு உலகில் எவர் உண்டு” என்கிற வாசகம் சிங்களத்தில் பிரபல்யம். இந்தியா இலங்கையில் பண்பாட்டு ரீதியில் செல்வாக்கு செலுத்துவதற்கு பல காரணங்கள் இருக்கலாம் ஆனால் அரசியல் ரீதியில் ஆதிக்கம் செலுத்துவதற்கு என்ன நியாயம் இருக்கிறது என்கிற கேள்வி இலங்கை வாழ் மக்களிடம் நிலவவே செய்கிறது. என்னதான் இந்திய – இலங்கை பண்பாட்டு உ…

  12. இலங்கையில் தொகுதி வாரி தேர்தலும் இன உறவும் - வ.ஐ.ச.ஜெயபாலன் . தொகுதிவாரி தேர்தல் அடிப்படையில் மட்டுமே மாகாணசபை தேர்தலை நடத்த முடியும் என்கிற நீதி மன்ற தீர்ப்பு வந்துள்ளது. இனி எதிர்காலத் தேர்தல்களில் தொகுதி வாரி முறைமையே முன்னிலை பெறும் என்பதில் சந்தேகமில்லை. புதிய சூழ; . புதிய முறை வடக்கில் தமிழரைப் பாதிக்காது. கிழக்கில் தமிழரையும் முஸ்லிம்களையும் ஓரளவு பாதிக்கலாம். அம்பாறை மாவட்டத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் தமிழரும் முஸ்லிம்களுக்கும் புரிந்துணர்வு ஏற்பாடுகள் இல்லாவிட்டால் பாதிப்புகள் ஏற்படும். புதிய முறை தென் இலங்கை முஸ்லிம்களையும் மலையக தமிழரையும் வடமாகாண முஸ்லிம்களையும் அதிகம் பாதிக்கும். . பழைய தேர்தல் முறைமையில் திருகோண மலையிலு…

    • 0 replies
    • 438 views
  13. தமிழ் மக்களும் ஜே.வி.பி.யும் வீ.தனபாலசிங்கம் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளரான ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி. ) வின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க கடந்தவாரம் ' கேசரி ' க்கு வழங்கிய நேர்காணலில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய தெரிவு குறித்து தெரிவித்திருக்கும் கருத்து விரிவான விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஏனைய தேர்தல்களில் தமிழ் அரசியல் கட்சிகளை ஆதரிக்கலாம்.ஆனால், ஜனாதிபதி தேர்தல் என்று வரும்போது தமிழ் மக்கள் தென்னிலங்கை கட்சியொன்றை ஆதரிப்பதென்றால், தென்னிலங்கை கட்சியொன்றை அவர்கள் நம்புவதென்றால் ஜே.வி.பி.யே ஒரே தெரிவாக இருக்கமுடியும் என்று கூற…

  14. மஹிந்த ராஜபக்‌ஷவின் பேரம் கே. சஞ்சயன் / 2019 செப்டெம்பர் 01 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 01:18 Comments - 0 வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்களின் வாக்குகள் தீர்க்கமானவையாக இருக்கும் என்பதால், பேரம் பேசுவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற கருத்து, பரவலாக இருக்கின்ற நிலையில், மஹிந்த தரப்பே பேரத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைத்து, தமிழ்க் கட்சிகள் தான் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் பேரம் பேசும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், இதுவரையில் அவ்வாறான எந்தப் பேரமும் நடந்ததாகத் தெரியவில்லை. ஏற்கெனவே மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில் இருந்த காலத்தில், அந்த அரசாங்கத்துடன் ஒட்டி, உறவாடிய தமிழ்க் கட்சி…

  15. Hong Kong இல் 12 வாரங்களைக் கடந்தும் முன்னெடுக்கப்படும் மக்கள் எழுச்சிப் போராட்டங்களும் , Hong Kong ஐ தனது முழுமையான அதிகாரப்பிடிக்குள் கொண்டுவர முனையும் CHINA வும்.

  16. எழுக தமிழுக்குத் தயாராதல் – நிலாந்தன்… September 1, 2019 செப்டம்பர் 16ஆம் தேதி எழுக தமிழ் நடக்கவிருக்கிறது. அப்படி ஒரு மக்கள் எழுச்சிக்கான எல்லாத் தேவைகளும் உண்டு. ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் எழுக தமிழை நடாத்தியிருப்பதால் இம்முறை ஏன் வன்னியில் நடத்தக் கூடாது? என்ற கேள்வியும் உண்டு. ஆனால் முன்னைய எழுக தமிழ்களோடு ஒப்பிடுகையில் இம்முறை ஓர் எழுக தமிழை ஒழுங்குபடுத்துவதில் பின்வரும் சவால்கள் உண்டு. அது ஓர் அலுவலக நாள். அந்நாளில் அரச அலுவலர்களையும் மாணவர்களையும் முழு அளவுக்குத் திரட்ட முடியுமா? ஏற்கனவே கடையடைப்பு என்றால் அது மாணவர்களுக்கு மட்டும்தான் அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அரச அலுவலர்களுக்கும் இல்லை என்று ஒரு வழமை உண்டு. இந்த வழமையைப் பேரவை எப்…

  17. தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவு யாருக்கு..?: சூடு பிடிக்கும் தேர்தல் களம் ஆட்சி மாற்­றத்­துக்­காக 2015ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் தமிழ் மக்கள் அளித்­தி­ருந்த ஆத­ரவின் மூலம் நன்­மைகள் விளை­ வ­தற்குப் பதி­லாகக் குழப் ப­க­ர­மான நிலை­மையை உரு­வாக்­கு­வ­தற்கே வழி­யேற்­ப டுத்தி இருந்­தது. அந்த வகையில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு வழங்கியிருந்த உறு­தி­யான – நிபந்­த­னை­ யற்ற ஆத­ரவு விழ­லுக்கு இறைத்த நீராகி உள்­ளது. ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ் மக்கள் யாரை ஆத­ரிப்­பது? யார் தமிழ் மக்­க­ளுக்கு விசு­வா­ச­மாகச் செயற்­ப­டு­வார்கள்? யாரைத் தெரிவு செய்தால் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு கிடைக்கும்? என்ற கேள்­விகள் சாதா­ரண வாக்­கா­ளர்­களின் மனங்­களைக் குடைந்து கொ…

  18. ஒரு அரசியல்வாதி அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திக்கிறான். ஆனால் ஒரு தேசத்தின் தலைவரோ அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திக்கிறான். இது 1800களில் ஜேம்ஸ் பிறீமான் கிளார்க் (James Freeman Clarke) கூறியது. அமெரிக்க புரட்சி காலத்தில் வாழ்ந்த அவர் இறையியலாளரும் எழுத்தாளரும் மட்டுமல்ல அவர் ஒரு மனிதஉரிமை வாதியும் கூட. அமெரிக்காவின் அப்போதைய அரச தலைவர் ஸ்ரிபன் குரோவர் கிளில்லான்டின் தெரிவுக்குக்கூட அவரது கருத்தியல் தாக்கத்தைச் செலுத்தியிருந்தது. இப்போது ஏன் ஜேம்ஸ் பிறீமான் கிளார்க் குறித்து நினைவுட்டப்படுகின்றது என்பதை நீங்கள் ஓரளவு ஊகித்திருக்கக்கூடும் உங்கள் ஊகம்சரிதான். ஜேம்ஸ் பிறீமான் கிளார்க்கின் கருத்தியல் கூறுவது போல இலங்கைத்தீவில் ஒரு அரசியல்வாதி அல்ல சில அ…

  19. கலாநிதி லக்சிறி பெர்னாண்டோ கடந்த காலத்திலும் அண்மைக்காலத்திலும் தவறுகளைச் செயதிருந்தாலும், நாட்டின் ஜனநாயக சமநிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒரு முக்கியமான கூறு ஆகும். அது ஒரு மத்திய பாதைக் கட்சியாக இருந்துவந்திருக்கிறது. அதன் பொதுவான திசையமைவு நாட்டின் அரசியலில், பொருளாதாரத்தில், வெளியுறவு விவகாரங்களில் மற்றும் கலாசார / தேசிய பிரச்சினைகளில் தேவையானதாகும். இந்த விவகாரங்கள் தொடர்பில் அந்த கட்சி பல தடவைகள் தவறிழைத்திருந்தாலும், அதன் தேவை அவசியமானதேயாகும். சுதந்திர கட்சியை விமர்சிப்பவர்கள் '1956 தனிச்சிங்கள சட்டத்தை' நினைவுபடுத்தக்கூடும், ஆனால் மத்திய பாதையில் நேர்கோடு இருக்கமுடியாது. இலங்கை இப்போது ஒரு முட்டுச்சந்தில் வந்து நிற்கிறது.மத்திய பாதைக்கு புத்…

    • 0 replies
    • 449 views
  20. சலீல் திருப்பதி ஜூலை நடுப்பகுதியில் ஒரு நாள் பெல்பாஃஸ்டில் இருந்து டப்ளினுக்கு பஸ்ஸில் பயணம் செய்தேன். பெல்பாஃஸ்ட் வட அயர்லாந்தில் இருக்கிறது ; மதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசியவாதத்தினால் பளவுபடுத்தப்பட்ட தீவின் ஒரு பகுதியான அயர்லாந்து குடியரசில் டப்ளின் இருக்கிறது.ஆனால், சோதனை நிலையம் எதுவும் இருக்கவில்லை ; வீதி அறிவிப்புகளில் மைல்கள் கிலோமீட்டர்களாக மாறியபோது, விளம்பர பதாகைகளில் விலைகள் பவுண்களில் இருந்து யூரோவாக மாறியபோது, எழுத்துக்களில் அசையழுத்தக்குறியைக் கண்டபோது எல்லையைக் கடந்துவிட்டேன் என்பதை புயிந்துகொண்டேன். இன்னொரு நாட்டில் நான் இருப்பதை எனது கையடக்க தொலைபேசி காட்டியது. பயணம் எந்த தடையும் இடையூறும் இல்லாததாக இருந்தது. 1998 பெரிய வெள்ளி உடன்படிக…

    • 0 replies
    • 414 views
  21. -இலட்சுமணன் தமிழர் விடுதலைப் போராட்டம் உச்சநிலையை அடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் காலகட்டத்தில், போராட்டத்தின் கொள்கை முரண்பாடுகளாலும் போராட்ட வன்முறைகளாலும் சிதறுண்ட தமிழ் மக்களின் அரசியல் நிலைமைகளை ஸ்திரப்படுத்தவும், தமிழர்களின் போராட்டம் நியாயமானது உண்மையானது, உணர்வுபூர்வமானது என்பதை சர்வதேசத்துக்கு உரத்துச் சொல்லவும், தமிழீழ விடுதலைப் புலிகள், வெகுஜனப் போராட்டமாக ‘பொங்கு தமிழ்”ஐ ஏற்படுத்தினர். தமிழர்களின் அபிலாஷைகளை, ‘பொங்கு தமிழ்” தமிழர்ப் போராட்டத்தின்பால் ஈடுபாடுள்ள அனைவரையும் ஒன்றிணைத்து, சிங்கள தேசத்துக்கும் சர்வதேசத்துக்கும் பிரகடனப்படுத்தினர். இந்த ‘பொங்கு தமிழ்” பிரகடனத்துக்கு நிகராக ஆயுதப் போராட்டம் மௌனித்த பின்னர், அந்தப் பணியை, தமிழ் தேசிய…

    • 0 replies
    • 426 views
  22. எல்லோரும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். நடைபெறவுள்ள தேர்தல், இலங்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற மாயை, ஊடகங்களால் கட்டியெழுப்பபட்டுள்ளது. சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் அரசியல் வரலாற்றில், ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலின் போதும் நாடாளுமன்றத் தேர்தலின் போதும், இவ்வாறான ஆலவட்டங்கள் கட்டப்படுவதுண்டு. இறுதியில், எதிர்பார்ப்புகள் காற்றுப்போன பலூன் போலாவதும் பின்னர், அடுத்த தேர்தலில் நம்பிக்கை வைப்பதுமெனத் தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளது. நடைபெறவுள்ள தேர்தலும், அதற்கு விலக்கல்ல. இப்போது எல்லோரின் கவனமும் ஜனாதிபதி வேட்பாளர்கள் யார், யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள், யாருக்கு யார் ஆரவு தருவார்கள் போன்ற கேள்விகளிலேயே குவிந்து…

    • 0 replies
    • 454 views
  23. ஜே.வி.பியின் தலைவர் அநுர குமாரவிற்கு உருவாகியிருக்கும் மக்கள் ஆதரவு அலையில் சற்று தடுமாறி போயிருப்பது ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமல்ல, பொது ஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியனவும் தான். ஜே.வி.பியினரால் ஜனாதிபதி பதவியை கைப்பற்ற முடியாது என்றாலும் ஏனைய கட்சிகள் பெறும் வாக்கு வீதத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் கட்சியாக அது உருவெடுத்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் மூன்று பிரதான கட்சிகளுக்குள் அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு கட்சியாக ஜே.வி.பி உள்ளது. இதன் காரணமாகவே ஜனாதிபதித் தேர்தலில் ஐம்பது சதவீத வாக்குகளை எவரும் பெற முடியாது போகுமோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஜனாதிபதியை தெரிவு செய்வதில் தாக்கம் செலுத்தும் மூன்றாவது அணியாக உருவெடுத்துள்ள ஜே.வி.பிக்கு ஆதர…

    • 0 replies
    • 340 views
  24. Published by T. Saranya on 2019-08-28 12:25:26 மிகச் சமீ­பத்தில் இலங்கை வாழ் மக்­களில் வாக்­க­ளிக்க தகு­தி­யு­டைய வாக்­கா­ளர்கள் அனை­வரும் தமது நாட்டில் எதிர்­கால ஜனாதி­ப­தியை தேர்ந்­தெ­டுப்­ப­தற்­கான வாக்­கு­ரி­மையை பிர­யோ­கிக்­க­வி­ருக்­கி­றார்கள் என்­பது நாம் அறிந்­ததே. சிலர் இந்த வாக்­க­ளிப்பால் எமக்கு என்ன பயன். சிறையில் உள்ள எமது குழந்­தை­க­ளுக்கு விடு­தலை அளிப்­ப­தாகக் கூறியும் இன்றும் அதற்­கு­ரிய ஆயத்­தங்கள் நடை­பெ­ற­வில்லை. நாம் இழந்த எமது காணியை மீளப்­பெற முடி­ய­வில்லை என்­பன போன்ற உண்­மை­யான பிரச்­சி­னை­களைக் கூறி நாங்கள் யாருக்கும் வாக்­க­ளிக்­காமல் இருந்தால் என்ன? என்று அங்­க­லாய்த்துக் கொண்டு இருக்­கின்­றனர். இவர்­க­ளது அங்­க­லாய்ப்­புக்­கான…

    • 0 replies
    • 386 views
  25. பாது­காப்புப் படைத்­த­ரப்பைச் சேர்ந்­த­வர்­களிள் தண்­டனை விலக்­கீட்டுக் கலா­சாரம் உச்ச நிலையைத் தொட்­டி­ருக்­கின்­றது. இதனைத் தெளி­வாகக் கோடிட்டு காட்­டு­வ­தாக இரண்டு சம்­ப­வங்கள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ தெரி­வாகி இருப்­பது ஒரு விடயம். லெப்­டினன் ஜெனரல் பதவி உயர்த்­தப்­பட்டு, சவேந்­திர சில்வா நாட்டின் இரா­ணுவத் தள­ப­தி­யாக நிய­மனம் பெற்­றி­ருப்­பது இரண்­டா­வது விடயம். இரு­வ­ருமே பாது­காப்புப் படைத்­த­ரப்பைச் சேர்ந்­த­வர்கள். ஒருவர் முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராக இருந்­தவர். மற்­றவர் இரா­ணு­வத்தின் பிர­தா­னி­யாக மேஜர் ஜெனரல் பதவி அந்­தஸ்து பணியில் இருந்­த…

    • 0 replies
    • 538 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.