அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
வன்முறைக்குப் பின்னால் உள்ள அரசியல் அம்பாறையில் வேண்டுமேன்றே சீண்டிவிடப்பட்ட இனவாதம், கண்டியில் ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறது. உயிர்ப்பலியுடன் பெருமளவில் பொருளாதார அழிவுகள் மாத்திரமன்றி, இனங்களுக்கிடையில் பதற்றம், உறுதியற்ற நிலை என்று பல விளைவுகளுக்கு, இந்தச் சம்பவங்கள் காரணமாகி இருக்கின்றன. உண்மையில், நாட்டில் என்ன நடக்கிறது? முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த, சிங்கள இனவாதம், ஏன் மீண்டும் கிளர்ந்தெழுகிறது? இந்தக் கேள்விகள் பலரிடத்தில் உள்ளன. இதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்ற கேள்விக்கு, ஒவ்வொரு தரப்பில் இருந்தும் ஒவ்வொரு பதில்கள் வருகின்றன. ஆனால், ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. இவை ஒன்றும், எதேச்சையான நி…
-
- 1 reply
- 376 views
-
-
விமல் வீரவன்சவும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன். விமல் வீரவன்ச அறிவித்திருக்கிறார்,தனது கட்சி தேர்தலில் போட்டியிடாது என்று.ஏனென்றால்,நாடாளுமன்றத் தேர்தலில் ஜேவிபி பெறக்கூடிய பெரும்பான்மையை பாதிக்கும் விதத்தில் அதற்கு எதிராக போட்டியிட்டு வாக்குகளைச் சிதறடிக்க அவர் விரும்பவில்லையாம். அவர் ஜேவிபியில் இருந்தவர். அதன் தீவிர இனவாத முகம். தனது தோழர்களின் வெற்றிக்காக வழிவிடும் அவருடைய மேற்படி அறிவிப்புக் குறித்து அரசியல் வட்டாரங்களில் வேறு ஒரு விளக்கம் உண்டு.அவனுடைய மனைவி ஒரு வழக்கில் மாட்டுப்பட்டு இருக்கிறார்.அந்த விவகாரத்தை மீண்டும் ஜேவிபியின் அரசாங்கம் கிளறி எடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உண்டு. அதனால்தான் ஜேவிபியை சந்தோஷப்படுத்த விமல் அவ்வாறு அறிவித்திருக்கிறார் என்பத…
-
- 0 replies
- 376 views
-
-
தொகுதி நிர்ணயத்தில் முஸ்லிம்கள் வாய்ப்பை தவறவிடுவார்களா? நடைமுறை வாழ்க்கையின் எல்லா விடயங்களிலும் ‘எல்லைகள்’ மிக முக்கியமானவையாக இருக்கின்றன. நமது செயற்பாட்டின் வீச்சையும் வரம்பெல்லையையும் தீர்மானிப்பவையாக, பொதுவாக எல்லைகள் இருப்பதுண்டு. அதுவும் ஆட்சியதிகாரத்தின் எல்லை என்பது, உலக மக்களின் சமூக, அரசியல், பொருளாதார விடயங்களில் மிகவும் செல்வாக்குச் செலுத்துவதாகக் காணப்படுகின்றது. இப்போது, நமது நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற தொகுதி நிர்ணயத்துக்கும், சிறுபான்மை மக்கள் அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள், சமூக, அரசியல், பொருளாதார விடயங்களில் முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டியிருக்கின்றது. மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்ட …
-
- 0 replies
- 376 views
-
-
நிறைவேற்று அதிகாரமும் இனப்பிரச்சினை தீர்வும் வரும் செவ்வாய்கிழமை பாராளுமன்றம் கூடும் போது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கும், வகையிலான, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை முன்வைக்கவுள்ளதாக ஜே.வி.பி. அறிவித்துள்ள நிலையில், அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்த்தன உருவாக்கிய அரசியலமைப்பின் மூலம், தோன்றியது தான் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி. ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர, மற்றெல்லா அதிகாரங்களும் இந்த ஜனாதிபதி பதவி மூலம் தமக்குக் கிடைத்திருப்பதாக - பின்னர்…
-
- 0 replies
- 376 views
-
-
இத்தாலியில் இயங்கிவரும் அரசியல்- பண்பாட்டு அமைப்பான ACCuS-க்காக, அந்தோனியா கிராம்ஷியின் சிந்தனைகள் குறித்து சோபா சக்தி நிகழ்த்திய உரை.
-
- 0 replies
- 376 views
-
-
தமிழ்க் கட்சிகள் மக்களை ஏமாற்றும் ஆதாரங்கள் 07/24/2015 இனியொரு... நான்கு தசாப்தங்கள் தமிழ்ப் பேசும் மக்களின் இழப்பும் தியாகமும் இன்று வெறுமனே அரசியல் பிழைப்பு நடத்துவதற்காகப் பயன்படுத்தப்படுக்கொண்டிருக்கிறது. இன்னொரு போராட்டம் ஆரம்பமாகிவிடக் கூடாது என்பதற்காக அன்னியர்களின் அடியாட்களும், பேரினவாதிகளும், தமிழ் சிங்கள அதிகாரவர்க்கங்களும் மிகவும் அவதானமாகக் காய் நகர்த்துகின்றனர். கடந்த காலப் போராட்ட உணர்விலிருந்து மக்களை விடுவித்து, வட கிழக்கு உட்பட இலங்கை முழுவதையும் சூறையாடும் அன்னிய நிகழ்ச்சி நிரல் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இலங்கையில் பாராளுமன்ற அரசியல்வாதிகளும், புலம்பெயர் நாடுகளில் தேசிய வியாபாரிகளும் தமிழ்ப் பேசும் மக்களை அறியாமை இருளில் அமிழ்த்தி எதிர்கால ச…
-
- 1 reply
- 376 views
-
-
சர்வதேசத்திடம் நீதி கேட்கும் இரு சமூகங்கள் - க. அகரன் இன ரீதியான முரண்பாடுகள், மீளவும் தோற்றம்பெற்றுள்ள இலங்கை தேசத்தில், கலவரங்களும் தீ வைப்புகளும் சகிக்கமுடியாத கட்டத்தை எட்டிச்செல்கின்றன. தமிழ் மக்கள் தமது உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்தபோது, அதை இனவாதம் கொண்டு அழிக்க நினைத்தது மாத்திரமின்றி, தமிழர்களின் சொத்துகளும் 1958, 1977, 1983 எனக் அந்தந்தக் காலப்பகுதியில், பாரியளவில் அழிக்கப்பட்டும் வந்திருந்தமை கண்கூடு. இந்நிலையில், அம்பாறையில் ஆரம்பித்த சிங்கள - முஸ்லிம் முரண்பாடுகள், கண்டி மாநகரில் பாரிய கலவரமாக மாறியிருந்தமை திட்டமிட்ட செயற்பாடா என்ற சந்தேகத்தைப் பல்வேறு தரப்பினரிடமும் ஏற்…
-
- 0 replies
- 376 views
-
-
அடுத்த கட்டம் என்ன? http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-14#page-18
-
- 0 replies
- 376 views
-
-
இலங்கை நெருக்கடி: கோட்டாபய சிங்கப்பூருக்கு சென்றது ஏன்? அவரை நீக்க சபாநாயகரால் முடியுமா? 14 ஜூலை 2022, 10:06 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, கோட்டாபய ராஜபக்ஷ,அவரது மனைவி, இரண்டு பாதுகாவலர்களுடன் மாலே சர்வதேச விமான நிலையத்தில இருந்து சிங்கப்பூர் நோக்கிச் செல்லும் விமானம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையை விட்டு மாலத்தீவுக்கும் பிறகு சிங்கப்பூருக்கும் சென்றுள்ள நிலையில், இதுவரை அவர் தமது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அனுப்பவில்லை. முன்னதாக, இந்த மாதம் 13ஆம் தேதி பதவி விலகுவதாக ஜனாதிபதி கோட்டாப…
-
- 1 reply
- 376 views
- 1 follower
-
-
தமிழ் தேசியம் எதிர் என்பிபி? - நிலாந்தன் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கட்சி ஒன்றின் வேட்பாளர் என்னிடம் கேடடார், ஒரு துண்டுப் பிரசுரத்தைத் தயாரிப்பதற்கு பின்வரும் கேள்விகளுக்கு கவர்ச்சியான விடைகள் வேண்டும் என்று. முதலாவது கேள்வி,தேசிய மக்கள் சக்திக்கு ஏன் வாக்களிக்க கூடாது? இரண்டாவது கேள்வி, மேற்படி வேட்பாளருடைய கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? மூன்றாவது கேள்வி, ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது? நான் அவரிடம் சொன்னேன், முதலிரண்டு கேள்விகளும் சரி மூன்றாவது கேள்வி பொருத்தமானதா? என்று. ஏனெனில் என்பிபிக்கு எதிராக தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களுக்கு இடையே போட்டித் தவிர்ப்பிற்கு போவதன் மூலம்தான் வாக்குத் திரட்சியைப் பாதுகாக்…
-
- 3 replies
- 376 views
-
-
தேர்தல் கால முகமூடிகளும் முகக் கவசங்களும் ஒவ்வொரு கட்சியினதும் வேட்பாளரினதும் போலி முகமூடிகளைக் கழற்றி, உண்மை முகங்களைக் கண்டறிவதுடன், சுகாதார நடைமுறைகளுக்காக, முகக் கவசங்களை அணிந்து கொள்ள வேண்டிய ஓர் இக்கட்டான காலகட்டத்தில், இலங்கை மக்கள் இருக்கின்றனர். முஸ்லிம்களும் தமிழ் மக்களும் இந்த விடயத்தில், அதீத கரிசனை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், ஓகஸ்ட் ஐந்தாம் திகதிக்குப் பின்னர், கைசேதப்பட வேண்டி வரலாம். இந்தத் தேர்தலும் அதற்குப் பின்னர் அமையப் போகின்ற நாடாளுமன்றமும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கப் போகின்றன. எந்தப் பெருந்தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அரசமைப்பு மறுசீரமைப்பு, எம்.சி.சி உடன்படிக்கை, அதிகாரப் பகிர்வு கோட்பாடு, மாகாண சபை முறைமை மீ…
-
- 0 replies
- 376 views
-
-
போர்க் காலத்தில் ராஜபக்ச அரசாங்கமானது தமக்கு எதிராகச் செயற்பட்ட ஊடகவியலாளர்களைக் குறிவைத்து வேட்டையாடியது. இதனால் தமது உயிரைப் பாதுகாப்பதற்காக அப்பாவி ஊடகவியலாளர்கள் இந்தியாவிற்குத் தப்பியோடினர். அமெரிக்காவின் தலைமையிலான மேற்குலக நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தியா தன்னிடம் அடைக்கலம் புகுந்த சிறிலங்காவின் ஊடகவியலாளர்களுக்கு நுழைவுவிசைகளை வழங்கியது. தமது அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்பட்ட ஊடகவியலாளர்களுக்கு இந்தியா நுழைவுவிசைகளை வழங்கியது தொடர்பில் இந்தியா மீது ராஜபக்சாக்கள் கோபங் கொண்டனர். இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக மகிந்தவால் பசில், கோத்தபாய, லலித் வீரதுங்க அடங்கிய குழுவினர் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர். அப்போது சிறிலங்க…
-
- 0 replies
- 376 views
-
-
கனடாவிற்கு செல்லுதல் ? - யதீந்திரா தமிழர் வாழ்வில் புலப்பெயர்வு மிகவும் கவர்சிகரமான ஒன்று. எவருக்கு புலம்பெயர விரும்பமில்லை என்று கேட்டால் – இல்லையென்று சொல்பவர்கள் அரிதானவர்களாகவே இருக்க முடியும். அந்தளவிற்கு அது ஒரு கவர்சிமிக்க வாழ்வாகிவிட்டது. தமிழர் அரசியலில் தீர்க்கதரிசிகள் எவரும் இருந்ததாக தெரியவில்லை. செல்வநாயகம் தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமென்று ஒரு முறை கூறியிருந்தார். அதனையும் ஒரு தீக்கதரிசன பார்வையென்று கூறிவிட முடியாது – ஏனெனில், கடந்த 74 வருடகால அரசியல் நகர்வில், தமிழ் மக்களை கடவுளும் காப்பாற்றவில்லை. இருந்ததையும் இழந்து, இருப்பதையும் பாதுகாக்க முடியாதவொரு கையறு நிலையில்தான் தமிழினம் திண்டாடிக்…
-
- 0 replies
- 376 views
-
-
ட்ரம்ப்பை வாட்டிவதைக்கும் ரஷ்ய விசாரணை - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதிப் பதவியென்பது, மிகவும் அதிகாரமிக்க ஜனாதிபதிப் பதவிகளுள் ஒன்றாகும். அதனால் தான், ஐ.அமெரிக்க ஜனாதிபதிப் பதவியில் இருப்போரை, “சுதந்திர உலகின் தலைவர்” என்று அழைப்பர். அந்ததளவுக்கு, ஒட்டுமொத்த உலகையும் வழிநடத்தும் பொறுப்பு, அந்தப் பதவிக்கு உள்ளதெனக் கருதப்படுகிறது. இந்த நிலைக்கு, எவ்வாறு தள்ளப்பட்டோம்; இந்த நிலைமையைப் பயன்படுத்தி, உள்நாட்டு விவகாரங்களில் ஐ.அமெரிக்கா எவ்வாறு தலையிட்டது; இதனால் ஏற்பட்ட பாதக நிலைமைகள் போன்றன எல்லாம், ஒருபுறமிருக்கட்டும். ஆனால், ஐ.அமெரிக்காவின் ஜனாதிபதியாக, டொனால்ட் ட்ரம்ப் தெரிவுசெய்ய…
-
- 0 replies
- 376 views
-
-
கடப்பாடுகளை மறந்த அரசு உள்ளூராட்சித் தேர்தல் நடந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகப் போகின்ற நிலையிலும், கொழும்பு அரசியல் அரங்கில் தோன்றிய கொந்தளிப்பு இன்னமும் அடங்குவதாகத் தெரியவில்லை. உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஏற்பட்ட பின்னடைவு, கூட்டு அரசாங்கத்தின் நிலையை கேள்விக்குள்ளாக்கியது. இரண்டு கட்சிகளுக்குள்ளேயும், உள்முரண்பாடுகளைத் தோற்றுவித்தது. இது கட்சிகள் சார்ந்து உருவாகிய பிரச்சினை. அதேவேளை, கூட்டு அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள், பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரண…
-
- 0 replies
- 376 views
-
-
ஜெயலலிதா இல்லாத தமிழகமும் இலங்கையும் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் கடந்த ஐந்தாம் திகதி மரணமடைந்ததை அடுத்து, தமிழக அரசியலில் ஒருவித நிலையற்ற தன்மை தென்படுகிறது. புதிய முதலமைச்சராக ஜெயலலிதாவின் நெருங்கிய சகாக்களில் ஒருவரான ஓ. பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டாலும், ஜெயலலிதா வகித்த அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பதவிக்கு யார் நியமிக்கப்படப் போகிறார் என்பதைத் தமிழகத்தில், சகல அரசியல் கட்சிகளும் கூர்ந்து கவனித்து வருகின்றன. ஏனெனில், அக்கட்சியின் யாப்பின் பிரகாரம், அப்பதவி மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கிறது. அந்தப் பதவியை வகிப்பவர் கட்சித் தலைவர் என்று கூறும் அளவுக்கு, அது அ…
-
- 0 replies
- 376 views
-
-
உலக வல்லரசின் வீழ்ச்சியை உறுதிப்படுத்திய ஆண்டாக கடந்து செல்லும் 2024 – வேல்ஸில் இருந்து அருஸ் December 30, 2024 மனித வரலாற்றில் மிக அதிக நாடுகளில் தேர்தல்கள் இடம்பெற்ற ஆண்டாக இந்த வருடம் கடந்து செல்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கின்ற 70 இற்கு மேற்பட்ட நாடுகளில் தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது உலக மக்கள் தொகையில் அரை பங்குக்கு மேற்பட்ட மக்கள் தமது வாக்குபலத்தை பயன்படுத்தியுள்ளதுடன், பல நாடுகளில் தேர்தல்கள் இன்றியே ஆட்சி மாற்றங்களும் இடம் பெற்றுள்ளன. சிரியாவில் அரசு கைப்பற்றப்பட்ட அதே சமயம் ஜேர்மனி அரசும் வீழ்ந்தது. மறுபுறமாக தென்கொரிய அதிபரும் தனது பதவியை இழந்தார், அதற்கு முன்னர் பங்களாதேசத்தின் ஹசீனா அரசு வீழ்த்தப்பட்டது, மேலும் ஈர…
-
-
- 1 reply
- 376 views
-
-
- இலட்சுமணன் முள்ளிவாய்க்காலில், 2009ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் ஸ்தம்பிக்கச் செய்யப்பட்டதன் பின்னர்தான், தாம் முழுநேரப்பணியில் ஈடுபட்டு வருவதாகவும் விடுதலைப் புலிகள் காலத்தில், பகுதி நேரமாகத்தான் அரசியலில் ஈடுபட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக்கட்சி, புதுக் கதையொன்றைச் சொல்லி வருகின்றது. இந்தக் கருத்துத் தொடர்பில், தமிழ் மக்களிடம் பல்வேறுபட்ட ஐயப்பாடுகள் எழுந்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில், மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்களுக்குத் தெளிவூட்டும் வகையிலமைந்த, விழிப்புணர்வுக் கருத்தரங்கு, களுவாஞ்சிக்குடி, கிரான் ஆகிய இடங்களில் திங்கட்கிழமை (12) நடைபெற்றிருந்தது. இதன் முதலாவது கூட்டம், க…
-
- 0 replies
- 376 views
-
-
மஹிந்த ராஜபக்ஷ: ஓர் 'அரசன்' வீழ்ந்த கதை முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி முற்றிய நிலையில், பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவரது சகோதரரான கோட்டாபய ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியில் தொடர்ந்துகொண்டிருக்கிறார். 2005இல் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி ஆனார் என்றாலும் அந்நாட்டில் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு, ராஜபக்ஷ குடும்பத்தின் செல்வாக்கு இலங்கையில் மிகப் பெரிய அளவில் அதிகரித்தது. ராஜபக்ஷ குடும்பத்தின் பின்னணி, அவர…
-
- 0 replies
- 375 views
- 1 follower
-
-
ஜோ பைடனும் மனித உரிமைகளும்: ஒபாமாவின் அணுகுமுறை தொடரும் 77 Views அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி வகித்த கடந்த நான்கு ஆண்டுகளில் பல முக்கியமான பன்னாட்டு மனித உரிமை ஒப்பந்தங்களிலிருந்தும், நிறுவனங்களிலிருந்தும் எந்தவித தயக்கமும் இன்றி வெளியேறினார். டொனால்ட் ட்ரம்ப் 2018 இல் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையத்திலிருந்தும் 2015 இல் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலிருந்தும் அமெரிக்காவை வெளியேற்றியது மட்டுமன்றி, உலக சுகாதார தாபனத்திலிருந்தும் தனது நாட்டை வெளியே எடுத்தார். இவ்வருடம் ஜூன் மாதம் 11ஆம் திகதி, பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்று தொடர்பான பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தவல்ல ஒரு நிறைவேற்றுக் கட்டளையைப் பிறப…
-
- 0 replies
- 375 views
-
-
தமிழர்களின் ஐக்கியத்தை வலியுறுத்திய முல்லைத்தீவு நிலமீட்புப் போராட்டம் மூல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறுகின்ற நில அபகரிப்பு மற்றும் சிங்களக் குடியேற்றங்களை எதிர்த்து ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கட்சி பேதமின்றி ஒன்று கூடித் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறாதென அரசதலைவர் தெரிவித்துள்ள நிலையிலும், இந்தப் போராட்டம் நடந்து முடிந்துள்ளது. தெற்கின் பல பிரதேசங்கள் மகாவலி கங்கையின் நீரால் செழிப்புடன் காணப்படுகின்றன. ஆண்டு தோறும் நீர் கிடைப்பதால் மூன்ற…
-
- 0 replies
- 375 views
-
-
இராணுவ ஆட்சி சாத்தியமா? கூட்டு எதிரணியின் தலைவரான தினேஸ் குணவர்த்தன நாடாளுமன்றத் தில் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற் றும் வாய்ப்பு இருப்பதாக விடுத்த எச்சரிக்கையை அடுத்து. இராணுவ ஆட்சிக்கான வாய்ப்புகள் இருக்கிறதா- இல்லையா என்பதே அரசியலில் பெரும் விவாதத்துக்குரிய விடயமாக மாறியிருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ, தினேஸ் குணவர்த்தன இந்த ஆபத்தான விடயத்துக்குள் காலடியை எடுத்து வைத்து விட்டார். அதனால் தான், கூட்டு எதிரணியைச் சேர்ந்த எவரும், அவரது கருத்துக்கு ஆதரவாக வாய் திறக்காமல் மெளனமாக இருக்கிறார்கள். மஹிந்த ராஜபக் ஷவோ, விமல் வீரவன்சவோ, உதய கம்மன்பிலவோ, வாசுதேவ நாணயக்…
-
- 0 replies
- 375 views
-
-
கட்சிகளை ஐக்கியப்படுத்தும் ஆகப் பிந்திய ஒரு முயற்சி – நிலாந்தன். நேற்று சனிக்கிழமை (17.11.23) யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. டாண் டிவி குழுமத்தின் அனுசரணையோடு ஒரு சிவில் அமைப்பு அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. எல்லாக் கட்சிப் பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கட்சிகளுக்கு இடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதே அந்த கருத்தரங்கின் நோக்கம். கட்சிகளோடு சமயப் பெரியார்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். ஐந்து மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் மொத்தம் எழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்திருந்தார்கள்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்தவர்கள் வரவில்லை. தமிழ் மக்கள் கூட்டணியை சேர்ந்தவர்களும் வரவில்லை. ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர…
-
- 0 replies
- 375 views
-
-
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியது எப்படி? எப்போது முடிவுக்கு வரும்? | இந்திரன் ரவீந்திரன்
-
- 0 replies
- 375 views
-
-
தமிழர் பிரச்சினையை ‘மீண்டும்’ கைகளில் எடுக்கிறது இந்தியா – அகிலன் 7 Views கிழக்கு முனைய விவகாரத்தையடுத்து, இரு தரப்பு உறவுகளில் புதிய நெருக்கடி “இந்தியாவுடனான பிரச்சினையை பரஸ்பர பேச்சுவார்ததைகள் மூலமாகத் தீர்த்துக்கொள்ள முடியும்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருப்பது, இரு தரப்புக்கும் இடையில் நெருக்கடி ஒன்று உருவாகியிருப்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றது. அதேவேளையில், இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளாவிட்டால், நெருக்கடி மேலும் அதிகரிக்கலாம் என்ற எச்சரிக்கை உணர்வுடன் ராஜபக்சக்களின் அரசு இருப்பதையும் புலப்படுத்தியிருக்கின்றது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுப்பதில்லை என்ற …
-
- 0 replies
- 375 views
-