Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. மக்கள் போராட்டத்தின் புதிய குறியீடு: ‘மஞ்சள் மேற்சட்டை’ தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2018 டிசெம்பர் 20 வியாழக்கிழமை, மு.ப. 01:39Comments - 0 மக்கள் வீதிக்கு இறங்குவது இயல்பானதல்ல. ஆனால், வீதிக்கு இறங்கியவர்களை ஏமாற்றுவதும் என்றென்றைக்குமானதல்ல. அரசாங்கங்களுக்கெதிரான மக்களின் அதிருப்தியும் வெறுப்பும் கடந்த ஒரு தசாப்த காலமாகத் தொடர்ச்சியாக அதிகரித்து வந்துள்ளன. குறிப்பாக, நவதாராளவாதத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் நாடுகளில், இதன் தாக்கம் அதிகமாக இருந்து வந்துள்ளது. இந்தக் கோபத்தின் வெளிப்பாடுகள், இப்போது, ஐரோப்பாவின் பெரிய தேசங்களில் இருந்து வெளிப்படும் போது, அவை இன்னொரு பரிமாணத்தை எட்டுகின்றன. மக்களின் புதிய போராட்டங்களுக்கு, உந்துகோலாக …

  2. பிரதமராக ஐந்தாவது தடவை ; ரணிலுக்கான ஒரு நிகழ்ச்சித் திட்டம் ஹரிம் பீரிஸ் இலங்கையின் பிரதமராக ஐந்தாவது தடவையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றிருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் நீண்டகாலத் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் சாதனையை நாட்டின் வேறு எந்தவொரு அரசியல்வாதியும் அண்மைய எதிர்காலத்தில் முறியடிப்பது சாத்தியமில்லை. சில தடவைகள் பிரதமர் என்ற வகையில் அவரது பதவிக்காலம் மிகக்குறுகியதாக இருந்திருக்கிறது. 2015 ஜனவரி தொடக்கம் ஆகஸ்ட் வரையான 7 மாதங்களே அவர் பிரதமர் பதவியை குறுகிய காலகட்டமாகும்.அது அவர் மூன்றாவது தடவையாக அப்பதவியை வகித்த சந்தர்ப்பமாகும். ஆனால், இலங்கையில் மிகமிக குறுகிய காலத்துக்கு பிரதமர் பதவியில் இருந்த " சாதனையாளர் "என்றால் அது நிச்ச…

  3. கஜனின் தூய்மைவாதமும் பேரவையின் தவறும் புருஜோத்தமன் தங்கமயில் / 2018 டிசெம்பர் 19 புதன்கிழமை, மு.ப. 02:09Comments - 0 விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியைப் பலப்படுத்தும் ஒற்றைச் சிந்தனையோடு, யாழ். மய்யவாத அரசியல் அரங்கு அண்மைய நாள்களில் இயங்கி வருகிறது. தொடர்ந்தும், தூய்மைவாதம் பேசிவரும் கஜேந்திரகுமாரும், அவரது விசுவாசிகளும் புதிய கூட்டணிக்குள் தம்மை இணைப்பது தொடர்பில் நிபந்தனைகளை விதித்து வருகிறார்கள். இது, கூட்டணியை உருவாக்குவதற்காக உழைக்கும் தமிழ் மக்கள் பேரவைக்கு, நெருக்கடியை வழங்கியிருக்கின்றது. யாழ். பல்கலைக்கழகத்திலும் யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளிலும் அண்மைய நாள்களில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல்களுக்குச் சூட்டப்பட்ட தலைப்…

  4. போர்க்கப்பல் கொடுத்து ரணிலை வீழ்த்திய அமெரிக்கா! தோற்றுப்போன சீனா? Report us Suresh Tharma 7 hours ago இலங்கையில் தற்போதைய நிலை குறித்த இந்தப் பதிவிற்குள் உறைந்திருக்கின்ற பல உண்மைகள் காலம் கடந்துமே வெளிவர முடியாதவை. அந்தளவிற்கு இப்போது நடைபெற்ற அரசியல் களேபரங்கள் சர்வதேச அரசியலுடன் பிற நாடுகளின் நலன்களிற்கான ஒரு முயற்சியாகப் பின்னிப் பிணைந்துள்ளது. சீனாவும் அமெரிக்காவும் தேர்வு செய்துள்ள பல இடங்களில் இலங்கை தற்போது மையமாக மாறியுள்ளதே இதற்கான காரணமாகும். சர்வதேசம் பற்றிய தெளிவைப் பெறுவதற்கு முன்பாக நாங்கள் அனைவரும் ஒரு விடயத்தை மனதார ஏற்றுக் கொள்ள வேண்டும். இலங்கை சீனாவிடம் முற்றுமுழுதாகச் சிக்குண்டுள்ளது. …

  5. பேரவை வேறு தமிழ் மக்கள் கூட்டணி வேறா? நிலாந்தன் December 16, 2018 கடந்த நொவெம்பர் மாதம் பதினொராம் திகதி யாழ்ப்பாணம் டேவிற் வீதியில் உள்ள கலைக்கோட்ட மண்டபத்தில் ஒரு சிறப்புக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ் சிவில் சமூக அமையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில் தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களும் தமிழ் மக்களும் என்ற தலைப்பின் கீழ் கருத்துக்கள் பகிரப்பட்டன. தமிழ் மக்களுக்கு இப்போதுள்ள சாத்தியமான வழியாகத் தெரிவது பிரதிநிதித்துவ ஜனநாயக வழிமுறைதான். இந்த வழிமுறையில் தமிழ் மக்கள் தமது பேரத்தை உச்சமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பேர அரசியலை முன்னெடுக்கவல்ல தமிழ்ப் பிரதிநிதிகள்; ஆகக் கூடிய பட்சம் திரட்டப்பட்டு ஒரு கொத்தாகச…

  6. மாற்றுத் தலைமை ஒன்றிற்கான உரையாடல்கள் எப்போது முடிவுக்கு வரும்? யதீந்திரா கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்த உரையாடல் ஒரு முடிவற்று நீண்டு செல்கிறது. இதனை இனியும் தொடர அனுமதிக்கலாமா என்னும் கேள்வி பலரிடமும் உண்டு. அவ்வாறானவர்கள் அனைவரும் தமிழ் மக்களுக்கு ஒரு ஜக்கிய முன்னணி அவசியம் என்பதை உணர்ந்தவர்கள். அதற்காக பல்வேறு வழிகளிலும் உழைத்தவர்கள். இப்போதும் உழைத்துக் கொண்டிருப்பவர்கள். அவ்வாறானவர்களுடன் பேசுகின்ற போது, அவர்கள் அனைவரும் ஒரு விடயத்தை கூறுகின்றனர். இதற்கு மேலும் யார் தூய்மையானவர் என்னும் விவாதம் தேவையற்றது. இதற்கு மேலும் இந்த விவாதம் நீண்டு செல்லுமாக இருந்தால், அது நிச்சயமாக விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாகவுள்ள மாற்றுத் தலைமையை பலவீனப்படுத்தும். ஒரு வ…

  7. மீண்டும் எழுந்த முஸ்லிம் கலாசார உடைகள் தொடர்பான விவாதம் - வ.ஐ.ச.ஜெயபாலன் . இலங்கையில் குறிப்பாக கிழக்கு பாடசாலை அலுவகங்களில் முஸ்லிம் பெண்கள் அணியும் உடைகள் தொடர்பான விவாதம் மீண்டும் எழுந்துள்ளது. இதுபற்றி என்னிடம் கேட்க்கபட்டபோது என் கருத்தை உறுதியாக முன் வைத்தேன். . ஒரு பெண் நிர்பந்திக்கபடாமல் சொந்த விருபத்தின்பேரில் முக அடையாளத்தை மறைக்காமல் அணியும் ஆடையைச் சிலர் கேழ்விக்குரித்தாக்குவதை அனுமதிக்க முடியாது. அதேபோல மாற்று மதத்தவர்களின் உடைகளை காமத்தை தூண்டுவது என வக்கிரமாகச் சிலர் குறிப்பிடுவதையும் அனுமதிக்க முடியாது. . எங்கள் இளமையில் சேலை முக்காடு என முஸ்லிம்களின் கலாசார உடைகள் ஒருபோதும் கேழ்விக்குள்ளானதில்லை. 1980 பதுகளின் பின்னர் முஸ்லிம்கள் அரபிய வ…

    • 8 replies
    • 1.1k views
  8. கூட்டமைப்புக்கு கைகொடுக்குமா ஐ.தே.க? கே. சஞ்சயன் / 2018 டிசெம்பர் 14 வெள்ளிக்கிழமை, மு.ப. 04:38 Comments - 0 ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உள்ளதென நிரூபிக்கும் வகையில், நிறைவேற்றப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளித்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்த விவகாரமும், அதுசார்ந்து நடத்தப்பட்ட பேச்சுகளும் இணக்கப்பாடுகளும், இப்போது பரவலாக விவாதிக்கப்படும் விடயமாக மாறியிருக்கிறது. இதை அரசியலாக்குவதில், கூட்டமைப்பின் போட்டியாளர்களும், ஐ.தே.கவின் அரசியல் எதிரிகளும், முனைப்புக் காட்டி வருவதால், இந்த விவகாரம், இன்னும் ச…

  9. இழுபறிகளை முடிவுக்கு கொண்டுவருமா தீர்ப்பு? மொஹமட் பாதுஷா / 2018 டிசெம்பர் 13 வியாழக்கிழமை, மு.ப. 05:17 Comments - 0 என்ன வைத்தியம் பார்த்தும், நாட்டைப் பீடித்துள்ள அதிகாரப் பைத்தியம் தீர்ந்தபாடில்லை. பிரதான கட்சிகள் ‘பிளான் ஏ,’ ‘பீ’, ‘சி’ என, ஒவ்வொரு திட்டமாக அடுத்தடுத்து நகர்த்திக் கொண்டிருப்பதால் சிக்கல்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதையே காண முடிகின்றது. ‘இதோ, இன்று முடிந்து விடும்’, ‘இதோ, நாளை வருகின்ற நீதிமன்றத் தீர்ப்புடன், எல்லாம் சரியாகி விடும்’, ‘இந்த வெள்ளிக்கிழமை ஒரு முடிவு கிடைத்துவிடும்’ என்று நினைத்துக் கொண்டே, ஒன்றரை மாதங்கள் சென்றுவிட்டன. இந்நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக நவம்பர் எட்டாம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட …

  10. கட் அவுட்களில் பீய்ச்சியடிக்கும் பாலில் பொங்குகிறது ஆன்மீக அரசியல் ! சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வந்திருக்கிறது. மிகப்பெரிய பட்ஜெட் படம் என்று விளம்பரங்களில் கூவிக் கொண்டிருந்தாலும் இப்படத்தின் வழியாக சில சர்ச்சைகள் கிளம்பியிருக்கின்றன. அது என்ன சர்ச்சை? அதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு தமிழகத்தை பெரும் பாதிப்புக்குள்ளாக்கி இருக்கும் கஜா புயல் பாதிப்புகள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். அதன் பின்பு சர்ச்சைக்குள்ளான ரஜினி ரசிகர்கள் குறித்துப் பேசுவோம். கடந்த நவம்பர் 15 ஆம் தேதி கஜா புயலினால் ஏழு மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. இந்தப் புயலால் பலர் மரணமடைந்திருக்கின்றனர். ஏ…

  11. சிறிசேனவை நீக்குதல் பொருத்தமானதா? Gopikrishna Kanagalingam / 2018 டிசெம்பர் 13 வியாழக்கிழமை, மு.ப. 01:17Comments - 0 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய நடவடிக்கைகளுக்கு மத்தியில், பெருங்குற்றப் பிரேரணை அல்லது impeachment தொடர்பாக, பரவலாகக் கலந்துரையாடப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இப்படியான உரையாடல்கள், ஆச்சரியமளிப்பனவாக இல்லை. ஜனாதிபதி சிறிசேனவுக்கு, சந்தேகத்தின் பலனை வழங்கியவர்களைக் கூட, எதிரானவர்களாக மாற்றுமளவுக்கு, ஜனாதிபதியின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. ஆனால், ஜனாதிபதியை அவ்வாறு பதவி நீக்குவது, பொருத்தமானதா, சரியானதா என்ற கேள்விகளும் எழுவதைக் காணக்கூடியதாக உள்ளது. ஜனாதிபதி சிறிசேன மீதான விமர்சனங்களில் அத்தனை நியாயப்பாடுகள் இருந்தால…

  12. சலிப்படைய வைத்துத் தோற்கடிக்கும் மைத்திரி புருஜோத்தமன் தங்கமயில் / 2018 டிசெம்பர் 12 புதன்கிழமை, மு.ப. 01:23Comments - 0 “நாட்டு நடப்பைப் பார்க்கும் போது சலிப்பு வலுகிறது. மைத்திரியும் ரணிலும் மஹிந்தவும், தங்களுக்கிடையில் நிகழ்த்திக் கொண்டிருக்கும் ‘அரசியல் ஆடுபுலி’ ஆட்டத்தால், எல்லோரையும் சலிப்படைய வைக்கிறார்கள்” என்று, மனோ கணேசன் கூறியிருக்கிறார். நாடாளுமன்றத்துக்குள்ளும், நீதிமன்றத்துக்குள்ளும், பொது வெளியிலும் ஜனநாயக உரிமைகளை மீட்டெடுப்பதற்காகத் தொடர்ச்சியாகப் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ஒருவரே, முடிவின்றித் தொடரும் அரசியல் குழப்பத்தால் சலிப்படைய ஆரம்பித்துவிட்டார் என்றால், சாதாரண மக்களின் நிலை எப்படியிருக்கும்? ஜனநாயக அடிப்படைகளில், ‘தா…

  13. அரசியல் நெருக்கடியும் தமிழர்களும் எம்.எஸ்.எம். ஐயூப் / 2018 டிசெம்பர் 12 புதன்கிழமை, மு.ப. 02:31 Comments - 0 தற்போதைய அரசியல், அரசமைப்பு நெருக்கடியால், தமிழ் அரசியலிலும் தமிழ் ஊடகத்துறையிலும் பாரியதொரு மாற்றம் ஏற்பட்டு இருப்பதை அவதானிக்க முடிகிறது. தமிழ் அரசியலும் ஊடகத்துறையும், இனப்பிரச்சினை என்ற கூண்டிலிருந்து வெளியே வந்து, தேசிய அரசியலைத் தமது பிரதான களமாக மாற்றிக் கொண்டு இருப்பதே, அந்த மாற்றமாகும். உதாரணமாக, கடந்த வெள்ளிக்கிழமை வெளியான பிரதான இரண்டு தமிழ்ப் பத்திரிகைகளில், இனப்பிரச்சினை தொடர்பான இரண்டு செய்திகள் வீதம், நான்கு செய்திகள் மட்டுமே பிரசுரமாகியிருந்தன. இந்த அரசியல் நெருக்கடிக்கு முன்னர், தமிழ்ப் பத்திரிகைகளில், தேசியச்…

  14. யார் விரும்புகிற ஒருவர் பிரதமராக நியமிக்கப்படவேண்டியவர் என்கிற சர்ச்சை இப்போது தலைதூக்கியுள்ளது. பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றவரா அல்லது ஜனாதிபதியின் விருப்பைப் பெற்றவரா என்பதை சட்ட ஆராய்ச்சிக்கு உட்படுத்துமளவுக்கு பூதாகரமாகியுள்ளது இந்தப் பிரச்சினை. இந்த சர்ச்சையை உருவாக்கியிருப்பவர் ஜனாதிபதி. தான் விரும்பிய ஒருவரைத் தான் நியமிப்பேன் என்றும் அது அரசிலமைப்பின்படி சரியானதே என்றும் வாதிடுகிறார். இதே மைத்திரிபால 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகாவால் பிரதமராக முன்மொழியப்பட்ட கதிர்காமரை நியமிக்கவிடாமல் மகிந்தவுக்குத்தான் பாராளுமன்றத்தில் ஆதரவு அதிகம் என்று வாதிட்டு மகிந்தவை பிரதமராக்க காரணமாக இருந்தவர். கதிர்காமர் போன்ற “தமிழர்களுக்கு” வரலாற்றில் நேர்ந்த கதியை நாம…

  15. சம்பந்தன், விக்னேஸ்வரன் இணைத்தலைமை காலத்தின் தேவை Editorial / 2018 டிசெம்பர் 11 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:16 Comments - 0 கடந்த முதலாம் திகதி சனிக்கிழமை, கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் காலை 11.50 மணிக்கு, யாழ். நோக்கிச் செல்லும் ரயிலில் ஏறிக் கொள்வதற்காக, சனத்திரள் கூடியிருந்தது. குறித்த நேரத்தில் ரயில் கிளம்பியது. எமது பயணம், இரண்டாம் வகுப்புப் பெட்டியில் தொடர்ந்தது. அதில், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் தனது இரண்டு பாதுகாவலர்களுடன் பயணித்தார். எமக்கு அருகில் இருந்த, 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், விக்னேஸ்வரனுடன் கதைக்க வேண்டும் என ஆசைப்பட்டார். அது போலவே, கதைத்தும் விட்டார். விக்னேஸ்வரனுடன், அந்த நபர் என்ன கதைத்தார் …

  16. பெண்களின் அரசியல் பிரதிநித்துவம் உலக நாடுகள் முழுவதிலும் ஜனநாயக ஆட்சியை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டபோதே பிரதிநிதித்துவ அரசியலின் இன்றியமையாத தன்மை உணரப்பட்டுவிட்டது. மக்களாட்சி முறையின் கீழ் நாட்டின் ஆட்சி அதிகாரமானது சட்ட ரீதியாக குறிப்பிட்ட சில வகுப்பினரிடம் அல்லது ஓர் அமைப்பினரிடமோ இருப்பதில்லை. அது சமூகத்திலுள்ள சகல அங்கத்தவர்களிடமும் இருக்கின்றது. பண்டைய கிரேக்க நகர அரசுகள் போல நவீன அரசுகளில் மக்கள் நேரடியாக ஆட்சியில் பங்குபெற்றுவது என்பது சாத்தியமற்றதான நிலையில் அவர்கள் தமது பிரதிநிதிகளை தெரிவுசெய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. அவ்வாறு தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் தமது மக்கள் சார்பாக நாட்டின் நிர்வாக நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். இதனாலேயே …

  17. விக்கினேஸ்வரனின் கூட்டணி – சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்? நிலாந்தன் December 9, 2018 வவுனியாவில் இடம்பெற்ற எழுநீ விருது வழங்கும் விழாவில் உரை நிகழ்த்திய விக்கினேஸ்வரன் சிவசக்தி ஆனந்தனைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். ரணில்-மைத்திரி அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட பின் நிகழ்ந்த பேரங்களில் சிவசக்தி ஆனந்தனோடு நிகழ்ந்த உரையாடல் என்று சொல்லப்படும் ஒலிப்பதிவு ஒன்று வெளிவந்தது. இவ்வொலிப்பதிவை முன்வைத்து கஜன் அணி ஆனந்தன் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளது. ஆனால் அது பகிடியாகக் கதைக்கப்பட்ட ஓர் உரையாடலின் பதிவென்று ஆனந்தன் பின்னர் தெரிவித்திருந்தார். எழுநீ உரையில் விக்கினேஸ்வரனும் அதை ஒரு பகிடியாக ஏற்றுக் கொண்டு பேசியிருக்கிறார். இதுவிடயத்தில் வி…

  18. அதிகார மோதலால் மக்களுக்கு என்ன இலாபம்? -இதயச்சந்திரன் இலங்கையில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற, எவ்வளவு போராட்டங்கள். இதுவே ‘இலங்கை அரசியலின் அதியுன்னத அறம்சார்ந்த போராட்டம்’ என வரலாற்றில் எழுதிவிடுவார்கள் போல் தோன்றுகிறது. இவர்கள், அதிகார மோதல் பற்றி விலாவாரியாகப் பேசுகிறார்கள். அரசியல் யாப்பிலுள்ள சரத்துக்களின் உப பிரிவுகள் உட்பிரிவுகள் குறித்தெல்லாம் ஆழமாகவும் அகலமாகவும் பேசுகிறார்கள். நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமையைக் கொண்டு வந்த கட்சி இப்போது படும்பாடு சொல்லி மாளாது. இந்த அதிபர் முறைமையானது, நாடாளுமன்றின் அதிகாரத்தை மட்டுப்படுத்தும் ஏக போக உரிமையைக் கொண்டது என்பதனை ஜெயவர்தனாவும் அறிவார் ரணிலும் புரிந்து கொள்வார். தாங்கள் உ…

  19. கொழும்பு நெருக்கடி யதீந்திரா புகழ்பெற்ற ரஸ்ய எழுத்தாளர் தாஸ்தோவெஸ்கி (Fyodor Dostoyevsky) தனது குற்றமும் தண்டனையும் என்னும் நாவலில் எடுத்தாளும் ஒரு கூற்று, பத்திரிகையியலில் பிரதானமாக எடுத்தாளப்படுவதுண்டு. அதாவது, பிழையான விடயங்களை செய்பவர்கள் என்று நாம் கருதுபவர்களை கண்டிப்பது மிகவும் இலகுவானது ஆனால்; அவர்களை விளங்கிக்கொள்வது மிகவும் சவாலானது. இன்று கொழும்பில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையைக்கு காரணமானவர்கள் என்று நமது பார்வையில் அகப்படுபவர்களை கண்டிப்பது மிகவும் இலகுவானது. அதனை எவரும் செய்யலாம் ஆனால் அவ்வாறானவர்களை விளங்கிக்கொள்வதும் அவர்களை இயக்கும் அரசியல் பின்னணிகளை விளங்கிக் கொள்வது மிகவும் சவாலானது. இன்று நடைபெறும் அனைத்து பிரச்சினைகளுக்குமான காரணம் ய…

  20. “மகாவம்சம்” மூல நூல் இலங்கையின் பண்டைய இதிகாசம் தொடக்கம் கி.பி 301 வரையான மாகாசேனன் மன்னரின் காலப்பகுதிவரை மகாநாம தேரரால் எழுதப்பட்டது. அது; முதல் 36 அத்தியாங்களைக் கொண்டது. 37வது அத்தியாயத்தை அவர் எழுதிக்கொண்டிருக்கும் மகாநாம தேரர் போது மரணமாகிவிட்டார். அது 50 செய்யுள்களைக் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் “அத்தியாயம் நிறைவுற்றது” என்று குறிப்பிட்ட அவர் 37வது அத்தியாயத்தில் அப்படி குறிப்பிடாததால் அவர் அந்த அத்தியாயத்தை முடிக்கவில்லை என்றும் தொடரவிருந்தார் என்றும் பல ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றன. 2வது தொகுதி 2வது தொகுதி கி.பி 301 முதல் கி.பி 1815 வரையான ஆங்கிலேயரின் முழுக் கட்டுப்பாட்டில் வரும் வரையான காலப்பகுதியைப் பதிவு செய்க…

  21. இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்கு வந்திருக்கும் ஆபத்து - முஹம்மத் அயூப் இந்தியா அதன் மதசார்பற்ற ஜனநாயகத்தின் எதிர்காலம் இடருக்குள்ளாகியிருக்கும் நிலையில், நெருக்கடிமிக்க திருப்பக்கட்டத்தில் நிற்கிறது. முக்கியமான ஐந்து மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்கள் பூர்த்தியடையும் வெவ்வேறு கட்டங்களில் இருக்கும் அதேவேளை, அடுத்த வருடம் பொதுத்தேர்தலும் நடைபெறவிருக்கும் நிலையில் அரசியல் சூடு கொதிநிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது.போட்டி போட்டுக்கொண்டு இந்துத்வா அரசியல் பேசுவது முக்கியமாக அவதானிக்கக்கூடிய செயற்பாடாகியிருக்கிறது. வெளிவேடத்துக்கு மதசார்பற்றதாக இருக்கின்ற காங்கிரஸ் கட்சி இந்துவாத பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுத்தளத்திற்குள் ஊடுருவுவதற்காக தனது ' இந்துச் சான்றுகளை ' வ…

  22. கொழும்பின் எண்ணப்போக்குகள் - ராஜீவ் பாதியா இலங்கையின் அரசியல் நெருக்கடியில் வெற்றியாளர் எவருமில்லை. நெருக்கடி உருவாக காரணமாயிருந்த நடவடிக்கைகளை எடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரு நம்பிக்கை வாக்கெடுப்புகளில் தோல்வி கண்ட மகிந்த ராஜபக்ச, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைக்கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க ஆகிய மூவருமே பலப்பரீட்சையில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த பின்புலத்திலே, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக பிரதான அரசியல் பாத்திரங்கள் மத்தியில் இருக்கக்கூடிய எண்ணப்போக்குகள் எவை? முன்னாள் வெளியுறவு செயலாளரும் கலிங்க லங்கா பவுண்டேசனின் தலைவருமான லலித் மான்சிங் தலைமையிலான …

  23. தீர்ப்புக்கு மூன்று வாய்ப்புகள் கே. சஞ்சயன் / 2018 டிசெம்பர் 07 வெள்ளிக்கிழமை, மு.ப. 03:20 Comments - 0 ஒக்டோபர் 26ஆம் திகதி - ஒரு வெள்ளிக்கிழமை; ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்த ஒரு பெரும் குழப்பத்துக்கு, இன்றைய நாள் - வெள்ளிக்கிழமை, முடிவு கட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு, பரவலாகக் காணப்படுகிறது. அரசமைப்பைக் கேள்விக்குட்படுத்தும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அடுத்தடுத்து எடுத்து வைத்த ஒவ்வொரு நகர்வும், சிக்கல்களாகவே மாறின. மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக, நியமித்ததன் மூலம், ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நெருக்கடி, அடுத்த கட்டமாக நாடாளுமன்றத்தை முடக்குவதிலும் பின்னர், அதைக் கலைப்பதிலும் போய் முடிந்தது. இந்தநிலையில் தான், நாடாளுமன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.