Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இயக்கங்களின் அன்றைய இயலுமையும் இன்றைய இயலாமையும் ? - யதீந்திரா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் (ஈ.பி.ஆர்.எல்.எப்) அவர்களது, தலைவர் பத்மநாபா கொலைசெய்யப்பட்ட தினத்தை, தியாகிகள் தினமாக நினைவு கூர்ந்துவருகின்றனர். அண்மையில் 31வது தியாகிகள் தினம் நினைவு கூரப்பட்டது. நிகழ்வில் பேசுமாறு, பத்மநாபா அபிவிருத்தி ஒன்றியம் என்னும் பெயரில் இயங்கிவரும் ஒரு பிரிவினர், என்னை அழைத்திருந்தனர். இதன் போது நான் பகிர்ந்துகொண்ட சில விடயங்களையே – இங்கு கட்டுரையாக்கியிருக்கின்றேன். இதிலுள்ள கவலைக்குரிய விடயம் என்னவென்றால், தங்களின் தலைவருக்கான நினைவு தினத்தைக் கூட, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினரால், கருத்தொருமித்து, ஒருங்க…

  2. மின்வெட்டும் அரசியலும் என்.கே.அஷோக்பரன் Twitter: @nkashokbharan கடந்தவாரத்தில், ஒரு நாளைக்கு ஏறத்தாழ 5 மணித்தியாலங்கள் அளவு வரை இலங்கையின் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ இரண்டு தசாப்தங்களின் பின் பெரும் மின்சார பற்றாக்குறை நிலையை இலங்கை எதிர்கொண்டு நிற்கிறது. இந்த நிலைவரக் காரணம் என்ன? குறுங்காலக் காரணம், இலங்கையிடம் பெற்றோலிய எரிபொருள் வாங்க போதிய டொலர்கள் இல்லை. ஆகவே இந்தியா உள்ளிட்ட சில நாடுகளிடம் கடன்வசதிகளைளப் பெற்றுக்கொண்டு பெற்றோலிய எரிபொருட்கள் இறக்குமதிசெய்தி வருகிறது. கிடைக்கும் பெற்றோலிய எண்ணையை,போக்குவரத்திற்கு அதனை ஒதுக்குவதா, அல்லது பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு பெருமளவில் கடன் செலுத்தவேண்டிய நிலையிலுள்ள இலங்கை மின்சார சபைக்…

  3. விகாரை அரசியல் – நிலாந்தன்.“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டம் என்பது சுத்தம் செய்வதை மட்டும் குறிக்கும் ஒரு நிகழ்ச்சித் திட்டமன்று. அதற்குப் பின்னால் ஒரு பெரிய நோக்கம் உள்ளது. நமது சூழல் மட்டுமல்ல. நமது உள்ளத்தில் உள்ள அழுக்குகள் முதல் ஒரு பண்பாடான வாழ்க்கைக்கான தடைகளை அகற்றுவதும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.” இவ்வாறு கூறியிருப்பவர் பிரதமர் ஹரினி. கடந்த ஒன்பதாம் திகதி,காலை, மட்டக்குளி கடற்கரைப் பூங்காவில் இடம்பெற்ற “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ‘அழகிய கடற்கரை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்’ நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். “உள்ளத்தில் உள்ள அழுக்குகளையும் ஒரு பண்பாடான வாழ்…

  4. இம்முறையும் தப்பிப் பிழைப்பாரா விமல்? இது தேர்தல் காலம். இச்சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்காகப் பலமாக ஒலிக்க வேண்டிய ஒரு குரல், மௌனித்து இருப்பது முக்கியமானதொரு விடயமாகத் தெரிகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், சில காலமாக அடங்கிக் கிடந்த மஹிந்வை, உசுப்பேற்றி, மீண்டும் களத்துக்கு இழுப்பதில் சூத்திரதாரியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, தமது குருவும் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ, முக்கியமான தேர்தலுக்கு முகம் கொடுக்கத் தயாராகி வரும் நிலையில், அசாதாரணமாக மௌனம் காக்கிறார்;அல்லது குரலைத் தாழ்த்திப் பேசுகிறார். காரணம், நாடு அறிந்ததே. அவரது கட்சியான தேசிய சுதந்திர முன்ன…

  5. உத்தேச அரசியலமைப்பை கண்டு அச்சப்படும் பௌத்த தேசியம் http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-10-22#page-7

  6. கட்டியிருக்கும் கோவணமும் களவாடப்படும்-பா.உதயன் அதிகாரம், அடக்குமுறை, நாடுகளுக்கு இடையிலான அதிகார ஏகாதிபத்திய அரசியல் பொருளாதார சுயநலன்களுக்கு இடையிலான போட்டிகள் இவை தவிர இயற்கை அழிவுகளாலும் நோய் நொடிகளாலும் இந்த உலகு பல அழிவுகளை சந்தித்து வருகின்றது. பல கோடி மக்கள் இதனால் இறந்திருக்கிறார்கள் இன்னும் இறந்து கொண்டே இருக்கிறார்கள். மனிதத் தவறுகளினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் இந்த உலகு மிகக் கொடிய மனித அவலங்களை சந்தித்து வருகின்றது. தர்மமும் நீதியும் சார்ந்து இந்த உலகம் சுழலுவதில்லை. மனித அவலம் மனிதக் கொடுமைகள் நடந்த பொழுதெல்லாம் பலர் கண்ணை மூடி இறந்தவர்கள் போல் தங்கள் சுய நலன் கருதி பார்த்துக் கொண்டிருந்தார்கள் பல ஜனநாயகத்தின் காவலர்கள். எங்கு தான் என்ன மனித அ…

  7. மஹிந்தவுடன் சேர்ந்தியங்க சம்பந்தன் ஆர்வமா? இலங்கையில் தமிழ்த்தரப்பின் எதிர்கால அரசியல் போக்கு நாட்டின் நலனுக்காகவும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை எட்டுவதற்காகவும் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து, செயற்படத் தயாராக இருப்பதாக, சம்பந்தன் தெரிவித்திருக்கிறார். ஜூலம்பிட்டியே மங்களதேரர் எழுதிய ஒரு நூல் வெளியீட்டில், கடந்த வாரம் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மிக நீண்டகாலத்துக்குப் பிறகு, சம்பந்தனும் மஹிந்த ராஜபக்ஷவும் ஒரு நிகழ்வில் இணைந்து கலந்து கொண்டிருப்பது, முக்கியத்துவம் வாய்ந்ததாகக் …

  8. Published By: DIGITAL DESK 3 28 MAY, 2024 | 03:21 PM கலாநிதி ஜெகான் பெரேரா போர் முடிவுக்கு வந்திருக்கலாம், ஆனால் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகள் முடிவுக்கு வரவில்லை என்பதை போர் முடிவின் பதினைந்தாவது வருட நிறைவு தெளிவாக வெளிக்காட்டியிருக்கிறது. இராணுவ நடவடிக்கையின் களமாக இருந்த வடக்கிற்கும் கிழக்கிற்கும் வெளியே வழமைநிலை உணர்வு இருக்கிறது. போரின் நினைவு அருகிக்கொண்டு போகிறது. இந்த நிலைவரம் அரசாங்கம் மற்றைய பிரச்சினைகளுக்கு மிகவும் குறிப்பாக அதிகப்பெரும்பான்மையான மக்களின் வாழ்வில் இன்னமும் தொடர்ந்து அவலத்தை ஏற்படுத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சி மீது கவனத்தைச் செலுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்கமுடியும் என்ற ந…

  9. புலம்பெயர்ந்த தமிழர்களின் வெளியுறவுச் செயற்பாடுகள்! நிலாந்தன். அண்மையில் ஒஸ்ரேலியாவைச் சேர்ந்த சில தமிழ்ச் செயற்பாட்டாளர்களும் அமெரிக்காவைச் சேர்ந்த சில செயற்பாட்டாளர்களும் இணைந்து புதுடில்லியில் சில சந்திப்புகளை ஒழுங்குபடுத்தினார்கள்.அச்சந்திப்பிற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலரின் அனுசரணையைப் பெற்றுக் கொண்டார்கள். அச்சந்திப்புகளில் தாயகத்திலிருந்து சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் சில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு ஆதீனத் தலைவரும் பங்கு பற்றினார்கள்.காவியுடை அணிந்த ஒரு ஆதீன முதல்வரைக் குழுவுக்குள் உள்ளடக்கியதன்மூலம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினை மேலும் நெருங்கலாம்,அதன் மூலம் இந்தியாவின் ஆளுங்கட்சியாகிய பாரதிய ஜனதா கட்சியின் முடிவுகளில் தாக்…

  10. அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் (08) நேற்று முன்தினம் கொள்கை விளக்க உரையை நிகழ்த்தியிருந்தார். மிக நீண்ட அவரது உரையில், தன்னால் இந்தநாட்டின் பொருளாதாரம் நிமிர்ந்திருக்கின்றது என்ற சுய புராணமே அதிகமாகத் தெரிந்தது. தனது இந்த முயற்சிக்கு ஏனைய அரசியல் தரப்புகள் ஆதரவளிக்கத் தான்வேண்டும் என்பது போலவே அந்த உரை அமைந்திருந்தது. பொருளாதார மேம்பாடு மாத்திரமே இந்த நாடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கக்கூடிய ஒரே சவால் என்பதை அவர் திரும்பத் திரும்ப வலியுறுத்தியிருந்தார். அதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை என்பதும், பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இன்னமும் பல கட்டங்களைக் கடக்க வேண்டியிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக கடன்களை மீளச் செலுத்தத் தொட…

  11. அர­சி­ய­ல­மைப்புப் பேர­வையில் இடம்­பெறும் நகர்­வுகள் தமிழ் மக்­க­ளுக்கு நம்­பிக்­கையைக் கொடுப்­ப­ன­வாக அமை­ய­வில்லை சில ஆண்­டு­க­ளுக்கு முன்னர் மலே­ஷி­யாவின் முன்னாள் பிர­தமர் மகாதீர் முஹம்மத் ஓர் அர்த்­த­முள்ள கருத்தைத் தெரி­வித்­தி­ருந்தார். - “யாரு­டைய கரங்­களில் கப்பல் படை இருந்­ததோ அவர்கள் தான் 19ஆம் நூற்­றாண்டில் சக்­தி­வாய்ந்­த­வர்­க­ளாகத் திகழ்ந்­தார்கள். யாரு­டைய கைகளில் பல­மான விமானப் படை இருந்­ததோ அவர்கள் தான் 20ஆம் நூற்­றாண்டின் பல­சா­லி­க­ளாகத் திகழ்ந்­தார்கள். யாரிடம் ஊடக பலம் இருக்­கின்­றதோ அவர்கள் தான் 21ஆவது நூற்­றாண்டின் சக்­தி­யாகத் திகழ்­வார்கள்” என்றார். அதா­வது இன்­றைய பல­மா­னது பேனாவைச் சென்­ற­டைந்­துள்­ளது என்­ப­தைய…

  12. இலங்கை இஸ்லாமியர்களின் அரசியல் பலம் தமிழர்களுக்கு இணையானதாக வளர்ந்து வருகிறது

    • 0 replies
    • 332 views
  13. பிணைமுறி விவகாரம்: தண்டிக்கப்படுவாரா மகேந்திரன்? நல்லாட்சி அரசாங்கத்திலேயே நல்லாட்சி இல்லை என்றும் ஊழலை ஒழிப்பதைத் தமது பிரதான பணிகளில் ஒன்றெனக் கூறிப் பதவிக்கு வந்த அரசாங்கம், பதவிக்கு வந்து ஒரு மாதத்திலேயே வரலாற்றில் மிகப் பெரும் ஊழல்களில் ஒன்று நாட்டில் இடம் பெற்றிருக்கிறது என்று எதிர்க்கட்சி குற்றம்சாட்டும் அளவுக்கு சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இது நல்லாட்சியின் பெயரால் பதவிக்கு வந்தவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலைமையாகும். கடந்த வெள்ளிக்கிழமை ‘கோப்’ என்றழைக்கப்படும் நாடாளுமன்றத்தின் பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் தலைவரும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துந்நெத்தி நாடாளுமன்றத்தில் சமர…

  14. மௌனிக்க வைப்பு’ சிறீலங்காவின் இனஅழிப்பை ஊக்குவிக்கும் உத்தி 29 Views ஈழத்தமிழர்களின் நாளாந்த வாழ்வுக்குச் சிறீலங்கா வெளிப்படுத்தி வந்த, இனங்காணக் கூடிய அச்சத்துக்குப் பாதுகாப்பாக அவர்களைப் பாதுகாத்து வந்த அவர்களின் ஆயுத எதிர்ப்பைத் துப்பாக்கிகள் மௌனிக்கின்றன என்ற வாக்குறுதியை ஈழத்தமிழர்களைக் கொண்டு விடுக்கச் செய்ததின் மூலம் உலக வல்லாண்மைகளும், பிராந்திய மேலாண்மைகளும் சிறீலங்காவின் இனஅழிப்பு நோக்குக்கும், போக்குக்கும் பாதுகாப்பும், ஊக்கமும் அளிப்பித்தனர். இதன் பின்னரே சிறீலங்கா அனைத்துலக சட்டங்களுக்கோ, அமைப்புகளுக்கோ அல்லது நாடுகளுக்கோ எவ்வித அச்சமுமின்றி ‘முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு’ என்னும் 21ஆம் நூற்றாண்டின் கிட்லரிசத்தை நடை…

  15. மகிந்தாவுக்காக பேசும் மகாசங்கம் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-07-09#page-11

    • 1 reply
    • 332 views
  16. பயங்கரவாதத்துக்கு தூபமிடும் இன,மத வாதப் பிரசாரங்கள் உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று நடத்­தப்­பட்ட தொடர் தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களின் மூலம் நாட்டில் உரு­வா­கி­யுள்ள பயங்­க­ர­வா­தத்தைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகளை பாகு­பா­டற்ற முறையில் முன்­னெ­டுக்க வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும். அந்தக் கட­மையை அரசு சரி­யான முறையில் கடைப்­பி­டிக்­கின்­றதா என்­பது சந்­தே­கத்­துக்குரி­ய­தா­கி­யுள்­ளது. இஸ்­லா­மிய பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­வர்­க­ளுக்கு எதி­ராக அவ­ச­ர­காலச் சட்டம், பயங்­க­ர­வாதத் தடைச்­ சட்டம் என்­பன வரை­ய­றை­யற்ற முறையில் பாய்­கின்­றன. ஆனால், இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத பயங்­க­ர­வா­தத்தைப் போன்று மத ரீதி­யாக, இன ரீதி­யாகக…

  17. ரவிராஜூக்கான நீதியையும் கொன்று புதைத்தல் – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களும் சமவுரிமையுடன் வாழ வேண்டுமென்ற உணர்வுடன் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக கொழும்பில் நடுப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் காலப்பகுதியில் கட்டாக்கலி நாய்களுக்கு வழங்கிய பாதுகாப்பு உத்தரவாதத்தைக் கூட தமிழ் மக்களுக்காக பணியாற்றிய, குரல் கொடுத்த பொதுமக்கள் பிரதிநிதி ஒருவருக்கு வழங்கப்படவில்லை என்பது எவ்வளவு அநீதியானதாகும்? அவ்வாறு இல்லையென்றால் அரசாங்கத்தின் எதேச்சாதிகார போக்கினை அச்சமின்றி விமர்சனம் செய்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க நடு வீதியில் வைத்து வாழ்வதற்கான உரிமை இதேவ…

  18. முன்னைய தேர்தல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட அரசியல் கோலங்களுடன் 2024 ஜனாதிபதி தேர்தல் August 19, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் இந்த தடவையே மிகவும் அதிக எண்ணிக்கையில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதுகாலவரையில் ஜனாதிபதி தேர்தல் பிரதான இரு அரசியல் கட்சிகளின் அல்லது அவற்றின் தலைமையிலான கூட்டணிகளின் வேட்பாளர்களுக்கு இடையிலான நேரடிப் போட்டியாகவே இருந்து வந்தது. ஆனால் இந்த தடவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான மும்முனைப் போட்டியாகவே தேர்தல் அமையப்போகிறது. இறுத…

  19. தமிழ், முஸ்லிம் இன அடையாள கட்சிகளின் செல்வாக்கில் வீழ்ச்சி? வடக்கு, கிழக்கின் அரசியல், ‘எதிர்நிலை’ மாற்றங்களை நோக்கிச் செல்கிறதா? இந்தப் பிராந்தியங்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் முன்னரை விட, வாய்ப்பானதொரு சூழல் ஒன்று உருவாகி வருகிறதா? பிராந்தியக் கட்சிகள் அல்லது இன அடையாளக் கட்சிகள் என்பவற்றின் செல்வாக்கு வீழ்ச்சியடைகிறதா? அதாவது, தமிழ் மற்றும் முஸ்லிம் தேசியவாதக் கட்சிகளின் ஆதிக்கம் வலுவிழக்கிறதா? மக்கள் தமது தேவைகளுக்குப் பொருத்தமானது என நம்பும் புதிய வழிகளைத் தேடுகின்றனரா? அதற்கான காரணம் என்ன? பிராந்தியக் கட்சிகளை விட, தேசியக் கட்சிகள் என்று குறிப்பிடப்படும் சு.கவும் ஐ.தே.கவும் வடக்…

  20. இலங்கை குடியரசாக மாற்றம் பெற்ற பின்னர் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்புகள் இரண்டும் இந்த நாட்டின் தேசிய இனங்களில் ஒன்றான தமிழ்த் தேசிய இனத்தின் ஒப்புதல் இன்றியே நடைமுறைப்படுத்தப்பட்டன. 1978 ஆம் ஆண்டு யாப்பின் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டு பாராளுமன்றத்தில் இருந்து ஜனாதிபதியின் கைகளுக்கு அதாவது ஒரு மனிதரின் கைகளுக்கு அதிகாரங்கள் மாறின. பாராளுமன்றமே ஜனாதிபதியின் தயவில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டிருந்தது. அந்த முறைமை காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வந்த தென்னிலங்கையின் பிரதான இரு கட்சிகளினாலும் தமது நலன்களை முன்னிறுத்தியும், கூடுதல் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும், மாற்றுக் கட்சிகளை அதிகாரத்திற்கு வர முடியாமல் தடுப்பதற்காகவும் அரசியலமைப்…

    • 0 replies
    • 332 views
  21. கானல் நீராகியிருக்கும் கூட்டமைப்பின் நம்பிக்கை மழை விட்­டாலும் தூவானம் விட­வில்லை என்­பார்கள். அது­போல, உள்­ளூ­ராட்சி தேர்தல் முடிந்த பின்­னரும், தேர்தல் காலத்து, எதி­ர­ணிகள் மீதான கருத்து பரப்­பு­ரைகள் இன்னும் முடி­வ­டை­ய­வில்லை. கட்சி அர­சி­யலை முதன்­மைப்­ப­டுத்தும் போக்கில் தமிழ் அர­சி­யல்­வா­திகள் மிகவும் தீவி­ர­மாக ஈடு­பட்­டி­ருக்­கின்­றார்கள். உள்­ளூராட்சி சபை­க­ளுக்­கு­ரிய பிரச்­சி­னை­க­ளிலும் பார்க்க, தேசிய மட்­டத்­தி­லான பிரச்­சி­னை­களுக்கே இந்தத் தேர்­தலில் முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­பட்­டி­ருந்­தது. அதன் அடிப்­ப­டையில், இந்த கலப்பு தேர்தல் முறையில் முன்­னிலை பெற்­றி­ருந்த கட்­சி­களை முதன்­மைப்­ப­டுத்தும் போக்கில் இருந்து கட்சித் தலை­…

  22. பொத்துவில் முதல் பொலிகண்டி வரை ஒரு புதிய நம்பிக்கை -புருஜோத்தமன் தங்கமயில் ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’யிலான கவனயீர்ப்புப் பேரணி, பல்லாயிரக்கணக்கான தமிழ், முஸ்லிம் மக்களின் பங்களிப்போடு வெற்றிகரமாக நிறைவுக்கு வந்திருக்கின்றது. நீதிமன்றத் தடை உத்தரவுகள் என்று பல்வேறுபட்ட தடைகளைப் பேரணி முன்னெடுக்கப்பட்ட ஐந்து நாள்களும் தாண்ட வேண்டியிருந்தது. ஆனாலும், பேரணி வடக்கு-கிழக்கின் எட்டு மாவட்டங்களின் ஊடாகப் பயணித்து, எதிர்கால ஜனநாயக வழிப் போராட்டங்களுக்கு நம்பிக்கையுடன் பலம் சேர்த்திருக்கின்றது. நீண்ட நாள்களுக்குப் பின்னர், தமிழ்த் தேசிய தரப்புகள் எல்லாமும் ஒரு போராட்டத்தை நோக்கித் திரண்டன; அல்லது திரளும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது என்றால், அது ‘பொத்துவில் மு…

  23. அரசியலை அதிரச் செய்யும் 20 மில்லியன் ரூபாய் “இருபது மில்லியன் ரூபாய் விவகாரம்” இப்போது அரசியலில் பரவலாகப் பேசப்படுகின்ற ஒரு விடயமாக, மாறியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் உள்ள தேசிய திட்டமிடல், பொருளாதார விவகார அமைச்சின் ஊடாக, தலா 20 மில்லியன் ரூபாய் நிதி இலஞ்சமாக வழங்கப்பட்டது என்று, ஈ.பி.ஆர்.எல்.எவ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறியிருந்த குற்றச்சாட்டே இதன் அடிப்படை. வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக இந்தச் சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பது அவரது குற்றச்சாட்டு. அண்மையில், …

  24.  ஒரு பண்பாட்டுச் சிதைவுக்கு துணைபோகக் கூடாது - கருணாகரன் விடுதலைப்புலிகள் இல்லாத சூழலில், போர் முடிந்து ஏழு ஆண்டுகளின் பின்னர், கடந்த மாதம் 27 ஆம் திகதி நிகழ்ந்திருக்கும் மாவீரர் நாள் நிகழ்வு, அது முடிந்து ஒரு மாதம் கடந்துவிட்டபோதிலும், அந்த நிகழ்வின் அரசியல் பரிமாணம் மிகவும் விசாலமாகக் காணப்படுகின்றது. அந்த நிகழ்வையொட்டி, தமிழ் மக்களிடத்தில், குறிப்பாக மாவீரர் குடும்பங்களிடத்தில் ஏற்பட்டிருக்கும் உணர்நிலைகளும் அபிப்பிராயங்களும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் உண்டாக்கியுள்ளது. இந்தக் கட்டுரை அவற்றைப் பற்றிய கவனத்தையே ஈர்க்கிறது. மாவீரர்நாள் கொண்டாட்டங்கள் எத…

  25. இந்தியப் பிரதமரின் வருகை : அனுர யாரோடு ? - நிலாந்தன் நான்கு தடவைகள் இந்திய பிரதமர் இலங்கைக்கு வந்து விட்டார். இந்த நான்கு தடவைகளிலும் அவர் நான்கு இலங்கை ஜனாதிபதிகளை சந்தித்திருக்கிறார். பத்தாண்டு காலத்துக்குள் இலங்கையின் ஆட்சிப் பொறுப்பு நான்கு பேர்களிடம் கைமாறும் அளவுக்கு இச்சிறிய தீவின் அரசியல் ஸ்திரமற்றதாக இருந்து வருகிறது.ஆனாலும் பிரதமர் மோடியின் வருகையின்போது மாறாத இரண்டு விடயங்கள் உண்டு. ஒன்று இனப்பிரச்சினை தொடர்பான இந்திய நிலைப்பாடு. இரண்டாவது,மீனவர்களின் விவகாரம்.அதுவும் தமிழ் மக்களோடு தொடர்புடையதுதான். இந்தியப் பிரதமரின் வருகையை மூன்று தளங்களில் வைத்துப் பார்க்க வேண்டும்.முதலாவது பிராந்தியத் தளம். இரண்டாவது கொழும்பு. மூன்றாவது தமிழ் நோக்கு நிலை. பிராந்தியத்தில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.