Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. மக்களைப் பாதுகாப்பதில் தமிழ்த் தலைவர்களின் நிலைப்பாடு? மீண்டும் இராணுவ பிரசன்னம் Editorial / 2019 மே 08 புதன்கிழமை, பி.ப. 12:29 Comments - 0 -க. அகரன் தமிழ்ச் சமூகத்தின் தற்போதைய நிலைப்பாடு ‘சாண் ஏற முழம் சறுக்கும் நிலையாகி உள்ளது’ என்றால், மறுப்பதற்கில்லை. 30 வருடங்களாகச் சொல்லொணாத் துன்பங்களுக்கு முகம் கொடுத்து, இலங்கை தேசத்தில் நல்லிணக்கம், சகவாழ்வு என்ற பொறிமுறைக்குள், தங்களது வாழ்வியல் முறைமைகளை நகர்த்திச் செல்லும் பல்லின மக்களுக்கு, இன்று அவை அனைத்தையும் இழந்தாற் போன்றதான மனநிலையை உருவாக்கியுள்ளன அண்மைக் காலச்சூழல்கள். சோதனைக் கெடுபிடிகளும் இடப்பெயர்வுகளும் அகதிவாழ்வும் நலன்புரி நிலைய வாழ்வியலும் தமிழ்ச் சமூகத்துக்குப் புதிதானதல்ல.…

  2. கறுப்பு ஜூலைகளுக்கு முகம்கொடுத்தல் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜூலை 24 புதன்கிழமை, மு.ப. 06:49 Comments - 0 தென் இலங்கை திட்டமிட்டு அரங்கேற்றிய ‘கறுப்பு ஜூலை’ வெறியாட்டத்தை, தமிழ் மக்கள் எதிர்கொண்டு 36 ஆண்டுகளாகின்றன. அன்றைய ஜே.ஆர் அரசாங்கத்தின் குண்டர்கள், தமிழ் மக்களை வீடு வீடாகத் தேடி வேட்டையாடினார்கள்; அம்மணமாக்கித் தீயில் எறிந்தார்கள்; இறந்த உடல்களின் மீதேறி நின்று, வெற்றிக் கோஷமெழுப்பினார்கள்; அந்தக் கோர ஒலியின் அதிர்வு, இன்னமும் குறைந்துவிடவில்லை. இந்த நாட்டில், தமிழ் மக்கள் கொண்டிருக்கிற பாரம்பரிய உரிமையையும் அதுசார் இறைமையையும் சூழ்சிகளாலும் காடைத்தனத்தாலும் வெற்றிகொண்டுவிட முடியும் என்று, தென் இலங்கை தொடர்ச்சியாக முயற்சித்து வருகின்றது…

  3. எழுக தமிழ் ஏன் ? நிலாந்தன்…. September 7, 2019 தமிழ் மக்கள் மற்றொரு எழுக தமிழுக்கு தயாராகி வருகிறார்கள். தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியிலும் எழுச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அறியமுடிகிறது. தாயகத்தில் நடக்கும் எழுக தமிழுக்கு பலம் சேர்க்கும் விதத்தில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் இதில் இணையவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு நல்ல விடயம.; தமிழ் மக்கள் எந்த அளவுக்குப் பெருந்திரள் ஆகிறார்களோ அந்தளவுக்கு அழுத்தத்தை கொடுக்கலாம். தமிழ் மக்கள் தமது எதிர்ப்பைக் கூர்மையாகவும் கூட்டாகத் திரண்டும் காட்ட வேண்டிய ஒரு கால சந்தியில் தமிழ் அரசியல் வந்து நிற்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக யுத்தம் வேறு வழிகளில் முன்னெ…

  4. சிங்களத் தரப்புடனல்ல, வல்லரசுகளுடனேயே நாம் பேரம் பேச வேண்டியிருக்கிறது; கஜேந்திரகுமார் நேர்காணல் Bharati May 23, 2020 சிங்களத் தரப்புடனல்ல, வல்லரசுகளுடனேயே நாம் பேரம் பேச வேண்டியிருக்கிறது; கஜேந்திரகுமார் நேர்காணல்2020-05-23T05:13:47+00:00Breaking news, அரசியல் களம் என்.லெப்டின்ராஜ் “சிறிலங்கா அரசாங்கத்துடனோ, எதிர்க்கட்சியினரிடமோ, சிங்களத் தரப்புக்களுடனோ நாங்கள் பேரம் பேச வேண்டியதில்லை. வல்லரசுகளுடனேயே பேரம் பேச வேண்டியிருக்கிறது. ஆகவே, இதற்கான அறிவுள்ள, ஆளுமையுள்ளதொரு தலைமைத்துவத்தையே தமிழ்மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் ஊடாக நிச்சயம் நாங்கள் முன்னோக்கிச் செல்லலாம் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை” எனக் கூறியிருக்கின்றார் தமிழ்த்தேச…

  5. மாற்று தமிழ்த் தேசிய தரப்பினரது வெற்றியும் அதன் அரசியல் முக்கியத்துவமும்? - யதீந்திரா இம்முறை தேர்தலில் மாற்றம் ஏற்படலாம் என்பது பலருடைய எதிர்பார்ப்பு. இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களின் ஒரோயோரு தமிழ்த் தேசிய தலைமையாக இருந்தது. கூட்டமைப்பு ஒரணியாக நிற்க வேண்டும் – அதுதான் தமிழ் மக்களுக்கு நல்லதென்பது, பலரதும் கருத்தாக இருந்தது. அதே போன்று, தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் அணைத்தும் கூட்டமைப்பிற்குள் ஓரணியாக நிற்க வேண்டும் என்னும் அபிப்பிராயமும் பலரிடம் இருந்தது. ஆனால் நிலைமைகள் எதிர்பார்த்தது போன்று இருக்கவில்லை. அனைவரையும் அரவைணத்து, கூடுத் தலைமையொன்றை, வழங்கக் கூடிய ஆற்றல் கூட்டமைப்பிடம் இருந்திருக்கவில்லை. அனைவரும் ஓரணில் நிற்க வேண்டுமென்னும் எதிர…

  6. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் எனும் மாயை பட மூலம், PageTamil சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையைப் பாரதீனப்படுத்தி விசாரித்தால், அதன்பால் வரும் சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ள சிங்கள தேசம் தம்மோடு பேச்சுவார்த்தைக்கு வரும் என்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இந்தக் கட்டுக்கதை உச்சக்கட்ட ஏமாற்று வேலை. ஏன் என்பது வருமாறு: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பிரதான வழக்குத் தொடுனர் (chief prosecutor) என்றொருவர் இருக்கிறார். அவருக்கு சர்வதேச குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றங்களாகக் கொள்ளப்படக் கூடிய – இனப்படுகொலை (genocide), போர்க்குற்றங்கள் (war crimes), மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் (crimes against humanity) மற்றும் வலியத் தீங்கு செய்தல் (crime…

  7. http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-12-31#page-3 திருப்திதராத நகர்வுகள் ஐக்­கிய தேசிய கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் தமக்கு இருக்­கின்ற பொறுப்புக் குறித்து சிந்­திக்க வேண்டும். அத்­துடன் தமிழர் தரப்பும் இரா­ஜ­தந்­தி­ர­மா­கவும் பொறுப்புத் தன்­மை­யு­டனும் அழுத்தம் கலந்த சம­யோ­சி­தத்­து­டனும் நடந்து கொள்ள வேண்டும். அது மட்­டு­மின்றி நாட்­டின் ஏனைய அர­சியல் கட்­சி­களும் இந்த விட­யத்தில் பொறுப்­பு­டனும் வர­லாற்றுக் கட­மையை உணர்ந்தும் செயற்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். என்ன முன்­னேற்­றத்தைக் கண்டோம் இந்த 2016 ஆம் ஆண்டில்? ஒன்­றுமே நடக்­க­வில்­லையே? ஒரு­சில நம்­பிக்­கைக்­…

  8. மரபுரிமை ஆக்கிரமிப்பும் தமிழ் அறிஞர்களின் பொறுப்பும் - நிலாந்தன் உருத்திரபுரம் சிவன் ஆலயத்துக்கும் ஆபத்தா? தொல்லியல் திணைக்களம் அவ்வாலயச் சூழலில் அகழ்வாராய்ச்சிகளைச் செய்ய முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன. கடந்த வாரத்துக்கு முதல் வாரம் தையிட்டியில் ஒரு பிரமாண்டமான விகாரைக்கு ராணுவத் தளபதி அடிக்கல் நாட்டியிருக்கிறார். எனது கடந்தவாரக் கட்டுரை ஒன்றில் எழுதியது போல கிழமைக்கு ஒரு பிரச்சினையைக் கிளப்பி தமிழ் அரசியல்வாதிகள்; செயற்பாட்டாளர்கள் மற்றும் குடிமக்கள் சமூகங்களின் கவனத்தை அரசாங்கம் திசைதிருப்பி வருகிறது.இக்கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கையில்கூட எங்காவது ஒரு மரபுரிமை சின்னம் அல்லது சைவ ஆலயம் தொல்லியல் திணைக்களத்தின் பார்வைக்குள…

  9. பரராசா முதல் ஹேமச்சந்திர வரை – அருணன்:- Demonstrative performance of professional shooters outside Kyiv. நல்லூரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நீதிபதியை இலக்குவைத்து நடத்தப்படவில்லை என யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்துள்ளார். ‘நிச்சயமாக இது சந்தர்ப்ப சூழ்நிலையில் நடந்த விடயமே. நீதிபதிக்கு எந்தவித மரண அச்சுறுத்தலும் இல்லை என்பதை விசாரணைகளின்போது அறிந்து கொண்டுள்ளேன்’ என்றும் அவர் கூறியிருந்தார். வடக்கு முதல்வர் விடயத்தில் தமிழரசுக் கட்சி தமிழ் மக்களுக்கு ஒன்றும் புரியாது என்று நினைத்துச் செயற்பட்ட மாதிரித்தான் இக்கூற்றும் உள்ளது. குறிப்பிட்ட இலக்கை அடைவதற்காகச் செய்யப்பட்ட தா…

  10. இறங்கி வந்த ரவி இராஜினாமா உணர்த்துவது என்ன? ரொபட் அன்­டனி பல்­வேறு அர­சியல் சல­ச­லப்­பு­க­ளுக்கு மத்­தியில் ரவி கரு­ணா­நா­யக்க தனது வெளி­வி­வ­கார அமைச்சர் பத­வியை இரா­ஜி­னாமா செய்­தி­ருக்­கிறார். அழுத்­தங்கள், எதிர்ப்­புகள், விமர்­ச­னங்­க­ளுக்கு மத்­தி­யிலும் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை நிறை­வேற்­றப்­ப­டலாம் என்ற எதிர்­பார்ப்­பிலும் ரவி கரு­ணா­நா­யக்க தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­தி­ருக்­கிறார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் 2015 ஆம் ஆண்டு ஜன­வரி 8 ஆம் திகதி உரு­வாக்­கப்­பட்ட நல்­லாட்சி அர­சாங்­கத்தை ஸ்தாபிப்­பதில் முக்­கிய பங்­க­ளித்­தவர் என்ற வகை­யிலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பொது­வேட்­பா­ள­ராக…

  11. இந்திய வெளிவிவகாரக் கொள்கையை விளங்கிக் கொள்ளல் - யதீந்திரா கடந்த பத்தியில், இந்தியாவில் ஏற்படப் போகும் ஆட்சி மாற்றம், இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் ஆச்சரியப்படத்தக்க மாற்றங்கள் எதனையும் ஏற்படுத்தாது என்பதை விளக்கியிருந்தேன். அதனை மேலும் விளங்கிக் கொள்ளும் வகையில் இப்பத்தியில், இந்திய வெளிவிவகாரக் கொள்கை குறித்து பார்ப்போம். 'தமிழ் தேசியம்' என்னும் சுலோகத்தின் கீழ் இயங்கிவரும் அரசியல் தரப்பினருக்கு முன்னால் அறுபது வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவங்கள் இருந்தபோதிலும் கூட, இந்திய வெளிவிவகாரக் கொள்கையை விளங்கிக்கொள்வதில் அவர்கள் தொடர்ந்தும் வறியவர்களாகவே இருக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னர், இந்தியா எடுத்திருந்த ஒரு வெளிவிவகார நிலைப்பாடு தொடர்பில் கூட்டமைப்பினை பிரதிந…

  12. ஈழம் பெற்றுத் தருவதாக வலம்வரப் போகின்றார்கள் நாட்டின் சகல உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல், எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆகவே நாடு, இன்னொரு தேர்தல் திருவிழாவைக் கொண்டாத் தயாராகிறது. இந்நாட்களில் இருந்து பெப்ரவரி மாதத் தேர்தல் திகதி வரையிலான இரண்டு மாதங்கள், அரசியல்வாதிகள் மக்களை நோக்கிப் படை எடுக்க, அணி திரளப் போகின்றார்கள். மக்களை “நேசிக்க”த் தொடங்கப் போகின்றனர். தெற்கில், மைத்திரி எதிர் பலப்பரீட்சை களமாக உள்ளூராட்சித் தேர்தல் அமையப் போகின்றது. அதற்கிடையில் ஐக்கிய தேசியக் கட்சியும் தனித்துப் போட்டியிட்டு, தன் பலத்தை நிரூபிக்க வேண்டிய தேவைப்பாட்டில் உள்ளது…

  13. ஐ.நா தீர்மானத்துக்கு பின்னரான தமிழர்களின் செயற்திட்டம் எவ்வாறு அமைய வேண்டும்? வி. உருத்திரகுமாரன்

    • 0 replies
    • 270 views
  14. வடக்கின் அபிவிருத்திக்கு வட பகுதி மக்களே தடையென்பதை ஏற்க முடியாது வடக்­கின் அபி­வி­ருத்­திக்கு வடக்கு மக்­களே தடை­யாக இருப்­ப­தாக கல்வி இரா­ஜாங்க அமைச்­சர் இரா­தா­கி­ருஷ்­ணன் குற்­றம் சாட்­டி­யுள்­ளமை சரி­யா­னதுதானா என்­பது கண்­ட­றி­யப்­பட வேண்­டும். வடக்­கு­டன் தொடர்­பில்­லாத மலை­ய­கத்­தைச் சேர்ந்த அர­சி­யல்­வா­தி­யொ­ரு­வர், வடக்­குத் தொடர்­பா­கத் தெரி­வித்த கருத்­துக்­கள் புற­மொ­துக்­கக் கூடி­ய­வை­யல்ல. அது மட்­டு­மல்­லாது கல்வி இரா­ஜாங்க அமைச்­சர், வட­ப­குதி மக்­கள் மீது கரி­சனை கொண்­ட­வர் என்­பதை மறுத்­து­ரைக்க முடி­யாது. மலை­யக மக…

  15. Courtesy: ஜெரா தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் தவிர்த்து இலங்கை - இந்திய அரசியல் ஒரு சாண்கூட நகராது என்பதற்கு அண்மைய பரபரப்புக்கள் உதாரணமாகும். நேற்றைய தினம் தமிழக அரசியல் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட குழுவினர் திடீரென ஏற்பாடு செய்த ஊடகச் சந்திப்பில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் நலமாக இருக்கிறார் எனச் சொன்ன கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. புலிகள், பிரபாகரன் யார்? தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் தலைவர் பிரபாகரன் அவர்களும் தம் போராட்ட வாழ்க்கையின் ஊடாக விட்டுச் சென்ற செய்தி கனதியானது. அவர்கள் செய்த தியாகங்கள் அளப்பரியது. கொள்கை முப்பத…

  16. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மக்கள் தொகைக் கட்டமைப்பும் பொருளாதாரமும் தொடர்பான ஆதிக்கம் புவிசார் அரசியல் எனப்படும். முதலாவது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மக்களின் அரசியல் ஆதிக்கம் புவிசார் அரசியலில் முக்கியத்துவம் வகிக்கின்றது. இரண்டாவது அக்குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள பொருளாதார வளங்கள் மீதான ஆதிக்கத்தை யார் செலுத்துவது என்பது புவிசார் அரசியலில் முக்கியத்துவம் பெறுகின்றது. மூன்றாவது ஒரு குறித்த நிலப்பரப்பில் உள்ள மக்கள், பொருளாதாரம், மற்றும் அரசு அல்லது அரசுகள் தொடர்பாக அந்த நிலப்பரப்புடன் தொடர்புடைய அரசுகளின் வெளிநாட்டுக் கொள்கை அந்த நிலப்பரப்பின் புவிசார் அரசியலில் முக்கியத்துவம் வகிக்கின்றது. இதையே சுருக்கமாகச் சொல்வதானால் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில…

  17. கொந்தளிக்கும் சமுத்திரம். ஒரு படகு. படகிலே ஒரு தாயும் மகனும் தனியே. நீண்டநாட்களாக தட்டித்தடுமாறி அந்தப்படகிலே பயணிக்கிறார்கள். இன்னமும் எவ்வளவுதூரம் ஓடவேண்டுமோ தெரியாது. தாயும் களைத்துவிட்டாள். மகனுக்கும் ஓடி ஓடிக் களைத்துப்போய்விட்டது. வந்த வழியும் தெரியவில்லை. இன்னமும் எவ்வளவுதூரம், எங்கே போகப்போகிறோம் என்கின்ற எந்த இழவும் அந்தச்சிறுவனுக்கு புரியவில்லை. நாட்கணக்குகளாகவிருந்த காத்திருப்பு, மாதங்களாகி வருடங்களாகிவிட்டன. பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருநாள் காலையில் படகிலே தூக்கம் கலைந்து எழுந்தபோது, தூரத்தே இரண்டு பெரும் மலைப்பாறைகளை சிறுவன் காண்கிறான். தாய் ஏற்கனவே அந்த இரண்டு பாறைகளையும் வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்கிறாள். “அப்பாடி .. ஒருமாதிரி தரையைக் கண்ட…

  18. முல்லைத்தீவில் நடந்த ஆர்ப்பாட்டமும் முந்தநாள் நடந்த பேரவைக் கூட்டமும்- நிலாந்தன்…. மாவலி அதிகாரசபைக்கெதிராக முல்லைத்தீவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தை எவ்வளவு தூரத்திற்கு அசைக்குமோ தெரியவில்லை. ஆனால் 2009 மேக்குப் பின்னரான புதிய தமிழ் எதிர்ப்பு வடிவம் குறித்துச் சிந்திக்கும் எல்லாத் தரப்புக்கும் அதில் கற்றுக்கொள்வதற்கு முக்கிய பாடங்கள் உண்டு. சனச்செறிவுள்ள யாழ்ப்பாணத்தில் அப்படியோர் ஆர்ப்பாட்டத்தைச் செய்வது வேறு. முல்லைத்தீவில் அதைச் செய்வது வேறு. மூவாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அதில் கலந்துகெண்டார்கள். இந்த வகை ஆர்ப்பாட்டங்களில் முதலாவதும் பெரியதுமான ஓர் ஆர்ப்பாட்டம் 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின் யாழ்ப்பாணத்தில்…

  19. ஐ.நாவும் ஜெனீவாவும்: அமெரிக்கா எதிர் சீனா தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 பெப்ரவரி 21 வியாழக்கிழமை, பி.ப. 07:04Comments - 0 உலகப் பொதுமன்றம், என்றும் எல்லோருக்கும் பொதுவானதாக இருந்ததில்லை. இந்தக் குற்றச்சாட்டு ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது முதல் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. இருந்தபோதும், உலக அமைதியைக் காப்பதற்குள்ள ஒரேயொரு மன்றம் என்றவகையில், உலகநாடுகள், அம்மன்றில் அங்கத்துவம் வகித்து வந்துள்ளன. இதுவரை, மூன்றாம் உலகப்போர் ஏற்படவில்லை. ஆனால், அதையொத்த உயிரிழப்புக்களை மனிதகுலம், கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் கண்டுள்ளது. உலகம் பாதுகாப்பான இடமாக இல்லை என்பதை உலகெங்குமுள்ள சாதாரண மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். பட்டினியாலும் பசியாலும், நோ…

  20. பொது எதிரியை மறந்துவிடும் அரசியல்வாதிகள் எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 மே 08 புதன்கிழமை, பி.ப. 07:55 Comments - 0 தமிழீழ விடுதலைப் புலிகளை, இராணுவ ரீதியாகத் தோற்கடித்து, அவ்வமைப்பின் தலைவர்களை அழித்ததன் பின்னர், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ விரும்பியிருந்தால், உலகிலேயே நல்லிணக்கத்துக்குச் சிறந்த உதாரணமான, இந்த நாட்டை வளர்த்தெடுத்திருக்கலாம். உடனடியாகப் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடமைப்பு போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, அப்பகுதிகளில் தொழில்களை ஆரம்பிக்க, அவசரமாக நடவடிக்கை எடுப்பதோடு, முறையான அதிகாரப் பரவலாக்கல் முறையொன்றையும் அமுல் செய்திருந்தால், தமிழ் மக்கள் இதை விட அதிகளவு நம்பிக்கையுடனும் உத்வேகத்துடனும் தேசிய அரசியல் நீரோட்டத்தில்…

  21. கிழக்கு ஆளுநர் மீதான கேள்விகள் Editorial / 2019 ஜூன் 20 வியாழக்கிழமை, மு.ப. 03:55 Comments - 0 -இலட்சுமணன் இலங்கை சுதந்திரம் அடைந்தத‌ற்குப் பின்னர், தமிழர்களின் அரசியல், எதிர்ப்பு அரசியலாகவே கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. சிங்களவர் பதவி ஒன்றுக்கு நியமிக்கப்பட்டால் எதிர்ப்பு; முஸ்லிம் ஒருவர் பதவிக்கு வந்தால் போராட்டம்; ஏன் தமிழர் ஒருவர் நியமனம் பெற்றுவிட்டாலும் அங்கேயும் மறைமுக நடவடிக்கைகளின் ஊடாக எதிர்ப்புணர்வு நகர்த்தப்படுகிறது. இவை, அன்றாடம் நாம் காணும் சாதாரண நிகழ்வுகள்தான். இலங்கையின் சுதந்திரத்துக்காகச் சிங்களத் தலைவர்களும் தமிழ்த் தலைவர்களும் முஸ்லிம் தலைவர்களும் உழைத்தார்கள். தமிழ்த் தலைவர்களுக்கு, தலைமை தாங்கும் அந்தஸ்து கூட வழங்கப்பட்டிருந்த…

  22. முற்றுகைக்குள் திருகோணமலை இலங்கையில் தமிழர் தாயகத்தை இலக்குவைத்த நிலஅபகரிப்புகள் ஓக்லாண்ட் நிறுவகம் - தமிழில் ரஜீபன் சிங்கள அரசாங்கம் வடக்குகிழக்கில் உள்ள சிறுபான்மை தமிழ் முஸ்லீம் மக்களின் தாயகத்தின் மீதான தனது கட்டுப்பாட்டை தொடர்ந்தும் விஸ்தரிக்கின்றது. 15 வருடங்களிற்கு முன்னர் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த போதிலும், இந்த பகுதிகள் பெருமளவிற்கு இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுகின்றன. இந்த நோக்கத்துடன் சிங்கள அரசாங்கம், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலை மாவட்டத்தில் நில அபகரிப்பை தீவிரப்படுத்துகின்றது. அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர் தாயகப்பகுதிகளில் சிங்களவர்களை குட…

  23. நம்பிக்கை பிறந்தால் வழி பிறக்கும் காரை துர்க்கா / 2019 நவம்பர் 05 , மு.ப. 02:37 கடந்த வாரம், யாழ். நகரில் உள்ள தனியார் கல்வி நிலையத்துக்கு முன்பாக, நடுத்தர வயதுடைய ஒருவருடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தக் கல்வி நிலையத்துக்கு மகளைக் சைக்கிளில் கூட்டி வந்து, வகுப்பு முடியும் வரை கா(த்து)வல் இருந்து, மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் குறிப்பிட்டார். மகளின் கல்வி முக்கியம்; ஆனாலும், தனது நேரம் காத்திருத்தலில் வீணடிக்கப்படுவதாகச் சற்று நொந்து கொண்டார். “எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், யாருக்கு வாக்கு அளிப்பதாக உத்தேசம்” எனக் கேட்டேன். “நான் அதைப் பற்றி யோசிக்கவே இல்லை; வேலைக்குப் போறதோட ஐந்து நாள்களும் போய் விடுகின்றன. சனி, ஞாயிற்று…

  24. 2020 இன் திசைவழி: சோசலிசத்தின் மீள்வருகை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஜனவரி 30 காலத்தின் திசைவழிகளைக் காலமே தீர்மானிக்கும் பொழுதுகளில், வரலாறு திருப்பித் தாக்கும். எதுவெல்லாம் முடிந்துவிட்டது என்று முடிவானதோ, அது மீண்டும் புத்தெழுச்சியோடு எழுந்து மீண்டும் வரும். அது முன்பிலும் வலுவாக, உறுதியாக மீளும். 2020ஆம் ஆண்டு, அவ்வகையான எதிர்பார்ப்போடு தொடங்கி இருக்கின்றது. பேச விரும்பாத பொருளைப் பற்றி, பேச விரும்பாதவர்கள் பேச வேண்டிய கட்டாயத்துக்குக் காலம் கொண்டு வந்து விட்டிருக்கின்றது. “அவர்கள் சோசலிசத்தின் தோல்வி பற்றிப் பேசுகிறார்கள். அப்படியென்றால், ஆசியா, ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்காவில் முதலாளித்துவத்தின் வெற்றி எங்கே?” இவ்வாறானதொரு கேள்வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.