அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
இலங்கையில் சீனாவின் இராணுவப் பிரசன்னம் ஏதும் இல்லை என்று இந்தியாவிடம் மீண்டும் தலையில் அடித்துச் சத்தியம் செய்ய வேண்டிய நிலை இலங்கைக்கு உருவாகியிருக்கிறது. சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங்கின் கொழும்பு பயணத்துக்கு முன்னதாக, கொழும்புத் துறைமுகத்தில் சீனக் கடற்படையின் நீர் மூழ்கிக் கப்பலொன்று தரித்து நின்ற விவகாரம் தான், இந்த நிலைமைக்கு முக்கியமான காரணம். சீன நீர்மூழ்கிக் கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த விபரத்தை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தாமல் மறைத்துக் கொண்டதால் தான் இந்தச் சிக்கல் இந்தளவுக்குப் பூதாகர வடிவெடுத்தது. கடந்தவாரம், இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.கே. டோவனின் அழைப்பின் பேரில் இலங்கைக் கடற்படைத் …
-
- 0 replies
- 756 views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையில் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தால் மேற்கொள்ளப்படும் விசாரணையில், சாட்சியங்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை நேற்று வியாழக்கிழமையுடன் (30ஆம் திகதி) முடிவுக்கு வந்துள்ளது. சன்ட்ரா பெய்டாஸ் தலைமையிலான ஐ.நா. விசாரணைக்குழு, மார்டி அதிசாரி தலைமையிலான ஆலோசனைக்குழுவுடன் இணைந்து, இந்த சாட்சியங்களை ஆராய்ந்து விசாரணைகளை மேற்கொண்டு, அடுத்த சுமார் 3 மாதங்களுக்குள் அறிக்கை தயாரிக்கப்போகிறது. இந்த அறிக்கை அடுத்த வருடம் மார்ச் மாதம் நடக்கவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படும். இந்நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் ஜனவரி மாதம் நிகழவுள்ள மாற்ற…
-
- 0 replies
- 1.1k views
-
-
விக்கினேஸ்வரனின் கூட்டணி – சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்? நிலாந்தன் December 9, 2018 வவுனியாவில் இடம்பெற்ற எழுநீ விருது வழங்கும் விழாவில் உரை நிகழ்த்திய விக்கினேஸ்வரன் சிவசக்தி ஆனந்தனைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். ரணில்-மைத்திரி அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட பின் நிகழ்ந்த பேரங்களில் சிவசக்தி ஆனந்தனோடு நிகழ்ந்த உரையாடல் என்று சொல்லப்படும் ஒலிப்பதிவு ஒன்று வெளிவந்தது. இவ்வொலிப்பதிவை முன்வைத்து கஜன் அணி ஆனந்தன் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளது. ஆனால் அது பகிடியாகக் கதைக்கப்பட்ட ஓர் உரையாடலின் பதிவென்று ஆனந்தன் பின்னர் தெரிவித்திருந்தார். எழுநீ உரையில் விக்கினேஸ்வரனும் அதை ஒரு பகிடியாக ஏற்றுக் கொண்டு பேசியிருக்கிறார். இதுவிடயத்தில் வி…
-
- 0 replies
- 310 views
-
-
பிரெஞ்சு வரலாற்றில், 15ஆம் லூயியுடையதும் அவன் மகனான 16ஆம் லூயியுடையதும் ஆட்சியை கறுப்புப்பக்கங்கள் என்றுதான் இன்றளவும் அடையாளப்படுத்துகின்றனர். 15ஆம் லூயியுடைய ஆட்சியில் மக்கள் பசியாற்றுவதற்குப் போதுமான உணவுகள் இருக்கவில்லை. 16ஆம் லூயியோ உணவுகளை மக்களின் கண்ணில் காட்டினாலும் வரிகளால் அவர்களை வதைத்தெடுத்தான். மக்கள் இங்கே புல்லைத் தின்கின்றார்கள். அனுதினம் வறுமையாலும் அவல ஆட்சியாலும் வதைபட்டுச் செத்துக் கொண்டிருக்கும் நோயாளிக்கும் பிச்சைக்காரருக்கும் மன்னராயிருப்பவரை 'மாட்சிமை தங்கிய சக்கரவர்த்தி' என எவ்வாறழைப்பது? இது பிரான்ஸின் கொடுங்கோலனான 15ஆம் லூயி தொடர்பில் அக்காலக் கவிஞனொருவன் தெரிவித்த கருத்துகளாக அமைகின்றன. 'இரு கழுதைகளை அவன் ஓட்டிச் சென்றான். ஒரு கழுதை யின் …
-
- 0 replies
- 495 views
-
-
http://youtu.be/4Lon_kDiT4o http://youtu.be/EVkFEuqn4N4 http://youtu.be/pQ3qGIx5JlE http://youtu.be/y7VzVUUGChc
-
- 0 replies
- 864 views
-
-
வரப் போகும் தேர்தல்களில் ஈஸ்டர் தாக்குதல்களின் தாக்கம் எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 மே 29 புதன்கிழமை, பி.ப. 06:32 Comments - 0 தேசிய தவ்ஹீத் ஜமாஅத் பயங்கரவாதிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலால், நேரடியாகவே பாதிக்கப்பட்டவர்கள் கிறிஸ்தவர்கள். ஆனால் அவர்கள், ‘நடந்தவை இறைவனின் நாட்டம்’ எனக் கருதி, அதற்காக முஸ்லிம்களைப் பழிவாங்கவோ, முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை விதைக்கவோ முற்படாமல், அமைதியாக இருக்கிறார்கள். இலங்கை கத்தோலிக்கர்களின் பேராயரான கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் “நடந்தவை இறைவனின் சோதனை” என்றே வர்ணித்தார். ஆனால், பயங்கரவாதத் தாக்குதலால் நேரடியாகப் பாதிக்கப்படாத ஏனைய பேரினத்தவர்கள், அதனைப் பாவித்து, முஸ்லிம்களைக் கொடுமைப்படுத்தி வருகிறா…
-
- 0 replies
- 609 views
-
-
ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: ஐரோப்பிய மனநிலை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஜூன் 06 வியாழக்கிழமை, மு.ப. 01:38Comments - 0 மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிவது மிகவும் கடினம். இதனாலேயே தேர்தல்கள் ஓரளவேனும் முக்கியத்துவம் பெறுகின்றன. தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் மக்கள் மனநிலையை வெளிப்படுத்தும் தன்மையுடையன. அது முழுமையானதல்ல; இருந்தாலும் தேர்தல்களில் மக்களின் தெரிவுகள், சில பெறுமதியான செய்திகளைச் சொல்லவல்லவை. அதேவேளை, தேர்தல்கள் நீதியாகவும் நியாயமாகவும் நடப்பது என்பது, இதற்கான முன்நிபந்தனை. அவ்வாறில்லாத தேர்தல் முடிவுகள், மக்கள் மனோநிலையைப் பிரதிபலிக்க மாட்டாதவை. அண்மையில் நடந்து முடிந்த, ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான த…
-
- 0 replies
- 1k views
-
-
தீ வைத்த மைத்திரியும் எலியாகத் தப்பிக்கும் ரணிலும் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜூன் 12 புதன்கிழமை, பி.ப. 12:35 Comments - 0 நாட்டில் அரசாங்கம் என்கிற ‘வஸ்து’ ஒன்று இருக்கிறதா, எனும் கேள்வி, கடந்த சில மாதங்களாகவே எழுப்பப்படுகின்றது. ‘நல்லாட்சி, தேசிய அரசாங்கம்’ என்கிற கவர்ச்சி நாமங்களோடு, மக்களை நோக்கி வந்தவர்கள், சில வருடங்களுக்குள்ளேயே அரசாங்கம் என்கிற கட்டமைப்பின் அனைத்துப் பாகங்களையும் தீவைத்து எரித்துவிட்டு, அந்தச் சூட்டில் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள். வழக்கமாக, ஆட்சிக்கு எதிரான சூழ்ச்சிகளை எதிர்க்கட்சிகளும் மாற்று அணியினரும் மேற்கொள்வது வழமை. ஆனால், ஆட்சியின் பங்காளிகளாக இருப்பவர்களே, ஆட்சியை அழிப்பதற்குத் தலைமை ஏற்பது என்பது, அபத்…
-
- 0 replies
- 1k views
-
-
பொதுவேட்பாளர் கண்டுபிடிப்பு: சிறுவர்களின் குரும்பட்டித்தேர்! August 15, 2024 — கருணாகரன் — தமிழ்ப்பொது வேட்பாளராக(?) ஒருவரை (பா.அரியநேத்திரனை) க் கண்டு பிடித்ததைப் பெருஞ்சாதனையாக தமிழ்ப்பொது வேட்பாளருக்கான(?) பொதுச்சபையினர் அறிவித்து, ஆரவாரப்படுகின்றனர். அரசியல் பெறுமானத்தில் இது நகைப்புக்குரியதாக (கோமாளிதனமாக) இருந்தாலும் அவர்களைப் பொறுத்தவரையில் இது பெரும் சாதனைதான். சிறுவர்கள், குரும்பட்டியில் தேர் செய்வதைப்போல (அது அந்தச் சிறுவர்களுக்கு படு சீரியஸான விடயமாகவே இருக்கும்) விளையாட்டாகத் தொடங்கப்பட்ட “பொதுவேட்பாளர்” விடயம், ஒரு மெய்யான தேராகுவதற்குப் பல சிக்கல்களைக் கொண்டதென்று அவர்கள் எண்ணியிருக்கவில்லை. போகப்போகத்தான் அதனுடைய சிக்கல்களும் சிரமங்கள…
-
- 0 replies
- 522 views
-
-
புதிய கூட்டுக்கள் பழைய பகைமைகள் ? - நிலாந்தன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நோக்கித் தமிழ்க்கட்சிகள் புதிய ஒருங்கிணைப்புகளுக்குப் போகத் தொடங்கியுள்ளன. அதை வரவேற்க வேண்டும். கடந்த 15ஆண்டுகளில் முன்னெந்தத் தேர்தலையும்விட தென்னிலங்கைமையக் கட்சிகளுக்கும் சுயேச்சைகளுக்கும் எதிராக அணி திரள வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கும் ஒரு தேர்தல் இது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என்பது பெருமளவுக்கு உள்ளூர் நிலைமைகளை; உள்ளூர் சாதி,சமய,வட்டார உணர்வுகளைப் பிரதிபலிப்பவை.உள்ளூர்த் தலைமைகளைக் கட்டி எழுப்புவதற்கான ஒரு களம். ஆனால் அவை உள்ளூர்த் தலைமைகள் மட்டுமல்ல. ஒரு தேசியவாத அரசியலுக்கான அடிக்கட்டுமாணம் என்ற விளக்கத்தோடு மக்கள்மட்டக் கட்டமைப்புகளை அங்கிருந்துதான் பலப்படுத்த வேண்டும். அதாவ…
-
- 0 replies
- 327 views
-
-
ராஜபக்ஷர்களைப் புதிய ஆண்டில் எதிர்கொள்தல் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜனவரி 01 அனைவருக்கும் மற்றுமொரு தேர்தல் வருட வாழ்த்துகள். ஆம், இன்று பிறந்திருக்கும் 2020, பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் என இரண்டு தேர்தல்களுக்கான ஆண்டாக இருக்கப்போகின்றது. மக்களின் அத்தியாவசியத் தேவைகள், நாட்டின் சமாதானம், சௌபாக்யம் குறித்தெல்லாம் அக்கறை கொள்வதற்கான வாய்ப்புகளைச் சூடுபிடிக்கப்போகும் தேர்தல்களுக்கான களம் அனுமதிக்கப் போவதில்லை. ஊடகங்கள் தொடங்கி அனைத்துப் பொதுத் தொடர்பு சாதனங்களும், தேர்தல்களைப் பற்றியே பேசப்போகின்றன. மைத்திரியின் ‘ஒக்டோபர் 26 சதிப்புரட்சி’யில் இருந்து நாடு மீண்ட தருணத்தில், 2019ஆம் ஆண்டு பிறந்தது. முதல் காலாண்டு, மைத்திரி - ரணில் ஆட்சி இழு…
-
- 0 replies
- 600 views
-
-
வன்னியில் - மல்லாவியில் சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த சிவில் சமூக பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்றின்போது, வளவாளர் ஒருவர் கேட்டார், ''நிலைமாறு கால கட்ட நீதி என்றால் என்ன? அதைப் பற்றி யாராவது இதற்கு முன் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?' என்று. அதற்கு ஓர் இளம்பெண் சொன்னார், ''ஏதோ ஒரு பத்திரிகைச் செய்தியில் ஒரு முறை வாசித்ததாக ஒரு சிறு ஞாபகம்' என்று... இது தான் நிலைமை. தமிழ் மக்களில் பெரும்பாலானவர்களுக்கு நிலைமாறு கால கட்ட நீதி என்றால் என்னவென்றே தெரியாது. தமிழ் அரசியல்வாதிகளில் எத்தனை பேருக்கு இது பற்றி விளக்கம் உண்டோ தெரியவில்லை. தமிழ் புத்திஜீவிகளில் சிறு தொகுதியினருக்கும், என்.ஜி.ஓக்களில் சில பகுதியினருக்கும் அதுவொரு காசு காய்க்கும் மரம். இதில் மிகச் சிறிய அளவிலா…
-
- 0 replies
- 356 views
-
-
தமது எதிர்காலப் போர்களுக்காக, அமெரிக்காவுக்கு வெளியே, நடக்கும் போர்கள் மற்றும் இராணுவ விவகாரங்களை ஆராய்வதற்காக, வெஸ்ற் பொயின்ற் அதிகாரிகள் உலகம் முழுவதிலும் முன்னர் பயணங்களை மேற்கொண்டு வந்தனர். 1919ல் முடிவுற்ற முதலாம் உலக மகா யுத்தத்தில் பங்குகொண்டு அதிலிருந்து தப்பிய இராணுவ வீரர்கள் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள் தற்போதும் முன்னணிப் போர் அரங்குகளில் பயிற்றுவிக்கப்படும் முக்கிய இராணுவப் பாடங்களாக உள்ளன. 1875ல், உள்நாட்டு யுத்த வீரர்களுக்கான அமையத்தை அமெரிக்க இராணுவத் தளபதியான ஜெனரல் வில்லியம் ரி.செர்மன் தனது கட்டளைத் தளபதி பதவி நிலையிலிருந்தவாறு மீளவும் வடிவமைத்தார். இவர் யப்பான், சீனா, இந்தியா, பேர்சியா, ரஸ்யா, இத்தாலி, ஜெர்மனி, ஒஸ்ரியா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்…
-
- 0 replies
- 769 views
-
-
அரசியல் பாதை தேடி வீதிக்கு இறங்கிய தமிழர்கள் தமிழ் மக்கள் பேரவையினால் யாழ். நகரில் செப்டெம்பர் 24 ஆம் திகதி சனிக்கிழமை நடத்தப்பட்ட ‘எழுக தமிழ்’ பேரணி இலங்கையின் உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் வடக்குஇ கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெருமளவில் அணிதிரண்ட முதல் வெகுஜன அரசியல் போராட்ட இயக்கமாக அமைந்தது என்பதில் சந்தேகமில்லை. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கும் இப் பேரணி தமிழர் அரசியலில் ஒரு திருப்புமுனையைக் குறித்து நிற்கிறதா என்பதே முக்கியமான கேள்வியாகும். தமிழ் மக்களை இன்று அழுத்திக் கொண்டிருக்கின்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு விரைவானதும் உருப்படியானதுமான த…
-
- 0 replies
- 487 views
-
-
ஆளை ஆள் விழுங்கும் தமிழரின் பண்பு தமிழர்கள் மத்தியிலுள்ள மூத்த அரசறிவியலாளர் என்று சொல்லத்தக்கவரும், அரசியல் ஆய்வாளருமான மு.திருநாவுக்கரசு எழுதிய, “அரசியல் யாப்பு- டொனமூர் யாப்பு தொடக்கம் உத்தேச சிறிசேன யாப்பு வரை“ என்ற நூலின் அறிமுக விழா அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த விழாவில் நூல் அறிமுகத்துக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை விட, அதன் உள்ளடக்கம் சார்ந்த கருத்துக்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தைவிட, அரசியல் முரண்பாடுகள் பற்றிப் பேசுவதற்கே பேச்சாளர்கள் பலரும் முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். நீண்டதொரு இடைவெளிக்குப் பின்னர், துருவநி…
-
- 0 replies
- 647 views
-
-
அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடுவதன் அவசியம் அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்திருக்கும் அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலமானது அரசியல் கட்சிகள் மத்தியிலும் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பாரிய சர்ச்சைகளையும் முரண்பாடுகளையும் தோற்றுவித்துள்ளது. சட்டமூலத்தை கொண்டுவந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியைத் தவிர ஏனைய அரசியல் கட்சிகள் இந்த அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை எதிர்த்து வருகின்றன. மாகாணசபைகளின் விவகாரத்துடன் சம்பந்தப்பட்டுள்ள சட்டம் என்பதால் இதனை அனைத்து மாகாண சபைகளிலும் நிறைவேற்றவேண்டியது அவசியமாகும். ஆனால், ஏற்கனவே கிழக்கு மா…
-
- 0 replies
- 432 views
-
-
பூகோள நலன் அடிப்படையில் எங்களுக்கு தீர்வு கிடைக்கலாம்
-
- 0 replies
- 479 views
-
-
நல்லெண்ண வெளிப்பாடும், நல்லிணக்கச் செயற்பாடும் செல்வரட்னம் சிறிதரன்:- அரசாங்கத்தின் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நன்மை தருமா, என்ற கேள்வி இப்போது, பல தரப்புக்களிலும் தீவிரமாக எழுந்திருக்கின்றது. பிறந்துள்ள புதிய ஆண்டின் முதல் இரண்டு வாரங்களிலேயே இந்த நிலைமை ஏற்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. கவலைக்குரிய இந்த நிலைமை குறித்து சர்வதேச மட்;டத்திலான தரப்பினர் அரசாங்கத்திற்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். நிலைமைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. முன்னைய ஆட்சியில் நிலவிய அடக்குமுறை போக்கையும், அதிகார துஸ்பிரயோகத்துடன் கூடிய ஊழல் செயற்பாடுகளைய…
-
- 0 replies
- 332 views
-
-
கறுப்பு ஜூலையும் இன்றைய நிலைமையும் எம்.எஸ்.எம். ஐயூப் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தை எதிர்த்து, ஆசிரியர் தொழிற்சங்கங்களும் அனைத்துப்பல்கலைகழக மாணவர் ஒன்றியமும் இணைந்து, கடந்த எட்டாம் திகதி பாராளுமன்ற சந்தியில் ஆர்ப்பாட்டம் நடத்தின. இதையடுத்து, ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை தாங்கியவர்களை, பொலிஸார் கைது செய்தனர். நீதிமன்றம் அவர்களைப் பிணையில் விடுதலை செய்ததன் பின்னர், பொலிஸார் அவர்களைத் தனிமைப்படுத்துவதற்காகப் பலாத்காரமாக அழைத்துச் சென்றனர். இந்தப் பின்னணியில், அடக்குமுறை, விலைவாசி உயர்வு போன்ற நாடு எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளை முன்னிட்டு, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினர், கடந்த ஒன்பதாம் திகதி சுதந்…
-
- 0 replies
- 299 views
-
-
ஆப்கன் தாலிபனுக்கு தண்ணி காட்டும் "துணிச்சலான" பள்ளத்தாக்கு - இந்த வரலாறு தெரியுமா? பால் கெர்லே & லூசியா பிளாஸ்கோ பிபிசி நியூஸ் பட மூலாதாரம்,ALAMY காபூலில் இருந்து சுமார் முப்பது மைல்களுக்கு அப்பால் குறுகிய நுழைவு வாயிலைக் கொண்ட ஒரு பள்ளத்தாக்குப் பகுதியில் தாலிபனை எதிர்க்கும் ஆயுதக் குழுவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானின் கொந்தளிப்பான சமகால வரலாற்றில் பஞ்ஷிர் பள்ளத்தாக்குப் பகுதி இப்படிக் கவனிக்கப்படுவது முதன் முறையல்ல. 1980-களில் சோவியத் ஒன்றியத்துக்கும், 90களில் தாலிபன்களுக்கு எதிராகவும் வலிமையான எதிர்ப்பு அரணாக திகழ்ந்திருக்கிறது. …
-
- 0 replies
- 578 views
-
-
வீணாகிப்போகும் உயிர்களுக்கு எப்போது நியாயம் கிடைக்கும்? அரசியலை அனைவரும் கையில் பிடித்துக் கொண்டிருக்கையில், சமூக விரோதச் செயல்களின் அதிகரிப்பு பெரும் பொதுப்பிரச்சினையாக மாறிவருகிறது. இதனை ஞாபகப்படுத்தத்தான் வேண்டும் என்றில்லை. இது வெளிப்படையாகவே தெரிகிறது. இதனை எவ்வாறு எதிர்கால சந்ததியினருக்காக எதிர்கொள்ளப் போகிறோம் என்பதே கருப்பொருள். நகரங்களில், வெளிநாடு என்று மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பயணங்கள் ஓரளவு குறைந்து போயிருந்தாலும், கிராமங்களில் அதிகரித்தே காணப்படுகின்றது. இந்தக் காய்ச்சலில் இருந்து இன்னமும் மீண்டுவிடவில்லை. இதனால் ஏற்படும் பல்வேறு சமூக வன்முறைகள் சார் சிக்கல்களை, எப்படி எல்லோருமாகச் சேர்ந்து தீர்த…
-
- 0 replies
- 393 views
-
-
வெட்கம் காட்டுமிராண்டிகளின் காலத்துக்கு நாட்டின் ஒரு பகுதி, சென்று திரும்பியிருக்கிறது. சக மனிதர்களையும் அவர்களின் சொத்துகளையும் ஈவு இரக்கமின்றி வேட்டையாடிய மகிழ்ச்சியை, ஒரு கூட்டம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. நமக்கு மத்தியில் இருக்கின்றவர்களில் சிலர், இன்னும் மனதளவில் முதிர்ச்சியடையவில்லை என்பதை, கண்டி மாவட்டத்தில் நடந்த வன்முறைகள், வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. நமது நாட்டில், அவ்வப்போது முறுக்கேற்றி வளர்க்கப்பட்டு வந்த இனவாதத்தை, இப்போது அரசியல்வாதிகளும் வியாபாரிகளும் தங்கள் நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். சிங்களப் பேரினவாதத்தின் பெயரால், இங்கு யாரும் யாரையும் பலிகொள்ள முடியும் என்கிற நி…
-
- 0 replies
- 412 views
-
-
பேச்சுக்களைத் தவிர்ப்பதற்கு புலிகளைச் சீண்டும் அரசு இலங்கையில் மீண்டும் சமாதானப் பேச்சுகள் சாத்தியமாகுமா? படை வலுச் சமநிலை பாதிக்கப்பட்டிருப்பதாகக் கருதும் அரசு, புலிகளை மேலும் பலவீனப்படுத்துவதன் மூலம் பேச்சுகளை இல்லாது செய்துவிடலாம் அல்லது பேச்சுவார்த்தை மேசையில் புலிகளின் பேரம் பேசும் ஆற்றலை வெகுவாகக் குறைத்து விடலாமெனக் கருதுகிறது. அடுத்த சுற்றுப் பேச்சுக்கு இரு தரப்பும் சம்மதம் தெரிவித்து, பேச்சுகள் நடைபெறும் இடத்தைத் தெரிவு செய்யும் முயற்சியில் நோர்வே அனுசரணையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கையிலேயே மீண்டும் கடுஞ் சமர் வெடித்துள்ளது. வடக்கு - கிழக்கில் போர்முனைக்குச் செல்லப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நில…
-
- 0 replies
- 1.1k views
-
-
நிகழ்நிலை காப்புச் சட்டம்? – நிலாந்தன். “சமூக ஊடகங்களை தணிக்கை செய்யக்கூடாது. விமர்சனம் செய்யும் உரிமை அனைவருக்கும் உள்ளது. என்னை பற்றி எதனையும் கூறட்டும். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை” என்று மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி கேட்டபோது மஹிந்த மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஆனால் அவருடைய கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்.சந்திரசேன,கட்சியின் தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது சமூக ஊடகங்களுக்கு ஒரு கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். சமூக ஊடகங்களையும் கைபேசிச் செயலிகள் வழியாகப் பகிரப்படும் விடயங்களையும் கட்டுப்படுத்த வேண்டிய தேவை…
-
- 0 replies
- 817 views
-