அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
தேசிய அரசாங்கம் தேவையா? முகம்மது தம்பி மரைக்கார் / 2019 பெப்ரவரி 05 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:32Comments - 0 Views - 0 தேசிய அரசாங்கமொன்று நாட்டில் இருந்தது. அதற்கு ‘நல்லாட்சி அரசாங்கம்’ என்று பெயர் வைத்திருந்தார்கள். ஆனால், கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதியுடன், தேசிய அரசாங்கம் இல்லாமல் போய்விட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் உருவான மோதல், தேசிய அரசாங்கத்தை இல்லாமலாக்கியது. இப்போது ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. தனிக் கட்சி அல்லது அணியொன்று அமைக்கும் ஆட்சியில், ஜனாதிபதி உள்ளடங்கலாக அமைச்சர்களின் எண்ணிக்கை 30ஐத் தாண்ட…
-
- 0 replies
- 694 views
-
-
தேசிய அரசாங்கம் மக்களை ஏமாற்றும் பொறிமுறை எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 பெப்ரவரி 06 புதன்கிழமை, மு.ப. 01:35 Comments - 0 தேசிய அரசாங்கம் என்ற போர்வையில், அரசாங்கம் உண்மையிலேயே மேலும் பலருக்கு, அமைச்சர் பதவிகளை வழங்கவே போகிறது என்பது, பொதுவாக, நாட்டில் சகலரும் அறிந்த விடயமாகும். அது, எல்லோரும் அறிந்த விடயம் என்பதை, அரசாங்கமும் அறிந்த நிலையில், எல்லோருக்கும் அது தெரியும் என்பதை, தமக்குத் தெரியாது என்பதைப் போல் பாசாங்கு செய்து கொண்டு, அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, அரசாங்கம் முயல்கிறது. எல்லோரும் மோசமானது என அறிந்திருக்கும் ஒரு விடயத்தை, அவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்பதைத் தாமும் அறிந்திருக்கச் செய்வதானது, வெட்கமின்மை தவிர வேறொன்றுமல்ல. தேச…
-
- 0 replies
- 869 views
-
-
தேசிய அரசியலை மீண்டும் தமிழ்நாடு தீர்மானிக்கும் எம். காசிநாதன் / 2019 மார்ச் 19 செவ்வாய்க்கிழமை, பி.ப. 12:48 Comments - 0 கோடை வெப்பம், கொழுந்து விட்டுத் தாக்கத் தொடங்கி இருக்கின்ற நிலையில், பரபரப்பான பேச்சுவார்த்தைகள், விறுவிறுப்பான பேட்டிகள் என்று, கடந்த சில வாரங்களாகச் சூடாகிக் கொண்டிருந்தது தமிழகத் தேர்தல் களம். இப்போது, தொகுதிப் பங்கீடுகள் முடிந்து, அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது அந்தக் களம். திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் மட்டுமே, கூட்டணி அமைக்கும் பலமுள்ள கட்சிகள் என்பது, மீண்டுமொருமுறை ஜெயலலிதாவும் கருணாநிதியும் இல்லாத சூழ்நிலையிலும் பறை சாற்றப்பட்டுள்ளது. இருபெரும் தலைவர்களும் இல்லாத சூழ்ந…
-
- 0 replies
- 835 views
-
-
தேசிய அளவில் பரிணமித்த கல்முனை விவகாரம்: தந்திரோபாய நடவடிக்கையா..? "கல்முனை உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் விவகாரம் தீவிரமடைந்து, மூவின மக்களிடையேயும் மனக் கசப்பையும் வெறுப்புணர்வையும் வளர்த்துச் செல்கின்ற ஒரு மோசமான நிலைமை உருவாகி இருந்த போதிலும், அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் இந்த விடயத்தில் அசமந்தப் போக்கைக் கடைப்பிடித்து வருவது கவலைக்குரியது." கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தக் கோரி நடத்தப்பட்ட போராட்டமும், அதனை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டமும் இந்த நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லுறவு மோசமடைந்து செல்வதைக் கோடிட்டுக் காட்டியிருக்கின்றன. இந்த செயலகத்தை முழும…
-
- 0 replies
- 507 views
-
-
தேசிய இனங்களின் விடுதலைக்கு கற்றலோனியர்கள் முன்னுதாரமாணவர்களே! கற்றலோனியரின் தனிநாட்டுக் கோரிக்கை சர்வதேச மட்டத்தில் அதிக சர்ச்சைகளை தூண்டிவிட்டுள்ளது. சுயாட்சிக்குரித்துடைய அந்தஸ்த்தை அனுபவித்த கற்றலோனியர்கள் பிரிந்து சென்று தனிநாடு அமைக்க முயன்றனர். அதற்கான ஆதரவை தமது மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டாலும் உலக நாடுகளிடமிருந்து ஆதரவும் பெற வேண்டுமென்பதும் என்றுமே வலிமையான மூலக்கூறாக அமைந்துள்ளது. கற்றலோனியரின் தனிநாட்டுக்கான அணுகுமுறை எதிர்நோக்கியுள்ள பிரச்சனையை அலசுவதே இக் கட்டுரையின் நோக்கமாகும். முதலில் ஸ்பெயின் நாட்டின் அதிரடி முடிவுகளை அவதானிப்போம். கற்றலோனிய பிராந்திய நாடாளுமன்றத்தினை கலைப்பதாக ஸ்பெயின் பிரதமர் மரியானோ அறிவித்தார். ஸ்பெயினி…
-
- 0 replies
- 590 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-18#page-18
-
- 0 replies
- 251 views
-
-
இந்தத் தொடரின் நோக்கம் மலரவிருக்கும் சுதந்திர தமிழீத்தின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்ற போதனை நோக்கோடு எழுதப்படவில்லை. மாறாக பொதுவில் நாடுகளின் தேசிய நலன்கள் அதன் அதிகார கட்டமைப்புகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் என்பன பற்றிய சில அடிப்படைப் புரிதல்களை தர முற்படுவதும் அதன் அடிப்படையில் "சர்வதேசம்" அல்லது "சர்வதேசச் சமூகம்" மற்றும் "உலக ஒழுங்கு" போன்ற பெயரளவில் பரந்து விரிந்த அர்த்தத்தை தரும் பதங்களிற்கான தற்போதைய யதார்த்தபூர்வமான அர்த்தத்தை விளங்க முற்படுவதும் ஆகும். இந்தப் பின்னணியில் இறுதியாக எம்மைப் போன்று அங்கீகாரத்தை வேண்டி நிற்கும் தேசியங்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் அவற்றிற்கான பின்னணிகள் பற்றி சுருக்கமாக பார்ப்போம். தமிழ்த் தேசியதின் மீள…
-
- 8 replies
- 5.7k views
-
-
தமிழர்களின் மண்ணில் இடம்பெறும் தேசிய நிகழ்வுகள், தமிழர்களின் பண்பாடு ஆகிவிட்டன. மாவீரர் நாள் தொடங்கி, தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு நாள், அன்னை பூபதி அவர்களின் நினைவு நாள், கப்டன் மில்லரின் நினைவு நாள் என்று வருடம் முழுவதும் தேச விடுதலைக்கு தங்களை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்களை அனுஷ்டிப்பது தாயகத்தின் வழக்கமும் பண்பாடும் ஆகும். 2009இற்குப் பின்னர், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தையும் அதன் வரலாறுகளையும் மாத்திரமின்றி, மாவீரர்களின் நினைவு நாட்களையும் கட்சி அரசியலுக்கு பயன்படுத்தும் இழிவரசியல் நிலமை தற்போது ஏற்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், மாவீரர் நாட்கள் உள்ளிட்ட தேசிய நிகழ்வுகள் யாவுமே பொது இடங்களிலேயே நடாத்தப்பட்டுள்ளன. பொது மக்…
-
- 1 reply
- 1k views
-
-
தேசிய நிதி கட்டமைப்பின் 13 விடயங்களை இலக்கு வைக்கும் சர்வதேச நாணய நிதியம் By NANTHINI 12 NOV, 2022 | 12:25 PM (லியோ நிரோஷ தர்ஷன்) சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வரும் அரசாங்கம், மறுபுறம் கடன் மறுசீரமைப்பு குறித்து இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் கலந்துரையாடி வருகின்றது. அந்த வகையில் அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து கண்காணிக்கவும், தேவையான ஒத்துழைப்புகளை வழங்கவும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகள் கொழும்பில் அரச தரப்புடன் தொடர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதனடிப்படையில் இலங்கையின் நிதி கட்டம…
-
- 0 replies
- 229 views
- 1 follower
-
-
தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் பந்தாடப்பட்ட மக்கள் தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கையில், சட்டம் ஒழுங்கிற்கு அப்பால் இராணுவ ரீதியிலான நடத்தைகள் பாரதூரமானவையாக இருக்கின்றன என்ற ஓர் உண்மை தற்போது வெளிப்பட்டுள்ளது. ஆவா குழு பற்றிய விவாதங்களுக்கிடையில் இக் குழுக்களின் பின்னணியில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ராஜபக் ஷ இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ண தெரிவித்துள்ளார். போருக்குப் பின்பாக அரச இயந்திரம் தேசிய பாதுகாப்பு என்று கூறிக்கொண்டு மக்கள் மீது பல்வேறுபட்ட நெருக் கடிகளை ஏற்படுத்தியே வந்துள்ளது என்பது அமைச்சரவைப் பேச்சாளரின் தெரிவிப்புக்களிலிருந்து ஏற்றுக்கொள்…
-
- 0 replies
- 439 views
-
-
தேசிய பாதுகாப்பும் 19ஆவது திருத்தச்சட்டமும் by A.Nixon புதிய அரசின் நூறுநாள் வேலைத் திட்டத்தில் 19ஆவது திருத்தச்சட்டம் முக்கியமானது. குறிப்பாக நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து நாடாளுமன்றத்திற்கும் பிரதமருக்கும் அதிகாரங்கள் பகிரப்படும் என்பது குறித்து மக்களுக்கும் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், வர்த்தமானி அறிவித்தலின் மூலப் பிரதியில் கூறப்பட்டிருந்த ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பது குறித்த விடயங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அரசியல் கட்சிகளும் தொழிற்சங்க அமைப்புகளும் குற்றம் சுமத்தியிருந்தன. ஆதரிக்கவேண்டிய தேவை வர்த்தமானி அறிவித்தலின் மூலப்பிரதியில் கூறப்பட்டிருந்த நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றுதல் என்பதும், ஜன…
-
- 0 replies
- 452 views
-
-
தேசிய பிரச்சினை தீர்வுக்கு அவசியமான மன்னிக்கும் பெருந்தன்மை March 3, 2022 Photo, Selvaraja Rajasegar நீண்டகாலமாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த எட்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கைதிகள் அரசாங்கத்தினால் விடுதலை செய்யப்பட்டிருப்பது எதிர்பாராத ஒன்று. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அண்மைக்கால போராட்ட இயக்கத்துடன் சம்பந்தப்பட்டவர்களில் சமார் 4000 பேரை கைதுசெய்து தடுத்து வைத்தது என்றாலும் அவர்களில் பலர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஆனால், நூற்றுக்கணக்கானவர்கள் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் பல மாதங்களாக வாடுகிறார்கள். அவர்களை விடுதலை செய்யவேண்டும் அல்லது மன்னிப்பு வழங்கவேண்டும் என்று உள்நாட்டு மற்றும் சர்…
-
- 1 reply
- 296 views
- 1 follower
-
-
கலாநிதி ஜெகான் பெரேரா நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஊழலுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதே ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது. அந்த கட்சி மீது மக்களுக்கு பெரும் கவர்ச்சி ஏற்படுவதற்கும் அதுவே பிரதான காரணமாகவும் இருந்தது. உயர் மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரை தலைவிரித்தாடும் ஊழல் 1970 களின் பிற்பகுதியில் திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அரசாங்கத்துறையையும் தனியார்துறையையும் தழுவியதாக வழமைானதாக்கப்பட்டுவிட்டது. பாரிய அபிவிருத்தி திட்டங்களும் வெளிநாட்டு உதவிகளும் அதிகாரப் பதவிநிலைகளில் இருந்தவர்கள் ஊழலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்கின. 2022 பொருளாதார வீழ்ச்சியும் அதன் விளைவாக மக்க…
-
- 0 replies
- 162 views
- 1 follower
-
-
தேசிய பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை வலுப்படுத்த வேண்டியது அவசியம் Photo, AP/ Eranga Jayawardena via Yahoo News இதுகாலவரை தங்களது அதிகாரம், மதிப்பு மற்றும் சட்ட விலக்கு ஆகியவை காரணமாக தீண்டப்படமுடியாதவர்களாகக் கருதப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகள் மூவரை நேரடியாக பாதித்த கடந்த வாரத்தைய எதிர்பார்க்கப்படாத நிகழ்வுகள், தீர்க்கப்படாமல் இருக்கும் போர்க்கால மனித உரிமைகள் பிரச்சினைகளைக் கையாளுவதற்கு உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையொன்றை அமைக்கும் அரசாங்கத்தின் யோசனைக்கு பெரும் ஊக்கத்தைக் கொடுக்கும். முதலாவது, முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்ஷவும் கோட்டபாய ராஜபக்ஷவும் பதவியில் இருந்த காலப்பகுதிகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்காக அவர்களுக்கு எதிராக தடைகள் விதிக்கப்…
-
- 0 replies
- 765 views
-
-
*அரசாங்கத்திற்குள் குழப்பம்! *உள்ளக முரண்பாடுகள் என்பது அநுரவை கவிழ்க்கும் நோக்கம் கொண்டதல்ல... *தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் சிலரின் தீவிர போக்கு அநுரவுக்கு ஆபத்தாக அமையும்...! *முடங்கியுள்ள மக்களுக்கான சில திட்டங்கள்...! *பிரதமர் ஹரிணியை மையப்படுத்தி அநுர கையாளும் அமெரிக்க - இந்திய உறவில் சந்தேகம் கொள்ளும் ஜேவிபியின் தேசிய நிறைவேற்றுக் குழுவின் சில உறுப்பினர்கள்... ---- ---- ----- ----- ஜேவிபியை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்குள் குழப்பங்கள் என சிங்கள நாளிதழ்கள், சிங்கள சமூக வலைத்தளங்களில் செய்திகள் - தகவல்களைக் காண முடிகிறது. ஆனால் அந்த தகவல்களில் உண்மையில்லை என அரசாங்கம் பல தடவைகள் மறுத்திருக்கிறது. தொடர்ந்தும் மறுதலித்து வருகின்றது. இலங்கைத்த…
-
- 0 replies
- 189 views
- 1 follower
-
-
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஜே.வி.பி. தலைவர் ரோஹண விஜேவீர கொலை தொடர்பில் விசாரணை செய்யுமா ? எதிர்ப்பாளர்களின் பார்வையில், விஜேவீர ஒரு சந்தர்ப்பவாதி, அவர் என். சண்முகதாசனின் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பிளவுபடுத்தி, 1971 ஆம் ஆண்டு ஏப்ரலில் அரச அதிகாரத்திற்கு முயற்சித்து தனது சொந்த இராணுவத்தை உருவாக்குவதற்காக அதன் உறுப்பினர்களை இழுத்துக்கொண்டார். சுதந்திரத்திற்குப் பிறகு நிறுவப்பட்ட சமூக முறைமையிலிருந்து அவரது அபிமானிகள் மத்தி யில் அவர் ஒரு இலட்சியவாதி, அவர் ஏழை விவசாயிகளையும் குறிப்பாக ஒதுக்கப்பட்ட அதன் விளிம்புநிலை இளைய பிரிவினரையும் அணிதிரட்டியவர் .” டி .பி .எஸ் . ஜெயராஜ் ஜே.வி.பி யினால் ஏற்பட்ட வன்முறையின் பாரிய தன்மை மற்றும் ஜே.வி.பி தலைவர்ரோஹண விஜேவ…
-
- 0 replies
- 393 views
-
-
தேசிய மக்கள் சக்தி போன்ற சக்திகளை தமிழ் இளைஞர்கள் நாடிச்செல்லும் காரணம் என்ன? – மட்டு.நகரான் November 12, 2024 இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் திருவிழா வடக்கு கிழக்கிலும் இடம்பெற்றுவருகின்றது. தமிழர்களின் உரிமைப்போராட்டம் திட்டமிட்டு மழுங்கடிக்கப்பட்ட நிலையில் இலங்கையின் பாராளுமன்ற தேர்தலின் மூலம் தமிழர்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்போம் என்ற வகையில் தொடர்ச்சியான பிரசாரங்கள் வடகிழக்கில் முன் னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நாட்டில் தமிழர்கள் பௌத்த பேரின வாதத்தினால் நசுக்கப்பட்டபோது அதற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் வெடித்த நிலையில் தொடர்ச்சியாக தமிழர்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் எழுப்பும் நிலைமைகள் காரணமாக இந்த நாட்டில் தமிழர்களுக்கான உரிமைகள் வழங்கப்படவேண்…
-
- 0 replies
- 297 views
-
-
16 MAR, 2025 | 03:31 PM டி.பி.எஸ். ஜெயராஜ் "தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் வெற்றி பெற்று நிருவாகங்களை அமைக்கும்." கடந்த வியாழக்கிழமை (மார்ச் 13) யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் கிளப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோது கடற்தொழில், நீர்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மிகுந்த நம்பிக்கையுடன் கூறினார். எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடவிருக்கும் தேசிய மககள் சக்தி வேட்பாளர்களின் கட்டுப்பணத்தை செலுத்துவதற்காக அவர் யாழ்ப்பாணம் தேர்தல் செயலகத்துக்கு சென்றிருந்தார். அவருடன் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் பிரதேச அமைப்பாளர்களுடன் கூட இருந்தனர். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் முக…
-
- 0 replies
- 389 views
- 1 follower
-
-
தேசிய மக்கள் சக்திக்கு முன்னால் இருக்கும் உண்மையான சவால் கலாநிதி ஏ.எம். நவரட்ண பண்டார கடந்த 40 ஆண்டுகளில், உலகம் தேசியவாதம் மற்றும் உலகமயமாக்கலுடன் தொடர்புடைய பெறுமான முறைமை களுக்கு இடையே ஒரு பிளவுபட்ட உறவை அனுபவித்துள்ளது, அதனை சமூக விஞ்ஞானிகள் நவீன சகாப்தத்தின் இரண்டு வரையறுக்கும் அம்சங்களாக அடையாளம் கண்டுள்ளனர், இது கடந்த காலத்தில் முழுமையாக்கும் செயல்முறைகளை உருவாக்குகிறது. இலங்கையின் அண்மைக்கால அரசியல் வரலாற்றில் இரண்டு குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் – 2022 ஆம் ஆண்டு அரகலய (மக்கள் எழுச்சி) மற்றும் அரச அதிகாரத்தை வைத்திருப்பவராக தேசிய மக்கள் சக்தியின் (என் பி பின் ) எழுச்சி – இந்த உலகளாவிய வளர்ச்சிக்கு இணையாக நிகழ்ந்தது. மேலே குறிப்பிடப்பட்ட மாறிவரும் உலகளாவி…
-
- 1 reply
- 285 views
-
-
-ஐ.வி.மகாசேனன்- ஜே.வி.பி. பரிமாணமாகிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனரஞ்சக அரசியலின் தேர்தல் யுக்திகள் தொடர்பிலான விமர்சனங்கள் அரசியல் அவதானிகளால் சுட்டிக்காட்டப்படுகின்றது. குறிப்பாக ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன்னரான ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் பிரசாரங்களில் அதிகளவில் வாக்குறுதிகளை வழங்கினார்கள். அதன் செயலாக்க தன்மைகள் தொடர்பில் சமகாலத்தில் அரசாங்கம் மீது குற்றச்சாட்டுகள் நிறைந்துள்ளன. இந்த பின்னணியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரசாரங்களில் கடந்த காலங்களை இருண்ட காலமாகவும், பழையவர்களை சாத்தான்களாகவும் சித்தரித்து, தங்களை புறக்கணிப்பதனூடாக பழைய இருண்ட காலத்திற்குள் சாத்தானின் பிடிக்குள் செல்வீர்களென்ற எச்சரிக்கை அச்சுறுத்தல்களை முன்வைக்கின்றார்க…
-
- 0 replies
- 327 views
- 1 follower
-
-
19 APR, 2025 | 01:12 PM மன்னாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் இல்லாத உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதற்கு முன்னர் 'பத்து தடவைகளுக்கு மேல்' சிந்தித்தே தீர்மானிக்கப்படும் எனக் கூறியிருந்தார். வெசாக் மாதத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு வாக்குகளைப் பெறுவதற்காக, நிதியமைச்சர் பதவியை வகிக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பிரச்சார மேடைகளில் மீண்டும் மீண்டும் வெளியிடும் கருத்துகள் கடுமையான விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது. ஆளும் கட்சி அதிகாரத்தைப் பெறும் உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு எந்தப் பொறுப்பும் இல்லாமல் மத்திய அரசு நிதியளிக்கும் எ…
-
- 0 replies
- 222 views
- 1 follower
-
-
*நிகழ்ச்சி நிரல்* 6.30 ஆரம்பம்,அறிமுகம் (9am Toronto 2 pm London UK) 6.35 கனடா அமைப்பாளர் உரை 6.45 கருத்து பகிர்வு *Dr.அருள்கோகிலன்* தேசியபுத்திஜீவிகள் அமைப்பு வடமாகாணம் 7.30 கேள்விபதில்கள் 8.30 நிறைவுரை. Topic: புலம்பெயர் தோழர்களுடன் விசேட கூட்டம் Time: Oct 27, 2024 06:00 PM Colombo Join Zoom Meeting https://gurus-club.zoom.us/j/81920505564?pwd=8Q3PB3qGPqPpqnqGOPq9CvzWJ4B6br.1 Meeting ID: 819 2050 5564 Passcode: 271786
-
- 0 replies
- 1.3k views
-
-
தேசிய மக்கள் சக்தியை தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகளால் சமாளிக்க முடியுமா? Sivarasa Karunakaran Photo, Anura Kumara Dissanayake fb official page தேசிய மக்கள் சக்தியின் அலையைக் கடந்து, வடக்குக் கிழக்கின் அரசியலைத் தமிழ்த் தரப்புகள் முன்னெடுப்பது எப்படி? இந்தச் சவாலும் நெருக்கடியும் தமிழ்த் தரப்புகளுக்கு மட்டுமல்ல, வடக்குக் கிழக்கிலுள்ள முஸ்லிம் தரப்புகளுக்கும் உண்டு. ஏன் மலையகக் கட்சிகளும் இதை எதிர்கொள்ள வேண்டிய சவாலாக – நெருக்கடியாக – இந்தச் சூழல் உருவாகியுள்ளது. நேரடியாகச் சொன்னால், தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் அரசியல் எதிர்காலம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது இந்தச் சூழல். மறுவளமாகப் பார்த்தால் பிராந்திய அரசியல் கேள்விக்குள்ளாகியுள்ளது. இலங்கையில் சமூகம்சார் பிராந…
-
- 1 reply
- 265 views
-
-
தேசிய, சர்வதேச கண்டனத்துக்குள்ளாகும் அரசாங்கத்தின் அடக்குமுறை By VISHNU 13 SEP, 2022 | 03:12 PM கலாநிதி ஜெகான் பெரேரா கடந்த ஜூலையில் உச்சக்கட்டத்தை அடைந்த மக்கள் போராட்ட இயக்கத்துக்கு எந்த அளவிலாவது தலைமைத்துவத்தை வழங்கியவர்களை வேட்டையாடும் நடவடிக்கைகள் நிலையாக தொடருகின்றன. மிகவும் இறுதியாக கைதானவர் விருது பெற்ற ஒரு நடிகை. ஜனாதிபதி மாளிகை போராட்டக்கார்களின் ஆக்கிரமிப்பில் இருந்தபோது அவர் அதற்குள் பிரவேசித்திருத்தார். ஜனாதிபதி செயலகத்துக்கு வெளியே நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் அவர் ஒரு துடிப்பான பேச்சாளராகவும் இருந்தார். போராட்டங்களில் ஈடுபட்டவர்களை வேட்டையாடுவது தற்போதைய அரசாங்கத்தின் அருவருக்கத்தக்க ஒரு நடவடிக்கையாகும்.…
-
- 0 replies
- 191 views
- 1 follower
-
-
தேசியக் கட்சிகளுக்கான விசுவாசம்: எந்தக் கருமத்தையும் ஈடேற விடாது -க. அகரன் அரசியல் சக்கரம் பல படிப்பினைகளை உணர்த்தியதாகவே சூழன்று கொண்டிருக்கின்றது, என்பதற்கு அண்மைய இலங்கை அரசியல் போக்கு சான்றாகிறது. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களாக எண்ணப்பட்ட பலரும், தமது பலம்பொருந்திய மக்கள் தளத்தை வெளிப்படுத்தியதாகவே, நடந்து முடிந்த தேர்தல் காணப்படுகின்றது. ஸ்திரமில்லாத சபைகளை உருவாக்கும் விதமாக, உள்ளூராட்சி மன்றங்கள் அமைந்திருந்தாலும் கூட, தேர்தல் முறைமையானது, நீண்ட காலப் பகையாளிகளை, அன்னியோன்னியம் ஆக்கியுள்ள நிலையில், இனம் சார்ந்த கருத்தியல் கொண்டவர்களை, நிரந்தரப் பகையாளிகளாகவும் உருவாக…
-
- 0 replies
- 357 views
-