அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
வாக்குவாதங்களை உருவாக்கியிருக்கும் வளச் சுரண்டல் விவகாரம் லக்ஸ்மன் கிழக்கில் மாத்திரமல்ல, முழு நாட்டிலும் முக்கிய பேசு பொருளாக, அந்தந்தப் பிரதேசங்களின் வளங்கள் சுரண்டப்படுதல் மாறியிருக்கிறது. வடக்கு கிழக்கில் நீண்டகாலமாக கல், மணல் அகழப்பட்டுவந்தாலும் 2009இல் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் மிகப் பெரும் மாபியாவினுடைய தொழிலாக மாறி வளர்ந்திருக்கிறது. மண்ணினுடைய பாதுகாப்புப் பற்றிப் பேசியவர்களின் முக்கிய வருமானமீட்டும் துறையாகவும் இது இருக்கிறது. இந்நிலையில்தான், வடக்கு- கிழக்கிலுள்ள வளங்களைக் கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்யத் தேவையான வேலைத்திட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இருக்கின்றது போன்ற விடயங்களை கடந்த நாடாளுமன்ற அமர்வில் இரா.சாணக்கியன் பேசினார். அரசாங்கத…
-
- 0 replies
- 278 views
-
-
சாதியைப் பிரித்துக் காட்டும் சுடலைகள் சிவப்பு குறிப்புகள் சாதி ஆதிக்க சமூகங்களில் ஆதிக்க சாதியினர், பிறப்பினூடாக சிறப்புச் சலுகைகளை கோருகின்றனர். ஆனால் யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடந்த சாதி மோதல்கள், மரணம் கூட சாதியிலிருந்து தப்பிக் கொள்ள அனுமதிக்காது என்பதை வெளிக்கொண்டு வந்துள்ளன. மேலும், இறந்தவரை எரிக்கும் இடங்கள் கூட, சாதி ஒடுக்கு முறைக்கான இடமாகியுள்ளதையும் இது காட்டியுள்ளது. கடந்த வருட இறுதியிலிருந்து, ஒடுக்கப்பட்ட சாதி கிராமங்களினுள் அமைந்த உயர் சாதியினரின் சுடலைகளுக்கு எதிரான கிளர்வுகள் அதிகரித்து வந்து கொண்டிருக்கின்றன. யுத்தக் காலத்தில், தசாப்தங்களாக என்று கூற முடியாவிடினும், பல வருடங்களாக, இவ்வாறான சுடலைகள் பயன்படுத்தப்ப…
-
- 0 replies
- 534 views
-
-
$ இந்திய மாக்கடல் மீதான தலையீட்டை சீனா தொடர்ந்தும் விரிவுபடுத்தி வரும் நிலையில், இப்பிராந்தியத்தின் தலைமைப் பொறுப்பைத் தன் வசம் தக்கவைத்திருப்பதற்கான நகர்வுகளில் இந்தியா ஈடுபடுகிறது. இந்த நோக்கத்திற்காக, இந்தியா கடல் சார் கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுவதுடன் தனது நட்பு நாடுகளுடன் இணைந்து தனது கடல் நடவடிக்கைகளுக்கான வலைப்பின்னலைப் பலப்படுத்தி வருகிறது. IORA போன்ற தனது பிராந்திய நிறுவகங்களுக்கு இந்தியா புத்துயிர் அளித்துள்ளதுடன் இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய சவால்களைக் கலந்துரையாடுவதற்கான தளங்களையும் உருவாக்கி வருகிறது. இந்த நோக்கத்தின் ஒரு பகுதியாகவே கொழும்பில் இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கு இடம்பெற்றது. இக்கருத்தரங்கில் இந்திய …
-
- 0 replies
- 535 views
-
-
இனி ஏது பிரிவென்று இரவு இன்று விடிய இசையோடு மொழி சேர்ந்து இனி காதல் கொள்க அழகான கனவொன்று நியமாகுமா அன்பென்ற மொழி ஒன்று இனி வாழுமா. இயற்கை அழிவுகளினாலும்,பெரும் தொற்று நோய்களினால், யுத்த அழிவுகளினாலும், போரும் மனித அவலங்களும் மரணங்களுமாக உலகம் இன்று அமைதி இழந்து ஒரு இருள் சூள்தபடி சுழல்கிறது. ஆக்கிரமிப்பும், அதிகாரமும், சுயநலன்களும் நாடுகளுடன் நாடுகளும் மனிதனுக்கு மனிதன் எதிரியாகவும் இருக்கிறான். மனிதனை மனிதன் கொல்லாமல், நாடுகளை நாடுகள் அடிமைப் படுத்தி சுய நலன் கருதி சுரண்டாமல் மனிதன் வாழ கற்றுக் கொள்வானா. ஆதிகாலத்தில் மனிதனுக்கு மனிதன் சண்டை போட்டது போல் இன்று நாடுகள் பிரிந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றன. அன்பு, அறம், கருணை, சமாதானம், மனிதம் எல்லா…
-
- 0 replies
- 223 views
-
-
பாரபட்சம் இந்த நாட்டை முப்பது வருடங்களாக ஆட்டிப்படைத்த பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில் காட்டப்படுகின்ற தாமதமும், இழுத்தடிப்பும் ஆட்சியாளர்களின் அரசியல் நேர்மை, அரசியல் நிர்வாக நேர்மை குறித்து பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. அரசியல் கைதிகளின் விவகாரம் மீண்டும் விசுவரூபம் எடுத்துள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகள் அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதே இதற்குக…
-
- 0 replies
- 499 views
-
-
இம்முறையும் தப்பிப் பிழைப்பாரா விமல்? இது தேர்தல் காலம். இச்சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்காகப் பலமாக ஒலிக்க வேண்டிய ஒரு குரல், மௌனித்து இருப்பது முக்கியமானதொரு விடயமாகத் தெரிகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், சில காலமாக அடங்கிக் கிடந்த மஹிந்வை, உசுப்பேற்றி, மீண்டும் களத்துக்கு இழுப்பதில் சூத்திரதாரியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, தமது குருவும் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ, முக்கியமான தேர்தலுக்கு முகம் கொடுக்கத் தயாராகி வரும் நிலையில், அசாதாரணமாக மௌனம் காக்கிறார்;அல்லது குரலைத் தாழ்த்திப் பேசுகிறார். காரணம், நாடு அறிந்ததே. அவரது கட்சியான தேசிய சுதந்திர முன்ன…
-
- 0 replies
- 334 views
-
-
தமிழ்க் கட்சிகள், ஒன்றாக... திலீபனை, நினைவு கூரப்போவதில்லை? -நிலாந்தன்.- யாழ்.மாநகர சபை எல்லைக்குள் திலீபனின் நினைவுத்தூபி வருகிறது. அதனால் மாநகர சபையை நிர்வகிக்கும் மணிவண்ணன் அணியானது திலீபனின் நினைவு நாளை அனுஷ்டிப்பதற்குரிய ஏற்பாட்டுக்களை ஒருபுறம் செய்யத் தொடங்கியது. இன்னொரு புறம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அவ்வாறு ஏற்பாடுகளை செய்ய தொடங்கியது.அக்கட்சியானது வடக்கையும் கிழக்கையும் இணைத்து பொத்துவிலில் இருந்து திலீபனின் நினைவிடம் வரையிலும் ஒரு நினைவூர்தியைக் கொண்டு வருகின்றது. இந்த இரண்டு தரப்பும் இதுதொடர்பில் முரண்படப் போவதை முன்கூட்டியே அனுமானித்த அரசியல் செயற்பாட்டாளர்கள் சிலர் இதுவிடயத்தில் தலையீடு செய்ய முற்பட்டார்கள்.இந்த இரண்டு கட்சிகளையும் சாராதவரும் புலிக…
-
- 0 replies
- 213 views
-
-
மருத்துவப் போராளி| DR. Tharmaratnam Varman அவர்களுடனான நேர்காணல்
-
- 0 replies
- 596 views
-
-
ஆப்கான் யுத்தக் களத்தில் ஐ.அமெரிக்கா எதிர் ரஷ்யா - பாகிஸ்தான் வேகமாக மாறிவரும் பூகோள அரசியலில், சீனாவினதும் ரஷ்யாவினதும் அண்மைய ஆதிக்கம், பனிப்போரின் பின்னரான காலப்பகுதியில் ஐக்கிய அமெரிக்கா கொண்டிருந்த மேலாதிக்கத்தைச் சமநிலைப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. இதன் ஒரு பகுதியாகவே, பிராந்திய வல்லாண்மையைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில், மேற்கத்தேய நாடுகளுக்கு இணையாக ரஷ்யாவும், இராணுவ உடன்பாடு, இணைந்த பாதுகாப்பு உடன்படிக்கை மூலமாக, குறிப்பாக ஆசிய பிராந்தியத்தில் புதியதோர் இணைந்த கட்டமைப்புக்கு, வழிவகுத்திருக்கிறது. இதன் ஒரு பகுதியாகவே, ரஷ்யாவும் பாகிஸ்தானும், வரலாற்றில் ஒரு முறை இராணுவ யுகத்தின் போட்…
-
- 0 replies
- 366 views
-
-
சில சிந்தனைகள்: ‘சுதந்திரம்’ கிடைத்து 75 ஆண்டுகள்! என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan இலங்கையானது பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து விடுதலையடைந்து, பிரித்தானிய முடியின் கீழ் டொமினியனாக ஆன, 1948 பெப்ரவரி நான்காம் திகதியை இலங்கை, சுதந்திர தினமாகக் கொண்டாடி வருகிறது. அந்தச் ‘சுதந்திரம்’ கிடைத்து, கடந்த சனிக்கிழமையோடு 75 ஆண்டுகளாகியது. 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதா, வேண்டாமா என்ற வாதப்பிரதிவாதங்கள் இந்தமுறை மிகப் பலமாக ஒலித்தன. சுதந்திர தினத்துக்கு முதல் நாளிரவு, கொழும்பின் மருதானையில் சத்தியாக்கிரக ஆர்ப்பாட்டம் இடதுசாரிகளால் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தை பொலிஸார் தண்ணீர் பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும் கலைத்த…
-
- 0 replies
- 919 views
-
-
Published By: DIGITAL DESK 3 13 OCT, 2023 | 12:08 PM ரொபட் அன்டனி வங்கிகளில் செய்யப்படுகின்ற நிதி வைப்புக்கள் மற்றும் வங்கிகளிடம் இருந்து பெறப்படுகின்ற கடன்களுக்கு மத்திய வங்கயினால் நிர்ணயிக்கப்படுகின்ற வட்டி விகிதங்கள் மீண்டும் குறைக்கப்பட்டு இருக்கின்றன. பணவீக்க வீழ்ச்சி மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை விரிவடைய செய்யும் நோக்கம், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்களை ஊக்குவித்தலின் ஊடாக உற்பத்தி என்பனவற்றை நோக்கமாகக்கொண்டு இவ்வாறு வட்டி வீதங்கள் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளன. இந்த தீர்மானத்தை மத்திய வங்கியின் நாணய சபை எடுத்துள்ளது. எப்படி குறைக்கப்பட்டுள்ளது? அதற்கமைய வைப்புக்களுக்கான …
-
- 0 replies
- 285 views
- 1 follower
-
-
புதிய பாதையின் அவசியம்! உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களின் பின்னணியிலும் கொழும்பு துறைமுக நகர நிர்மாணத்தின் பின்னணியிலும் நாட்டின் மீது அக்கறையும் கரிசனையும் கொண்டுள்ள சர்வதேச நாடுகளின் கவனத்தைத் தமிழ் அரசியல் தரப்பினர் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி காய் நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டும். இதன் ஊடாக தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்வதற்கான புதிய வழிமுறையொன்றில் பயணம் செய்வதற்கு முயற்சிக்க வேண்டும். இத்தகைய முயற்சிக்கான சூழலும் நாட்டின் நிலைமைகளும் எவ்வாறிருக்கின்றன என்று நோக்குவது முக்கியம். கொழும்பிலும் மட்டக்களப்பிலும்…
-
- 0 replies
- 546 views
-
-
பொதுத் தேர்தல் முடிவுகள் எமக்கு உரைக்கும் செய்திகள் பண்டிதத் தமிழ்ச் செயற்பாட்டாளர்களும் பாமரத் தமிழ் வாக்காளர்களும் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளைப் பற்றிப் பலரும் பல வியாக்கியானங்களைக் கொடுத்தாயிற்று. தேர்தல் காலத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தீவிர அர்ப்பணிப்புடன் ஆதரித்த ‘புத்திஜீவிகள்’ பலரும் இன்று தாம் சார்ந்த கட்சியின் படுதோல்விக்கு நகைக்கத்தகு அர்த்தங்களைக் கற்பித்துக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு வழங்கிய ஊடகவியலாளர்களில் நிலாந்தன் முதன்மையானவர். தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் இவர் எழுதிய “தமிழ் வாக்காளர்களை எப்படி விளங்கிக் கொள்வது?” என்ற கட்டுரையில் தமிழ்த் தேசிய…
-
- 0 replies
- 281 views
-
-
-
விக்னேஸ்வரனின் தனிமையும் பேரவையின் சிதைவும் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜூலை 31 புதன்கிழமை, மு.ப. 09:58 Comments - 0 மூன்றரை வருடங்களுக்கு முன்னர், பெருமெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை, இன்றைக்கு எங்கேயிருக்கின்றது என்று தேட வேண்டி ஏற்பட்டிருக்கிறது. தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், சிவில் சமூகத்தின் பங்களிப்பு, அர்த்தபூர்வமாகத் தேவைப்படுகின்ற தருணமொன்றில், தேர்தல் - வாக்கு அரசியலுக்கு அப்பாலான, அமுக்கக் குழுவாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, பேரவை தோற்றம் பெற்றது. அதுபோல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி என்று வரையறுக்கலாம்) என்கிற ஏகநிலை அதிகாரபீடத்துக்கு எதிராக, மாற்றுத் தெரிவுகள், தமிழ்த் தேசியப் பரப்பில், நிச்சய…
-
- 0 replies
- 565 views
-
-
தொக்கி நிற்கும் மாகாண சபை தேர்தல்கள் என்.கே. அஷோக்பரன் / 2019 செப்டெம்பர் 09 திங்கட்கிழமை, பி.ப. 05:09Comments - 0 ஊவா மாகாண சபையைத் தவிர்ந்த ஏனைய எட்டு மாகாண சபைகளும், அரசமைப்பின் 154E உறுப்புரைப்படி, அவற்றின் ஐந்து வருடகாலப் பதவிக்காலம் நிறைவடைந்ததன் நிமித்தமாகக் கலைந்துள்ளன. ஊவா மாகாண சபையின் பதவிக்காலமும், எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவுக்கு வருகிறது. மாகாணசபைத் தேர்தல்கள் சட்டத்தின் பத்தாம் சரத்து மற்றும் அரசமைப்பின் 154E உறுப்புரை ஆகியனவற்றின்படி, மாகாண சபையொன்றின் பதவிக்காலம் நிறைவடைந்து, அந்த மாகாணசபை கலைந்த நாளிலிருந்து, நான்கு வார காலத்துக்குள், குறித்த மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான அறிவித்தலை, தேர்தல் ஆணைக்குழு விடுக்க வேண்டும் என்கின்றது.…
-
- 0 replies
- 518 views
-
-
அப்பட்டமான சாட்சியம் – பி.மாணிக்கவாசகம் September 25, 2019 முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணிக்கு அருகில் கொலம்பே மேதாலங்காதேரருடைய சடலம் பலாத்காரமாக எரியூட்டப்பட்டதன் மூலம் நீதித்துறையின் முகத்தில் கரிபூசப்பட்டிருக்கின்றது. நீதிமன்றத்தின் உத்தரவைப் புறக்கணித்து, அதற்கு முரணான வகையில் ஓர் இந்து ஆலய தீர்த்தக்கரையில் பௌத்த பிக்கு ஒருவருடைய சடலம் இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளது. பேரின மத அகங்காரத்துடன் மேற்கொள்ளப்பட்ட அப்பட்டமான பௌத்த மதத் திணிப்பையே இது வெளிப்படுத்தி உள்ளது. சிங்கள பௌத்த தேசியத்தை முழு மூச்சாகக் கொண்டுள்ள பௌத்த மதச் சண்டித்தனம் இந்தச் சம்பவத்தில் மிகக் கோரமாக தலை நிமிர்த்தி இருக்கின்றது. சிங்…
-
- 0 replies
- 704 views
-
-
இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினை - அரசுகள் தலையிடாக் கொள்கை லக்ஸ்மன் இழுவைப் படகுகள் மூலம் இழுத்தெடுக்கப்படுவது மீன்கள் மாத்திரமல்ல, எதிர்கால தலைமுறையையும், எதிர்கால வாழ்க்கையையுமாகும். இவ்வாறு அழிக்கப்படுமானால், இன்னும் 15, 20 வருடங்களுக்குப் பிறகு எங்களது கடலில் எதுவுமே இல்லாது போவதுடன், கடல் பாலைவனமாக மாறுகின்ற நிலை ஏற்படும். இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் இந்நாட்டில் உள்ள ஐம்பதாயிரம் மீனவ குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சம் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வட மாகாண கடற்றொழிலாளர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். இழுவைப் படகுகள் என்பது இந்தியாவிலும் தடை செய்யப்பட்டிருக்கின்ற காரணத்தினால், இந்தியாவில் இருக்கின்ற மீனவர்கள் கூட இதற்கு வன்மையா…
-
- 0 replies
- 208 views
-
-
19 APR, 2025 | 01:12 PM மன்னாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் இல்லாத உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதற்கு முன்னர் 'பத்து தடவைகளுக்கு மேல்' சிந்தித்தே தீர்மானிக்கப்படும் எனக் கூறியிருந்தார். வெசாக் மாதத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு வாக்குகளைப் பெறுவதற்காக, நிதியமைச்சர் பதவியை வகிக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பிரச்சார மேடைகளில் மீண்டும் மீண்டும் வெளியிடும் கருத்துகள் கடுமையான விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது. ஆளும் கட்சி அதிகாரத்தைப் பெறும் உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு எந்தப் பொறுப்பும் இல்லாமல் மத்திய அரசு நிதியளிக்கும் எ…
-
- 0 replies
- 218 views
- 1 follower
-
-
நோக்கம் திசை மாறாமல் இருக்கட்டும் லக்ஸ்மன் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 80ஆவது அமர்வில் கடந்த 25ஆம் திகதி உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை உலகத் தலைவர்களுக்கு ஒப்புவித்ததாகவே நோக்க முடிகிறது. இலங்கையில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை.போதைப்பொருள் பிரச்சினையும், ஊழல், பொருளாதாரப் பிரச்சினைகளே இருக்கிறது. வேறு ஒன்றுமில்லை. அதற்காக அனைத்து நாடுகளும் ஒத்துழையுங்கள், ஐக்கிய நாடுகள் சபை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுபோன்ற தொனியில் தன்னுடைய உரையினை நிகழ்த்திவிட்டு, ஜப்பானுக்குப் பயணமாகியிருக்கிறார். அங்கு ஜப்பானின் ஒசாகாவில் நடைபெறுகின்ற ‘எக்ஸ்போ 2025’ கண்காட்சியில் பங்கேற்றார். ஜப்பான் விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார். ஜனாத…
-
- 0 replies
- 139 views
-
-
ஈழத் தமிழ் லொபியின் தோல்வி? - யதீந்திரா யுத்தம் நிறைவடைந்து ஒரு தசாப்தம் கழிந்துவிட்டது. இந்தக் காலகட்ட தமிழர் அரசியலை எடுத்து நோக்கினால், பாரபட்சமில்லாமல் அனைத்து தமிழ்த்தேசிய தரப்பினரும் சர்வதேச சமூகம் தொடர்பிலேயே தமது கரிசனையை வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர். ‘சர்வதேச சமூகம் எங்களை கைவிடாது’ – என்பதுதான் அனைவரதும் சுலோகமாக இருந்தது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் – கூட்டமைப்பின் கொள்கையை விமர்சித்து வேறு வழியில் சென்றவர்களுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. அதே போன்று ஜரோப்பிய மைய தமிழ் புலம்பெயர் அமைப்புக்களான நாடுகடந்த அரசாங்கத்திற்கும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்கும் கனடிய தமிழ் காங்கிரஸ் (CTC) மற்றும் USTAG போன்ற தாராளவாத புலம்பெயர் அமைப்புக்களுக்கும் இடையி…
-
- 0 replies
- 450 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத் தொடரில் நடைபெறுவது என்ன? விளக்குகின்றார் கிருபாகரன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. இலங்கை விவகாரமும் இந்தக் கூட்டத் தொடரில் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது. இது குறித்தும் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வருடகால அவகாசம் அடுத்த மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வரும் போது என்ன நடைபெறும் என்பதையிட்டும் பிரான்ஸிலிருந்து செயற்படும் தமிழ் மனித உரிமைகள் இயக்கத்தின் தலைவர் சா.வி.கிருபாகரன் தினக்குரல் இணையத்துக்கு விளக்குகின்றார். கடந்த சுமார் மூன்று தசாப்த காலமாக ஜெனீவாவிலிருந்து கிருபாகரன் செயற்பட்டுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. http://thina…
-
- 0 replies
- 324 views
-
-
வடக்கைக் குழப்பும் நிகழ்ச்சி நிரல் வடக்கில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் முயற்சிகள், சாண் ஏறினால் முழம் சறுக்குகின்ற கதையாகவே நீண்டு செல்கின்றன. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தையடுத்து, பெரிதும் நம்பிக்கையோடு இருந்த தமிழ் மக்களுக்கு ஏமாற்றங்களும் இழப்புகளும் தான் மிஞ்சி நிற்கின்றன. அரசியல்த் தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணிகள் விடுவிப்பு, படைக்குறைப்பு, மீள்குடியேற்றம், காணாமற்போனோர் பிரச்சினைக்குத் தீர்வு, போர்க்குற்ற விசாரணை என்று தமிழ் மக்கள் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் எதிர்பார்த்த விடயங்கள் ஏராளம். ஆனால், ஆட்சிமாற்றத்துக்குப் பிந்திய காலகட்டம் தமிழ் மக்களின் நம்பிக்கைகளை ஒவ்வொன்றாகச…
-
- 0 replies
- 438 views
-
-
சொதப்பலான, சிதம்பலான ஒரு வெளியுறவுப் பொறிமுறைக்குள், தொடர்ந்தும் குதிரை விடுமா தமிழ்த்தேசம்? நிலாந்தன்… October 17, 2020 தமிழர்களுக்கு ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்புத் தேவை… கஜேந்திரகுமார் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது இந்திய இலங்கை உடன்படிக்கையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் 13ஆவதுதிருத்தத்தை ஒரு தொடக்கமாக கருதவில்லை என்று கூறியிருக்கிறார். இந்தியா தொடர்பான அக்கட்சியின் வெளியுறவுக் கொள்கையாக இதை எடுத்துக் கொள்ளலாமா? அதாவது இந்திய இலங்கை உடன்படிக்கை எனப்படுவது இந்தியா அதன் பிராந்திய நலன் நோக்கு நிலையிலிருந்து இலங்கையோடு செய்து கொண்ட ஓர் உடன்படிக்கை. எனவே இப்பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக தாங்கள் இயங்கப்போவதில்…
-
- 0 replies
- 345 views
-
-
இலங்கையில் முதலாவது ஆயுதப் போராட்டம்: 50 ஆண்டுகள் பூர்த்தியாகும் ஜே.வி.பி கிளர்ச்சி -எம்.எஸ்.எம். ஐயூப் இலங்கையில், தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி, அரசுக்கு எதிராகப் போராடும் முன்னரே, தெற்கில் சிங்கள இளைஞர்கள், அரச எதிர்ப்புக் கிளர்ச்சியில் முதலில் ஈடுபட்டனர். வடக்கில், முதலாவது அரச எதிர்ப்பு வேட்டு, 1975ஆம் ஆண்டே தீர்க்கப்பட்டது. அதன் போது, யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா கொல்லப்பட்டார். தெற்கில் ஆயுதப் பேராட்டம், 1971ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அந்த ஆயுதப் போராட்டத்துக்கு, நேற்று முன்தினம் (05) ஐம்பது ஆண்டுகள் பூர்த்தியாகியது. மக்கள் விடுதலை முன்னணியே அந்தக் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கியது. அது, வடக்கு - கிழக்கில் இடம்பெற்றதைப் போல…
-
- 0 replies
- 717 views
-