அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
அரசுகளும் எல்லைகளும்: - ஈழத்து நிலவன் - [Monday 2016-03-21 07:00] உலகில் அரசு என்ற நிறுவனம் தோன்றிய காலத்தில் இருந்தே நிலவியல் எல்லைகள் தோன்றி விடுகின்றன. நிலங்களை மனிதர்கள் உரிமை கொண்டாட தொடங்கிய காலத்தில் நிலங்களுக்கான பரஸ்பர மோதலும் தொடங்கின. இதன் தொடர்ச்சியில் உலகம் எப்போதுமே நிலங்களுக்கான அதன் எல்லைகளுக்கான போராட்டத்தில் தன்னை கடத்திக்கொண்டே வந்திருக்கிறது. நாடோடி தன்மையிலிருந்து மனிதர்கள் நிலங்களை தங்களின் நிரந்தர வசிப்பிடமாக மாற்றிக்கொள்ளத்தொடங்கிய நிலையில் உலகின் எல்லாவித இயக்கங்களும் தொடங்கி விடுகின்றன. இருபதாம் நூற்றாண்டில் நடந்த மாபெரும் இரு உலகப்போர்கள் புவி அரசியல் பற்றிய கருத்தாக்கத்தை முதன் மு…
-
- 0 replies
- 659 views
-
-
Panama Papers: உலகளாவிய பொருளாதார மோசடிகள் அம்பலம்! - ரூபன் சிவராஜா கடந்த வாரத்திலிருந்து ‘Panama Papers ' எனும் அடையாளப் பெயருடன் உலகளாவிய ரீதியில் வரி ஏய்ப்பு, நிதி மோசடிகள் தொடர்பான பாரிய இரகசிய ஆவணங்கள் கசிந்து வருகின்றன. சர்வதேச ஊடகங்களில் நாளாந்தம் இந்த விவகாரம் சார்ந்த ஏராளமான தகவல்கள் வெளியிடப்பட்டும் வருகின்றன. சமகால அரசியல் பொருளாதார விவகாரங்களில் பெரும் விவாதப் பொருளாக இது ஆகியிருக்கின்றது. புலனாய்வு ஊடகவியலாளர்களினால் மோசடிகள் சார்ந்த 11,5 மில்லியன் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இலத்தீன் அமெரிக்காவின் Panama -பனாமாவைத் தளமாகக் கொண்டுள்ள Mossack Fonseca எனும் சட்ட நிறுவனத்திடமிருந்து (Law firm) இந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த ந…
-
- 0 replies
- 614 views
-
-
புலிகள் பற்றிய மீளெழுச்சிக் கதைகள்: பூனைக்கு விளையாட்டு - எலிக்கு? - கருணாகரன் புலிகளைப் பற்றிய கதைகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு நீடிக்கத்தான் போகிறது. அந்த அளவுக்கு புலிகள் ஓர் உபயோகப் பொருளாக தமிழ், சிங்களப் பரப்பில் உள்ளனர். இதில் கவனத்திற்குரிய விசேசமான ஒரு விசயம் உண்டு. தோற்கடிக்கப்படுவதற்கு முன்னரும் புலிகளின் பெயர் பல தரப்புகளால் பயன்படுத்தப்பட்டது. தோற்கடிக்கப்பட்ட பின்னரும் பல தரப்புகளுடைய நலன்களுக்காகப் இந்தப் பெயர் பயன்படுத்தப்படுகிறது. தோற்கடிக்கப்படுவதற்கு முந்திய புலிகளைத் தமிழ் நாட்டு அரசியல்வாதிகள், ஊடகங்கள், தென்னிலங்கை, புலம்பெயர்ந்தோர், வர்த்தகர்கள் எனப் பல்வேறு தரப்புகள் பயன்படுத்தின. அவரவர் தமக்கு ஏற்றவாறு எதிர் என்றும் ஆதரவு எ…
-
- 0 replies
- 499 views
-
-
-
- 0 replies
- 718 views
-
-
தமிழ் தேசிய அரசியல் உரையாடலில் அடிக்கடி எட்டிப்பார்க்கும் சொல்தான் கையாளல் என்பது. எங்களுடைய நலனை முன்னிறுத்தி இந்தியாவை அல்லது சவுத் புளொக்கை கையாள வேண்டும், அமெரிக்காவை கையாள வேண்டும் அல்லது மேற்குலகை கையாள வேண்டும் என்றவாறான சொற் தொடர்களை அடிக்கடி அரசியல் பத்திகளில் கண்டிருப்பீர்கள். ஆனால், திரும்பிப் பார்க்கும்போது, இந்தச் சொல்லைத் தொடர்ந்தும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தகுதி நமக்கு இருக்கிறதா என்னும் கேள்வியே எழுகிறது. இது ஒரு சுய விமர்சனம் சார்ந்த கேள்விதான். அதேவேளை, இப்பத்தி ஒரு விடயத்தையும் அழுத்தி உரைக்க முயல்கிறது. அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் அப்படியெல்லாம் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி, இந்தியாவையோ அல்லது அமெரிக்காவையோ கையாளவும் முடியாது (இது கூ…
-
- 0 replies
- 480 views
-
-
பொருத்து வீடுகள் நீண்டகாலப் பயன்பாட்டுக்கு ஏற்றதல்ல – மொறட்டுவ பல்கலைக்கழக வல்லுனர்கள் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட பொருத்து வீடுகள் பலமான அடித்தளத்தையோ அல்லது பலமான கூரை வசதிகளையோ கொண்டிருக்கவில்லை எனவும் நீண்ட காலப் பாவனைக்குப் பொருத்தமற்றவை எனவும் மொறட்டுவப் பல்கலைக்கழக வல்லுனர்கள் தமது தொழினுட்ப ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். லக்சம்பேர்க்கைத் தளமாகக் கொண்ட ‘ஆர்செலோர் மிட்டல்’ என்ற நிறுவனத்தின் இத்திட்டமானது சீமெந்து வீடுகள் போன்று நீண்டகாலம் நிலைத்து நிற்காது எனவும், இந்த வீடுகளை எதிர்காலத்தில் மேலும் விரிவுபடுத்தவோ அல்லது திருத்தவோ முடியாது எனவும் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். இப்பொருத்து வீடுகள் காற்றோட்டம் அற்றவை எனவும் அடுப்…
-
- 2 replies
- 553 views
-
-
தமிழ் கட்சிகள் அனைத்தும் வாக்கு அரசியலை முதன்மைப்படுத்துகின்ற கட்சிகள் – கலாநிதி கெனடி விஜயரத்தினம். ( வீடியோ) Published on April 10, 2016-9:57 am · No Comments (கிழக்கு பல்கலைகழகத்தின் முன்னாள் ஆங்கில விரிவுரையாளரும் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் கல்வித்திட்;டத்தின் கீழ் எத்தோப்பிய பல்கலைக்கழகம் ஒன்றில் இணைப்பேராசிரியராக இருக்கும் கலாநிதி கெனடி விஜயரத்தினம் இலங்கை அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். மட்டக்களப்பில் சிவராமுடன் இணைந்து தமிழர் மறுமலர்;ச்சிகழகம் போன்ற அரசியல் செயல்பாட்டு அமைப்புக்களை உருவாக்கி தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியவர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் கலாநிதி கெனடி விஜயரத்தினத்திற்கும் முக்கிய பங்க…
-
- 0 replies
- 786 views
-
-
சம்பூர் அனல்மின் நிலையம்: மக்களைவிட மின்சாரம் மேலானதா? – கலாநிதி. கோ. அமிர்தலிங்கம் APR 10, 2016 | 0:00by நெறியாளர்in செய்திகள் உலக நாடுகள் அனைத்தும் நிலக்கரி மூலம் பெறப்படும் மின் சக்தியிலிருந்து படிப்படியாக விடுபட்டு மீள உருவாக்கக்கூடிய சக்தி மூலங்களான சூரிய ஒளி, மற்றும் காற்று மூலம் மின்சாரம் பெறக்கூடிய பொறிமுறைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்கா, ஜேர்மன், சீனா போன்ற நாடுகள் நிலக்கரி அனல் மின் நிலையங்களை படிப்படியாக மூடி வருகின்றன. அண்மையில் மெக்சிக்கோ அரசாங்கம் 2.1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் 1720 மெகாவாட் மின்சாரத்தினை காற்று மற்றும் சூரிய ஒளியிலிருந்து பெறுவதற்கான முதலாவது முதலீட்டு வாய்ப்பினை தனியார் துறைக்கு வழங்கியுள்ளதுட…
-
- 0 replies
- 542 views
-
-
புலம்பெயர் சமூகத்தை கையாளும் ஆற்றல் கூட்டமைப்பிடம் இருக்கிறதா? - யதீந்திரா தமிழ்த் தேசிய அரசியல் உரையாடலில் அடிக்கடி எட்டிப்பார்க்கும் சொல்தான் கையாளல் என்பது. எங்களுடைய நலனை முன்னிறுத்தி இந்தியாவை அல்லது சவுத் புளொக்கை கையாள வேண்டும், அமெரிக்காவை கையாள வேண்டும் அல்லது மேற்குலகை கையாள வேண்டும் என்றவாறான சொற்தொடர்களை அடிக்கடி அரசியல் பத்திகளில் கண்டிருப்பீர்கள். ஆனால் திரும்பிப் பார்க்கும் போது, இந்தச் சொல்லை தொடர்ந்தும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தகுதி நமக்கு இருக்கிறதா என்னும் கேள்வியே எழுகிறது. இது ஒரு சுய விமர்சனம் சார்ந்த கேள்விதான். அதேவேளை இப்பத்தி ஒரு விடயத்தையும் அழுத்தி உரைக்க முயல்கிறது. அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் அப்படியெல்லாம…
-
- 0 replies
- 827 views
-
-
இராணுவத்துக்குள் மகிந்த விசுவாசிகளை களையெடுப்பது எப்படி?- உபுல் ஜோசப் பெர்னான்டோ கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் நாள் சிறிலங்கா காவற்துறையினரால் கதிர்காமத்தில் உள்ள பாதயாத்திரிகள் தங்குமிடத்திலிருந்து ஆபத்தான வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட தற்கொலை அங்கி ஒன்று மீட்டெடுக்கப்பட்டது. இத்தற்கொலை அங்கி சிறிலங்காவின் வடக்கிலோ அல்லது கிழக்கிலோ கண்டெடுக்கப்படவில்லை. இது ராஜபக்சாக்களின் கோட்டையாக விளங்கும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள கதிர்காமம் என்னும் இடத்திலேயே கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக 2012 பெப்ரவரி 01 அன்று ‘ஐலண்ட்’ பத்திரிகையில் பின்வருமாறு செய்தி வெளியிடப்பட்டிருந்தது: ‘பாதயாத்திரிகர்கள் தங்குமிடத்தில் பழைய தற்கொலை அங்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கதிர்க…
-
- 0 replies
- 563 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் மீளெழுச்சி சாத்தியமான ஒன்றா? - யதீந்திரா படம் | Selvaraja Rajasegar Photo யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பகுதியில் தற்கொலை குண்டுதாரி பயன்படுத்தும் அங்கி மற்றும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் வெடிப் பொருட்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டமை, அண்மைக்கால சுமூக நிலையில் ஒரு திடீர் பதற்றநிலையை தோற்றுவித்திருக்கிறது. வெளியாகியிருக்கும் செய்திகளின் படி, இது தொடர்பில் ஒரு முன்னைநாள் விடுதலைப் புலி உறுப்பினர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் இது தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்ட வேண்டுமென்று கூறியிருக்கும் கோட்டாபய ராஜபக்ஷ, புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாத விடுதலைப…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை! “தமிழ்நாட்டு முதலமைச்சர் செயலலிதாவைச் சந்தித்து, தமிழ்நாட்டு மின் திட்டங்கள் குறித்துப் பேச வாய்ப்பளிக்கவில்லை. பலமுறை முதல்வரைச் சந்திக்க வாய்ப்புக் கேட்டும் தமக்கு அந்த வாய்ப்பு தரப்படவில்லை” என்று நடுவண் மின்துறை இணையமைச்சர் பியுசு கோயல் 25.03.2016 அன்று புது தில்லியில் நடந்த கருத்தரங்கொன்றில் பேசினார். நடுவண் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணையமைச்சர் பிரகாசு சவடேகர், 31.03.2016 அன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும் போது, தமிழ்நாட்டு முதலமைச்சரை நடுவண் அமைச்சர்கள் சந்திக்க முடிவதில்லை என்றார். நடுவண் அமைச்சர்கள் இருவரும் குறிப்பாக இரண்டு செய்திகள…
-
- 0 replies
- 589 views
-
-
-
- 1 reply
- 682 views
-
-
ஈழக்கனவுக்கு எதிரான இரண்டாவது யுத்தம் [ ஞாயிற்றுக்கிழமை, 03 ஏப்ரல் 2016, 04:12.44 PM GMT ] போரின் மூலம் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த போதிலும், இவர்களின் ஈழக்கனவை அழிக்க முடியவில்லை என்ற ஆதங்கத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மைய தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியிருந்தார். 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்பு போரில் தோற்கடிக்கப்பட்டது. எமது படைகளிடம் போரில், தோல்வி கண்ட போதும், போர்க்களத்தில் இருந்த பயங்கரவாதிகளின் உயிர்கள் மடிந்த போதும், ஈழத்துக்கான கனவைக் காணும் புலிகளின் கொள்கை தோல்வியடையவில்லை என்பதை நான் உணர்கின்றேன். புலிகளின் தனி ஈழத்துக்கான கொள்கையை துப்பாக்கிக் குண்டுகள், எறிகணைகள் மூலம் தோல…
-
- 1 reply
- 744 views
-
-
மே 19இல் பிரபாகரன் உயிருடன் இருந்தார் என்றால் அவர் இறந்தது எப்படி? கேள்வி எழுப்புமா கூட்டமைப்பு? - யதீந்திரா படம் | AFP PHOTO/ Ishara S. KODIKARA, GETTY IMAGES சில வாரங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சர் சரத்பொன்சேகா, யுத்தம் நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்ட மே 19 அன்று, பிரபாகரன் உயிருடன் இருந்ததாக தெரிவித்திருக்கின்றார். 2009இல் யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து அதுவரை ராஜபக்ஷாக்களின் உற்ற நண்பராக இருந்த பொன்சேகாவிற்கும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டது. அதிகாரத்தை அனுபவிப்பவர்கள் அவ் அதிகாரத்தை தீர்மானிப்பவர்களுடன் முரண்பட்டால், அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை பொன்சேகாவும் அனுபவிக்க நேர்ந…
-
- 0 replies
- 650 views
-
-
கடந்தகால இரத்தக்களரிக்கும் நம்பிக்கைக்கும் இடையில் சிக்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் இன்னமும், போரின் நினைவுகளை மறக்கமுடியாது மக்கள் துன்பப்படுகின்றனர். தெருக்களில் கடமைகளில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் கடந்த காலத்தை மேலும் நினைவூட்டுகின்றனர். புதிய அரசாங்கம் இராணுவத்தினரின் பிரசன்னத்தைக் குறைத்துள்ள போதிலும், இராணுவமயமாக்கல் என்பது இன்னமும் பெரியதொரு விவகாரமாகவே உள்ளது. இவ்வாறு Quartz India ஊடகத்தில், Tomasz Augustyniak எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. வெள்ளிக்கிழமைகளில், யாழ்ப்பாணத்தின் ஒரேயொரு பேரங்காடி (shopping mall) முன்புறமாக வாகனங்கள் நீண்ட வரிசையில் தரித்து நிற்பதைக் காண…
-
- 0 replies
- 542 views
-
-
65,000 உலோக வீடுகள்: மக்களுக்கான திட்டமா? மிட்டலுக்கான திட்டமா? படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் | அண்மையில் ஜனாதிபதியால் திறந்துவைக்கப்பட்ட உலோக வீடு. சர்ச்சைக்குரிய 65,000 உலோக்கத்திலான வீட்டுத்திட்டதை பற்றி மீண்டும் ஒரு வாக்குவாதம் எழுந்துள்ளது. மார்ச் மாதம் 24ஆம் திகதி நடந்த நாடாளுமன்ற அமர்வுகளில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சரிடம் இவ்வீட்டுத்திட்டத்தில் ஏற்பட்ட முறைதவறுகளை சுட்டிக்காட்டி எதிர்த்தரப்பில் இருந்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர், இத்திட்டத்தை அமுல்படுத்தப்போகும் நிறுவனமாகிய ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்தைப் பற்றி பலவாறு புகழ்ந்து கூறியதோடு, ஊடகங்கள் இவ்வீடுத்திட்டதை பற்றி பிழையான செய்திகளை பரப்பிவரு…
-
- 0 replies
- 761 views
-
-
இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சில தகவல்களை வௌயிட்டுக் கொண்டிருக்கின்ற சூழலில் இறுதிப்போர் பற்றிய பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியற்துறை பொறுப்பாளர் தமிழினியின் நூலும் வெளியாகியிருக்கிறது. இந்த இரண்டு விவகாரங்களுமே இறுதிப்போர் பற்றிய பரபரப்பான கதைகளை மீண்டும் மக்கள் மத்தியில் பேச வைத்திருக்கின்றன. ஏழு ஆண்டுகளாகியும் இன்னமும் பல அவிழ்க்கப்படாத முடிச்சுக்களைக் கொண்டதாகவே இறுதிப்போர் இரகசியங்கள் இருக்கின்றன. அந்தப் போருக்குத் தலைமை தாங்கிய இராணுவத்தளபதி என்ற வகையில் தனக்கு எல்லாமே தெரியும் என்பது போலவும், தான் சொல்வதெல்லாம் உண்மை என்பது போலவும் பீல்ட் மார்ஷல் சரத…
-
- 0 replies
- 739 views
-
-
இனப் படுகொலை என்றால் என்ன? இனப்படுகொலை என்பது மனித குலத்திற்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய மிக மோசமான குற்றச்செயலாக பெரும்பாலானவர்களால் கருதப்படுகிறது. இந்த வார்த்தையை யூத இனத்தை சேர்ந்த சட்டத்தரணியான ரஃபேல் லெம்கின் என்பவர் அறிமுகப்படுத்தினார். எந்தெந்தச் செயல்பாடுகள் இனப்படுகொலை எனக் கருதப்படுகிறது? மனிதக் குழு ஒன்றினை முற்றாக ஒழிக்கும் முயற்சியுடன், அவர்களை முற்றாக அழிப்பதை நோக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் செயல்பாடே இனப்படுகொலை எனப்படுகிறது. `ஜெனோசைட்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இனப்படுகொலை என்ற சொல் எவ்வாறு நடைமுறைக்கு வந்தது? ஜெனோசைட்டில் வரும் முதல் பாதி சொல்லான `ஜெனொஸ்' என்பது கிரேக்க சொல் ஆகும், அது `இனம்' அல்லது பழங்குடி…
-
- 0 replies
- 1.8k views
-
-
நல்லாட்சி மீதான விமர்சனங்களுக்கான நேரம் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா நல்லாட்சி என்ற கோஷத்தை முன்வைத்து, அப்போதைய சுகாதார அமைச்சரான மைத்திரிபால சிறிசேன, தனது கட்சியின் தலைவரும் அப்போதைய ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவுக்கெதிராக, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தபோது, மைத்திரிபால சிறிசேன வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்புக் காணப்பட்டிருக்கவில்லை. மாறாக, மற்றொரு தேர்தலில் தோல்வியடைவதிலிருந்து, ரணில் விக்கிரமசிங்க தன்னைக் காத்துக் கொண்டார் என்றே கருதப்பட்டது. ஆனால், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது மக்களுக்குக் காணப்பட்ட விமர்சனம், மைத்திரிபால சிறிசேனவுக்கான வடக்கு, கிழக்கு மக்களின் ஆதரவு, புதிதாக வாக்களிக்கத் …
-
- 0 replies
- 797 views
-
-
புதிய அரசியலமைப்பும் மக்கள் அபிலாசைகளும் : சட்டத்தரணி எஸ். மோகனராஜன் இலங்கையில் 1995, 1997, 2000ம் எனும் மூன்று சந்தர்ப்பங்களில் அரசியலமைப்பு வரைபுகள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. 1995 ம் ஆண்டு சந்திரிக்கா அம்மையாரால் அமைச்சரவையில் சமர்ப்பித்ததன் பின்பு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியோடு கதைத்து நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கும் அரசியலமைப்பினை புதுப்பித்து மாற்றம் கொண்டுவரவும் சுதந்திரக் கட்சி முன்வந்தபோதும் ஐ.தே.க எவ்வித ஒத்துழைப்பையும் வழங்கவில்லை. அவ்வரைவு பின் LTTE யினருக்கு முன்வைக்கப்பட்டதன் பின் அவர்களும் எவ்வித ஒருமைப்பாடும் ஏற்படாதநிலையில் 1995ம் ஆண்டு ஆகஸ்ட் 3 ம் திகதி அரசியலமைப்பு சட்ட மூலம் சமர்ப்ப…
-
- 0 replies
- 778 views
-
-
விகாரைகளுக்குள்ளிருந்து வராத நல்லிணக்கம் - நிலாந்தன் அண்மை நாட்களில் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன ஒரு விடயத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். ‘நல்லிணக்கம் தொடர்பான செய்தியை வடக்குக்கு எடுத்துச் செல்வதிலும் பார்க்க தெற்கிற்கே கொண்டு செல்ல வேண்டும்’ என்பதே அது. கடந்த புதன் கிழமை பண்டாரநாயக்கா ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அவர் ஒரு மாநாட்டில் உரையாற்றி இருக்கிறார். கலை இலக்கியத்தை அனுபவிப்பது தொடர்பான ஒரு மாநாடு அது. அதில் அவர் நல்லிணக்கத்திற்கான செய்தியை தெற்குக்குக் கொண்டு செல்லுமாறு இலக்கியவாதிகள், கலைஞர்கள் ஊடகவியலாளர்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.’ அரசியல்வாதிகளால் மட்டும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது மதத்தலைவர்கள், கலைஞர்கள், க…
-
- 0 replies
- 808 views
-
-
சிறைக்கம்பிகளின் பின்னால் துருப்பிடிக்கும் நல்லாட்சி ப.தெய்வீகன் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இன்னொரு தடவை ஆரம்பிக்கப்பட்டு, 'சம்பிரதாயபூர்வ உறுதிமொழிகளுடன்'முடித்துவைக்கப்பட்டிருக்கிறது. கைதிகளை வழக்கமாக சென்று உருக்கமாக பார்க்கும் அரசியல்வாதிகளும் இம்முறை அதிகம் அக்கறைப்படவில்லை. சிறைச்சாலை ஆணையாளர்தான், சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து உத்தரவாதத்தை பெற்றுக்கொடுத்திருக்கிறார். அவரது உறுதிமொழியை அடுத்து நீதிமன்றம் கொண்டுசெல்லப்பட்ட உண்ணாவிரதிகள் இடைக்கால திருப்தியுடன் மீண்டும் தடுப்புக்காவலுக்கு திரும்பியுள்ளனர். கடந்த தடவை கைதிகளின் உண்ணாவிரதம் தொடர்பாக திமிறிய பல ஊடகங்களும்கூட இம்முறை இடம்பெற்ற கைதிக…
-
- 0 replies
- 492 views
-
-
புதிய அரசியலமைப்பாக்க முயற்சி: மறைந்திருக்கும் அபாயங்கள் படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம் அரசியலமைப்பாக்க அவையை (Constitutional Assembly) உருவாக்கும் பிரேரணை தொடர்பான விவாதம் இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டு இரண்டு மாத கால தாமதத்தின் பின்னர் கடந்த மார்ச் 9ஆம் திகதி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கத்தின் மீது சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு உள்ள பிடி இந்த தாமதத்தில் இருந்தும் பிரேரணைக்கு கொண்டு வரப்பட்ட திருத்தங்களில் இருந்தும் நன்றாக தெரிகின்றது. அண்மையில் ஜனாதிபதி சிறிசேனவுக்கு நெருக்கமான ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்தவொரு ஆலோசகர் குறிப்பிட்டது போல சிறிலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்திற்குள் ஒரு எதிர்கட்சியாக இயங்கி வர…
-
- 0 replies
- 615 views
-
-
இலங்கைக்கான சர்வதேச பொருளாதார நலன்களில் தமிழர் நிலைப்பாடு? நிருபா குணசேகரலிங்கம்:- நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நிலைமைகளை கையாளுவதற்கு விரைவான நல்லிணக்க முயற்சிகள் தேவையாகவுள்ளன. அதாவது, இந்த ஆண்டிற்குள் ஜி.எஸ்.பி. பிளஸ் (விருப்பத்தேர்வுகளின் பொதுமைப்படுத்தப்பட்ட முறைமை) வரிச்சலுகையினை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு ஏற்பட்டு இருக்கின்றது. இவ் ஆண்டுக்குள் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை கிடைக்கப் பெறும் என்ற நம்பிக்கையையும் விருப்பத்தையும் கூட அரசாங்கம் பகிரங்கமாகவே வெளிப்படுத்தியுள்ளது. அதேபோன்று மீன்பிடி ஏற்றுமதி ரீதியான நடவடிக்கைகளிலும் முன்னேற்றம் காண வேண்டிய தேவை பொருளாதார ரீதியில் அரசாங்கத்திற்கு எழுந்து…
-
- 0 replies
- 441 views
-