Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. சம்பூர்: மீள்குடியேற்றத்தின் பின்னரும் தொடரும் அவலம் சம்பூர் கிராமத்தின் பிரச்சினை இன்னமும் ஓயவில்லை. தமது பூர்வீக நிலங்களைவிட்டு வெளியேறிய சம்பூர் பிரதேச மக்கள், பல்வேறு போராட்டங்களின் மத்தியில் தமது மண்ணில் மீளக்குடியேறி ஒரு வருடமும் ஆறு மாதங்களும் கடந்துவிட்டன. இருந்தபோதிலும் அவர்களது அடிப்படைத் தேவைகள் தொடர்பாக, மீள்குடியேற்றத்தின்போது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளும் உத்தரவாதங்களும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என சம்பூர்ப் பிரதேச மக்கள் ஆதங்கப்படுகிறார்கள். சம்பூர் கிழக்கு மற்றும் மேற்கு மீள்குடியேற்றக் கிராமங்களில் 856 குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். பத்து ஆண்டுகளின்பின் இந்தப் பிரதேசத்திலிருந்த அனைத்து வளங்களும் அழ…

  2. சம்மந்தனின் மறைவும் தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலமும் July 9, 2024 – கருணாகரன் — “சம்மந்தனின் மறைவுக்குப் பிறகு, தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம் எப்படி இருக்கும்?” – இந்தக் கேள்வி, சம்மந்தனின் மறைவுக்கு முன்னரே எழுப்பப்பட்டிருந்த ஒன்றுதான். ஆனாலும் அவர் மறைந்திருக்கும் இந்தச் சூழலிலும் இதற்குத் தெளிவான பதில் இல்லை என்பதே தமிழ்த்தேசியவாத அரசியலின் பரிதாபகரமான நிலையாகும். என்பதால் சம்மந்தன் இருந்தபோது ஏற்பட்டிருந்த குழப்பங்கள், இழுபறிகளையும் விட இனி வரும் நாட்களில் தமிழ்த்தேசிய அரசியற் பரப்பில் மேலும் பல குழப்பங்களும் பலத்த இழுபறிகளும் நிகழவுள்ளன. பல்வேறு குறைபாடுகள், கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ்த்தேச…

  3. . மாவீரர் தினம் விடுதலைப் புலிகள் இல்லாத சூழலில் முதலாவது மாவீரர் நாள் மிக இயல்பாகக் கொண்டாடப்பட்டுள்ளmaveeraraது. குறிப்பாக வன்னியில். இந்த மாவீர்நாள் கொண்டாட்டங்களைப் பற்றி ஏராளமான பதிவுகளும் அபிப்பிராயங்களும் தமிழ், சிங்களப் பொதுவெளியில் பகிரப்படுகின்றன. அதிகமானவை தமிழில்தான். எல்லாப் பதிவுகளையும் தொகுத்துப் பார்த்தால் இலங்கை அரசியற் போக்கும் தமிழ்ச்சமூகத்தின் இன்றைய நிலையும் எப்படி என்பது தெரியும். முதலில் இதைச் சற்றுப் பின்னோக்கிப் பார்க்கலாம். ஏனென்றால், இந்த மாவீர்நாள் கொண்டாட்டத்துக்கான சாதகமான சூழல் உருவாகியது கடந்த மே மாதத்தில். இந்த நிலையை உருவாக்கியது தற்போதைய அரசாங்கமே தவிர, வேறு யாருமல்ல. இதற்குக் காரண காரியங்கள் உண்டு. தன்னுடைய நலன்…

  4. சம்மந்தரின் கடும் போக்கு: வரையறை…? நரேன்- எந்தவொரு ஆளும் வர்க்கமும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் குரலை கடும்போக்கு, தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் என்றே வரையறை செய்வது உலகநியதி. பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் அல்லது சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக குரல் கொடுக்கும் அதே தரப்பில் இருந்து கடும் போக்கு என்ற வார்த்தைப் பிரயோகம் மேற்கொள்ளப்படுவதில்லை. பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு எதிராக இந்தியாவில் காந்தி தலைமையில் போராட்டம் நடந்து கொண்டு இருக்கையில், பிரித்தானியரின் அடக்குமுறைகளை தடுத்து நிறுத்துவதற்காக ஆயுதம் ஏந்தியவர்களை காந்தி வன்போக்காளர்களாக சித்தரித்திருந்தார். ஆயினும் அவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களாகவே இருந்தனர்.…

  5. சயனைட் குப்பி போராளிகளின் கழுத்தில் தொங்குவதற்கு வழிகோலிய நாள் ஜூன் 5 ஜூன் 5 ஈழத்தமிழினத்தின் அரசியல் போராட்ட வரலாற்றில் பல பதிவுகளைக் கொண்ட நாளாகும். ஜூன் 5 தான் பல திருப்பு முனைகளை ஏற்படுத்திய நாளாகும். ஆயுதப் போராட்ட காலத்திலும் பல சாதனைகளை வெற்றிச் சமர்களைக் கண்ட நாளாக ஜூன் 5 திகழ்கின்றது. ஆயுதப் போராட்டம் எழுச்சி பெறவும் சயனைட் என்கின்ற கொடிய நஞ்சு போராளிகளின் கழுத்தில் தொங்குவதற்கும் இந்த நாள் தான் வழிகோலியது என்பதில் மிகையில்லை. மலையகத்தில் வாழ்ந்த மக்களின் குடியுரிமையையும் வாக்குரிமையையும் ஜக்கிய தேசியக் கட்சி 1948 ல் பறித்து மக்களை நாடற்றவர்களாக்கியதுடன் நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் உறுப்பினர் எண்ணிக்கையையும் குறைத்தது. இந் நேரத்தில் தான் தந்தை செல்வா '…

  6. சரத் பொன்சேகா சொல்வது உண்மை தானா? ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், அமெரிக்கா செல்வதற்கு தாம் விண்ணப்பித்த போது, வீசா வழங்க அமெரிக்கா மறுத்து விட்டதாக, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல், உண்மையானது தானா என்ற சர்ச்சைகள் உருவாகியிருக்கின்றன. ஜனாதிபதியின் குழுவில், ஐ.நா செல்வதற்கு விண்ணப்பித்திருந்தவர்களில் தனக்கு மாத்திரம், வீசா வழங்கப்படவில்லை என்றும், போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உரிய தீர்வு காணப்படாததே இதற்குக் காரணம் என்றும் அவர் கூறியிருந்தார். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இதைச் செய்தியாளர்களிடம் தெரிவித்த உடனேயே, அவர் பொய் சொல்கிறார் என்று இ…

  7. சரத் பொன்சேகா: தலையிடியா, துருப்புச்சீட்டா? இலங்கையின் தேசிய அரசியலில் காணப்பட்ட பல்வேறான குழப்பங்கள் காரணமாக, இறுதி யுத்தம் பற்றியும் அதில் இடம்பெற்றிருக்கலாம் என்று குற்றஞ்சாட்டப்படும் விடயங்கள் தொடர்பானதுமான கவனம், அண்மைக்காலத்தில் குறைந்திருந்தது. ஆனால், சர்வதேச ரீதியாக ஆரம்பித்த பிரச்சினையொன்று, தேசிய ரீதியான பிரச்சினையாக மாறி, இறுதி யுத்தம் பற்றிய கலந்துரையாடல்களை மீள ஆரம்பித்திருக்கிறது. இதில், இறுதி யுத்தம் தொடர்பான விசாரணைகளை வேண்டிநிற்கும் தமிழ்த் தரப்பு, எந்தவிதமான பங்களிப்பையும் வழங்காதிருக்க, இறுதி யுத்தம் தொடர்பில் தொடர்பில் சர்வதேச விசாரணை கூடவே கூடாது என்று ஒற்றைக் காலில் நிற்கும் பெரும்பான்மையினத்தவர்கள் ம…

  8. சரி, விஜயதாச போய்விட்டார்; ஊழல் போய்விடுமா? கடந்த வாரம், வடக்கிலும் தெற்கிலும் இரண்டு முக்கிய பதவி நீக்கங்கள் இடம்பெற்றன. தெற்கில், நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடந்த 23ஆம் திகதி பதவி நீக்கம் செய்யப்பட்டார். வடக்கில், வட மாகாண போக்குவரத்து அமைச்சராகவிருந்த ப. டெனிஸ்வரன் அம்மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இருவருக்கும், அவர்களின் கட்சிகளால் தமது பதவியை இராஜினாமாச் செய்ய அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. அவர்கள் பதவி விலகாததனாலேயே, பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இரண்டு முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராகவும் ஒரே குற்றச்சாட்டையே அவர்களது க…

  9. சரிந்து போகிறதா கூட்டமைப்பின் சாம்ராஜ்யம்? உள்ளூராட்சித் தேர்தலில், வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு படுதோல்வி கண்டிருப்பதாக ஒரு பார்வையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெரும் எழுச்சி கண்டிருப்பதான ஒரு கருத்தும் பரவலாகத் தோற்றம் பெற்றிருக்கிறது. கடந்த நாடாளுமன்ற, மாகாணசபைத் தேர்தல்களுடனான ஒப்பீடுகளின் அடிப்படையிலேயே, இந்தக் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அத்தகைய ஒப்பீடு பொருத்தமானதா, என்பது முக்கியமான கேள்வி. ஏனென்றால், நாடாளுமன்றம், மாகாணசபைத் தேர்தல்களில் செல்வாக்குச் செலுத்தாத பல விடயங்கள், உள்ளூராட்சித் தேர்தல்களில் செல்வாக்குச் செலுத்தக் கூடியவையாக இருந்தன. நாட…

  10. சரியான நேரத்தில் சரியான கூட்டு ? - நிலாந்தன் “அனுரவின் அரசாங்கத்தை வலுவான முறையில் எதிர்கொள்வதற்கும், தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்துவதற்கும் நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபடுவதைத் தவிர வேறு வழி இல்லை” என்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரக்குமார் இந்திய ஊடகவியலாளரான மீரா சிறீனிவாசனுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார். புதிய யாப்பு ஒன்று உருவாக்கப்படுமிடத்து அந்த யாப்பை நோக்கி கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. தமிழர்கள் ஒரு தரப்பாகத் திரண்டு நின்றால்தான் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதனை பலமாக வெளிப்படுத்தலாம். மிகக் குறிப்பாக சுமந்திரனும் அவருடைய கூட்டாளிகளும் இணைந்து முன்பு தா…

  11. சரிவடைந்து செல்லும் தீர்வுக்கான சாத்தியம் இவையெல்லாவற்றையும் உற்று நோக்குகின்ற போது தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய விதத்தில் அரசியல் சாசனம் கொண்டுவரப்படுமா? அவ்வாறு இல்லையாயின் தமிழ் மக்களின் எதிர்கால நிலைமைகளும் நகர்வுகளும் எவ்வாறு இருக்கப் போகின்றன? யுத்­த­கா­லத்தில் இலங்கை அர­சாங்­கத்­துக்கும் விடு­தலைப் புலி­க­ளுக்­கு­மி­டையில் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களின் போது, இல்­லாத எதிர்ப்பும் கண்­ட­னங்­களும் புதிய அர­சியல் சாசனம் உரு­வாகும் இவ்­வே­ளையில் காணப்­ப­டு­வதும் காட்­டப்­ப­டு­வதும் இலங்கை அர­சி­யலின் நெருக்­கடிப் போக்­கு­களை தெளி­வா­கவே விளக்­கு­கி­றது. புதிய அர­சியல் யாப்பு தொடர்பில் இன்னும் தெளி­வான முடி­…

  12. சரிவும் சரித்திரமும் இலங்­கையின் தேர்தல் சரித்­தி­ரத்தில் ஆட்­சி­யி­லுள்ள கட்­சி­களை விடவும் மூன்றாம் நிலைக் கட்­சிக்கு மக்கள் அதிகூடிய வாக்­க­ளித்­த­தொரு தேர்தலாக நடந்து முடிந்த உள்­ளூ­ராட்சி மன்றத் ேதர்தல் நோக்­கப்­ப­டு­கி­றது. இத்தேர்தல் பெறு­பே­றுகள் ஸ்ரீலங்­கா சுதந்­தி ரக் கட்­சி­, அதன் கூட்­ட­மைப்­பான ஐக்­கிய மக் கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­பு, ஐக்­கிய தேசியக் கட்­சி­ ஆகியவற்றின் வாக்கு வங்­கியில் கணி­ச­மான சரிவை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் சரித்­தி­ர­மா­கவும் மாற்­றி­யி­ருக்­கி­றது. அத்­துடன் இந்­நாட்டில் அர­சியல் ஸ்திரத்­தன்­மையைக் கேள்­விக்­கு­றி­யாக்­கி­யுள்­ள­தோடு, அதிருப்­தி­களின் ெவளிப்­பாட்­டையும் தென்­னி­லங்­கையின் எதிர்­கால நிலைப்…

  13. சர்­வ­தேச ஆத­ரவும் அனு­தா­பமும் ஹரி­கரன் சர்­வ­தேச சமூ­கத்தை சம்­பந்தன் அதி­க­ளவில் நம்­பு­கிறார், அவர்­களின் வழி­ந­டத்தல் படியே செயற்­ப­டு­கிறார் என்ற பொது­வான குற்­றச்­சாட்டு அண்­மைக்­கா­ல­மாக கூறப்­பட்டு வரு­கி­றது. குறிப்­பாக, அமெ­ரிக்­காவும், இந்­தி­யாவும் கூறு­கி­ற­படி நடந்து கொள்­கி­றார்கள் என்ற விமர்­சனம், சம்­பந்தன், மீதும் சுமந்­திரன் மீதும் அதி­க­மாக முன்­வைக்­கப்­பட்டு வந்­தி­ருக்­கி­றது. இந்த விமர்­ச­னங்கள் தனியே, கூட்­ட­மைப்பின் அர­சியல் போட்­டி­யா­ளர்­களால் முன்­வைக்­கப்­ப­டு­பவை மாத்­தி­ர­மல்ல, வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனும் கூட அண்­மையில் இதனை நாசூக்­காக குறிப்­பிட்­டி­ருந்தார். …

  14. சர்­வ­தேச மய­மான இலங்­கையின் இனப்­பி­ரச்­சினைத் தீர்வு போர்க்­குற்றம் விசா­ரிக்­கப்­பட்டுத் தண்­டனை பெற, போர் வீரர்கள் சம்­ம­திப்­பார்­களா? அரசு அவர்­களைப் பயன்­ப­டுத்தி விட்டு விசா­ர­ணைக்கும் தண்­ட­னைக்கும் கைய­ளிக்க விரும்­புமா? போர் வீரர்கள் உயிர்த்­தி­யாகம் செய்து கைப்­பற்­றிய இடங்­களை மீண்டும் தாரை­வார்க்க அவர்கள் இட­ம­ளிப்­பார்­களா? தம்­மோடு கலந்­து­கொள்­ளாமல் தீர்வு காண இசை­வார்­களா எனும் நிலைப்­பா­டு­களே தற்­போது பல்­லின தேசிய இணக்­கப்­பாட்டுத் தீர்­வுக்கு முட்­டுக்­கட்­டை­க­ளாக இருக்­கின்­றன. அப்­ப­டி­யானால் போர்க்­குற்­றத்­தி­லி­ருந்து போர் வீரர்கள் விலக்கு அளிக்­கப்­பட்டு அதற்குப் பக­ர­மாக கைப்­பற்­றிய இடங்­களை மீளவும் வழங்கத் தமிழ் …

  15. சர்ச்சைக்குரிய இணையவெளி பாதுகாப்பு சட்டமூலம் October 9, 2023 — வீரகத்தி தனபாலசிங்கம் — மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து அன்றைய பிரதமர் டி.பி. விஜேதுங்க ஜனாதிபதியாக பதவியேற்றார். கைத்தொழில் துறை அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார். முதற்தடவையாக பிரதமர் பதவிக்கு வந்த அவர் லேக்ஹவுஸ் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் “அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் பத்திரிகை ஆசிரியராகியிருப்பேன் என்று பதிலளித்தார். விக்கிரமசிங்கவுக்கு பத்திரிகை ஆசிரியராக வருவது ஒன்றும் சிரம…

  16. சர்ச்சைக்குரிய உரை மீண்டும் ஆட்சிக்கு மகிந்த ராசபக்ச - கருணா |

  17. சர்ச்சைக்குரிய தமிழ் பதம் மாறியது..... ஏகிய இராஜ்ஜிய / ஒருமித்த நாடு என்று முன்மொழிவு http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-22#page-20 தொடரும்

  18. சர்ச்சைக்குரிய வடமாகாண சபைத் தீர்மானம் - நிலாந்தன்:- 02 பெப்ரவரி 2014 வடக்கு மாகாண சபையில் கூட்டமைப்பு ஒரு சர்ச்சைக்குரிய தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றது. இலங்கைத் தீவில் இடம்பெற்றது இனப்படுகொலையை ஒத்தது என்று அத்தீர்மானத்திற் கூறப்பட்டுள்ளது. இடம்பெற்றது இனப்படுகொலை தான் என்பதை வெளிப்படையாகக் கூறத் தயாரற்ற அத்தீர்மானத்தை ஆதரித்தும் எதிர்த்தும் வாதப்பிரதிவாதங்கள் போய்க் கொண்டிருக்கின்றன. அதை ஆதரிப்பவர்கள் கூறுகிறார்கள், அது ஒரு சமயோசிதமான யதார்ததபூர்வமான தீர்மானம் என்று. மற்றொரு தீர்மானத்தில் போர்க் குற்றம் தொடர்பில் அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றைக்கோரிய கூட்டமைப்பு இத்தீர்மானத்தில் இங்கு இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்பதைக் கூராகக் கூறுவதன் மூலம் அரசாங்கத்…

  19. சர்ச்சையில் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பொதுவேட்பாளராக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நிறுத்தப்படுவாரா என்று ஊகங்கள் உலாவிக் கொண்டிருந்த போது, அமைச்சர் சரத் பொன்சேகாவிடம், ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அவர், “சங்கக்கார நல்ல மனிதர்; திறமையான கிரிக்கெட் வீரர் தான். ஆனால், அவருக்கு அரசியல் தெரியாது; நானே, அரசியலுக்கு வந்து, ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பின்னர் தான், அரசியலைக் கற்றுக் கொண்டேன்” என்று பதிலளித்திருந்தார். இவ்வாறு கூறியிருந்தாலும், அவர் இப்போதும் கூட, அரசியலைச் சரிவரக் கற்றுக் கொள்ளவில்லை என்பதே உண்மை. …

  20. சர்ச்­சையைக் கிள­றிய சீனத்­தூ­துவர் இலங்­கைக்கும் சீனா­வுக்கும் இடை­யி­லான பொரு­ளா­தார உற­வுகள் முக்­கி­ய­மா­ன­தொரு கட்­டத்தை அடைந்­தி­ருக்­கின்ற நிலையில், இரு­த­ரப்பு இரா­ஜ­தந்­திர உற­வு­களில் மீண்டும் ஒரு நெருடல் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. சீனத் தூதுவர் யி ஷியாங்­லியாங் கடந்த முதலாம் திகதி கொழும்பில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் குழு­வொன்­றுடன் நடத்­திய சந்­திப்பில் வெளி­யிட்ட கருத்­துக்­களே இந்த நிலை­மைக்கு முக்­கி­ய­மான கார­ண­மாகும். செய்­தி­யா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்கு சீனத் தூதுவர் அளித்­தி­ருந்த பதில்கள், சீனாவின் நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு அப்பால் இலங்கை அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்டை விமர்­சிக்கும் தொனி­யையும், கேள்வி எழ…

  21. சர்வ கட்சி மாநாடு ஒரு நாடகமா? நிலாந்தன். March 27, 2022 சர்வகட்சி மாநாடு எனப்படுவது வளர்ச்சியடைந்த ஜனநாயகங்களில் ஒரு உன்னதமான பயில்வு. முழு நாடும் கட்சி பேதங்களைக் கடந்து தேசியப் பிரக்ஞையோடு ஒன்றிணைந்து முடிவை எடுக்கும் நோக்கத்தோடு சர்வகட்சி மாநாடு கூட்டப்படுவதுண்டு. ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி சிறிய கட்சி ,பெரிய கட்சி என்ற பேதமின்றி நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து ஒரு பொது முடிவை எட்டுவதற்கான ஒரு மகத்தான ஜனநாயக நடைமுறைதான் சர்வகட்சி மாநாடு ஆகும். ஆனால் இலங்கைத் தீவில் சர்வகட்சி மாநாடு எனப்படுவது அவ்வாறான உன்னதமான ஒரு பயிலுகை அல்ல. இலங்கைத்தீவின் மோசமான அரசியல் கலாச்சாரத்தை பொறுத்தவரை, சர்வகட்சி மாநாடு எனப்படுவது ஒரு தப்பி…

  22. சர்வகட்சி அரசாங்கம் எனும் ரணிலின் தந்திர வலை - புருஜோத்தமன் தங்கமயில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் எதிர்க்கட்சிகள் அற்ற ஆட்சியை, நிலைநிறுத்திவிட முடியும் என்று நம்பிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கனவு, எதிர்க்கட்சிகளால் கலைக்கப்பட்டு இருக்கின்றது. நாடு எதிர்கொண்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்துச் செயற்பட வேண்டிய அவசியம் இருப்பதாக, ரணில் தொடர்ந்தும் கூறிவருகிறார். பிரதமர் பதவியில் மஹிந்த ராஜபக்‌ஷ இருந்து விலகியதும், பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட ரணில், பொதுஜன பெரமுன ஆளுமை செலுத்தாத, ஐக்கிய தேசிய கட்சியின் கொள்ளை, கோட்பாடுகள் கொண்ட …

  23. சர்வகட்சி அரசாங்கம் தீர்வைத் தருமா? எம்.எஸ்.எம். ஐயூப் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றைத் தாம் உருவாக்கப் போவதாகவும், அதில் இணையுமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் சகல உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கடிதமும் சர்வகட்சி அரசாங்கம் என்ற எண்ணக்கருவும், இப்போது அரசியல் கட்சிகளுக்கு இடையேயும் அரசியல்வாதிகளுக்கு இடையேயும் பல்வேறு வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், சர்வகட்சி அரசாங்கம் ஒன்றில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக அக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரனை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. ரணில் விக்கிரமசிங்க, சிங்கள மக்களின் து…

  24. சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை தாமதமின்றி ஜனாதிபதி அமைக்கவேண்டும் கலாநிதி ஜெகான் பெரேரா தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தனது வாழ்க்கைக் கஷ்டங்களை வெளிப்படையாக சொல்வதற்கு இந்த முச்சக்கரவண்டி சாரதி கொஞ்சமேனும் தயங்கவில்லை. தனது பெற்றோல்கோட்டாவை பெறுவதற்கு இரு நாட்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கவேண்டியிருந்தது என்று கூறினார். தனது மூன்று பிள்ளைகளுக்கும் தினமும் காலைவேளையில் சிறிய பிஸ்கட் பக்கெட்டுகளையும் பால் பக்கெட்டுக்களையும் வாங்கிக்கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்த அவர் இப்போது செலவுகளைக் குறைக்கவேண்டும் என்பதற்காக அந்த மூவரும் பகிர்ந்து உண்பதற்காக ஒரு பிஸ்கட் பக்கெட்டையே கொடுக்கக்கூடியதாக இருக்கிறது என்று …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.