அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
மலேசிய விமானம் திசை மாறி காணமல்போய் பதுக்கி வைக்கப்பட்டு திருடப்பட்டு கடத்தப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டு விமானி தற்கொலை செய்து புகை வந்து கடலில் வீழுந்து................ உங்கள் கணிப்பு என்ன? பேசலாம் வாங்கோ.......... இதில் உண்மை இருக்கணும் என்றில்லை உண்மையாகவும் இருக்கலாம் உங்கள் ஆராய்ச்சியாகவும் இருக்கலாம் கற்பனையாகவும் இருக்கலாம் ............. எழுதலாமே........ போன கிழமை எனது மகனைக்கேட்டேன் எங்க போயிற்றுது மலேசிய விமானம் என? அவன் சொன்னான் எங்கட கார் பாங்கிங்கில கொண்டு வந்து நிற்பாட்டியிருக்கிறன் நீங்க பார்க்கலையா என? ஒரு விதத்தில் இது பகிடியாக இருந்தாலும் கனக்க அர்த்தம் அதற்குள் இருப்பதால் சிரிக்க முடியல என்னால்....... …
-
- 38 replies
- 3.7k views
-
-
பலம் இருந்தால் தான் இன்றைய உலகில் மதிப்பு இருப்பதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு, வெள்ளவத்தையில், நடந்த மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின், தேர்தல் பரப்புரை கூட்டத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கொழும்பில் வந்து தம்பி மனோ கணேசன் அவர்களின் கட்சிக்; கூட்டத்தில் பேசுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். அரசியலே வேண்டாம் என்றிருந்த எனக்கு இப்பொழுது தான் அரசியல் சூடு பிடிக்கின்றது. அரசியல் மேடை என்பது ஒரு டெனிஸ் விளையாட்டு அரங்கம் போல. ஒருவர் அடிப்பதை மற்றவர் அடிப்பார். இருவரும் ஒரே பந்தைத்தான் அடிப்பார்கள். விடாமல் அடித்தால்த்தான் வெற்றி. அதேபோல் ஒர…
-
- 0 replies
- 586 views
-
-
ஐ.நா தீர்மானங்கள் ஏன் இலங்கை அரசைத் தண்டிக்கவில்லை?:சபா நாவலன் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து ஐந்து ஆண்டுகள் கடந்து போய்விட்டன. மனிதப் படுகொலைகளைத் திட்டமிட்டவர்களும், நடத்தி முடித்தவர்களும் இன்னும் இந்த உலகின் மதிப்பிற்குரிய மனிதர்களாக எந்த அச்சமுமின்றி உலாவருகின்றனர். இந்த நிலையில் ஜெனீவா மனித உரிமைத் திருவிழா நிறைவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. அங்கு தான் ராஜபக்சவைத் தண்டிக்கப் போகிறார்கள் என்றும் அதனை நிறைவேற்றுவதற்காகவே தாம் இதுவரை போராடி வருவதாக புலம் பெயர் தமிழ்த் தலைமைகளும் இலங்கையில் தமிழ்த் தேசியத்தின் பெயரால் வாக்குக் கேட்கும் கட்சிகளும் கூறிவந்தன. ஐக்கிய நாடுகள் நிறுவனம், அமெரிக்க அரச தலைமையிலான உலகம் போன்றவற்றின் குறைந்தபட்சப் புரிதல்களுமின்றி ஐந்…
-
- 0 replies
- 789 views
-
-
ஜெனிவாத் தீர்மான வரைவும் இனப்பிரச்சனை விவகாரமும் - யதீந்திரா [ சனிக்கிழமை, 22 மார்ச் 2014, 13:03 GMT ] [ புதினப் பணிமனை ] ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 25வது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் மூன்றாவது தீர்மான வரைவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டிருக்கின்ற நிலையில் அது தொடர்பான பல வாதப்பிரதிவாதங்கள் மேலெழுந்திருக்கின்றன. தமிழ் அரசியல் வாதிகள் சிலரும், தமிழ்க் கருத்தியல் உருவாக்குனர்கள் சிலரும், மிகைபடக் கூறியளவிற்கு எதனையும் நிகழ்த்தக் கூடிய வல்லமையை அத்தீர்மான வரைவு வெளிப்படுத்தவில்லை என்பதே, தற்போதைய தமிழர் ஆதங்கத்திற்கு காரணம். தமிழர் ஆதங்கம் என்பது சரியான ஒன்றுதானா அல்லது இது அவர்களாகவே தங்கள் மீது வலிந்து திணித்துக்கொண்ட அதீத க…
-
- 0 replies
- 443 views
-
-
ஈழத்தமிழரின் எதிர்காலம் என்ன? - கற்பனையும் யதார்த்தமும் தத்தர் பெருவல்லரசுகளும், வல்லரசுகளும் 21ஆம் நூற்றாண்டின் மத்தியின் பின்னான தமது எதிர்காலம் பற்றிய திட்டங்களை வகுத்துள்ளன. சிங்கள அரசு ஈழத்தமிழினத்தை முற்றிலும் அடையாளம் அற்றவர்களாகவும், நாதியற்றவர்களாகவும் ஆக்குவதற்கான நீண்டகால திட்டங்களுடன் செயற்பட்டு வருகிறது. தற்போது ஈழத்தமிழர்கள் தன்நிலையை விருப்பு வெறுப்பின்றி காய்தல் உவர்த்தல் இன்றி சரிவர மதிப்பிட்டு எதிரிகளின் பிடிகளிலும் அழிப்புக்களிலும் இருந்து எப்படி தப்பிப்பிழைத்து முன்னேறுவது என்பதற்கான ஒரு நீண்டகால பார்வை கொண்ட திட்டத்தை வகுத்தாக வேண்டும். ஈழத்தமிழர்கள் புவிப்பரப்பில் அறியப்பட்ட அளவுக்கு அவர்களின் பிரச்சனைகளும் உரிமைகளும் இலட்சியங்களும் அறியப…
-
- 0 replies
- 682 views
-
-
கொழும்பிலிருந்து ஜெனிவாவிற்கு உணர்த்தப்படும் செய்திகள்? நிலாந்தன்:- 23 மார்ச் 2014 "ஜெனிவாவை நோக்கி அரசாங்கம் அனுப்ப நினைக்கும் சமிக்ஞை களுக்கான விலையைக் கொடுப்பது தமிழ் மக்கள் தான் என்பதே இங்கு மிகக் கொடுமையான யதார்த்தமாகும்" அண்மை வாரங்களில் வடக்கில் நடப்பவற்றைத் தொகுத்துப் பார்த்தால் ஜெனிவாவை நோக்கித் தெளிவாகச் சில சமிக்ஞைகள் அனுப்பப்படுவதாகத் தெரிகின்றது. முதலாவது சமிக்ஞை - அரசாங்கத்தைத் தண்டிக்க முற்படும் தரப்புக்கள் அல்லது அத்தகைய தரப்புகளிற்கு உதவ முற்படும் தரப்புகள் எதிர்கொள்ளக் கூடிய ஆபத்துக்கள் பற்றியது. இரண்டாவது சமிக்ஞை, அரசாங்கத்தைத் தண்டிக்கும் விதத்திலான ஜெனிவாத் தீர்மானங்கள் ஆயுதமேந்திய தமிழ் அரசியலை ஊக்குவிக்கக் கூடும் என்பது. அதாவது, எந்தவொ…
-
- 0 replies
- 512 views
-
-
தமிழர் அரசியலில் தேவையற்ற முரண்பாடுகளை வளர்க்க முற்படுகின்றனவா சில சக்திகள்? - யதீந்திரா படம் | rightsnow அமெரிக்காவின் மூன்றாவது பிரேரனை தொடர்பில் பல்வேறு வாதப்பிரதி வாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சூழலில், வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பிறிதொரு விவாதத்தை தொடக்கி வைத்திருக்கின்றார். தமிழீழ விடுதலைப்புலிகளின் வவுனியா, பின்னர் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளராக இயங்கிவந்த எழிலன் என்னும் புனைப்பெயருடைய வேலாயுதம் சசிதரனின் மனைவியான அனந்தி, வடக்கு மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அடுத்தபடியாக அதிக விருப்பு வாக்குகளை பெற்ற ஒருவர். நீதிபதி விக்னேஸ்வரனிலும் பார்க்க அனந்தி அதிக விருப்பு வாக்குகளை பெறுவார் என்றே அப்போது எதிர்பார்…
-
- 2 replies
- 718 views
-
-
வார்த்தை ஜாலங்களால் ஒரு அரசியல் விளையாட்டு! இன்னும் எத்தினை காலத்துக்கு இந்த சித்து விளையாட்டை அனுமதிப்பார் தமிழர்? [Tuesday, 2014-03-18 20:04:34] மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தைப்புதைகுழி தொடர்பாக சர்வதேச விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு நீதி கோரி அடுத்த மாதம் 12ம் திகதி (12.03.2014 அன்று) மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக கடந்த 12.02.2014 அன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அறிவித்திருந்தார். ஏன்? எதற்கு? மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தைப்புதைகுழி விவகாரம், உள்நாட்டு யுத்தத்தினால் உயிர…
-
- 0 replies
- 758 views
-
-
இவ்வாண்டு இடம்பெற்றுள்ள மிலான் பயிற்சி நடவடிக்கையானது கிழக்காபிரிக்கா தொடக்கம் மேற்கு பசுபிக் வரை விரிவுபடுத்தப்பட்டமையானது இந்திய-பசுபிக் பிராந்தியத்தில் இந்தியா தனது செல்வாக்கை விரிவுபடுத்துகின்றது என்பதைச் சுட்டிநிற்கிறது. இவ்வாறு அவுஸ்திரேலியாவின் சிட்ணியை தளமாகக் கொண்ட The Interpreter* இணையத்தளத்தில் Dr David Brewster** எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்கா, மாலைதீவு மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து இந்திய மாக்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்புத் தொடர்பில் மேற்கொண்ட முக்கூட்டு நடவடிக்கையுடன் இந்திய மாக்கடலிலுள்ள தீவுளான செச்செல்ஸ் மற்றும் மொறிசியஸ் போன்றன இணைந்துள்ளதாக மார…
-
- 0 replies
- 810 views
-
-
2009ம் ஆண்டுமுதல் 2013ம் ஆண்டுவரை உலகத்திற்கு அதிகளவு ஆயுதங்கள் வழங்கி முன்னணியில் நிற்கும் நாடுகளின் வரிசை. அமெரிக்கா 29 % ருசியா 27 % யேர்மனி 07 % சீனா 06 % பிரான்சு 05 % ஆதாரம்; Ludwigsburger Zeitung பாத்திரமறிந்து பிச்சைபோடு என்றொரு பழமொழி தமிழில் இருப்பது இவர்களுக்குத் தெரியுமா?????
-
- 2 replies
- 812 views
-
-
ஜெனிவாத் தீர்மானத்தின் முதல் வரைவும் தமிழர்களும் - நிலாந்தன்:- 16 மார்ச் 2014 உத்தேச ஜெனிவாத் தீர்மானத்தின் முதல் வரைவு வெளிவந்துவிட்டது. அது தொடர்பான பிரதிபலிப்புக்களை உற்று நோக்கின் ஒரு முக்கியமான போக்கினை அடையாளங்காண முடியும். தமிழர்கள், சிங்களவர்கள் ஆகிய இரண்டு தரப்புமே அதை எதிர்க்கின்றன. சிங்கள மக்கள் அதை மேற்கின் மிரட்டல் என்று எதிர்க்கிறார்கள். தமிழர்களோ தாங்கள் நம்ப வைக்கப்பட்டு ஏமாற்றுப்பட்டுவிட்டதாக கருதி எதிர்க்கிறார்கள். குறிப்பாக, டயஸ்பொறாவிலும் தமிழகத்திலும் நடந்து கொண்டிருப்பவற்றின் அடிப்படையிற் கூறின் இம்முறை ஜெனிவாத் தீர்மான வரைவுக்கு எதிரான பிரதிபலிப்புக்கள் ஒப்பீட்டளவில் தமிழ்ப் பரப்பில்தான் அதிகமாகக் காணப்படுகின்றன எனலாம். ஒன்றில் அமெர…
-
- 1 reply
- 435 views
-
-
இலங்கை ராணுவத்தின் தந்திரங்கள் நிறைந்த மன்னார் புதைகுழி ! [Tuesday, 2014-03-11 21:14:45] படுகொலைகளின் நிலங்களாக இலங்கை இருந்து வருகிறது என்பதற்கு சமீபகால சான்று மனித புதைகுழிகள். இதுவரை மன்னார்,திருகோணமலை,முல்லைத்தீவு, மாத்தளை (சிங்களப் பகுதி)' என பல இடங்களில் மனித புதைகுழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த புதைகுழிகளுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இத்தனை நாள் சொல்லி வந்த இலங்கை அரசும் ராணுவமும், ஐ.நா.மனித உரிமை ஆணையக் கூட்டத் தொடர் நெருங்கியதிலிருந்து 'இந்த புதைகுழிகள் புலிகளால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள்' என பிரச்சாரம் செய்து வருகிறது. அவ்வாறாக கடந்த வாரத்தில் கொழும்பு-பி.டி.ஐ. , 'மன்னாரில் கண்டெடுக்கப்பட்ட புதைகுழி புலிகள் வலுவாக நிலைக்கொண…
-
- 0 replies
- 665 views
-
-
தமிழக எழுத்தாளர்களும் ஈழத்தமிழர் இனப்பிரச்சினையும் – மு.பொ ‘இப்போது மட்டுமல்ல ஈழத்தில் இன அழிப்பு நடந்தபோதும் பல எழுத்தாளர்கள் கள்ளமௌனம் சாதித்தார்கள். மிகச்சிலரைத் தவிர பெரும்பான்மையோர் அருவருப்பான அமைதியைக் கடைப்பிடித்தனர். எழுத்தாளர்கள் என்போர் மொழியைக் கொண்டு பிழைக்கின்றார்கள். அவர்கள் தான் முதலில் வினையாற்றியிருக்க வேண்டும்.’ இவ்வாறு தமிழக எழுத்தாளர்கள் பற்றிக் கூறியிருக்கிறார். பிரபல ஓவியர் மருது, ஆனந்த விகடனில் (30-10-13) பாரதி நம்பிக்கு அளித்த செவ்வியின் போது. மேற்கண்ட பேட்டியைப் படித்தபோது, கனகாலமாக என் மனதை அரித்துக் கொண்டு கிடந்த, ‘தமிழக எழுத்தாளர்களும் ஈழத்தமிழர் இனப் பிரச்சினையும்’ என்ற கட்டுரையை எழுதி வெளிக் கொணர வேண்டுமென்ற உந்துதல் பெற்…
-
- 0 replies
- 725 views
-
-
ஆண்டு 2001 தமிழர் தேசத்திற்கெதிரான அனைத்துலக திட்டமாக முக்கியமான நான்கு திட்டங்களை வரைவு செய்கிறது அமெரிக்கா. 1. புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்த்தேசிய செயல்பாடுகளை முடக்குதல் 2. புலிகளின் அனைத்துலக ஆயுத மற்றும் அரசியல் கட்டமைப்புக்களை உடைத்தல் 3. ஈழத்தில் புலிகளை மக்களிடம் இருந்து வேறுபடுத்துதல் 4. இறுதியாக புலிகளை படைகளை அழித்தொழிப்பு செய்தல் இந்த திட்டத்திற்கு பெயர்தான் “ஆபரேஷன் பெக்கன்” முதலில் அவர்கள் செய்த வேலை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்களில் புலிகள் அமைப்பை தடை செய்தது... நிதி ஆதாரத்தை முடக்கியது... தெற்காசிய பிராந்தியத்தில் குறிப்பாக திரிகோணமலையில் தனது இராணுவ தளத்தை அமைக்கவேண்டும் என்பது அமெரிக்காவின் நீண்ட நாள் கனவு. இதன் மூலம் தெற்காசியா…
-
- 1 reply
- 732 views
-
-
இனக்கொலையாளி ராஜபக்சவின் புலம்பெயர் உளவாளிகள் யார்?: சபா நாவலன் காலனியத்தின் இறுதிக்காலப்பகுதியில் பிரித்தானிய ஆட்சியாளர்களால் திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாத அடையாளம் நந்திக்கடலில் இரத்தமும் சதையுமாக மிதந்ததைக் கண்டிருக்கிறோம். எண்ணுக்கணக்கற்ற அப்பாவி உயிர்களை விரல் எண்ணிக்கையில் அடங்கிவிடும் நாட்களில் பறிகொடுத்த எந்தக் குற்ற உணர்ச்சியும் இன்றி அதே முகங்கள் அதே கோர வெறியோடு அரசியல் காய்களை நகர்த்துகிறார்கள். தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளவோ அவற்றைத் தயவின்றி விமர்சித்து புதிய அரசியலை முன்வைக்கவோ கோரமாகக் கேட்கும் எந்த அரசியல் குரல்களுக்கும் தன்னம்பிக்கை இல்லை. ஆண்ட பரம்பரையின் புகழையே பேசிப் பழக்கப்பட்டுப்போன பாழடைந்த பழமைவாத சமூகத்தையும…
-
- 1 reply
- 1k views
-
-
தமிழர்கள் உக்ரெய்ன் நெருக்கடியிலிருந்து கற்றுக் கொள்ளவேண்டியவை - நிலாந்தன்:- 09 மார்ச் 2014 2008ஆம் ஆண்டு நிகழ்ந்த ஓர் உரையாடல் இது. அப்பொழுது கிளிநொச்சி நகரம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ்தானிருந்தது. அரசியல் விமர்சகரும், ஊடகவியலாளருமான ஒரு நண்பரோடு உரையாடிக் கொண்டிருந்தேன். அந்நாட்களில் அனைத்துலக அரசியலில் பேசுபொருளாக மாறியிருந்த ரஷ்ய-ஜோர்ஜிய நெருக்கடி பற்றிய உரையாடல் அது. ரஷ்யாவுக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றி ரஷ்யா ஜோர்ஜியா மீது பலப்பிரயோகத்தை மேற்கொண்டிருப்பது பற்றி உரையாடினோம். உரையாடலின் போக்கில் ஒரு கட்டத்தில் நான் சொன்னேன் ''ஜோர்ஜிய அரசாங்கம் தூரத்தில் இருக்கும் அமெரிக்கப் பேரரசை நம்பி பக்கத்தில் இருக்கும் பிரா…
-
- 1 reply
- 595 views
-
-
வண. சோபித தேரர் -விரிவான நேர்காணலும் எழுந்துள்ள ஆதரவு/ எதிர் கருத்துகளும்……நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?? வண. சோபித தேரர் அவர்கள் கடந்த வாரம் தினக்குரல் பத்திரிகைக்கு ஒரு விரிவான நேர்காணல் வழங்கி இருந்தார். அந்த நேர்காணல் தொடர்பான விடயங்கள் colombotelegraph.com உட்பட பல இணையத்தளங்களிலும் , சிங்கள , ஆங்கில ஊடகங்களிலும் வருவதுடன் பல்வேறு வாதப்பிரதிவாதங்களையும் , எதிர்பார்ப்பினையும் ,அரசியல் வட்டாரங்களில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவை தொடர்பான கருத்துக்களை இங்கு தொகுத்துள்ளதுடன், வண. சோபித தேரர் அவர்களின் முழு நேர்காணலும் , தமிழ்சூழலின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக இங்கு பதிவேற்றப்படுகிறது. உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் (ஆசிரியர் குழு) …
-
- 0 replies
- 887 views
-
-
ஊசலாடும் தமிழர்களுக்கான நீதி? - யதீந்திரா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தனது அறிக்கையில், சர்வதேச விசாரணை ஒன்றிற்கான பரிந்துரையை வழங்கியிருக்கின்றார். கடந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த நவிப்பிள்ளை, இலங்கை சர்வாதிகார ஆட்சியொன்றிற்கான வழிகாட்டல்களை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதாக குறிப்பிட்டிருந்ததை இந்த இடத்தில் நினைவுகொள்ளலாம். சர்வாதிகார வழிகாட்டலுக்குள் சிக்கிக்கிடக்கும் ஒரு நாட்டுக்குள் இடம்பெறும் எந்தவொரு விசாரணையும் நம்பத்தகுந்தவையாக இருக்க முடியாது என்னும் அடிப்படையில்தான், தற்போது நவிப்பிள்ளை சர்வதேச விசாரணையொன்றிற்கான பரிந்துரையை வழங்கியிருக்கின்றார். ஆனால் இது நவிப்பிளையின் பரிந்துரை மட்டுமே ஆகும். வழமை போலவே இலங்கை அரச…
-
- 1 reply
- 639 views
-
-
இந்திய ஆன்மாவும் ஏழுபேர் விடுதலையும் பா.செயப்பிரகாசம் மூன்று தமிழருக்கு வாய்ப்பான ஒரு தீர்ப்பை 18.02.2004 அன்று உச்சநீதிமன்றம் நல்கியிருக்கிறது. மூன்று தமிழர் மட்டுமல்ல, உலகத்தமிழினம் தமக்குச் சொந்தமாக்கிக் கொள்ளவேண்டிய தீர்ப்பு. உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளித்துள்ளது. அப்போதும் மூவரும் குற்றவாளிகள் அல்ல என்று சொல்லவில்லை. உச்சநீதிமன்றம் தலையீடு செய்ய நினைத்தது அந்த விசயத்தில் அல்ல. கருணை மனுவைப் பரிசீலிப்பதில் அநாவசியமான காலதாமதம் செய்யப்பட்டதைக் காரணமாக்கி தண்டனையைக் குறைத்தது. ('நீண்ட காலதாமதம் ஏற்பட்டால் மரண தண்டனையைக் குறைக்கலாம் என்கிற உச்சநீதிமன்றத்தின் கருத்து பிரச்சினையானது தான். அந்தக் கருத்து சரியானதா என்பதை நாம் ஆராய…
-
- 1 reply
- 736 views
-
-
எலும்புக்கூடுகள் சாட்சி சொல்லும் ஈழம் - தீபச்செல்வன்:- 05 மார்ச் 2014 எலும்புக்கூடுகள் வாக்குமூலங்களுடன் சாட்சியாக கிளம்பும் நிகழ்வுகள் கடந்த முப்பதாண்டுகளாக ஈழத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் ஈழத்து மக்களை அதிர்ச்சி கொள்ள வைத்த இடம் மன்னார் திருக்கேதீச்சரம். மன்னார் மனிதப் புதைக்குழிகளைத் தொடர்ந்து ஈழத் தலைநகர் திருகோணமலையிலும் இறுதிப்போர் நடந்த முல்லைத்தீவிலும் எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. எங்கு மண்ணை தோண்டினாலும் எலும்புக்கூடுகள் கிளப்புமா என்பதுதான் இன்றைய ஈழ நிலத்தின் அச்சம். ஈழத்தின் வடக்கில் உள்ள மன்னார் திருக்கேதீஸ்வரம் பல்லவர் காலத்தில் பாடல் பற்ற தலம். சுந்தரரும் சம்பந்தரும் இந்த ஆலயத்தின்மீது பதிகங்களைப் பாடியுள்ளனர். பா…
-
- 0 replies
- 621 views
-
-
தீண்டா மலம் - தீண்டத்தகாத மனிதன் சி. இராஜாராம் ஒரு மனிதன் விடுதலை பெற்றுக் கடவுளை அடைய வேண்டுமானால் அவன் முங்கி இருக்கிற மலங்களிலிருந்து வெளிவர வேண்டும் என்று சொல்லப்படுகின்றது. ஆணவம், கன்மம், மாயை. இந்த மலங்களை உதறி எழாத எந்த மானுடப்பிறவியும் கடவுளை அண்ட முடியாது. ஆனால் மலங்களை உதறவும் கடவுளின் புனிதப் பார்வை வேண்டும். இன்னொருபுறம் இடுப்புக்குக் கீழுள்ள எந்தப் பகுதியும் அசுத்தமானது. மலம் சார்ந்தது. அதனைக் கைகள் தொட்டுவிட்டால் கூட மீண்டும் சுத்தம் செய்யாமல் கடவுளை வணங்க முடியாது என்பவையும் வைதீகக் கோட்பாட்டின் மையமான பகுதியாகும். தமிழ் இலக்கணங்களில்கூட சமூகத்தில் சிலவற்றைப் பற்றியப் பேச்சு வரும்போது அவற்றை வெளிப்படையாகச் சொல்லாமல் மறைத்துச் சொல்வது என்பன போன்றவ…
-
- 4 replies
- 5.9k views
-
-
ஜெனிவாக் கூட்டத் தொடர் ஒரு சடங்காக மாறுமா? நிலாந்தன்:- 02 மார்ச் 2014 இம்முறை ஜெனிவாவை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழ் லொபியானது, முன்னைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், துலக்கமான ஒரு கருத்தொருமைப்பாட்டை எட்டியிருப்பது தெரிகிறது. தமிழ் டயஸ்பொறாவிலும், தமிழகத்திலும் ஒழுங்கு செய்யப்படும் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள், முன்வைக்கப்படும் சுலோகங்கள் என்பவற்றைத் தொகுத்துப் பார்த்தால் அது தெரியவரும். அதாவது, முன்னைய ஆண்டுகளைப் போலன்றி இம்முறை போர்க்குற்ற விசாரணை என்ற மையப்பொருளைக் கடந்து இனப்படுகொலை எனப்படுவதே மையப்பொருளாக மாறியிருக்கிறது. இலங்கைத் தீவில் இடம்பெற்றது இனப்படுகொலையே என்பதை நிறுவுவதன் மூலம் அதற்குரிய உச்சபட்ச பரிக…
-
- 2 replies
- 609 views
-
-
இராஜிவ் கொலை வழக்கில் விடை தெரியாத வினாக்கள்...? 1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த வாழப்பாடி இராமமூர்த்தி அந்த இடத்தில் கூட்டம் நடத்த வேண்டாம் என சொல்லியும் ; ஏன் அங்கு கூட்டம் நடத்தப்பட்டது . ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா? 2. புவனேஷ்வர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ராஜீவ் பிரச்சாரத்திற்கு சென்றபோது அவருடன் இருந்தவர் பாதுகாப்பு அதிகாரி ஓ.பி. சாகர். ஆனால் அவர் சென்னைக்கு ராஜீவுடன் வரவில்லை ஏன்? 3. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொலைக்கா…
-
- 0 replies
- 907 views
-
-
கூட்டமைப்பு என்ன செய்யப்போகிறது? செல்வரட்னம் சிறிதரன்:- 01 மார்ச் 2014 இரணைமடு குளத்து நீர் தொடர்பாகவும், ஜனாதிபதி ஆணக்குழு தொடர்பாகவும் இரண்டு முக்கிய தீர்மானங்களைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் கூடி நிறைவேற்றியிருக்கின்றது. இரண்டுமே மிகவும் முக்கியமான தீர்மானங்கள். கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில் இரண்டு தீர்மானங்களும் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன. இந்த கூட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு இரணைமடு குளத்து நீர் தொடர்பாக விரிவாக விவாதித்திருக்கின்றார்கள். மூன்றரை மணித்தியாலங்களுக்கு மேலாக வாதிட்டதன் பின்னர், ஏகம…
-
- 1 reply
- 740 views
-
-
எவ்வித மாயைகளுமின்றி செயற்படுகின்ற ஒரு நிர்வாகியாக அரசியல்வாதியாக இவர் உள்ளார். இவர் சமாதானம் மற்றும் நீதி ஆகிய இரண்டினதும் கலவையாக உள்ளார் என்பதை நான் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் மேற்கொண்ட நேர்காணலின் மூலம் அறிந்துகொண்டேன். இவ்வாறு கொழும்பை தளமாகக் கொண்ட The Island ஆங்கில ஊடகத்திற்காக நேர்காணல் செய்த NILANTHA ILANGAMUWA* தெரிவித்துள்ளார். அந்நேர்காணலை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர், நீதிபதி கனகசபாபதி விசுவலிங்கம் விக்னேஸ்வரனுடன் அண்மையில் நான் மேற்கொண்ட நேர்காணலானது மிகவும் முக்கியமானதாகும். நீதிபதி விக்னேஸ்வரனை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையில்லை. இவர் ஒரு சிறிலங்காத் தமிழ் சட்டவாளரு…
-
- 0 replies
- 473 views
-