அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
கறுப்பு ஜூலைக்குப் பிறகு நான்கு தசாப்தங்கள் கடந்த பிறகும் நழுவிக்கொண்டு போகும் அரசியல் தீர்வு Veeragathy Thanabalasingham on July 23, 2023 Photo, FOREIGNPOLICY கறுப்பு ஜூலையில் இருந்தும் உள்நாட்டுப்போரில் இருந்தும் படிப்பினைகள் பெற்றுக்கொள்ளப்பட்டதற்கான எந்த அறிகுறியையும் சிங்கள அரசியல் சமுதாயத்தின் நிலைப்பாடுகளில் காணவில்லை. மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை நிகழாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை. இலங்கையில் இனங்களுக்கு இடையிலான உறவுகளைப் பொறுத்தவரை, ஒரு எல்லைக்கோடாக அமைந்த 1983 ஜூலை இனவன்செயல்களுக்குப் பிறகு இந்த வாரத்துடன் நான்கு தசாப்தங்கள் உருண்டோடிவிட்டன. ஒரு வாரத்துக்கு மேலாக தல…
-
- 0 replies
- 256 views
-
-
கூட்டு ரோந்து’ என்ற பெயரில் அரங்கேறும் கூட்டு சதி! தமிழ்நாட்டில் அலுமினியம் தொடர்பான உருளைகள், ‘பால்சு’கள், உற்பத்தி செய்வோர் எல்லோருமே இப்போது விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் தயாரிக்க உதவுவோராகக் கருதப்பட்டு, கைது செய்யப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் அலுமினிய உருளைகள் - உளவுத் துறையினரால் ‘அணுகுண்டுகளாக’ கருதப்படுகின்றன. அடுத்து, தமிழ்நாட்டில் பாலித்தின் துணி தயாரிப்பாளர்கள்கூட கைது செய்யப்படலாம். விடுதலைப்புலிகள் ஆயுதங்களைப் பொட்டலம்கட்ட பாலித்தின் துணி தயாரித்தவர்கள் என்று, உளவுத்துறை கூறினாலும் வியப்பதற்கு இல்லை. ஏதோ தமிழ்நாடே விடுதலைப்புலிகளின் தளமாக மாறிவிட்டதைப் போல் ஒரு பொய்யான தோற்றத்தை, உளவுத்துறை உருவாக்குகிறது. ‘தினத்தந்தி’, ‘தினகரன்’, ‘தினமலர்’,…
-
- 0 replies
- 767 views
-
-
2024இல் இறைமைக்கான ஆதரவாக்குவோம்| இலக்கின் சிந்தனை | ஆய்வாளர்கள் பற்றிமாகரன், அருஸ் வரவிருக்கும் சனாதிபதி தேர்தல் மற்றும் அரசியல் நோக்குநிலையான கருத்தாடல். நன்றி - யூரூப்
-
- 0 replies
- 728 views
-
-
தமிழர்களுக்கு கரிநாள் || தமிழ் தலைமைகள் விட்ட தவறுகள்
-
- 0 replies
- 551 views
-
-
ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகிக்கொண்டே ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு பற்றி பேச்சு - வீ.தனபாலசிங்கம் இலங்கையின் மூன்று பிரதான அரசியல் தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித்தலைவருமான மகிந்த ராஜபக்ச ஆகியோர் வருட இறுதியில் நடத்தப்படவேண்டியிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு தங்களது கட்சிகளைத் தயார்படுத்திக்கொண்டிருக்கும் அதேவேளை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது பற்றியும் கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. சில தினங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய தலைவர்களுடனான சந்திப்பொன்றின்போது எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச …
-
- 0 replies
- 663 views
-
-
மும்மொழிக் கொள்கை அரசியல் பிரச்சனைகளை தீர்த்துவைக்குமா? இலங்கை சென்றுள்ள இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இலங்கை அரசின் மும்மொழி செயற்திட்டத்தை சனிக்கிழமை ஆரம்பித்துவைத்தார். இலங்கையில் தமிழ் சிங்கள மொழிகளையும் ஆங்கிலத்தையும் பள்ளிக்கூட மட்டத்திலிருந்தே அனைவருக்கும் கற்பிப்பதன் மூலம் இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்தமுடியும் என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால், இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதில் அரசு இந்த மொழிக்கொள்கையை ஒரு வழிமுறையாக பயன்படுத்தமுடியும் என்கின்ற போதிலும் அதன்மூலம் சிறுபான்மை மக்களின் அரசியல் பிரச்சனைகளைத் தீர்த்துவிடமுடியாது என்று தமிழோசையிடம் கருத்து தெரிவித்த இலங்கை அரசகரும மொழிகள் ஆணைக்…
-
- 0 replies
- 462 views
-
-
பால் சமநிலையை பேணத் தவறிய தமிழ் அரசியல்! நிலாந்தன். அண்மையில், தமிழ் கட்சிகளையும் குடிமக்கள் சமூகத்தின் பிரதிநிதிகளையும் சந்தித்த ஐரோப்பிய நாடு ஒன்றின் ராஜதந்திரிகள் தங்களைச் சந்தித்த தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மத்தியில் ஏன் ஒரு பெண்கூட இல்லை என்று கேட்டிருக்கிறார்கள். அவரை சந்தித்து குழுவில் மட்டுமல்ல, அண்மையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு என்று அழைக்கப்படுகின்ற மக்கள் அமைப்புக்கும் கட்சிகளுக்கும் இடையிலான கட்டமைப்புக்குள் மொத்தம் 14 பேர்கள் உண்டு. அதில் ஒருவர் கூட பெண் இல்லை. அதுபோலவே தமிழ் கட்சிகள் மத்தியில் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் என்று பார்த்தால் அனந்தி சசிதரனின் கட்சியைத் தவிர ஏனைய பெரும்பாலான கட்சிக…
-
- 0 replies
- 428 views
-
-
முக்கியத் தருணத்தில் முரண்டு பிடிக்கின்றதா முன்னணி? காரை துர்க்கா / 2019 ஜூலை 16 செவ்வாய்க்கிழமை, பி.ப. 05:32 Comments - 0 வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியையும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் ஒன்றினைக்கும் முயற்சி கைநழுவிப் போயுள்ளது. புலிகளது காலப்பகுதியில், தமிழ் மக்களது உரிமை மீட்சிக்கும் பாதுகாப்பு உறுதிப்பாட்டுக்கும் அவர்களே முழுமையான பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருந்தார்கள். தமிழ் மக்களும் அவர்களையே நிறைவாக நம்பி இருந்தனர். ஆனால் புலிகளது மௌனத்துக்குப் (2009) பின்னர், கூட்டமைப்புக்கு அந்த வகிபாகம் வலியச் சென்றது. ஆனாலும், கூட்டமைப்பின…
-
- 0 replies
- 763 views
-
-
தமிழ் தேசிய இனப்பிரச்சினை பிடிகொடாத முறையில் நகரும் ஆட்சித்தளம் நடராஜ ஜனகன் தேசிய மக்கள் சக்தியினர் ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகப்போகின்றது. இவர்கள் தேர்தல் மேடைகளில் முழங்கிய பல்வேறுபட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படாத நிலை தொடர்கின்றன என்ற விமர்சனம் தற்போது அதிகம் பேசப்படும் நிலை காணப்படுகிறது. மேலும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் பல்தேசிய நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளை செவ்வனே நிறைவு செய்யும் போக்கும் தற்போது மேல்நிலை பெற்று வருகிறது. இதனுடன் இலங்கை மின்சார சபை தொழிலாளர்களுக்கான போனஸ் கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளமை, 13 லட்சம் அரச ஊழியர்களில் 7 லட்சம் பேர் குறைக்கப்பட வேண்டும் என்ற கருத்து நிலையும் தற்போது மேல் வந்துள்ளது. எ…
-
- 0 replies
- 315 views
-
-
அண்மையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் ஐந்து பிரதான தமிழ்த் தேசிய கட்சிகளும் ஒரு உடன்பாட்டிற்கு வந்திருந்தன. மக்கள் மத்தியிலும் இது ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தது. இதனடிப்படையில் ஐந்து பிரதான கட்சிகளும் 13 அம்சக் கோரிக்கையில் உடன்பட்டிருந்தன. பிரதான சிங்கள வேட்பாளர்களை சந்தித்த பின்னர் இறுதி முடிவெடுப்பதாகவும் உடன்பாடு காணப்பட்டிருந்தது. ஆனால் பிரதான சிங்கள வேட்பாளர்கள் அனைவருமே மேற்படி ஐந்து கட்சிகளின் ஒருமித்த கோரிக்கைகளை நிராகரித்துவிட்டனர். அதற்கும் மேலாக ஆகக் குறைந்தது தமிழ் கட்சிகளை சந்திப்பதற்கான நேரத்தைக் கூட அவர்கள் வழங்கவில்லை. சிங்கள வேட்பாளர்கள் இதனை நிராகரிப்பார்கள் என்பது ஏற்கனவே தெரிந்த ஒரு விடயம்தான். ஆனால் இவ்வாறானதொரு உடன்பாட்டிற்கு இணக்கம்தெரி…
-
- 0 replies
- 477 views
-
-
பலாலியில் தமிழ் மக்கள் குடியிருக்க இராணுவம் உதவுமா? - துன்னாலைச் செல்வம் பலாலி விமானத் தளத்தை கைப்பற்றுவதற்கு விடுதலைப் புலிகள் அமைப்பில் எத்தனை பேர் தமது உயிரைக் கொடுத்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்த நிலத்தை ஏன் இவ்வளவு உயிர்களைக் கொடுத்து கைப்பற்ற வேண்டும் என்று ஒருவரும் நினைக்கவில்லை இந்த நிலம் தமிழ் மக்களின் தாய் நிலம். இந்த நிலத்தைக் கைப்பற்றுவதற்காக விடுதலைப்புலிகள் தமது உயிர்களைக் கொடுக்க தயாராக இருந்தார்கள். தமிழ் அரசியல் தலைவர்களின் ஆரோக்கியமற்ற செயற்பாட்டினாலே இந்தப் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் நிலங்கள் பறிபோகின்றன. இப்போது இருக்கும் தமிழ் அரசியல் தலைவர்கள் எல்லோரும் சிங்கள அரசுடன் சேர்ந்து பலாலியில் பொங்கல் விழா கொ…
-
- 0 replies
- 882 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் மீளெழுச்சி சாத்தியமான ஒன்றா? - யதீந்திரா படம் | Selvaraja Rajasegar Photo யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பகுதியில் தற்கொலை குண்டுதாரி பயன்படுத்தும் அங்கி மற்றும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் வெடிப் பொருட்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டமை, அண்மைக்கால சுமூக நிலையில் ஒரு திடீர் பதற்றநிலையை தோற்றுவித்திருக்கிறது. வெளியாகியிருக்கும் செய்திகளின் படி, இது தொடர்பில் ஒரு முன்னைநாள் விடுதலைப் புலி உறுப்பினர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் இது தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்ட வேண்டுமென்று கூறியிருக்கும் கோட்டாபய ராஜபக்ஷ, புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாத விடுதலைப…
-
- 0 replies
- 1.1k views
-
-
ரணில் ஓர் ஒத்திகையா? நிலாந்தன். 2015ல் ஆட்சி மாற்றம் நிகழ்த்த காலகட்டத்தில் ஒரு தமிழ் அரசியல் செயற்பாட்டாளர் ஸ்கண்டிநேவிய நாடு ஒன்றில் இருந்து பிரான்ஸுக்கு வந்திருந்தார்.அங்கே முன்பு இலங்கைத்தீவின் சமாதான முயற்சிகளில் ஈடுபட்ட ஸ்கண்டிநேவிய ராஜதந்திரி ஒருவரைக் கண்டு கதைத்திருக்கிறார்.”ஆட்சி மாற்றம் நடந்து விட்டது இப்பொழுது நாமல் ராஜபக்சவை தூக்கி விட்டார்கள் பொறுத்திருந்து பாருங்கள் அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் தூக்குப்படப் போகிறார்கள்” என்ற பொருள்பட அந்த ராஜதந்திரி இவருக்குச் சொன்னாராம். ஆனால் அந்த ராஜதந்திரி எதிர்பார்த்ததுபோல அல்லது மேற்கு நாடுகள் எதிர்பார்த்ததுபோல ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய எல்லாரையுமே தூக்கவில்லை. நாமலைக்கூட கன…
-
- 0 replies
- 184 views
-
-
ஓய்வூதியர்களின் அரசியல் : பாகம்-இரண்டு ? - நிலாந்தன் ஓய்வு பெற்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு லண்டனில் கிடைத்த வரவேற்பும் அங்கு அவர் ஆற்றிய உரைகளும் சமூகவலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்படுகின்றன. மாகாண சபைத் தேர்தல்கள் நடக்கலாம் என்ற சந்தேகம் கலந்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் ஒரு சூழலில், இளஞ்செழியனைப் போன்ற ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று விரும்பிய பலரும் இப்பொழுது உற்சாகமாகக் காணப்படுகிறார்கள். இளஞ்செழியனுக்கு அப்படி ஒரு விருப்பம் இருக்கிறதா இல்லையா என்று தெரியாது. ஆனால் அவருடைய சகோதரர்-அவர் ஏற்கனவே தமிழரசுக் கட்சியின் தீவுப்பகுதிக் கிளையில் பொறுப்பில் இருப்பவர்-தனக்கு நெருக்கமான நண்பர்களுக்கு ஊடாக தமையனை முதலமைச்சராக்கி விட வேண்டும் என்ற கனவோடு செய…
-
- 0 replies
- 231 views
-
-
உயர் நீதிமன்றத்தினால் பிழையானதாக தீர்ப்பளிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் முடிவை அடிப்படையாகக் கொண்டு பிரதம நீதியரசர் நீக்கப்பட்டு புதிய ஒருவர் நியமிக்கப்பட்டால் அவரை ஏற்க நீதித் துறையினருக்கு சட்டம் இடம் கொடுக்குமா என்ற கேள்வி எழுகிறது என்று நாம் கடந்த வாரம் கூறினோம். ஆனால் அவ்வாறு கேள்வி எதையும் எழுப்பாமலே சட்டத்துறை, புதிய பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸை ஏற்றுக்கொண்டது. புதிதாக பிரதம நீதியரசர் ஒருவர் நியமிக்கப்பட்டால் அவரை ஏற்றுக்கொள்ளக் கூடாது என முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாக்க பதவி நீக்கம் செய்யப்படுமுன் சட்டத்தரணிகள் பலரும் நீதிபதிகளும் கூறி வந்தனர். நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்களின் அடிப்படையில் அது சரி தான். ஆனால் புதிய பிரதம ந…
-
- 0 replies
- 424 views
-
-
ருவாண்டா இனப்படுகொலை (Rwandan Genocide) - ஒரு பார்வை ஒரு சின்னக் கதை. இரண்டு குழுக்கள் பல நூறு ஆண்டுகளாக ஒரே பகுதியில் வாழ்ந்து வந்தன. ஆரம்பத்திலிருந்தே இரு குழுக்களுக்கும் ஒத்துப் போனதில்லை. ஒரு குழு, 'நாங்களே இந்த மண்ணின் மாந்தர்கள். அவனுங்க வந்தேறிகள். இந்த மண்ணின்மீது உரிமை இல்லாதவங்க' என்று மார் தட்டிக் கொள்ளும். இன்னொரு குழுவோ, 'அவனுங்க சுத்த சோம்பேறிங்க. ஒண்ணுக்கும் லாயக்கு இல்லாதவனுங்க. இந்த நாட்டை வளப்படுத்துன நாங்கதான் இந்த மண்ணுக்கு உண்மையான வாரிசு' என்று உரிமை கொண்டாடும். இரு தரப்பிலும் இனக்கலப்பு இருக்கக் கூடாது, தங்கள் இளைஞர்கள் அடுத்த இனத்தில் போய் கல்யாணம் செய்துவிடக் கூடாது என்று ரொம்…
-
- 0 replies
- 1.5k views
-
-
மஹர சிறைச்சாலை சம்பவங்கள்: பின்னணியும் விளைவுகளும் – பி.மாணிக்கவாசகம் 32 Views சிறைச்சாலைகளில் உருவாகியுள்ள கொரோனா வைரஸ் கொத்தணி அரசாங்கத்தின் வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைச் செயற்பாடுகளை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கின்றது. அத்துடன் கொரோனா வைரஸ் தாக்கச் சூழலில் சிறைக் கைதிகளின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன. இதனால் அவர்கள்பால் காட்டப்பட வேண்டிய அரசின் மனிதாபிமான அணுகுமுறையும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கி இருக்கின்றது. நாட்டில் பரவலாகத் தொற்றிப் பரவியுள்ள கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது. இதற்கென விசேட சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. சட்ட…
-
- 0 replies
- 550 views
-
-
இருதரப்புப் போர்க்குற்றங்களுக்கான வெளிநாட்டு விசாரணைக்களம் விரிவடையப் போகிறது இன அழிப்புக்கான சர்வேதச நீதி மீண்டும் புறந்தள்ளப்படும் என்பதே கசிந்திருக்கும் ஜெனீவா முடிவு சொல்லும் செய்தி புலம்பெயர் தமிழர் அமைப்புகளிடம் பெரும் பொறுப்பு, அவர்கள் செய்யவேண்டியது என்ன? புவிசார் அரசியலில் அமெரிக்க-இந்திய கேந்திர இராணுவ நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்க முன்வராவிடின் சர்வதேச போர்க்குற்ற தண்டனைகள் ஒவ்வொன்றாக மேற்குலக நாடுகளால் இலங்கைக்கெதிராக முடுக்கப்படும். அதேவேளை முன்னாள் விடுதலைப்புலிகள் மீதும் இந்தியா, மற்றும் மேற்குலகில் தண்டனைகளும் தடைகளும் இறுக்கப்படும். இன அழிப்பு என்ற குற்றத்தை மேற்குலகோ இந்தியாவோ வ…
-
- 0 replies
- 910 views
-
-
குடியரசுத் தேர்தல் பதவிக்கான குதிரையோட்டம் இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல், களை கட்டி விட்டது. ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சிகளுக்கு இடையிலான போட்டியாக, இந்தமுறைத் தேர்தல் மாறியிருக்கிறது. இந்தியாவின் முதல் குடியரசு தலைவரான டொக்டர் ராஜேந்திரபிரசாத், பீஹார் மாநிலத்தில் இருந்துதான் தெரிவு செய்யப்பட்டார். இப்போதும் பீஹார் மாநில ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவராக தெரிவு செய்யப்பட இருக்கிறார். நாட்டின் மிக உயர்ந்த, முதல் பதவியான குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல், இந்தமுறை வித்தியாசமான தேர்தல் களத்தைச் சந்திக்கிறது. எதிரும் புதிருமாகப் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள, ராம்ந…
-
- 0 replies
- 398 views
-
-
புலிகளுக்குச் சோதனைமேல் சோதனைதான் நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரைச் சுட்ட குற்றச்சாட்டில், விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்குச் சில மாதங்களுக்கு முன்னர், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கொல்வதற்காக முயன்றவர்கள் என்ற குற்றச்சாட்டில், வேறு சில விடுதலைப்புலி இயக்க முன்னாள் உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைதாகிச் சிறையிலிருக்கின்றனர். அதற்குச் சில மாதங்களுக்கு முன்பு, தனங்கிளப்புப் பகுதியில், வெடிப்பொருட்கள் மற்றும் புலிகளின் சீருடைகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னணியில் சம்மந்தப்பட்டவர் என்ற குற்றச்சாட்டில், முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் கைத…
-
- 0 replies
- 464 views
-
-
அடக்குமுறையை நியாயப்படுத்திய போராட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதிலும், அவர் அந்தப் பொறுப்பை சரியாக நிறைவேற்றுவதில்லை என்று சிங்கள மக்கள் மத்தியில், குறிப்பாகத் தெற்கிலுள்ள எதிர்க்கட்சிகள் மத்தியில், ஓர் அபிப்பிராயம் இருக்கிறது. அது முற்றிலும் பிழையான கருத்தும் இல்லை. நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பற்றி மட்டுமல்லாது, நாட்டில் முக்கியமான சகல விடயங்கள் தொடர்பாகவும் கருத்துத் தெரிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சம்பந்தனும் அவரது கட்சியும் பொதுவாகத் தமிழ் அரசியல் கட்…
-
- 0 replies
- 356 views
-
-
எதிர்க்கட்சிகள் பதவிக்கு வந்தால் பிரச்சினைகள் தீருமா? எம்.எஸ்.எம். ஐயூப் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, புதன்கிழமை (16) நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது, “தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நாம் பொறுப்பல்ல” எனக் கூறினார். அதேவேளை, “இந்த நெருக்கடிகளைத் தோற்றுவித்த காரணிகளில் சில, எமது கட்டுப்பாடுக்கு அப்பாலானவை” என்றும் கூறினார். ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு, கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது வாக்களித்த மக்களின், அரசாங்கத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை சின்னாபின்னமாகி இருக்கும் நிலையில், அந்த நம்பிக்கையை மீண்டும் கட்டி எழுப்புவதே ஜனாதிபதியின் உரை…
-
- 0 replies
- 455 views
-
-
எங்கே செல்லும் இந்தப் பாதை? “வடக்கு மாகாணத்தில், தூரத்து இடங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் செல்ல மறுக்கும், வசதி குறைந்த பாடசாலைகளை மூடுவதுடன், நகர்ப் புறத்து பாடசாலைகளையும் ஆசிரியர்கள் வந்து செல்லக் கூடிய வசதிகள் உள்ள பாடசாலைகளையும் மட்டும் இயக்குவதே, ஆசிரியர்கள் வளப் பங்கீட்டுப் பிரச்சினைக்கான தீர்வு" என, வடக்கு மாகாண அமைச்சர் யோசனை தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபை அமர்வில், அமைச்சர் இவ்வாறான ஆலோசனை பகர்ந்துள்ளார். மேலும் அமைச்சர், தான் சொன்னது என்னவென்று முழுமையாக ஆராய்ந்து பாராமல், நுனிப்புல் மேய்ந்து விட்டு, ஆசிரியர் சங்கங்கள் அறிக்கைகள் வெளியிட்டுள்ளன எனவும் மறுப்பு அறிக்கையும் வெளியிட்டுள்ளார். ஆனாலும் அமைச்சர் அவ்…
-
- 0 replies
- 649 views
-
-
வரப்போவது பெண் வேட்பாளர்களா, ‘டம்மிகளா’? மாகாண சபைகளிலும் உள்ளூராட்சி மன்றங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காகவும் உறுதி செய்வதற்காகவும் அண்மையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் முற்போக்கானவையாகும். இருந்தபோதிலும், அவற்றை நிறைவேற்றுவது, இந்நாட்டு அரசியல் கட்சிகளுக்குப் பெரும் பிரச்சினையாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது. கட்சிகள் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும், எந்த இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக இருந்தாலும், அவற்றுக்குப் பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவது பெரும் சவாலாகவே இருக்கின்றது. எனினும், இந்தப் பிரச்சினை சிறிய மற்றும் சிறுபான்மைக் க…
-
- 0 replies
- 496 views
-
-
கேட்டதோ தமிழீழம்; கிடைத்ததோ ஜீப் வண்டிக் கதை கேட்டதோ தமிழீழம், கிடைத்ததோ ஜீப் வண்டிக் கதையை பலரும் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள். இதுதான் இலங்கை வரலாற்றில் அமிர்தலிங்கம் தலைமையில், தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் வெற்றிபெற்று, ஆனந்தசங்கரி, நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி, கிளிநொச்சிக்கு ஜீப் வண்டியில் வந்தவேளை, பேசப்பட்ட கதையே இது. நடைபெறவுள்ள உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல், பெண்களை அரசியல் தலைமைத்துவத்துக்காக அறிமுகப்படுத்தும் முதல்படியானது. அவர்களை இனங்காணும் வழியை ஏற்படுத்துவதும் இதன் முதல் நோக்கம். தங்களுடைய இருப்புகளிலும் கொள்கையிலும் இருந்து மாறவில்லை என்பதைக் கா…
-
- 0 replies
- 390 views
-