Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. நரேந்திர மோடி: ஒரு குறுக்கு வெட்டுமுகத் தோற்றம் - நிலாந்தன்:- 25 மே 2014 சீன அரசாங்கத்தின் சிந்தனைக் குழாத்தைச் சேர்ந்த ஒருவர் நரேந்திர மோடியை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ''நிக்ஷனைப் போன்றவர்' என்று வர்ணித்துள்ளார்.குஜராத்தில் ஒரு முதலமைச்சராக அவர் எப்படிச் செயற்பட்;டார் என்பதன் அடிப்படையில் சில விமர்சகர்கள் அவரை சிங்கப்பூரின் லீகுவான் யூ வைப் போன்றவர் என்று வர்ணித்துள்ளார்கள். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவரை தென் ஆசியாவின் மகிந்த என்று வர்ணித்துள்ளார். ஏறக்குறைய இதே தொனிப்படவே அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் கருத்துக் கூறியுள்ளார். தயான் ஜெயதிலக மகிந்தவும் மோடியும் ஒரே தறியில் நெய்யப்பட்ட துணிகள் என்று கூறியுள்ளார். பி.பி.சிக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு …

  2. தமிழர்கள் - மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது? நிலாந்தன் 18 மே 2014 விடுதலைப்புலிகள் வீழ்ச்சியுற்று இன்றோடு ஐந்தாண்டுகளாகின்றன. பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய முன்றலில் தொடங்கிய ஒரு போராட்டடம் நந்திக் கடற்கரையில் வற்றாப்பளை அம்மன் கோயில் கோபுரம் சாட்சியாக நிற்க முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. தமிழர்களுடைய ஆயுதப் போராட்ட வரலாற்றில் ஏற்பட்ட மிகப் பெரிய தோல்வியும் மிகப் பெரிய இழப்பும் அதுவெனலாம். அது மட்டுமல்ல, ஈழத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் அறிவுக்கெட்டிய காலத்திலிருந்து இன்று வரையிலுமான காலப் பரப்பினுள் நிகழ்ந்த ஆகப் பெரிய இழப்பு அதுவெனலாம். யாழ்ப்பாணம் கந்தரோடையில் காணப்பட்ட ஈழத் தமிழர்களின் முதலாவது சிற்றரசு என்று வர்ணிக்கப்படும் கதிரமலையரசின் வீழ்ச்சிய…

  3. விடுதலைப்புலிகள் இயக்கம் வீழ்ச்சியுற்று ஐந்தாண்டுகளாகிவிட்டன. இவ் ஐந்தாண்டு காலப் பகுதியில் தமிழ் அரசியல் தொடர்பில் ஏற்பட்டிருக்கக்கூடிய மாற்றங்கள், மாற்றமின்மைகளை பிரதானமாக மூன்று பரப்புக்களிற்கூடாகப் இன்று இக்கட்டுரை பார்க்கிறது. மேற்கு நாடுகள், இந்தியா மற்றும் தென்னிலங்கை ஆகியனவே இம்மூன்று பரப்புகளுமாகும். முதலில் மேற்கு நாடுகள். கடந்த ஐந்தாண்டுகளில், ஈழத் தமிழர்களை நோக்கி ஓர் அனுதாப அலை உருவாகியிருக்கிறது. ஊடகங்கள் - மனித உரிமை நிறுவனங்கள், மனிதாபிமான அமைப்புகள், புத்திஜீவிகள், செயற்பாட்டாளர்கள், படைப்பாளிகள் போன்றோரால் உருவாக்கப்பட்டிருக்கும் இவ்வனுதாப அலை காரணமாகவும், ஆண்டு தோறும் ஜெனிவாவில் நிகழும் மனித உரிமைக் கூட்டத் தொடர் காரணமாகவும் மேற்கு நாடுகள் ஈழத்…

  4. யாழில் இந்திய தேர்தலின் முடிவுகளை பற்றி யார் சரியாக கணிக்கின்றார்கள் என்பதுபற்றி ஒரு போட்டி. இந்தியா ,தமிழ்நாடு,பிரபலங்கள் என்று மூன்று பிரிவாக போட்டியை நடத்தினால் நன்றாக இருக்கும் . அடுத்த வாரம் முழு விபரங்கள் .அதற்கிடையில் உங்கள் கருத்துகள் .

    • 35 replies
    • 3.1k views
  5. முதல் ஒட்டு, முதல் தேர்தல். உள்ளாட்சியோ, மாநில தேர்தலோ அல்ல நாட்டின் அதிகார மிக்க தலைவரை தேர்ந்தேடுக்கக் கூடிய தேர்தல். இந்தியாவின் சுதந்திரத்தை பெற்று தந்த கட்சி என்ற பெருமைமிக்க கட்சி, சுதந்தர இந்தியாவை முழுக்க ஆண்ட கட்சி, காஷ்மீர் முதல் கண்ணியாகுமரி வரை பட்டி தொட்டியேல்லாம் வேர் பரப்பிய காங்கிரஸ் கட்சி தன் இத்துணை கால அரசியல் வரலாற்றில் இல்லாத ஒரு பெரும் தோல்வியை இந்த தேர்தலில் எதிர்நோக்கியுள்ளது. நரேந்திர மோடியினது ஆட்சி நிர்வாகத்தினால் கிடைக்கும் ஒட்டுகளை விட காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்க கூடாது என்ற எண்ணத்தில் கிடைக்கும் ஒட்டுக்களே இந்த முறை பிஜேபியை வெற்றி பெற வைக்கப்போகிறது. காங்கிரஸிற்கு நன்றி கடன்பட்டவர்கள் ஒரு வகையில். இந்திரா காந்தி காலம் தொட்டு யாருக்கு…

    • 17 replies
    • 1.9k views
  6. நாடாளுமன்றத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு பாக்கியராசன் சே நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று (29/3/2014) சென்னை வளசரவாக்கத்தில் ஜெஎம்ஜெ திருமண மனடப்பதில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில மண்டல மாவட்ட நகர ஒன்றிய பாசறை பொறுப்பாளர்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். காலையில் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மண்டல மாநில பொறுப்பாளர்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள் குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். உணவு இடைவேளைக்கு பிறகு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் இப்பொதுக்குழு…

    • 32 replies
    • 3.7k views
  7. திமுக தனித்துப் போட்டியிட்டு ஒரு சில தொகுதிகளில் வென்றாலும் அரசமைக்கும் கட்சியுடன் ஒட்டித் தன மக்கள் பேரப்பிள்ளைகளுக்கு மந்திரி பதவி கொடுக்கலாம் என்று கருணாநிதி கண்ட கனவில் மண் விழுந்துவிட்டது. அம்மா தன் சொந்த வாக்கு வங்கியை நம்பிக் களமிறங்கி பெருவெற்றியைப் பெற்றுள்ளார். பா ஜ கவின் பெருவெற்றி அவரின் பிரதமர் கனவில் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தாலும் மாநில அளவில் தன் செல்வாக்கை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். பா ஜ கவின் வெற்றியைக் கணித்துக்க் கொண்ட தமிழ் நாட்டின் உதிரிக் கட்சிகள் அம்மாவின் பலத்தை சரியாகக் கணிக்கத் தவறிவிட்டார்கள் வைகோ என்றும்போல தனது கூட்டணியைத் தவறாக அமைத்துக்கொள்ளவில்லை. பா ஜ க வின் கூட்டணியில் வைகோ தோல்வியடைந்தாலும் நாடளாவிய ரீதியில் அவருடைய கூட்…

  8. ஒரு குரலை இந்தியாவின் ஜனநாயகம் தவிர்க்கவே முடியாது. அந்தக் குரலின்றி இந்தியாவின் வண்ணங்கள் தொடரும் முழுமை பெறாது... ஐரோம் ஷர்மிளா. நாம் வாழும் காலத்தின் உலகின் தன்னிகரற்ற போராளி அவர்; நாம் வாழும் காலத்தின் உலகின் தன்னிகரற்ற போராட்டம் அவருடையது. மணிப்பூர் சிக்கல்கள் ஒரு மாநிலம் எவ்வளவு அழகாக இருக்க முடியும்; எவ்வளவு போதாமைகளோடு இருக்க முடியும்; எவ்வளவு சிக்கல்களோடு இருக்க முடியும்… அவ்வளவுக்கும் உதாரணமாக இந்தியாவில் இரு மாநிலங்களைக் குறிப்பிடலாம். ஒன்று காஷ்மீர். இன்னொன்று மணிப்பூர். மணிப்பூரிகளில் மூன்றில் ஒருவர் ஏதேனும் ஒரு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். மீத்தேய் என்று ஓரினம். அதில் மட்டும் ஐந்து பிரிவுகள். மீத்தேய் சனமாஹி, மீத்தேய் இந்துக்கள், மீத்தேய் பிராமணர்கள், மீ…

  9. நாளைக்கும் நிலவு வரும்…. றமணன் சந்திரசேகரமூர்த்தி:- 14 மே 2014 நம்பிக்கைகளுக்கும் நம்பிக்கையீனங்களுக்கும் இடையில் அகப்பட்டு நிற்கின்றது தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம். தமிழர்களின் அரசியல் இலக்குகளை வெற்றி கொள்ளக் கூடிய தளமாக விளங்கும் புலத்தின் மீதான கவனத்தை இலங்கை அரசாங்கம் கூர்மைப்படுத்தியுள்ளதை அண்மைய நகர்வுகள் மூலம் தெளிவாக உணர முடிகின்றது. புலத்தில் செயல்படும் முக்கிய தமிழ் அமைப்புகளையும் தமிழ் பிரதிநிதிகளையும் தடை செய்வதான அறிவிப்பின் பின்னால் உள்ள அரசியல் மிகவும் நுட்பமானது. இது புலத்தில் வாழும் சாதாரண தமிழ் மக்களை குழப்பிவிடும் ஒரு உத்தியாகவே நோக்கப்பட வேண்டும். தற்போது தீவிரமாக அரசியல் செயல்பாடுகளை மேற்கொண்டுள்ள முக்கியமானவர்களின் பெயர்களை கொண்ட…

  10. இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே.. இளங்கோவன்.ச // 12 May 2014 பேராசிரியர் இராமு மணிவண்ணன் எழுதிய "யானையை மறைக்கும் இலங்கை" நூலின் பெங்களூர் அறிமுக கூட்டமும், முள்ளிவாய்க்கால் பேரழிவின் ஐந்தாமாண்டு நினைவு கூட்டமும் இன்று(மே 11) காலை 10.30 மணிக்கு பெங்களூர் தமிழ் சங்கத்தில் "போர்க்குற்றம் இனப்படுகொலைக்கு எதிரான மன்றத்தின்" கர்நாடக பிரிவின் சார்பாக நடத்தப்பட்டது. முள்ளிவாய்க்கால் பேரழிவின் ஐந்தாமாண்டும், நம்முன் உள்ள கடமைகளைப் பற்றி கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த தோழர்.சண்முகம் பேசினார். ஈழ விடுதலை போராட்டத்தில் தமிழகத்தில் பின்னடைவதற்கான காரணம், நமக்குள் ஒற்றுமையில்லை, சாதியாலும், அரசியலாலும் நாம் வேறுபட்டுள்ளோம். தமிழக அரசியல் கட்சிகளான திமுக, அதி…

    • 0 replies
    • 723 views
  11. அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷவை தோற்;கடிப்பதற்காக எதிர்க் கட்சியின் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பான விவாதம் வலுப்பெற்று வருகிறது. பொது வேட்பாளராக வட மாகாண முதலமைச்சரும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரனை நிறுத்த வேண்டும் என்றதோர் கருத்தும் இப்போது முன்வைக்கப்பட்டுள்ளது. அரசியல் விமர்சகர்; குசல் பெரேராவே முதன் முதலில் இக் கருத்தை முன்வைத்தார். அதனை அடுத்து கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான மனோ கணேசனும் …

  12. புலம்பெயர்ந்த தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ்கிறார்கள் - அரசறிவியல் பேராசிரியர் [ வெள்ளிக்கிழமை, 09 மே 2014, 07:55 GMT ] [ நித்தியபாரதி ] இந்தியாவைப் போலல்லாது, அபிவிருத்தியடைந்த நாடுகளில் புகலிடக் கோரிக்கை என்பது குடியுரிமை பெறுவதற்கான முதலாவது படிமுறையாகக் காணப்படுகிறது. அபிவிருத்தியடைந்த நாடுகளின் குடிப்பரம்பலில் சிறிலங்காத் தமிழர்கள் நிரந்தரமானவர்களாகக் காணப்படுகின்றனர். இவ்வாறு The New Indian Express ஆங்கில ஊடகத்தில் முன்னாள் அரசறிவியல் பேராசிரியர் V Suryanarayanan* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் இடம்பெற்ற பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வ…

  13. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதியும் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களும் (1): பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா சுருக்கம் இக்கட்டுரை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதி மற்றும் சமூக விலக்குப்பற்றியதொரு ஆய்வுக் கற்கையாகும். இக்கற்கையின் முன்னைய பகுதி வரலாற்றுரீயாக இடம்பெற்ற இரண்டாம்தரத் தகவல்களிளன அடிப்படையாகக் கொண்டது. ஏனைய பகுதிகள் யாழ்ப்பாணத்தில் உள்ளுரில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழும் மக்களின் ஒரு பகுதியினரை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுத் தரவுகளினைப் பகுப்பாய்வு செய்வதாக அமைகின்றன. உள்ளுரில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழும் மக்களில் பஞ்சமர் என அழைக்கப்படும் மரபரீதியாக ஒடுக்கப்பட்ட சாதிகளின்…

    • 3 replies
    • 1.7k views
  14. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை கட்சியாகப் பதிவு செய்தல், சர்வதேச விவகாரங்களைக் கையாள்வதற்காக உயர்மட்டக்குழு நியமனம் என்று கூட்டமைப்பின் திடீர் ஞானோதயத்தின் தொடராக கூட்டமைப்பு அலுவலகங்கள் திறக்கும் நிகழ்வுகளும் தொடங்கியுள்ளதன் பின்னால் உள்ள சூத்திரத்தன்மைகள் தொடர்பில் மக்களைத் தெளிவுறுத்தவேண்டிய கடப்பாடு உணரப்பட்டுள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்டத் தலைமைகளாகச் சொல்லப்படுகின்ற இரா.சம்பந்தன், சி.வி.விக்னேஸ்வரன், தேசியப்பட்டியல் சுமந்திரன் ஆகியோரைத் தமிழ் மக்களின் தலைமைகளாகத் தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு தமிழ் மக்கள் விரும்புகிறார்களோ இல்லையோ சிங்கள இனவாத அரசாங்கம் விரும்புகின்ற வகையிலேயே குறித்த அரசியல்வாதிகள் மூவரும் தொடர்ந்தும் செயற்பட்டுவருகின்றனர். இந் நிலைய…

    • 0 replies
    • 684 views
  15. ஜெனீவா தீர்மானம்: இனிமேல் நடக்கப்போவது என்ன? முத்துக்குமார் ஜெனீவாவில் இந்தத் தடவை கழுத்துமுறிப்பு இடம்பெறாது, சற்று வலிமையான காதுதிருகல்தான் இடம்பெறும் என முன்னரும் இப் பத்தியில் கூறப்பட்டுள்ளது. அதுதான் உண்மையில் நடைபெற்றிருக்கின்றது. தீர்மானத்தின் ஆரம்பத்தில் இலங்கை அரசாங்கம் நம்பகரமான, சுதந்திரமான விசாரணையை நடாத்தவேண்டும் எனக் கூறியிருந்தது. இறுதியில் மனித உரிமை ஆணையாளர் சுதந்திரமான விரிவான விசாரணையை மேற்கொள்ளவேண்டும் எனக் கூறியுள்ளது. இவ்வாறு இரு இடங்களில் விசாரணை பற்றி கூறியதன் அர்த்தம், இலங்கை அரசாங்கம் சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ளாவிடில்தான் மனித உரிமை ஆணையாளர் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தல் வேண்டும் என்பதே. இதன்படி பார்த்தால் இலங்கை அரசாங்கத்திற்கு மீ…

  16. Apparently, the relationship between the two countries (cricket aside) genuinely could not be closer. Photograph: /Sri Lankan High Commission In Australia (http://www.theguardian.com/commentisfree/2014/may/08/australian-silence-on-human-rights-is-our-gift-to-sri-lanka) இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் புன்முறுவலுடன் அவுஸ்திரேலிய குடிவரவு, எல்லைப் பாதுகாப்பு அமைச்சருக்கு டில்மா தேயிலைப் பெட்டியை அன்பளிப்பாக வழங்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு இதயசுத்தியுடனான நெருக்கத்தைக் கொண்டிருக்க முடியாதென (கிரிக்கெட்டுக்கு அப்பால் ) தென்படுகிறது. தமது பெற்றோரின் கலாசாரத்திற்குப் புறம்பான கலாசாரத்தில் வளரும் குழந்தைகள், தாங்கள் எந்த நாட்டைச் சா…

    • 0 replies
    • 500 views
  17. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குரிய அதிகார உரிமை தங்களுக்கே இருப்பதால் அப் பெயரைப் பயன்படுத்தும் உரிமையைப் பெற்றுத் தருமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற அமைப்பு தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகப் பத்திரிகைகள் மூலம் அறியக் கிடைக்கின்றது. குறித்த கோரிக்கைக் கடிதத்தின் உள்ளடக்கத்தை வாசித்த போது நாற்பதாண்டு காலத்திற்கு முந்திய உண்மை வரலாற்றை வெளிப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. உண்மை தெரிந்திருந்தும் அதை வெளிப்படுத்தாது விடுவது சமுதாயத்திற்குச் செய்யும் துரோகம் என்றாலும் அது தவறல்ல. பல்வேறு வழிகளில் பின்னடைவுகளைச் சந்தித்து வரும் நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து விட்ட தவறுகளைச் சீர்செய்து,ஏற்படுத்தப்பட்ட தடைகள் இனியும் ஏற்படாமல் இருக்க வழி காண்பதே…

    • 0 replies
    • 686 views
  18. சம்பந்தருக்கு பின்னரான தமிழர் அரசியல்? அ. நிக்ஸன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் பொறுப்பில் இருந்து விலகிச் செல்கின்றது. நிவாரண அரசியலுக்கு வாக்களிக்காமல் கொள்கை அரசியலுக்கு வாக்களித்த மக்களுக்கு கூட்டமைப்பு கொடுத்த நம்பிக்கை என்ன என்ற கேள்விகளைத் தவிர வேறு எதுவும் விஞ்சிக் காணப்படவில்லை. ஜெனீவா தீர்மானம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயற்பாட்டால் வந்தது என கூட்டமைப்பில் உள்ள சிலர் கூறுகின்றனர். ஜெனீவா தீர்மானத்திற்கு கூட்டமைப்பு கூடுதல் பங்காற்றியது என சுமந்திரன் நேரடியாகவே கூறுகின்றார். இறுதிக்கட்ட போரில் சரணடைந்தவர்களை கண்ட நேரடியான சாட்சியம் என்று அனந்தி சசிதரன் கூறுகின்றார்; ஜெனீவாவில் அனைத்தையும் கூறியதாகவும் அவர் சொல்கிறார். கூட்டுப்பொறுப்பு எங்…

  19. பழைய யாழ்க்களத்தில் இருந்த சில தலைப்புக்களை மீண்டும் இங்கே இணைகிறேன் புதிதாக வந்தவர்களுக்காக. எமது அரசியல் வரலாற்றை புரிந்து கொள்ள வேண்டுமானால் திராவிட இயக்கத்தின் தோற்றுவாயையும் அதற்கான காரணங்களையும் தெரிந்து கொண்டால் தான் அது எங்கணம் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தாக்கம் செலுத்துகிறது என்பதையும் புரிந்து கொள்ளமுடியும்.இங்கே ஒருவர் வரலாறு தெரியாமல் அல்லது தெரிந்து கொண்டே திரிப்பதற்காக சில விசமத் தனமான சொல்லாடல்களை திராவிட அரசியல் சம்பந்தமாகச் செருகி வருகின்றார்.மேலும் இங்கு இது சம்பந்தமாக அறிய பலர் ஆவலாக இருப்பதாகப் புலப்படுகிறது. பெரியார்! http://www.yarl.com/forum/viewtopic.php?t=10028 திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு -**…

    • 1 reply
    • 23k views
  20. பலன்தருமா கூட்டமைப்பின் குழுக்கள்? செல்வரட்னம் சிறிதரன் 03 மே 2014 பெரும்பான்மையான தமிழ் மக்களின் அரசியல் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பலமுள்ள ஓர் அமைப்பாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்கள் மத்தியில் நீண்டகாலமாகவே நிலவி வருக்கின்றது. கூட்டமைப்பு இறுக்கமான ஓர் அரசியல் அமைப்பாக இல்லையே என்ற ஆதங்கம் தமிழ் மக்கள் மத்தியில் யுத்தம் முடிவுக்கு வந்த காலம்தொட்டு தொடர்ந்து கொண்டிருக்கின்றது. நான்கு அல்லது ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கென்று தனியான சின்னம் கிடையாது. யாப்பு கிடையாது. ஒரு கட்டமைப்பென்பதே கிடையாது. கூட்டமைப்பு என்று கூடி பேசுவார்கள். விவாதிப்பார்கள். கடுமையாக மோதிக்கொள்வார்கள். தீர்மானங்களைக் கூட நிறைவேற்ற…

  21. சிறிலங்கா மீது அமெரிக்கா மனித உரிமைக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததன் பின்னர், தற்போது சிறிலங்காவில் மீளிணக்கப்பாடு சவால்மிக்கது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளமை சிந்திக்க வேண்டிய விடயமாகும். இவ்வாறு கொழும்பை தளமாகக் கொண்ட The Sunday Leader ஆங்கில ஊடகத்தில் N Sathiya Moorthy* எழுதியுள்ள ஆரசியல் ஆய்வில் தெரிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. மொழியாக்கத்தின் முதல்பகுதி இது. "சிறிலங்காவின் மீளிணக்கப்பாடு என்பது சவால் மிக்கதாக உள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ள போதும், இது தனது உள்நாட்டுப் போரை நிறைவுக்குக் கொண்டுவந்தமை அதன் நல்வாய்ப்பாகும். இவ்வாண்டு மார்ச் மாதத்தில் சிறிலங்கா மீது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம்…

  22. மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தையும் ஹம்பாந்தோட்டை ருஹூணு மாகம்புர துறைமுகத்தையும் நேரடியாக பார்வையிட்டு தகவல் திரட்டுவதற்காக அவ்விரண்டு இடங்களுக்கும் கடந்த 17ஆம் திகதி சென்ற ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது குண்டர்கள் முட்டை வீசியும் அவர்களை மிரட்டியும் இம்சிப்பதை தொலைகாட்சித் திரைகளில் நாடே கண்டது. அந்த குண்டர்கள் மத்தியில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயைச் சேர்ந்த ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்னாண்டோவும் இருப்பதையும் நாட்டு மக்கள் கண்டனர். ஆனால் இந்த தாக்குதலுக்கு தமது கட்சி பொறுப்பல்ல என்றும் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை ஐ.தே.க. விமர்சிப்பதனால் ஆத்திரமுற்ற சாதாரண மக்களே இந்த எம்.பிக்களை தாக்க முற்பட்டுள்ளனர் என…

    • 0 replies
    • 732 views
  23. இங்கு அமைக்கப்பட்டுள்ள போர் நினைவகமானது எந்தவொரு வெற்றியையும் மக்கள் மனதில் பதிக்கவில்லை. மாறாக கணவன்மார், பிள்ளைகள் மற்றும் சகோதரர்களை இழந்த மக்களின் கசப்பான தோல்வியாகவே இது காணப்படுகிறது. இவ்வாறு சென்னையில் இருந்து வெளியாகும் The Hindu ஆங்கில நாளேட்டில் ஜேர்மனியை சேர்ந்த ஆய்வாளர் Gerrit Kurtz* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அதன் விபரமாவது: வன்னியில் இராணுவ வீரர் ஒருவர் ஒரு கையில் ஏ.கே 47 ரகத் துப்பாக்கியுடனும் மறுகையில் சிறிலங்காக் கொடியுடனும் நிற்பதைச் சித்தரிக்கின்ற வகையில் கல்லால் சிலை செதுக்கப்பட்டுள்ளது. இயந்திரத் துப்பாக்கியில் புறா ஒன்று அமர்ந்துள்ளது. தமிழ்ப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவ…

  24. ‘பித்துப் பிடித்த பிக்கு’ நிலைமை: சிங்கள – பௌத்தவாதத்தின் இழிந்த பக்கமாக பொதுபலசேனா ஒரு நீண்ட அரசியல் கயிற்றில் பிணைக்கப்பட்டிருந்ததாகக் காணப்பட்ட, இந்த காட்டுமிராண்டி பௌத்த பிக்குகள், கட்டுப்பாடு இழந்து போயுள்ளனர். அவர்கள் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும். ஆனால், பொதுபலசேனா போன்ற குழுக்கள் பிரதிநிதித்துவம் செய்ய வந்துள்ள நிலைமை பிரதிபலிக்கின்ற சிக்கலான நிலையின் மீது ஒரு கடுமையான பார்வையைச் செலுத்துவதும் கூட அதிகளவுக்கு அவசியமாகின்றது. இது ஒன்றும் வேடிக்கை விநோதக் காட்சியல்ல, இது போருக்குப் பிந்திய இலங்கையின் அப்பட்டமான ஒரு நெறிமுறைப் பிறழ்வாகும்; அத்தோடு பொதுபலசேனா ஒரு சில மாத காலங்களிற்குள் அழிந்து போய்விடும் என எதிர்வு கூறிய வணக்கத்திற்குரிய. தம்பர அமில தேரர் (ம…

  25. பொலிஸாகும் பொது பலசேனா - செல்வரட்னம் சிறிதரன்:- 26 ஏப்ரல் 2014 நாட்டில் யுத்தம் முடிவடைந்துள்ளது என்று சொல்லப்படுகின்றது. உண்மையில் துப்பாக்கிச் சண்டைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனவே தவிர, மோதல்கள் இன்னும் தொடரத்தான் செய்கின்றன. சத்தமின்றி, கத்தியின்றி இந்த மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதிகார பலம் என்ற ஆயுதமும், பெரும்பான்மை என்ற பலமும் இந்த மோதல்களில் தாரளமாகப் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் சிறுபான்மையினராக இருக்கின்ற மக்களும், சிறுபான்மை மதத்தவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். நாட்டில் சட்டங்கள் இருக்கின்றன. ஒழுங்கு விதிகள் இருக்கின்றன. சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்படுவதாகவும், அதற்குப் பொறுப்பாக பொலிசாரும், பொலிசாருக்கு உதவியாக இரா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.