அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
சீனா- இந்திய உறவுகளை சீர்படுத்துவாரா கோகலே? – சீன ஊடகத்தின் பார்வை சீனாவிற்கான இந்தியாவின் முன்னாள் தூதுவர் விஜய் கோகலேயை இந்தியாவின் புதிய வெளியுறவுச் செயலராக நியமிக்கவுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் 2018ம் ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்துள்ளது. தற்போது இந்திய வெளியுறவுச் செயலராகப் பதவி வகிக்கும் எஸ்.ஜெய்சங்கரின் பதவிக் காலம் ஜனவரி 28ல் முடிவுறவுள்ள நிலையிலேயே இந்திய அரசாங்கம் புதிய வெளிவிவகாரச் செயலராக விஜய் கோக்கலேயை நியமிப்பது தொடர்பாக அறிவித்துள்ளது. வெளியுறவுச் செயலர் என்பது இந்தியாவின் உயர் மட்ட இராஜதந்திரியாவார். இந்தப் பதவியானது சீனாவின் வெளிவிவகார அமைச்சிலுள்ள துணை அமைச்சரின் பதவிக்கு ஒப்பானதாகும். இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் வழமையாக அ…
-
- 0 replies
- 560 views
-
-
தென்னாபிரிக்க மத்தியஸ்தம்: பிரச்சினையை தீர்க்கவா? கால அவகாசத்தைக் கொடுக்கவா? முத்துக்குமார் இந்தியாவும், நோர்வேயும் ஏறிய குதிரையில் தென்னாபிரிக்காவும் ஏறத்தொடங்கியுள்ளது. அரசின் பிரதிநிதிகள் தென்னாபிரிக்கா சென்று வந்த பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தற்போது தென்னாபிரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. கூட்டமைப்பினர் ஜனவரி மாதமளவில் தென்னாபிரிக்கா செல்லவுள்ளனர். தென்னாபிரிக்காவை களத்தில் இறக்கிவிட்டமை அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்தின் இரண்டாவது முயற்சி. முதலில் நோர்வேயைக் களத்தில் இறக்கிவிட்டு தோல்வியடைந்தனர். தற்போது தென்னாபிரிக்காவை களத்தில் இறக்கி சில முயற்சிகளை செய்கின்றனர். இதிலும் வெற்றி கிடைக்கும் என்பதற்கான சமிஞ்ஞைகள் தெரியவில்லை. மேற்குலகத்திற்கும்…
-
- 0 replies
- 560 views
-
-
தமிழரின் ஐக்கியக் கனவு? November 20, 2023 — கருணாகரன் — ‘தமிழ் மக்களுடைய விடுதலைக்கு ஐக்கியம் வேண்டும்’ என்ற குரல் – வலியுறுத்தல் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. கடந்த வாரம் கூட யாழ்ப்பாணத்தில் வடக்குக் கிழக்கு சிவில் சமூகம் என்ற தரப்பினர் முன்னெடுத்த கருத்தரங்கிலும் ஐக்கியத்தின் அவசியத்தைப் பற்றிப் பேசப்பட்டது. இந்த ஐக்கியக் குரலுக்கு ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலிருக்கும். ஆனால், அது உருவாகாத, உருப்படாத சவலையாகவே உள்ளது. மட்டுமல்ல, ஐக்கியத்திற்கு எதிர்நிலையிற்தான் நடைமுறைகள் உள்ளன. அதாவது ஐக்கியத்தை வலியுறுத்துவோரும் சரி, ஐக்கியத்தை உருவாக்க வேண்டிய சக்திகளும் சரி, ஐக்கியப்பட வேண்டிய தரப்பினரும் சரி, ஐக்கியத்துக்கு எதிரானதாகவே செயற…
-
- 0 replies
- 560 views
-
-
வெளியே வந்துள்ள ‘ஹீரோக்கள்’ கே. சஞ்சயன் / 2019 மே 24 வெள்ளிக்கிழமை, மு.ப. 08:16 Comments - 0 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களால் ஏற்பட்ட சூழ்நிலைகள், இரண்டு முக்கியமான விடயங்களைப் பலரது கண்களில் இருந்தும் மறைத்து விட்டன. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பலசேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலை, அதில் ஒன்று. ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், மேஜர் பிரபாத் புலத்வத்த என்ற இராணுவப் புலனாய்வு அதிகாரி, மீண்டும் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பது இன்னொன்று. சாதாரணமானதொரு சூழ்நிலையில் இந்த இரண்டும் நிகழ்ந்திருந்தால், அது ப…
-
- 0 replies
- 560 views
-
-
இந்தியா கையை விரித்தது ஏன்? இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்க்கும் நோக்கத்துடன் முன்னாள் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவும் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் 1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் திகதி கைச்சாத்திட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமொன்றை, இந்தியா கடந்த வாரம் பகிரங்கமாகக் கைவிட்டது; அல்லது முன்னரே கைவிட்டுவிட்டு, கடந்த வாரம் முதன் முறையாக பகிரங்கமாக அதனை ஊரறியச் செய்தது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பான விடயத்தையே இந்தியா கடந்த வாரம் அவ்வாறு பகிரங்கமாக கைகழுவி விட்டது. கடந்த 18 ஆம் திகதி மூன்று ந…
-
- 0 replies
- 560 views
-
-
துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் போர் நடந்தபோது எல்லாளனின் தோல்விக்குக் காரணமானது துட்டகைமுனுவின் கந்துலன் என்ற யானைதான் என்று மகாவம்சம் கூறுகிறது. தமிழரை வென்ற கந்துலன் யானையே எமது சின்னம் என்று தெற்கே சிங்கள இனவாதத்தை தூண்டிவரும் கட்சி ஐ.தே.க யானையை தனது கொடியில் வைத்திருப்பது தமிழரை வென்ற குறியீடே என்பது கவனிக்கத்தக்கது. அமைதிப் பேச்சுக்களை நடாத்தி புலிகளை பிளவு படுத்திய பெருமை தன்னையே சாரும் என்று சொன்னவர் ரணில். இப்படிப்பட்ட இனவாத ஐ.தே.கவை தமிழர் நம்பலாமா என்ற உண்மை வடக்கே மீண்டும் புலப்பட ஆரம்பித்துள்ளது. இரண்டு பெரும்பான்மை கட்சிகளும் தமிழரின் எதிரிகளே என்பதை உணர்ந்து வருகிறார்கள் வடக்கு மக்கள். பலாலி விமானப்படைத் தளத்தின் பாதுகாப்பு முக்கியம் எ…
-
- 0 replies
- 560 views
-
-
வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் செயல் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு அல்லது அதற்கு உயிர்ப்பிப்பதற்கு பல்லின மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டியதும், அவர்களுக்கான உரிமைகளைப் பகிர்ந்தளிப்பதும் அடிப்படையில் அவசியம். அவ்வாறு உரிமைகள் மதிக்கப்படாவிட்டால், அந்த உரிமைகள் பகிர்ந்தளிக்கப்படாவிட்டால், ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட முடியாது. ஜனநாயகத்தை உயிர்ப்பிக்கவும் முடியாது. இந்த வகையில் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநிறுத்தப் போவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் தோல்வியைத் தழுவியிருப்பதாகவே கருத வேண்டி இருக்கின்றது. ஊழல்கள் மலிந்த, சர்வாதிகாரப் போக்கில் சென்ற சி…
-
- 0 replies
- 560 views
-
-
காஷ்மீர் யாருக்கு? செப்டம்பர் 2019 - தோழர் தியாகு · கட்டுரை பண்டித ஜவகர்லால் நேருவின் தனி அடையாளங்களில் ஒன்று அவர் எப்போதும் தன் ஷெர்வானி சட்டையில் குத்தியிருந்த ரோஜாப் பூ. ஒவ்வொரு நாளும் இதற்கென்றே காஷ்மீரிலிருந்து ரோஜாப் பூ வருவதாகச் சொல்லிக் கொள்வார்கள். நேருஜியின் உடைகள் இலண்டனில் சலவை செய்யப்பட்ட செய்திபோல் இந்த காஷ்மீர் ரோஜா கதையும் உண்மையாகவோ பொய்யாகவோ இருக்கலாம், நாமறியோம். ஆனால் நேரு காஷ்மீரிப் பண்டித (பார்ப்பன) வகுப்பில் பிறந்தவர் என்பதும், எப்படியாவது காஷ்மீரை இந்தியாவில் இணைத்துக் கொள்ளத் தனி அக்கறை எடுத்துக் கொண்டவர் என்பதும் மறுக்க முடியாத உண்மைகள். ஆனால் காஷ்மீர் பற்றி ஒவ்வொரு நாளும் வேளாவேளைக்கு நமக்குப் பரிமாறப்படும் செய்திகளில் பொய்…
-
- 0 replies
- 560 views
-
-
சுமந்திரனைக் கொல்ல முயற்சி: என்ன தான் நடக்கும்? - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனைக் கொல்வதற்கு முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தி, அண்மையில் வெளியானது. பல்வேறு மட்டங்களிலும் இது, பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் செய்தியின்படி, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அவர் செல்லும் வழியில், அவரைக் கொல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும், எனினும் இரண்டு தடவைகள் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளிலிருந்து அவர், அதிர்ஷ்டவசமாகத் தப்பிக் கொண்டார் என்று…
-
- 0 replies
- 559 views
-
-
ஜெனீவா பிரேரணை: கடலில் தத்தளிப்பவனுக்கு ஒரு மரக்கட்டை -புருஜோத்தமன் தங்கமயில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான புதிய பிரேரணை செவ்வாய்க்கிழமை (23) நிறைவேற்றப்பட்டது. இலங்கை தொடர்பில், மனித உரிமைகள் பேரவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளை, ராஜபக்ஷ அரசாங்கம் முற்றாக நிராகரித்திருந்த நிலையில், புதிய பிரேரணையை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டும் என்று, இறுதி நேரம் வரையில், தீவிர முயற்சியில் ஈடுபட்டது இலங்கை அரசாங்கம். ஆனாலும், 46/1 என அடையாளப்படுத்தப்படும் புதிய பிரேரணை, 11 மேலதிக வாக்குகளால் நிறைவேறி இருக்கின்றது. மனித உரிமைகள் பேரவையில் அங்கத்துவம் பெற்றுள்ள 47 நாடுகளில், இலங்கை தொடர்பான பிரேரணையைக் கொண்டு வந்த பிரித்தானியா, …
-
- 1 reply
- 559 views
-
-
சிரியாவில் இஸ்ரேலின் மூலோபாயத் தூரநோக்கு Editorial / 2019 ஜனவரி 21 திங்கட்கிழமை, மு.ப. 01:11 Comments - 0 - ஜனகன் முத்துக்குமார் இஸ்ரேலின் அண்மைய சர்வதேச அரசியல், மூலோபாயக் கொள்கைகளைத் தீர்மானிப்பதில் பல நாடுகளின் அரசியல் நகர்வுகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. எனினும், சீனாவின் பொருளாதாரப் போட்டிக்கு அப்பால், இன்றைய இஸ்ரேலின் மூலோபாய கொள்கையில் செல்வாக்குச் செலுத்துகின்ற மிகப்பெரிய விடயம், சிரியாவின் அரசியல்களம் என்பது வெளிப்படையான ஒன்றாகும். குறிப்பாக, சிரியாவில் இஸ்ரேலுக்கான பிரச்சினை ரஷ்யா என்ற போதிலும், அதைத் தாண்டி, உண்மையில் சிரியாவின் அரசியல் நிரலில் இஸ்ரேலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தவல்ல நாடு ஈரான் என்பதை, இஸ்ரேல் வெகுவாகவே புரிந்துகொண…
-
- 0 replies
- 559 views
-
-
தமிழினத்தின் தலைவிதியை தமிழ் மக்கள் பேரவை மாற்றுமா? மு .திருநாவுக்கரசு தலைவனை வரலாறு உருவாக்குகிறது. வரலாற்றை தலைவன் முன்னெடுக்கின்றான். காலத்தை முன்னெடுப்பவனை வரலாறு முன்னுயர்த்தி அவனை அம்மக்களின் குறியீடாக்குகிறது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தைவிடவும் மிகப் பெரிய அரசியல் பேரவலத்திற்கு தமிழ் மக்கள் ஆளாகியுள்ள காலமிது. தோலிருக்க சுளை பிடுங்கும் நுட்பமான அரசியல் அவலத்திற்கு தமிழ் மக்கள் உள்ளாக்கப்படும் காலமிது. கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் இப்படியொரு பாரிய அரசியல் அவலத்திற்கு தமிழ் மக்கள் உள்ளாகியதில்லை. இது ஒரு நூற்றாண்டு காலம் கண்டிராத மொத்த அவலம். முள்ளிவாய்க்கால் ஒரு பேரவலந்தான். அது ஓர் இனப்படுகொலை வாயிலாக இராணுவம் தமிழரை நசுக்கிய அவலம். ஆயினும் மறுவளம…
-
- 0 replies
- 559 views
-
-
முதலமைச்சர் வேட்பாளர் யார்? – அகிலன் April 21, 2021 மாகாண சபைகளுக்கான தேர்தல் எப்போது நடைபெறும் என்பது தொடர்பில் இதுவரையில் அறிவிக்கப்படாத போதிலும், வடக்கு கிழக்கு முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து தமிழ் அரசியல் கட்சிகள் இடையே பெரும் வாக்குவாதங்களும், முரண்பாடுகளும், சர்ச்சைகளும் உருவாகியிருக்கின்றன. தேசியக் கட்சிகளின் செல்வாக்கு அதிகரித்திருக்கும் நிலையில், நடைபெறக்கூடிய மாகாணசபைத் தேர்தல் ஒன்றில் எந்த ஒரு தமிழ் கட்சியும் வடக்கிலோ கிழக்கிலோ அறுதிப் பெரும்பான்மை பெற முடியாது என்ற நிலைமை காணப்படுகின்ற போதிலும், தமிழ் கட்சிகளிடையே முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து பெரும் வாக்குவாதங்களும், முரண்பாடுகளும், சர்ச்சைகளும் உருவாகியிருக்கின்றன. …
-
- 0 replies
- 559 views
-
-
ஜெனிவா தீர்மானத்தின்போது தமிழகத்தின் உணர்வுகளைப் புறக்கணித்து, சிங்கள ஆட்சியாளர்களுக்குச் சார்பாக நடந்து கொண்டதன்மூலம், காங்கிரஸ் கட்சி தமிழகத்துடன் முழுமையான போர் ஒன்றைத் தொடுத்துள்ளது. சிங்கள ஆட்சியாளர்களுக்கு நிகரான ஆக்கிரமிப்பு ஆட்சியொன்றை தமிழகத்தில் நடாத்தும் முயற்சியை காங்கிரஸ் மேற்கொண்டதன் காரணமாகவே, திராவிடக் கட்சியான தி.மு.க. தமிழகத்தின் இனமான உணர்வைத் தட்டி எழுப்பி, தமிழகத்தின் ஆட்சியைத் தனதாக்கியது. பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழகத்தின் முதல்வரானார். அன்றுமுதல், காங்கிரஸ் கட்சி தமிழகத்தைத் தன் எதிரியாகவே பாவித்தது. ஆனாலும், தமிழகத்தில் தன் பிடி முற்றாகத் தளர்ந்துவிடக் கூடாது என்ற சிந்தனையில், நாவில் சிறிது தேனைத் தடவிக்கொண்டது. தமிழகத்தை வீழ்த்தி, அதன்மீத…
-
- 1 reply
- 559 views
-
-
தேர்தல்களின் போது மக்கள் ஏன் ஏமாறுகிறார்கள்? எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 ஜூலை 01 வருகிறது, மற்றொரு தேர்தல். ஆனால், எமக்குத் தெரிந்த காலத்தில் இருந்து, ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாற்றப்பட்டே வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் சில கட்சிகள், முக்கிய சில வாக்குறுதிகளை முன்வைத்து, தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளனவே தவிர, நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆக்கபூர்வமான திட்டமொன்றை முன்வைத்து, எந்தவொரு கட்சியும் ஆட்சியைக் கைப்பற்றியதில்லை. சில சந்தர்ப்பங்களில்,சில கட்சிகள் அளித்த வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்றிய போதிலும், அதன் மூலம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. அதாவது, எந்தவொரு கட்சியும் ஆட்சிக்கு வந்த…
-
- 0 replies
- 559 views
-
-
மே 2009ல் முடிவிற்கு வந்த, சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் வடுக்கள் நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு நகரம் மற்றும் அதன் புறநகர்க் கிராமங்களிலும் இன்னமும் தொடர்கின்றன. 2009 மே 23ல், அதாவது உள்நாட்டு போர் நிறைவுற்று நான்கு நாட்களின் பின்னர் , வீட்டை விட்டுப் புறப்பட்ட பின்னர், இன்னமும் வீடு திரும்பாத தனது கணவரான பத்மசிறியை, 32 வயதான சமூகப் பணியாளரான புண்ணியமூர்த்தி ஜெயதீபா இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறார். மட்டக்களப்பு நகருக்கு வடக்கேயுள்ள கிராமத்தில் இராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையின் போது இவர் காணாமல் போனார். தனது கணவர் வீட்டை விட்டுப் புறப்படும் போது சிவப்பு நிற ரீசேட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் போன்றவற்றை அணிந்திருந்ததாக ஜெயதீபா த…
-
- 0 replies
- 559 views
-
-
இலங்கை தொடர்பான அமெரிக்க இந்திய அணுகுமுறையும் ஈழத் தமிழர்களும் —2009ஆம் ஆண்டு இந்தோ- பசுபிக் பிராந்திய நலன்சார் போட்டியைச் சாதமாகப் பயன்படுத்தி அப்போதைய இலங்கை இராணுவத்தின் பலவீனங்களை அந்த நாடுகளின் இராணுவ உதவிகள், தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, இலங்கை எவ்வாறு ஈழப் போரை இல்லாதொழித்ததோ, அதேபோன்று 2020இல் ஏற்பட்டு இலங்கையின் பொருளாதாரப் பலவீனங்களை இந்தப் புவிசார் அரசியலின் போட்டிகளைப் பயன்படுத்தி இலங்கை மீட்டெடுக்கும் வாய்புகளே உண்டு– -அ.நிக்ஸன் இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு விவகாரத்தில் இலங்கை அரசு அமெரிக்க, இந்திய நலன்களுக்கு ஏற்றவாறு செயற்பட வேண்டுமென்ற ஆழமான கடினமாக பரிந்துரை ஒன்றை இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் முன்வைத்திரு…
-
- 1 reply
- 559 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 559 views
- 1 follower
-
-
தமிழ் அரசுக் கட்சியின் சுழியோட்டம்: கூட்டமைப்பின் சிதைவுக் காலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தன்னுடைய சிதைவுக் காலத்தின் முக்கிய கட்டத்தை அடைந்து நிற்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அகற்றத்துக்குப் பின்னர், தமிழ்த் தேசிய அரசியல் களத்தின் பிரதான 'குறைநிரப்பு' தரப்பாக மக்களினால் தொடர்ந்தும் முன்மொழியப்பட்டு வந்த த.தே.கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கின்ற இன்றைய குழப்பகரமான நிலையும் அதன் போக்கிலான சிதைவும் சிக்கலானதுதான். இப்படியொரு நிலைமை ஏற்படுமென்று மக்கள் எதிர்பார்த்திருந்தாலும், அதனை ஏற்றுக்கொள்வது தொடர்பில் சலிப்படைவார்கள். அது தேவையற்ற நம்பிக்கையீனங்களையும் ஏற்படுத்தும் வல்லமை பெற்றது. தீர்க்கமான அரசியல் முடிவுகளின் அடிப்படையில், கட்டமைக்கப…
-
- 0 replies
- 559 views
-
-
TNA பகிரங்க கோரிக்கை:- யாழ்.மாநகரசபையின் ஆளும் கட்சி உறுப்பினர் விஜயகாந்த் செய்ததாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சியான கூட்டமைப்பு கோரியுள்ளது. இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிiகாயாளர் மாநாட்டில் கூட்டமைப்பின் சார்பில் அதன் மாநகரசபை அங்கத்தவர்களான விந்தன் கனகரட்ணம், பரஞ்சோதி மற்றும் ராஜதேவன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர். கூட்டமைப்பில் அமைய ஊழியர்கள் ஆட்சேர்ப்பு மற்றும்; சுகாதாரத்துறை மேம்பாடென பல மில்லியன் மோசடிகள் இடம்பெற்றுள்ளது. இவற்றின் பின்னணியில் எல்லாம் ஆளும் கட்சி உறுப்பினர் விஜயகாந்த் இருந்ததாக நாம் சந்தேகிக்கின்றோம். ஏனெனில் அவர் தன்னை அமைச்சர் டக்ளஸினது தம்பியென கூறி கட…
-
- 0 replies
- 559 views
-
-
இலங்கையின் இடதுசாரிகளும் பிரதிபலிப்புகளும் சிவப்புக் குறிப்புகள் சுதந்திர இலங்கையின் வயது, 70 ஆண்டுகளை அடைந்துள்ள நிலையில், சுய விமர்சனங்களின்றி, தன்னைத் தானே அது மீளக்கட்டியெழுப்ப முடியாது. சிங்கள - பௌத்த தேசியவாதம், தமிழ்த் தேசியவாதம் என, இரண்டு சக்திகளுக்கு நடுவில் நாம் வாழும் நிலையில், அவ்வாறான சுய விமர்சனத்துக்கான தூண்டல், எங்கிருந்து வரும்? தமிழ் இடதுசாரிகளின் பிரதிபலிப்பான எழுத்துகள் எழுச்சியடைவதைக் கண்டு நான், சிறிய நம்பிக்கையொன்றைக் காண்கிறேன். ஜனநாயக அரசாங்க மாற்றமொன்று, 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பின்னர், பல்வேறான நல்லிணக்க முன்னெடுப்புகள் முன்னெடுக்கப்பட்டாலும், கடந்த காலம் பற்ற…
-
- 0 replies
- 558 views
-
-
மக்கள் தேவையறிந்து தமிழ் தலைமைகள் செயற்பட வேண்டும் Editorial / 2018 ஜூன் 14 வியாழக்கிழமை, மு.ப. 05:10 Comments - 0 -அகரன் நல்லிணக்க செயன்முறையின் வெளிப்படுத்தல்கள், போதியளவில் இல்லை என்ற கருத்து, இலங்கை மீது பரவலாகவே காணப்படும் நிலையில், அண்மைய சம்பவங்கள் சில, அவற்றை மறுதலிக்கும் போக்கைக் காட்டி நிற்கின்றன. தமிழ் அரசியல் தலைமைகள், தமிழ் மக்களைத் தமது அரசியல் செயற்பாட்டால் வெல்ல முடியாத நிலையில், இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச்சாட்டுகளை வைத்தும் ஒருவரையொருவர் புறம்பேசியும் அரசியல் நடத்தலாம் என்ற நிலைப்பாடு ஓங்கியிருக்கையில், தமிழ் மக்களின் எண்ண ஓட்டங்கள் மாறியிருப்பதானது, எதைச் சுட்டிக்காட்ட முனைகின்றது என்பது தொடர்பில், ஆராயப்பட வேண்டிய தேவையுள…
-
- 0 replies
- 558 views
-
-
போருக்கு பிந்திய அரசியல் என்றால் என்ன? December 6, 2022 ~ கருணாகரன் ~ “போருக்குப் பிந்திய அரசியல் என்று சொல்கிறீர்களே! அது என்ன? அதை எப்படி முன்னெடுப்பது?” என்று என்னுடைய கடந்த வாரங்களில் வெளிவந்த கட்டுரைகளைப் படித்தவர்கள் கேட்கின்றனர். இப்படிக் கேள்வி எழுந்திருப்பதே மகிழ்ச்சிக்குரியது. அதாவது சிலராவது சிந்திக்கத் தயாராக உள்ளனர் என்ற மகிழ்ச்சி. அது என்ன என்று பார்க்க முன், வரலாற்றுப் போக்கில் நிகழ்ந்த சில முன்னுதாரணங்களைப் பார்க்க வேண்டும். அரசியற் சரிகளும் தவறுகளும் வரலாற்றைத் தீர்மானிப்பதில் முக்கியமான பங்கை அளிப்பதால் அதைக்குறித்து பார்க்க வேண்டியது அவசியமாகிறது. 1970 இன் அரசியல் தவறு உண்டாக்கிய விளைவு: 1970 களில் அன்றைய தமிழரசுக்கட…
-
- 0 replies
- 558 views
-
-
கூட்டமைப்பு, முன்னணி என்கிற போலி அடையாளங்கள் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 மே 27 தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கட்சிகளாக ஏன் இன்னமும் பதிவு செய்யப்படவில்லை என்கிற கேள்வி, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், கடந்த பத்து ஆண்டுகளாக நீடித்து வருகின்றது. குறிப்பாக, கூட்டமைப்புக்குள் இருக்கும் பங்காளிக் கட்சிகள் ஒன்றோடும் தங்களைப் பொருத்திக் கொள்ள முடியாதோரிடமும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் அடையாளம், தங்களின் மீது என்றைக்கும் விழுந்துவிடக் கூடாது என்று நினைக்கும் முன்னணியின் தொண்டர்களிடம், இந்தக் கேள்வி தொடர்ந்தும் இருக்கின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, 2001ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டாலும், அது முள்ளிவாய்க்கால் முடிவுகள் வரையில்…
-
- 1 reply
- 558 views
-
-
தொடரும் தவறுகள்..! தமிழ் அரசியல் ஓர் இக்கட்டான நிலைமைக்குள் பிரவேசித்திருக்கின்றது. இந்த நிலைமையில் இருந்து அது எவ்வாறு வெளிவரப் போகின்றது என்பதும், பல்வேறு நெருக்கடிகளுக்கும், அரசியல் ரீதியான அச்சுறுத்தல்களுக்கும் ஆளாகியுள்ள தமிழ் மக்களை எவ்வாறு அது வழிநடத்தப் போகின்றது என்பதும் சிந்தனைக்குரியது. நல்லாட்சி அரசாங்கம் வாய்ப்பேச்சில் தனது வீரத்தைக் காட்டியதேயொழிய, காரியத்தில் எதனையும் சாதிக்கவில்லை. எதேச்சதிகாரத்தை ஒழித்துக்கட்டி, ஜனநாயகத்துக்குப் புத்துயிரளித்து, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்போவதாக நல்லாட்சி அரச தலைவர்கள் உறுதியளித்திருந்தனர். ஆனால், காலப் போக்கில் அந்த உறுதிமொழி…
-
- 0 replies
- 558 views
-