அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9222 topics in this forum
-
இனத்துவத்தின் வெற்றியும் ஜனநாயகத்தின் தோல்வியும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஜூலை 09 விடுதலைப் போராட்டம் என்பது, அடக்கி ஒடுக்கப்படும் மக்களின் உரிமைக்கான போராட்டத்தின், விருத்தியடைந்த நிலை எனக் கூறலாம். இனக்குழுமம் ஒன்றின் வாழ்வு, இன ஒடுக்கலாகவும் அடக்குமுறையாகவும் இன ஒழிப்பாகவும் மாறும்போது, அதற்கெதிரான போராட்டமும் வளர்ச்சி பெற்று, விடுதலைப் போராட்டமாக வடிவம் பெறுகிறது. ஆனால், விடுதலை என்பதன் அர்த்தம், அச்சொட்டாகத் தீர்மானிக்கப்படக்கூடிய ஒன்றல்ல. விடுதலையின் நோக்கம் என்ன என்பதே, விடுதலையின் வடிவத்தையும் தீர்மானிக்கிறது. இது அனைத்து வகையான விடுதலைப் போராட்டங்களுக்கும் பொருந்தும். ஜூலை மாதம் நான்காம் திகதி, அமெரிக்கா தனது சுதந்திரப் பிரகடனத்…
-
- 0 replies
- 465 views
-
-
‘எழுக தமிழ்’ மூலம் யார் எழவேண்டும்? தெய்வீகன் “மக்கள் புரட்சி வெடிக்கட்டும்; சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்று அறைகூவி விட்டு பன்னிருநாள் உண்ணா நோன்பிருந்து தன் உயிரை அர்ப்பணித்த தியாகி திலீபனின் அறப்போராட்ட ஞாபகார்த்த காலப்பகுதியில் ‘எழுக தமிழ்’ என்ற மக்கள் எழுச்சிப் பேரணி ஒன்றை நடத்துவதற்கு ‘தமிழ் மக்கள் பேரவை’ அழைப்பு விடுத்திருக்கிறது. தமிழர் தாயகத்தில் கடந்த காலங்களில் இதுபோன்ற பல எழுச்சிப் பேரணிகளை பல அமைப்புக்கள் நடத்தியிருக்கின்றன. அவற்றில் முக்கியமாக ‘பொங்குதமிழ்’ நிகழ்வு எவ்வளவு உணர்ச்சி பிரவாகமாக - தமிழ்மக்களின் உரிமைக்குரலாக - ஓங்கி ஒலித்தது என்பதை கண்டிருக்கிறோம். உரிமைகள் மறுக்கப்பட்…
-
- 0 replies
- 544 views
-
-
“சீனாவின் உலகளாவிய விரிவாக்கமும் - இலங்கையின் வெளியுறவில் ஏற்பட்டுள்ள சவாலும்” சீனாவின் அரசியல் பொருளாதார இராணுவ பலம் பற்றிய அமெரிக்காவின் அறிக்கையிடல் அதிக நெருக்கடியான உலக அரசியல் தளத்தை தந்துள்ளது. அமெரிக்க உலக நாடுகளை நோக்கி சீனா இராணுவ கட்டமைப்பினை ஏற்படுத்துவதென்பது அமெரிக்காவுக்கு எதிரான முனையங்களை நோக்கியதாகவே தெரிவதாக குறிப்பிட்டுள்ளது. பென்டகனின் அறிக்கையிடல் உலகளாவிய அரசியல் ஒழுங்கின் மீதான அமெரிக்காவின் அக்கறையைக் காட்டுவதுடன் சோவியத் யூனியனுக்கு பின்பு அமெரிக்காவுக்கு எதிரான உலக ஒழுங்கினை எப்படித் தடுப்பதென்ற உத்தியுடன் அமைக்கப்படுவதாகவே தெரிகிறது. இக்கட்டுரையும் சீன அமெரிக்க் மோதல் அதிகரிக்கும் போது இலங்கை சீன உறவு எத்தகைய போக்கினையு எதிர் கொள்ளும்' என்…
-
- 0 replies
- 445 views
-
-
கொல்லப்பட்ட மாணவர்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் அரசியல் பிழைப்பும் பேரினவாதிகளும் 10/24/2016 இனியொரு... யாழ்ப்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கற்கும் இரண்டு மாணவர்கள் இலங்கைப் பொலிசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பான அதிர்வலைகள் மக்கள் மத்தியிலும், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலும் அதன் எதிர்த் தரப்பிலும் பல்வேறு வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இலங்கைப் பொலிஸ் படை இரண்டு மாணவர்களை அதிகாலை வேளையில் கொன்று போட்டுவிட்டு அதற்கான தடயங்களை அழித்துவிட்ட சம்பவம் ஒரு வகையான அச்ச உணர்வைச் சமூக மட்டத்தில் தோற்றுவித்துள்ளது. இரண்டு கொலைகளின் பின்புலத்திலுள்ள அரசியல் காரணங்கள் எதுவாயினும், அவற்றை முன்வைத்து நடத்தப்படும் பிழைப்புவாத…
-
- 1 reply
- 493 views
-
-
முன்னணி : கட்சியா - அமைப்பா? - கபில் அண்மைக்காலத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்கள், வெளிச்சத்துக்கு வந்த போது, அது ஒரு அரசியல் கட்சியா அல்லது அமைப்பா (இயக்கம்) என்ற சந்தேகமே மேலெழுந்தது. ஏனென்றால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இதுவரையில் தம்மை ஒரு அரசியல் கட்சியாக தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்து கொள்ளவில்லை. அவ்வாறு பதிவு செய்து கொள்வதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணியை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டும் என்று, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளராக இருந்த மணிவண்ணன் வலியுறுத்த ஆரம்பித்ததும் கூட, அவருக்கு எதிரான நடவடிக்கை, எடுக்கப்படுவதற்கு காரணமாக இருந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்…
-
- 0 replies
- 470 views
-
-
ஆவா குழுவின் பின்னணி யாழ். குடாநாட்டில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் ஆவா குழு தொடர்பாக அரசாங்கமானது தனது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்தியிருக்கிறது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன வடக்கில் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் ஆவா குழுவானது கடந்த ஆட்சிக்காலத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக ஒரு சில மேஜர் தர அதிகாரிகளினால் உருவாக்கப்பட்டது. இந்த ஆவா குழுவானது தற்போது வடக்கில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக…
-
- 0 replies
- 461 views
-
-
ஆபத்தான முன்னுதாரணம் ட்ரம்பின் வெற்றி அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் பெற்ற வெற்றி, இலங்கை தொடர்பான வெளிவிவகாரக் கொள்கையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற விவாதங்கள் ஒருபுறத்தில் நடந்து கொண்டிருக்கின்ற நிலையில், இந்த வெற்றியின் தாக்கம் இலங்கையின் உள்நாட்டு அரசியலிலும் எதிரொலிக்கும் என்ற கருத்தும் வலுவடைந்திருக்கிறது. டொனால்ட் ட்ரம்ப் வெள்ளையினத் தேசியவாதத்தை முன்வைத்தே வெற்றியைப் பெற்றிருந்தார். கறுப்பர்கள்,முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினத்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்த சூழலில், அமெரிக்காவின் பெரும்பான்மையினரான வெள்ளைய…
-
- 7 replies
- 615 views
-
-
யுத்தத்திற்குப் பின்னான நிகழ்ச்சி நிரல் என்ன?
-
- 1 reply
- 1k views
-
-
இறுபக்கிப்பிடிப்பாரா அல்ஹீசைன் ரொபட் அன்டனி நீதி வழங்கும் செயற்பாட்டில் எவ்வாறான பொறிமுறையை இலங்கை முன்வைக்கப் போகின்றது என்பதே சர்வதேசத்தின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. அந்த வகையில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் முன்வைக்கப்போகும் அறிக்கை ஆர்வத்துக்குரிய விடயமாக மாறியுள்ளது. அதாவது ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு மேலும் கால அவகாசத்தை வழங்கப்போகிறாரா? அல்லது இலங்கை தொடர்பில் மற்றுமொரு பிரேரணைகொண்டுவருவதற்கான வழியை ஏற்படுத்தப் போகிறாரா? மிகவும் பரபரப்பாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு மார்ச…
-
- 0 replies
- 280 views
-
-
இலங்கை அபிவிருத்தியும் சீனாவின் நலன்களும் – மானுவேல் மங்களநேசன் January 26, 2021 52 Views 1948 வரை இலங்கை பிரித்தானியாவின் கீழ் காலனித்துவ நாடாக இருந்துள்ளது. இலங்கை உலகலாவிய வர்த்தகத்திற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது பலரது கண்களை குத்தவே செய்கிறது. அந்த நோக்குடன் சீனாவும் இலங்கை ஊடாக உலக வர்த்தகத்தை விஸ்தரிக்க விரும்பியே இந்த அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது என ஊகிக்கலாம். ஆனால் அது இலங்கையின் அபிவிருத்தியும் முன்னேற்றமும் என்ற வெளித்தோற்றமாகவே சொல்லப்படுகிறது. சீனா இலங்கையுடன் பல திட்டங்களை நிறைவேற்றுகிறது. இவ்வாறு சீனாக்கும் இலங்கைக்கும் இடையே உருவாக்கப்பட்ட திட்டங்கள் 1. அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்…
-
- 0 replies
- 488 views
-
-
ஈராண்டு கால ராஜதந்திரப்போர்? நிலாந்தன்:- கடந்த ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முனபு; கூட்டமைப்பின் உயர்;மட்டத்தை சேர்;ந்த ஒருவர் இக்கட்டுரை ஆசிரியரை சந்தித்தார். இந்தியப் பிரதமர் மோடிக்கும் கூட்டமைப்பின் உயர்மட்டத்தினருக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்பின் போது அவரும் பங்கு பற்றியிருந்தார.; அச்சந்திப்பில் உரையாடப்பபட்ட ஒரு விடயத்தை அவர் சுட்டிக்காட்டினார். அச்சந்திப்பின் போது சம்பந்தர் மோடியிடம் பின்வரும் தொனிப்பபட ஒருவிடயத்தை அழுத்திக் கூறினாராம். ‘நாங்கள் நாட்டை பிரிக்குமாறு கேட்கமாட்டோம். ஆனால் எமது தாயகம் பிரிக்கப்படாது இருப்பது அதாவது வடக்கு கிழக்கு பிரிக்கப் படாது இருப்பதை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும்’ என்று இந்த விடயத்தை சம்பந்தர் ஒன்றுக்கு மேற…
-
- 0 replies
- 456 views
-
-
பொய் சொல்லும் இனம். // பரணி கிருஸ்ணரஜனி ( சற்று நீண்டு விட்டது. நேரம் கிடைக்கும்போது கட்டாயம் படியுங்கள்) நேற்று முகநூல் வழி மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவருடன் உரையாட முடிந்தது. மண்டபம் அகதி முகாமில் நீண்டகாலம் பணியாற்றியதாகவும் குறிப்பிட்டார். ஈழப்போராட்டத்தின் வீழ்ச்சி தொடக்கம் தமிழக மாணவர் போராட்டம் வரை நிறைய கதைத்தார். தமிழீழம் ஒன்றுதான் தமிழனுக்கு தீர்வு என்றும் குறிப்பிட்டார். மேற்றர் இதுவல்ல. பேசி முடிக்கும் போது ஒரு வசனம் கூறினார். "எல்லாம் பிடிக்கும், ஈழத்தமிழர்களிடம் எனக்கு பிடிக்காதது அவர்கள் சொல்லும் பொய்கள்தான். மண்டபத்தில் பணிபுரியும்போது அவர்கள் சொல்லும் பொய்களை கேட்டு எனக்கு வெறுத்து விட்டது." உண்மைதான். அவர் சொல்வது …
-
- 11 replies
- 1.8k views
-
-
ஆபிரிக்காவில் பிரித்தானியாவில் இருந்து சுதந்திரம் அடைந்த முதலாவது நாடு தென் ஆபிரிக்கா: அங்கு வாழ்ந்த வெள்ளையர்களிடம் கொடுத்ததால், 'போராட்டம் இன்றி' கொடுக்கப் பட்டது. கடைசியாக 'போராடி' பிரித்தானியாவில் இருந்து சுதந்திரம் அடைந்தவர்கள், ரொடிசியா என அழைக்கப் பட்ட சிம்பாவே. இரு நாடுகளிலும் பெரும்பான்மையினர் கருப்பர்கள். வெள்ளை சிறுபான்மையினர் ஆட்சி பொறுப்பில் இருந்தார்கள். தாம் சிறுபான்மையினர் என்ற எண்ணம் இல்லாது, மேற்குலகம் ஆதரவு தரும் என இறுமாந்து எந்த வித சமரசமும் இன்றி, பெரும்பான்மை இனத்தவருடன் மோதி, தோற்று, பின்னர், பலவீனமான நிலையில் பேச்சு வார்த்தைக்குப் போய், வெள்ளையர் நலன்களை உறுதிப் படுத்தி பின்னர் சுதந்திரம் வழங்கி, இன்று பிரித்தானியா என்றாலே பாம்பாகச் சீ…
-
- 8 replies
- 812 views
-
-
சுயநல அரசியலால் சீரழியும் முஸ்லிம்கள் முஸ்லிம் சமூகத்தில் பல அரசியல் கட்சிகள் உள்ளன. எந்தவொரு முஸ்லிம் கட்சியும் சமூகத்தின் விடிவுக்காய் சிந்திப்பதில்லை. முஸ்லிம் சமூகத்தின் சீரழிவிலும் ஆதாயம் தேடிக் கொள்ள விளைகின்றவர்களாகவே முஸ்லிம் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். இன்றைய அரசாங்கத்திலும் மஹிந்தராஜபக் ஷவின் அரசாங்கத்திலும் முஸ்லிம் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தின் பங்காளிகளாக இருக்கின்றனர், இருந்தனர் ஆனாலும் போதிலும் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கவில்லை. அரசாங்கத்தில் பங்காளிகளாக இணைந்து கொண்டவர்கள் அமைச்சர் பத…
-
- 0 replies
- 461 views
-
-
அமெரிக்கா காங்கிரஸ் பிரதிநிதியின் பிரேரணையும் தவறான பிரச்சாரங்களும் - யதீந்திரா கடந்த மே மேதம் 18ம் மிகதி அமெரிக்க காங்கிரஸில், இலங்கை தொடர்பில் ஒரு பிரேரணை முன்வைக்கப்பட்டது. அமெரிக்க சமஸ்டி அரசுகளில் ஒன்றான வடக்கு கரலைனாவை (U.S. Representative for North Carolina’s 2nd congressional district) பிரதிநிதித்துவம் செய்யும் காங்கிரஸ் பிரதிநிதி ஒருவரால் இந்த பிரேரணை அறிமுகம் செய்யப்பட்டது. இவரது பெயர் (Deborah K. Ross) டெவோறா ரோஸ். ஐக்கிய அமெரிக்கா, ஐம்பது சமஸ்டி அரசுகளை உள்ளடக்கிய ஒரு தேசம். அதில் ஒன்றுதான் வடக்கு கரலைனா குறித்த பிரேரணைக்கு, மேலும் நான்கு காங்கிரஸ் பிரதிநிதிகள் இணையனுசரனை வழங்கியிருக்கின்றனர். அமெரிக்க காங்கிரஸில்…
-
- 0 replies
- 446 views
-
-
கிழக்கு: மேய்ச்சல் தரை அத்துமீறல் -இல. அதிரன் அரசியல் என்பது, நடுநிலைமையும் பொதுப்படையும் கொண்டதாக அமையப்பெற்றிருக்க வேண்டும். அது ஒருதலைப்பட்சமாக, பக்கச்சார்பாக முடிவுகள் எடுக்கப்படுகின்றபோது, திட்டங்கள் கொண்டு வரப்படும் பொழுது, முரண்பாடுகள் தோற்றம் பெறுகின்றன. இதற்கு நல்லதோர் உதாரணமே கிழக்கின் மேய்ச்சல்தரை அத்துமீறல்கள். மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதியான மயிலத்தமடு, மாதவணை பிரதேசத்தில் தொடரும் பண்ணையாளர்களுக்கெதிரான செயற்பாடுகளைத் தடுப்புக்குரிய முயற்சிகளும், கவனயீர்ப்பு போராட்டங்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் நடைபெற்றுக் கொண்டே இருக்க அத்துமீறல்களும் தொடர்…
-
- 0 replies
- 327 views
-
-
மே 2009 , இனப்படுகொலை முடிந்த கையோடு, இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா. பொதுச் செயலாளர் பாண் கி மூன் அவர்கள் என்ன சொன்னார்?. சர்வதேச சுயாதீன போர்க்குற்ற விசாரணை ஒன்று தேவை என்றரா? இல்லவேயில்லை. நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்குங்கள் என்று கூறினார். நடந்தது நல்லபடியாக நடந்தது என்பதுபோல்தான் அவரின் ஊடக நேர்காணல்கள் அமைந்திருந்தன. வவுனியா வதை முகாம்களுக்கும் சென்று பார்வையிட்ட மூன், அரசை பாராட்டிவிட்டே சென்றார். சர்வதேச மனித உரிமைச் சங்கங்களின் தொல்லைதாங்க முடியாமல், மூவரடங்கிய நிபுணர் குழுவொன்றை வழமைபோல் அமைத்து நீண்ட அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டார். அதனை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்காமல் நீண்டகாலமாக இழுத்தடிப்புச் செய்தார் பொதுச் செயலாளர் பாண் கி மூன். அறி…
-
- 0 replies
- 744 views
-
-
பிரெக்ஸிட் ஓராண்டின் பின்னே: இருளின் ஒளியில் வழிதேடல் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டாலும் பூவுலகில் தான் வாழப்படுகிறது. சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்பதால் அது இறுதிவரை நிலைக்கும் என்பதற்கான எந்தவொரு உத்தரவாதமும் இல்லை. அரசியலில் ஏற்படுத்தப்படும் கூட்டிணைவுகளும் அவ்வாறுதான். மிகவும் வலுவான அடித்தளத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டாலும் கூட, அக்கூட்டிணைவு நிலைப்பதற்கான உத்தரவாதத்தை யாரும் வழங்க முடியாது. திருமணங்களை விட விவாகரத்துகள் விவகாரமானவை. திருமணத்துக்குக் குறைந்த காலத்தில் உடன்படிக்கைகள் எட்டப்படக்கூடியதாக இருக்கின்றன. ஆனால், விவாகரத்துகளின்போது, உடன்படிக்கைகளை எட்டுவது…
-
- 0 replies
- 330 views
-
-
எல்லை தாண்டலுக்கு முற்றுப்புள்ளி லக்ஸ்மன் இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினையின் பிரதிபலன் மிக மோசமான நிலையை எட்டியிருக்கிறது. எல்லை தாண்டுவதும் அதற்காக கைது செய்வதும், பறிமுதல் செய்வதும் தண்டனை வழங்குவதும், படகுகளை அரசுடமையாக்குவதும், கைதாகும் மீனவர்களைப் பரிமாறிக்கொள்வதும் என்று தொடர்ந்து கொண்டிருக்கும் இரு நாடுகளின் கடல் எல்லைப் பிரச்சினையால் யாருக்கு இலாபம் அதிகம் என்று சிந்திப்பதனைவிடவும் இதிலுள்ள அரசியலை ஆழ்ந்து ஆராயவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. மோதலால் உருவாகும் முறுகல் தீர்வைத் தேடுவதாகவே இருந்தாலும் திரௌபதியுடைய சேலையாகவே தொடர்கிறது. கடந்த வாரம் முழுவதும் தமிழக மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் வடக்கில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட…
-
- 0 replies
- 378 views
-
-
மதசார்பற்ற நாடு அவசியமா? இலங்கையின் அரசமைப்பு உருவாக்கத்துக்காகச் செயற்படும் அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழுவின் இடைக்கால வரைவு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கை வெளியிடப்பட்டு, சில வாரங்கள் கடந்துவிட்டாலும், அது தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறான கலந்துரையாடல்களில், முக்கியமான இரண்டு விடயங்கள் காணப்படுகின்றன. முதலாவது: இலங்கை அரசின் தன்மை குறித்தது. இரண்டாவது: இலங்கையில் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட வேண்டிய அல்லது வழங்கப்படக் கூடாத முதலிடம் அல்லது முன்னுரிமை தொடர்பானது. இதில் முதலாவது விடயம், அதிகமான அரசியல் பின்னணிகளைக் கொண்டது. அதிகமான க…
-
- 2 replies
- 735 views
-
-
ஜனாதிபதி தெரிவும் தமிழ்க் கட்சிகளும் என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan இலங்கையினுடைய எட்டாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக, அரசியலமைப்பின் 40ஆவது சரத்தின்படி, பாராளுமன்ற உறுப்பினர்களிடையேயான இரகசிய வாக்கெடுப்பின் மூலம், ரணில் விக்கிரமசிங்க தெரிவுசெய்யப்பட்டு, பதவியேற்றிருக்கிறார். பல திருப்புமுனைகளோடு, மிக விறுவிறுப்பாக இந்த ஜனாதிபதி தெரிவு அரங்கேறியிருக்கிறது. இந்த ஜனாதிபதி தெரிவின் போதான தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடுகள், நடவடிக்கைகள் என்பவற்றை, மீள்பார்வை செய்வதே இந்தப் பத்தியின் நோக்கமாகும். இன்றுள்ள பாராளுமன்றத்தைப் பொறுத்தவரையில், கூட்டணிக் கட்சிகள் உள்ளடங்கலாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு, பாராளுமன்றம் …
-
- 0 replies
- 471 views
-
-
கூட்டு ஆட்சித் தலைவர்களது வாக்குறுதிகளின் கதி என்னாச்சு? கூட்டு ஆட்சித் தலைவர்களது வாக்குறுதிகளின் கதி என்னாச்சு? கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி நாட்டில் நடைபெற்ற அரச தலைவர் தேர்தலில் முன்னாள் அரசதலைவர் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடித்து பொது எதிரணி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தமிழ்மற்றும் முஸ்லிம் மக்களின் அதிகப்படியான ஆதரவு வாக்குகளால் பெரு வெற்றியீட்டி அரசதலைவராகப் பதவியேற்று மூன்று ஆண்டுகள் கழிந்து விட்டன. …
-
- 0 replies
- 263 views
-
-
உள்ளூராட்சித் தேர்தலும் தமிழ் மக்களின் நிலையும் ருத்திரன்- தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளினால் ஜனநாயக அரசியலை கொண்டு நகர்த்துவதற்கான மக்கள் பிரதிநிதிகளை பெறுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கூட்டு ஆகும். இந்தக் கூட்டமைப்பில் மிதவாத கட்சியும், ஆயுதப்போராட்டத்தில் இருந்து ஜனநாயகத்திற்கு திரும்பிய அமைப்புக்களும் அங்கத்துவம் வகிக்கின்றன. இவர்கள் அனைவருமே விடுதலைப் புலிகள் போன்று தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து போராடியவர்கள். 2009 ஆம் ஆண்டு முள்ளியவாய்கால் பேரழிவுடன் விடுதலைப் புலிகளின் ஆயுத ரீதியான போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் தேசிய அரசியலை முன்னகர்த்த வேண்டிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோள்களில் தான…
-
- 0 replies
- 384 views
-
-
நினைத்ததும் நடந்ததும் உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள், மாற்றுத்தலைமை மீதான மக்களுடைய ஆர்வத்தையும் அக்கறையையும் தெளிவாக உணர்த்தியிருக்கின்றன. வேறு வேறு அரசியல் தளத்தைக் கொண்டிருக்கின்ற போதிலும், சிங்கள மக்களும், தமிழ் பேசும் மக்களும் மாற்றுத் தலைமைக்கே இந்தத் தேர்தலில் ஆணை வழங்கியிருக்கின்றார்கள். இருப்பினும் வடக்கு–கிழக்குப் பிரதேசங்களைப் பொறுத்தமட்டில் தமிழ் அரசியலின் செல்நெறியில் எழுந்துள்ள பாதகமான ஒரு நிலைமை குறித்து இந்தத் தேர்தல் அபாய அறிவிப்பை அமைதியாகச் செய்திருக்கின்றது. இந்த அறிவித்தல் குறித்து தமிழ் அரசியல் தளத்தில் பொறுப்புள்ளவர்கள் உரிய முறையில் கவனம் செலுத்தத் தவறியுள்ள நிலைமையையே காண முடிகின்றது. தென்பகுதிகளில் உள்ள மக்கள…
-
- 0 replies
- 393 views
-
-
ரஷ்யா - யுக்ரேன் போர்: விளாடிமிர் புதினின் சிந்தனையும் திட்டமும் என்ன? ஸ்டீவ் ரோசன்பெர்க் ரஷ்ய ஆசிரியர், மாஸ்கோ 34 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, இந்த போரை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுப்பதற்கு முன்பே பல மாதங்களாக நாம் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வி இது. விளாடிமிர் புதின் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்? என்ன திட்டம் வைத்திருக்கிறார்? எனக்கு ரஷ்யாவின் எதிர்காலம் பற்றியோ, அல்லது எனக்கு புதினுடன் நேரடி தொடர்போ இல்லை என்பதை முன்க…
-
- 0 replies
- 240 views
- 1 follower
-