அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
இலங்கையின் பொருளாதார மீட்சி யார் கையில்? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ நாட்டின் பொருளாதாரம் எப்படியாவது மீண்டுவிடும் என்று முழுமையாக நம்புவோர் இருக்கிறார்கள்; பகுதியாக நம்புவோரும் இருக்கிறார்கள். “வாய்ப்பில்லை ராஜா” என்று அடம்பிடிப்போரும் இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் அனைவரும் உடன்படுகின்றதும் எல்லோருக்கும் தெரிந்ததுமான ஒரு விடயம் யாதெனில், இலங்கையின் பொருளாதாரத்தின் மீட்சி, நிச்சயமாக இலங்கையர்களின் கைகளில் இல்லை என்பதாகும். அப்படியாயின், இப்போது எழுகின்ற கேள்வி, அது யார் கைகளில் இருக்கின்றது என்பதாகும். இலங்கையின் பொருளாதாரம், தனது தன்னிறைவுச் சுயசார்புத் தன்மையை இழக்கத் தொடங்கியது முதல், அந்நியர் தயவில் தங்கியிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்ட…
-
- 0 replies
- 377 views
-
-
திராவிடர் கழகம் தனது பவள விழாவை இன்று (ஆகஸ்ட் 27) கொண்டாடும் நிலையில், அந்த இயக்கத்தின் தற்போதைய தேவை, சாதனைகள், எதிர்கால லட்சியங்கள், அக்கட்சி மீதான விமர்சனங்கள் குறித்து விரிவாகப் பேசினார் அந்த அமைப்பின் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன். பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசியதிலிருந்து: கே. இந்த இயக்கம் துவங்கப்பட்டு 75 ஆண்டுகளாகின்றன. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடக் கட்சிகள் ஆட்சியில் இருக்கின்றன. திராவிடர் கழகம் என்ற இந்த அமைப்புக்கு இனிமேலும் தேவை இருப்பதாக நினைக்கிறீர்களா? ப. கண்டிப்பாக. திராவிடர் கழகத்தின் அடிப்படையான கொள…
-
- 0 replies
- 377 views
-
-
ட்ரம்ப்பை வாட்டிவதைக்கும் ரஷ்ய விசாரணை - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதிப் பதவியென்பது, மிகவும் அதிகாரமிக்க ஜனாதிபதிப் பதவிகளுள் ஒன்றாகும். அதனால் தான், ஐ.அமெரிக்க ஜனாதிபதிப் பதவியில் இருப்போரை, “சுதந்திர உலகின் தலைவர்” என்று அழைப்பர். அந்ததளவுக்கு, ஒட்டுமொத்த உலகையும் வழிநடத்தும் பொறுப்பு, அந்தப் பதவிக்கு உள்ளதெனக் கருதப்படுகிறது. இந்த நிலைக்கு, எவ்வாறு தள்ளப்பட்டோம்; இந்த நிலைமையைப் பயன்படுத்தி, உள்நாட்டு விவகாரங்களில் ஐ.அமெரிக்கா எவ்வாறு தலையிட்டது; இதனால் ஏற்பட்ட பாதக நிலைமைகள் போன்றன எல்லாம், ஒருபுறமிருக்கட்டும். ஆனால், ஐ.அமெரிக்காவின் ஜனாதிபதியாக, டொனால்ட் ட்ரம்ப் தெரிவுசெய்ய…
-
- 0 replies
- 377 views
-
-
தமிழர்களது உரிமைகளை மறுதலிப்பதற்கான உங்களது சீனசார்புப் போக்கு சிங்களதேசத்தையும் அழிக்கும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழர்களின் உரிமையைகளை மறுதலிப்பதற்காக நீங்கள் இந்த பூகோள அரசியல் போட்டியை கையாளும் தவறான அணுகுமுறையானது, எந்த மக்களின் பெருமிதத்திற்காக நீங்கள் இதை செய்கிறீர்களோ அதே உங்களின் சொந்தமக்களின் இறைமையையும் நீங்கள் அழித்துக்கொள்கிறீர்க்ள் என்பதை மீண்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். என்று நீஙக்ள் இனவாதத்தை கைவிட்டு, நீஙக்ள் நாட்டின் தென்பகுதியில் நீங்கள் கொண்டிருக்கும் உரித்துகளை போலவே தமிழ் மக்களும் வடக்கு கிழக்கில் அனைத்து உரித்துகளையும் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஏற்றுகொண்டு இணைந்து செய்ற்பட முன்வருகிறீர்களோ, அன்றுதான் , இல…
-
- 0 replies
- 377 views
-
-
தமிழரசுக் கட்சியின் எதிர்காலம்? October 21, 2022 — கருணாகரன் — “தமிழரசுக் கட்சியின் எதிர்காலம் எப்படியிருக்கும்?” -இந்தக் கேள்வி இப்பொழுது பலமாக எழுந்துள்ளது. இதற்குச் சில காரணங்களுண்டு. அதனால் தமிழ் மக்களுக்கான நிகழ்கால– எதிர்கால அரசியலை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லக் கூடிய கொள்கையும் திறனும் அர்ப்பணிப்பும் உண்டா? என்ற சந்தேகம் எழுந்துள்ளமையாகும். முன்பும் சரி, இப்பொழுதும் சரி தமிழரசுக் கட்சியினால் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் எதற்கும் தீர்வைக் காண முடிந்ததில்லை. (அப்படி ஏதாவது ஒரு விடயத்தில் அது தீர்வைக் கண்டிருந்தால் அதை யாரும் குறிப்பிடலாம்). ஒரு நீண்டகால அரசியற் கட்சி என்ற வகையிலும் அதிகமான காலம் தமிழ் மக்களுடைய ஆதரவைப…
-
- 0 replies
- 376 views
-
-
ஜோ பைடனும் மனித உரிமைகளும்: ஒபாமாவின் அணுகுமுறை தொடரும் 77 Views அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி வகித்த கடந்த நான்கு ஆண்டுகளில் பல முக்கியமான பன்னாட்டு மனித உரிமை ஒப்பந்தங்களிலிருந்தும், நிறுவனங்களிலிருந்தும் எந்தவித தயக்கமும் இன்றி வெளியேறினார். டொனால்ட் ட்ரம்ப் 2018 இல் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையத்திலிருந்தும் 2015 இல் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலிருந்தும் அமெரிக்காவை வெளியேற்றியது மட்டுமன்றி, உலக சுகாதார தாபனத்திலிருந்தும் தனது நாட்டை வெளியே எடுத்தார். இவ்வருடம் ஜூன் மாதம் 11ஆம் திகதி, பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்று தொடர்பான பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தவல்ல ஒரு நிறைவேற்றுக் கட்டளையைப் பிறப…
-
- 0 replies
- 376 views
-
-
இனப்பிரச்சினைத் தீர்வு பற்றி மீண்டும் பேசிய ஜனாதிபதி ரணில் என்.கே அஷோக்பரன் இலங்கையின் இனப்பிரச்சினையை இவ்வருட இறுதிக்குள் தீர்த்து வைப்பதில் ஆர்வமாக உள்ளதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த திங்கட்கிழமை (01), தான் நிகழ்த்திய மே தின உரையில் மீண்டும் தெரிவித்துள்ளார். “இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் கொள்கைகளுக்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டின் அடிப்படையில், நாட்டின் நீண்டகால இன மோதலைத் தீர்க்க, இந்த ஆண்டு இறுதிக்குள் ஓர் உடன்பாட்டை எட்ட எதிர்பார்க்கிறேன்” என்று குறிப்பிட்ட அவர், “இரண்டு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே, நாடு சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்துடன் முன்னேற முடியும்” என்று தெரிவித்தார். அதில் ஒரு நிபந்…
-
- 2 replies
- 376 views
-
-
கொரோனா நெருக்கடியும் கைநழுவிய போக்கும் -பி.மாணிக்கவாசகம் 31 Views கோவிட்-19 கொள்ளை நோய் தீவிரமடைந்துள்ளது. அதன் தொற்றுப் பரவலைத் தகுந்த முறையில் தடுத்து நிறுத்த முடியாமல் இலங்கை தடுமாறிக் கொண்டிருக்கின்றது. இராணுவத்தை முதன்மை நிலையில் பயன்படுத்தி கடந்த மார்ச் மாதம் ஏற்பட்டிருந்த நோய்த்தொற்றின் முதலாவது அலையை அரசு வெற்றிகரமாகக் கையாண்டிருந்தது. அது ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியானது என்று உலக சுகாதார நிறுவனம் பாராட்டி இருந்தது. இதனால் சினிமா கதாநாயகனைப் போன்று, ஜனாதிபதி கோத்தாபாய அரசு இறுமாப்புடன் கொலரைத் தூக்கிவிட்டுக் கொண்டது. ஆனால் ஒரு சில மாதங்களிலேயே நிலைமைகள் தலைகீழாக மாறிவிட்டன. குறிப்பாக ஒக்டோபர் மாதத்தில் கொரோனா …
-
- 0 replies
- 376 views
-
-
தமிழர்களின் ஐக்கியத்தை வலியுறுத்திய முல்லைத்தீவு நிலமீட்புப் போராட்டம் மூல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறுகின்ற நில அபகரிப்பு மற்றும் சிங்களக் குடியேற்றங்களை எதிர்த்து ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கட்சி பேதமின்றி ஒன்று கூடித் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறாதென அரசதலைவர் தெரிவித்துள்ள நிலையிலும், இந்தப் போராட்டம் நடந்து முடிந்துள்ளது. தெற்கின் பல பிரதேசங்கள் மகாவலி கங்கையின் நீரால் செழிப்புடன் காணப்படுகின்றன. ஆண்டு தோறும் நீர் கிடைப்பதால் மூன்ற…
-
- 0 replies
- 376 views
-
-
பேராயர் மல்கம் ரஞ்சித்தின் மனட்சாட்சி ஆயர் இராஜப்பு ஜோசப் சொன்னது என்ன? சிங்கள ஆட்சியாளர்கள், சிங்கள இராணுவ உயர் அதிகாரிகள் சிலரினால் கையாளப்பட்ட தமிழ் – முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் 2009 முள்ளிவாய்க்கல் போரின்போது தமிழர் தாயகப் பிரதேசங்களில் தேசியத்தை மலினப்படுத்தும் அசிங்கமான அரசியலில் (Ugly Treacherous Politics) ஈடுபடுத்தப்பட்டிருந்தன என்பதை சனல் 4 வெளியிடவில்லை. இந்த அசிங்க அரசியலின் தொடர்சிதான் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல். அங்கிருந்துதான் சனல் 4 ஆவணப்படத்தைத் தயாரித்திருக்க வேண்டும். அ.நிக்ஸன்- 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சூத்திரதாரி யா…
-
- 0 replies
- 376 views
-
-
“நான் கற்றுக் கொண்டதும் தமிழ் அரசியல் தலைவர்கள் ஒரு போதுமே கற்றுக்கொள்ளாததும்” April 26, 2024 — குசல் பெரேரா — வடக்கில் தமிழர்கள் மத்தியில் மதத்தீவிரவாதம் வெளிக்கிளம்புவதற்கு யார் பொறுப்பு? மக்களின் உணர்வுகளை மதிக்காத — கொழும்பில் வாழ்க்கையைக் கொண்ட பொறுப்பற்ற தமிழ் தலைமைத்துவமே அதற்கு பொறுப்பு என்று நான் சொல்வேன். அநீதிக்கு எதிராகவும் ஜனநாயக மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் எந்தளவுக்கு வெளிப்படையாகவும் பற்றுறுதியுடனும் நிலைப்பாட்டை எடுக்கிறார்கள் என்பதிலேயே அவர்களின் பலம் தங்கியிருக்கிறது. சிங்கள தெற்கில் பிரதான அரசியல் நீரோட்ட தலைவர்கள் பெரும்பான்மை இனத்துவ தீவிரவாதத்தை முன்னெடுக்கிறார்கள். போரின் முடிவுக்கு பின்னரான தமி…
-
- 0 replies
- 376 views
-
-
ஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரும் என்.கே. அஷோக்பரன் / 2019 ஓகஸ்ட் 19 திங்கட்கிழமை, பி.ப. 01:14 அடுத்த ஜனாதிபதித் தேர்தல் களம், சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. சில நாள்களுக்கு முன்பு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது பெரும் மாநாட்டில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில், ஜனாதிபதி வேட்பாளராகத் தன்னுடைய தம்பியும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ களம் காண்பார் என்று, மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார். இது, பலரும் எதிர்பார்த்த அறிவிப்புத்தான். ராஜபக்ஷ குடும்பத்தைத் தாண்டி, வேறு நபரைத் தெரிவு செய்வதில், ராஜபக்ஷ குடும்பம் தயாராகவில்லை என்பதை, இது சுட்டி நிற்பதையும் நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. மறுபுறத்தில், ஐக…
-
- 0 replies
- 376 views
-
-
கொள்கையற்ற கூட்டுக்கள் உள்ளூராட்சித் தேர்தலில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எவ். போன்றன இணைந்த ஒரு கூட்டணி உருவாகும் என்று பரவலான எதிர்பார்ப்பு ஒன்று காணப்பட்டது. ஆனால் திடீரென, சுரேஸ் பிரேமச்சந்திரன், ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் கூட்டணி வைத்துக் கொண்டார். ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழர் விடுதலைக் கூட்டணி, ஜனநாயக தமிழரசுக் கட்சி, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி, ஈரோஸ் உள்ளிட்ட சில கட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறான பா…
-
- 0 replies
- 376 views
-
-
சாரதாம்பாளுக்கு மாத்திரமல்ல, எல்லோருக்கும் மறுக்கப்பட்ட நீதி! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் ஒரு இனத்தின், ஒரு சமூகத்தின் உயிர்ப்புக்கு பெண் அவசியமானவள். தமிழ் சமூகத்தில் பெண்ணை தெய்வாக போற்றுகிற, சினம் கொண்டவளாக பார்க்கிற, நீதி வேண்டுபவளாக பார்க்கிற நம்பிக்கைகளும் தொன்மங்களும் உண்டு. ஈழமெங்கும் கண்ணகி என்றும் அம்மன் என்றும் பெண் வழிபாடுகள் பக்தியோடும் வீரத்தோடும் நீதியோடும் வணக்கப் பண்பாடுகள் இடம்பெறுகின்றன. இலங்கை அரசு இன ஒடுக்கல் மேலாதிக்கச் சிந்தனையுடன் தமிழ் சமூகத்தை ஒடுக்கத் தொடங்கியபோது தமிழ் பெண் சமூகத்தை திட்டமிட்டு அழித்தது. வடக்கு கிழக்கில் சிங்களப் படைகள் நிலை கொள்ளத்…
-
- 0 replies
- 376 views
-
-
இலங்கை ஒற்றையாட்சி அரசின் உள்ளகப் பொறிமுறைக்கு ஏற்றதான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை- சொல்வதும் சொல்லப்படாததும் பீரிஸ், மிலிந்தமொறகொட, பசில் ராஜபக்ச ஆகியோரின் திட்டங்கள் அரங்கேற்றம் போர் இல்லாதொழிக்கப்பட்டதொரு சூழலில், இலங்கை ஒற்றையாட்சி அரசு விரும்பும் உள்ளகப் பொறிமுறைக்கு ஏற்ற முறையில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், சர்வதேச மனித உரிமைகள் தினம் அன்று வெளியிட்டுள்ள அறிக்கை தென்படுவதாக, அமெரிக்க- இலங்கைச் செயற்பாடுகளை அவதானிப்போர் கூறுகின்றனர். இலங்கை இராணுவத்தின் கீழ் நிலை அதிகாரிகள் இருவருக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இரண்டு பேருடைய தடைகள் மட்டுமல்ல…
-
- 0 replies
- 376 views
-
-
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் திரு பா.டென்னிஸ்வரன் அவர்களின் நேர்காணல்
-
- 0 replies
- 376 views
-
-
“ஜோர்ஜ் பேபன்ரூ (George Papandreou) உடனடியாக விலக வேண்டும், அவருக்கு பொருளாதார நெருக்கடியை முகாமைத்துவம் செய்ய முடியவில்லை” இது கடந்த 2011 ஆம் ஆண்டு கிரேக்க நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் வீதியில் இறங்கி எழுப்பிய போராட்ட கோஷம். பேபன்ரூ குடும்பம் கிரேக்க நாட்டில் உள்ள பலமான அரசியல் குடும்பம். சரியாக இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தை போன்ற குடும்பம். இவரது பாட்டனார் பல முறை கிரேக்கத்தின் நாட்டின் பிரதமராக பதவி வகித்துள்ளார். அவரது தந்தையும் பிரதமராக பதவி வகித்தார். கிரேக்க நாட்டின் மிகப் பழமையான பெசோ கட்சியை உருவாக்கியதும் இவரது தந்தையே. 2009 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மிகப் பெரும்பான்மையை பெற்று ஜோர்ஜ் பேபன்ரூ நாட்டின் பிரதமராக த…
-
- 0 replies
- 376 views
-
-
இராஜதந்திர ஜனநாயகப் போராட்டத்தின் அவசியம் – பி.மாணிக்கவாசகம் 19 Views ஜெனிவாவில் உருவாகி வருகின்ற நெருக்கடிகளுக்கு உறுதியோடு முகம் கொடுப்பதற்கான ஆயத்தங்களில் அரசு ஈடுபட்டிருக்கின்றது. அதனை பகீரதப் பிரயத்தனம் என்று கூட குறிப்பிடலாம். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ‘கோர் குறூப்’ என குறிப்பிடப்படுகின்ற முக்கிய உறுப்பு நாடுகள் இலங்கைக்கு எதிராக கடுமையானதொரு தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக வெளியாகிய அறிக்கையொன்றையடுத்து அரசு இந்தியாவின் உதவியை நாடியுள்ளதாகத் தெரிகின்றது. அதற்கான அவசர கோரிக்கைக் கடிதம் ஒன்று இந்திய அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. …
-
- 0 replies
- 376 views
-
-
கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் ++++++++++++++++++++++++++++++++++++++ “தேர்தலை நடத்துவதன் ஊடாக இலங்கை மக்களின் இறையாண்மை அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அதிகரித்த ஈடுபாட்டின் அவசியத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்”-இது இன்றைய பத்திரிகை செய்தி. இலங்கை மக்களின் (சிங்கள மக்களின்) இறையாண்மையை பாதுகாக்க ஐ.நா.தலையீடு வேண்டுமென சஜித் கேட்கலாம். அதனால், இந்த நாட்டின் இறைமைக்கு பங்கம் ஏற்படாது.ஜே.வி.பிக்கெதிரான இராணுவ நடவடிக்கையில் சிங்கள மக்கள் கொல்லப்படுவதற்கெதிராக மனித உரிமையை நிலை நாட்டக்கோரி மகிந்த ஐ.நா.செல்லலாம். அதனால் இலங்கையின் இறைமை,கீர்த்தி? பாதிக்கப்படாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நேர்மையான நீதி விசாரணை வேண்…
-
- 0 replies
- 376 views
- 1 follower
-
-
பாதிக்கப்பட்டோரின் நீதிக்கான ஏக்கத்தை புரிந்துகொள்ளாத நகர்வுகள் ரொபட் அன்டனி அரசாங்கம் நல்லிணக்க விடயத்தில் அவசரமாக முன்னேற்றங்களை வெளிக்காட்டவேண்டும். குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் இருந்து அரசாங்கம் செயற்படவேண்டியது அவசியம். பாதிக்கப்பட்ட மக்கள் திருப்தி அடையாத நல்லிணக்க பொறிமுறையில் அர்த்தமில்லை என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும். அந்தவகையில் செய்ட் அல் ஹுசைன் அறிக்கை குறித்து அரசாங்கம் ஆழமான முறையில் கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகும் அனைவரும் எதிர்பார்த்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான எழுத்துமூல அறிக்கை கடந்தவாரம் வெளிவந்…
-
- 0 replies
- 375 views
-
-
நாட்டின் பொருளாதார நெருக்கடி சமூக சீரழிவுக்கு வித்திடும் புருஜோத்தமன் தங்கமயில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகக் கொண்ட புதிய அமைச்சரவை, பகுதி பகுதியாக இன்னமும் பதவியேற்று வருகின்றது. புதிய அரசாங்கத்தை, ‘சர்வகட்சி அரசாங்கம்’ என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்மொழிகிறார்கள். ஆனால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி போன்ற கட்சிகளின் நிலைப்பாடுகளுக்கு எதிராக, அக்கட்சிகளின் உறுப்பினர்களைப் பிரித்தெடுத்து அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து வைப்பதன் மூலம், அது எப்படி சர்வகட்சி அரசாங்கம் ஆக இருக்க முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் கேள்வி எழுப்புகின்றன. கோட்டா பதவி விலகினால் …
-
- 4 replies
- 375 views
-
-
Published By: VISHNU 12 APR, 2023 | 05:16 PM பௌத்த பிக்குகளின் கோரிக்கையில் படையினரின் பலப்பிரயோகத்துடன் தமிழர் தாயக நிலங்களிலுள்ள கலாசாரப்பதிவுகள், படிமங்கள் அழிக்கப்பட்டு அகற்றப்பட்டு அவ்விடங்களில் புத்தர் சிலைகள், விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனை பௌத்த பிக்குகளின் கோரிக்கையில், தமிழர் தேச அத்திவாரங்களைப் பிடுங்குவது போல் கலாசார அழிப்புகளை திட்டமிட்டு மேற்கொள்கின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார் மட்டக்களப்பில் வைத்து புதன்கிழமை (12.4.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ள…
-
- 1 reply
- 375 views
- 1 follower
-
-
பிரித்தானியாவின் தடை உணர்த்துவது? - நிலாந்தன் பிரித்தானியா இலங்கையில் போர்க் காலத்தில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அதில் சம்பந்தப்பட்ட நான்கு பேருக்கு தடை விதித்திருக்கிறது. இதுவரை காலமும் கனடா அமெரிக்கா ஆகிய நாடுகள் தடை விதித்திருக்கின்றன. பிரித்தானியா இவ்வாறு தடை விதித்திருப்பது இதுதான் முதல் தடவை. முதலில் இந்த தடை வெளிவந்திருக்கும் பின்னணியைப் பார்க்கலாம். 58 ஆவது ஜெனிவா கூட்டத்தொடர் இன்று முடிவடைகிறது. அக்கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்திலேயே பிரித்தானியாவின் தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இரு கிழமைகளுக்கு முன்பு ஜெனிவா கூட்டத் தொடரின் பின்னணியில்,அல்ஜசிராவின் “ஹெட் டு ஹெட்” நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அந்த நிகழ்ச்சியும் இப்பொழுது வெ…
-
- 1 reply
- 375 views
-
-
இனப்படுகொலை இடம்பெற்றதை அங்கீகரிக்கவேண்டும் - பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சருக்கு பிரிட்டிஸ் எம்பிக்கள் கடிதம் By RAJEEBAN 23 SEP, 2022 | 01:08 PM இலங்கை ஜனாதிபதியின் தலைமைத்துவம் குறித்து நாங்கள் ஆழ்ந்த ஏமாற்றமடைந்துள்ளோம்,அவரது அரசாங்கத்தின் கீழ் இடம்பெறும் ஒடுக்குமுறை குறித்த எங்கள் கரிசனையை எழுப்புகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துள்ளன என்பது தெளிவாகியுள்ள விடயம் என குறிப்பிட்டுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரிட்டன் தமிழர்களின் இனப்படுகொலையை அங்கீகரிக்கவேண்டும் யுத்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட இலங்கையின் சிரேஸ் அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் என வேண்ட…
-
- 2 replies
- 375 views
- 1 follower
-
-
முடிவுறாத அரசியல் போரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் இலக்கும்? - யதீந்திரா ஆட்சி மாற்றத்தின் பின்னர் இடம்பெறவுள்ள ஒரு தேர்தல் என்னும் வகையில், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலானது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் உள்ள அதிருப்திகளை காண்பிக்க இது பொருத்தமான தருணமல்ல. இவ்வாறு நான் குறிப்பிடும் போது, இது ஒரு வழமையான கதைசொல்லல் போன்று தெரியக் கூடும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்னும் அடிப்படையில் விமர்சனங்களை முன்வைத்து வந்த நானே, இவ்வாறு கூறும் போது இதனை சில வாசகர்கள் ஆச்சரியமாகவும் பார்க்கலாம். ஆனால் இங்கு விளங்கிக்கொள்ள வேண்டிய விடயமோ வேறு. அதாவது, எனது கருத்து…
-
- 0 replies
- 375 views
-