அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
2020ஆம் ஆண்டுக்குப் பிறகாவது நாட்டின் தலைவிதி மாறாதா? எதிர்வரும் 2020ஆம் ஆண்டிலும் இந்த நாட்டின் அரசியல் குழப்பங்களுக்குத் தீர்வு கிடைக்காதுவிட்டால், நாட்டின் நிலை சீர்செய்ய முடியாதவாறு மிக மோசமான கட்டத்தை எட்டிவிடும். 2020ஆம் ஆண்டு அரச தலைவர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. இவற்றின் முடிவுகள் நாட்டின் எதிர்காலத்தையே தீர்மானிக்கப் போகின்றன. அது மட்டுமல்லாது அரசியல்வாதிகளின் இருப்பையும் தீர்மானிக்கப் போகின்றன. மகிந்த தரப்பில் அரச தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை அறிவிப்பதில் நீண்ட தாமதம் காணப்படுகின்றது. …
-
- 0 replies
- 670 views
-
-
அரசியல் மிதவாதத்தின் நெருக்கடி எம்.எஸ்.எம். ஐயூப் / எதிரிக்கு ஆயுதம் வழங்கக் கூடாது என்பார்கள். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், ஓர் ஆயுதத்தை அல்ல; ஆயுதக் களஞ்சியம் ஒன்றையே, எதிரியின் கையில் கொடுத்துவிட்டார் போலும். உத்தேச புதிய அரசமைப்பு தொடர்பாக, காலியில் அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில், அவர் உரையாற்றும் போது தெரிவித்த ஒரு கருத்தை, வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போட்டியாளர்கள், அவரை மட்டுமல்லாது, கூட்டமைப்பையே தாக்குவதற்காகப் பாவிக்கிறார்கள். அந்தக் கூட்டத்தின் பின்னர், யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிச் சென்ற சுமந்திரன், தமது காலி உரை குறித்து அளித்த விளக்கத்தை, கூட்டமைப்…
-
- 0 replies
- 575 views
-
-
சித்தார்த்தனும் செல்வமும் என்ன செய்யப் போகிறார்கள்? புருஜோத்தமன் தங்கமயில் / 2018 செப்டெம்பர் 12 தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான உறவு இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. பிரிவுக்குப் பின்னர், எவ்வாறான பாதையைத் தேர்தெடுக்க வேண்டும் என்பது தொடர்பிலும் கூட்டமைப்பினரும் விக்னேஸ்வரனும் ஓரளவுக்குத் தெளிவான நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டார்கள். உறவை ஒட்டுமொத்தமாக முறித்துக் கொள்வதற்கு முன்னரான, சம்பிரதாயபூர்வ சந்திப்புக்கான காத்திருப்பு மட்டுமே இப்போதுள்ளது. டெல்லிப் பயணத்தை முடித்துக்கொண்டு, இரா.சம்பந்தன் நாடு திரும்பியதும், ‘கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், கூட்டமைப்பின் முதலமைச்சர்…
-
- 0 replies
- 714 views
-
-
மாயக்கல்லி மலை: விடாப்பிடி முகம்மது தம்பி மரைக்கார் / நீண்ட மௌனத்தின் பிறகு, மீண்டும் பேசுபொருளாக மாறியிருக்கிறது, மாயக்கல்லி மலை விவகாரம். இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு பகுதியிலுள்ள மாயக்கல்லி மலையில், 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதியன்று, புத்தர் சிலையொன்றை அடாத்தாக வைத்ததிலிருந்து தொடங்கிய சர்ச்சை, இப்போது இன்னொரு கட்டத்தை அடைந்திருக்கிறது. மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை முன்னிறுத்தி, அங்கு விகாரை ஒன்றை அமைப்பதற்காக, ஓர் ஏக்கர் காணி வழங்கப்படும் என்று, கிழக்கு மாகாணக் காணி ஆணையாளர் டி.டி.அநுர தர்மதாஸ உறுதியளித்து கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளத…
-
- 1 reply
- 1.1k views
-
-
எண்பதுகளில் சண்டை காரை துர்க்கா / “அடம்பன் கொடியும் கொடியும் திரண்டால் மிடுக்கு”, “வேற்றுமையிலும் ஒற்றுமை காண்போம்”, “ஒற்றுமை இன்றேல் உயர்வு இல்லை” எனப் பல பொன்மொழிகள் தமிழில் வழக்கில் இருக்கின்றன. ஆனால் இவை, தமிழ் மக்கள் (நல்)வாழ்வில் புழக்கத்தில் இல்லை. நல்வாழ்வுடன் உள்ள ஒருவர், சிறந்த மனவெழுச்சி சமூக நல்வாழ்வைக் கொண்டிருப்பதுடன், வாழ்வில் ஏற்படுகின்ற மாற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல்களையும் கொண்டிருப்பார். ஆனால், இவ்வாறான சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியாமலும் முறியடிக்க முடியாமலும், தமிழ்ச் சமூகம் திணறுகின்றது. இதற்குக் காரணமாக, தமிழ் மக்கள், அரசியல் அனாதைகளாக்கி உள்ளமையைக் குறிப்பிடல…
-
- 0 replies
- 760 views
-
-
பாக்குநீரிணையின் இரு கரைகளும் பாதுகாப்பான எதிர்காலமும் – லோகன் பரமசாமி தமிழகத்தில்திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக மு.க. ஸ்ராலின் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். முற்றிலும் ஒரு புதிய எதிர்காலத்தை நோக்கி கழகத்தையும் தமிழினத்தையும் அழைத்து செல்வதாக தனது தந்தையார் இறந்ததன் பின்னான முதலாவது பொதுக்குழுக் கூட்டத்தில் ஸ்ராலின் கூறி இருக்கிறார். தற்போதைய நிகழ்வுகள் யாவும் திராவிட முன்னேற்ற கழகத்தின் புதிய எண்ணக்கருத்து உருவாக்கல் என்ற ஒரே நோக்தை கொண்டதாகவே இருப்பது போல் தெரிகிறது. தலைமைத்துவ மாற்றம் மிகவும் அவதானமாக எந்தவித சலசலப்பும் ஏற்படாத வகையில் ஏகமனதாக ஸ்ராலின் அவர்கள் தெரிவுடன் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. முன்னைநாள் தலைவர் கருணாநிதி அவர்க…
-
- 0 replies
- 549 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு இரத்தம் சிந்தி உயிர் தியாகம் செய்துள்ளது! தமிழ் தேசிய கூட்டமைப்பு த.தே.கூ. என்பது ஓர் பேச்சு பொருளாகவோ, அல்லது காட்சி பொருளாகவோ, இல்லையேல் சிலரது சுயநலத்திற்கு வித்திடும் திடலாகவோ இருக்கமுடியாது. தமிழர்களது தாயாக பூமியில் வாழும் வடக்கு கிழக்கு வாழ் மக்கள் மட்டுமல்லாது, தங்களது தாயாக பூமியில் பற்று வைத்து, தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு உறுதுணையாக பல தசாப்தங்களாக சேவை செய்து வரும்புலம் பெயர் வாழ் தமிழ் மக்களும் த.தே.கூ.ன் சரித்திரத்தில் பின்னி பிணைந்தவர்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களது இறுதி மூச்சு. இதன் மூலமே தமிழர் தாயாக பூமிக்கு ஓர் உருப்படியான அரசியல் தீர்வை எட்ட முடியும் என…
-
- 1 reply
- 1.7k views
-
-
வேடிக்கையும் விளையாட்டும் தற்கொலையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மக்களுடைய தேவைகளைப் பற்றிச் சிந்திப்பதில்லை. இது குறித்து அரசாங்கத்துடன் பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டு பலமாக முன்வைக்கப்படுகிறது. கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் அதற்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம். அதற்குப் பிறகு மேலும் மேலும் கூட்டமைப்பின் மதிப்பு கீழிறங்குவதற்கும் அதனுடைய முரணான நிலைப்பாடுகளும் செயற்பாடின்மையுமே காரணமாகும். இதனால் அரசியற் தீர்வும் கிட்டவில்லை. மக்களின் நாளாந்தப் பிரச்சினைகளும் தீரவில்லை. …
-
- 0 replies
- 730 views
-
-
விக்கினேஸ்வரனுக்கு காத்திருக்கும் சவால் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு பெரியளவில் திருப்பங்களைத் தரும் என்றோ, இனிமேலும் விக்னேஸ்வரன் கூட்டமைப்பில் நீடிப்பார் என்றோ எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்றாகி விட்டது. விக்னேஸ்வரன் ஒரு பாரம்பரிய அரசியல்வாதி அல்ல. அதுதான் அவருக்குள்ள பிரதான சிக்கல். இதுவரையில் எந்தவொரு தேர்தலுக்கும் அவர் வியூகம் வகுத்தவர் அல்ல. தேர்தல் ஒன்றில் கூட்டணிக் கட்சிகளை எப்படி வளைத்துப் போடுவது, எப்படி வெட்டி விடுவது, எப்படி ஆசனங்களை ஒதுக்கிக் கொடுப்பது, எப்படி பிரசார வியூகங்களை வகுப்பது என்பதையெல்லாம், எல்லோராலும் இலகுவாக செய்து விட முடியாது தமிழ்த் த…
-
- 1 reply
- 978 views
-
-
சீனாவைத் துரத்தும் கடன் பொறி குற்றச்சாட்டு -ஹரிகரன் இப்போதெல்லாம் சீனா கடன் பொறி என்ற சொல்லைக் கேட்டாலே பதறிப் போகிறது. அந்தச் சொல்லைக் கூறியவரை நோக்கி வசைபாடவும் ஆரம்பித்து விடுகிறது. இதற்கு, சீனா கூறுவது போன்று மேற்குலக ஊடகங்கள் மாத்திரம் காரணம் அல்ல. இலங்கையும் கூட இந்த நிலைக்கு காரணம் தான். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனா தன்வசப்படுத்தியதை அடுத்தே, சர்வதேச அளவில் சீனாவுக்கு எதிராக- இந்தக் கடன் பொறி குற்றச்சாட்டு அலை வீசத் தொடங்கியிருக்கிறது. BRI எனப்படும், சீனாவின் கனவுத் திட்டமான- பட்டுப்பாதை திட்டத்தை செயற்படுத்த கடன்களை கொட்டிக் கொடுத்து நாடுகளை வளைத்துப் போடுகிறது சீனா. சீ…
-
- 0 replies
- 1.4k views
-
-
கொழுந்து விடும் சமஷ்டி அரசியல் -என்.கண்ணன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் பகிரங்க அரசியல் மோதலில் ஈடுபடும் துணிச்சல் கொண்டவராக சுமந்திரன் தான் இருக்கிறார். எனவே அவரை வறுத்தெடுக்க கிடைத்திருக்கின்ற வாய்ப்பை முதலமைச்சரின் தரப்பிலுள்ளவர்கள் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் காலியில் நடந்த, புதிய அரசியலமைப்பு யோசனை குறித்து விளக்கமளிக்கும் கூட்டம் ஒன்றில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்து பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது. தமிழ் மக்களுக்கு சமஷ்டி தேவையில்லை என்றும்,…
-
- 0 replies
- 1.7k views
-
-
மகிந்த இப்பொழுதும் பலமாக இருக்கிறாரா? நிலாந்தன்… கடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மகிந்த மீண்டும் தனது பலத்தைக் காட்ட முயன்றிருக்கிறார். இவ்வாண்டு அவர் இவ்வாறு தன் பலத்தைக்காட்டுவது இது மூன்றாவது தடவை. கடந்த மே தினத்தன்று காலிமுகத்திடலை அவர் தனது ஆதரவாளர்களால் நிறைத்தார். அது ஒரு பிரமாண்டமான சனத்திரள். அதன்பின் கடந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் அவர் தன் பலத்தைக்காட்டியிருந்தார். இந்த வரிசையில் பார்த்தால் கடந்த புதன்கிழமை அவர் ஒழுங்குபடுத்திய ஆர்ப்பாட்டம் ஏறுமுகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அது அப்படி அமையவில்லை. கொழும்பிற்கு வெளியிலிருந்து ஆயிரக் கணக்கானவர்களை அவர்களால் திரட்ட முடிந்தது. அத்தொகை கிட்டத்தட்ட ஒன்ற…
-
- 3 replies
- 1.3k views
-
-
மறுக்கப்படும் உரிமைகள்...! பி.மாணிக்கவாசகம் மொழியுரிமையும், காணி உரிமையும் மறுக்கப்படுவது, இனப்பிரச்சினையின் அடிநாதமாகத் திகழ்கின்றது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு, அவர்கள் ஆளும் தரப்பினரால் அடக்கி ஒடுக்கப்பட்டதன் விளைவாகவே இனப்பிரச்சினை உருவாகியது. உரிமைகள் மறுக்கப்படுவதைத் தட்டிக்கேட்டும் பலன் கிடைக்காத காரணத்தினாலேயே போராட்டங்கள் தலையெடுத்தன. உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டங்கள் பல்வேறு வழிகளில் திசைதிருப்பப்பட்டு, அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டன. அதிகார வலுவுடன் கூடிய சட்ட ரீதியான அடக்குமுறைகள் ஒருபக்கமாகவும், குழுக்களின் ஊடாக வ…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஒரு தனிநபருக்கு முன்னால் தொடர்ந்தும் தோற்றுக் கொண்டிருக்கும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் யதீந்திரா சுமந்திரன் தனது பேச்சுக்களாலும் செயலாலும் எப்போதுமே தமிழ் அரசியலில் சர்ச்சைக்குரிய ஒருவராகவே இருந்து வருகிறார். தனக்கு சரியென்பதை மட்டுமே பேசுவேன் என்பதை மிகவும் இறுமாப்புடன் மேற்கொள்ளும் ஒருவராகவே சுமந்திரன் இருக்கிறார். இதன் காரணமாக எழும் எந்தவொரு விமர்சனங்களைக் கண்டும் சுமந்திரன் கவலை கொண்டதாகத் தெரியவில்லை. பிறிதொரு வகையில் நோக்கினால் இதுவே சுமந்திரனின் பலமாகவும் இருக்கிறது. இப்போதும் சுமந்திரன் கூறியதாக சொல்லப்படும் ஒரு கருத்து தொடர்பில் சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. அதற்கு சுமந்திரன் வழங்கியிருக்கும் பதில் மேலும் சர்ச்சைகளை ஏற்ப…
-
- 0 replies
- 2.1k views
-
-
ஏமாற்றத்தின் விளிம்பில் ஈழத் தமிழ் மக்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணாமல் தொடர்ந்து இழுத்தடிப்பதால் நாட்டின் ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் ஏற்பட்டு விடும் என்பதை ஆட்சியாளர்களும் தென்பகுதி அரசியல்வாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிர மரட்ண இதை உணர்த்தும் வகையிலேயே அரச தலைவருக்கும், தலைமை அமைச்சருக்கும் எச்சரிக்கை கலந்த வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அரசமைப்பு உருவாக்கம் மற்றும் ஏனைய விடயங்க ளில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத தலைவர்களாக இவர்கள் இருவரும்…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 721 views
-
-
வட கிழக்கு இணைப்பும் முஸ்லிம் மக்களும் அரசியல் ஆய்வாளரும், ஈழ விடுதலைவரலாற்றில் ஒரு மூத்த பயணியும், முன்னாள் யாழ் பல்கலைக்கழக மணவர் ஒன்றிய தலைவருமான சட்டத்தரணி திரு ஜோதிலிங்கம் ஐயா SA Jothi அவர்கள்"
-
- 0 replies
- 819 views
-
-
ஊரறிந்த வழக்கும் உலகப் பஞ்சாயத்தும் மியன்மார் ரோஹிங்கிய முஸ்லிம்கள் பற்றிய தாருஸ்மான் அறிக்கை ஒரு ஒடுக்கப்பட்ட இனக்குழுமம். அதன் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அட்டூழியங்கள், அவை பற்றிய அறிக்கை வெளியாகியிருக்கிறது. மியன்மாரைச் சேர்ந்த ரோஹிங்கிய முஸ்லிம்கள். ரக்கைன் மாநிலத்தில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள். இவை பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் குழுவொன்று விசாரித்தது. இந்தோனேஷியாவின் முன்னாள் சட்டமா அதிபர் இலங்கை மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். மர்சுக்கி தாருஸ்மான் தலைமையிலான குழுவினர் வரைந்த அறிக்கை. சுருக்கமாக சொன்னால், இன்னொரு தாருஸ்மான் அறிக்கை. கடந்த ஆகஸ்ட் ம…
-
- 0 replies
- 936 views
-
-
இலங்கை இராணுவம் மற்றும் அரசியல்களுக்கிடையிலான தொடர்பு பற்றிய தலைப்பு ஊடகங்களின் கவனத்தை அவ்வப்போதுதான் பெற்றுவருகிறது. போர்காலம், போரின் பிற்காலங்களில் சிவில்-இராணுவத்துக்கிடையிலான தொடர்பு பற்றிய சமநிலையானதொரு சட்டகத்தை பேணிவருவது நாட்டின் சிவில் அரசியல் தலைவர்களது மிக முக்கிய தேவையாக இருந்தும் இது விடயமான தீவிரமான அறிவார்ந்த பணிகளை கண்டுகொள்வது மிகவும் சிரமமானதாகவே இருக்கிறது. இலங்கையின் சிவில்-இராணுவ தொடர்பில் அண்மைய கால நகர்வுகளில் தோன்றியிருக்கும் சில முக்கிய பண்புகளை கோடிட்டுக் காட்டுவதற்கு இக்கட்டுரை முயல்கிறது. இக்கட்டுரை இறுதியில் பிரேரிப்பது போன்று, சிவில்-இராணுவ தொடர்பு எமக்கு இன்னோர் பக்கத்தை காட்டித்தருகிறது. அதனூடாக இலங்கையின் தற்போதைய அரசியலை அவதானிக்கும்…
-
- 0 replies
- 802 views
-
-
விக்னேஸ்வரனின் விலகல் உறுதி கே. சஞ்சயன் / தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம், கடந்த வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட் 31) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு தொடர்பாக, அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்புப் பலமாக இருந்தது. ஆனால், அவர் வழக்கம் போலவே, தனது முடிவை உறுதியாக அறிவிக்காமல், நழுவிக் கொண்டிருக்கிறார். ஆனாலும், அவரது உரை, சில தெளிவான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியிருக்கிறது. அவர் தனது உரையில், தன் முன்பாக உள்ள நான்கு தெரிவுகள் பற்றிக் கூறியிருக்கிறார். அரசியலில் இருந்து விலகி, மீண்டும் ஓய்வு வாழ்வுக்குச் செல்வது; புதிய கட்சியை ஆரம்பித்துப் போட்டியிடுவது; …
-
- 0 replies
- 1.3k views
-
-
மக்கள் மனமறிந்து செயற்படுவார்களா தமிழ் அரசியல்வாதிகள்? தமக்கு வாக்களித்துத் தம்மைப் பதவியில் அமர்த்திய மக்களது அபிலாசைகள் குறித் துத் தமிழ் அரசியல்வாதிகள் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். தமிழ் மக்கள் போதும் போதும் என்று கூறும் அளவுக்குத் துன்பங்களை அனுபவித்து விட்டனர். இன்னமும் வேதனைகளுக்கு மத்தியில்தான் அவர்களது அவல வாழ்வு தொடருகின்றது. தமிழ் அரசியல்வாதிகள் தமது துயரங்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கையை அவர்கள் இன்னமும் இழந்துவிடவில்லை. தமிழ் மக்களது நம்பிக்கையை தமிழ் அரசியல்வாதிகள் காப்பாற்றுவார்களா? …
-
- 0 replies
- 524 views
-
-
சமஷ்டி என்றால் என்ன என்று விலாவாரியாக அறிய இந்தத் தேடல் எனக்கு உதவியது. விரும்பியவர்கள் நேரம் எடுத்து வாசித்துத் தெளிவடையலாம் ஐந்து விரல்களாய்ப் பிரிந்து நில் அவசியமானால் இணைந்து கொள்! – சாமானிய நோக்கில் சமஷ்டி – - - சமகால சர்வதேச அரசியற் போக்கு இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலம் முதலாக, அனைத்துலக அரசியலில் இருவேறுபட்ட போக்குகள் இடம்பெறலாயின. நடைமுறையில் இருந்துவரும் அரசியற் கட்டமைப்புக்கள் குலைந்து, அதன் விளைவாகப் புதிய தேசிய அடையாளங்கள் முனைப்புப் பெற்று வருதல், ஒன்று. சோவியத் ஒன்றியத்தின் உடைவும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற செக்கோஸ்லவாக்கியா, யூகோஸ்லாவியா போன்ற நாடுகளின் சிதைவும் இதற்கு நல்ல உதாரணங்களாகும். இதேவேளை சுதந்திர நாடுகள் பல…
-
- 0 replies
- 2.4k views
-
-
துருக்கியின் பொருளாதார நெருக்கடி: கட்டவிழும் கோலங்கள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / உலக நாடுகள் வெவ்வேறு வடிவங்களில் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்குகின்றன. அவை பற்றிய பல கதைகள் எமக்குச் சொல்லப்பட்டாலும், பொருளாதார நெருக்கடி என்பது, உலகின் பெரும்பான்மையான நாடுகளில் நிலவுகின்றது என்பது உண்மையே. இதை அரசாங்கங்களும் அறிவுஜீவிகளும் பொருளாதார வல்லுநர்களும் தொடர்ந்து மறுத்து வந்தாலும், உலக நிலைவரங்கள், பொருளாதார நெருக்கடியின் நிகழ்நிலையை, தொடர்ந்து காட்டிக் கொண்டேயுள்ளன. அதேவேளை, இந்நெருக்கடி, தனியே ஒரு நாட்டை மட்டும் பாதிப்பதில்லை; மாறாக, பல நாடுகளைப் பாதிக்கிறது என்பதும் தெளிவாகியுள்ளது. …
-
- 0 replies
- 741 views
-
-
கடன் கொடுத்து இலங்கையை ஆதிக்கம் செலுத்த நினைக்கிறதா சீனா? பிபிசி இந்தி சேவைப்பிரிவுடெல்லி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலத்தில் சீனாவுடனான நெருக்கம் அதிகரித்தது இலங்கையில் 30 ஆண்டுகளாக தொடர்ந்த உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்தவராக கருதப்படும் மஹிந்த ராஜபக்ஷ,…
-
- 0 replies
- 800 views
-
-
விக்கியின் தெரிவு: பேரவை உரையை முன்வைத்து புருஜோத்தமன் தங்கமயில் / வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ள நிலையில், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தன்னுடைய அடுத்த கட்ட நகர்வுகள் பற்றிப் பேசியிருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அணிக்கு, அவர் தலைமையேற்க வேண்டும் என்று, தமிழ் மக்கள் பேரவையிலுள்ள சில கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் புத்திஜீவிகளும் தொடர்ந்து விடுத்துவரும் கோரிக்கைகளுக்குச் சாதகமான பதிலொன்றை வழங்கும் கட்டத்துக்கு, அவர் வந்திருக்கின்றார். முதலமைச்சர் பதவிக்காலம் முடிந்ததும், தன் முன்னால் நான்கு தெரிவுகள் இருக்கின்றனவென, விக்னேஸ்வரன் கூறுகிறார…
-
- 1 reply
- 1.5k views
-