அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
இரண்டாம் கட்ட ஆட்டம் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஜனவரி 01 செவ்வாய்க்கிழமை, மு.ப. 08:14 அரசியலரங்கங்களில் கொழுந்து விட்டெரிந்த தீ, இப்போது நீறு பூத்த நெருப்பாக மாறியுள்ளது. ‘ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பிரதமர் பதவியை வழங்க, ஜனாதிபதி இணங்கியதுடன், அரசியல் நெருக்கடி, முடிவுக்கு வந்துவிட்டதாக எண்ணிவிட முடியாது’ என்று, இந்தப் பத்தியில் பதிவு செய்திருந்தோம். அது பொய்த்துப் போகவில்லை. வேறொரு முகத்துடன், அரசியல் நெருக்கடியின் ‘இரண்டாம் கட்ட ஆட்டம்’ ஆரம்பித்திருக்கிறது. ஜனாதிபதியிடம் இருந்த சில அதிகாரங்களை, அரசமைப்பின் 19ஆவது திருத்தம் கழற்றி எடுத்திருக்கிறது என்பது உண்மைதான். அதற்காக, ஜனாதிபதிக்கு இனி ‘எதுவும் முடியாது’ என்று நினைப்பது அப்பிராணித்தனமாக…
-
- 0 replies
- 1.2k views
-
-
என் தோழமை (My Comradery or Camaraderie) - சுப. சோமசுந்தரம் எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து திராவிட இயக்கச் சிந்தனையாளர்களால் பகுத்தறிவு எனும் உளி கொண்டு மொழியுணர்வு எனும் மெருகேற்றி செதுக்கப்பட்டேன் என்று நான் மார்தட்டிக் கொள்ளலாம். நான் சிறுவனாயிருந்த போதே என் இல்லத்தில் நிலவிய ஜனநாயகச் சூழலால் பெரியாரும் அண்ணாவும் என் உயிரிலும் உணர்விலும் கலந்தமை நான் பெற்ற பேறு. அவ்வயதிலேயே எல்லோர்க்கும் இது வாய்ப்பதில்லை. அதன்பின் திராவிட இயக்கத்தில் வந்தவர்களை பெரியாரோடும் அண்ணாவோடும் ஒப்பிட …
-
- 2 replies
- 998 views
- 1 follower
-
-
இந்திய அரசியலுக்கு 2019 எப்படி அமையும்? எம். காசிநாதன் / 2018 டிசெம்பர் 31 திங்கட்கிழமை புத்தாண்டு 2019 நாளை பிறக்கப் போகிறது. இந்தியாவில், புதிய ஆட்சியை மத்தியில் அமைக்க, காங்கிரஸ் கட்சியின் தலைமையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும், இருக்கின்ற ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள, பிரதமராக இருக்கும் நரேந்திரமோடியும் பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் அமித்ஷாவும் ‘பம்பரமாக’ இயங்கத் தொடங்கி விட்டார்கள். காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒரு கூட்டணியும் பா.ஜ.கவுக்குப் பிடிக்காத சில கட்சிகள் ஒருங்கிணைந்து தனிக் கூட்டணியும் (உத்தரபிரதேசத்தில் மாயாவதி, அகிலேஷ் யாதவ், தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ், ஒரிசாவில் நவீன் பட்நாயக்) அமைவதற்கான சாத்தியக்கூறுகளைப் புதுவருடம் …
-
- 0 replies
- 969 views
-
-
தமிழர்களை ஜக்கியப்படுத்திய வன்னி வெள்ளம்- நிலாந்தன் December 30, 2018 வன்னி வெள்ளம் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தியிருப்பதாக தெரிகிறது. சில கிழமைகளுக்கு முன் காஜாப் புயல் வடக்கையும் தாக்கியது. ஆனால் பெரியளவு சேதம் ஏற்படவில்லை. புயல் வரப்போவதையிட்டு துறைசார் அரச திணைக்களங்கள் முன் கூட்டியே எச்சரித்திருந்தன. முகநூலில் யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு புவியியல் விரிவுரையாளர் தொடர்ச்சியாகத் தகவல்களை வழங்கிக்கொண்டிருந்தார். இது தவிர தன்னார்வ அமைப்புக்களும் தனிநபர்களுமாக பெரும்பாலான முகநூல் உலாவிகள் புயலையிட்டு எச்சரித்துக் கொண்டிருந்தார்கள்;. அவ் எச்சரிக்கைகள் அளவுக்கு மிஞ்சிப் போய்விட்டன என்றும் ஒரு விமர்சனம் எழுந்தது. அனாவசியமாகச் சனங்களைப் பீதிக்குள்ளாக…
-
- 0 replies
- 630 views
-
-
அபிவிருத்தி அரசியலும் உரிமை அரசியலும் ஸ்ரீலங்கா அரசியலில் 52 நாட்களாக இடம்பெற்ற குழப்பம் முடிவுக்கு வந்து ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.மு. அரசாங்கம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறது. மூன்றரை வருடமாகத் தொடர்ந்த மைத்திரி – ரணில் தலைமையிலான “நல்லாட்சி” அக்டோபர் 26 இல் முடிவுக்கு வந்தது. மகிந்த ராஜபக்ஷவின் பதவியேற்பு அந்த நல்லாட்சிக்கு முடிவு கட்டியது. இப்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி தனக்குத்தான் உரியது என சம்பந்தன் என்னதான் முரண்டு பிடித்தாலும் கூட ரணில் அரசாங்கத்தில் அவர் ஒரு “பகிரங்கப்படுத்தாத பங்காளி”யாக தான் இருக்கிறார். கூட்டமைப்பின் தலைமை சொல்லக்கூடிய விஷயங்களை செவிமடுத்து செயல்படுத்தும்…
-
- 0 replies
- 669 views
-
-
தலைமைக்கு இதுதான் தகுதியோ? கே. சஞ்சயன் / 2018 டிசெம்பர் 28 வெள்ளிக்கிழமை, மு.ப. 10:04 முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது, “நான் அப்படிக் கூறினேனா” என்று கேட்பது, “அவ்வாறு கூறவேயில்லை” என்று தலையில் அடித்து சத்தியம் செய்வது போன்றன, அரசியல்வாதிகளுக்குப் புதிதான விடயமல்ல. இது அரசியல்வாதிகளின் பொதுமையான குணவியல்பாக மாறியிருக்கிறது. மிகச்சமீபத்தில், இந்தக் குணவியல்புகளை, அப்பட்டமாகவே வெளிக்காட்டியிருப்பவர்கள் இருவர். ஒருவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன; இன்னொருவர் மஹிந்த ராஜபக்ஷ. இரண்டு பேருமே, ஒக்டோபர் 26 ஆட்சிக் கவிழ்ப்புக்கும் அதையடுத்த 51 நாள்கள் நீடித்த குழப்பங்களுக்கும் காரணமானவர்கள். இதனால் தான், இரண்டு பேரினதும் செல்வாக்கு, கடுமையாகச் சரிந…
-
- 0 replies
- 1.1k views
-
-
முஸ்லிம் அரசியல்: மூன்றாவது அணி? மொஹமட் பாதுஷா / 2018 டிசெம்பர் 28 வெள்ளிக்கிழமை, மு.ப. 08:21 மந்திரவாதிகள், பரிகாரிகள் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, ஏதாவதோர் அமானுஷ்ய சக்தியை, தம்மோடு வைத்திருப்பார்கள். இவற்றைத் தீயசக்திகள் என்றும் ஜின்கள் என்றும் அழைப்பதுண்டு. இதற்கொப்பாக, தமக்கு விரும்பியவற்றைச் செய்விப்பதற்காக, பெருந்தேசியமும் வெளிநாடுகளும் கட்டமைப்புகளையும் அணிகளையும் முகவர்களையும் கொண்டிருக்கின்றன. அவ்வாறே, உலகில் உள்ள பல வல்லரசு நாடுகள், தமது அரசியல், இராணுவ, பிராந்திய நலன்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, தாமாகவே அரசியல் கட்சிகளையும் ஆயுதக் குழுக்களையும் செல்வாக்குச் செலுத்தக் கூடிய அணிகளையும் உருவாக்கி, ஊட்டி வளர்ப்பது, இப்போத…
-
- 0 replies
- 666 views
-
-
‘கனிந்துள்ள காலத்தை தமிழ் தலைமைகள் பயன்படுத்த வேண்டும்’ Editorial / 2018 டிசெம்பர் 27 வியாழக்கிழமை, பி.ப. 04:57 Comments - 0 -அகரன் ‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்பது, தமிழ் பழமொழி. இவ்வாறான ஆழமான கருத்துகள், கால ஓட்டத்தில் எம் கண்முன் அதன் அர்த்தத்தைப் பறைசாற்றி நிற்கும் என்பது, அண்மைய அரசியல் களம் உணர்த்தி நிற்கின்றது. அரசியல் என்ற தத்துவார்த்தத்தின் தன்மையைப் புரியாது, அரசியல் அரங்கில் தடம் வைப்பது என்பது கடினமாக இருந்தாலும் கூட, தமது ஆளுமையின் வெளிப்பாட்டினால், அதனை தமக்குச் சாதகமாக்கி அரசியல் செய்வதென்பது ஒரு கலையே. இவ்வாறான ஓர் அரசியல் கலையை, முறையாக இலங்கை செயற்படுத்தியுள்ளதா என்ற கேள்வியே, தற்போது எழுந்துள்ளது. அண்மைய நாள்…
-
- 3 replies
- 1k views
-
-
ட்ரம்பின் சிரிய மீளப்பெறும் உத்தரவு வாஷிங்டனில் அரசியல் கொந்தளிப்பை தூண்டியுள்ளது By Bill Van Auken சிரியாவில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் அனைத்து 2,000 அமெரிக்கத் துருப்புக்களையும் அடுத்த 60 முதல் 100 நாட்களில் மீளப்பெறுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள ஒரு தெளிவான உத்தரவு, பென்டகனிலும், Capitol Hill இல் உள்ள உயர்மட்ட ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரிடமும், அத்துடன் வாஷிங்டனின் நேட்டோ நட்பு நாடுகளிலும் அதிர்ச்சியையும் கூர்மையான எதிர்ப்பையும் தூண்டியுள்ளது. நிர்வாக மற்றும் இராணுவ மூத்த அதிகாரிகள் மூலம் ஊடகங்களுக்கு கசிந்த இந்த மீளப்பெறும் உத்திரவு வெளிப்படையாக தெரிவிப்பதை புதனன்று ட்ரம்ப் அறிவித்த பின்வரும் ஒரு சுருக்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
கூட்டமைப்பின் முடிவு; யாரின் தோல்வி? புருஜோத்தமன் தங்கமயில் / 2018 டிசெம்பர் 27 வியாழக்கிழமை, பி.ப. 01:24 ஒக்டோபர் 26, ஆட்சிக்கவிழ்ப்புச் சதியை உயர்நீதிமன்றம் மைத்திரியினதும், அவரது சட்ட ஆலோசகர்களினதும் முகத்தில் அறைந்து, முடிவுக்குக் கொண்டு வந்திருக்கின்றது. ரணில் மீண்டும் பிரதமராகி இருக்கிறார். 52 நாள்களாக நீடித்த அரசியல் குழப்பம், அரசியல்வாதிகளை மாத்திரமல்ல, ஊடகவியலாளர்களை, நோக்கர்களை, எல்லாவற்றையும் தாண்டி நாட்டு மக்களைப் பெரும் அழுத்தத்துக்குள் தள்ளியிருந்தது. அதனால், உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் ரணிலின் பதவியேற்பையும் நாடு பெருமளவுக்குக் கொண்டாடியது. இலங்கையின் ஜனநாயகமும் நீதித்துறையின் சுயாதீனமும் காப்பாற்றப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்களும்…
-
- 0 replies
- 497 views
-
-
ஒளி ஏற்றும் நாளில் இருள் அகற்றுவார்களா? காரை துர்க்கா / 2018 டிசெம்பர் 27 வியாழக்கிழமை, பி.ப. 01:15 Comments - 0 இன்று நத்தார் தினம். உலக மாந்தரின் பாவஇருள் அகற்றி, புண்ணிய ஒளியேற்ற, உதித்த இயேசுபாலன் பிறப்பை, உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ மக்கள், சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில், பரந்து விரிந்த இந்தப் பூமிப்பந்தில், ஈழத் தமிழ் மக்களும் கௌரவமாகவும் சுயத்தை இழக்காமலும் நிம்மதியாகவும் சமாதானத்துடனும் வாழ, இந்த இயேசுபாலன் பிறப்பு, வழி வகுக்க வேண்டும் என அங்கலாய்க்கின்றனர். ஆனால், ஈழத் தமிழ் மக்கள், தாம் அவாவுறும் அவ்வாறான வாழ்வை நோக்கி, முன்சென்று கொண்டிருக்கிறார்களா, இல்லை, பின்நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்களா என்பது குறித்த…
-
- 0 replies
- 431 views
-
-
1978ல், நிறைவேற்று அதிகார அதிபர் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டபோது, ‘தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் ஒருவர் பைத்தியக்காரராக இருந்தால் என்ன நடக்கும்’என லங்காசமசமாஜக் கட்சியைச் சேர்ந்த என்.எம்.பெரேரா கேள்வியெழுப்பியிருந்தார். சிறிலங்காவில் தற்போதுஅரசியற் குழப்பங்கள் இடம்பெற்றபோது இந்த வினாவானது மீண்டுமொருமுறை நினைவுகூரப்படுகிறது. சிறிலங்காவின் அரசியல் சீர்திருத்தத்தில் ஏற்பட்ட இந்த இடைவெளியானது இன்னமும் நிரப்பப்படவில்லை. அரசியல் சீர்திருத்தத்தில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இப்பிரச்சினைக்கு இவை எவ்விதத்திலும் உதவவில்லை. சிறிலங்காவின் முதலாவது நிறைவேற்று அதிபரான ஜே.ஆர்.ஜெயவர்த்தன முட்டாளல்ல, ஆனால் அவர் மோசமான ஒரு சந்தர்ப்பவாதியாகத் திகழ்ந்துள்ள…
-
- 0 replies
- 496 views
-
-
சுவரில் மோதிய ட்ரம்ப் மெக்சிக்கோ எல்லையோரம் சுவரொன்றைக் கட்டியெழுப்புவதற்கு கங்கணம் கட்டிக்கொண்டுநிற்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பிடிவாதம் காரணமாக அமெரிக்காவின் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சேவைகள் பெருமளவுக்கு ( Government Shutdown) முடங்கிப்போயிருக்கின்றன. அமெரிக்க வரியிறுப்பாளர்களுக்கு 500 கோடி டொலர்களுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தக்கூடிய துடுக்குத்தனமான இந்த சுவர் நிர்மாணத் திட்டத்துக்கான நிதியொதுக்கீட்டையும் பட்ஜெட்டில் உள்ளடக்காவிட்டால் அதில் கைச்சாத்திடுவதற்கு மறுத்ததன் மூலம் காங்கிரஸ் மீது தனது விருப்பத்தைத் திணிப்பதில் ட்ரம்ப் வெற்றிகண்ட போதிலும், செனட் சபையில் அந்த திட்டம் கடும் எதிர்ப்பைச் சந்திக்கவேண்டியிருந்தது.பேச்சுவார்த்தைகள் பயனளிக்கவில…
-
- 0 replies
- 871 views
-
-
இன உருவாக்கமும் தமிழர் சின்னமும் Editorial / 2018 டிசெம்பர் 25 செவ்வாய்க்கிழமை, மு.ப. 04:11 - ஜெரா உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு மனித இனமும், தன்னை அடையாளப்படுத்துகின்ற சின்னங்களையும் குறியீடுகளையும் வைத்திருக்கிறது. அவ்வாறானதொரு சின்னம் அல்லது குறியீடு தெரிவுசெய்யப்படும்போது, அந்த இனத்தவரின் கூட்டு ஆன்மாவும் உளமும் அதில் தாக்கம் செலுத்தக்கூடியவகையில் பார்த்துக்கொள்ளப்படுகின்றது. அதற்குள், குறித்த இனத்தின் வரலாற்று, பண்பாட்டு, ஐதீக நடைமுறைகள் இரண்டறக் கலந்தனவாக இருக்கின்றன. இந்தியர்களுக்கு அசோகச் சக்கரமொன்றும், அமெரிக்கர்களுக்கு ஒரு கழுகும், சீனர்களுக்கு அனல்கக்கும் பறவையும், சிங்களவர்களுக்குச் சிங்கமும், இந்தப் பின்னணியிலேயே நிலைபெற்றுவிட்டன. இந்த…
-
- 0 replies
- 812 views
-
-
அரசியல் நெருக்கடியில் இருந்து பாடம் எதையும் படிக்காத அரசியல் தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது முன்னாள் அரசியல் வைரியான மகிந்த ராஜபக்சவுடன் சேர்ந்து அரங்கேற்ற முயற்சித்த ' அரசியலமைப்புச் சதி' யின் தோல்வியில் இருந்து எமது நாட்டின் அரசியல் வர்க்கம் பெறுமதியான சில படிப்பினைகளைப் பெற்றிருக்கும் என்று எதிர்பார்ப்பை எவராவது கொண்டிருந்தால் புதிய அமைச்சரவையை அமைப்பதற்கு அரசியல் தலைவர்களினால் கடந்தவாரம் கடைப்பிடிக்கப்பட்ட அணுகுமுறைகள் நிச்சயமாக ஏமாற்றத்தையே கொடுத்திருக்கும். தற்போதைக்கு அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 ஆக மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்ற போதிலும், ' தேசிய அரசாங்க ' முயற்சியொன்றின் ஊடாக அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பல்வேறு நகர்வுக…
-
- 0 replies
- 759 views
-
-
தமிழர் ராஜதந்திரம்? - யதீந்திரா ராஜதந்திரம் தொடர்பில் ஒரு பிரபலமான கூற்று உண்டு. அதாவது, ஆயுதம் இல்லாத ராஜதந்திரம் என்பது, இசைக்கருவிகள் இல்லாமல் இசையமைப்பதற்கு ஒப்பானது. ( Diplomacy without arms is like music without instruments) இது 18ம் நூற்றாண்டில், பிரட்றிக் த கிறேட் என்னும் பிரஸ்யன் அரசனால் கூறப்பட்ட வாசகம். பிற்காலத்தில் நெப்போலியன், இந்த வாசகத்திலுள்ள ஆயுதம் என்னும் சொல்லுக்கு பதிலாக பலம் (Force) என்னும் சொல்லை பயன்படுத்தியிருந்தார். அதாவது, ஒரு பலம் இல்லாத ராஜதந்திரம் என்பது இசைக்கருவிகள் இல்லாமல் இசையமைப்பதற்கு ஒப்பானது. இன்றும் உலக ராஜதந்திர அரசியலில் இந்த வாசகம் கவர்ச்சி குன்றாத ஒன்றாகவே இருக்கிறது. இந்தக் கட்டுரையில் நான் வாதிடவுள்ள விடயங்களுக்கும் மேற்பட…
-
- 0 replies
- 1.4k views
-
-
52 நாள் ஆட்சிக் குழப்பத்தின் பின்விளைவுகள் – நிலாந்தன் December 23, 2018 ‘மதம் தத்துவம் ஆகியவற்றில் மட்டுமல்ல சமகால அரசியல் மற்றும் தார்மீக வாழ்விலும் நாங்கள் புதிய அறம் சார் நோக்கு நிலைகளை மீளச் சிந்திக்கவும் மீட்டுப் பார்க்கவும் மீள உருவாக்கவும் வேண்டிய தேவை இருக்கிறது.’ – பேராசிரியர்.மைத்ரீ விக்ரமசிங்க(ரணில் விக்ரமசிங்கவின் துணைவி) 52 நாள் ஆட்சிக் கவிழ்ப்பு நாடகம் முடிவிற்கு வந்துவிட்டது. இதன் விளைவுகளைப் பின்வருமாறு தொகுக்கலாம். முதலாவது விளைவு- மைத்திரியை அது நவீன துக்ளக் மன்னனாக வெளிக்காட்டியிருக்கிறது. இலங்கைத்தீவை இதுவரையிலும் ஆண்ட அனைத்துத் தலைவர்களிலும் அதிகம் பரிகசிக்கப்பட்ட கேவலமாக விமர்சிக்கப்பட்ட ஒரு தலைவராக அவர் காணப்…
-
- 0 replies
- 610 views
-
-
தேசியத்தின் பெயரால் .. பதுக்கப்பட்ட சொத்துக்களும் பதுக்(ங்) கியவர்களும் தேசியத்தின் பெயரால் .. பதுக்கப்பட்ட சொத்துக்களும் பதுக்(ங்) கியவர்களும் தமிழீழ விடுதலைக்காக சேகரிக்கப்பட்ட பொது மக்களின் பணம் மீண்டும் விவாதப் பொருளாக மாறியிருக்கின்றது. தேசியத்தின் பெயரால் சேகரிக்கப்பட்ட பெருந்தொகைப் பணத்திற்கு என்ன நடந்தது என்ற விவாதம் 2009 முதல் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றது. சில வாரங்களுக்கு முன்னர் ரொரன்ரோவில் நடைபெற்ற நாடு கடந்த அரசாங்கத்தின் நிகழ்வின் போது உலகத் தமிழர் அமைப்பின் முன்னாள் தலைவர் ரெஜி அவர்கள் ஊடகவியலாளர் கிருபா கிரிசனுக்கு வழங்கிய நேர்காணலின் போது முக்கியமான சில கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கை அரசியலும் கட்சித்தாவலும் பாராளுமன்றத்தில் கட்சித்தாவல்கள் குறித்து இப்போதெல்லாம் பெருமளவில் பேசப்படுகிறது. கட்சிமாறும் அரசியல்வாதிகள் கடும் கண்டனத்துக்குள்ளாகிறார்கள்.கட்சித்தாவல்களை ஊக்குவிப்பதற்காக பணமாகவும் பொருளாகவும் பெருமளவில் இலஞ்சம் கொடுப்பதை வழக்கமாக்கிவிட்ட இரு பிரதான கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் கூட கட்சித்தால்களை கடுமையாகக் கண்டனம் செய்யும் விசித்திரத்தையும் காண்கிறோம். கட்சிமாறுவது ஒரு பாவம் என்று தாங்கள் கருதுவதாக நாங்கள் நினைக்கவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். கட்சித்தாவல்களினால் பாதிக்கப்படாத கட்சி எதுவும் இலங்கையில் இல்லை. ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய அரசாங்கத்தில் மீண்டும் அமைச்சராகியிருக்கும் ஐ.தே.க. அரசியல்வாதிய…
-
- 0 replies
- 458 views
-
-
கல்முனையின் சுபீட்சம் நோக்கிETHNIC AND VILLAGE BASED TERRITORIAL PROBLEMS OF KLMUNAIV.I.S.JAYAPALAN.கல்முனை மக்கள் கல்முனைக்குடி சாய்ந்த மருது சக மாளிகைக்காடு மற்றும் கல்முனை தமிழ் என பிழவுபட்டே சிந்திக்கிறார்கள்.அவர்கள் கல்முனைக் கூட்டுக் குடும்பத்தில் இருந்து நல்லுறவோடு சுமூகமாகத் தனிக்குடித்தனம் போகும் தங்கள் விருப்பத்தை சந்தேகத்துக்கு இடமின்றி தொடர்ந்தும் தெளிவுபடுத்தி வருகிறார்கள். இப்பிழவுகள் தமிழ் முஸ்லிம் மக்களிடையே மட்டுமன்றி கல்முனைக்குடி சாய்ந்தமருதுஎன முஸ்லிம்களிடையேயும் அரசியல் மோதல்களுக்கும் பிளவுகளுக்கும் காரணமாகி வருகிறது. அடிக்கடி அரசியல் மோதல்களாகவும் உச்சபட்டுகிற இப்பிரச்சினை தொடர்வது கல்முனைக்கு மட்டுமன்றிக் கிழக்கின் எதிர்காலத்துக்கும் நல்ல சகுனமல்ல எ…
-
- 0 replies
- 462 views
-
-
மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை கே. சஞ்சயன் / 2018 டிசெம்பர் 21 வெள்ளிக்கிழமை, மு.ப. 02:34 அங்குமிங்குமாகச் சுற்றிய பிரச்சினை இப்போது, மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவிலேயே வந்து நிற்கிறது. ஒக்டோபர் 26ஆம் திகதிக்கும், டிசெம்பர் 15ஆம் திகதிக்கும் இடையில் அவர், பிரதமரா, இல்லையா என்ற கேள்வி இருந்தது. இப்போது அவர், எதிர்க்கட்சித் தலைவரா, இல்லையா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இத்தோடு மட்டும் நின்று விட்டால் அவருக்கு அதிர்ஷ்டம் தான். ஏனென்றால், அடுத்து இன்னொரு கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கிறது. அது, அவர் நாடாளுமன்ற உறுப்பினரா, இல்லையா என்பது. பிரதமர் பதவிச் சர்ச்சை, நீதிமன்றப் படிகளில் ஏறித்தீர்க்கப்பட்டது போன்ற நிலைமை ஏற்பட்டால், மஹிந்த ராஜபக்ஷவுக்குப…
-
- 1 reply
- 562 views
-
-
Published by Priyatharshan on 2018-12-21 22:21:38 அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.சிரியாவில் நிலைகொண்டிருக்கும் 2000 அமெரிக்க தரைப்படையினரை விரைவாக வாபஸ்பெறுவதற்கான உத்தரவை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த மறுநாள் மேட்டிஸிடமிருந்து இந்த அறிவிப்பு வந்திருக்கிறது. அவரினதும் ஏனைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களினதும் அபிப்பிராயங்களை உதாசீனம் செய்தே படைவாபஸ் தீர்மானத்தை ட்ரம்ப் எடுத்திருக்கிறார்.ஓய்வுபெற்ற நான்கு நட்சத்திர ஜெனரலான மேட்டிஸ் தனது பதவி விலகல் கடிதத்தில், வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் பல விடயங்களில் தனத…
-
- 0 replies
- 623 views
-
-
ஒற்றையாட்சி அரசியல் யாப்பை ஏற்றுக்கொண்ட சம்பந்தன் தற்போது இரு வகையான ஜனநாயகத்தை உணர்கிறார்? ஈழத் தமிழர்களின் தன்னாட்சி அதிகாரத்தை இலங்கைத் தேசியத்துடன் கரைக்கும் முயற்சிக்கு கிடைத்த பயன் ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமர் பதவி உறுதிப்படுத்தப்பட்ட பின்னரான சூழலில் இலங்கையில், கடந்த ஐம்பது நாட்களாக நீடித்த அரசியல் நெருக்கடி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளததாக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் அறிக்கை வெளியிட்டு பெருமைப்பட்டுள்ளன. தமிழரசுக் கட்சி உறுப்பினர் சுமந்திரன். சட்டத்தரணி கனக ஈஸ்வரன் ஆகியோரின் கடும் முயற்சியினால் இலங்கை உயர் நீதிமன்றம் ஜனாதிபதி மைத்திரிபால …
-
- 0 replies
- 556 views
-
-
இது மீண்டும் முகமலர்ச்சிக்கும் கைகுலுக்கலுக்குமான ஒரு தருணம். அசட்டை மனப்பான்மையுடனான பல வருடகால உறவுகளுக்குப் பிறகு, இந்தியாவும் மாலைதீவும் பாரம்பரிய நட்புறவின் நல்லியல்பான தோழமைப் பண்புக்கு திரும்பியிருக்கின்றன.கடந்த அக்டோபரில் எதிர்பாராத வகையிலான தேர்தல் வெற்றியைப் பெற்ற மாலைதீவின் புதிய ஜனாதிபதி இப்ராஹிம் முஹம்மத் சோலீ இவ்வாரம் புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.தனது நாட்டின் " மிக நெருக்கமான நட்பு நாடு " என்று இந்தியாவை அவர் வர்ணித்தாார். ஜனாதிபதி சோலீயின் புதுடில்லி விஜயமும் அறிவிப்புகளும் அவருக்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்த கடுமையான இந்திய எதிர்ப்பாளரான அப்துல்லா யாமீனினால் கடைப்பிடிக்கப்பட்ட உறுதியான சீனச்சார்ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐ.தே.க தான் எமக்கான தீர்வா? Gopikrishna Kanagalingam / 2018 டிசெம்பர் 20 வியாழக்கிழமை, மு.ப. 02:06 இலங்கையில் காணப்பட்டுவந்த அரசியல் நெருக்கடி, மேலோட்டமாகத் தீர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும் இருக்கும்வரை, இப்பிரச்சினை தொடருமென்பது வெளிப்படையாக உள்ள நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள், நிலையானவை என்று அர்த்தப்படுத்த முடியாது. ஏனென்றால், ஐக்கிய தேசியக் கட்சி - ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்து காணப்பட்ட தேசிய அரசாங்கம், சு.கவின் வெளியேற்றத்தால் உடைந்து போனாலும், அவ்வாறு உடைவதற்கு முன்னரே, அவ்வரசாங்கம் மீது அதிகபட்சமான விமர்சனங்கள் காணப்பட்டன. ஒக்டோபர் …
-
- 0 replies
- 429 views
-