Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தமிழ்த் தேசிய அரசியலில் மாற்றுத் தலைமை சாத்தியமா? ‘மாற்றுத் தலைமை’ ஒன்றை உருவாக்குவதற்கான வாய்ப்பை, தமிழ்ச் சமூகம் இழந்து வருகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சமகால அரசியல் கள நிலைவரங்களும் மக்களுடைய புரிதலும் இந்தக் கேள்வியை எழுப்பக் காரணமாகியுள்ளன. புதிய தலைமையை எதிர்பார்த்திருந்த மக்களுக்கும் அரசியற் சூழலுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும் விதமாகவே நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. “இந்தா வருகிறது; அந்தா வருகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே, அந்த மாற்று அணி எங்கே?” என்று ஆர்வமுடையவர்கள் கேட்கிறார்கள். இதற்குச் சிலர், சில மாதங்களுக்கு முன்புவரை, தமிழ் மக்கள் பேரவையை அடையாளப்படுத்த முனைந்தனர். சிலர்…

  2. எதிர்க்கட்சி அரசியல் பண்பாடு sudumanalNovember 13, 2023 கீழைத்தேய பண்பாட்டு கட்டமைவுள் உணர்வுசார் அல்லது உணர்ச்சி சார் வெளிப்பாடுகள் தூக்கலாகவே தெரிவதுண்டு. அது மனிதப் பெறுமதி கொண்ட பண்பாற்றலாகும். அதேநேரம் இது அரசியல் தளத்தில் உணர்ச்சிவாத அரசியலுக்கு (emotional politic) சாதகமானதாக அமைந்து, அறிவை பின்னுக்குத் தள்ளுகிற செயற்பாட்டை நிகழ்த்துகிறது. இலங்கையைப் பொறுத்தவரை தமிழ் மக்களும் 70 களிலிருந்து இதற்குள் அகப்பட்டு சுழன்றிருக்கிறார்கள். அது இப்போதும் தொடர்கிறது. எமது அறிவை மீறி இன்றைய என்பிபி அலையினுள் எமது உணர்ச்சிவாத அரசியல் மூழ்கிப் போயிருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது. இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடு. பருண்மையாக இங்கு சிங்கள மக்கள், வடக்க கிழக்க…

  3. “சோபையிழந்த பிரச்சாரப் போரும்” “தானா சேர்ந்த கூட்டமும” “மாவையின் ஐந்து தம்பிகளும்” “தூய கரம் தூய நகரமும்” நிலாந்தன்.. தேர்தல் நடப்பதற்கு கிட்டத்தட்ட மூன்று கிழமைகளே உள்ளதோர் நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் பெருமளவிற்கு சூடு பிடிக்கவில்லை. தேர்தல் கூட்டங்களும் விறுவிறுப்பாக இல்லை.இதுவரையிலுமான பிரச்சாரங்களில் பெருமளவுக்கு அதிர்ச்சியூட்டும் புத்தாக்கத்தைக் காண முடியவில்லை. பிரச்சாரக் கோஸங்களிலும் கவரத்தக்க படைப்புத் திறனை பெருமளவுக்குக் காண முடியவில்லை. இதில் கஜன் அணியின் யாழ் மாநகர சபைக்கான கோஸமாகிய ‘தூய கரம் தூய நகரம்’ என்பது படித்த நடுத்தர வர்க்கத்தை அதிகம் கவர்ந்திருக்கிறது. அதுபோல சங்கரி- சுரேஸ்- சிவகரன் அணியிலுள்ள சிவகரனின் ‘மாவை வைத…

  4. பிரதமர் ரணில் தப்பிப் பிழைத்துவிடுவார்? நாட்டில் திடீர் திடீ­ரென அர­சியல் பூகம்­பங்கள் ஏற்­ப­டு­வதும் பின்னர் அவை புஸ்­வா­ன­மாகப் போய்­வி­டு­வதும் நாட்டு மக்கள் அனை­வரும் அறிந்த விட­ய­மாகும். அந்­த­வ­கையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை இன்று, நாளை என்று ஆரம்­பித்து ஒரு­வாறு எதிர்­வரும் 4ஆம் திகதி விவா­தத்­துக்கு எடுப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­ய­விடம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ கைய­ளித்­துள்ளார். எனினும் குறித்த பிரே­ர­ணையில் மஹிந்த ராஜபக் ஷ கையொப்பம…

  5. தீவிரமடையும் நெருக்கடி? – நிலாந்தன். ஜூலை மாதத்தின் பின் நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என்று ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்ட சில நாட்களில் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார்.அவர் கூறியது இப்பொழுது நடக்கின்றது. இதன் பொருள் அவர் ஒரு தீர்க்கதரிசி என்பதல்ல. அல்லது ஐலண்ட் பத்திரிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் எழுதியது போல மெய்யாகவே அவர் ஞானக்காவின் மச்சான் என்பதுமல்ல.மாறாக அரசியல் பொருளாதாரத்தை ஓர் அறிவியல் ஒழுக்கமாக அணுகும் எவருக்கும் அது மிகத் தெளிவாகவே தெரியும்.எப்பொழுது நெருக்கடி வரும்? எப்படிப்பட்ட நெருக்கடி வரும்? என்பது.அதைத்தான் ரணில் விக்கிரமசிங்க வெளிப்படையாக தெரிவித்தார். ஆனால் அவ்வாறு சாத்திரம் கூறுவது மட்டும் அவருடைய வேலை அல்ல. அதற்கும் அப்பால் மக்…

  6. தமிழ் தரப்­புக்­க­ளுக்கு மக்கள் வழங்­கிய ஆணை இந்த நாட்டில் 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டதில் இருந்து தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் அணு­கு­மு­றை­களில் மாற்றம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. 2009 ஆம் ஆண்டு தமிழ் மக்­களின் உரி­மைக்­கான ஆயுதப் போராட்டம் மௌனிக்­கப்­பட்ட பின்னர் அந்த மக்­களின் உரிமை கோரிக்­கையை தொடர்ச்­சி­யாக ஜன­நா­யக ரீதி­யாக முன்­னெ­டுக்க வேண்­டிய பாரிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தோள்­களில் விழுந்­தி­ருந்­தது. மாறி­வந்த சர்­வ­தேச சூழலை அதா­வது இறுதிப் போரின் போது இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனிதஉரிமை மீறல்கள்,போர்க்­குற்­றங்கள் என்­ப­வற்றை மூல­த­ன­மாகக் கொண்டு தமிழ் மக்­க­ளது அடிப்­படை பிர­ச­்­சி­னைகள் தொடக்கம் நிரந்­தர …

  7. COLUMNSசிவதாசன் ‘சனல் 4’ விவகாரம்: ராஜபக்சக்களின் அதிர்ஷ்டம் சிவதாசன் “‘சனல் 4’ ராஜபக்சக்களுக்கு எதிராக வன்மத்துடன் செயற்படுகிறது” என்கின்றனர் ராஜபக்ச குடும்பத்தினர். “‘சனல் 4’ புலம் பெயர் தமிழர்களுக்கு ஆதரவாக இயங்குகிறது என்கிறார் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச. “உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு காரணமானவர்களைக் கண்டுபிடிக்க சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதற்கு இலங்கை தயார்” என்கிறார் ஜனாதிபதி விக்கிரமசிங்க. போதாததற்கு நாட்டை விட்டுத் தப்பியோடி மீள வந்த வாயில்லாப் பிராணி கோதாபயவையே வாய் திறக்க வைத்துவிட்டது ‘சனல் 4’. சூத்திரதாரி மஹிந்த அதிர்ஷ்டம் தன்னை நோக்கி ஓடிவருவதைப் பார்த்து எகத்தாளமாகச் சிரித்துக்கொண்டிருக…

  8. Published By: VISHNU 26 JUN, 2024 | 04:35 AM நடாஷா குணரத்ன அபிவிருத்தி அடைந்துவரும் நாடொன்று, மிகவும் சிக்கலான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. வேலையின்மை நிலை அதிகரித்து வருகின்றது, ஆனால் பணவீக்கம் அதனைவிட மிகவும் வேகமாக அதிகரித்து வருகின்றது. தேசிய வங்கிகளில் வெளிநாட்டு நாணய இருப்பு வெறுமையாக உள்ளது. எரிபொருள் மற்றும் எரிவாயு இருப்புக்களும் அவ்வாறே உள்ளன. சர்வதேச நிதி நிறுவனங்கள் இதுபற்றி தட்டிக் கேட்டன. அ) நிதி உறுதியற்ற தன்மை அல்லது ஆ) பணம் செலுத்துவதில் உள்ள இயல்புநிலை இ) மேற்குறித்த இரண்டு விடயங்களாலும் ஏற்பட்ட அரசியல் அமைதியின்மை குறித்து அவர்கள் மகிழ்ச்சியடையவில்லை. தனிப்பட்ட கலந்துரையாடல்களில், அரசாங்கங்களின் அட…

  9. எஞ்சி உள்ள ஒரு வருடத்தை அமைதியாக கொண்டு செல்ல என்ன வழி? http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-08-27#page-10

  10. கேப்பாபுலவு உணர்த்திய பாடம்:போராட்டக்களத்தில் மாணவர்களின் தேவை பாரம்பரிய உரிமைகளுக்காகவும் இறைமைக்காகவும் போராடும் இனக்கூட்டமொன்றுக்கு நிலமும் அதுசார் ஆட்சியுரிமையும் அடிப்படையானது. அந்த வகையில், தமிழ்த் தேசியப் போராட்டத்தில், ‘நில மீட்புக்கான போராட்டம்’ என்பது ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான பெரும் குறியீடு. அதன் வெற்றியும் தோல்வியும் தமிழ்த் தேசியப் போராட்டத்தின் ஒட்டுமொத்த வடிவத்திலும் பெரும் தாக்கம் செலுத்தவல்லது. அதனைக் கடந்த எழுபது ஆண்டுகாலப் போராட்ட வரலாற்றில் தமிழ் மக்கள் கண்டிருக்கின்றார்கள். குறிப்பாக, 2009 மே மாதத்துக்குப் பின்னரான நாட்கள் அதன் பெரும் படிப்பினை. ஆயுதப் போராட்டத்தின் முடிவுக்குப் பின்னரான நாட்கள…

  11. ஒக்டோபர் வெளியேற்றம்; ஒரு மொழிச் சமூகச் சவால்கள்! -சுஐப் எம். காசிம்- மூன்றாவது இனத்தின் அடையாளத்தை வெளிப்படுத்திய வடபுல முஸ்லிம்களின் ஒக்டோபர் வெளியேற்றம், இப்போது மூன்று தசாப்த காலத்தை எட்டி நிற்கின்றது. விடுதலைப் போராட்டத்துக்கு வேண்டாதவர்கள் அல்லது வேறு ஒரு காரணத்துக்காகவே இவர்கள் வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். எந்தக் காரணங்களானாலும், தமிழர்கள் என்ற அரசியல் அடைமொழிக்குள் இந்த முஸ்லிம்களை உள்வாங்க வடக்கு, கிழக்கு விடுதலைப் போராளிகள் விரும்பியிருக்கவில்லை. ஏன், இந்த விருப்பமின்மை ஏற்பட்டதென்று இன்றுவரைக்கும் தமிழ் மொழி மண்ணில் விவாதங்கள் இடம்பெறவே செய்கின்றன. முட்டை முதல் வந்ததா? அல்லது கோழி முதல் உயிரெடுத்ததா? என்ற பாணியில் அமைந்துள்ள இந்த விவாதங்கள்தான…

  12. அமையப்போகும் அரசியலமைப்பு மக்கள் தீர்ப்பால் அங்கீகரிக்கப்படவேண்டும் என கூறுவது ஏன்? http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-11#page-19

  13. தமிழர் அரசியலும் முதலமைச்சர் விக்ஸ்வனேரனும் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-06-25#page-11

  14. உக்ரேன் ஆயுத உற்பத்தியாளர்களின் பரீட்சைக் களம் ? By DIGITAL DESK 5 13 AUG, 2022 | 12:13 PM சுவிசிலிருந்து சண் தவராஜா ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்களைக் காப்பதற்காகவும், ஜனநாயகத்தை மீட்பதற்காகவும் போர் புரிவதாக உக்ரேன் தரப்பிலும், அந்த நாட்டுக்கு ஆதரவாகச் செயற்படும் மேற்குலகின் சார்பிலும் முன்வைக்கப்படும் பிரசாரங்களைப் பொய்ப்பிக்கும் வகையிலான அறிக்கை ஒன்றை சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ளது. 'உக்ரேன்: குடிமக்களைப் பாதிக்கும் உக்ரேனின் போர்த் தந்திரங்கள்" என்ற தலைப்பில் ஆகஸ்ட் 4ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு முரணாக உக்ரேன் நாட்டுப் படையினர் பல சந்தர்ப்பங்களில் செயற்ப…

    • 0 replies
    • 338 views
  15. மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க்கும் முன்னாள் UNP உறுப்பினர் மதிராஜ்

  16. இமாலயப் பிரகடனம்-எடுப்பார் கைப்பிள்ளையாக இலங்கைத் தமிழர் பிரச்சினை படும்பாடு December 19, 2023 — தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் — (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்) தமிழீழ விடுதலைப் புலிகளின் மிகத் தீவிரமான முகவராகச் செயற்பட்ட ‘உலகத் தமிழர் பேரவை’ (Global Tamil Forum) கடந்த ஏப்ரல் மாதம் நேபாள தலைநகர் காத்மண்டுவில் வைத்து ‘சிறந்த இலங்கைக்கான சங்க’ப் பௌத்த குருமார்கள் சிலருடன் இணைந்து ‘இமாலயப் பிரகடனம்’ என்ற பெயரில் 27.04.2023 திகதியிட்ட ஒரு கூட்டுப் பிரகடனத்தைத் தயாரித்து அதனை இப்போது இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் 07.12.2023 அன்று கையளித்துள்ளது. இப்பிரகடனத்தில் மாகாண மட்டத்தில் போதுமான அதிகாரப் பகிர்வினை உறுதிப்படுத்தும் புதிய அரசியல…

  17. Published By: RAJEEBAN 18 JUN, 2025 | 12:23 PM By Jeevan Ravindran இலங்கையின் வடபகுதியின் தலைநகரமான யாழ்ப்பாணத்தில் மிகவும் மும்முரமான வீதியிலிருந்து 100 மீற்றர் தொலைவில் இரண்டு பொலிஸார் சுடலையின் இரண்டு துருப்பிடித்துப்போன நிறத்தில் உள்ள கேட்களின் பின்னால் நின்று அவதானித்தவண்ணமுள்ளனர். இலங்கையில் மிகச்சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிக்கு பாதுகாப்பளிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இந்த புதைகுழியிலிருந்து இதுவரை 3 குழந்தைகள் உட்பட 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பாரிய மனித புதைகுழிகள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை இலங்கை தமிழர்களின் காயங்களை மீள கிளறியுள்ளது.இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழர்களிற்கு தனிநாடு கோரிய பிரிவினைவாத தமிழீழ விடுதலை…

  18. புள்ளடிகளும் சிலுவைகளும் தடைகள் எவையும் ஏற்படாது விட்டால் எப்படியும் எதிர்வரும் ஜனவரியில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடக்கும் என்கிற நம்பிக்கை எல்லாத் தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையின் உத்வேகத்தில், அரசியல் கட்சிகள் பிரதேச அமைப்பாளர்களைத் தீவிரமாக நியமித்துக் கொண்டிருக்கின்றன, ஊருக்குள் அனைத்துத் திசைகளிலும் கட்சிக் காரியாலயங்கள் புதிது புதிதாய் முளைக்கத் தொடங்கியுள்ளன. கட்சிகளில் அதிகாரம் மிக்கவர்கள் தீர்மானிப்பதற்கு முன்பாகவே, அந்தந்தக் கட்சி ஆதரவாளர்கள், தமக்கான அபேட்சகர்கள் யாராக இருக்க வேண்டும் என்பது பற்றிப் பேசிக் கொள்கின்றார்கள். மொத்தத்தில் ஒவ்வொரு ஊரிலும் தேர்தல் சூடு தொடங்க…

  19. ரஜ லுணுவும் ஆனையிறவு உப்பும் வை.ஜெயமுருகன் சமூக அபிவிருத்தி ஆய்வாளர் ஆனையிறவு உப்பளத்தில் புதிதாக பூத்த மறு உற்பத்தியாகும் ‘ரஜ லுணு’ வின் அறிமுகம் பலர் மத்தியில் ஒரு விவாத நிலையை உருவாக்கியுள்ளது. ‘ரஜ லுணு’ வின் பெயர் தான் இங்கு விவாதப்பொருள். ‘ஆனையிறவு உப்பு’ என்பதுதான் பொருத்தமான பெயர் என்றும் பல குரல்கள் வருகின்றன. மிக முக்கியமான உப்பு உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் முன்னெடுப்பு புதிதாக உருவாகும் போது, இவ்வாறான விவாதங்கள் ஒரு பின்னடைவைத் தரும் எனக் கருதுவோரும் உண்டு. விவாதங்கள் நல்ல முன்னெடுப்புக்களை கொண்டுவரும் என்று எண்ணுவோரும் உண்டு. உண்மையில், புதிதாக உருவாகிய உற்பத்தி ‘ரஜ லுணு’ வும் அதற்குரிய பெயராக முன்மொழிந்துள்ள ‘ஆனையிறவு உப்பு’ என்னும் சொற்கள் வேறுபாடுடை…

  20. பயன்தராத பழையவற்றுக்கு மீண்டும் செல்வதற்கு எந்தக் காரணமும் இல்லை. பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத்தினாலும் கடன்களை மீளச் செலுத்துவதிலுள்ள பிரச்சினைகளினாலும் தோற்றுவிக்கப்படுகின்ற சவால்களையும் நோக்கும்போது அரசாங்கம் கவனம் செலுத்துவதற்கு கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த பல விவகாரங்கள் இருக்கின்றன. -பேராசிரியர் ரொஹான் சமரஜீவ- இலங்கை எதிர்நோக்குகின்ற கடன் நெருக்கடியையும் விட அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கே அரசாங்கம் கூடுதல் முக்கியத்துவத்தை கொடுக்கின்றது என்று செய்திகளை பார்க்கும்போது தோன்றுகிறது. 1978அரசியலமைப்பை எதிர்த்தவர்கள் அதிலுள்ள மோசமான அம்சங்களை திருப்பிக்கொண்டு வருவதில் நாட்டம் காட்டுவது விசித்திரமா…

  21. 19 ஆவது திருத்தம் தமிழ் மக்களுக்கு நன்மையானதா? நிலாந்தன் இலங்கைத் தீவின் அரசியல் அமைப்பு 19 ஆவது தடவையாகத் திருத்தப்பட்டுள்ளது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் செய்யப்பட்ட இரண்டாவது திருத்தம் இது. ஆட்சிமாற்றத்தை உருவாக்கிய, அதைப் பின்னிருந்து பலப்படுத்துகின்ற மேற்கு நாடுகளும் இந்தியாவும் இத்திருத்தத்தை வரவேற்றிருக்கின்றன. கூட்டமைப்பும் இத்திருத்தத்தை வரவேற்றிருக்கின்றது. ஜனநாயக அடிப்படைகளை பலப்படுத்த இத்திருத்தம் உதவும் என்று அதை ஆதரிப்பவர்கள் கூறுகிறார்கள். அரசாங்கம் தனது வாக்குறுதிகளில் ஒன்றை ஓரளவுக்கேனும் நிறைவேற்றியிருப்பதாகப் பெருமைப்பட்டுக்கொள்கின்றது. மெய்யாகவே 19 ஆவது திருத்தம் இலங்கைத் தீவின் ஜனநாயக வெளியை பலப்படுத்தியிருக்கிறதா? குறிப்பாக இனப்பிரச்சினைக்…

  22. "ஆசை கடந்த கூட்டு வேண்டும்!" [நவம்பர் 14, 2024 அன்று நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முன்னிட்டு] "கைகளை கோர்த்து நாடகம் போடாதே கைத்தாளம் போட்டு மேடை ஏறாதே கைவசம் பதவியை இறுக்கி பிடிக்க கைமாறு செய்யும் ஊழல் கொண்டு கைவண்ணம் காட்டிடும் ஒற்றுமை வேண்டாம்?" "ஆறு கைகள் ஆராய்ந்து பிடித்து ஆற அமர தெளிவாக முடிவெடுத்து ஆழமான உறவை கொள்கையில் ஏற்படுத்தி ஆக்கமான முடிவில் ஒன்றாக செயற்பட்டு ஆசை கடந்த கூட்டு வேண்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]

  23. கிழக்கு கடலில் தொடரும் கடற்கொள்ளை நூருல் ஹுதா உமர் சோதனை மேல் சோதனையை அனுபவிக்கும் மீன்பிடித்துறை ‘கடலுக்குள் போனால் பிணம்; வெளியே வந்தால் பணம்’ எனும் பழமொழியின் அர்த்தத்தை நம்மில் எத்தனை பேர் அறிந்து வைத்திருக்கிறோம் என்பதுதான் இந்தக் கட்டுரையின் வாசல் கேள்வியாகும். மீன்பிடி என்பது இலங்கையின் கிழக்குப் பகுதியில் எப்போதும் முதன்மையான தொழிலாகவே இருந்து வருகிறது. மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீன்பிடி வள்ளங்கள், இயந்திரங்கள், வலைகள் அடங்கலாக மொத்தம் 50 - 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் தான் கடலில் மிதந்து கொண்டிருப்பது. கடலலையுடன் போராடி, தோணியில் சவலடித்து, காற்றின் திசையறிந்து துடுப்பைச் சுழற்றி, பெரிய இயந்திர படகில் தினமும் மாலையில் கடலு…

    • 0 replies
    • 338 views
  24. பொறுப்பு நிறைவேற்றப்படுமா? ஜன­நா­யகம் நிலை­நி­றுத்­தப்­படும், ஊழல் ஒழிக்­கப்­படும் என்­பதே நல்­லாட்சி அர­சாங்­கத்தின் அடிப்­படைக் கொள்­கை­க­ளாகும். அந்த வகையில் ஜனா­தி­பதி ஆட்சி முறையில் ஜனா­தி­ப­திக்­குள்ள நிறை­வேற்று அதி­கா­ரங்கள் இல்­லா­தொ­ழிக்­கப்­பட்டு, பாரா ளு­மன்றம் சார்ந்து பிர­த­ம­ருக்கு வழங்­கப்­படும். தேர்தல் முறைமை மாற்­றி­ய­மைக்­கப்­படும். இதற்­காக நாட்டில் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­படும் என்­பது நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் மக்­க­ளுக்கு அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­யாகும். இதன் அடிப்­ப­டை­யி­லேயே மக்கள் இந்த அர­சாங்­கத்­திற்கு வாக்­க­ளித்து, ஆணை வழங்­கி­னார்கள். இது பொது­வா­னது. போர்க்­குற்­றங்கள் தொடர்­பான நிவா­…

  25. யூ.எஸ். எயிட் உதவி இடைநிறுத்தமும் இலங்கையின் இரு ட்ரம்ப் விசிறிகளும் February 25, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — மீண்டும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளில் இறங்குவார் என்பது எதிர்பார்க்கப்பட்டதே. ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்ற மறுகணமே அவர் பிறப்பித்த உத்தரவுகள் தொடக்கம் கடந்த ஒரு மாதகாலமாக அவரது நிருவாகத்தின் நடவடிக்கைகள் சர்வதேச கடப்பாடுகளில் இருந்து விலகுவதே அவரது வெளியுறவுக் கொள்கையின் தீர்க்கமான அம்சமாக இருக்கிறது என்பதை மீணடும் தெளிவாக நிரூபித்து நிற்கின்றன. உலக சுகாதார நிறுவனம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் சர்வதேச உடன்படிக்கை ஆகியவற்றில் இருந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.