அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
இரட்டை வேடம் எப்போதும் பலன் தருமா? பிரேசில் நாட்டுக்கான இலங்கைத்தூதுவர் ஜகத் ஜயசூரிய தமக்கு எதிராகப் போர்க் குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டுள்ளதாகக் கூறிக் கொண்டு படுத்த பாய்க்குக் கூடத் தெரியாமல் திடுதிப்பென்று இலங்கைக்குத் திரும்பியி ருந்தார். அவரது அந்தத் தகவலைக் கேட்டு நாடே குழப்ப முற்றது. இன்றைய கூட்டு அரசைத் தேசத் துரோக அரசு என்று கூற வைக்கும் அளவுக்கு குறிப்பிட்ட அந்தச் செய்தி பாரதூரமான ஒன்றாக அமைந்தது. ‘‘உலகையே வென்று விட்டதாகக் கூறப்பட்டது. பன்னாட்டுச் சமூகம் தற்போது இலங்கையை நேசிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் போர் வீரர்களை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்…
-
- 0 replies
- 478 views
-
-
சுதந்திர வேட்கை என்பதை அடிப்படையாக் கொண்டு ஒவ்வவொரு தேர்தல்களிலும் கூட்டமைப்புக்கு வாக்களிக்கும் மக்கள் கொள்கை அரசியலை தொடர்ச்சியாக நம்பிச் செயற்படக் கூடிய சந்தர்ப்பங்கள் கைநழுவிச் செல்கின்றன. -அ.நிக்ஸன்- தமிழ் மக்கள் கட்சிமாறிச் சென்றவர்களுக்கு ஒருபோதும் வாக்களித்தது கிடையாது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி அரசாங்கத்தக்கு ஆதரவு வழங்கிய உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றம் மற்றும் மாகாண சபை, உள்;ராட்சி சபைத் தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளனர். ஆகவே வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பொறுத்தவரை சுதந்திரத்திற்கான போராட்டம் என்ற மன வேட்கையுடன் வாழ்கின்றனர் என்ற முடிவுக்கு வரலாம். கூட்டமைப்பின் பொறுப்பு ஆனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் அந்த மாறாத ம…
-
- 0 replies
- 477 views
-
-
துணைவேந்தரின் வாக்குறுதியை நம்பத் தயாராக இல்லை – தமிழ் சிவில் சமூக அமையம் 32 Views “நினைவுத் தூபி அழிக்கப்பட்ட இடத்திலேயே மீள அதனை அமைப்பேன் எனச் சொல்லி “யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் அடிக்கல் நாட்டியிருப்பதை நாம் நம்பத் தயாராக இல்லை. இனப்படுகொலையை நினைவு கூரும் தூபியை நீக்கி பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டது போல ‘சமாதானத்’ தூபியோ அல்லது யுத்த வெற்றி தூபியோ அமைக்கப்படலாம் என நாம் அஞ்சுகிறோம். நாம் எப்படி எவ்வாறு எதனை நினைவு கூர வேண்டும் என்பதனை நாமே தீர்மானிக்க வேண்டும்.” இவ்வாறு தெரிவித்திருக்கின்றது தமிழ் சிவில் சமூக அமையம். யாழ். பல்கலைக்கழக நிலைமை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அமையம் இ…
-
- 0 replies
- 477 views
-
-
முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ஸ மற்றும் கூட்டு எதிர்க்கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட பாதயாத்திரை தற்போது இடம் பெற்று வருகின்றது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது கண்டியில் கடந்த 28 ஆம் திகதி ஆரம்பமாகியது. ஐந்து நாட்களாக திட்டமிடப்பட்டிருந்த இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் முதலாம் திகதியுடன் கொழும்பில் நிறைவடைய உள்ளது. சிங்களம் மற்றும் தமிழ் சமுதாயங்கள் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கிய ஆர்ப்பாட்டம் என்றவுடன் ஒரு விடயம் நினைவுக்கு வருகின்றது. இதே போன்றதொரு பேரணி கடந்த 60 வருடங்களுக்கு முன் இடம் பெற்றது என்பது உங்களில் யாருக்காவது தெரியுமா? ஆம், இவ்வாறான எதிர்ப்பு…
-
- 0 replies
- 477 views
-
-
அண்மையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் ஐந்து பிரதான தமிழ்த் தேசிய கட்சிகளும் ஒரு உடன்பாட்டிற்கு வந்திருந்தன. மக்கள் மத்தியிலும் இது ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தது. இதனடிப்படையில் ஐந்து பிரதான கட்சிகளும் 13 அம்சக் கோரிக்கையில் உடன்பட்டிருந்தன. பிரதான சிங்கள வேட்பாளர்களை சந்தித்த பின்னர் இறுதி முடிவெடுப்பதாகவும் உடன்பாடு காணப்பட்டிருந்தது. ஆனால் பிரதான சிங்கள வேட்பாளர்கள் அனைவருமே மேற்படி ஐந்து கட்சிகளின் ஒருமித்த கோரிக்கைகளை நிராகரித்துவிட்டனர். அதற்கும் மேலாக ஆகக் குறைந்தது தமிழ் கட்சிகளை சந்திப்பதற்கான நேரத்தைக் கூட அவர்கள் வழங்கவில்லை. சிங்கள வேட்பாளர்கள் இதனை நிராகரிப்பார்கள் என்பது ஏற்கனவே தெரிந்த ஒரு விடயம்தான். ஆனால் இவ்வாறானதொரு உடன்பாட்டிற்கு இணக்கம்தெரி…
-
- 0 replies
- 477 views
-
-
உறுதியான தலைமைத்துவத்தின் அவசியமும் வெற்றிடமும் தமிழ் அரசியல் வெளியில் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து வழிநடத்திச் செல்லத்தக்க, ஆளுமையுள்ள தலைமைக்கு ஒரு வெறுமை நிலை நிலவுகின்றது என்பது மீண்டும் வெளிப்பட்டிருக்கின்றது. யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் ஏற்பட்ட இந்த இடைவெளி பெரிதாகிச் செல்கின்றதே தவிர குறுகுவதாகத் தெரியவில்லை. அந்த வெறுமையை நீக்குவதற்கு நம்பிக்கை அளிக்கத்தக்க முன்னெடுப்புக்களை யார் மேற்கொள்ளப் போகின்றார்கள் என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலைமைகளை மகாவலி திட்டத்திற்கு எதிரான முல்லைத்தீவின் மக்கள் எழுச்சி பளிச்சிடச் செய்திருக்கின்றது. முல்லைத்தீவு எழ…
-
- 0 replies
- 477 views
-
-
பின்னடைவுகள் முடிவுகளல்ல.. அண்மைக்காலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறிவரும் கருத்துக்கள் தமிழ் மக்களை பெரும் அதிர்ச்சிக்கும், ஏமாற்றத்திற்கும் தள்ளிவிட்டுள்ளது. அண்மையில் கொழும்பில் நடைபெற்ற கூட்டமைப்பின் கட்சிக் கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இந்த அரசாங்கம் புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவதில் தாம் பூரண ஆதரவை வழங்கியதாகவும், அரசோடு இணக்க அரசியல் நடத்தியதாகவும், இந்த அரசாங்கத்துக்கு ஆதரவாக தாம் செயற்பட்டதாகவும் கூறியதுடன் ஆனால் இந்த அரசாங்கம் அரசியல் தீர்வை வழங்கப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரிவதாகவும், ஆகையால் இந்த அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதற்கான நிலைக்கு தாம் தள்ளப்படுவதாகவும்…
-
- 0 replies
- 477 views
-
-
ஜெனிவாவைக் கையாளும் வித்தை - கே. சஞ்சயன் ஜெனிவாவில் அரசாங்கத்துக்குக் காலஅவகாசத்தை அளிக்கும் விவகாரம் தொடர்பாகத் தமிழ் அரசியல் தலைமைகள் குடுமிப்பிடிச் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சூழலில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மிகச் சாவகாசமாகத் தனது உரையை நிகழ்த்தியிருக்கிறார். மங்கள சமரவீரவின் உரையில் இருக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட சில விடயங்களை அவர் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை. 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கையின் இணை அனுசரணையுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நிறைவேற்றத் தவறியிருப்பது பற்றிய பதற்றம் கொஞ்சம் கூட இல்லாமல், வெளிவிவகார அமைச்சர் மங…
-
- 0 replies
- 477 views
-
-
கடந்த காலத்தில் இருந்து விடுபட்டு புதிய வழியில் பிரச்சினைகளை கையாள ஒரு வாய்ப்பு Photo, ECONOMYNEXT 2023 பட்ஜெட் கணிசமான பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேறியமை பாதகமான சூழ்நிலைக்கு மத்தியிலும் அரசாங்கத்தின் நாடாளுமன்ற பெரும்பான்மை உறுதியாக இருக்கிறது என்பதை நிரூபிக்கிறது. ஆளும் கட்சி இருபதுக்கும் அதிகமான அதன் உறுப்பினர்களை இழந்துவிட்டது. அவர்கள் இப்போது கட்சியின் நிலைப்பாடுகளை பின்பற்றுவதில்லை. ஏனைய உறுப்பினர்கள், தெளிவான தலைமைத்துவம் இல்லாவிட்டாலும் கூட ஒன்றிணைந்து நிற்கிறார்கள் போன்று தெரிகிறது. பிரிந்துசென்ற குழுக்களில் ஒன்றுக்கு தலைமைதாங்கும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆளும் கட்சி உறுப்பினர்களை கடுமையாக கண்டனம் செய்தார். எந்த ஆணை மீது கடந்த நாட…
-
- 0 replies
- 477 views
-
-
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படுமா?
-
- 1 reply
- 477 views
-
-
யுத்த காலத்தில் எமது மக்களின் வாழ்க்கை தன்னிறைவுக்குட்பட்டதாகவே இருந்தது: சி.வி.விக்கினேஸ்வரன் Bharati May 4, 2020 யுத்த காலத்தில் எமது மக்களின் வாழ்க்கை தன்னிறைவுக்குட்பட்டதாகவே இருந்தது: சி.வி.விக்கினேஸ்வரன்2020-05-04T23:08:30+00:00Breaking news, அரசியல் களம் “30 வருடங்கள் யுத்தம் நடைபெற்றபோது, எமது மக்களின் வாழ்க்கை தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவுக்கு உட்டபட்டதாகவே இருந்தது. இது வரலாற்று உண்மை. எமது மக்கள் மத்தியில் இருந்துதான் அத்தகைய செயல்வீரர்கள் உருவாகி இருந்தார்கள். ஆனால், யுத்தம் முடிவடைந்து கடந்த 10 வருடங்களுக்குள் எமக்குத் தெளிவு இல்லாமல் போய்விட்டது” என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார். சென…
-
- 0 replies
- 477 views
-
-
ஜெனீவாவில் கூட்டமைப்பு என்ன செய்வதாக உத்தேசம்? ப. தெய்வீகன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடர், அடுத்த வாரம் - ஜூன் 13 ஆம் திகதி, ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. ஜூலை முதலாம் திகதிவரை இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரில், ஜூன் 29ஆம் திகதி, இலங்கை தொடர்பாக கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பிலான முன்னேற்றங்கள் குறித்த வாய்மொழி மூல அறிக்கையை, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன் சமர்ப்பிக்கவுள்ளார். கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர், இலங்கைக்கு வந்து சில முக்கிய சந்திப்புக்களை மேற்கொண்டு, இலங்கை அரசாங்கத்தின் இதுவரைகால நடவடிக்கைகள் எவ்வளவு திருப்திவாயந்தவைய…
-
- 0 replies
- 477 views
-
-
ராஜபக்ஷர்களின் ஆட்சியில் திவாலாகும் நாடு புருஜோத்தமன் தங்கமயில் ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சி பீடமேறி, ஒன்றரை ஆண்டுகளுக்கு உள்ளேயே, நாடு திவாலாகும் கட்டத்தை அடைந்திருக்கின்றது. ஏற்கெனவே பெறப்பட்ட கடன்களுக்கான வட்டிகளைச் செலுத்துவதற்கே, கடன்களைப் பெற வேண்டிய நிலை; உணவுப் பொருட்களின் இருப்பு அபாயக்கட்டத்தை அடைந்திருக்கின்றது; ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வழங்குமா என்ற சந்தேகம் நீடிக்கின்றது; உள்நாட்டு உற்பத்தி பாரிய வீழ்ச்சியைச் சந்தித்து இருக்கின்றது; விவசாயிகள் உரத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம், கறுப்புச் சந்தை பெரியளவில் விரிந்திருக்கின்றது. அங்கு ஒரு சில பண முதலைகளுக்கான வசதி வாய்ப்புகள் தங்கு தடைய…
-
- 2 replies
- 477 views
-
-
-
- 0 replies
- 477 views
-
-
இலங்கைத் தேசியம் என்ற நீரோட்டத்தில் தமிழ் மக்களும் இணைந்து விட வேண்டும் என்பது இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் உள்ளார்ந்த எதிர்ப்பார்ப்பாகும். அதற்கான இடத்தை இந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தி விட்டது என்ற நம்பிக்கையும்; உண்டு. 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விட்டதால் மஹிந்த ராஜபக்ச வெற்றியடைந்தார். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிதத்தால் மஹிந்த தோல்வியடைந்தார். -அ.நிக்ஸன்- 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விட்டதால் மஹிந்த ராஜபக்ச வெற்றியடைந்தார். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிதத்தால் மஹிந்த ராஜபக்ச தோல்…
-
- 0 replies
- 477 views
-
-
சர்வதேச நாணய நிதியம்: கலைய வேண்டிய மாயைகள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ சர்வதேச நாணய நிதியத்திடம் நாட்டை அடகு வைப்பது என்று, பலர் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள். இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, சர்வதேச நாணய நிதியம்தான் ஒரே வழி என்று, மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. சர்வதேச நாணய நிதியம் கடனை வழங்கி விட்டால், அனைத்துப் பிரச்சினைகளும் விரைவில் தீர்ந்து விடும் என்ற பிம்பம், தொடர்ச்சியாகவும் கவனமாகவும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இன்று, சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவது பற்றிய விமர்சனங்களை முன்வைப்போர், மாற்றுக் கருத்துகளைத் தெரிவிப்பவர்கள், எதிர்ப்பாளர்கள் ஆகியோர் எதிரிகளாகவும் தேசத்துரோகிகளாகவும் கட்டமைக்கப்படுகிறார…
-
- 1 reply
- 477 views
-
-
மாகாணசபைத் தேர்தல்: புதிய அரசியல் தடத்தைப் பதியுமா? -க. அகரன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தாக்கத்தில் இருந்து, மீள்வதற்குள்ளாகவே மாகாணசபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய இக்கட்டான நிலைக்குள் கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கில், தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாகத் தம்மைக் கருதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், பின்னடைவைச் சந்தித்தமையை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதற்கான காரணங்களைத் தேடிய அலைச்சலை, முடிவுக்குக் கொண்டு வந்ததாகத் தெரியவில்லை. கொழும்பில் நடைபெற்று முடிந்த, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் காரசாரமான வாதப்பி…
-
- 0 replies
- 477 views
-
-
யாழ். கூச்சல் குழப்பங்களும் கொழும்பின் கொண்டாட்டமும் சிரேஷ்ட அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய ‘இலங்கை அரசியல் யாப்பு (டொனமூர் முதல் சிறிசேன வரை 1931 -2016)’ என்கிற ஆய்வு நூலின் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை (ஒக்டோபர் 01, 2016) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ஒரு நூல் வெளியீட்டு விழா என்கிற அளவோடு மாத்திரம் நின்றுவிடாமல், ‘புவிசார் அரசியலில் கைதிகளாய் இருக்கின்ற ஈழத் தமிழர்கள்’ என்கிற விடயத்தினை முன்னிறுத்திய திறந்த கலந்துரையாடலாகவும் அந்நிகழ்வு வடிவமைக்கப்பட்டிருந்தது. தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், தொடர்ந்தும் இயங்கும் பல கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும், நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் அரசியல் ஆய்வாளர்களும் கல்விமா…
-
- 0 replies
- 477 views
-
-
ராஜபக்ஷர்கள் மீதான அதிருப்தியும் எதிர்க்கட்சிகளும் புருஜோத்தமன் தங்கமயில் ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து, 18 மாதங்களுக்குள்ளேயே தென் இலங்கை மக்களிடம் பெரும் அதிருப்திகளைச் சந்தித்து நிற்கின்றார்கள். ஜனாதிபதித் தேர்தலில் 69 இலட்சம் வாக்குகளையும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அண்மித்த வெற்றியையும் ராஜபக்ஷர்கள் பெற்றிருந்தார்கள். அடுத்த பத்து ஆண்டுகளில், அசைத்துப் பார்க்க முடியாத ஆட்சிக் கட்டமைப்பொன்றை, ராஜபக்ஷர்கள் நிலைப்படுத்துவார்கள் என்று நம்பப்பட்டது. ஆனால், சில மாதங்களுக்குள்ளேயே ராஜபக்ஷர்களுக்கு எதிரான மனநிலை தென் இலங்கையில் எழுந்திருக்கின்றது. கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்து நெருக்கடிகள், மக்களைப் பாடாய்படுத்த…
-
- 0 replies
- 477 views
-
-
இலங்கையில் ஒன்பது தசாப்தகால வரலாற்றைக் கொண்ட சமஷ்டி முறை குறித்த கருத்தாடல் Veeragathy Thanabalasingham on January 4, 2023 Photo, CHANNEL4 இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு வழிமுறைகளை ஆராய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் கூட்டிய நாடாளுமன்ற கட்சிகளின் மகாநாட்டில் தமிழ்க்கட்சிகள் பிரதானமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளை மூன்று கட்டங்களில் அணுகுவதற்கு யோசனைகளை முன்வைத்தது. முதலாவது, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல்போனவர்கள் விவகாரம், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அரசினால் கையகப்படுத்தப்பட்ட தனியார் நிலங்களை விடுவித்தல், தொல்பொருளிய…
-
- 0 replies
- 477 views
-
-
நாட்டுப்பற்று எனும் ‘முகமூடி’ -என்.கே. அஷோக்பரன் பிரித்தானிய அறிஞர் சாமுவல் ஜோன்ஸன், “நாட்டுப்பற்று (patriotism) என்பது, அயோக்கியர்களின் கடைசிச் சரணாலயம்” என்று, 1775இல் தெரிவித்திருந்தார். இப்படிச் சொன்னதன் மூலம், உண்மையாகவும் நேர்மையாகவும் தன் நாட்டையும் மக்களையும் நேசிப்பவர்களை ஜோன்ஸன் குறை சொல்லவில்லை. மாறாக, நாட்டுப்பற்று எனும் முகமூடியைப் பயன்படுத்தும், ‘பசுத்தோல் போர்த்திய நரிகளையே’ அவர் கடிந்துகொண்டார். ஒவ்வொரு மனிதனுக்கும் தான், தன்னுடைய குடும்பம், தன்னுடைய சுற்றம், தன்னுடைய சமூகம், தன்னுடைய இனம், தன்னுடைய மொழி, தன்னுடைய மதம், தன்னுடைய பண்பாடு, தன்னுடைய கலைகள், தன்னுடைய அடையாளம் என்று, தான் சார்ந்தவை சார்ந்த பிரக்ஞையும் ஈர்ப்பும் பெருமையும் காணப்ப…
-
- 0 replies
- 477 views
-
-
தலைவிதியை தீர்மானிக்கப் போகிறவர்களுக்கு நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் புதிய தேசிய அரசாங்கத்தின் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கவேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாகும். அதுமட்டுமின்றி தேசிய அரசாங்கத்தின் புதிய முயற்சிகள் ஊடாக புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கையும் மக்கள் மத்தியில் உள்ள நிலையில் அந்த நம்பிக்கையில் ஏமாற்றத்தை அரசாங்கம் ஏற்படுத்திவிடக்கூடாது. அந்தவகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினை தீர்வு விவகாரத்தில் புதிய அணுகுமுறையை முன்னெடுத…
-
- 1 reply
- 476 views
-
-
சமூக நீதியைப் புறந்தள்ளும் தமிழ்த் தேசியம் இப்போது எல்லோரும் தமிழ்த் தேசியம் குறித்துப் பேசுகிறார்கள். பழைய தமிழ்க் கட்சிகள் எல்லாமே, தமிழ்த் தேசியத்தைக் காப்பதற்காகவே, தேர்தலில் போட்டியிடுவதாகச் சொல்கின்றன. ஆனால், அவை ஒவ்வொன்றும் தமிழ்த் தேசியம் குறித்தான தமது கற்பிதங்களை வைத்திருக்கின்றன. ஆய்ந்து நோக்கில், இவர்கள் சொல்கின்றதும் வரையறுக்கின்றதுமான தமிழ்த் தேசியம் என்பது, மக்கள் நலன் சார்ந்ததல்ல என்பது விளங்கும். தமிழ்த் தேசியம், தமிழ் மக்களை எத்தகையதொரு முட்டுச் சந்திக்குக் கொண்டு வந்திருக்கின்றது என்பது பற்றி, ஆழமாகச் சிந்திப்பதற்கான வாய்ப்புகளை, வரலாறு தொடர்ச்சியாக வழங்கி வந்திருக்கிறது. ஆனால், நாம் அதற்குத் தயாராக இருந்ததில்லை. அதற்கான விலையை, நாம் தொ…
-
- 0 replies
- 476 views
-
-
வீரகத்தி தனபாலசிங்கம் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு மாதம் நிறைவடையப்போகிறது. இந்த ஒருமாத காலத்தில் அவரும் தேசிய மக்கள் சக்தியின் குறிப்பாக ஜனதா விமுக்தியின் (ஜே.வி.பி.) முக்கிய தலைவர்களும் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு இலங்கை அரசியல் நிலக்காட்சியில் காணப்படக்கூடியதாக இருக்கும் மாறுதல்கள் குறித்து பெருமையாக பேசுகிறார்கள். பல அரசியல்வாதிகள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் விடுவதற்கு தீர்மானித்ததை ஜே. வி.பி.யின் தலைவர்கள் பெரிய ஒரு மாறுதலாக குறிப்பிடுகிறார்கள். தேர்தல்களில் தோல்வியடைந்தால் அல்லது இறந்து போனால் மாத்திரமே கடந்த காலத்தில் அரசியல்வாதிகள் ஓய்வுபெற்ற வரலாற்றைக் கொண்ட இலங்கை…
-
- 0 replies
- 476 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 476 views
-