Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. விக்கி - சம்பந்தன் பனிப் போரின், புதிய தொனிப்பொருள்: அபிவிருத்தியா, அரசியல் தீர்வா? எம்.எஸ்.எம். ஐயூப் வடமாகாண சபையின் பதவிக் காலம் முடிவடைய, ஒரு மாதத்துக்குச் சற்று அதிகமான காலமே இருக்கும் நிலையில், அம்மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும், அவரை அப்பதவியில் அமர்த்திய அரசியல் அமைப்பான தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான முறுகல் நிலை, மேலும் ஒருபடி, முன்னோக்கிச் சென்றுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில், கலந்து கொள்வது தொடர்பாகவே, தற்போது இருசாராருக்கும் இடையே, பிரச்சினை உருவாகி இருக்கிறது. நேற்று முன்தினம் (27), செயலணியின்…

  2. நினைவேந்தலும் அரசின் நிலைப்பாடும் யுத்­தத்தில் கொல்­லப்­பட்ட பொது­மக்­களை நினை­வு­கூர்­வ­தற்குத் தடை இல்லை என்று அர­சாங்கம் அறி­வித்­தி­ருப்­பது ஆச்­ச­ரி­யத்­தையே ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றது. இருப்­பினும் இது வர­வேற்­புக்­கு­ரிய நிலைப்­பா­டா­கவே கருத வேண்டும். யுத்­தத்தில் பொது­மக்கள் எவ­ரையும் இரா­ணு­வத்­தினர் கொல்­ல­வில்லை. பயங்­க­ர­வா­தி­க­ளாக அர­சாங்கத் தரப்­பினால் சித்­தி­ரிக்­கப்­ப­டு­கின்ற விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரா­கவே அவர்கள் யுத்தம் புரிந்­தார்கள். நடந்து முடிந்த யுத்தம் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக நடத்­தப்­ப­ட­வில்லை என்றே அரச தரப்பில் கருத்­துக்கள் வெளி­யி­டப்­பட்டு வந்­தன. இந்த நிலையில் கொல்­லப்­பட்ட பொது­மக்­களை நினை­வு­கூர …

  3. தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம் December 1, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கை தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம் என்ன? அண்மைய பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து எழுகின்ற இந்த கேள்வியை வெறுமனே தமிழ்க் கட்சிகளின் எதிர்கால தேர்தல் வாய்ப்புக்களுடன் இணைத்து நோக்கக் கூடாது. இது தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகள் நிறைவேறக்கூடிய வாய்ப்புக்கள் பற்றிய எதிர்பார்ப்புகளுடனும் ஏக்கங்களுடனும் சம்பந்தப்பட்ட கேள்வியாகும். உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பின்னரான கடந்த பதினைந்து வருடங்களுக்கும் அதிகமான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்து வந்த தமிழ் தேசியவாத அரசியல் கட்சிகள் இந்தத் தடவை ப…

  4. வெளியுறவுக் கொள்கை இல்லாத ஈழத்தமிழர்கள் ? நிலாந்தன். November 28, 2021 ஐந்து தமிழ்க்கட்சிகள் இணைந்து 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்ற ஒரு கூட்டுக் கோரிக்கையை இந்தியாவை நோக்கி முன்வைக்க முயற்சிக்கின்றன. இம்முயற்சியில் முஸ்லிம் கொங்ரஸையும் மனோ கணேசனின் கட்சியையும் ஒருங்கிணைத்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்மக்கள் மத்தியில் உள்ள மிகப் பெரிய கட்சியான தமிழரசுக் கட்சியை ஒருங்கிணைக்க முடியவில்லை. இது ஒரு ஓட்டம். அதேசமயம் சுமந்திரன் தலைமையிலான ஒரு சட்டவாளர் குழு அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று அவர்கள் சென்றதாக சம்பந்தரும் சுமந்திரனும் கூறுகிறார்கள். ஆனால் அக்குழுவில் பங்காளிக் கட்சிகளின் …

  5. நிலைக்குமா ஆட்சி..? http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-02#page-22

  6. சம்பந்தனின் பதவி வெறியைத் தணிக்குமா தமிழரசின் குழு? புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை, அவர் வகித்து வரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுமாறு கோருவதற்காக, சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவை இலங்கை தமிழரசுக் கட்சி அமைத்திருக்கின்றது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, சி. வி. கே சிவஞானம், எம். ஏ சுமந்திரன் உள்ளிட்டவர்கள் அடங்கிய அந்தக் குழு, எதிர்வரும் நாள்களில் சம்பந்தனை நேரில் சந்தித்து, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்யுமாறு ‘பக்குவமாக’க் கோரும். வவுனியாவில், ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டது. …

  7. இன்னொரு மக்கள் எழுச்சிக்கான சாத்தியமும் சவால்களும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் இன்றைய நெருக்கடி நிலை மக்களை நிலைகுலைய வைத்துள்ளது. தீபாவளிக்குத் தீர்வு வரும் என்பது போல, ‘இலவுகாத்த கிளி’யாக, நிலைமை சீராகும் என்று இலங்கை மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இன்று எமது தேசிய இனப்பிரச்சினை, அனைத்துத் தரப்புகளாலும் அந்நிய சக்திகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. சிங்கள மேலாதிக்கத்தாலும் அதன் ஒடுக்குமுறை அணுகுமுறைகளாலும் தமிழர், முஸ்லிம்கள், மலையகத் தமிழர் ஆகிய தேசிய இனங்கள் மீதும் பறங்கியர், வேடர்கள் ஆகிய சிறிய சமூகங்கள் மீதும் சொல்லொணா துயரங்களும் கொடுமைகளும் ஒடுக்குமுறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விவசாயத்துறையில் நவதாராளவாத பொருளாதாரத்…

  8. உள்ளூராட்சித் தேர்தலும் தமிழ் மக்களின் நிலையும் ருத்திரன்- தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளினால் ஜனநாயக அரசியலை கொண்டு நகர்த்துவதற்கான மக்கள் பிரதிநிதிகளை பெறுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கூட்டு ஆகும். இந்தக் கூட்டமைப்பில் மிதவாத கட்சியும், ஆயுதப்போராட்டத்தில் இருந்து ஜனநாயகத்திற்கு திரும்பிய அமைப்புக்களும் அங்கத்துவம் வகிக்கின்றன. இவர்கள் அனைவருமே விடுதலைப் புலிகள் போன்று தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து போராடியவர்கள். 2009 ஆம் ஆண்டு முள்ளியவாய்கால் பேரழிவுடன் விடுதலைப் புலிகளின் ஆயுத ரீதியான போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் தேசிய அரசியலை முன்னகர்த்த வேண்டிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோள்களில் தான…

  9. பூகோள அரசியல் நகர்வில்“நேற்றோ” விஸ்திரிப்பு வாதத்தை ரசிய எல்லைவரை வழிநடத்தி உக்ரைனை இந்த நிலைக்குக் கொண்டுவந்த அமெரிக்கா இன்று உக்ரைனை கைவிட்டிருக்கிறது. அதற்கான காரணங்கள் ஒரு வல்லரசின் நலனிலிருந்து எழுபவை. அதை “அமெரிக்கா துரோகம் இழைத்துவிட்டது, யூ ரேர்ண் அடித்துவிட்டது” என்பதெல்லாம் அரசியல் விளக்கமல்ல. உக்ரைன் அதற்கு பலியாகிப் போனதுதான் பெருந் துயரம். இன்று பொருளாதார மற்றும் தொழில்நுட்பப் போட்டியில் வல்லரசுகள் களமிறங்கியிருக்கின்றன. அதன் வெளிப்பாடுகள் பொருளாதாரப் போரை முதன்மை நிலைக்கு கொணர்ந்து விட்டிருக்கிறது. இது இறுதியில் (சீனாவுடனான) இராணுவநிலைப் போராக மாற்றமடைவதற்கான சாத்தியம் இருக்கிறபோதும், தற்போதைய நிலை பொருளாதாரப் போர்தான். அதனடிப்படையிலும், இறுதியில் சீனாவுடனான…

    • 2 replies
    • 384 views
  10. தமிழக ஆளுநர்களும் சர்ச்சைகளும் மாநில ஆளுநர்களின் நடவடிக்கை சர்ச்சைக்குள்ளாவது, தமிழகத்துக்குப் புதிதல்ல. தி.மு.க அரசாங்கத்தை, 1975இல் “டிஸ்மிஸ்” செய்த ஆளுநர் கே.கே. ஷா மீது சர்ச்சை எழுந்தது. 1990களில் ஆளுநராக இருந்த சென்னாரெட்டி, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மீது, வழக்குப் பதிவு செய்ய அனுமதி கொடுத்த சர்ச்சை வெடித்தது. 2001இல், தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்த ஜெயலலிதாவை, முதலமைச்சராக நியமித்த ஆளுநர் பாத்திமா பீவியின் நடவடிக்கைகள் சர்ச்சையை கிளப்பின. இப்போது, பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசகர் ராவ், “19க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதர…

  11. இலங்கை ஒற்றையாட்சியின் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது குறித்து இலங்கை சுயாதீன ஆணைக்குழுவுக்கு அரசாங்கம் கடும் அழுத்தம்- பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் படை அதிகாரிகள் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு இலங்கைச் சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இலங்கை ஒற்றையாட்சி அரசு கடும் அழுத்தங்களைக் கொடுத்து நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு முற்படுவதாக சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் குற்றம் சுமத்தியுள்ளார். தேர்தலை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பான கலலந்துரையாடல்களுக்கு உரிய முறையில் அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் ஆணைக்குழுவின் தலைவ…

    • 0 replies
    • 384 views
  12. கஞ்சி – கார்த்திகைப் பூ – செருப்பு – நிலாந்தன்! இம்முறை வெசாக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்தில் பெரிய அளவில் அமோகமாக இருக்கவில்லை. 2009க்கப் பின்வந்த உடனடுத்த ஆண்டுகளில் படைத்தரப்பு வெசாக் கொண்டாட்டங்களை பிரமாண்டமான அளவில் ஒழுங்கு படுத்தியது. ஆரியகுளம் சந்தியிலும் முத்த வெள்ளியிலும் வெசாக் பந்தல்கள் அதிகமாக அமைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டார்கள். ஆனால் இம்முறை ஒப்பீட்டளவில் குறைந்த அளவு ஜனங்களே ஆரியகுளம் சந்தியில் காணப்பட்டார்கள். ஒரு ஊடகவியலாளர் கேட்டார், முள்ளிவாய்க்காலில் திரண்ட ஜனங்களை விடவும் ஆரிய குளத்தடியில் திரண்ட சனங்களின் தொகை அதிகமா? என்று. இல்லை. அது குறைவு தான். ஆனால் தமிழ்ப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் பந்தல்களில் வழங்கப்பட்ட சாப்பா…

  13. மாற்றத்தை ஏற்படுத்தக் கசப்பான உண்மைகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்! | ஆய்வாளர் ச ப நிர்மானுசன்

    • 0 replies
    • 384 views
  14. வடக்கு- கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தல் முடிவு கூறும் செய்தியும் தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்காலமும் தமிழ் மக்களின் இன்றைய நிலை – ஆட்சியாளரின் நிகழ்ச்சி நிரல் – எமது பலம் – சர்வதேச சக்திகளின் நிலைப்பாடும் – தீர்வுநோக்கி முன்னேறவுள்ள சாத்தியப்பாடுகள் – போன்றவற்றை மனம்விட்டு வெளிப்படையாகப் பேசி கூட்டு முடிவை எடுக்க தமிழரசும் காங்கிரசும் தயாராக வேண்டும். எனவே புதிய கூட்டிணைவு என்பது வெறுமனே சபைகளை கைப்பற்றுவதோடு நிற்க முடியாது. மாறாக தீர்வு நோக்கி ஒன்றுபட்டு செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற வேண்டும் – தொடர வேண்டும். கலாநிதி க.சர்வேஸ்வரன் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலானது வெறுமனே உள்ளூராட்சிக்கான வினைத்திறன் மிக்க நிர்வாகத்தை நடத்தவல்ல வேட்பாளர்களைத் தெரி…

  15. சிங்கள பௌத்த மேனியாவும், சமஷ்டி போபியாவும் Sarawanan Nadarasa படம் | மாற்றம் Flickr தளம் ஏறத்தாழ சகல பிரதான தேர்தல் பிரசார மேடைகளிலும் தவறாத பேசுபொருளாக சமஷ்டி குறித்த சர்ச்சை பெரிதாக எழுந்திருந்தத்தை கண்டிருப்பீர்கள். சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களுக்கு சமஷ்டி குறித்த பேரச்ச வெருண்ட உணர்வு (phobia) இனவாதிகளால் வளர்க்கப்பட்டு இன்று தாமும் அதற்குள் அகப்பட்டு அந்த நோய்க்கு இலக்காகி உள்ளனர் என்றே கூறவேண்டும். வெறித்தனமான சிங்கள பௌத்த மேலாதிக்க உணர்வென்பது (mania) ஏனைய இனங்களின் மீதான வெறுப்புணர்ச்சியையும், காழ்ப்புணர்ச்சியையும் மிகையாக வளர்த்தெடுத்து அதுவும் ஒரு தீரா நோயாகவும், பரப்பும் நோயாகவும் ஆக்கப்பட்டுள்ளது. சமஷ்டி பற்றி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமது தேர்தல்…

  16. தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக புதிய அணி? தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக புதிய அணி உருவாகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் உருவாகும் அந்த அணியில், இப்போது காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கொங்கு ஈஸ்வரன் தலைமையிலான கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட ‘மதச்சார்பின்மை’ பேசும் கட்சிகள் எல்லாம், ஓரணியில் ஒன்று சேர்ந்திருக்கின்றன. விவசாயிகளுக்கான போராட்டம் என்ற அளவில் 25.4.2017 அன்று நடைபெற்ற முழு அடைப்பை நோக்கினாலும், இது ஒரு மாற்று அரசியல் அணி என்பதில் சந்தேகமில்லை. பத்து வருடங்களுக்குப் பிறகு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிட முன்ன…

  17. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வயது 20 …. கூட்டமைப்பு ஏன், எவ்வாறு, உருவாக்கப்பட்டது டி.பி.எஸ்.ஜெயராஜ் ………………………………. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இப்போது 20 வயது. இலங்கையின் வடக்கு,கிழக்கு தமிழ் மக்களின் முதன்மையான அரசியல் அணியான கூட்டமைப்பு 2001 டிசம்பர் பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு சில வாரங்கள் முன்னதாக 2001அக்டோபர் 22 அமைக்கப்பட்டது. அதற்கு பிறகு ஆனையிறவின் இருமருங்கிலும் எத்தனையோ நிகழ்வுப் போக்குகள் நடந்தேறிவிட்டன. வடக்கு,கிழக்கில் தமிழ் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் தேர்தல்களில் தொடர்ச்சியாக பெரும்பாலான ஆசனங்களை வென்றதன் மூலம் இலங்கைத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் அணியாக கூட்டமைப்பு விளங்கிவருகிறது. 2001, 2004, 2010, 2015, மற்றும…

  18. ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு தொடர்பில் ரணிலின் நழுவல் போக்கு Veeragathy Thanabalasingham on August 8, 2022 Photo, AP Photo/Eranga Jayawardena, CP24 ரணில் விக்கிரமசிங்க தனது 45 வருடகால நாடாளுமன்ற அரசியல் வாழ்வில் 6 தடவைகள் பிரதமராகவும் அதற்கு முன்னர் அமைச்சராகவும் பெருமளவு உரைகளை நிகழ்த்தியிருக்கிறார். ஆனால், இலங்கையின் புதிய ஜனாதிபதி என்ற வகையில் கடந்தவாரம் தற்போதைய நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை சம்பிரதாயபூர்வமாக தொடக்கிவைத்து நிகழ்த்திய நீண்ட கொள்கை விளக்கவுரை இதுகாலரையிலான அவரின் உரைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அது பரவலான வரவேற்பை பெற்றிருக்கிறது. உரை என்ற வகையில் அத…

  19. பயங்கரவாதத் தடைச்சட்டடத்துக்கு எதிராக... தமிழரசுக்கட்சி தனியோட்டம் ? -நிலாந்தன்- தமிழரசுக்கட்சி பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக ஒரு கையெழுத்து வேட்டைப் போராட்டத்தை நடத்திவருகிறது.இப்போராட்டத்திற்கு மூவினத்தவர்கள் மத்தியிலும் ஆதரவு இருக்கிறது.தமிழ் பகுதிகள் எங்கும் தமிழரசுக்கட்சியினர் பொது இடங்களில் நின்று கையெழுத்துக்களை வாங்கிவருகிறார்கள். சுமந்திரன் தென்னிலங்கையில் உள்ள பிரமுகர்களைத் தேடிச்சென்று கையெழுத்து வாங்கிவருகிறார். அவருடைய இம்முயற்சிக்கு விக்னேஸ்வரன் உட்பட கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் ஆதரவைக் காட்டியுள்ளன. ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின்னர் பயங்கரவாதத் தடைச்சட்டம் முஸ்லிம்களுக்கும் எதிராகத் திரும்பியது. அதனால் இப்பொழுது சுமந்திரனின் ப…

  20. சம்பந்தரை எரிச்சலூட்டிய ரணில் புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,“...எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், தொடர்ந்தும் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்துவதால் எந்தப் பயனும் இல்லை..” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்திருக்கின்றார். ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை கடந்த வாரம் இடம்பெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் டெலோ, புளொட் அமைப்புகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே கலந்து கொண்டிருந்தனர். இந்தப் பேச்சுவார்த்தையில், ஜனாதிபதியின் கருத்துகளுக்கு பதிலளித்து பே…

  21. மூதூரில் நடந்த கொடூரமும் நாமும் இலங்கையின் சுமார் 15 மாவட்டங்களைத் தாக்கியுள்ள வெள்ளம், மண்சரிவுகள் காரணமாக, முழு இலங்கையுமே சோகத்தில் மூழ்ந்திருக்கும் நிலையில், திருகோணமலையின் மூதூர்ப் பகுதியில் இடம்பெற்ற இன்னொரு சோகம், பெருமளவு கவனத்தை ஈர்த்திருக்கவில்லை. பாடசாலை செல்லும் 3 சிறுமிகள், வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர் என்பது தான் அச்செய்தி. கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவத்தில், பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற இந்தச் சிறுமிகளை, பெரியவெளிக் கிராமத்திலுள்ள சிலரே, வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகத் தெரியவருகிறது. இந்தச் சிறுமிகள் அனைவருக்கும், 9 வயதை விடக் குறைவு எனவும் அறிவிக்கப்படுகிறது. …

  22. கொட்டாஞ்சேனையிலும் கொள்ளுப்பிட்டியிலும் வாழ்பவர்களது பிரச்சினைகள் வேறு வேறு காரை துர்க்கா / 2020 ஜனவரி 07 தமிழரசுக் கட்சி தலைமையிலான கூட்டமைப்பு, வடக்கு, கிழக்கு பிரதேசங்களில், தமிழ் மக்களது கரங்களைப் பற்றிக் கொண்டு செல்லவில்லை என, தமிழ் மக்கள் உள்ளும் புறமும் வெதும்பிப் போய் உள்ளனர். அதற்கு உதாரணமாக, இந்தக் கதை பொருத்தமாக அமையும். ‘சிறுமி ஒருத்தியும் அவளது தந்தையும் பாலம் ஒன்றைக் கடந்து செல்ல வேண்டி இருந்தது. அவ்வேளையில், சிறுமியை நினைத்துப் பயந்த தந்தை, தனது கையைப் இறுக்கிப் பிடித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு அந்தச் சிறுமி, “வேண்டாம் அப்பா! நீங்கள் என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று கூறினாள். தந்தையோ,“ இரண்டும் ஒன்றுதானே” என …

  23. சாதாரண கட்சி அரசியலில் ஈடுபட்டால், தேசம் என்பதைக் கட்டியெழுப்ப முடியுமா? இலங்கையின் சாதாரண கட்சி அரசியல் செயற்பாடுகளுக்குள் நின்று கொண்டு மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. அது ஒவ்வொரு கட்சிகளுக்குமான வெவ்வேறு தளங்களிளான ஆதரவாகவே மாறும். இந்த ஆதரவுத் தளங்கள், சிங்கள ஆட்சியாளர்களின் பிரித்தாளும் தந்திரங்களுக்குச் சாதகமாக அமையும்- -அ.நிக்ஸன்- இலங்கை ஒற்றையாட்சி அரசின் அரசியலமைப்புக்குள் நின்று கொண்டு அதுவும் சாதாரண கட்சி அரசியல் செயற்பாடுகளின் ஊடான தேர்தல் அரசியலில் மாத்திரம் தமிழ்க் கட்சிகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறானதொரு நிலையில் தமிழ்த்தேசியப் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வைக் காண முடியும் என்ற கேள்விகள் எழுவது இயல்பானது. எழுபது ஆண்டுகளுக்கும் மேலான ஈழத்த…

  24. அரசியலமைப்பு பதற்றங்களும் தடுமாற்றமான செய்திகளும் – ராஜன் பிலிப்ஸ் – சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புகள் ஆபத்து நிறைந்­தவை அத்­துடன் எவ்­வாறு அமை­யக்­கூ­டி­யவை என்று முன்­ன­றிந்து கூறவும் முடி­யா­தவை. ஏனென்றால் எந்­த­வொரு வாக்­கா­ளரும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புடன் சம்­பந்­தப்­பட்ட விவ­கா­ரத்­துக்­காக அல்­லாமல் தன்னால் எதிர்­நோக்­கப்­ப­டு­கின்ற அல்­லது தனது சிந்­த­னையில் இருக்­கின்ற வேறு எந்­த­வொரு விவ­கா­ரத்­துக்­கா­கவும் வாக்­க­ளிக்­கக்­கூடும். குறிப்­பிட்ட ஒரு பிரச்­சி­னையை முன்­னி­றுத்தி சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­படும் போது அந்த வாக்­கெ­டுப்பைக் கோரு­கின்ற அர­சாங்­கத்­துக்கு அல்­லது தலை­வ­ருக்கு எதி­ராக மக்கள் வாக்­க­ளிக்கும் போக்கை அடிக்­கடி அ…

  25. முஸ்லிம் அரசியலும் பள்ளிவாசல்களும் முஸ்லிம்களின் வரலாற்றில் அரசியல், சமூகம், பொருளாதாரம் என்று எல்லா விடயங்களிலும் பள்ளிவாசல்களுக்கு முக்கிய இடமிருக்கின்றது. பள்ளிவாசல்கள் ஊடாக முஸ்லிம்கள் வழிப்படுத்தப்படுவதும் அதை மையமாகக் கொண்டு, ஒரு குடையின் கீழ் சமூகம் வருவதும் முன்னொருபோதும் நிகழ்ந்திராத ஒன்றல்ல. அரசியல்வாதிகளுக்கு பயந்து கொண்டும் பள்ளி நிர்வாகத்தின் வரையறுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்குள் நின்றுகொண்டும் பள்ளிவாசல்கள் செயற்படுவதால், அல்லது பள்ளியில் அரசியல் கதைப்பது வேண்டத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும் என்று நினைப்பதால், கடந்த பல வருடங்களாகப் பெரும்பாலும் பள்ளிவாசல்களில் வாராந்த குத்பா (நல்லுபதேச) பிரசங்கம் உள்ளடங்கலாக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.