அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
தேர்தலின் பின்னர் யார்யாரோடு இணைவார்கள்? உள்ளூராட்சி தேர்தல் பிரசாரப்பணிகள் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டன. அரசியல் கட்சிகள், பிரசார வியூகங்களை அமைத்து வருவதுடன் வேட்பாளர்கள் தமது தொகுதியில் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக் கில் பல்வேறு வியூகங்களை முன்னெடுத்து வருகின்றனர். தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நியாயமானமுறையில் நடத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. தேர்தலை நியாயமான முறையில் நடத்துவது தொடர் பில் கடந்த புதன்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்குமிடையிலான சந்திப்பொன்றும் நடைபெற்றது. அந்தவகையில் நாட்டு…
-
- 0 replies
- 314 views
-
-
அண்மையில் யாழ்ப்பாண மாணவர் பேரவை வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் வரும் ஜனாதிபதிதேர்தலை தமிழ்மக்கள் புறக்கணிக்கவேண்டும் எண்டு தெரிவித்திருந்தார்கள்,, இது பற்றி உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்,,,வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழீழ மக்கள் என்ன செய்யவேண்டும்?? :!: :?:
-
- 29 replies
- 6.1k views
-
-
தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவு யாருக்கு..?: சூடு பிடிக்கும் தேர்தல் களம் ஆட்சி மாற்றத்துக்காக 2015ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் தமிழ் மக்கள் அளித்திருந்த ஆதரவின் மூலம் நன்மைகள் விளை வதற்குப் பதிலாகக் குழப் பகரமான நிலைமையை உருவாக்குவதற்கே வழியேற்ப டுத்தி இருந்தது. அந்த வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வழங்கியிருந்த உறுதியான – நிபந்தனை யற்ற ஆதரவு விழலுக்கு இறைத்த நீராகி உள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிப்பது? யார் தமிழ் மக்களுக்கு விசுவாசமாகச் செயற்படுவார்கள்? யாரைத் தெரிவு செய்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்? என்ற கேள்விகள் சாதாரண வாக்காளர்களின் மனங்களைக் குடைந்து கொ…
-
- 0 replies
- 487 views
-
-
தேர்தலில் தாக்கத்தை செலுத்துமா முதலமைச்சரின் லண்டன் உரை? நிர்மானுசன் பாலசுந்தரம் படம் | TAMIL DIPLOMAT திம்புக் கோட்பாடு வெளிவந்து கடந்த ஜூலை 13ஆம் திகதியோடு முப்பது வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளது. எதிர்வரும் ஜூலை 23ஆம் திகதி, தமிழின அழிப்பின் ஒரு முக்கிய அங்கமான கறுப்பு யூலையின் முப்பத்தியிரண்டாவது ஆண்டு நினைவு. ஜூலை 29ஆம் திகதி இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இருபத்தெட்டு வருடங்கள் நிறைவடைகிறது. இதேவேளை, ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி இலங்கைத் தீவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் தமிழர் தேசத்துக்கும் தென்னிலங்கைக்கும் முக்கியமான ஒரு தேர்தலாக அமைந்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரியணையேறுவாரா? இலங்கை சுதந்திரக் கட்சி பலவீனமடையுமா? …
-
- 0 replies
- 238 views
-
-
மைத்திரி தனது சுஜ நல அரசியல் நோக்கத்துடன் கரு நாகப் பொந்தினுள் கை வைத்து விட்ட்டார் என தோன்றுகின்றது. ஏற்கனவே ஒரு முறை, தான் பதவியில் இருப்பேன், என அறிவித்து பதவிக்கு வந்த அவருக்கு கிடைத்த பதவி சுகம் அவரை மீண்டும் ஜனாதிபதியாக விரும்ப வைத்துள்ளது. ஐ தே க உடன் இருந்தால், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நிற்க முடியாது. ஏனெனில் ஐ தேக ரணில் அல்லது தமது கட்சி ஆள் தான் போட்டி இடுவர் என சொல்லி விட்டனர். ஆகவே மைத்திரிக்கு உள்ள தெரிவு, மகிந்தவுடன் சேர்வதும், தான் சுதந்திர கட்சி சார்பில் போட்டி இட்டு மகிந்த செல்வாக்கில் ஜனாதிபதியாகுவதுமே. இது அரசியல் ரீதியாக சிறந்த அணுகுமுறை தான், சநதேகமில்லை. ஆனால் மகிந்த முட்டாள் அல்ல. ஊரை அடித்து, உலையில் போட்ட ஆள் …
-
- 6 replies
- 1.2k views
-
-
தேர்தலில் யார் தோற்றார்கள்? உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை, குப்பையள்ளுவதற்கான தேர்தல் என்று, கொச்சையாகவும் கேலியாகவும் குறிப்பிடும் வழக்கம் இருக்கிறது. இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகாரம், மிகக்குறைவானது என்ற நிலையில், அவர்களின் முக்கியமான பணிகளுள் ஒன்றாக, கழிவகற்றலே காணப்படுவதைச் சுட்டிக்காட்டித் தான், இவ்வாறு அழைப்பதுண்டு. அப்படிப்பட்ட தேர்தலொன்று, நாட்டின் தேசிய அரசியலையே மாற்றியமைக்கும் அளவுக்கு மாறியிருக்கிறது என்றால், யோசிக்கத் தான் வேண்டியிருக்கிறது. நடந்துமுடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் முடிவுகள் வந்திருக்கின்றன. கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள பதற்றங்களை, பத்திரிகைகளை வாசிப்போர்,…
-
- 0 replies
- 484 views
-
-
தேர்தலுக்கான அரசியல் – பி.மாணிக்கவாசகம் February 10, 2019 நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றுக்கொன்று நேர் முரணான அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டுள்ள நிலையில் தேசிய அரசாங்கத்தை உருவாக்குகின்ற முயற்சிகள் குறித்தும் பேசப்படுகின்றது. தேர்தல்கள் வரிசையாகத் தெரு முனையில் எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், நிலைமையாக இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த முயற்சியின் மூலம் தேசிய அரசாங்கத்தை உருவாக்கி காலதாமதமின்றி, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண முடியும் என்பதற்காக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முனைந்திருக்கின்றது. நாட்டில் இது ஒரு வேடிக்கையான அரசியல் நிலைமையாகப் பரிணமித்திருக்கி…
-
- 0 replies
- 531 views
-
-
தேர்தலுக்கு பணமா இல்லை; மனமா இல்லை? எம்.எஸ்.எம் ஐயூப் மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல், பல மாதங்கள் வரை நடைபெறாது இருக்கவும் கூடும் என்றுதான் இப்போது தெரிகிறது. ஏனெனில், சட்டத்தின்படி தேர்தல் ஆணைக்குழுவே தேர்தல் திகதியை நிர்ணயிக்க வேண்டும் என்று இருந்தாலும், ஜனாதிபதியின் விருப்பப்படியே எல்லாம் நடைபெறப்போகிறது போலும்! தேர்தலுக்காக செலவழிக்க திறைசேரியில் பணம் இல்லை என்பதே, இப்போது அரசாங்கத்தின் பிரதான வாதமாக இருக்கிறது. நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி இருப்பதால், அதை எடுத்த எடுப்பில் நிராகரிக்கவும் முடியாது. ஆனால், அரசாங்கம் தேர்தல் விடயத்தில் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்தால், அது உண்மையாக இருக்கலாமா என்ற பலத்த சந்தேகம் …
-
- 0 replies
- 578 views
-
-
தேர்தலுக்கு பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள்... கஜேந்திரகுமார்
-
- 0 replies
- 362 views
-
-
தேர்தலுக்கு பின்னர் தமிழரசு கட்சியின் தலைமை மாற்றமடையுமா? - யதீந்திரா வடக்கில் ஆகக் கூடிய ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும் – என்று கூட்டமைப்பின் பேச்சாரும், அதன் நிழல் தலைவருமான மதியாபரனம் ஆபிரகாம் சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார். அதே வேளை பிறிதொரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ்த் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரனை துரத்த வேண்டுமென்றும் சுமந்திரன் குறிப்பிட்டிருக்கின்றார். விக்னேஸ்வரனை அரசியலிலிருந்து துரத்த வேண்டுமென்று முன்னரும் ஒருமுறை சுமந்திரன் கூறியிருந்தார். கூட்டமைப்பு வடக்கில், இம்முறையும் அதிக ஆசனங்களை வெற்றிகொள்ளுமென்று சுமந்திரன் உண்மையிலேயே நம்பினால், பிறகெதற்காக விக்னேஸ…
-
- 0 replies
- 537 views
-
-
தேர்தலுக்குப் பின் நடக்கப்போவது என்ன? உள்ளூராட்சித் தேர்தலுக்கு இன்னமும், ஆறு நாட்களே இருக்கின்ற நிலையில் அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் உச்சக்கட்டப் பிரசாரங்களில் இறங்கியுள்ளன. இந்தத் தேர்தலில் ஒருவரை ஒருவர் தாக்குவதற்கும், பழிபோடுவதற்கும் தான் பிரசாரங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. நாளை மறுநாள் பாராளுமன்றத்தின் சிறப்பு அமர்வில், ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் குறித்த விவாதம் நடக்கவுள்ள நிலையில், தனிப்பட்ட முறையிலான குற்றச்சாட்டுகள், சேறு பூசல்களுக்கான வாய்ப்பு இன்னும் அதிகமாக இருக்கப் போகிறது. வரும் 8ஆம் திகதி பிரசாரங்கள் ஓய்ந்த…
-
- 0 replies
- 372 views
-
-
தேர்தலுக்குப் பின்னர் அரசின் நிலை என்ன? உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் கொழும்பு அரசியல் களம் எப்படியான மாற்றத்தைச் சந்திக்கும் என்ற கேள்வி பரவலாக எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. இப்போது ஆட்சியில் உள்ள கூட்டு அரசாங்கம் நிலைத்திருக்குமா? இல்லையா? என்பதே முதற் கேள்வியாக இருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் செய்து கொண்ட கூட்டு அரசாங்கத்தை அமைக்கும் உடன்பாடு டிசம்பர் 31ஆம் திகதியுடன் காலாவதியாகி விட்டது. அதனை இரண்டு கட்சிகளும் புதுப்பிக்கவில்லை. உடன்பாட்டை நீடிப்பது தொடர்பான ஆவணம் ஏதும் தனக்கு அனுப்பப்படவில்லை என்று சபாநாயகர் கரு ஜய …
-
- 0 replies
- 332 views
-
-
தேர்தலும் 60 ஆண்டுகால இனப் பிரச்சினையும் அ.நிக்ஸன் படம் | AP Photo/Eranga Jayawardena, NEWS.YAHOO நாடாளுமன்றத் தேர்தல் இனப்பிரச்சினை பற்றிய தீர்வு விடயங்களையும் வடக்கு – கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகளையும் கைவிட்டுள்ள தன்மையை காணக் கூடியதாகவுள்ளது. கடந்த காலங்களில் தேர்தல் என்றாலே இனப்பிரச்சினை பற்றிய விடங்கள் முக்கியமாகப் பேசப்படும். அது இரண்டு வகைப்படும். ஒன்று, இனவாத நோக்கில் வேறு சமூகங்களைத் தாழ்த்துவது. இரண்டாவது, யுத்தத்தைத் தீவிரப்படுத்தல். இந்த இரண்டு வகையிலும் யுத்தத்தை தீவிரப்படுத்தல் என்பது 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பேசப்படுவதில்லை. ஆனால், யுத்த வெற்றிக்கான உரிமைகள் கோரப்பட்டன. நிலைமை மாறியது இந்த நிலையில், 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் …
-
- 0 replies
- 186 views
-
-
தேர்தலும் கூட்டணியும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைமையின் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள அதிருப்தியின் விளைவாகவே, மாற்றுத் தலைமை ஒன்று உருவாக வேண்டும் என்ற தேவை தலையெடுத்திருந்தது. அந்த வகையிலேயே தமிழ் மக்கள் பேரவை உதயமாகியது. அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளையும் பொது அமைப்புக்களையும் உள்ளடக்கிய மாற்று அரசியல் அணியொன்றின் உருவாக்கத்திற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இழுத்தடிக்கப்பட்டு வந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ள ஓர் அரசியல் சூழலில், இந்த நடவடிக்கைகள் தமிழ் அரசியல் களத்தில் தளம்பலான ஒரு நிலைமையையே உருவாக்கியிருக்கின்றன. உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் மட்டுமல்லாமல், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் ஊட…
-
- 0 replies
- 305 views
-
-
நாட்டின் அதியுயர் நிறைவேற்றதிகாரமுள்ள பதவியான ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்னும் ஒரு மாதத்தில் நிறைவடைந்து விடும். நாட்டு மக்கள் அனைவரது கவனமும் குறித்த தேர்தலில் ஈர்க்கப்பட்டுள்ளமை தெரிகின்றது. பொதுவாக சகல அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் உட்பட பல்வேறு அமைப்புகளும் இதில் கூடிய கவனம் செலுத்தியுள்ளன. நிறைவேற்று அதிகாரமுறைமையை நீக்குவோம், அரசியல் அமைப்பை மாற்றுவோம் , தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வருவோம் என்றெல்லாம் எதிரணியினர் வாக்குறுதிகளை வழங்குகின்றனர். ஆளும் தரப்பு இன்று நாட்டில் நிலவும் நிலையைத் தொடர்ந்து பேண மக்கள் வாக்கை எதிர்பார்க்கின்றது. இவ்வாறு தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ள நிலையில் நாட்டில் கூடியஅளவு தமிழர் தரப்பைப் பிரதிநிதித்துவம் …
-
- 0 replies
- 557 views
-
-
பயமுறுத்தலுக்கு அடிபணிந்தோம் 18 திருத்தத்திற்கு கை தூக்கினோம் முஸ்லிம் காங்கிரஸ்ஹசன் அலி! ஜனாதிபதிக்குக் கொடுத்தஉறுதிமொழியைகாக்க திண்டாடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை! ஷா ஜனாதிபதிஎவ்வளவுநல்லவர் இதனைஎம்மால் முன்பே புரிந்துகொள்ளமுடியாமல் போய் விட்டதே! சில தினங்களுக்கு முன் ஒரு அலுவலுக்காக தலைநகர் சென்றிருந்தேன். அப்போது முன்பு அறிமுகமான ஒருவர் என்னை அடையாளப்படுத்திக் கொண்டார். உங்களுடன் கொஞ்சம் பேசவேண்டும் என்றார்.என்னவிடயம் என்றேன். இல்லை மனம் விட்டுப்பேசவேண்டும் என்று கூறிய நண்பர் சற்றுத் தூரத்தில் இருந்த ரெஸ்டோரியண்டுக்கு என்னை அழைத்துச் சென்றார். நீங்கள் தினக்குரல் வார ஏட்டிலும் ஜப்னா முஸ்லிம் இணையத்திலும் எழுதுகின்ற கட்டுரை…
-
- 0 replies
- 648 views
-
-
தேர்தலும் ‘வாதங்களும்’ மொஹமட் பாதுஷா இலங்கை போன்ற நாடுகளில் முன்வைக்கப்படும் இன, மத பயங்கர வாதங்களுக்கும் அரசியலுக்கும் நெருங்கிய ஒரு தொடர்பிருக்கின்றது. இங்கே அரசியல் எனும் போது உள்நாட்டு அரசியலுக்கு மட்டுமன்றி வெளிநாட்டு அரசியல் நகர்வுகளுக்கும் தொடர்பிருக்கின்றது என்பது நாம் அறியாததல்ல. சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்தில் இருந்து இனம் சார்ந்த அரசியல் இலங்கையில் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வந்திருக்கின்றது என்பதை வரலாற்றை ஆழமாக நோக்குகின்ற யாரும் அறிந்து கொள்வது அவ்வளவு கடினமன்று. இதே வகிபாகத்தையே மதவாதமும், பெருந்தேசிய வாதமும், பயங்கரவாதமும் தீவிரவாத போக்குகளும் வகித்து வந்தி…
-
- 0 replies
- 285 views
-
-
-
தேர்தலை தனக்கும் அநுராவுக்கும் இடையிலான போட்டியாக காண்பிக்கும் முயற்சியில் ஜனாதிபதி ரணில் September 10, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் இரு வாரங்களே இருக்கின்றன. 38 பேர் போட்டியிடுகின்ற போதிலும், அவர்களில் பலரை பொதுவெளியில் காணவில்லை. பிரதான வேட்பாளர்கள் தங்களின் தேர்தல் பிரசாரங்களை நாடுபூராவும் மும்முரமாக முன்னெடுத்திருக்கிறார்கள். பிரதான வேட்பாளர்களாக விளங்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்கவும் தங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுத்து அபிவிருத்திப்…
-
- 0 replies
- 258 views
-
-
தேர்தலை நடத்தாது தொடர் போராட்டங்கள் ஓயாது புருஜோத்தமன் தங்கமயில் தொடர் போராட்டங்களால் கொழும்பு ‘அல்லோல கல்லோலம்’படுகிறது. கொழும்பு நகரத்தின் எந்தப் பிரதான வீதியில், எப்போது போராட்டம் ஆரம்பிக்கும், போக்குவரத்து தடைப்படும் என்று யாராலும் சொல்ல முடியாது. ஒவ்வொரு நாளும் பல தொழிற்சங்கங்களும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், கட்சிகளும் போராட்டங்களை நடத்துகின்றன. இந்தப் போராட்டங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை இராணுவத்தையும் பொலிஸாரையும் கொண்டு ரணில் விக்கிரமசிங்க அரசு ஏவுகின்றது. போராட்டங்களில் காலாவதியான கண்ணீர்புகைக் குண்டுகள் வீசப்படுவதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்தப் போராட்டங்களை, கட்டுக்குள் கொண்டுவருவது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இந்…
-
- 0 replies
- 276 views
-
-
தேர்தலைக் கண்டு ஓடும் கூட்டு அரசு ஐ.தே.க. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கூட்டு அரசாங்கத்தின் எதிர்காலம் பற்றிய கேள்விகள் நாளுக்குள் நாள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தக் கூட்டு அரசாங்கம் நிலைத்திருக்க வேண்டும். அப்போது தான், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, அரசியலமைப்பு மாற்றம் உள்ளிட்ட மிக முக்கி யமான விவகாரங்களுக்கு தீர்வு காண முடி யும் என்ற நம்பிக்கை பரவலாக காணப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் கூட இந்தக் கருத்தையே அண்மையில் வலியுறுத்தியிருந்தார். ஆனால், இந்தக் கூட்டு அரசாங்கம் இனி மேலும் நீடிக்கக் கூடாது, நீடித்தால் நாட்டுக்கு ஆபத்து என்ற கருத்தை கூட்டு…
-
- 0 replies
- 267 views
-
-
தேர்தலைக் குறித்துச் சிந்திப்பது எப்படி? - ராஜன் குறை March 28, 2021 தமிழகம் தேர்தல் பிரச்சார அனலில் மூழ்கியிருக்கும்போது, மார்ச் 2021 இறுதி வாரத்தில் இந்தக் கட்டுரையைத் தமிழினிக்காக எழுதுகிறேன். ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல். இதில் என்னுடைய அரசியல் சார்புகள் குறித்தும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்தும் எழுதப்போவதில்லை. அவற்றை மின்னம்பலம் வலைத்தளத்தில் வாராவாரம் திங்களன்று எழுதி வருகிறேன். அவற்றில் பல கட்டுரைகளை தி.மு.க நாளேடான முரசொலி மறுபிரசுரம் செய்து என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. அதனால் என் தேர்வினைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டு கட்டுரைக்குள் சென்றுவிடுகிறேன். இந்தியத் தேசம் பார்ப்பனீய இந்து அடையாளத்தின் பேரில் கட்டமைக்கப்படுவதை நான் எதிர்க்க…
-
- 2 replies
- 420 views
-
-
-
தேர்தல் அதிர்வலைகளும் பிரெக்சிற்றும் - ஜனகன் முத்துக்குமார் ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில், யாதொரு கட்சியும் அறுதிப்பெரும்பான்மையை பெறாத நிலையில், பழைமைவாதக் கட்சியை சார்ந்த தற்போதைய பிரதமர் தெரேசா மே, தனது கட்சி சார்பான பிரசாரங்களில் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுதல் தொடர்பான கடும்போக்கானது, கைவிடப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குறித்த தேர்தல் முடிவானது, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஐக்கிய இராச்சியம் வெளியேறுவதற்கான ஒப்பந்தம், ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்படுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றது. அண்மையில், ஐக்கிய இராச்சிய உச்ச நீதிமன்றமானது, ஐரோப்பிய ஒன்றியத்…
-
- 0 replies
- 306 views
-
-
தேர்தல் அரசியலும், இலட்சிய அரசியலும் ஒன்றாகப் பயணிக்கமுடியுமா? - முத்துக்குமார் தேர்தல்கள் இலட்சிய அரசியலைச் சிதைக்கும் ஒரு கருவி என்பது இன்று நிரூபிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. இதற்கு இடதுசாரி அரசியலோ, தேசிய இன அரசியலோ விதிவிலக்காக இருந்ததில்லை. இலட்சிய அரசியலின் எதிரிகள் அதனைத் தோற்கடிக்க எப்போதும் தேர்தல் அரசியலையே பயன்படுத்த முனைவர். தேர்தல் அரசியலில் ஈடுபடும்வரை இடதுசாரி இயக்கம், இலங்கையிலும் சரி, இந்தியாவிலும் சரி வலுவானதாக இருந்தது. அவை எப்போது தேர்தல் அரசியலைத் தேர்ந்தெடுத்ததோ, அன்றிலிருந்தே சிதையத் தொடங்கியிருந்தன. சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்திலும், சுதந்திரத்தைத் தொடர்ந்து ஒரு சில வருடங்களும், இடதுசாரி இயக்கங்கள் வலிமையான அமைப்புகளாக இலங்கையில் இருந்தன.…
-
- 0 replies
- 582 views
-