அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
கீரைக்கடைக்கும் ஒரு எதிர்க்கடை வேண்டும் என்று சொல்லுகின்ற மரபு ஈழத் தமிழர்களிடம் இருக்கிறது. தமிழ் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் இன்றைக்கு பல்வேறு பின்னடைவுகளும் பலவீனங்களும் பூசி மெழுக முடியாதளவில் தென்படுகின்றன. இதற்கு மாற்றுக் கட்சிகளும் அவைகளால் முன்வைக்கப்படும் சரியான விமர்சனங்களும் இல்லாமையும் காரணமாகும். அத்துடன் இது ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தையும் பாதிக்கின்றது. 2009இற்குப் பின்னரான காலத்தில் ஒற்றுமைக்காகவும் போராளிகளினால் கைகாட்டப்பட்டவர்கள் என்ற காரணத்தினாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக தேர்தல்களில் வெற்றி பெற்று வருகின்றது. அதனால் எதை செய்தாலும் மக்கள் இப்படியே வாக்களிப்பார்கள் என்ற அக் கட்சியின் பொறுப்பின்…
-
- 0 replies
- 519 views
-
-
சம்பந்தனும் ஏமாற்றப்படுவாரா? - யதீந்திரா படம் | ASIAN TRIBUNE தனது காலத்தில் ஒரளவு திருப்திகரமான அரசியல் தீர்வொன்றை காண முடியும் என்பதில் சம்பந்தன் உண்மையிலேயே நம்பிக் கொண்டிருந்தார். தனது அதீத நம்பிக்கையின் விளைவாகவே ஆட்சி மாற்றத்தின் போது கூட எந்தவொரு உடன்பாடுமின்றி ஆட்சி மாற்றத்தை ஆதரித்து நின்றார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது 2016 இல் தீர்வு நிச்சயம் என்று வழமைபோல் மேசைகளில் அடித்து, ஒலிவாங்கி அதிரும் வகையில் கூறிக் கொண்டிருந்தார். ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் வேறு எவரும் அவ்வாறு கூறியிருக்கவில்லை. சம்பந்தனது நடவடிக்கைகளுக்குப் பக்கபலமாக இருந்துவரும் சுமந்திரன் கூட அவ்வாறு எங்குமே கூறியிருக்கவில்லை. ஆனால், …
-
- 0 replies
- 703 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலக்கு என்ன? அவர்களின் பயணம் எப்படிச் செல்லுகின்றது என்பது தொடர்பில் அந்தக் கட்சியில் இருக்கும் சிலரிடையே தெளிந்தவொரு நிலைப்பாடு இல்லாமல் இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு என்ன வாக்குறுதி அளித்தது? 2009இற்குப் பின்னரான கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதனைச் சாதித்தது? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பயணம் எந்தளவுக்கு சாத்தியமளித்தது? இவைகள் பற்றிய பொறுப்பின்றி தமது பதவி இருப்பு குறித்த பதற்றத்தில் உள்ளது கூட்டமைப்பு. அண்மையில் கிளிநொச்சி பளையில் நடந்த நிகழ்வொன்றில் பேசிய, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், அண்மைக்காலத்தில் உருவாகி வரும் கூட்டணி என்பது இலங்கை அரசா…
-
- 0 replies
- 716 views
-
-
[size=4]இலங்கை ஜனாதிபதியின் இந்தப் பயணத்தை அனுமதித்த இந்திய அரசின் செயல், தமிழக மக்களின் உணர்வுகளை படுமோசமான முறையில் அவமானப் படுத்தி விட்டதாக அமைகின்றது. மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில் ஒரு சாதகமான விளைவையும் இந்திய மத்திய அரசைப் பொறுத்தவரையில் பாதகமான விளைவுகளையுமே ஏற்படுத்தியுள்ளது[/size] [size=2] [size=4]இந்தியாவிலுள்ள சாஞ்சியில் நிறுவப்படவுள்ள ஒரு பௌத்த பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாடும் விழாவில் கலந்துகொள்வதற்காக இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கான ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளார். அதேசமயத்தில் இந்தப் பயணத்தின்போது இவர் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.[/size][/size] …
-
- 0 replies
- 716 views
-
-
கொரோனாக் காலத்தில் வன்முறை கொரோனாத் தொற்றினை அடுத்து நாட்டிலே பல்வேறு விதமான வன்முறைச் சம்பவங்கள் தலைதூக்கி வருகின்றன. ஊரடங்கின் போது உணவுப் பொருட்களை வாங்கவும், குடி தண்ணீர் அள்ளவும் சென்ற, தமது அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முற்பட்டவர்களும், பொலிஸாரின் வன்முறைக்கு இலக்காகியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விமர்சனக் கருத்துக்களை முன்வைப்போர் அச்சுறுத்தப்படுகிறார்கள். அல்லது அவர்களுக்கு எதிரான கருத்துக்கள் திட்டமிட்ட முறையிலே பரப்பப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களிலே ஒரு சிலர் தாம் எதிர்கொண்ட வன்முறை குறித்து மனித உரிமை அமைப்புக்களுக்கு முறையிட்டுள்ளதாகவும் சில செய்தி அறிக்கைகளிலே சொல்லப்பட்டுள்ளது. மறுபுறத்தில் பெண்கள், சிறுவர் மீதான வீட்டு வன்முறையும், ச…
-
- 0 replies
- 705 views
-
-
‘நான் கிரிக்கெட் ஆடியமை ராஜதந்திரம்’ – சுமந்திரன் ‘எமது ஆயுத போராட்டம் ராஜதந்திரம்’ – ஜனநாயகப் போராளிகள் தமிழர் அரசியலில் ராஜதந்திரம் என்பதற்கான விளக்கங்கள் தலையைச் சுற்ற வைக்கின்றன. ராஜதந்திரத்தின் குருவான சாணக்கியன் இன்று உயிருடன் இருந்திருந்தால் ஓட்டைச் சிரட்டைக்குள் தண்ணீர் விட்டு அதற்குள் குதித்து உயிரை மாய்த்திருப்பார். ஒரு பிள்ளை பிறந்ததில் இருந்தே வாய்பேசாமிலிருந்தது. நீண்டகாலம் தவமிருந்து பெற்ற இந்தப் பிள்ளையின் வாயிலிருந்து என்றாவது ஒருநாள் அம்மா என்ற வார்த்தை வராதா என ஏங்கித் துடித்துக் கொண்டிருந்தாள் அன்னை. மீண்டும் ஆலயங்கள், தல விருட்சங்கள் எல்லாவற்றையும் சுற்றி வந்தாள். யார் யாரோ சொன்ன விரதங்கள் எல்லாவற்றையும் அனுஷ்டித்தாள். நம்பிக்கையை மட்டும…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறீலங்காவில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத ஒரு பிரச்சனையாக இவ் இனப்பிரச்சனை இருந்து வருகின்றது. காலத்திற்கு காலம் ஆட்சி பீடம் ஏறும் அரசுகளும் இனப்பிரச்சனைக்கான ஒரு தீர்வை பெற்றுத்தருவோம் என்ற பகடையை உருட்டியே அரசியல் சிம்மாசனத்தில் அமர்ந்து பேச்சுவார்த்தைகள், சமாதான ஒப்பந்தங்கள், தெரிவுக்குழுக்கள் என பலவற்றை நிறுவி பல வருடங்களாக உலக நாடுகளையும் பேச்சுக்குச் சென்ற தமிழ் தலைவர்களையும் தமிழக்களையும் ஏமாற்றி வருகின்றமை உலகறிந்த உண்மை. இதனை உலக நாடுகளும் தமிழர்களும் நன்கு உணர்ந்துள்ளனர். ஆனால் நீண்ட காலமாக தமிழர்களின் குருதி படிந்துள்ள இனப்பிரச்சனை தீர்க்கப்படாமல் காலங்கள் வீணடிக்கப்பட்டு, வளர்ந்து வரும் இளைய சமுதாயங்களின் உரிமைகள் ஒடுக்கப்பட்டு, சமுதாயத்தில் இனரீதியான ஒரு ஒ…
-
- 0 replies
- 447 views
-
-
“விடாது குளவி“ ஆனைமலை காடுகளில் தழைத்திருக்கும்ஆங்கிலேயர்களின் தேயிலைத் தோட்டங்களில்அடியுரமாய் இடப்பட்டவை எமது உயிர்கள்...நீங்கள் கதகதப்பாய் உறிஞ்சிக் குடிக்கும்ஒவ்வொரு துளி தேநீரிலும்கலந்திருக்கிறது எமது உதிரம்... - ஆதவன் தீட்சண்யா கவிதா சுப்ரமணியம் தமிழக எழுத்தாளர் ஒருவரால் எழுதப்பட்ட வரிகளே இவை. ஆனால் இந்த வரிகள், தமிழகத்துக்கு மாத்திரமல்லாது, இலங்கையிலுள்ள தேயிலை மலைக்கும் நன்றாகப் பொருந்தும். ஒரு சிலருக்கு, அதிகாலை எழுந்தவுடன், சுடச் சுட ஒரு கப் தேநீர் பருகினால்தான், அன்றைய பொழுது நன்றாக விடியும்…
-
- 0 replies
- 626 views
-
-
மைத்திரிக்கு ஸ்ரீ ல.சு.கட்சியை வெற்றி பெறச்செய்ய முடியுமா? முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை காட்சிப் பொருளாகப் பாவித்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண (பொதுசன முன்னணி) என்ற பெயரில் புதிய கட்சியொன்றை ஆரம்பித்ததை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். கடந்த சனிக்கிழமை அவர் அதற்காக இரண்டு கட்சி அபிவிருத்திக் கூட்டங்களில் கலந்து கொண்டார். இரண்டும் கட்சிக்கு மேலும் அங்கத்தினர்களைச் சேர்த்துக் கொள்வதை நோக்கமாகவே நடத்தப்பட்டது. கடந்த சனிக்கிழமை காலையில் அவர் காலியில் நடைபெற்ற கட்ச…
-
- 0 replies
- 216 views
-
-
தவராசா கலையரசன் | இந்திரன் ரவீந்திரன்
-
- 0 replies
- 581 views
-
-
‘சிலுக்கு’ அரசியல் - முகம்மது தம்பி மரைக்கார் வியாபாரத்துக்கு விளம்பரம் அழகு என்பார்கள். இப்போது அரசியலுக்கும் அது தேவையாகி விட்டது. அரசியல் - வியாபாரமாகி விட்டதால் வந்த வினை இதுவாகும். விளம்பரத்தை நம்பித் தரமற்ற பொருட்களை வாங்கி மக்கள் ஏமாறும் ஆபத்து, அரசியல் விளம்பரத்திலும் எக்கச்சக்கமாய் உள்ளது. உளியை வைத்துக் கொண்டிருப்போர், தமது கையில் உருட்டுக் கட்டை இருப்பதாக அரசியல் விளம்பரம் செய்கிறார்கள். அது கூடப் பரவாயில்லை, ஊசி கூடக் கையில் இல்லாதவர்களும் தாங்கள் உலக்கைகளைச் சுமந்து கொண்டிருப்பதாகக் கூறும் அபத்தங்களும் அரசியல் விளம்பரங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அம்பாறை மாவட்டமும் முஸ்லிம்களும் இலங்கை…
-
- 0 replies
- 746 views
-
-
கிழமைக்கு ஒரு பிரச்சினை: உள்நோக்கம் என்ன? -நிலாந்தன் January 31, 2021 இம்மாதம் 8ஆம் திகதி யாழ் பல்கலைகழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் உடைக்கப்பட்டது. அதற்கடுத்த கிழமை குருந்தூர் மலையில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகளை தமிழ் மக்கள் எதிர்த்தார்கள். அதற்கடுத்த கிழமை அதாவது கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நிலாவரை கிணறுள்ள பகுதியில் தொல்லியல் திணைக்களம் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இடையில் தீவுப்பகுதியில் நில அளவைத் திணைக்களம் படைத்தரப்புக்கு நிலங்களை அளக்க முற்பட்டபோது அதுவும் பிரச்சினையாகியது. இவையாவும் அண்மைக்கால பிரச்சினைகள் குறிப்பாக ஒரு குறுகிய காலகட்டத்திற்குள் நடந்திருக்கும் பிரச்சினைகளை தொகுத்துப் பார்த்தால் என்ன தெரிகிறது…
-
- 0 replies
- 615 views
-
-
ஜெனிவா 2021 – நிலாந்தன்! March 28, 2021 புதிய ஜெனிவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை ராஜதந்திர ரீதியாக இது ஒரு பின்னடைவு. ஆனால் அதற்காக தமிழ் மக்களைபொறுத்தவரையில் இது ஒரு மகத்தான வெற்றி என்று கூற முன்வருவது உண்மையல்ல. அரசாங்கத்துக்கு எதிரானவை எல்லாம் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்பது மிகவும் எளிமையாக்கப்பட்ட தட்டையான ஒரு தர்க்கமே. தீர்மானம் அரசாங்கத்துக்குஎதிரானதுதான். ஆனால் அது தமிழ் மக்களுக்கு மகத்தான வெற்றி அல்ல. ஏனென்றால்தாயகத்திலிருந்து மூன்று தமிழ் தேசியக் கட்சிகளும் குடிமக்கள் சமூகங்களும் பாதிக்கப்பட்ட மக்களின் அமைப்புகளும் சேர்ந்து அனுப்பிய பொதுக்கோரிக்கைக்கு சாதகமான பிரதிபலிப்புகள் புதிய…
-
- 0 replies
- 644 views
-
-
ஆள்வோரின் ஆசைக்கு இரையாகும் கலையும் கலாசாரமும் - கருணாகரன் ஊரே தோரணங்களினாலும் வாழைகளினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வீதிகளில் அலங்கார வளைவுகள். ஒவ்வொரு வீட்டின் முன்பாகவும் நிறைகுடம் வைத்துக் குழுமியிருக்கும் குடும்பங்கள். தெருவிலே ஆடலும் பாடலுமாகக் கலைஞர்கள். பொம்மலாட்டம், குதிரையாட்டம் பார்க்கும் சிறுவர்களின் குதூகலம், கூத்தும் நடனமும், விருதும், விருந்துமாகக் கொண்டாடிக் கழிந்த இரவுப்பொழுது. ராஜாக்களின் (மன்னராட்சி) காலத்தில்தான் இப்படியெல்லாம் இருந்ததாக அறிந்திருக்கிறோம். அது உண்மையா இல்லை, வெறும் கதைதானா என்று தெரியாது. ஆனால், இப்போது நடந்திருப்பது உண்மை. கிளிநொச்சியில் உள்ள மலையாளபுரம் என்ற ஊரிலேய…
-
- 0 replies
- 425 views
-
-
ஈழத் தமிழர் – சீனாவிலிருந்து கற்றுக்கொள்ள முடியுமா? - யதீந்திரா இன்றைய நிலையில் உலக அரசியல் விவாதங்களை ஆக்கிரமித்திருக்கும் பிரதான விடயம் என்ன? சந்தேகமில்லாமல், சீனா என்பதே இதற்கான பதில். சீனாவின் அபார பொருளாதார வளர்சியே இதற்கான காரணமாகும். பொருளாதாரம் வளர்ச்சிடைகின்ற போது, கூடவே இராணுவ ஆற்றலும் அதிகரிக்கும். இன்றைய நிலையில் உலகின் பிரதான சக்தியாக அமெரிக்காகவே இருக்கின்றது. சோவியத் – அமெரிக்க பனிப் போருக்கு பின்னரான உலகத்தில், அமெரிக்காகவே ஒரேயொரு தனிப்பெரும் சக்தியாக இருந்தது. ஆனாலும், அமெரிக்கா முன்னர் இருந்த நிலையில் இப்போது இல்லை. இப்போதும் முதல் இடம் அமெரிக்காவிடம்தான் இருக்கின்றது எனினும், ஒப்பீட்டடிப்படையில் அமெரிக்காவின் உலகளாவிய செல்வாக…
-
- 0 replies
- 715 views
-
-
மூதூரில் நடந்த கொடூரமும் நாமும் இலங்கையின் சுமார் 15 மாவட்டங்களைத் தாக்கியுள்ள வெள்ளம், மண்சரிவுகள் காரணமாக, முழு இலங்கையுமே சோகத்தில் மூழ்ந்திருக்கும் நிலையில், திருகோணமலையின் மூதூர்ப் பகுதியில் இடம்பெற்ற இன்னொரு சோகம், பெருமளவு கவனத்தை ஈர்த்திருக்கவில்லை. பாடசாலை செல்லும் 3 சிறுமிகள், வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர் என்பது தான் அச்செய்தி. கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவத்தில், பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற இந்தச் சிறுமிகளை, பெரியவெளிக் கிராமத்திலுள்ள சிலரே, வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகத் தெரியவருகிறது. இந்தச் சிறுமிகள் அனைவருக்கும், 9 வயதை விடக் குறைவு எனவும் அறிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 382 views
-
-
சூடு கண்ட பூனை என்.கே. அஷோக்பரன் பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதியால் அவசரகால நிலை, 2021 ஓகஸ்ட் 30ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் வழங்கலை உறுதிசெய்யும் காரணத்தின் நிமித்தமாக, அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவசரகால நிலை பிறப்பிப்பு என்பது, ஜனாதிபதியின் கையில் கிட்டத்தட்ட எல்லாம் வல்ல அதிகாரத்தைக் கையளிப்பது போன்றதாகும். இதன் பாதகங்கள் பற்றி, ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண, ஜனாதிபதி சட்டத்தரணியும் எம்.பியுமான எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் நிறையவே, பொதுவௌியில் பதிவு செய்து வருகிறார்கள். இந்த இடத்தில், இரண்டு கேள்விக…
-
- 0 replies
- 485 views
-
-
நேற்றுக்காலை போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்ஷ [04/10/2013] தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனைகாலை உணவுடன் சந்தித்தார். இந்த சந்திப்பின் பின்னர் அங்கு என்ன நடந்தது என்பது பற்றி அறிக்கை எதுவும் வெலியிடப்படவில்லை. ஆனால் சந்திப்பு நடந்தது என கூறப்பட்டது. ராஜபக்ஷ அலுவலகம் இந்த சந்திப்பினை உறுதிப்படுத்தி மஹித - சம்பந்தன் கைகுலுக்கும் படம் ஒன்றினையும் வெளியிட்டது. இதேவேளை இரா சம்பந்தன் அவர்கள் இந்த சந்திப்பு பற்றிக் கூறுகையில் மஹிந்த ராஜபக்ஷவே தன்னை அழைத்ததாக கூறினார். மேலும் பல விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதாக வழமை போன்று மழுப்பியுள்ளார். சம்பந்தன் மஹிந்தருடனான சந்திப்பில் இப்படித்தான் கூறுவார் அதர்கு மேல் கூரமாட்டார் கேட்டால் அது ராஜதந்திரம் எனக்…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
சிறப்புக் கட்டுரை: மீண்டும் தொடங்கிவிட்டதா பனிப்போர் காலம்? மின்னம்பலம்2022-05-02 ராஜன் குறை ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்த பிறகு உலக நாடுகளுக்கு இடையிலான சர்வதேச அரசியல் சூடுபிடித்துள்ளது. இந்த பரபரப்பான உலக அரசியல் சூழலில் இந்தியக் குடியரசுக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைத்துள்ளது. ரஷ்யாவுடன் நேரடியாகப் போரிட முடியாத நிலையில் அமெரிக்க - ஐரோப்பிய நாடுகள் அதற்கு பொருளாதாரத் தடை விதித்துள்ளன. ஏனெனில் உக்ரைனுக்கு ஆதரவாக அந்த நாடுகள் போரில் ஈடுபட்டால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்க மாட்டோம் என ரஷியா அறிவித்துள்ளது. அதனால் உக்ரைனுக்கு மறைமுகமாக ஆயுத உதவிகள் செய்வது மற்றும் பொருளாதாரத் தடைகளின் மூலம் ரஷ்யாவைத் தனிமைப்படுத்துவது ஆகிய முயற்சிகளில் மேற்கத்தி…
-
- 0 replies
- 410 views
-
-
உள்ளூராட்சி தேர்தலில் திடீர் திருப்பம் இந்த மழைக்காலத்திலும் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. ஆரம்பத்தில் அரசாங்கம் எந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்கு பின்வாங்கிய நிலையில், மாகாண சபைத் தேர்தலோ அன்றேல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலோ இப்போதைக்கு நடைபெறாது என்று மக்கள் கருதியிருந்தனர். இந்நிலையில், நாட்டிலுள்ள எல்லா உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஒரே தினத்தில் தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. ஆனால், உள்ளூராட்சி மன்ற எல்லைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், சட்ட ரீதியாக சவாலுக்கு உட்படுத்தப்பட்டமையாலும் எழுத்துப் பிழையாலும் 200 இற்கு மேற்பட்ட சபைகளுக்கு இப்போதைக்கு தேர்தலை நடாத்த முடியாத சூழ்நிலை …
-
- 0 replies
- 331 views
-
-
மத ஸ்தலங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை தேவை - இன, மதங்களுக்கிடையே முறுகலை ஏற்படுத்தி மக்களுக்கிடையே பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. வடக்கு, கிழக்கில் புத்தர் சிலைகளை தமிழர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் வைப்பதும் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் மதஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதும் தெய்வசிலைகள் உடைக்கப்படும் நிகழ்வுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கம் பதவியிலி…
-
- 0 replies
- 268 views
-
-
அரசியலமைப்பு வியாக்கியானமும் அரசியலும் - பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட இலங்கை ஜனாதிபதி தனது பிரதமரை பதவிநீக்கம் செய்துவிட்டு அவரின் இடத்துக்கு இன்னொருவரை நியமித்த நடவடிக்கை முறைமைத்தகுதியே இப்போது நாட்டில் தீவிரமாக விவாதிக்கப்படுகின்ற பெரும் முக்கியத்துவமுடைய ஒரு பிரதான விவகாரமாகும். தனது நடவடிக்கை முற்றுமுழுதாக அரசியலமைப்புக்கு இசைவானதே என்று ஜனாதிபதி உரிமைகோரியிருக்கிறார்.மேலும் அவர் அக்டோபர் 26 அந்த நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்னதாக சட்ட ஆலோசனையைப் பெற்றதாகவும் கூறியிருக்கிறார். பதவிநீக்கப்பட்ட தனது பிரதமரைப் போன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்புச் சட்டத்துடன் பரிச்சயத்தையோ அறிவையோ கொண்டவரல்ல.எனவே அவர் தான் எடுக்க உத்தேசித்த நடவடிக…
-
- 0 replies
- 423 views
-
-
ஜனாதிபதிப் பதவிக்கான தகுதியை இழந்துவிட்டார் சிறிசேன Editorial / 2018 நவம்பர் 08 வியாழக்கிழமை, மு.ப. 10:10 - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா சில ஆண்டுகளுக்கு முன்னர், ஏன் சில வாரங்களுக்கு முன்னர் கூட, இந்த விடயத்தைச் சொல்லியிருந்தால், அதைச் சொல்பவரின் மனநிலை, உளத்தகுதி, அரசியல் அறிவு போன்றவற்றையெல்லாம் கேள்விக்குட்படுத்தியிருப்பார்கள். ஆனால், இதை உறுதியாகச் சொல்வதற்கான தேவை எழுந்திருக்கிறது: ஜனாதிபதியாகப் பதவி வகிப்பதற்கான தகுதியை, மைத்திரிபால சிறிசேன இழந்துவிட்டார் என்பது தான் அது. இதைப் பற்றி நேரடியாகப் பார்ப்பதற்கு முன்னர், 2015ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அரசியல் மாற்றத்தைப் பற்றிப் பார்ப்பது அவசியமானது. குறிப்பாக, அப்போது உருவாக்கப்பட்ட தேசிய அரசாங்க…
-
- 0 replies
- 564 views
-
-
இலங்கை வலியுறுத்திய நிலைப்பாடு ஒன்றுக்காக, ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கின்றது என்றால், அதை நம்ப முடியுமா? நம்பித்தான் ஆகவேண்டும். ஜனாதிபதி ரணில், மீண்டும் மீண்டும் வலியுறுத்திய சித்தாந்தங்களும் தீர்வுத் திட்டங்களும்தான் ஐ.நா.வில் இன்றைய அரசியலும், பேசுபொருளும், விவாதப் புள்ளியும், எல்லாமும். இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையிலான மோதல்கள் முற்றாகமுடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, அங்கு நிரந்தர அமைதியும் ஆக்கிரமிப்புகளும் தவிர்க்கப்பட வேண்டுமாயின், இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் என்ற இருநாடுகள் மலரவேண்டும் என்று அண்மையில் வலியுறுத்தியிருந்தார் ஜனாதிபதி ரணில். 'சுதந்திர பலஸ்தீனம்' மலர்ந்தால் பலஸ் தீனத்துக்கு என தனி இராணுவம் தோற்றம் பெறும். பலஸ்தீன…
-
- 0 replies
- 426 views
-