அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9224 topics in this forum
-
அமித்ஷாவின் கூற்று – புரிந்துகொள்ளப்பட்டதும், புரிந்துகொள்ளப்படாததும். யதீந்திரா பாரதிய ஜனதா கட்சியின் இரண்டாம் நிலை தலைவரும், உள்துறை அமைச்சருமான, அமித்ஷா, தெரிவித்திருந்த கருத்துக்கள் பலரது கவனத்தை பெற்றிருந்தது. கடந்த மாதம் 27ம் திகதி, இராமேஸ்வரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில், ஈழத் தமிழ் மக்கள் பெருந்தொகையில் கொல்லப்பட்டதாக, அமித்ஷா கூறியிருந்தார். பாரதிய ஜனதா கட்சி, ஈழத் தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை இடம்பெற்றதை ஏற்றுக்கொண்டிருப்பதாக, சிலர் இதற்கு விளக்கமளிக்க முற்பட்டனர். சிலரோ, இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக கூறமுற்பட்ட…
-
- 0 replies
- 442 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழர்களின் அரசியல் செல்நெறியைத் தீர்மானிக்கும் பொறுப்பு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மீது 2009 ஆம் ஆண்டு மே மாதம் சுமத்தப்பட்டது. போரின் தோல்வி, மக்களின் அவலம், ராஜபக்சக்களின் அச்சுறுத்தல் என்று எல்லாப்பக்கமும் நெருக்குவாரமாக இருந்தமையால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓர் ஒழுங்குக்குள் இருந்தது. ஆனால் அவையெல்லாம் சிறிது காலம் தான். எப்போது அரச தலைவர் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை அந்தக் கட்சி எடுத்ததோ அன்றிலிருந்து சரிவு ஆரம்பித்தது. உடைவுகள் தொடங்கின. அதன் பின்னரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ளக முரண்பாடுகள் அடிக்கடி நிகழத் தொடங்கின. கஜேந்திரகுமார் வெளியேற்றம் அந்த முரண்பாட…
-
- 0 replies
- 348 views
-
-
சிங்கள பாசிச அரசின் கபடம் நிறைந்த சர்வதேச நகர்வுகள் – ஈழத்து நிலவன் - கடந்த ஏப்ரல் மாதம் சிங்கப்பூர் நாட்டில் இரகசியமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தையில் என்ன பேசப்பட்டது? எதற்காக அந்தக் கூட்டம் நடைபெற்றது என்பது தொடர்பாக பேச்சுக்களில் கலந்துகொண்ட தனிமனிதர்களோ அல்லது அவர்களினுடைய அமைப்போ இன்றுவரை வெளிப்படுத்தப்படவில்லை. சிங்கப்பூரில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் In Transformation Initiative அமைப்பு வெளியிட்டிருந்த ஊடக அறிக்கை தொடர்பில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தனது சந்தேகங்களை எழுப்பி இருந்ததுடன், தமிழர் தரப்பின் உண்மையான பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டமை, இந்த கூட்டங்களை கேள்விக்குறியாக்கியுள்ளத…
-
- 0 replies
- 459 views
-
-
மரணதண்டனை: தீர்வில்லாத தீர்வு Editorial / 2019 ஜூலை 04 வியாழக்கிழமை, மு.ப. 10:59 Comments - 0 அண்மையில், நால்வருக்கு மரணதண்டனையை உறுதிசெய்து, ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார் என்ற செய்தி ஏற்படுத்திய அதிர்ச்சி, கொஞ்சமல்ல. ஆனால், இப்படியொரு செயலை ஜனாதிபதி செய்யமாட்டார் என்று எண்ண நியாயமில்லை. அவரது நடத்தை, அதையே காட்டி நிற்கின்றது. மரணதண்டனை வழங்குவதற்கு, அடிப்படையாக அமைவது, அந்த வழக்கை விசாரணை செய்யும் அதிகாரிகளின் புலனாய்வும் அதன் மூலமாகத் திரட்டப்பட்ட ஆவணங்களுமேயாகும். இலங்கை போன்ற நாடுகளில், சட்டம் ஒழுங்கின் யோக்கியம் எமக்குத் தெரியாததல்ல. பொலிஸார் குற்ற வழக்குகளைப் புலனாய்வு செய்து, அந்தக்க குற்றத்தின் உண்மையான பின்னணி குறித்தும், …
-
- 0 replies
- 753 views
-
-
பிராந்திய அரசியலின் முடிவும் தேசிய அரசியலின் தொடக்கமும் November 17, 2024 — கருணாகரன் — மட்டக்களப்பு மாவட்டத்தைத் தவிர, நாடு முழுவதும் தேசிய மக்கள் சக்தியே (NPP) வெற்றியடைந்துள்ளது. மட்டக்களப்பிலும் இரண்டாவது இடத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) யே நிற்கிறது. சுதந்திரத்துக்குப் பின்னான இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு தேசியக் கட்சி, நாடு முழுவதிலும் வெற்றியீட்டியது இந்தத் தடவைதான். இதற்கு முன்னான தேர்தல்களில் ஐ.தே.கவோ, பொதுஜன பெரமுனவோ சு.கவோ பெரும்பான்மையை அல்லது அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றாலும், அதில் வடக்குக் கிழக்குப் பிராந்தியங்கள் விலகியே இருந்தன. அல்லது வடக்குக் கிழக்குப் பிராந்தியங்களை அவற்றினால் வெற்றி கொள்ள முடியவில்லை. …
-
- 0 replies
- 378 views
-
-
[size=4]இலங்கையில் காவியுடை பயங்கரவாதம் ஒன்று இருப்பதாகவும் புலிகளின் பயங்கரவாதத்தை அடக்கிய அரசாங்கம் இந்த காவியுடை பயங்கரவாதத்தையும் அடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் வெளியிட்டிருந்த கருத்தொன்று சுமார் ஒரு வாரமாக அரசியல் அரங்கில் சற்று சலசலப்பை எற்படுத்தி இருந்தது. அமைச்சர் தமது கூற்று தொடர்பாக பௌத்தர்களிடமும் பௌத்த பிக்குகளிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டதை அடுத்து அந்த சலசலப்பு - மழை ஓய்ந்ததைப் போல் ஓய்ந்து விட்டது. அமைச்சரின் கூற்று தவறானது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஏனெனில் சில சந்தர்ப்பங்களில் சில பிக்குகள் - முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையாக நடந்து கொண்ட போதிலும் பிக்குகள் எல்லோ…
-
- 0 replies
- 499 views
-
-
புலிகள் பற்றிய மீளெழுச்சிக் கதைகள்: பூனைக்கு விளையாட்டு - எலிக்கு? - கருணாகரன் புலிகளைப் பற்றிய கதைகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு நீடிக்கத்தான் போகிறது. அந்த அளவுக்கு புலிகள் ஓர் உபயோகப் பொருளாக தமிழ், சிங்களப் பரப்பில் உள்ளனர். இதில் கவனத்திற்குரிய விசேசமான ஒரு விசயம் உண்டு. தோற்கடிக்கப்படுவதற்கு முன்னரும் புலிகளின் பெயர் பல தரப்புகளால் பயன்படுத்தப்பட்டது. தோற்கடிக்கப்பட்ட பின்னரும் பல தரப்புகளுடைய நலன்களுக்காகப் இந்தப் பெயர் பயன்படுத்தப்படுகிறது. தோற்கடிக்கப்படுவதற்கு முந்திய புலிகளைத் தமிழ் நாட்டு அரசியல்வாதிகள், ஊடகங்கள், தென்னிலங்கை, புலம்பெயர்ந்தோர், வர்த்தகர்கள் எனப் பல்வேறு தரப்புகள் பயன்படுத்தின. அவரவர் தமக்கு ஏற்றவாறு எதிர் என்றும் ஆதரவு எ…
-
- 0 replies
- 499 views
-
-
முள்ளிவாய்க்கால் போன்ற பல துயர சம்பவங்கள் நடந்தேறியுள்ள நிலையில், தமிழர்களுக்கு விடுதலை வேண்டும் என குரல் கொடுக்கும் உலகெங்கிலும் உள்ள தமிழ் அமைப்பினைச் சார்ந்தவர்கள் நமது IBC தொலைக்காட்சி தளத்தில் ஒரே மேடையில் இணைந்து தங்களது கருத்துக்களை பதிவு செய்த நிகழ்வே நேருக்கு நேர்.
-
- 0 replies
- 556 views
-
-
சர்வதேசமே தீர்வையும் பெற்றுத்தர வேண்டும் இராணுவ ரீதியாக, சர்வதேசச் சமூகம் இலங்கைக்கு உதவவில்லை. சர்வதேச நாடுகள், தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான உளவுத் தகவல்களை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கியிருந்தன. அதுவே, புலிகளை பலவீனப்படுத்தியது. யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவரவதற்கு உதவிய சர்வதேசச் சமூகத்துக்கு, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுத்தரும் கடமையும் இருக்கிறது. அதற்கு, சர்வதேச சமூகம் முயற்சிக்க வேண்டும்” என்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இராணுவ ரீதியாக சர்வதேசச் சமூகம் இலங்கைக்கு உதவவில்லை. சர்வதேச நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான உளவுத் தகவல்களை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கியிருந்தது. அதுவே, புலி…
-
- 0 replies
- 654 views
-
-
சண்டே லீடர் பத்திரிக்கையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க நான்கு ஆண்டுகளுக்க முன்பு கொல்லப்பட்ட பிறகு, அரசாங்கத்துக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த அந்த பத்திரிக்கை அவர் வகுத்த பாதையில் இருந்து விலகுவதாக விமர்சகர்கள் குறை கூறுகின்றனர். சண்டே லீடரின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கே கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த சம்பவம் உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இலங்கையில் ஊடகச் சுதந்திரம் மோசமான நிலையில் இருப்பதை இது வெளிக்காட்டியது. ஆனால் நான்கு ஆண்டுகள் ஆன பிறகும் அக்கொலை வழக்கு முற்றுப் பெறாமல் இருக்கிறது. லசந்தாவின் கொலைக்குப் பிறகு – அரசுக்கு எதிரான செய்திகளை வெளி…
-
- 0 replies
- 952 views
-
-
பிணைமுறி விவகாரம்: தண்டிக்கப்படுவாரா மகேந்திரன்? நல்லாட்சி அரசாங்கத்திலேயே நல்லாட்சி இல்லை என்றும் ஊழலை ஒழிப்பதைத் தமது பிரதான பணிகளில் ஒன்றெனக் கூறிப் பதவிக்கு வந்த அரசாங்கம், பதவிக்கு வந்து ஒரு மாதத்திலேயே வரலாற்றில் மிகப் பெரும் ஊழல்களில் ஒன்று நாட்டில் இடம் பெற்றிருக்கிறது என்று எதிர்க்கட்சி குற்றம்சாட்டும் அளவுக்கு சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இது நல்லாட்சியின் பெயரால் பதவிக்கு வந்தவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலைமையாகும். கடந்த வெள்ளிக்கிழமை ‘கோப்’ என்றழைக்கப்படும் நாடாளுமன்றத்தின் பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் தலைவரும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துந்நெத்தி நாடாளுமன்றத்தில் சமர…
-
- 0 replies
- 335 views
-
-
கஜனின் உரை: ஓரினமாகத் திரள்வது! நிலாந்தன்… December 6, 2020 நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் ராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டின் மீதான விவாதத்தின் போது கஜேந்திரகுமார் ஆற்றிய உரை அருமையானது. அந்த உரைக்கு சிங்கள பிரதிநிதிகள் மத்தியிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர்களுடைய குறுக்கீட்டால் கஜனின் நேரம் சுருங்கிய போது சிறீதரன் தமது கட்சியின் நேரத்தை அவருக்கு வழங்குவதாக அறிவித்தார். இது விடயத்தில் சிங்களத் தரப்பு கட்சி வேறுபாடுகளை கடந்து ஓர் இனமாக திரண்டு நின்ற பொழுது தமிழ் தரப்பும் அவ்வாறு ஓர் இனமாக திரண்டு நின்றது. பின்னர் நடந்த வாக்கெடுப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்த்து வாக்களித்தத…
-
- 0 replies
- 872 views
-
-
கச்சத்தீவில் பறிபோகும் உரிமைகளை தமிழக அரசு வேடிக்கை பார்க்கலாகாது! கச்சத்தீவு புதிய அந்தோணியார் ஆலயம் | படம்: மயூரப்பிரியன் ஒப்பந்த ஷரத்துகள், கச்சத்தீவில் உள்ள நம்முடைய பாரம்பரிய உரிமைகளை உறுதிசெய்பவை கச்சத்தீவு அந்தோணியார், தங்களின் கடல் பாதுகாவலர்களில் ஒருவர் என்பது நம்பிக்கை. வருடம் முழுவதும் மீன்பிடித் தொழில் வளமாக இருக்க வேண்டியும் உயிர்ப் பாதுகாப்புக்கு நன்றி பாராட்டியும் பங்கேற்கும் நிகழ்வாக அந்தோணியார் ஆலயத் திருவிழாவை நம்மவர்கள் பாவிக்கிறார்கள்! கச்சத்தீவில் புதிய அந்தோணியார் கோயில் திறப்பு விழா (டிசம்பர் 23) இன்று நடக்கிறது. ரூ.1 கோடியில் புதிய ஆலயத்தைக் கட்டியிருக்கிறது இலங்கைக் …
-
- 0 replies
- 281 views
-
-
83யூலை நினைவுகளின் பின்னணியில் ராஜமகேந்திரனை நினைவு கூர்தல் – நிலாந்தன்! August 1, 2021 மகாராஜா ஊடக குழுமத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரிடம் சிவராம் பின்வருமாறு கூறியிருக்கிறார் “ உங்களுடைய தலைவர் ராஜமகேந்திரனிடம் நாட்டைக் கொஞ்ச நாளைக்கு ஆளக் குடுத்தால்…வடிவா ஆண்டு காட்டுவாரடா ! “ – என்று. தமிழ் மக்கள் ஜூலை 83ஐ நினைவு கூரும் ஒரு காலகட்டத்தில் ராஜமகேந்திரன் காலமாகியுள்ளார். அவர் ஒரு தமிழ் பெரு முதலாளி. ஒரு ஊடக குழுமத்தில் தலைவர். எல்லாவற்றுக்கும் அப்பால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையிலும் அவர் ஒரு நம்பிக்கையின் குறியீடு. எப்படியென்றால் 83 ஜூலையில் அவருடைய சொத்துக்கள் அழிக்கப்பட்டன எரிக்கப்பட்டன. எனினும்,தனது சொத்துக்கள் எரிந்த…
-
- 0 replies
- 425 views
-
-
இலங்கைக்கு குட்டு வைத்த ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை யின் 36ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியிருக் கிறது. இந்தக் கூட்டத்தொடரின் தொடக்க நாளன்று உரையாற்றிய ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், இலங்கை தொடர்பாக நாசூக்காகவும், வெளிப்படையாகவும் சில விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கிறார். அவர் வெளிப்படையாக வலியுறுத்திய விடயங்கள் மூன்று. நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை அரசாங்கம் விரைவாக முன்னெடுக்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, சர்வதேச மனித உரிமை சாசனங்களுக்கு அமைவான, மாற்றுச் சட்டம் ஒன்றை விரைவாகக் கொண்டு வர வேண்டும். ஜெனீவாவில், ஏற்றுக்கொண்…
-
- 0 replies
- 921 views
-
-
நீதிமன்றத் தலையீடும் தலையிடிகளும் நீதிமன்றங்கள் என்பவை, நவீன கால மனித வாழ்வில் மிக அத்தியாவசியமானவையாக மாறியிருக்கின்றன. நீதிமன்றங்கள் இல்லாத ஒன்றை நினைத்துப் பார்ப்பதென்பது, சாத்தியமற்ற ஒன்றாகவே அமைந்திருக்கிறது. முன்னைய காலங்களில், நீதிபதிகளை மாத்திரமன்றி, நீதிமன்றத் தீர்ப்புகளையோ அல்லது நீதிமன்றக் கட்டமைப்பையோ விமர்சனத்துக்கு உள்ளாக்குவதென்பது, எண்ணிப் பார்க்க முடியாத ஒன்றாகவே காணப்பட்டது. ஆனாலும், மாறிவரும் சூழலுக்கு மத்தியில், தீர்ப்புகள் பற்றியும் ஒட்டுமொத்தமான நீதிமன்றக் கட்டமைப்புப் பற்றியும், கட்டமைக்கப்பட்ட விமர்சனங்களை முன்வைக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இது, நவீன சூழலில், ஆரோக்கியமானதொரு மாற்றமாகவே க…
-
- 0 replies
- 660 views
-
-
மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தையும் ஹம்பாந்தோட்டை ருஹூணு மாகம்புர துறைமுகத்தையும் நேரடியாக பார்வையிட்டு தகவல் திரட்டுவதற்காக அவ்விரண்டு இடங்களுக்கும் கடந்த 17ஆம் திகதி சென்ற ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது குண்டர்கள் முட்டை வீசியும் அவர்களை மிரட்டியும் இம்சிப்பதை தொலைகாட்சித் திரைகளில் நாடே கண்டது. அந்த குண்டர்கள் மத்தியில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயைச் சேர்ந்த ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்னாண்டோவும் இருப்பதையும் நாட்டு மக்கள் கண்டனர். ஆனால் இந்த தாக்குதலுக்கு தமது கட்சி பொறுப்பல்ல என்றும் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை ஐ.தே.க. விமர்சிப்பதனால் ஆத்திரமுற்ற சாதாரண மக்களே இந்த எம்.பிக்களை தாக்க முற்பட்டுள்ளனர் என…
-
- 0 replies
- 734 views
-
-
நெருப்பு சமரில் நான்சி வெற்றி! யூசுப் என் யூனுஸ் அமெரிக்காவின் அதிகாரமிக்க மூன்றாம் நிலை பதவியில் இருக்கின்றவர்தான் நான்சி பெலோசி.இவர் தைவானுக்கு சுற்றுப் பிரயாணம் வருகின்றார் என்று சொன்னால் அதில் என்ன ஆச்சர்யம் இருக்க முடியும்? அமெரிக்காவின் சபாநாயகர் பதவியில் இருக்கின்ற நான்சி பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மலேசியா, தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வமான விஜயம்.அவை எல்லாம் ஓகே. அது பற்றி எந்தக் கேள்விகளை யாரும் எழுப்பவில்லை.அவர் அந்தப் பயணத்தில் தைவானுக்கும் போய் கால்பதிக்க இருக்கின்றார் என்ற தகவல் கசிந்த போது கொதித்துப் போனது சீனா. இந்த விடயத்தில் ஏன் சீனா கொதித்தப் போனது.அவர் அப்படி அங்கு போய் இறங்கினால் பெரும் அழிவுதான்…
-
- 0 replies
- 290 views
-
-
மொட்டில் தமிழீழமும் நச்சு அரசியலும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்றத்தில் முன்வைத்த விமர்சனங்கள், மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. வடக்கிலும் கிழக்கிலும் தமிழீழம் மலரப் போகிறது என, மஹிந்த ராஜபக்ஷவும் அவரது பிரிவினரும், தேர்தல் பிரசாரக் காலத்தில் முன்வைத்த பிரசாரங்களுக்கான பதிலடியாகவே, எதிர்க்கட்சித் தலைவரின் பதிலடி அமைந்திருந்தது. இலங்கையின் மூத்த அரசியல்வாதி என்ற அடிப்படையில், இரா. சம்பந்தனுக்குக் காணப்படும் அனுபவமாக இருக்கலாம், இரா. சம்பந்தன் மீது மஹிந்த ராஜபக்ஷ கொண்டிருக்கின்ற தனிப்பட்ட மரியாதையாக இருக்கலாம் (இரா. சம்பந…
-
- 0 replies
- 246 views
-
-
போர்க்குற்ற விசாரணையும் அரசியல் தீர்வும் - யதீந்திரா படம் | PEDRO UGARTE/AFP/Getty Images இலங்கையின் மீதான ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்ற சூழலில், அரசினால் நியமிக்கப்பட்ட காணாமல்போனோர் தொடர்பான ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்கென மூவர் அடங்கிய சர்வதேச நிபுணர் குழுவொன்றை ஜனாதிபதி நியமித்திருக்கின்றார். சேர் டெஸ்மன் டி சில்வா, சேர் ஜெப்ரி நைஸ் மற்றும் டேவிட் கிறேன் ஆகியோரே ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச நிபுணர்கள் ஆவர். பிரித்தானிய சட்டவாளரான சேர் டெஸ்மன் டி சில்வா (Sir Desmond de Silva) சர்வதேச போர் குற்ற விடயங்களை கையாளுவதில் மிகுந்த தேர்ச்சியுடைவராவார். சியாரா லியோனில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த வழக்கில் தலைமை சட்ட…
-
- 0 replies
- 555 views
-
-
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை சிறுபான்மையினருக்கு கை கொடுக்கின்றதா? துரைசாமி நடராஜா நிறைவேற்று ஜனாதிபதி முறையினை நீக்குவதா? இல்லையா? என்பது குறித்து மஹிந்த அணியினரிடத்தில் கருத்தொருமைப்பாடு இல்லாத நிலைமையே காணப் படுகின்றது. கருத்து வேற்றுமைகளே இங்கு காணப் படுகின்றன. இவ்வணியினரின் முடிவினைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமை குறித்த வாதப்பிரதிவாதங்கள் இப்போது இடம்பெற்று வருகின்றன. இம்முறைமையினை நீக்குவது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்கும் 20 ஆம் திருத்தத்தை மக…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஜனாதிபதித் தேர்தல் - தமிழ் மக்கள் பார்வையாளர்களா? - நிலாந்தன்:- 14 டிசம்பர் 2014 ஜனாதிபதித் தேர்தலை நோக்கி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேலும் உடைவது என்பது மஹிந்த ராஜபக்ஷவுக்கு மட்டும் அச்சுறுத்தலானது அல்ல. அதை அதன் தர்க்கபூர்வ விளைவுகளை கருதிக் கூறின் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஒரு விதத்தில் ஆபத்தானது தான். ரணிலைப் பொறுத்த வரை அவருக்கு வெற்றி வேண்டும். அதற்காக அவர் ஒப்பீட்டளவில் நீண்ட காலம் காத்திருந்து விட்டார். கிடைக்கப்போகும் வெற்றியைப் பொறுத்தே அவர் கட்சிக்குள் தன்னுடைய தலைமை ஸ்தானத்தையும் பாதுகாக்க வேண்டியிருக்கும். தனது தலைமைக்கு சவாலாக கட்சிக்குள் எழுச்சி பெற்று வரும் இரண்டாம் நிலை தலைவர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு அவருக்கு வெற்றி அவசியம். …
-
- 0 replies
- 516 views
-
-
இனவாதப்பூதத்தின் எந்தப் பிள்ளை ஆட்சிக்கு வருவது ஈழத் தமிழருக்கு நன்மை தரும்? தாமரை காருண்யன் 1. ஜனாதிபதித் தேர்தல் ஆரவாரங்கள் நன்றாகவே சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அணி தாவும் ஆட்டமும் தேர்தலின் இணை பிரியா அங்கம் ஆகிவிட்டது. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி, ஜனாதிபதியாகப் போவது மகிந்த இராஜபக்சவா அல்லது மைத்திரிபால சிறிசேனாவா என்பது முடிவாகப் போகிறது. மைத்திரிபால சிறிசேன களம் இறக்கப்படும் முன்னர் மகிந்த இராஜபக்சதான் ஜனாதிபதியாக வருவார் என அடித்துக் கூறியவர்கள் பலர் தற்போது சற்று அமத்தி வாசிக்கத் தொடங்கியுள்ளார்கள். எதிர்வரும் நாட்கள் ஜனாதிபதித் தேர்தலில் மிக முக்கியமான நாட்களாகக் கருதப்படுகின்றன. தற்போது வரும…
-
- 0 replies
- 653 views
-
-
சர்வதேச ஒப்பந்தத்தை இரத்துச் செய்வது சாத்தியமா?? இலங்கையில் மாகாண சபைகளுக்கான தேர்தல் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகின்ற காலத்தில் நடத்தப்படாது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆளும் தரப்பின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன, மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துங்கள், இல்லாது விட்டால் வெள்ளை யானைகளாக உள்ள மாகாண சபைகளை கலைத்து விடுங்கள் என்று கூறியிருக்கின்றார். உண்மையில் மாகாண சபைகள் முறையானது இலங்கை, இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் அடிப்படையில் இலங்கையின் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 13ஆவது திருத்தத்திற்கு அமைவாகவே உருவாக்கப்பட்டதாகும். இந்த மாகாண சபைகள் முறையானது, வெறுமனே நிருவாகக் கட்டம…
-
- 0 replies
- 361 views
-
-
மஹிந்தவின் பக்கம் திரும்புமா இந்தியா? -ஹரிகரன் ஒட்டுமொத்தமாகச் சொல்வதானால், மஹிந்த ராஜபக் ஷ இன்னமும் மாறவில்லை என்று குறிப்பிடலாம். தான் மாறாமல் இருப்பதாகவும் இந்தியாவின் மனோநிலையை மாற்ற முனைவதாகவும் தான் அவரது கருத்துக்கள் அமைந்திருக்கின்றன தரகர்கள் பொதுவாக, வியாபாரங்களில் தான் அதிகம், ஆனால், அரசியலிலும் தரகர்கள் இருப்பதுண்டு. இலங்கை அரசியலைப் பொறுத்தவரையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ், போன்றவர்களை அவ்வாறானவர்கள் எனக் குறிப்பிடலாம். ஒரு பக்கம் வணிகப் பெரும்புள்ளியாக இருந்து கொண்டே, ஆளும்கட்சி, எதிர்க்கட்சி இரண்டுக்கும…
-
- 0 replies
- 657 views
-